பிறமொழிச்
சொல் |
தமிழ்ச்
சொல் |
மேல்விளக்கம் / காட்டு
|
sprinkle
|
துவல்
|
மழைத் தூறல் போல
நுண்ணிதாய்ச் சிதறுதல்
|
sprinkling
|
துவறல்
|
துவறல் >>>
தூறல்
|
sprinkler
|
துவலி
|
|
abort
|
அழுங்கு
|
இவ் வினையை அழுங்கு
|
abortion
|
அழுங்குள்
|
கருவை அழுங்குள்
செய்தல் தவறானது
|
aborted
|
அழுங்கிய
|
|
module
|
ஈந்து
|
இப் படிப்பில் 10
ஈந்துகள் உள்ளன
|
modular
|
ஈந்துறு
|
ஈந்துறு + அட்டில் =
ஈந் துறட்டில் (மாடுலார் கிச்சன்)
|
sand art
|
வண்டர்
|
மணற்கலை
|
valve
|
கலிஞ்சி
|
அணையின் மதகு போலக்
கட்டுப்படுத்தும் கருவி
|
valvular
|
கலிஞ்சிய
|
|
control
|
கலிஞ்சு
|
அணையின் மதகு போலக்
கட்டுப்படுத்து
|
controlling
|
கலிஞ்சல்
|
|
controller
|
கலிஞ்சி
|
|
centrifuge (N)
|
மத்தம்
|
தயிர் கடையும் மத்து
போன்ற ஒரு கருவி
|
centrifuge (V)
|
மத்து
|
மத்தம் >>>
மத்து = தயிர் கடைவதைப் போன்ற வினை
|
centrifugal
|
மத்த
|
|
centrifugal force
|
மத்தவிசை
|
|
grant
|
நல்கு
|
|
narrow gap
|
ஆரிடை
|
ஆர் + இடை
|
cultivate
|
வேட்டு
|
வேளாண்மை செய்
|
cultivation
|
வேட்டரவு
|
|
paper
|
தாள்
|
|
letter
|
ஏடு
|
|
film
|
இருவி
|
தினைத்தாள்போல
மென்மையும் கூர்மையும் கொண்டது
|
Costume
|
கஞ்சுகம்
|
|
Dress
|
துணி
|
|
Garment(s)
|
காழகம்
|
|
Apparel
|
போர்பு
|
|
Raiment
|
சிதர்வை
|
|
Attire
|
ஆடை
|
|
Vestment
|
கச்சு
|
|
Wear
|
அறுவை
|
|
Dud
|
உடை
|
|
Cloth
|
மடி
|
|
Clothing
|
மடிவை
|
|
textile
|
துகில்
|
|
fabric
|
கலிங்கம்
|
இழைகளைப் பின்னி
உருவாக்கிய ஆடை
|
fabricate
|
கலிக்கு
|
கலிங்கம் >>>
கலிக்கு = பின்னி உருவாக்கு
|
fabrication
|
கலிக்கரவு
|
|
fabricator
|
கலிக்கர்
|
|
yarn
|
நாண், நூல்
|
|
thread
|
தார்
|
|
rope
|
கயிறு
|
|
Fibre
|
நார், இழை
|
|
Tailor (N.)
|
துன்னர்
|
துன்னுதல் = தைத்தல்
|
Tailor (V.)
|
துன்னு
|
|
Tailoring
|
துன்னல்
|
தையல்
|
Ready
|
பாங்கு
|
மாலைக்குள் இதனைப்
பாங்கு செய்.
|
Readily
|
பாங்காய்
|
ஆறுமணிக்குள் எல்லாம்
பாங்காய் இருக்கவேண்டும்.
