புதன், 17 அக்டோபர், 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - 9 - இசை - ஒலி - பேச்சு


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முந்தைய பகுதிகளில் மனிதரின் புறஉறுப்புக்கள், விலங்குகள், தீ, ஒளி, வெப்பம், சினம், சிவப்பு, மாடு, பால், வேளாண்மை, சக்கரம், வண்டி, வழி, பயணம் மற்றும் பானை தொடர்பான தமிழ்ப்பெயர்கள் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் அடையும் மாற்றங்களைப் பற்றி விரிவாகக் கண்டோம். அக் கட்டுரையின் ஒன்பதாவது பகுதியான இதில் ஒலி, இசை மற்றும் பேச்சு தொடர்பான தமிழ்ப்பெயர்கள் பிறமொழிகளில் அடையும் மாற்றங்களைப் பற்றி விரிவாகக் காணலாம்.

ஒலியின் வகைகள்:

கோழியில் இருந்து முட்டை வந்ததா?. முட்டையில் இருந்து கோழி வந்ததா?. என்ற கேள்வியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இக் கேள்விக்கு விடையாக, கோழிதான் முதலில் என்றும் முட்டைதான் முதலில் என்றும் இருவேறு கருத்துக்கள் எப்போதும் இவ்வுலகில் உண்டு. ஆனால், ஒலி, எழுத்து ஆகிய இரண்டில் எது முதலில் என்று கேள்வி கேட்டால் ஒலிதான் முதலில் என்று ஆணித்தரமாக விடையிறுக்கலாம். காரணம், ஒலி இயற்கையில் தோன்றுவது; எழுத்து மனிதனால் படைக்கப்பட்டது. எனவே இக்கட்டுரையில் ஒலியைப் பற்றி முதலில் காணலாம்.

இயற்கையில் தோன்றும் பல்வேறு ஒலிகளில் இடியோசையினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். உலகில் தோன்றும் ஒலிகளிலேயே அதிக அதிர்வெண் கொண்ட ஒரே ஒலி அதுதான். இடியோசையினைக் கேட்டு நடுங்காதவர்கள் உண்டோ உலகில்?. நாம் இயல்பாகப் பேசும்போது எழுகின்ற ஒலியானது கேட்பவரின் செவிப்பறையை அதிரச் செய்கிறது என்றால் இடியோசையானது கேட்பவரின் உடலையே அச்சத்தால் நடுங்கச் செய்வதைக் காண்கிறோம். மேலும் இந்த இடியோசையினைக் கேட்டு பாம்புகள் துடிதுடித்து இறக்கும் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

இடியோசை நீங்கலாக, இயற்கையில் பல்வகைப்பட்ட ஒலிகள் இருக்கின்றன. அருவிநீர் விழும் ஒலி, கடலலைகள் எழுப்பும் ஒலி, பனைமரத்தின் / மரத்தின் காய்ந்த ஓலைகள் / இலைகள் எழுப்பும் ஒலி, மூங்கில் மரங்களின்மேல் காற்றுமோதி எழுப்பும் ஒலி, காய்ந்த சருகுகள் எழுப்பும் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலி, பறவைகள் எழுப்பும் ஒலி, சங்கின் ஒலி, இசைக்கருவிகளின் ஒலி, மனிதர்கள் பேசும் / எழுப்பும் ஒலி என்று பலவிதமான ஒலிகளின் களஞ்சியமாக இவ் உலகம் திகழ்கிறது என்றால் மிகையில்லை. சங்ககாலத்தில் இருந்த ஒரு மலைநாட்டில் எத்தனை வகையான ஒலிகள் எழுந்தன என்று மலைபடுகடாம் என்ற சங்க இலக்கிய நூல் விரிவாகவும் அழகாகவும் கூறுகிறது.

ஒலிக்குறிப்புக்கள்:

ஒரு ஒலியைக் குறிப்பிடுவதற்கு உதவும் சொற்கள் ஒலிக்குறிப்புக்கள் எனப்படும். சான்றாக, அவன் தடாலென காலில் விழுந்தான்; கோவில் மணி கணீரென ஒலித்தது; தொபுக்கடீர் என்று நீருக்குள் பாய்ந்தான் என்றெல்லாம் இக்காலத்தில் பலவிதமான ஒலிக்குறிப்புக்களைப் பயன்படுத்திக் கூறுகிறோம். இதைப்போலவே சங்ககாலத்திலும் புலவர்கள் ஒலிகளைக் குறிப்பிடுவதற்குப் பலவிதமான ஒலிக்குறிப்புக்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

சங்கப் புலவர்கள் பயன்படுத்தியுள்ள ஒலிக்குறிப்புக்களில் சிலவாக, இம்மென, இழுமென, ஒல்லென, ஒய்யென, ஐயென, கம்மென, கதுமென, கல்லென, கிடினென, கொம்மென, ஞெரேரென, தண்ணென, துடுமென, துண்ணென, விம்மென ஆகியவற்றைச் சொல்லலாம். இச்சொற்களில் சிலவற்றைச் சற்றே திரித்து இன்றைய நாளிலும் நாம் வழங்கி வருகிறோம்.

