வியாழன், 4 மார்ச், 2021

67 - (அந்தாதி -> அபோதம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

அந்தாதி

முடிவே முதலது

அந்தாதி

அந்தம் (=முடிவு) + ஆதி (=முதல்) = அந்தாதி = முடிவே முதலாவது

அந்தாயம்

மாதிரிப் பொருள்

அத்தேயம்

அத்தம் (=பொருள்) + ஏய் (=ஒப்பு) + அம் = அத்தேயம் >>> அந்தாயம் = ஒப்புடைய பொருள்.

அந்தாசு, அந்தாச்^

குத்துமதிப்பு, தோராயம்

அத்தாயு

அத்து (=கூடு, நெருங்கு) + ஆய் (=கணி) + உ = அத்தாயு >>> அந்தாசு = நெருக்கமாகக் கணிக்கப்பட்டது.

அந்தி, அந்திமம்

முடிவு, மரணம்

அற்றம்

அற்றம் (=முடிவு, மரணம்) + இ = அற்றி >>> அத்தி >>> அந்தி.

அந்தி

ஒளி குறையும் பொழுது, மாலை

அற்றீ

அல் (=சுருங்கு, குறை) + தீ (=ஒளி) = அற்றீ >>> அத்தி >>> அந்தி = ஒளி குறையும் பொழுது = மாலை.

அந்தி

சிவப்பு

அந்தீ

அம் (=அழகு, நிறம்) + தீ = அந்தீ >>> அந்தி = தீயின் நிறம்.

அந்தி

இரவு

அற்றீ

அல் (=இன்மை) + தீ (=சூரியன்) = அற்றீ >>> அத்தி >>> அந்தி = சூரியன் இல்லாத பொழுது = இரவு.

அந்தி

சந்திப்பு

அத்தி

அத்து (=வழி, கூடு) + இ = அத்தி >>> அந்தி = வழிகள் கூடுமிடம்.

அந்தி

சந்தி

அந்தி

அந்தி (=சந்திப்பு) >>> அந்தி = சந்தி, கூடு

அந்தி

முடிச்சிடு

அத்தி

அத்து (=பொருத்து) + இ = அத்தி >>> அந்தி = பொருத்து, முடிச்சிடு

அந்தி

அடை, பெறு

அத்தி

அத்து (=பொருந்து, அடை) + இ = அத்தி >>> அந்தி = அடை, பெறு

அந்தியம்

மரணகாலம்

அந்தியம்

அந்தி (=முடிவு, மரணம்) + அம் (=காலம்) = அந்தியம் = மரண காலம்

அந்தியம்

கடைசியானது

அற்றியம்

அற்றம் (=இறுதி, கடைசி) + இயம் = அற்றியம் >>> அத்தியம் >>> அந்தியம் = கடைசியானது.

அந்திரம்

குடல்

அற்றீரம்

அறை (=ஓட்டை, அலை, வளைவு) + ஈர் (=இழு, நீளு, நெய்ப்பு) + அம் = அற்றீரம் >>> அத்திரம் >>> அந்திரம் = நீண்ட ஓட்டையும் பல வளைவுகளும் கொண்ட நெய்ப்புடைய பொருள்.  

அந்திரன்

வானுலகத்தவன்

அந்தரன்

அந்தரம் (=வானுலகு) + அன் = அந்தரன் >>> அந்திரன்

அந்தில்

வெண் கடுகு

ஏற்றெள்

ஏறு (=ஒளி, வெண்மை) + எள் (=சிறுபொருள், ஒப்பு) = ஏற்றெள் >>> அத்தெல் >>> அந்தில் = வெள் எள்ளைப் போன்ற சிறுபொருள்.. .

அந்து

முடிவு

அற்றம்

அற்றம் (=முடிவு) + உ = அற்று >>> அத்து >>> அந்து

அந்து

யானையின் கால் சங்கிலி

அத்தூழ்

அத்தி (=யானை) + ஊழ் (=குழை, வலுவிழ) = அத்தூழ் >>> அந்துய் >>> அந்து = யானையை வலுவிழக்கச் செய்வது. 

அந்தேசம்

கடல்கள் பொருந்தும் இடம்

அற்றேயம்

அறை (=அலை, கடல், இடம்) + ஏய் (=பொருந்து) + அம் = அற்றேயம் >>> அத்தேசம் >>> அந்தேசம் = கடல்கள் பொருந்தும் இடம்.