|
Readiness
|
பாங்கை
|
பயன்படுத்தும் விதமாய்
அருகில் இருக்கும் நிலை
|
Readymade
|
பாங்கடை
|
பாங்கு + அடை =
தயாராகச் செய்யப்பட்டவை
|
fant
|
கச்சம்
|
|
shirt
|
சட்டை
|
|
Pyjama
|
கச்சட்டை
|
கச்சமும் சட்டையும்
இணைக்கப்பட்டதைப் போன்றது
|
trouser
|
தூசர்
|
தூசு (ஆடை) + அர்
|
t-shirt
|
சிதார்
|
|
baniyan
|
பன்னை
|
பன்னல் (பருத்தி) + நெய்வு
|
jetty
|
கச்சுள்
|
கச்சத்தின் உள்
இருப்பது
|
bisection
|
இருச்செகை
|
|
bisector
|
இருசெகுதி
|
|
bisectrix
|
இருசெகுதி
|
|
cross section
|
மறிச்செகை
|
|
dissection
|
பாச்செகை
|
|
Inter section
|
இடைச்செகை
|
|
midsection
|
நடுச்செகை
|
|
nonsectarian
|
செகைசாரா
|
|
prosection
|
காண்செகை
|
|
resection
|
கூர்ச்செகை
|
|
sect
|
செகு
|
|
sectarian
|
செகைசார்
|
|
sectarianism
|
செகைசார்பு
|
|
sectary
|
செகையர்
|
|
sected
|
செகுத்த
|
|
sectile
|
செகுசால்
|
|
sectility
|
செகுசான்மை
|
|
section
|
செகை
|
|
sectional
|
செகைய
|
|
sectionalism
|
செகையம்
|
|
sectionality
|
செகைமை
|
|
sector
|
செகை
|
|
sectorial
|
செகைய
|
|
sectoring
|
செகுப்பு
|
|
segment
|
செகை
|
|
segmental
|
செகைய
|
|
segmentary
|
செகைசார்
|
|
subsection
|
உட்செகை
|
|
transection
|
மறிச்செகை
|
|
trisection
|
முச்செகை
|
|
venesection
|
சிரைச்செகை
|
|
vivisection
|
பைச்செகை
|
|
anesthetize
|
மதக்கு
|
மயக்க மருந்து கொடு
|
anesthetized
|
மதக்கிய
|
|
anesthesia
|
மதர்ப்பு
|
செயற்கையாக மயக்கப்பட்ட
நிலை
|
anesthetic
|
மதக்கி
|
மயக்க மருந்து
|
anesthetist
|
மதக்குநர்
|
மயக்க மருந்து
கொடுக்கும் மருத்துவர்
|
anesthesiology
|
மதர்ப்பியல்
|
|
amnesia
|
பொச்சாப்பு
|
மறதி நோய்
|
hypnotise
|
அறிதுயிற்று
|
|
hypnotics
|
அறிதுயிற்றி
|
|
hypnosis
|
கூர்மடி
|
கூர் (அறி) + மடி
(துயில்)
|
hypnotism
|
அறிதுயில்
|
|
analgesia
|
வலிநீக்கம்
|
|
analgesic
|
வலிநீக்கி
|
|
sedate
|
பெதுப்பு
|
பேது >>>
பெதுப்பு
|
sedation
|
பெதுப்பம்
|
|
sedative
|
பெதுப்பி
|
|
softness
|
நொதுமை
|
|
soften
|
நொதுப்பு
|
|
softening
|
நொதுப்பம்
|
|
softener
|
நொதுப்பி
|
|
Giant
|
மூரி
|
|
Giant Wheel
|
மூராழி
|
|
Camp
|
பாசறை
|
|
Camping
|
பாசறையம்
|
|
Lower Camp
|
கீழ்ப்பாசறை
|
|
Upper Camp
|
மேல்பாசறை
|
|
Tent
|
கட்டூர்
|
|
Tenting
|
கட்டுரால்
|
|
hot
|
கத
|
கதநீரை ஆறவைத்துக்
குடி.