இம்மென >>> ஈம் ஈம் என்று ( வண்டு ஒலித்தது )
விம்மென >>> ஊம் ஊம் என்று ( குழந்தை அழுதது )
கொம்மென >>> கும் என்று (இருந்தது)
கம்மென >>> கம் என்று (அமைதியாக இருக்கவேண்டும்)
கிடினென >>> கிடுகிடு என்று (உடல் நடுங்கியது)
துடுமென >>> தடால் என்று (காலில் விழுந்தான்)
ஒல்லென >>> கொல் என்று (சிரித்தார்கள்)
ஞெரேரென >>> நருக் என்று (வேலை முடிய வேண்டும்)
தண்ணென >>> டண்டண் என்று (மணி அடித்தது)

ஒலி தொடர்பான சொற்கள்:

தமிழ்மொழியில் ஒலியுடன் தொடர்புடைய சொற்கள் மிகப்பல. இவற்றில் சில சொற்கள் பெயர்ச்சொற்களாகவும் சிலசொற்கள் வினைச்சொற்களாகவும் சிலசொற்கள் ஒலிக்குறிப்புக்களாகவும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் ஒலிக்குறிப்புக்களைப் பற்றி மேலே கண்டோம். எஞ்சியுள்ள பெயர்ச்சொற்களிலும் சிலசொற்கள் ஒலியை உண்டாக்கும் மூலங்களாகவும் சிலசொற்கள் ஒலியைக் குறிக்கும் நேரடிப் பெயர்களாகவும் உள்ளன. இம் மூன்று வகைச் சொற்களைப் பற்றியும் கீழே காணலாம்.

ஒலி / இசை மூலங்கள்: அரவு (மேகம், பாம்பு), அரி (சிலம்பு, வண்டு, கிளி, தவளை, சிங்கம், குதிரை, குரங்கு, பாம்பு), அருவி, அழுவம் (கடல், போர்), அன்றில் (பறவை), ஆகுளி (பறை), ஆந்தை, இடி, இயம் (இசைக்கருவி), உமணர் (வணிகர்), உரும் (இடி), எல்லரி (பறை), எழிலி (மேகம்), ஏழ்புழை (புல்லாங்குழல்), ஐம்புழை (புல்லாங்குழல்), ஏறு (இடி, சிங்கம்), ஓதை (காற்று), கடல், கலம் (இசைக்கருவி), கமஞ்சூல் (மேகம்), கருவி (மேகம்), கழல் (சிலம்பு), கழுத்து, களம் (தொண்டை), கன்னம் (பறை), கார் (மேகம்), கிண்கிணி, கிணை (பறை), கிலுகிலி, குடிஞை (ஆந்தை), குரவை (விளையாட்டு), குரால் (ஆந்தை), குருகு (நாரை), குழல் (புல்லாங்குழல்), குழாம் (கூட்டம்), குளிர் (கிளிகடி கருவி), கூகை (ஆந்தை), கோடு (சங்கு, ஊதுகொம்பு), கின்னரம் (இசைக்கருவி), சங்கு, சாத்து (வணிகர்), சிலம்பு, சிள்வீடு (பூச்சி), சுரும்பு (வண்டு), ஞாட்பு (போர்), ஞிமிறு (வண்டு), தட்டை (கிளிகடி கருவி), தடாரி (பறை), தண்ணுமை (பறை), திரை (கடல்), துடி (பறை), துணங்கை (விளையாட்டு), தும்பி (வண்டு), தூம்பு (இசைக்கருவி), தொண்டகம் (பறை), தொண்டை, குரல்வளை, நத்தம் (சங்கு), நரம்பு, நாக்கு, நா, நாரை, பணிலம் (சங்கு), பணை (முரசு), பல், பல்லவர் (இசைப்பவர்), பல்லி, பறை, பாண்டில் (கஞ்சதாளம்), பாம்பு (மேகம், நச்சுயிரி), புள் (பறவை), கோழி, சேவல், பௌவம் (கடல்), மகுளி (பறை), மங்குல் (மேகம்), மஞ்சு (மேகம்), மயில், மஞ்ஞை (மயில்), மணி, மத்தரி (பறை), மழை (மேகம்), மிஞிறு (வண்டு), மிடறு, முந்நீர் (கடல்), முழவு (மேளம்), யாழ், வண்டு, வயிர் (ஊதுகருவி), வலம்புரி (சங்கு), வளை (சங்கு), வாய், விழா, முரசு, கொண்டல் (மேகம்), பதலை (இசைகருவி), தேரை (தவளை), தவளை, நுணல் (தவளை), தேன் (வண்டு).

ஒலி / இசைக்கான பெயர்ச்சொற்கள்: அகவல் (ஓசை), அரவம், அரி, அம்பல், அலர், ஆர்ப்பு, ஆலல், இசை, இமிரல், இளி (பண்), உயிர், உரும் (இடியோசை), ஒலி, ஓசை, ஓல், ஓலம், கடாம், கணம், கம்பலை, கரை, கல், கலி, காஞ்சி (பண்), கிளவி, குரல், குறிஞ்சி (பண்), கொளை, கொட்பு, கேள்வி, சீர், சும்மை, செப்பல் (ஓசை), செவ்வழி (பண்), சொல், தாளம், துள்ளல் (ஓசை), தூக்கு, தூங்கல் (ஓசை), தெள்விளி, தொடை, நெய்தல் (பண்), நொடி, பண், பண்ணை, பதம், பயிர், பனுவல், பாட்டு, பாடல், பாணி, பாலை (பண்), பூசல், மருதம் (பண்), மாத்திரை (கைந்நொடிக்கும் அளவு), முழக்கம், முல்லை (பண்), மொழி, யாப்பு, வள்ளை, விளரி (பண்), விளி, வீளை, வெடி, கேள்வி, பாராட்டு, புகழ், வாழ்த்து, வஞ்சி (பண்), விக்கல், விம்மல், அழுகை.