அந்தேசம்

நிதி நெருக்கடி

அத்தேழம்

அத்தம் (=பொருள், நிதி, கேடு) + ஏழ்மை (=வறுமை, குறைவு) + அம் = அத்தேழம் = அந்தேசம் = நிதிக் குறைவால் உண்டாகும் கேடு.

அனாதி, அநாதி, அனாதை, அநாதை

ஆதாரம் இல்லாதவன்

ஆணறி, ஆணறை

ஆணம் (=பற்றுக்கோடு, ஆதாரம்) + அறு (=இல்லாகு) + இ / ஐ = ஆணறி / ஆணறை >>> அனாதி / அனாதை >>> அநாதி / அநாதை = பற்றுக்கோடு / ஆதாரம் இல்லாதவன்.

அனாதன், அநாதன்

கடவுள்

ஆணறன்

ஆணம் (=பற்றுக்கோடு, ஆதாரம்) + அறை (=இடம், உலகம்) + அன் = ஆணறன் >>> அனாதன் = உலகின் ஆதாரம் ஆனவன்.

அனாமிகை, அநாமிகை

மோதிரவிரல்

அண்ணேமிகை

அள் (=செறி) + நேமி (=மோதிரம்) + கை (=உறுப்பு) = அண்ணேமிகை >>> அனாமிகை = மோதிரம் செறியும் உறுப்பு.

அநாயம், அனாயம்

பயனற்றது

அன்னயம்

அல் (=எதிர்மறை) + நயம் (=நன்மை, பயன்) = அன்னயம் >>> அனாயம் >>> அநாயம் = நன்மை / பயன் அற்றது.

அநிசம்

எப்போதும்

ஆனூழம்

ஆன் (=நிறை, முழுமையாகு) + ஊழி (=காலம்) + அம் = ஆனூழம் >>> அனிசம் >>> அநிசம் = காலம் முழுவதும்

அநித்தியம், அநித்தம்

நிலையாமை

அன்னிற்றியம்

அல் (=எதிர்மறை) + நிறை (=நிலைபேறு) + இயம் = அன்னிற்றியம் >>> அனித்தியம் >>> அநித்தியம் = நிலைபேறு இல்லாமை.

அநிதம், அனிதம்

அளவற்றது

அன்னிற்றம்

அல் (=எதிர்மறை) + நிறை (=அளவு, முடிவு) + அம் = அன்னிற்றம் >>> அனித்தம் >>> அநிதம் = அளவு முடிவின்மை.

அநியாயம்

அநீதி

அன்னிழாயம்

அல் (=எதிர்மறை) + நிழ (=காப்பாற்று, முறைசெய்) + ஆய் + அம் = அன்னிழாயம் >>> அநியாயம் = ஆய்ந்து முறைசெய்தல் இன்மை

அநியாயம்

வீணடித்தல்

அன்னிழாயம்

அல் (=எதிர்மறை) + நிழ (=காப்பாற்று, முறைசெய்) + ஆயம் (=விளைச்சல், பயன்) = அன்னிழாயம் >>> அநியாயம் = பயனைக் காவாமை = வீணாக்குதல்.

அநிருத்தம்

நிறுவப் படாதது

அன்னிறுத்தம்

அல் (=எதிர்மறை) + நிறுத்து (=நிறுவு) + அம் = அன்னிறுத்தம் >>> அநிருத்தம் = நிறுவப் படாதது.

அநீதி, அநீதம்

நீதியற்றது

அன்னீதி

அல் (=எதிர்மறை) + நீதி = அன்னீதி >>> அநீதி = நீதியற்றது

அப்தம்

ஆண்டு

அற்றம்

அற்றம் (=காலம், முடிவு) >>> அத்தம் >>> அப்தம் = கால முடிவு

அப்பட்டம்

தெளிவு, தூய்மை

அம்பட்டம்

அம் (=அழகு, ஒளி) + படு (=பொருந்து) + அம் = அம்பட்டம் >>> அப்பட்டம் = ஒளி பொருந்தியது = தெளிவு, தூய்மை.

அப்பணை

கட்டளை

அம்பணை

அம் (=சொல்) + பணி (=அடக்கு, கட்டுப்படுத்து) + ஐ = அம்பணை >>> அப்பணை = அடக்கும் / கட்டுப்படுத்தும் சொல்.

அப்பம்

அப்பம்

அவ்வம்

அவி (=துடை, தேய், ஆவியில் சமை) + அம் (=உணவு) = அவ்வம் >>> அப்பம் = தேய்த்து ஆவியில் சமைத்த உணவு.