|
hotter
|
கதமீ
|
|
hottest
|
கதங்கூர்
|
|
hotness
|
கதபம்
|
|
swim dress
|
ஈரணி
|
|
two piece
|
ஈரணி
|
|
color
|
கேழ்
|
நிறம்
|
colorize
|
கேழ்த்து
|
நிறங்கூட்டு
|
colorful
|
கேழ்மிகு
|
நிறமிகு
|
colorfulness
|
கேழ்மிகை
|
நிறமிகை
|
colorization
|
கேழ்ப்பு
|
நிறங்கூட்டல்
|
colorist
|
கேழ்ப்பர்
|
நிறங்கூட்டுநர்
|
discolor
|
அஃகேழ்
|
நிறங்குறை
|
discoloration
|
கேழக்கம்
|
நிறங்குறைவு
|
discolored
|
கேழக்க
|
நிறங்குறைந்த
|
colorless
|
கேழிலி
|
நிறமற்ற
|
decolorize
|
கேழ்நீக்கு
|
நிறம் அகற்று
|
decolorization
|
கேழ்நீக்கம்
|
நிறம் அகற்றல்
|
multi colored
|
மலிகேழ்
|
|
valley
|
விடர்
|
மலைச்சரிவுகளுக்கு
இடைப்பட்ட பகுதி
|
continue
|
ஆனாவு
|
பணியை ஆனாவு
|
continous
|
ஆனா
|
ஆனா முயற்சி
|
continously
|
ஆனாது
|
ஆனாது படி
|
continuation
|
ஆனாமை
|
|
continuity
|
ஆனாமை
|
உங்கள் பணியில் ஆனாமை
இல்லை
|
discontinue
|
ஆனு
|
பணியை ஆனுக
|
discontinous
|
ஆன்ற
|
ஆன்ற முயற்சி
|
discontinously
|
ஆன்றென
|
ஆன்றென முயன்றான்
|
discontinuation
|
ஆன்றல்
|
|
discontinuity
|
ஆன்றமை
|
ஆன்றமையால் பணி
இழந்தார்
|
torch light
|
ஞெலிகோல்
|
|
torch (V.)
|
ஞெலி
|
|
torching
|
ஞெலிப்பு
|
|
load
|
சுமை
|
பாரம், பொறை
|
upload
|
சாட்டு
|
இக் கோப்பினைச் சாட்டுக
|
uploading
|
சாட்டுகை
|
சாட்டுகை
நிறுத்தப்பட்டுள்ளது
|
uploadable
|
சாட்டியை
|
சாட்டு + இயை = ஏற்றத்
தக்க
|
uploader
|
சாட்டி
|
|
download
|
உகுப்பு
|
இக் கோப்புக்களை
உகுப்புக
|
downloading
|
உகுப்புள்
|
|
downloadable
|
உகுப்பியை
|
|
downloader
|
உகுப்பி
|
|
bear
|
பொறு
|
|
bearable
|
பொறையேல்
|
பொறை + ஏல் = பொறுக்கத்
தக்க
|
unbearable
|
பொறையேலா
|
இது பொறையேலாச் செய்தி.