ஒலித்தல் / இசைத்தலைக் குறிக்கும் வினைச்சொற்கள்: அகவு, அதிர், அசாவு, அரற்று, அலறு, அழை, அழு, அறை, ஆர், ஆல், இசை, இடி, இமிர், இமிழ், இயம்பு, இரங்கு, இரட்டு, இனை, உயிர், உசாவு, உரறு, உருமு, உளர், உளம்பு, ஊது, ஏங்கு, ஏத்து, ஒலி, ஒற்று, ஓது, ஓப்பு, ஓச்சு, கரை, கல், கலி, கறங்கு, கதறு, கிள, குழறு, குழுமு, கூவு, கூறு, சாற்று, சிலம்பு, சிலை, செப்பு, சொல், ஞரலு, ததும்பு, தழங்கு, துடி, துவை, துவன்று, தூங்கு, தெவிட்டு, தெளிர், தெழி, தேம்பு, தொடு, நடுங்கு, அஞ்சு, நவில், நொடி, நுவல், பகர், பண்ணு, பயிர், பயில், பறை, பாடு, பாராட்டு, பிளிறு, புகழ், புலாவு, போற்று, முரல், முழங்கு, மொழி, வாழ்த்து, விளர், விளம்பு, விளி, விம்மு.

தமிழில் இருந்து பிறமொழிச் சொற்கள் தோற்றம்:

ஒலியுடன் தொடர்புடைய ஏராளமான தமிழ்ச் சொற்களை மேலே கண்டோம். இனி இவற்றில் இருந்து சற்றே திரிந்து பிற மொழிச் சொற்கள் தோன்றும் விதங்களைக் கீழே விரிவாகக் காணலாம். ஒலித்தல் / இசைத்தல் / பேசுதல் ஆகியவற்றைக் குறிக்கும் தமிழ் வினைச் சொற்களில் இருந்து பிறமாநில மொழிச் சொற்கள் தோன்றிய முறைகளைப் பற்றி முதலில் காணலாம்.

அ. வினைச்சொற்களில் இருந்து தோற்றம்:

தமிழில் அகவு என்னும் பழந்தமிழ்ச் சொல்லுண்டு. இச் சொல்லானது பாடுதல் என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. இசையுடன் கூடியதான பல பாடல்களைத் தெருக்களில் பொதுமக்களிடையே ஆடியும் பாடியும் மகிழ்விப்பதைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களை அகவர், அகவுநர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சில சான்றுகளைக் கீழே காணலாம்.

கானவர் மருதம் பாட அகவர் நீல்நிற முல்லை பல் திணை நுவல - பொரு 220
அகவன் மகளே பாடுக பாட்டே - குறு 23
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்தொறும் - அகம் 249

அகவு எனும் இத் தமிழ்ச்சொல்லை மூலமாகக் கொண்டு ஏராளமான பிறமொழிச் சொற்கள் தோன்றியுள்ளன. இச் சொல்லில் இருந்து சற்றே திரிந்து பிறமொழிச் சொற்கள் தோன்றியுள்ள விதங்களைப் பார்க்கும்போது ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் தமிழ்மொழியே கோலோச்சி இருக்கவேண்டும் என்ற கருத்து உறுதியாகிறது. இனி, அகவு என்னும் சொல்லில் இருந்து பிறமொழிச் சொற்கள் தோன்றியுள்ள விதங்களைக் கீழே விரிவாகக் காணலாம்.

அகவு >>> கா~வ் >>> கா~வ்கா~வ், காவ்ய >>> கா~யன, கா~யத்ர >>> கே~ய >>> உபகே~ய
அகவு >>> கா~வ் >>> க~வ, கவித, கவ்வாலி, கவன >>> கா~ன >>> ப்ரகா~ன, கா~ணீய
அகவு >>> ஆக`ட்

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

கா~வ்               இந்தி, மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா, செங்கிருதம்.
கா~வ்கா~வ்          மராத்தி
க~வ, கா~யத்ர       செங்கிருதம்
கா~ன               மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
கவித                மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
கவன               கன்னடம்   
கா~யன             கன்னடம், இந்தி, மராத்தி, குச்ராத்தி,
கவ்வாலி            மராத்தி, குச்ராத்தி
காவ்ய              மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
                    செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
ஆக`ட்              இந்தி
ப்ரகா~ன, கா~ணீய   செங்கிருதம்
கே~ய, உபகே~ய    செங்கிருதம்

அகவு என்ற ஒற்றைத் தமிழ்ச்சொல்லே இந்தியாவின் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து பாடுதல் வினையினையும் பாடலையும் குறிக்கப் பயன்படும் விதங்களைப் பார்க்குமிடத்துத் தமிழ்மொழியின் தொன்மையையும் பரவலையும் நன்கு புரிந்து கொள்ளலாம். இதேபோல இன்னும் பல வினைச்சொற்கள் பிறமொழிகளில் திரித்துப் பேசப்படுவதையும் கீழே காணலாம்.