தோசை

தோய்த்துப் பிரித்து எடுக்கப்படும் மெல்லிய உணவு

தோயாய்

தோய் (=பூசு, தேய்) + ஆய் (=பிரித்தெடு, உண்ணு, துளையிடு, நுண்மை, மென்மை) = தோயாய் >>> தோசாய் >>> தோசை = மெலிதாகத் தேய்த்துப் பிரித்தெடுக்கப்படும் நுண்துளைகள் மிக்க உணவு. 

அப்பளம்

தகடு போன்ற மெல்லிய உணவு

அம்பாளம்

அம் (=உணவு) + பாளம் (=தகட்டு வடிவப் பொருள்) = அம்பாளம் >>> அப்பளம் = தகடு போன்ற தட்டையான மெல்லிய உணவு.

அப்பன், அப்பா, அப்பு

தந்தை

அவ்வன்

ஆவி (=உயிர், வெளியிடு, கொடு) + அன் = அவ்வன் >>> அப்பன் >>> அப்பா = உயிர் கொடுத்தவன்.

அப்பாடா, அப்பாடி

பெருமூச்சு விட்டுச் சொல்வது

அவ்வாடா, அவ்வாடி

ஆவி (=பெருமூச்சு விடு) + ஆடு (=சொல்) + ஆ / இ = அவ்வாடா / அவ்வாடி >>> அப்பாடா / அப்பாடி = பெருமூச்சு விட்டுச் சொல்லுவது.

அப்பாயி

ஆண்

அவ்வை

ஆவி (=வலிமை) + ஐ = அவ்வை >>> அப்பய் >>> அப்பாயி = வலிமை உடையவன் = ஆண்

அப்பாவி

ஆராயும் அறிவு இல்லாதவன்

ஆய்பவ்வி

(2) ஆய்பு (=ஆராய்ந்து அறிதல்) + அவி (=அழி, இல்லாகு) + இ = ஆய்பவ்வி >>> அப்பவ்வி >>> அப்பாவி = ஆராயும் அறிவற்றவன்.

அம்மாஞ்சி

ஆராயும் அறிவு இல்லாதவன்

அவ்வாயி

அவி (=அழி, இல்லாகு) + ஆய் (=ஆராய்ந்து அறி) + இ = அவ்வாயி >>> அம்மாசி >>> அம்மாஞ்சி = ஆராயும் அறிவற்றவன்.

அப்பி

தலைவி, அக்காள்

எவ்வை

எவ்வை (=தலைவி, மூத்தவள்) + இ = எவ்வி >>> அப்பி = தலைவி, மூத்தவள், அக்காள்.

அப்பியங்கனம், அப்பியங்கம்

உடலில் எண்ணை பூசித் தேய்த்தல்

அப்பிழங்கணம்

அப்பு (=பூசு, தேய்) + இழை (=குழை, நெகிழ்) + அங்கம் (=உடல்) + அணம் = அப்பிழங்கணம் >>> அப்பியங்கனம் = குழைவான பொருளை உடலில் பூசித் தேய்த்தல்.

அப்பியந்தரம்

இடையூறு

அவ்வியந்தரம்

அவி (=அழி, கெடு) + அந்தரம் (=நடு, இடை) = அவ்வியந்தரம் >>> அப்பியந்தரம் = இடையில் ஏற்படும் கேடு.

அப்பியம்

யாகத்தீயில் இடப்படும் உணவு

அவ்வீயம்

அவி (=யாகத்தீ) + ஈ (=கொடு, இடு) + அம் (=உணவு) = அவ்வீயம் >>> அப்பியம் = யாகத்தீயில் இடப்படும் உணவு.

அப்பியாசம்

பயிற்சி, பழக்கம்

அம்மிழயம்

அமை (=செய்) + இழை (=நெருங்கிப் பழகு) + அம் = அம்மிழயம் >>> அப்பியாசம் = நெருங்கிப் பழகிச் செய்தல். ,

அப்பிரகாசம்

இருட்டு

அவிரகயம்

அவிர் (=ஒளி) + அகை (=நீங்கு, இல்லாகு) + அம் = அவிரகயம் >>> அப்பிரகாசம் = ஒளியின்மை, இருட்டு.