|
bearing
|
பொறையாழி
|
சுழலும் பகுதியைத்
தாங்கும் வட்டப் பொருள்
|
drinks
|
மடை
|
மடுத்தல் >>>
மடை
|
cool drink
|
குளுமடை
|
தண்மடை
|
hot drink
|
கதமடை
|
வெம்மடை
|
house arrest
|
இற்செறி
|
|
spiral
|
சுரிதக
|
|
spirality
|
சுரிதகவு
|
|
archestra
|
பல்லியம்
|
நேற்று எங்கள் ஊரில்
பல்லியக் கச்சேரி நடந்தது
|
support
|
ஏந்து
|
|
supporting
|
ஏந்தை
|
|
supporter
|
ஏந்தல்
|
|
supportive
|
ஏந்துறு
|
|
daily fresh
|
அல்கற்று
|
அல்கல் (நாளும்) + து
(உடைய)
|
tripod
|
முக்காலி
|
|
blow
|
ஊது
|
|
blower
|
ஊதுநர் / ஊதி
|
|
blow pipe
|
குருகு
|
ஊது குழல்
|
seal
|
குளப்பு
|
விலங்கின் காலடி போன்ற
முத்திரை
|
emblem
|
உத்தி
|
பாம்பின் பொறி போன்ற
படம்
|
dine
|
ஐன்
|
அயின் = உண்
|
dining hall
|
ஐனாலம்
|
ஐன் + ஆலம்
|
motor
|
கொட்பி
|
கொட்புதல் (சுற்றுதல்)
வினை செய்யும் கருவி
|
motoring
|
கொட்பு
|
வண்டியில் ஏறிச் சுற்றி
வருதல்
|
motorize
|
கொட்குவி
|
சுற்றிவரச் செய்
|
motorization
|
கொட்குவிசி
|
சுற்றிவரச் செய்தல்
|
motorist
|
கொட்பர்
|
வண்டியில் ஏறிச் சுற்றி
வருபவர்
|
arch
|
வணரி
|
வளைவைக் கொண்ட பகுதி
|
architecture
|
வணரியல்
|
அவர் வணரியல்
கற்கிறார்.
|
architect
|
வணரியர்
|
|
arc
|
வணர்
|
|
arcing
|
வணர்பு
|
|
grind
|
ஐர்
|
அயிர் = நுட்பமாக அரை
|
grinder
|
ஐரி
|
|
grinding
|
ஐர்ப்பு
|
|
text
|
பனு
|
இச் செய்தியைப் பனுவாக
அனுப்புக
|
context
|
பனுவல்
|
bind
|
பிணி
|
|
binding
|
பிணிப்பு
|
|
bond
|
பிணை
|
|
bondage
|
பிணையம்
|
|
binder
|
பிணையர்
|
|
cartilage
|
முருந்து
|
குருத்து எலும்பு
|
virus
|
வைரி
|
வீ + அயிர் + இ =
அழிவைத் தரும் நுண்ணுயிரி
|
viral
|
வைரிய
|
இச்செய்தி வைரியமாய்ப்
பரவியது
|
virality
|
வைரியம்
|
|
virulence
|
வைரிதம்
|
|
virulent
|
வைரித
|
|
virucide
|
தெவ்வைரி
|
வைரியைக் கொல்வது
|
antivirus
|
தெவ்வைரி
|
இக் கணினியில் தெவ்வைரி
இல்லை
|
bacteria
|
பகாரி
|
பகு + ஆர் +இ = பகுத்து
உண்ணும் நுண்ணுயிரி
|
bacterial
|
பகார்
|
|
bacteroides
|
பகாரியன்
|
பகாரியைப் போன்ற
நுண்ணுயிரி
|
bacteriocin
|
பகாரழல்
|
பகார் + அழல் = பகாரி
வெளியிடும் நஞ்சு
|
bacteriocide
|
பகாரினை
|
பகாரி + நை = பகாரியைக்
கொல்வது
|
bacteriophage
|
பகார்வைரி
|
|
antibacterial
|
பகாரினை
|
பகாரி + நை = பகாரியைக்
கொல்வது
|
crack
|
புலவி
|
ஊடலைப் போன்ற நுண்ணிய
விரிசல்
|
whistle
|
வீளை
|
|
Express
|
நொவ்வை
|
இன்று வைகை நொவ்வையில்
வந்தேன்
|
Superfast
|
வல்லை
|
வல்லைகளில் கட்டணம்
மிகுதி
|
Brown
|
புருவல்
|
புருவையின் (பழுப்பு
ஆட்டின்) நிறம்
|
Green
|
கீரம்
|
கீரையின் பச்சை நிறம்
|
Yellow
|
எல்லி
|
வெயிலின் மஞ்சள் நிறம்
|
Blue
|
குவளை
|
குவளை மலரின் நீல நிறம்
|
Red
|
வருடை
|
செம்மறி ஆட்டின் நிறம்
|
Meroon
|
மரன்
|
மரப்பட்டையின் உள்
நிறம்
|
Orange
|
நாரங்கி
|
நாரங்கிப் பழத் தோலின்
நிறம்
|
Useless
|
பதடி
|
ஒருபோதும் பதடி
பேசக்கூடாது.
