புதன், 15 ஆகஸ்ட், 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே! - 6 - எழுஞாயிறு அன்னதோர் தமிழ்


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளில் மனித உடல் உறுப்புக்கள் மற்றும் விலங்குகளைக் குறிப்பதான பல்வேறு தமிழ்ப்பெயர்கள் இந்தியாவின் பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதனை விளக்கமாகக் கண்டோம். இந்த ஆறாவது பகுதியில் தீ, ஒளி, சினம் மற்றும் செந்நிறம் தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் பலவும் பிறமாநில மொழிகளில் திரிந்து வழங்கும் முறைகளை விரிவாகக் காணலாம்.

தீயுடன் தொடர்புடைய சொற்கள்:

தமிழில் தீ என்னும் திணையைக் குறிப்பதற்குப் பல சொற்கள் புழக்கத்தில் உண்டு. இவற்றில், எரி, சூடு, அனல், நெருப்பு, உரி, உருப்பு, உரும்பு, அழல், வெய்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இத் தமிழ்ச்சொற்கள் யாவும் சற்றே திரிந்து நெருப்பு, ஒளி, வெப்பம், சினம் போன்ற பொருட்களில் இந்தியாவின் பல மாநில மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சொற்கள் திரிந்து வழங்கும் முறைகளைக் கீழே காணலாம்.

தீ >>> தீக்கெ >>> தீக்ச்~ணதா
எரி >>> எரியல்
சூடு >>> சூடு
அனல் >>> அனல
நெருப்பு >>> நிப்பு
நெருப்பு >>> நூர
உரி >>> உரி
உருப்பு >>> உப்பெ^
உரும்பு >>> ரம்ப` >>> ச`ம்ரம்ப`
அழல் >>> ஆலோ >>> ஆலோக
வெய்து >>> பெ`தெ`


 
சொல்வடிவங்கள்
பேசப்படும் மொழிகள்
தீ, எரியல், சூடு
மலையாளம்
தீக்கெ, உரி, உப்பெ^, பெ`தெ`
கன்னடம்
தீக்ச்~ணதா                   
இந்தி
அனல
இந்தி, கன்னடம், செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்

நிப்பு
தெலுங்கு
நூர  
பஞ்சாபி`
ஆலோ
வங்காளம்
ஆலோக
வங்காளம், இந்தி
ச`ம்ரம்ப`
செங்கிருதம்

 
 
 
 


வெடி என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஓசை முதலான பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. ஆனால் இச்சொல்லுக்குத் தீ என்ற பொருளும் உண்டு என்பதனை அகராதிகள் காட்டவில்லை. வெடி என்னும் சொல்லானது தீ என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் பயின்று வருகின்றது.

வெடி வேய் கொள்வது போல ஓடி
தாவுபு உகளும் மாவே  - புறம். 302

' தீயானது மூங்கிலில் பற்றிக்கொண்டதைப் போல விரைவாக ஓடித் தாவும் குதிரை ' என்பது மேற்பாடல் வரியின் பொருள். மூங்கில் காடுகளில் தீப்பிடித்தால் அது எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதை அனைவரும் அறிவோம். இத் தீயின் வேகத்துடன் குதிரையின் ஓட்ட வேகத்தினை ஒப்பிடுகிறது மேற்பாடல் வரிகள். இப்பாடலில் வரும் வெடி என்ற சொல்லுக்கு ஓசை என்ற பொருள் பொருந்தாமையையும் தீ என்ற பொருளே பொருந்தி வருவதையும் அறியலாம். இனி இச்சொல்லின் திரிபுகள் பிற மொழிகளில் வழங்குமாற்றைக் கீழே காணலாம்.

வெடி >>> வேடி`
வெடி >>> வெட்டை >>> வெட்டம்

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

வேடி`               தெலுங்கு
வெட்டம்            மலையாளம்

தீ என்றால் வெப்பம் மட்டுமின்றி அதனுடன் சேர்ந்து ஒளியும் உண்டல்லவா?. மின்சாரம் இல்லாத பல சிற்றூர்களில் இரவுநேரத்தில் கொளுத்தப்பட்ட தீப்பந்த வெளிச்சங்களில் பயணம் மேற்கொள்வது இன்னும் நம்நாட்டில் இருக்கின்றன. தீயுடன் தொடர்புடைய தீய், தீய்ப்பு ஆகிய சொற்களில் இருந்து சிறிய திரிபுகளுடன் எத்தனை பிறமொழிச் சொற்கள் தோன்றி ஒளி சார்ந்த பொருளில் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன என்று கீழே பாருங்கள்.