அப்பிரசித்தம்

விளங்காத சொல், புகழ் அற்ற பெயர்

அவிரசிற்றம்

அவிர் (=ஒளிர், விளங்கு) + அசை (=சொல், பெயர்) + இறு (=அழி, இல்லாகு) + அம் = அவிரசிற்றம் >>> அப்பிரசித்தம் = விளக்கம் இல்லாத சொல் = விளங்காத சொல், புகழ் அற்ற பெயர்.

அப்பிரத்தியட்சம்

அறிவுக்குப் புலப்படாதது

அவிரறியற்றம்

அவிர் (=ஒளிர், விளங்கு) + அறி + அறு (=இல்லாகு) + அம் = அவிரறியற்றம் >>> அபிரதியட்டம் >>> அப்பிரத்தியட்சம் = அறிவுக்கு விளங்காதது.

அப்பிரதானம்

முக்கியத்துவம் அற்றது

அவ்விறைதானம்

அவி (=அழி, இல்லாகு) + இறை (=தலைமை, முதன்மை) + தானம் (=இடம்) = அவ்விறய்தானம் >>> அப்பிரதானம் = தலைமை / முதன்மை இடத்தில் இல்லாதது.

அப்பிரம்

மேகம்

அம்மிறம்

அம் (=நீர்) + இறை (=சிதறு, பொழி) + அம் = அம்மிறம் >>> அப்பிரம் = நீரைப் பொழிவது = மேகம்.

அப்பிரமாணம், அப்பிரமாணிக்கம்

உறுதி இல்லாதது, நம்பத் தகாதது

அவ்வுரவணம்

அவி (=அழி, இல்லாகு) + உரம் (=உறுதி) + அணம் = அவ்வுரவணம் >>> அப்பிரமாணம் = உறுதி இல்லாதது.

அப்பிரமாணம்

எல்லையற்றது

அவ்வீறமணம்

அவி (=அழி, இல்லாகு) + ஈறு (=எல்லை) + அமை + அணம் = அவ்வீறமணம் >>> அப்பிரமாணம் = எல்லைக்குள் அமையாதது.

அப்பிரமு, அப்பிரமை

கிழக்குத் திசை யானை

ஆய்ப்புறமை

ஆய் (=அழகு, ஒளி, தோன்று) + புறம் (=பக்கம், திசை) + மை (=யானை) = ஆய்ப்புறமை >>> அப்பிரமை = ஒளிதோன்றும் திசைக்கான யானை.

அப்பிராணி, அப்புராணி

உண்மையை ஆராயும் அறிவு இல்லாதவன்

ஆய்புராணி

ஆய் (=ஆராய்ந்து அறி) + புரை (=பொய், இன்மை) + ஆணை (=உண்மை) + இ = ஆய்புராணி >>> அப்புராணி >>> அப்பிராணி = பொய்யா உண்மையா என்று ஆராயும் அறிவற்றவன்.

அப்பிராணி, அப்புராணி

வலுவற்றவன், நோஞ்சான்

அவ்வுராணி

அவி (=அழி, இல்லாகு) + உரம் (=வலிமை) + ஆணம் (=உடல்) + இ = அவ்வுராணி >>> அப்புராணி >>> அப்பிராணி = வலிமை இல்லாத உடலைக் கொண்டவன்.

அப்பிராப்தி

அடைய இயலாமை

அவ்வுறாற்றி

அவி (=அழி, இல்லாகு) + உறு (=அடை) + ஆற்று (=கூடு, இயலு) + இ = அவ்வுறாற்றி >>> அப்புராத்தி >>> அப்பிராப்தி = அடைய இயலாமை.

அப்பிராப்பியம்

அடைய முடியாதது

அவ்வுறம்மியம்

அவி (=அழி, இல்லாகு) + உறு (=அடை) + அமை (=தகு, இயலு) + இயம் = அவ்வுறம்மியம் >>> அப்புரப்பியம் >>> அப்பிராப்பியம் = அடைய இயலாதது. 

அப்பிரியம்

வெறுப்பு, பகை

அவ்விறியம்

அவா (=ஆசை, அன்பு) + இறு (=அழி, இல்லாகு) + இயம் = அவ்விறியம் >>> அப்பிரியம் = அன்பு இல்லாமை.

அப்பு

நீர்

ஆம்

ஆம் (=நீர்) + உ = அம்மு >>> அப்பு

அப்பு

கடன்

அப்பு

அப்பு (=கொள், வாங்கு, அடை) >>> அப்பு = வாங்கி அடைப்பது.