|
Informer
|
கணந்துள்
|
கணந்துள் பறவைபோலக்
காட்டிக் கொடுப்பவர்
|
Indigo
|
அஞ்சனம்
|
கண்மையைப் போன்ற கருநீல
நிறம்
|
Declare
|
சூள்
|
|
Declaration
|
சூளுரை
|
|
Prostitute
|
பரத்தை
|
|
Prostitution
|
பரத்தமை
|
|
Forecast
|
கழங்கு
|
கழற்சிக் காய் போல
முன்னறிவி
|
Forecasting
|
கழற்சி
|
|
Forecaster
|
கழங்கர்
|
|
Foretell
|
குறிசொல்
|
|
Foreteller
|
குறிகாரர்
|
|
Bag
|
பக்கு
|
|
sphere
|
குமிழி
|
முழுமையான கோள வடிவம்
|
spherical
|
குமிழ
|
|
spheroid
|
குமிணிகர்
|
குமிழ் + நிகர் =
குமிழைப் போல இருக்கும் வடிவம்
|
Hemisphere
|
முகிழி
|
நீர்மேல் தோன்றும்
அரைக்கோள வடிவம்
|
Hemispherical
|
முகிழ
|
|
Crowd
|
குரவை
|
கூட்டம்
|
Chorus
|
குலவை
|
கூட்டமாக
ஒலிக்கப்படுவது
|
Kettle
|
சிரகம்
|
|
Toy
|
தூதை
|
குழந்தைகளுக்கான
விளையாட்டுப் பொருள்
|
Womenizer
|
பரத்தன்
|
|
Constant
|
நிச்சம்
|
எப்போதும்
மாறாதிருப்பது
|
Constantly
|
நிச்சமாய்
|
|
Filter (v)
|
அரி
|
அரி = வடிகட்டு
|
Filter (n)
|
அரிநை
|
வடிகட்ட உதவும் கருவி
|
Filtration
|
அரியம்
|
வடிகட்டும் செயல்
|
Filtrate
|
அரீயது / அரீது
|
வடிகட்டப் பட்ட பொருள்
|
Pioneer
|
ஆதுகன்
|
ஆதுதல் = முன்
செல்லுதல்
|
Pioneering
|
ஆதுகம்
|
|
Risk
|
உட்கேடு
|
மறைவாக உள்ளிருக்கும்
இடையூறுகள்
|
Character
|
காரிகை
|
அந்தப் படத்துல
இவருக்கு நல்ல காரிகை.
|
Characterize
|
காரிசு
|
|
Characterization
|
காரிசம்
|
|
Gravy
|
ஆணம்
|
செட்டிநாட்டுக்
கோழியாணம்
|
Boneless
|
நொது
|
எலும்பின்றி மெத்தென்று
இருப்பது
|
Lollypop
|
குணில்
|
சிறிய முரசுக்கோல் போல
இருப்பது
|
Roast
|
வறள்
|
வறுக்கப்பட்டது
|
Hall
|
ஆலம்
|
அகலம் >>>
ஆலம்
|
Antibiotics
|
தழிஞ்சி
|
எதிரிகளைப் புகவிடாமல்
அழிக்கும் வீரனைப் போன்றது
|
Dance
|
நொசி
|
வளைந்து நெளிந்து
ஆடுதல்
|
Dancer
|
நொசியர்
|
|
Pendant
|
மதாணி
|
மாலையில் கீழே
தொங்குவது
|
Pump (V.)
|
சிவிறு
|
பாய்ச்சு
|
Pump (N.)