துவை >>> த்^வனி >>> ஆத்^பா`ன, து`னி, த`னி
துவை >>> த்விச்~ >>> தி^ச~ண
ஆல் >>> ஆலாப, ஆலாபன >>> ஐலப`
உயிர் >>> உசி`ரு >>> உசர >>> உச்சாரனே, உச்சாட`ன்
ஊது >>> ஊத^ம
கறங்கு >>> கராகே, கராக >>> ராக~
சிலம்பு >>> ச^ல்ப >>> ச^ல்பன, விச^ல்ப
சிலை >>> செ`லெ, ச்`லோக, ச`லாயீ
பகர் >>> ப`க, பங்க்தி >>> ப`கவாத, ப`க்வாச்` >>> வாக்கு >>> வாக்ய, வாக~ >>> வக்~னு, வக்~வனு >>> வ்யாக்யான
புலாவு >>> பு`லாவ் >>> ச`ம்ப்லவ
விளம்பு >>> விலபதி >>> லபதி >>> ப்ரலபதி, ப்ரலாப, ச`மாலாப >>> லப`ச^
விளம்பு >>> விபா
கூவு >>> கூ, கூனா
குழுமு >>> கு~ச^ப`
ஆர் >>> ஆரடி

சொல்வடிவம்    பேசப்படும் மொழிகள்

த்^வனி          மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
 செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
 பஞ்சாபி, ஒரியா.
து^னி            பஞ்சாபி
த`னி, செ`லெ    கன்னடம்
ஆத்^பா`ன       வங்காளம்
த்விச்~, தி^ச~ண செங்கிருதம்
கராக, ஊத^ம   பஞ்சாபி
ராக~           மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
பங்க்தி, ச`லாயீ  இந்தி
ச்`லோக, விபா  செங்கிருதம்
வாக்கு, வாக்ய  மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
வாக~          குச்ராத்தி, பஞ்சாபி
உசி`ரு          கன்னடம்
உசர            பஞ்சாபி
உச்சாரன       வங்காளம், செங்கிருதம், பஞ்சாபி, கன்னடம்   
ஆலாப         வங்காளம், செங்கிருதம், குச்ராத்தி,
ஆலாபன       மலையாளம்
ச^ல்ப, ஆரடி    செங்கிருதம்
ச^ல்பன         மலையாளம், வங்காளம்
விச^ல்ப        செங்கிருதம்
ப`க             குச்ராத்தி, பஞ்சாபி
ப்ரலாப, ச`மாலாப செங்கிருதம்
விலபதி, லபதி  செங்கிருதம்
ப்ரலபதி         செங்கிருதம்
உச்சாட`ன்      இந்தி
பு`லாவ், ப`க்வாச்` இந்தி
ச`ம்ப்லவ, ஐலப` செங்கிருதம்
லப`ச்^          இந்தி, மராத்தி, குச்ராத்தி, வங்காளம்
கூ, கூனா       பஞ்சாபி
கு~ச^ப`         வங்காளம்
வக்~னு, வக்~வனு  செங்கிருதம்
வ்யாக்யான     மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
ப`கவாத        குச்ராத்தி
கராகே         பஞ்சாபி, இந்தி.

ஆ. இயற்கை ஒலிமூலங்களில் இருந்து தோற்றம்:

ஒலி / இசையினைத் தோற்றுவிக்கும் மூலங்களைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப் பெயர்களை மேலே கண்டோம். இனி, இந்த மூலங்களைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களில் இருந்து சற்றே திரிந்து பிறமொழிகளில் ஒலி / இசை / பேச்சினைக் குறிக்கப் பயன்படுத்துகின்ற சொற்கள் தோன்றும் முறைகளைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

முதலில் கழுத்து என்னும் ஒலிமூலத்தைப் பற்றிக் காணலாம். காரணம், இசையைத் தோற்றுவிக்கும் பல்வேறு மூலங்கள் / கருவிகளிலும் முதன்மையானதும் சிறப்பு மிக்கதுமான கருவி எதுவென்றால் அது நமது குரல்வளை தான். இப்பகுதியில் தான் ஒலியை உருவாக்கும் குரல்வளை அமைந்துள்ளது. பெரும்பாலான இசைக்கருவிகள் ஒரு குறிப்பிட்ட வகையான இசையினை மட்டுமே ஒலிக்கின்ற நிலையில், குரல்வளையில் இருந்து எண்ணற்ற வகையான ஒலிகளை உருவாக்க முடியும். ஒரு மனிதரால் 50 க்கும் மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த குரல்களில் பேசமுடியும் என்பதனைப் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறோம். இவ்வளவு திறன்வாய்ந்த குரல்வளை அமைந்திருக்கும் பகுதியான கழுத்து என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறமாநில மொழிகளுக்கு எத்தனை சொற்கள் சென்றுள்ளன, எவ்வாறு சென்றுள்ளன என்பதனைக் கீழே பார்க்கலாம். 