அப்பு

யானை

ஏமு

ஏ (=பெருக்கம், செருக்கு) + மா (=கருமை, விலங்கு) + உ = ஏமு >>> அப்பு = செருக்குடைய கருநிறப் பெரிய விலங்கு.

அபக்கியாதி

 

 

அவி (=அழி) + ஆக்கம் (=பெருமை) + அறை

அபக்கியாதி

அவமானப் பேச்சு, இழிவுப் பேச்சு

அவாக்கிழதி

அவி (=அழி) + ஆக்கம் (=சொல்) + இழி + அதி (=மிகுதி, பெருமை) = அவாக்கிழதி >>> அபக்கியாதி = பெருமையை அழித்து இழிவுசெய்யும் சொல்

அபக்குவம்

பக்குவம் இல்லாமை

அவாக்குமம்

அவி (=அழி, இல்லாகு) + ஆக்கு (=சமை, பக்குவம் செய்) + மம் = அவாக்குமம் >>> அபக்குவம் = பக்குவம் இல்லாமை.

அபகடம்

பொய், வஞ்சனை

அவகடம்

அவி (=அழி, இல்லாகு) + அகடு (=உள்) + அம் = அவகடம் >>> அபகடம் = உள்ளே ஏதும் இல்லாமை = ஓட்டை, பொய், வஞ்சனை.

அபகாரம்

தாக்கிப் பெறுதல்

அப்பகாரம்

அப்பு (=தாக்கு) + அகை (=வருத்து) + ஆர் (=பெறு) + அம் = அப்பகாரம் >>> அபகாரம் = தாக்கி வருத்திப் பெறுதல்.

அபகரி

தாக்கிப் பெறு

அபகரி

அபகாரம் (=தாக்கிப் பெறுதல்) >>> அபகரி

அபகாரம்

தீமை

அவாக்காரம்

அவி (=அழி, இல்லாகு) + ஆக்கம் (=நன்மை, செயல்) + ஆர் (=பொருந்து) + அம் = அவாக்காரம் >>> அபகாரம் = நன்மை பொருந்தாத செயல்.

அபங்கம்

நஞ்சு

ஆவக்கம்

ஆவி (=உயிர்) + அகை (=அறு, அழி) + அம் (=உணவு) = ஆவக்கம் >>> அபங்கம் = உயிரை அழிக்கும் உணவு.

அபங்கம்

குறைவின்மை

அவக்கம்

அவி (=அழி, இல்லாகு) + அகை (=அறு, குறை) + அம் = அவக்கம் >>> அபங்கம் = குறைவு இல்லாமை. .

அபசகுனம்

கேடு விளையும் முன் குறிப்பு

அவசங்குன்னம்

அவி (=அழி, கெடு) + அசங்கு (=அசை, நட) + உன்னம் (=குறிப்பு) = அவசங்குன்னம் >>> அபசகுனம் = கேடு நடப்பதற்கான குறிப்பு.

அசைவம்

மாமிச உணவு

அசைமம்

அசை (=உண்ணு) + மா (=விலங்கு) + அம் = அசைமம் >>> அசைவம் = விலங்குகளை உண்ணுதல்.

அபசப்தம்

வீண்பேச்சு, கெட்ட வார்த்தை

அவசற்றம்

அவி (=அழி, இல்லாகு) + அசை (=சொல்) + அறம் (=நன்மை) + அம் = அவசற்றம் >>> அபசத்தம் >>> அபசப்தம் = நன்மை இல்லாத சொல்.

அபசயம்

கேடு, வீண், தோல்வி

அவயாயம்

அவை (=சிதை) + ஆயம் (=நன்மை, பயன்) = அவயாயம் >>> அபசயம் = நன்மை / பயன் சிதைந்தது..

அபசரிதம்

கெட்ட நடத்தை

அவயரிதம்

அவி (=கெடு) + அயர் (=செல், நட) + இதம் = அவயரிதம் >>> அபசரிதம் = கெட்ட நடத்தை. 

அபசவ்வியம்

இடது பக்கம்

அவாயம்புயம்

அவி (=அழி, இல்லாகு) + ஆயம் (=வலிமை) + புயம் (=தோள், பக்கம்) = அவாயம்புயம் >>> அவசப்புயம் >>> அபசவ்வியம் = வலிமை இல்லாத தோள் பக்கம் = இடது பக்கம்

அபசவ்வியம்

மாறுபாடு

அவைசெவ்வியம்

அவை (=சிதை, அழி) + செம்மை (=ஒற்றுமை) + இயம் = அவய்செவ்வியம் >>> அபசவ்வியம் = ஒற்றுமை இல்லாமை.