|
சிவிறி
|
நீர்ச் சிவிறி, நெய்ச்
சிவிறி
|
Pumping
|
சிவிறல்
|
|
Ooze
|
பொசி
|
|
Oozing
|
பொசிவு
|
|
Exception
|
அலங்கடை
|
விதிவிலக்கு
|
Elongate
|
நீட்டு
|
|
Elongation
|
நீட்டம்
|
|
Order (V.)
|
வியவு
|
நீங்கள் விரும்புவதை
வியவலாம்.
|
Order (N.)
|
வியம்
|
இவற்றை வாங்குவதற்கான
வியத்தை அனுப்பு
|
Security
|
ஓம்படை
|
அவருக்கு மூன்றடுக்கு
ஓம்படை கொடுக்கப்பட்டுள்ளது
|
Secure
|
ஓம்பு
|
இத் தேர்வில் நான் 300
மதிப்பெண் மட்டுமே ஓம்பினேன்
|
Securing
|
ஓம்பல்
|
|
Unsecurity
|
ஓம்பின்மை
|
இந்த இடம் எனக்கு
ஓம்பின்மையாய்த் தெரிகிறது
|
Penultimate
|
எருத்தம்
|
முதலாகிய தலையின் கீழ்
இருக்கும் கழுத்து போன்றது
|
Distribute
|
பாதிடு
|
பகுத்து இடு
|
Distribution
|
பாதீடு
|
|
Distributor
|
பாதிடுநர்
|
|
Honorarium
|
மாராயம்
|
தொல்காப்பியம் கூறும்
சிறப்புப் பரிசு / ஊதியம்
|
Recovery
|
கரந்தை
|
கரந்தை வீரர்கள்
பசுக்களை மீட்பதைப் போன்ற செயல்
|
Recover
|
கரத்து
|
கரந்தை >>>
கரத்து
|
Abundance
|
அமலை
|
|
Abundant
|
அமன்ற
|
|
Widow
|
தாபதை
|
தொல்காப்பியம் கூறும்
கணவனை இழந்த பெண்
|
Widower
|
தபுதாரன்
|
தொல்காப்பியம் கூறும்
மனைவியை இழந்த ஆண்
|
Variable
|
நிச்சிலி, அற்கா
|
எப்போதும் மாறக்
கூடியது
|
Mangoose
|
மூங்கா
|
கீரியின் இன்னொரு பெயர்
|
Metal
|
மங்கலம்
|
மங்கு + அலம் =
ஒளிமழுங்கல் அற்றது (பளபளப்பானது)
|
Metallic
|
மங்கல
|
|
Metalloid
|
மங்கனிகர்
|
மங்கல் + நிகர் =
உலோகப் போலி
|
Metallize
|
மங்கலிசு
|
மங்கலப் பூச்சினை ஏற்று
|
Metallization
|
மங்கலிப்பு
|
|
Metallizer
|
மங்கலிசர்
|
|
Futile
|
பதடி
|
உள்ளீடற்ற பதர்போல
வீணானது
|
Follow
|
பிஞ்சார்
|
பின் + சார்
>>> பிஞ்சார்
|
Follower
|
பிஞ்சாரி
|
பின் சார்பவர்
|
Follow-up
|
பிஞ்சரவு
|
பின் சார்வு
>>> பிஞ்சரவு
|
Lodge
|
துச்சில்
|
தற்காலிகமாகத் தங்கும்
வீடு போன்றது
|
Hotel
|
ஊட்டுழை
|
ஊட்டு + உழை = உணவு
ஊட்டப்படும் இடம்
|
Umbrella
|
ஆம்பி
|
காளானின் குடை போன்றது
|
Umbrage
|
ஆம்பிறை
|
ஆம்பி + இறை =
குடைக்காவல் போன்ற மர நிழல்
|
Juice
|
பிழி
|
|
Juicer
|
பிழிநை
|
சாறு பிழிய உதவும்
கருவி
|
Centrifugal juicer
|
மத்தப் பிழிநை
|
மத்தவிசையால் சாறு
பிழியும் கருவி
|
Masticating Juicer
|
மசிவுப் பிழிநை
|
மசித்துக் கூழாக்கிப்
பிழியும் கருவி
|
Triturating Juicer
|
துத்தியப் பிழிநை
|
துத்திகளைக் கொண்டு
பிழியும் கருவி
