புதன், 28 நவம்பர், 2018

அன்றாடக் கலைச்சொல் அகராதி - முதல் தொகுதி



முன்னுரை:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

என்று தமிழின் இனிமையை முழக்கி மகிழ்ந்தான் முண்டாசுக்கவி பாரதி. பல சங்கங்கள் வைத்துப் பல ஊழிகளாகத் தமிழ்மன்னர்களால் பேணி வளர்க்கப்பட்டது தமிழ். திருவள்ளுவரும் கம்பரும் பாரதியாரும் பேசி மகிழ்ந்தது தமிழ். ஏறத்தாழ 4000 ஆண்டுகாலப் பயன்பாடும் பெருமை சான்ற வரலாறும் கொண்ட தமிழ்மொழி இன்று எந்த நிலையில் இருக்கிறது?.

ஆங்கில மொழியின் தாக்கத்தினாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரவினாலும் தமிழ்மொழி தனது வலிமையினை மென்மெல இழந்து வருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆங்கிலத்தில் இருந்தும் பிறமொழிகளில் இருந்தும் புதிய புதிய சொற்கள் தமிழுக்குள் புகுந்த வண்ணம் இருக்கின்றன. இச் சொற்களின் வரவினால் தமிழ்ச் சொற்கள் நீர்த்துப் போய்விட்டன. விளைவு?

இருக்கும் தமிழ்ச்சொற்களைப் பேச விரும்புவாரில்லை. பிறமொழிச் சொற்களுக்கு இணையான கலைச்சொற்களை இடையறாமல் உருவாக்கிப் பயன்பாட்டுக்குத் தருவாரில்லை. பள்ளிகளில் தமிழ்மொழியைப் பயில விரும்புவாரில்லை. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்களின் பேச்சில் இருப்பது 50% க்கும் கீழான தமிழ்ச் சொற்கள்தான். இதேநிலை தொடர்ந்து நீடிக்குமானால் என்ன ஆகும்?

தமிழ் பேச்சு வழக்கில் இருந்து முற்றிலும் ஒழியும். எழுத்து வழக்கிலும் ஒழிந்து ஒரு பெருமை வாய்ந்த பண்பாடே மறக்கப்படக் கூடிய சூழல் உருவாகும். அருங்காட்சியகத்தில் மட்டுமே காணவேண்டிய மொழியாகத் தமிழ் மாறும். அதுமட்டுமல்ல, தன்னை வளர்த்துவிட்ட தாய்மொழிக்குச் செய்த தீங்கினால் தமிழர்களும் உலக அரங்கில் மதிப்பிழப்பார்கள். தனது அடையாளமான தமிழ்மொழியினைக் காக்கவும் தூக்கிநிறுத்தவும் தவறிய பெருங்குற்றத்திற்காகப் பிற நாடுகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கே துரத்தி அடிக்கப்படுவார்கள். இதெல்லாம் நடந்த பின்னால் என்ன செய்யமுடியும்?. கண்கெட்ட பின்னால் கதிரொளி காணமுடியாதே.!.

கூடாது. இதெல்லாம் நடக்கவே கூடாது. இது அச்சத்தால் ஏற்படுவதல்ல. முன்னெச்சரிக்கை. தமிழை அழிவில் இருந்தும் தமிழரைக் கேட்டில் இருந்தும் காப்பாற்றவேண்டி நாம் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளைச் செய்தாக வேண்டும். அவற்றில் ஒன்றுதான் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படச் செய்தல்.