கழுத்து >>> க~ர்த`ன >>> கதன, க~ர்ச^ன, ராத`ன >>> ஆராத`ன
கழுத்து >>> க~ர்த`ன >>> கீர்த்தன >>> கீர்த்தி >>> க்ருதி, க்`ராத^, கி^ர, கீ~த >>> ச`ங்கீ~த
கழுத்து >>> க~த்த^ல >>> கோ~ந்த^ல
கழுத்து >>> கா~த்த, கா~து, கௌதுக >>> க~தி`, கதா >>> நிக~த`, ப்`ரக`தீ
கழுத்து >>> கா~ந்த^ர்வ

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

க~ர்த`ன            இந்தி, மராத்தி, குச்ராத்தி, பஞ்சாபி.
க~ர்ச^ன            மலையாளம்
க~த்த^ல           கன்னடம்
கோ~ந்த^ல         மராத்தி
ராத`ன, ஆராத`ன   செங்கிருதம்          
கீ~த, ச`ங்கீ~த       மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
   செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
   பஞ்சாபி, ஒரியா.
கீர்த்தன           தெலுங்கு, கன்னடம்
க்ருதி             கன்னடம்
கி^ர               குச்ராத்தி, செங்கிருதம்
கீர்த்தி             மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
   செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
   பஞ்சாபி, ஒரியா.
கா~த்த            வங்காளம், செங்கிருதம்
கதன              பஞ்சாபி, வங்காளம்
கா~து, நிக~த`      செங்கிருதம்
கா~ந்த^ர்வ         செங்கிருதம்
க்`ராத, கௌதுக    செங்கிருதம்
கதா, க~தி`         செங்கிருதம், குச்ராத்தி, வங்காளம்
ப்`ரக`தீ            செங்கிருதம்

கழுத்து என்ற சொல் மட்டுமின்றி கண்டம் என்ற சொல்லும் கழுத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லே என்று மூன்றாம் பகுதியில் பல ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டோம். இனி இச்சொல்லுடன் சேர்ந்து வாய், நா என்னும் சொற்களும் சற்றே திரிந்து பிறமொழிகளில் ஒலி / இசை / பேச்சினைக் குறிக்கப் பயன்படுவதனைப் பற்றிக் கீழே காணலாம்.

வாய் >>> வாச, வாசீ~, வாச^ >>> வச`ன, வாச^னெ
வாய் >>> வாச` >>> பா^ச~ >>> பா^ச`னம் >>> ச`ம்பா^ச`ன
நா >>> ந்யாச` >>> உபன்யாச`

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

வாச, வாச~           பஞ்சாபி, செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி
வச`ன, வசன         மலையாளம், கன்னடம், இந்தி, குச்ராத்தி,
 பஞ்சாபி, செங்கிருதம், தெலுங்கு
வாச^னெ             மராத்தி
பா^ச`னம்             மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி,
 குச்ராத்தி, வங்காளம், பஞ்சாபி, செங்கிருதம்
பா^ச~                 மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி,
 குச்ராத்தி, வங்காளம், செங்கிருதம்
ச`ம்பா^ச`ன           மலையாளம், தெலுங்கு, கன்னடம்
உபன்யாச`            மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி,
 செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
 பஞ்சாபி, ஒரியா.

மனிதர்கள் இயற்கையாக எழுப்பும் ஒலி / இசை மட்டுமின்றி, விலங்குகள் மற்றும் பறவைகள் எழுப்பும் ஒலிகளையும் கூர்ந்து கவனித்துப் பதிவுசெய்யும் திறமை மிக்கவர்கள் நமது சங்கத் தமிழ்ப் புலவர்கள். மழைக்காலங்களில் பெருங்குரலில் இடையறாது ஒலி எழுப்புகின்ற தேரைகளின் ஒலியாகட்டும், வண்ண வண்ண மலர்களைச் சுற்றிச்சுற்றி வந்து யாழின் ஓசை போல ஒலியினை எழுப்பக்கூடிய வண்டுகளின் ஒலியாகட்டும், இரவு நேரங்களில் கேட்பவர் மனதில் அச்சத்தை உண்டாக்கும் வண்ணம் ஒலியெழுப்பும் ஆந்தைகளின் ஒலியாகட்டும் பல பாடல்களில் அவற்றைப் பதிவுசெய்து வைத்துள்ளனர். இந்த மூன்று உயிரிகளையும் குறிக்கும் தமிழ்ப்பெயர்களைச் சற்றே திரித்து ஒலி / இசையினைக் குறிக்கப் பிறமொழிகள் பயன்படுத்தும் விதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேரை >>> த்^ரூணா, தரானா, தோ^ரணி
கூகை >>> கோ~கீரோ, கூ~ங்க~ட், கோ~ங்கா~ட
சுரும்பு >>> சு`ரம் >>> சூ`ர, சோ~ர், ச்`ருதி
தேன் >>> தே`னா

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

த்^ரூணா, தேனா      செங்கிருதம்
தரானா               இந்தி
தோ^ரணி             தெலுங்கு
கோ~கீரோ            குச்ராத்தி
கூ~ங்க~ட்             இந்தி
கோ~ங்கா~ட          குச்ராத்தி, மராத்தி
சு`ரம்                 குச்ராத்தி, இந்தி
சூ`ர                  மராத்தி
சோ~ர்                இந்தி, குச்ராத்தி, பஞ்சாபி
ச்`ருதி                மலையாளம், குச்ராத்தி, செங்கிருதம்

இ. செயற்கை ஒலிமூலங்களில் இருந்து தோற்றம்:

உயிரினங்கள் எழுப்பும் பல்வகை ஒலிகளை மட்டுமின்றி, செயற்கையாகக் கருவிகளின் மூலம் மனிதர்கள் எழுப்பிய பல்வகை ஒலிகளையும் சங்கப் புலவர்கள் பதிவுசெய்து வைத்துள்ளனர். மனிதர்கள் வாயினால் ஊதி எழுப்பும் ஒலிவகைகளில் சங்கின் ஒலியே தனிதான். தற்போது நாம் சங்கு என்று அழைக்கும் இந்த இசைக்கருவிக்கு நந்து, நத்து, நத்தம் என்றெல்லாம் பல பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் உண்டு.  இத் தமிழ்ப் பெயர்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து ஒலி / இசையைக் குறிப்பிட உதவும் முறைகளைக் கீழே காணலாம்.