|
Twin Gear Juicer
|
இதுப்பி
|
இரு துத்திப் பிழிநை
|
Scale
|
செகிள்
|
|
Scaly
|
செகிள
|
|
Scaling
|
செகிளகை
|
|
Descale
|
செகிளறு
|
|
Descaling
|
செகிளறை
|
|
Lamina
|
தகடு
|
|
Laminate
|
தகட்டு
|
|
Lamination
|
தகட்டல்
|
இந்த அட்டைக்குத்
தகட்டல் போட்டுக்கொடுங்கள்
|
Laminator
|
தகட்டி
|
|
Lay
|
சேகு
|
|
Layer
|
சேக்கை
|
|
Laying
|
சேக்கல்
|
|
Interlayer
|
இடைச்சேக்கை
|
|
Multi layered
|
மலிசேக்கைய
|
பல அடுக்குகளைக்
கொண்டது
|
நீங்கள் கூறுகின்ற பல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதைப் போலத் தோன்றுகிறதே.
பதிலளிநீக்குஅது ஒரு மாயத்தோற்றம் ஐயா. செந்தமிழும் நாப்பழக்கம் ஆகிவிடும். துவக்கத்தில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியோருக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டது தானே ஐயா.
பதிலளிநீக்குஉங்களின் கருத்தை ஏற்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா. :))
நீக்குReady-பாங்கு
பதிலளிநீக்குஏற்கனவே அணியம் என்னும் சொல் உள்ளதே ஐயா....
அதனை விட பாங்கு எப்படி இதற்குப் பொருத்தமாக அமையும் என்பதை சற்று விளக்குவீர்களா?
அணியம் என்ற சொல்லைக் கேட்கும்போது அணியக் கூடியது அதாவது அணிகலன், நெருக்கம் போன்ற பொருள்களையும் அது குறிப்பதாகத் தோன்றியது. எனவேதான் பாங்கு என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன். இச்சொல் தயாராகுதல் என்ற பொருளில் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளதுதான். பாங்குபண்ணுதல், பாங்கு தூக்கி வைத்தல்... போன்ற சொற்கள் அகராதியில் உண்டு. பாங்கு என்றால் பக்கம், தகுதி என்ற பொருட்களும் உண்டு. பாங்காதல் என்றால் தகுதியாகி பக்கத்தில் இருத்தல். இதைத்தானே தயாராதல் என்ற சொல்லால் உணர்த்த விழைகிறோம்.
நீக்குScale-செகிள்
பதிலளிநீக்குLay-சேகு
Lamination-தகட்டல்
என்பதை சற்று விளக்குவீர்களா ஐயா?
செகிள் என்பது மீனின் செதிளைக் குறிக்கும். (செகிள் >>> செதிள்) மீனின் செதிளைப் போன்று அக்கு அக்காய் இருப்பதால் scale க்கு செகிள் என்று பெயர் வைத்தேன்.
நீக்குசேகு என்றால் படு என்றும் சேக்கை என்றால் படுக்கை என்றும் பொருள். இதே பொருளுடையதால் ஆங்கில lay க்குச் சேகு என்றும் லேயருக்குச் சேக்கை என்றும் பெயரிட்டேன்.
ஆங்கில லேமினா என்பது தகட்டையும் லேமினேட் என்பது தகடாக்குதலையும் குறிக்கும். தகடாக்குதல் என்பது நீண்டு தோன்றுவதால் சுருக்கி, தகட்டுதல் என்று பெயரிட்டேன்.