கலைச்சொல் உருவாக்க நெறிமுறைகள்:

கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினால் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றி விட முடியும். ஆனால் கலைச்சொற்கள் என்பவை எப்படி இருக்க வேண்டும்?. எப்படி இருந்தால் மக்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்புவார்கள்?. எப்படி இருந்தால் மக்கள் பயன்பாட்டில் அவை நிலைத்து நிற்கும்?. கலைச்சொற்களை உருவாக்கும் முன்னால் இக்கேள்விக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Ø  கலைச்சொற்கள் என்பவை பிறமொழிச் சொல்லுக்கான நேரடி விளக்கமாக இல்லாமல் இருப்பது சிறப்பு.
Ø  கலைச்சொற்களில் எழுத்துக்கள் எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு நெருக்கமாக மக்கள் பயன்பாட்டில் இருக்கும்.
Ø  கலைச்சொற்களில் எழுத்துக்கள் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவு தொலைவாகவே மக்கள் பயன்பாட்டில் இருக்கும்.
Ø  வினைச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு கலைச்சொற்கள் அமைக்கும்போது வினைச்சொற்களின் விகுதி / ஈறு கெடுதல், விகுதி / ஈறு போதல், புதிய விகுதி சேர்தல் ஆகிய விதிகளில் ஒன்றையோ பலவற்றையோ பின்பற்றலாம்.
Ø  கலைச்சொற்களின் நீளத்தைக் குறைக்கத் தேவையான இடங்களில் தலைக்கூட்டு முறையினைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்கலாம். அதாவது, SUBSCRIBERS IDENTITY MODULE = SIM  என்று ஆங்கிலத்தில் தலை (முதல்) எழுத்துக்களைக் கூட்டிச் சுருக்கமாக அழைக்கப்படுவதைப் போலத் தமிழிலும், பயனர் தன்விவர முறி = பதமு அல்லது பதம் என்று சுருக்கி அழைக்கலாம்.
Ø  பெயர்ச்சொற்களைக் கொண்டு கலைச்சொற்களை அமைக்கும்போது கூடுமானவரையில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத அதேநேரம் அழிவின் விளிம்பில் இருக்கும் சங்கத் தமிழ்ச் சொற்களாக இருத்தல் சிறப்பு.
Ø  ஒருதிணைப் பன்மொழி (ஒதிபம்) அகராதிகளும் ஒருமொழிப் பல்திணை (ஒம்பதி) அகராதிகளும் கலைச்சொல் உருவாக்கத்தில் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
Ø  ஒரு கலைச்சொல்லை உருவாக்கப் பல வாய்ப்புக்கள் இருக்கும்போது, ஆங்கிலச் சொல்லின் ஒலிப்புக்கு அணுக்கமாக இருக்கும் தமிழ்ச்சொல்லைத் தேர்வுசெய்தல் சிறப்பு. காரணம், இதனால் அத்தமிழ்ச்சொல் எளிதில் நினைவில் நின்று பயன்படும்.

இந்த நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் பல ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்க்  கலைச்சொற்களின் முதல் தொகுப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அட்டவணை வடிவில் அதனைக் கீழே காணலாம்.   

 பிறமொழி        கலைச்சொல்  மேல்விளக்கம் / பயன்படுமுறை
car
ஓகை
உவகை (ஓகை)யைத் தரும் ஒழுகை (ஓகை)
van
வையம்
வண்டியைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்
jeep
செப்பம்
வண்டியைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்
auto
சாடு
வண்டியைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்
share auto
மாச்சாடு

riksha
கைச்சாடு

bus
பேரி
பெரிய வண்டி என்னும் பொருள்
signal
திகழி
திகழ்தல் = ஒளிவீசுதல்
stop
நிறுத்தம்

train
நேடி
நீளமான வண்டி என்னும் பொருள்.
junction
முற்றம்

railway
ஐலாறு

railway junction
நேடிமுற்றம்
ஐலாறு (ரயில்வே) முற்றம் என்றும் கொள்ளலாம்.
metro rail
மாநேடி
பெரிய நேடி என்னும் பொருள்.
terminal
துவனம்
துவன்றுதல் = கூடுதல்.
bus terminal
பேரித்துவனம்