நத்து >>> நத`து >>> நாத`, விநத`, ச`ம்நதி`, நிநாத`, நீதா

சொல்வடிவம்   பேசப்படும் மொழிகள்

நத`து           செங்கிருதம்
நாத`            மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம்,
 மராத்தி, குச்ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
நிநாத`          குச்ராத்தி, வங்காளம், செங்கிருதம்
ச`ம்நதி`, விநத`  செங்கிருதம்
நீதா            செங்கிருதம்

சங்கினைப் போலவே பல்வேறு இசைக்கருவிகளில் இருந்தும் பல்வகை ஒலிகளை எழுப்பினர் சங்கத் தமிழர்கள். அதுமட்டுமின்றி, வயலில் விளைந்திருக்கும் பயிர்களை உண்ணவரும் கிளிகள், யானைகள் போன்றவற்றை அச்சுறுத்தித் துரத்துவதற்காகத் தட்டை, குளிர் போன்ற இசைக்கருவிகளை ஒலித்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதுபோல பலவகையான ஒலிமூலங்களைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களில் இருந்து சற்றே திரிந்து பிற மாநில மொழிகளில் ஒலி / இசையினைக் குறிக்கும் சொற்கள் தோன்றிய விதங்களைப் பற்றிக் கீழே காணலாம்.

கலம் >>> கலாம, காலவா >>> கலத்வ >>> க~ல்த`, க`ல்லா, க`லகா, க~லா >>> கி~ல்லா
முரசு >>> ராச` >>> ரசி`த
குளிர் >>> கு~ல்லு, கு~ல், கு~ல்லா >>> கோ~ல, கோலாக`ல், கோ`க`ல்லா
தட்டை >>> தாட`
தூம்பு >>> தூ^ம்
பாண்டில் >>> பிண்ட`
முழவு >>> மேளம் >>> மேளன் >>> ச`ம்மேளன்
பறை >>> ப்ரச்~தவ

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

ராச`, ரசி`த            செங்கிருதம்
கு~ல்லு               கன்னடம்
கு~ல், கு~ல்லா        இந்தி
தாட`, க~ல்த`         செங்கிருதம்
தூ^ம்                 இந்தி
பிண்ட`, கலத்வ       செங்கிருதம்
மேளம்               மலையாளம், தெலுங்கு
கலாம               குச்ராத்தி, பஞ்சாபி
காலவா              மராத்தி
க`ல்லா               இந்தி, பஞ்சாபி
க`லகா, கி~ல்லா      மராத்தி
க~லா                பஞ்சாபி
கோலாக`ல்           இந்தி, மராத்தி
கோ`க`ல்லா          இந்தி
கோ~ல               வங்காளம்
ச`ம்மேளன்           செங்கிருதம், இந்தி, மராத்தி, குச்ராத்தி,
வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
ப்ரச்~தவ              செங்கிருதம்

ஈ. பெயர்ச்சொற்களில் இருந்து தோற்றம்:

ஒலி / இசை / பேச்சினைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப்பெயர்ச் சொற்களை மேலே கண்டோம். இனி இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து ஒலி / இசை / பேச்சினைக் குறிக்கப் பயன்படும் முறைகளைப் பற்றிக் கீழே காணலாம். இவற்றில் அரவம் என்ற தமிழ்ச் சொல்லைப் பற்றி முதலில் காணலாம்.

அரவம் >>> ஆரவ >>> ஆவாச்^`, ரவ >>> ரவண >>> ச்`ரவண

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

அரவம்               மலையாளம்
ஆரவ                செங்கிருதம், வங்காளம்
ரவ                  இந்தி, குச்ராத்தி, வங்காளம், செங்கிருதம்,
ஆவாச்^`              இந்தி, மராத்தி, குச்ராத்தி, பஞ்சாபி,
ரவண                செங்கிருதம்
ச்`ரவண              செங்கிருதம்

அரவத்தைப் போலவே ஒலி / இசை / பேச்சினைக் குறிக்கும் ஏராளமான தமிழ்ச் சொற்கள் சற்றே திரிபுற்று பிறமொழிகளில் வழங்கப் படுவதையும் கீழே காணலாம்.