தீய்ப்பு >>> தீ`ப >>> தீ`பக், தீ`பிகா >>> தி`ப்தீ
தீய்ப்பு >>> தீ`ப >>> ப்ரதீ`ப
தீய் >>> தி`யா >>> த்`யூதி >>> உத்^யோத >>> உத`ய
தீய் >>> தீ`த்ய >>> ஆதி`த்ய




சொல்வடிவங்கள்
பேசப்படும் மொழிகள்
தீ`பா, தீ`பிகா, தீ`பக், தீ`ப்தி, ப்ரதீ`பா
கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, செங்கிருதம்
தி`யா
இந்தி, செங்கிருதம்
த்`யூதி
மலையாளம், கு~ச்^ராத்தி
உத்`யோத
இந்தி, கு~ச்^ராத்தி
உத`ய
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், செங்கிருதம், ஒரியா
தீ`த்ய
செங்கிருதம்
ஆதி`த்ய
கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, செங்கிருதம்


தீயை நேரடியாகக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பலவும் பிறமாநில மொழிகளில் எப்படி வழங்கப்படுகின்றன என்று மேலே கண்டோம். இனி, தீயுடன் தொடர்புடைய வினைச்சொற்கள் பிறமாநில மொழிகளில் எப்படி வழங்கப்படுகின்றன என்றும் கீழே காணலாம்.

தீ என்ற திணையை எடுத்துக்கொண்டால், அகைத்தல், தின்னல், வேய்தல் ஆகிய பண்புகள் தீக்கு உண்டு. இவற்றில் அகைத்தல் என்பது கொழுந்துவிட்டு எரிதலையும் தின்னல் என்பது திணைகளை வற்ற / சுருங்கச் செய்தலையும் வேய்தல் என்பது வெப்பமூட்டுதலையும் குறிக்கும். தீயின் பண்புகளைக் குறித்துவரும் இத் தமிழ்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதைக் கீழே பாருங்கள்.

அகை >>> அக்~னி >>> ஆக்~
அகை >>> அங்கா~ர் >>> அங்கி >>> பெ`ங்கி
தின் >>> தி`ன் >>> தி`னகர
வேய் >>> வேச~ >>> ஆவேச~



சொல்வடிவங்கள்
பேசப்படும் மொழிகள்
அக்~னி, தி`ன், தி`னகர
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்
ஆக்~
இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
அங்கா~ர், அங்கி
இந்தி
பெ`ங்கி
கன்னடம்
ஆவேச~
செங்கிருதம், கு~ச்^ராத்தி



 சங்கத் தமிழில் சுரம் என்ற சொல்லுண்டு. இச்சொல்லானது வெப்பம் மிகுந்த பாலைநில வழியைக் குறிப்பதாகும். வெப்பத்தை முதன்மையாகக் கொண்ட இத் தமிழ்ச்சொல்லானது சற்றே திரிந்து வெப்பத்தின் மூலமான கதிரவனைக் குறிக்கவும் உடல்வெப்பத்தைக் கூட்டுகின்ற காய்ச்சல் நோயினையும் குறிக்கவும் கடுமையான சினத்தைக் குறிக்கவும் பிறமாநில மொழிகளில் பயன்படும் விதம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுரம் >>> சூ`ர்ய - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்.
சுரம் >>> சூ`ரச்^ - இந்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி.
சுரம் >>> சூ`ர - இந்தி, வங்காளம்.
சுரம் >>> ச்^வர - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்.
சுரம் >>> சூ^ர்ணி - செங்கிருதம்


ஒளியுடன் தொடர்புடைய சொற்கள்:

தீ என்றாலே அதனுடன் ஒளிக்கும் தொடர்பு உண்டு என்று மேலே பார்த்தோம். பொதுவாக, தீயைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் ஒளியைக் குறிக்கவும் ஒளியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் தீயைக் குறிக்கவும் இடம்மாறிப் பயன்படுவதுண்டு. தமிழில் ஒளி என்ற திணையைக் குறிப்பதற்கு வெயில், என்றூழ், விளக்கம், வாள், வெளிச்சம், அவிர் போன்ற சொற்கள் உண்டு. அதுமட்டுமின்றி, ஒளியின் மூலமாக விளங்கும் கதிரவனைக் குறிப்பதற்கு ஞாயிறு, திகிரி ஆகிய சொற்களும் உண்டு. ஒளியையும் கதிரவனையும் குறிக்கும் இத் தமிழ்ப்பெயர்கள் எவ்வாறு திரிந்து தீ, ஒளி, வெப்பம் முதலான பொருட்களில் பிற மொழிகளில் வழங்கப்படுகின்றன என்று கீழே பார்க்கலாம்.