bus stand
பேரிநிலையம்

track
கடறு
கடறு = கடுமையான இருப்புப் பாதை
route
கவலம் / தடம்

router / modem
கவறி

television
சேகா
சேணலைகளைக் காட்சிப்படுத்துவது
l.e.d. tv
ஓதிசேகா
ஒளி உமிழ் திசமி சேகா
l.c.d. tv
துபசேகா
துளியப் பளிக்காட்சி சேகா
air conditioner
தபனி
தண் பத நிறுவி
air cooler
புபனி
புனல் பத நிறுவி
calling bell
கூமணி
கூ = கூப்பிடுதல்
radio
சேமு / சேம்
சேணலைகளை முழக்குவது
f.m.radio
ஊதம்
ஊழ் தகைச்சி முழக்குவது
fan
விசிறி

electric fan
மின்விசிறி

ceiling fan
மீவிசிறி / மீவி

table fan
நணிவிசிறி / நணிவி
அருகில் / பக்கவாட்டில் இருப்பது
pedestal fan
நில்விசிறி / நிவி

refrigerate
பனிச்சு
பனிச்சுதல் = குளிர்வித்தல், உறையச்செய்தல்
refrigerator
பனிசி

washing machine
வெளிதி
வெளுத்தல் = அழுக்கு நீக்குதல்
electric oven
மின்னுலை

vacuum cleaner
வெகுனி
வெற்றிடக் குப்பை நீக்கி
wet grinder
சுணரி
சுண்ணாம்பு போல மாவாக்குவது
mixer grinder
நூறி
நூறுதல் = பொடியாக்குதல், தூளாக்குதல்
juice maker
பிழிநை
பிழிதல் வினையை அடிப்படையாகக் கொண்டது
coffee maker
வடிநை
வடித்தல் வினையை அடிப்படையாகக் கொண்டது
toaster
சுடுநை
சுடுதல் வினையை அடிப்படையாகக் கொண்டது
water heater
நீருலை

induction stove
தூண்டுலை

switch
வனிமு / வனிம்
வலம்(மின்சுற்று)த்தினை நிறுத்த முடிக்க உதவுவது
switch on
வனிம் ஏற்று

switch off
வனிம் அணை

switch board
வனிப்பலகை

tubelight
தூம்பி
தூம்பு (உள்துளை) கொண்ட நெடுங்குழல்
c.f.l. light
திகவி
திணிவுக் கழால் விளக்கு
l.e.d. bulb
ஓதிவிளக்கு / ஓதிமம்

light bulb
கனலி
கனலுதல் = கதிரவனைப் போல ஒளிவீசுதல்
stove
உலை

cooker
அடுநை
அடுதல் = சமைத்தல்
petroleum
பாறை நெய்

petrol
பரனை

kerosene
எரினை
அடுப்பெரிக்க உதவும் நெய்
l.p.g. gas
பாதுகி வளி
பாறைநெய்யைத் துளிக்கிக் கிடைத்த வளி
diesel
வன்னை
வல்நெய்
bathroom
குளிப்பறை

bedroom
துச்சில்

main hall
நள்ளில்
நள் = நடு
portico
முன்றில்

store room
வைப்பறை

kitchen room
அட்டில்
அடுதல் = சமைத்தல்
toilet
சீத்தில்
சீத்தல் = கழித்தல், நீக்குதல்
window
சின்னுழை
பலகணி
pooja room
தேவறை
இறைஞ்சில்
balcony
அரமியம்

main door
தலைவாசல்

shelf
அடுக்கம்

drawing room
பயிலறை

office room
எறுழி
எறுழ் (அதிகாரம்) உடைய இடம்
officer
எறுழர்

table
அம்பர்
உயரமான இடத்தைக் குறிப்பது
desk
எக்கர்
உயரம் குறைந்த மேட்டைக் குறிப்பது
bench
வீற்றி

chair
இருக்கை

stool
குற்றி

laptop
மடிக்கணி

desktop
நோற்கணி
நோன் = பெருமை, வலிமை
computer
கணி

button
புடன்
புடைத்தல் = அடித்தல்
key
புடனி

keyboard
புடனம்

mouse
தெரின்
தெரிதல் = தேர்ந்தெடுத்தல்
calculator
கணக்கி

speaker
கலின்
கலித்தல் = ஒலியெழுப்புதல்
loud speaker
ஆர்கலின்
ஆர = நிறைய
screen
திரை