அம்பல் >>> அப்ப^ர
இசை >>> எசெ`கெ~
ஒலி >>> ஒலெ
ஓசை >>> ஓச >>> கோ~ச~ >>> ப்ரகோ^ச~, பரிகோ^ச~
ஓல் >>> வோல் >>> வேலா, போ`ல் >>> போ`லீ, போ`ல்னீ
கம்பலை >>> க~ப்ப^ர >>> க~ட்`ப`ட்`
கலி >>> கலெ
கரை >>> க்ருச்~ட
சீர் >>> ச`ரச்` >>> சர்ச்சா, சா`ரா, ச்`வர
செப்பல் >>> செப்புட, ச`ப்பல, சப்புடு`
தாளம் >>> தால்
நொடி >>> நுடி
பண்ணை >>> வர்ண, வர்ணனெ
பதம் >>> பத` >>> ப`த`ன, பத்`யம் >>> ப`ந்த` >>> நிப`ந்த`
பதம் >>> பா`த் >>> பா`த்சீத், அபி^தா^
விரி+பதம் = விரிபதம் >>> விரிப்`த^ - செங்கிருதம்
பனுவல் >>> பா^வனெ
பாட்டு >>> மாடு
பாடல் >>> பாட, பட` >>> மாட
பாணி >>> பா`ணி >>> ப^ணிதி, வாணி, வாண >>> ச்`வன >>> நிச்`ப`ன
முழக்கம் >>> முழக்கம்
மொழி >>> மொழி
கேள்வி >>> கேள்வி >>> கேலி, கே`லிகெ
வாழ்த்து >>> வார்த்த >>> வர்த்தமான, பா^ரதீ`
வாழ்த்து >>> வாத` >>> விவாத`, ச`ம்வாத`, வாத`ன, வாதி`த்ர >>> வத`ந்தி
குரல் >>> ரோல
பெருங்குரல் >>> பே`குரா
குரவை >>> ரவ்லா
தண்ணெனல் >>> ச்`தனனா >>> ச்`தான
கல்லெனல் >>> கலகலன
சும்மை >>> ச^`ம்சா`
மாத்திரை >>> மாத்து, மாத்ர
மாத்திரை >>> மந்திர >>> மந்த்ர
வெடி >>> ச்~வேட` >>> ச்`போட
விக்கல் >>> விக்லானா, விகானா, விக்சா~வ்

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

ஓச, முழக்கம்         மலையாளம்
கேள்வி, பாட்டு        மலையாளம்
ச்`வர                 மலையாளம், இந்தி, மராத்தி, குச்ராத்தி,
 பஞ்சாபி, செங்கிருதம்
சப்புடு`, செப்புட       தெலுங்கு
பா^வனெ, ஒலெ       கன்னடம்
ச`ப்பல, கலெ          கன்னடம்
அப்ப^ர, மாடு          கன்னடம்
கோ~ச~               மலையாளம், இந்தி, செங்கிருதம்
எசெ`கெ~, நுடி         கன்னடம்
போ`ல், போ`லீ        இந்தி, மராத்தி, வங்காளம், குச்ராத்தி, பஞ்சாபி
க~ப்ப^ர, கலகலனா    குச்ராத்தி
க்ருச்~ட, ச^`ம்சா`      செங்கிருதம்
சா`ரா                 வங்காளம்
சர்ச்சா                மலையாளம், இந்தி, மராத்தி, குச்ராத்தி, பஞ்சாபி,
 வங்காளம், செங்கிருதம், கன்னடம், 
 தெலுங்கு,  ஒரியா.
தால்                 இந்தி, மராத்தி, குச்ராத்தி, பஞ்சாபி.
வர்ண, ப^ணிதி        செங்கிருதம்
வர்ணனே             இந்தி
பத`                  மராத்தி
பத்`யம்               மலையாளம், கன்னடம், வங்காளம்,
பா`த், பா`த்சீத்         இந்தி
அபி^தா^, கேலி        செங்கிருதம்
பாட, மாட            தெலுங்கு
பட`, கே`லிகெ        கன்னடம்
பா`ணி                குச்ராத்தி, பஞ்சாபி
வாணி, வாண         செங்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி,
 குச்ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
ச்`வன                இந்தி, குச்ராத்தி, வங்காளம், செங்கிருதம்
நிச்`ப`ன, ப`த`ன       வங்காளம்
விக்சா~வ், ச`ரச்`       செங்கிருதம்
வார்த்த, வாத`        செங்கிருதம், இந்தி
வாத`ன, வாதி`த்ர     செங்கிருதம்
பே`குரா, நிப`ந்த^      செங்கிருதம்
ரவ்லா                பஞ்சாபி
க~ட்`ப`ட்`             மராத்தி
ரோல                குச்ராத்தி, வங்காளம்
ச்`தனனா             வங்காளம்
ச்`தான, வாத`         செங்கிருதம்
ப்ரகோ^ச~, பரிகோ^ச~  செங்கிருதம்
மொழி, வர்த்தமான   மலையாளம்
வேலா, பா^ரதீ`        குச்ராத்தி, செங்கிருதம்
விவாத`, ச`ம்வாத`    மலையாளம்,
வத`ந்தி, சர்ச்சா       மலையாளம், இந்தி
மாத்து               கன்னடம்
மந்த்ர, மாத்ர         செங்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி,
 குச்ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா,
 கன்னடம், தெலுங்கு.
ச்~வேட`, ச்`போட      செங்கிருதம்
விகானா              குச்ராத்தி
விக்லானா            பஞ்சாபி

உ. குழூஉச் சொற்களில் இருந்து தோற்றம்:

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தனியாக இருந்தால் அங்கே ஓசை இருக்காது. அதேசமயம், இருவர் சேர்ந்தால் அங்கே பேச்சொலி இருக்கும். அதுவே பலர் ஓரிடத்தில் ஒன்றுகூடினால் அங்கே எழுகின்ற ஒலி பேரொலியாக இருக்கும். அதாவது மக்கள் பலர் ஒன்றுகூடினாலே அங்கே அமைதியை எதிர்பார்க்க இயலாது; யாராவது வந்து " அமைதியாக இருங்கள் " என்று அடக்காத வரையிலும். . கலப்புக் கூட்டொலி தோன்றிக் கொண்டேயிருக்கும். இதன் அடிப்படையில் தான் கணம் என்ற தமிழ்ச்சொல்லானது கூட்டத்தை மட்டுமின்றி ஒலியையும் குறிக்கும் என்று இக் கட்டுரையின் மூன்றாம் பகுதியில் விரிவாகப் பல ஆதாரங்களுடன் கண்டோம். கணம் என்ற சொல்லைப் போலவே கூட்டத்தைக் குறிக்கும் பிற தமிழ்ச்சொற்களும் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து ஒலி / இசை / பேச்சினைக் குறிக்கப் பயன்படுவதனைக் கீழே காணலாம்.

கணம் >>> கண்ட - செங்கிருதம்
தொழுதி / தொகுதி >>> ச்`துதி >>> ச்`தோத்ர - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
திரட்சி >>> த`ர்சா~னா - இந்தி
ஈட்டம் >>> இடா` - செங்கிருதம்
துவன்று >>> த்^வனி >>> ஆத்^பா`ன, து`னி, த`னி (மொழிகள் மேலே காட்டப்பட்டுள்ளது)
கூட்டம் >>> கு~ச்~ட >>> நிகு~ச்~ட - செங்கிருதம்
குழு >>> கு~ல்லு, கு~ல், கு~ல்லா >>> கோ~ல, கோலாக`ல், கோ`க`ல்லா (மொழிகள் மேலே காட்டப்பட்டுள்ளது)

சங்க இலக்கியங்களில் சாத்தர்கள் / உமணர்கள் எனப்படும் உப்பு வணிகர்களைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம். சாத்தர்கள் கடற்கரையில் இருக்கும் உப்பளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உப்பினை மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்று ஊருக்குள் விற்பார்கள். இவர்கள் எப்போதும் கூட்டம் கூட்டமாக மாட்டுவண்டிகளுடன் இயங்குவதால் சாத்தர்களின் கூட்டத்தில் எப்போதுமே ஒரு பேரொலி கேட்டுக் கொண்டிருக்கும். பொதுவாகவே சாத்தர்கள் அதாவது வணிகர்கள் ஒன்றுகூடித் தங்கள் பொருட்களை விற்கும்போது அங்கே ஓசையானது இடையறாது கேட்டுக் கொண்டேயிருக்கும் தானே. இதன் அடிப்படையில், சாத்து என்னும் சொல்லுக்கு ஓசை / ஒலி என்னும் பொருளைக் கொண்டு இச்சொல்லைச் சற்றே திரித்துப் பிறமொழிகள் ஒலி / இசையைக் குறிக்கப் பயன்படுத்திக் கொள்வதைக் கீழே பாருங்கள்.

சாத்து >>> சா`த`
சாத்து >>> ச`த்து^, சத்த >>> ச`ப்`த`
சாத்து >>> ச`ந்த`, ச`ந்த`டி`, சந்தை`

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

சா`த`                 குச்ராத்தி
ச`ப்`த`                மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
                     செங்கிருதம், மராத்தி, குச்ராத்தி, வங்காளம்,
 பஞ்சாபி, ஒரியா.
ச`ந்த`டி`              தெலுங்கு
ச`த்து^                தெலுங்கு, கன்னடம்
சத்த, சந்தை          மலையாளம்
ச`ந்த`                 மலையாளம்

முடிவுரை:

இதுவரையிலும் ஒலி, இசை மற்றும் பேச்சுடன் தொடர்புடைய பல்வேறு தமிழ் வினைச்சொற்கள் மற்றும் பெயர்ச்சொற்கள் இந்தியாவின் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து ஒலி, இசை மற்றும் பேச்சினைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுவதனைப் பற்றி மேலே விரிவாகக் கண்டோம். மேலே உள்ள தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையையும் அதிலிருந்து தோன்றிய பிறமொழிச் சொற்களின் எண்ணிக்கையையும் ஒப்புநோக்குமிடத்து முன்பொரு காலத்தில் இந்தியநாடு முழுமையும் தமிழ்மொழியே கோலோச்சி இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் இந்தியாவின் எந்தவொரு மொழியில் இருந்தும் தமிழ்மொழி கடன் வாங்கவில்லை என்ற கருத்தும் வலுப்படுவதனை அறியலாம்.

5 கருத்துகள்:

  1. ஒலியின் வகைகளையும், சிறப்புகளையும், நுட்பங்களையும் அறிந்தோம். அருமை.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வியக்க வைக்கும் தகவல்கள் நிறைந்த கட்டுரை ஐயா. மிகவும் பயன் உள்ளதும் கூட. ஒரு சிறு கேள்வி. பிற மொழிச் சொற்களை எவ்வாறு வாசிப்பது என்பதையும் கூறினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் ஐயா. (குறிப்பாக ^...etc)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக எளிது தான். ' குறியீடு மெல்லிய ஒலிக்கானது. ச' = sa. ^ குறியீடு வலுவான ஒலிக்கானது. ச^ = ja. ~ குறியீடு இடைப்பட்ட ஒலிக்கானது. மேலும் விரிவான தகவல்களைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.
      https://thiruththam.blogspot.com/2018/04/blog-post_26.html

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.