ஞாயிறு >>> ஞ்~யான் >>> ஞான
ஞாயிறு >>> ச்^யோதி >>> சோ^தி
ஞாயிறு >>> சா^^ஞ்ச^^ >>> ஆஞ்ச
திகிரி >>> திக^ (ப்ரதிக^) >>> த^க^ >>> தா`க`, தா`கெ~
என்றூழ் >>> வென்றமு
வெயில் >>> பி`சி`லு >>> பி`சி`
வெயில் >>> உச்~ண, உச்~ணதா >>> உக்ச்`ம
விளக்கம் >>> பெ`ளக்கு
வாள் >>> ச்^வாலா, ச்^வாலெ >>> ச்^வல்னா >>> ச^ல்னா, ச^லன் >>> சா^ல >>> உசா^ல >>> உசா^ச` >>> உசா~
வாள் >>> ச்^வாலா >>> அச^வாலும்
வெளிச்சம் >>> ஓச^ச` >>> ஓச^
அவிர் >>> ரவி (தலைகீழ்த் திரிபு)

தமிழில் அருள் என்ற மிகப் பழமையான சொல்லுண்டு. சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பயன்கொள்ளப் பட்டிருக்கும் இச்சொல்லுக்கு ஒளி என்ற பொருளுமுண்டு. ஆனால் இற்றைத் தமிழகராதிகள் இப்பொருளைக் காட்டவில்லை. அருள் என்னும் சொல் ஒளி என்னும் பொருளில் பயன்பட்டுள்ள சில இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம். 

அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப - கலி.148

அருள் பரந்த ஆய் நிறம் போன்று மருள் பரந்த
பால் போலும் வெண் நிலவும் - திணை.150 -96

அடக்கம் அமர்அருள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும் - குறள். 121

மேற்பாடல்களில் வரும் அருள் என்ற சொல்லானது ஒளி மிக்க முகத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.  ஒளி என்ற சொல்லைக் குறிப்பதான அருள் என்ற சொல்லானது பிற மாநில மொழிகளில் திரிந்து கதிரவனைக் குறிக்க வழங்குமாற்றைக் கீழே காணலாம்.

அருள் >>> அருண்



சொல்வடிவங்கள்
பேசப்படும் மொழிகள்
ஞ்~யான்
இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா, பஞ்சாபி`
ச்^யோதி, சோ^தி, அருண்
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா, பஞ்சாபி`
வென்றமு
தெலுங்கு
பி`சி`லு, பி`சி`, பெ`ளக்கு, ச்^வாலெ, தா^கெ~
கன்னடம்
உச்~ண
மலையாளம், தெலுங்கு, கன்னடம்
உச்~ணதா
செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி
உக்ச்`ம, ப்ரதிக^
செங்கிருதம்
ச்^வாலா
இந்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`, செங்கிருதம்
ச்^வல்னா, ச^ல்னா, ச^லன், சா^^ஞ்ச^^,  ஓச^, தா`க`
இந்தி
சா^ல, த^க^
மராத்தி
அச^வாலும், உசா^ச`, ஓச^ச`, ஆஞ்ச
கு~ச்^ராத்தி
உசா^ல
இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி`, செங்கிருதம், ஒரியா
உசா~
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா, பஞ்சாபி`
ரவி, ஞான
செங்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்


தெய்வம் என்ற தமிழ்ச்சொல்லுக்குக் கடவுள் உட்பட பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. ஆனால், இச்சொல்லுக்கு ஒளி என்ற பொருளும் உண்டு. தமிழ் அகராதிகள் காட்டாமல் விடுத்துள்ள ஒளி என்னும் பொருளில் தெய்வம் என்ற சொல் கீழ்க்காணும் சிறுபாணாற்றுப்படையில் பயின்று வருவதைக் காணலாம்.

திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை - சிறு 73

மேற்பாடலில் வரும் தெய்வத் தாமரை என்பது ஒளிமிக்க தாமரை மலரினைக் குறித்து வந்துள்ளதை அறியலாம். ஒளியைக் குறித்துவந்த தெய்வ என்னும் தமிழ்ச் சொல்லானது எவ்வாறு திரிந்து பிறமொழிகளில் ஒளியைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பதைக் கீழே காணலாம்.

தெய்வ >>> தேச்^ >>> தேச^ச்`
தெய்வ >>> தி`வா >>> தி`வச`
தெய்வ >>> தி`வா >>> தி`வாகர

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

தேச்^                இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம் 
தேச^ச்`              மலையாளம், கன்னடம், செங்கிருதம்
தி`வா               பஞ்சாபி`, மராத்தி
தி`வச`              வங்காளம்
தி`வாகர             மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, 
                     மராத்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம், 
                     ஒரியா, பஞ்சாபி`

இதுவரையிலும், ஒளியைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பலவும் பிறமாநில மொழிகளில் எப்படி வழங்கப்படுகின்றன என்று மேலே கண்டோம். இனி, ஒளியுடன் தொடர்புடைய வினைச்சொற்கள் பிறமாநில மொழிகளில் எப்படி வழங்கப்படுகின்றன என்பதையும் கீழே காணலாம்.

ஒளி என்ற திணையை எடுத்துக்கொண்டால் புலர்த்தல், வெளுத்தல் ஆகிய பண்புகள் ஒளிக்கு உண்டு. இவற்றில் புலர்த்தல் என்பது இருளை நீக்கி விடியச் செய்தலையும் வெளுத்தல் என்பது வெண்மையினை மேம்படச்செய்தலையும் குறிக்கும். ஒளியின் பண்புகளைக் குறித்துவரும் இத் தமிழ்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதைக் கீழே பாருங்கள்.

புலர் >>> புலர்ச்ச - மலையாளம்
வெளுத்தல் >>> வெளுத்துறு - தெலுங்கு

சினத்துடன் தொடர்புடைய சொற்கள்:

மகிழ்ச்சி, அழுகையைப் போல சினம் என்பதும் ஒரு உணர்ச்சிதான் என்றாலும் இது அழிவைத் தரும் உணர்ச்சியாகும். உண்மையில், சினம் என்பது ஒரு தீயினைப் போன்ற சேர்ந்தாரைக் கொல்லி ஆகும் என்று வள்ளுவர் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். - 306.

தீ எவ்வாறு தான் சேர்ந்த திணையினை மட்டுமின்றி அதனை அடுத்திருக்கும் திணைகளையும் பற்றிச் சுட்டெரித்து அழிக்குமோ அதைப்போல சினமும் தான் சார்ந்தவனை மட்டுமின்றி அவனது சுற்றத்தாரையும் அழிக்க வல்லது என்கிறார். தமிழில் மட்டுமின்றி, சினத்தை ஒருவகைத் தீயாகக் கருதுவது உலகப் பொதுவழக்காக இருக்கும் நிலையில், சினத்துடன் தொடர்புடைய பல தமிழ்ச்சொற்களை நெருப்பு, வெப்பம் ஆகிய திணைகளைக் குறிப்பதற்குப் பிற மாநில மொழிகளில் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்று கீழே காணலாம்.

சினத்தல் / சினமுண்டாக்குதல் ஆகிய வினைகளைக் குறிப்பதற்குக் காய்தல், கறுவுதல், சீறுதல், பைத்தல், கிளர்தல், உராய்தல் போன்ற சொற்களைத் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். இவ்வினைச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு பிறமாநில மொழிகளில் சினம், வெப்பம், ஒளி, நெருப்பு முதலான பொருட்களில் எப்படியெல்லாம் புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைக் கீழே காணலாம்.