touch screen
தொடுதிரை

internet
இணரி
பூங்கொத்து போல தொடர்பில் இணைந்திருத்தல்.
website
இணரிடம்

online
இணரகம்
இவற்றை நீங்கள் இணரகத்தில் வாங்கலாம்.
offline
இணரிலி
அவர் இப்போது இணரிலி ஆவார்.
download
இழுக்கு
இழுக்குதல் = கீழே இறக்குதல்
upload
நிவக்கு
நிவத்தல் = மேலே ஏறுதல்
original
குரிசில்
குரிசில் = முதலானது, தலையாயது
true copy
முமு
முழுமுதல்
xerox copy
சாயல்

certificate
சான்றிதழ்

proof
கெழு
சான்று
camera
மின்விழி

lens
வீழி

video
நுது
(நுதல்=கண், சொல்) காட்சியும் ஒலியும் கொண்டது
movie
இனுது
இனிமை தரும் நுது
photo
படம்

image
உரு

frame
பிறக்கு
பிறக்கு = தோற்றம்
still
ஓவம்
ஓவியம் போல் நிலையான காட்சி
audio
ஓரி
ஓர்த்தல் = கேட்டல்
audition
ஓர்ப்பு

sound
ஒலி

sim card
பதம் / பதமு
பயனர் தன்விவர முறி
memory card
தபம் / தபமு
தகவல் பதிவு முறி
phone
நவி
நவில்தல் = பேசுதல்
cell phone
நுணவி
நுண் + நவி = நுணவி
smart phone
சீர்நவி
சீர் = சிறப்பு, பெருமை
telephone
சேணவி
சேண் (தூரம்) + நவி = சேணவி
tablet
குறுங்கணி

ipad
யாப்பி
யாப்பு = இசை, பாட்டு
head phone
பூணவி
பூண் (அணி) + நவி = பூணவி
micro phone
அஃநவி / அணவி

collar mic
பந்தணவி

hand mic
கையணவி

pen
சிறா
சிறகு போல எழுத உதவுவது
pencil
வரைசி / வர்சி
வரைய உதவும் சிறா
eraser
எருக்கி / எர்கி
எருக்குதல் = அழித்தல், நீக்குதல்
pin
ஊசி

whitener
மெழுகி
மெழுகுதல் = பூசுதல்
sharpener
வள்ளை
வள்ளுதல் = கூராக்குதல்
sketch pen
கேசி
கேழ்ச்சிறா
ball point pen
பனுசி
பந்துநுதிச் சிறா
ink pen
மைசி
மைச்சிறா
water color
அளைக்கேழ்
அளைதல் = நீரொடு கலத்தல்
paper
தாள்

note book
ஈரா
(ஈர்த்தல் = எழுதுதல்) எழுதப்படுவது.
book
வரிதி
வரிகளை உடையது
pocket book
கைவரிதி

scribe pad
குறியீரா

long size notebook
நெட்டீரா
நெடுமை + ஈரா  = நெட்டீரா
short size notebook
குற்றீரா / குட்டீரா
குறுமை + ஈரா = குற்றீரா
ruled notebook
வரியீரா

unruled notebook
அல்லீரா
வரிகள் அல்லாத ஈரா = அல்லீரா
graph notebook
உத்தீரா
உத்தி = புள்ளி, பொட்டு, பொறி.
binding
துன்னம்
துன்னுதல் = தைத்தல், பொருத்துதல்
sticker
அட்டி
அட்டுதல் = ஒட்டுதல்
geometric box
வடிவுப்பிழா
பிழா = பாத்திரப் பெயர்
divider
வகுசி
வகுக்க உதவும் சிறா
ruling scale
சூழி
சூழ்தல் = கணக்கிடுதல், அளத்தல்
set square
செங்கை
செங்கோணம் கொண்ட கை
compass
ஆர்சி
ஆரம் வரைய உதவும் சிறா
protractor
கோணகர்
பலகோணங்களைக் கொண்டது
paste
பசை