காய் >>> காச` >>> ப்ரகாச`
கறுவு >>> கெரலித`
கறுவு >>> க~ர்மி >>> க~ர்ம >>> கா^மா
உராய் >>> ரோச` >>> ரோச்`னி >>> ருச`னை
உராய் >>> ரோச` >>> ஆக்ரோச`
சீறு >>> சிராக்~ >>> ராக~
சீறு >>> சீட` >>> சிட்டே >>> சி`ட்டாத`, சி`டு`கின
கிளர் >>> க்லேச` >>> கிச்சு >>> கீசா^^ >>> கு~ச்சா`
பை >>> ப்ரபை^ >>> ப்ரபா^ >>> ப்ரபா^த
பை (பய்) >>> பா^ச்` >>> பா^ச்`கர
பை >>> பா^ம >>> பா^னு



சொல்வடிவங்கள்
பேசப்படும் மொழிகள்
ப்ரகாச`, ப்ரபா^, ப்ரபா^த, பா^ச்`கர, பா^னு
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்
கெரலித`, சி`ட்டாத`, சி`டு`கின, கிச்சு
கன்னடம்
க~ர்மி, க~ர்ம, கா^மா
இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, பஞ்சாபி`, மராத்தி, வங்காளம்
ரோச`, ஆக்ரோச`
மலையாளம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், கன்னடம்
ரோச்`னி
இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`
ருச`னை
பஞ்சாபி`, கு~ச்^ராத்தி
சீட`
மராத்தி
சிட்டே
பஞ்சாபி`
ராக~
இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்
க்லேச`, பா^ம
செங்கிருதம்
கீசா^^, கு~ச்சா`, சிராக்~
இந்தி, கு~ச்^ராத்தி



செந்நிறத்துடன் தொடர்புடைய பெயர்கள்:

நிறங்களில் செந்நிறம் என்பது சினத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அளவுக்கு மீறி ஒருவர் சினம் கொள்ளும்போது அவரது கண்களில் அதிகக் குருதி பாய்வதால் அவரது கண்கள் இயல்பான வெண்ணிறத்திற்குப் பதிலாகச் செந்நிறம் கொள்வதைப் பார்க்கலாம். தமிழில் செந்நிறத்தைக் குறிப்பதற்குச் சேப்பு, செக்கர், குரூ ஆகிய சொற்களும் பயன்படுகின்றன. செந்நிறத்தினைக் குறிப்பதான இத் தமிழ்ச்சொற்கள் எப்படித் திரிந்து பிற மொழிகளில் சினம், நெருப்பு, ஒளி, வெப்பம் சார்ந்த பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன என்று கீழே காணலாம்.

சேப்பு >>> சோ~ப`
செக்கர் >>> செ~க~, செ~கெ~ >>> சே`க >>> சே`ங்க
குரூ >>> க்~ருணி >>> கிரண்

செந்நிறத்தைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்களை மட்டுமின்றி, செந்நிறம் கொண்ட திணைகளான குருதியையும், செந்நிற மூதாய்ப் பூச்சியையும் தாமரை, கயமலர், காந்தள், ஆம்பல், அரக்கு போன்ற மலர்களின் தமிழ்ப்பெயர்களையும் கூட சற்றே திரித்து சினம், ஒளி, நெருப்பு, செம்மை முதலான பொருட்களில் பிற மாநில மொழிகள் பயன்படுத்துகின்றன. அவற்றைக் கீழே விரிவாகக் காணலாம்.

குருதி >>> க்ரோத^ >>> உக்~ரத >>> உக்~ர >>> உகா~ரா, உகாடா`, உகாலோ
குருதி >>> ருத்^ர >>> ரௌத்`ர
குருதி >>> ருத்`ர >>> உதி`ர >>> உத்^ரெக
தாமரை >>> தாமிர >>> தாமிச்`ர >>> தாமச`
தாமரை >>> தாப >>> தூ^ப, தப >>> தபன
தாமரை >>> தாவ >>> தவ >>> ஆதவ
கயமலர் >>> கக்ச்`ப` >>> க~ச^`ப`
காந்தள் >>> காந்த, காந்தி
ஆம்பல் >>> ஆப^
அரக்கு >>> அர்க >>> அரிகா`
அரக்கு >>> ரக்த

கோபம் என்ற தமிழ்ச்சொல்லானது சங்க இலக்கியங்களில் ஒருவகைப் பூச்சியைக் குறித்து வந்துள்ளது. சிவப்பு நிறம் கொண்டதும் பட்டுப்போன்ற ஒருவகை மயிரினால் உடல்முழுவதும் மூடப்பட்டதும் மிக மெதுவாகத் தரையில் ஊர்ந்து செல்வதுமான ஒரு சிறிய பூச்சியினை மழைக்காடுகளில் இன்றும் நாம் பார்க்கலாம். வெல்வெட் பூச்சி என்றும் பட்டுப்பூச்சி என்றும் அழைக்கப்படும் இப்பூச்சிக்குக் கோபம், மூதாய், செம்மூதாய் ஆகிய பல பெயர்கள் தமிழில் உண்டு. இப்பூச்சியைப் பற்றிய சில பாடல்கள் கீழே.