gum
பயின்
ஒட்டும் பொருளின் பெயர்
glue
பிசின்

bottle
புட்டில் / புட்டி

water bottle
நீர்ப்புட்டி

oil bottle
நெய்ப்புட்டி

tooth paste
பற்பசை

tooth brush
பலுர்சி
உரசுதல் = தேய்த்தல்
brush
உர்சி

scrub
தேயுரி
தேய்க்க உதவும் பட்டை
soap
போழ்
போழ் = கட்டி, துண்டம்
toilet soap
நறும்போழ் / நறுழி

washing soap
துவைப்போழ் / துவழி

washing powder
வெளுமா
வெளுத்தல் = துவைத்தல்
washing liquid
வெதுளி
வெளுக்க உதவும் துளியம்
shampoo
சீயம்
சீத்தல் = அழுக்கு நீக்குதல்
talcum powder
நறுமா

mirror
வயங்கி
வயங்குதல் = பிரதிபலித்தல்
comb
சீப்பு

hair pin
செருகூசி
செறித்தல் = செருகுதல்
hair clip
அலவி
அலவுதல் = நண்டுபோலக் கவ்வுதல்
rubber band
மீளிவிசி
விசித்தல் = கட்டுதல்
eye-glass
கட்பிணை / கண்ணாடி

rubber
மீளி
பழையநிலைக்கு மீளும் தன்மை கொண்டது
plastic
மீளா
பழையநிலைக்கு மீளாத் தன்மை கொண்டது
glass
மிளிரி
மிளிர்தல் = ஒளிர்தல், பிரதிபலித்தல்
polythene
மடலி
மடல் (=பூவிதழ்) போல மென்மையானது
polythene bag
மடலிப்பை

polythene sheet
மடலித்தாள்

tape
வீ
வீ (=பூவிதழ்) போல மென்மையானது
measuring tape
அளவீ

cello tape
சேர்வீ

packing tape
யாவீ
யாத்தல் = கட்டுதல்
tumbler
வம்பை
வம்பு = பாத்திரப் பெயர்
cup
கோப்பை

saucer
தட்டு

apply
முன்னு
முன்னுதல் = முற்படுதல், விரும்புதல்
application
முன்னம்
மனு
form
படிவம்

selection
தெரிவு

function
துளா
துளங்குதல் = ஆடுதல்
festival
விழா

program
நிகழ்ச்சி

school
பள்ளி

pre k.g
சிமனி
சிறு மழலையர் நிரை
l.k.g
சிகுனி
சிறு குழந்தைகள் நிரை
u.k.g
பெகுனி
பெருங் குழந்தைகள் நிரை
high school
உயர்நிலைப் பள்ளி

higher secondary school
மேல்நிலைப் பள்ளி

middle school
நடுநிலைப் பள்ளி

nursery school
மழலைப் பள்ளி

primary school
துவக்கப் பள்ளி

secondary school
அடுநிலைப் பள்ளி

matriculation school
மோட்டியல் பள்ளி
மோடு = பெருமை, சிறப்பு
i.c.s.e school
ஈக்சா பள்ளி
இந்திய இடைநிலைக் கல்விச் சான்று பள்ளி
c.b.s.e school
நைக்கு பள்ளி
நடுவண் இடைநிலைக் கல்விக் குழுமப் பள்ளி
syllabus
கற்புலம்
கற்க வேண்டிய அறிவு


 தயாரிப்பு & காப்புரிமை:
          
திருத்தம் பொன். சரவணன் 
நிறுவனர் & தலைவர்
தமிழர் பண்பாட்டுச் சுழியம்
எச்`.ஆர். எச்`. வணிக வளாகம்
புதுக்கடைத்தெரு, 
அருப்புக்கோட்டை – 626101.
நவி: 9003664799 / 7010558268. 
சேணவி: 04566-224212. 
மின்னஞ்சல்: vaendhan@gmail.com