ஓவத்து அன்ன கோப செம் நிலம் - அகம் 54
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் - சிறு 168
குருதி உருவின் ஒண் செம்மூதாய்ப் பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப - அகம் 74
செம் புற மூதாய் பரத்தலின் நன் பல - அகம் 134

சிவப்புநிறம் கொண்ட மென்மையான பட்டுப்பூச்சியைக் குறித்துவந்த கோபம் என்ற தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து சினம் மற்றும் மென்மையினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே பார்க்கலாம்.

கோபம் >>> கோப >>> ப்ரகோப
கோபம் >>> கோமள

தமிழில் அமர்த்தல் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்குச் சிவத்தல் என்ற பொருளுண்டு. ஆனால், நமது தமிழகராதிகள் இப்பொருளைக் காட்டவில்லை. புகையினாலோ வெப்பத்தாலோ நெடுநேரம் அழுதாலோ நீராடினாலோ கண்கள் தமது இயல்பான பால்நிறத்தில் இருந்து மாறுபட்டுச் செந்நிறம் கொள்வதுண்டு. இதனை அமர்த்தல் என்ற சொல்லால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சில இடங்களைக் கீழே காணலாம்.

புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற - நற் 120
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள் - ஐங் 79
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ - நற் 66

சிவப்பாக மாறுதல் என்ற பொருளைத் தருகின்ற அமர் என்ற தமிழ்ச்சொல் பிறமாநில மொழிகளில் திரிந்து சினமடைதல் என்ற பொருளில் வழங்கப்படும் விதங்களைக் கீழே காணலாம்.

அமர் >>> அமர்ச` >>> அமர்க்ச`



சொல்வடிவங்கள்
பேசப்படும் மொழிகள்
க்~ருணி, உக்~ரத, உக்~ர, தாமிச்`ர, கக்ச்`ப`, அமர்க்ச`
செங்கிருதம்
சோ~ப`, கிரண், க்ரோத`, கோப, தாமிர, தாப, தப, ஆதவ, ரக்த, கோமள
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்


அர்க
இந்தி, வங்காளம்
செ~க~
தெலுங்கு
சே`ங்க, தாமச`, தூ`ப, தாவ, க~ச^`ப`
இந்தி
சே`க, தூ`ப, உகா~ரா
பஞ்சாபி`
செ`கெ~, உத்^ரெகெ
கன்னடம்
உகாடா`
மராத்தி
உகாலோ, காந்த, ஆப^, அரிகா`
கு~ச்^ராத்தி
ருத்`ர, ரௌத்`ர, ப்ரகோப
செங்கிருதம், இந்தி,  கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா, வங்காளம்
உதி`ர
செங்கிருதம், இந்தி
தபன
மலையாளம், கு~ச்^ராத்தி
காந்தி
மலையாளம், தெலுங்கு, கன்னடம்
அமர்ச`
மலையாளம், கு~ச்^ராத்தி, வங்காளம்


முடிவுரை:

இதுவரையிலும், தீ, ஒளி, சினம் மற்றும் செந்நிறம் தொடர்பான பல்வேறு தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் திரிந்து வழங்கும் விதங்களை விரிவாகக் கண்டோம். இச்சொற்களில் இருந்து பிற மாநில மொழிகள் உண்டான விதிமுறைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். 

... தொடரும் ...........

5 கருத்துகள்:

  1. தீ, ஒளி, சினம் மற்றும் செந்நிறம் ஆகிய சொற்களோடு தொடர்புடைய தமிழ்ச்சொற்களைப் பற்றி அறிந்தோம். விவரித்துள்ள விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. ஆய்வு நன்றாக இருக்கிறது. கருத்துரைக்கும் அளவுக்கு இந்தத் துறையில் எனக்கு ஞானம் குறைவு. வாழ்த்து.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.