அபசாரம்

கெட்ட நடத்தை, தவறான செயல்

அவயரம்

அவி (=கெடு) + அயர் (=செல், நட) + அம் = அவயரம் >>> அபசாரம் = கெட்ட நடத்தை, தவறான செயல்.

அபத்தம்

பொய், வஞ்சனை

அவற்றம்

அவி (=அழி, இல்லாகு) + அற்றம் (=உண்மை) = அவற்றம் >>> அபத்தம் = உண்மை இல்லாதது.

அபத்தம்

நிலையாமை

அவற்றம்

அவி (=அழி, இல்லாகு) + அற்றம் (=உறுதி) = அவற்றம் >>> அபத்தம் = உறுதி இல்லாதது

அபத்தியம்

கட்டுப்பாடற்ற உணவு முறை

அவாற்றியம்

அவி (=உணவு, அழி, இல்லாகு) + ஆறு (=அடங்கு, கட்டுப்படு) + இயம் = அவாற்றியம் >>> அபத்தியம் = உணவுக் கட்டுப்பாடு இன்மை.

அபதானம்

பெருஞ்செயல்

ஏவாற்றணம்

ஏ (=பெருக்கம்) + ஆற்று (=செய்) + அணம் = ஏவாற்றணம் >>> அபாத்தணம் >>> அபதானம் = பெருஞ்செயல்.

அபதேவதை

அழிக்கின்ற தெய்வப் பெண்

அவய்தேமாதை

அவை (=சிதை, அழி) + தே (=தெய்வம்) + மாது (=பெண்) + ஐ = அவய்தேமாதை >>> அபதேவதை = அழிக்கின்ற தெய்வப் பெண்

அபயம்

அச்சம் நீக்குதல், அருள் செய்தல்

ஏமாயம்

ஏமம் (=கலக்கம், அச்சம்) + ஆய் (=நீக்கு, போக்கு) + அம் = ஏமாயம் >>> அபயம் = கலக்கத்தை / அச்சத்தைப் போக்குதல்.

அபயம்

அடைக்கலம்

ஏமயம்

ஏமம் (=பாதுகாப்பு) + அயம் (=இடம்) = ஏமயம் >>> அபயம் = பாதுகாக்கும் இடம்.

அபயர்

வீரர்

அவையர்

அவை (=குத்து, நெரி, அழி, கூட்டம்) + அர் = அவையர் >>> அபயர் = குத்தியும் நெரித்தும் அழிக்கும் கூட்டத்தினர்.

அபரகாத்திரம்

கால்

அமாரக்காற்றிறம், அமராகத்திறம்

(1) அமை (=பொறு, தாங்கு) + ஆரக்கால் (=தண்டு) + திறம் (=உடல்) = அமாரக்காற்றிறம் = அபரகாத்திரம் = உடலைத் தாங்கும் தண்டு. (2) அமர் (=செய்) + ஆகம் (=உடல்) + திறம் (=நிலைபேறு) = அமராகத்திறம் >>> அபரகாத்திரம் = உடலை நிலைபெறச் செய்வது.

அபரஞ்சி

தங்கம்

அமாராயி

அம் (=அழகு, ஒளி) + ஆர் (=நிறை, அணி) + ஆயம் (=பொருள்) + இ = அமாராயி >>> அபரஞ்சி = அழகிய ஒளிநிறைந்த அணிகலன்..

சவரன்

தங்கம்

அமாரம்

(2) அம் (=அழகு, ஒளி) + ஆர் (=நிறை, அணி) + அம் = அமாரம் >>> சவரன் = அழகிய ஒளிநிறைந்த அணி = தங்கம்.

அபரம்

பின்புறம், முதுகு

அவ்வாரம்

அ + வாரம் (=பக்கம்) = அவ்வாரம் >>> அபரம் = அந்தப் பக்கம்

அபரம்

பொய்

அவ்வறம்

அவி (=அழி, இல்லாகு) + அறம் (=உண்மை) = அவ்வறம் >>> அபரம் = உண்மை இல்லாதது = பொய்.

அபரம்

நரகம்

அவ்வறம்

அவை (=குத்து, நெரி, தண்டி, இடம்) + அறம் (=மரணம்) + அம் = அவ்வறம் >>> அபரம் = மரணித்தோரை தண்டிக்கும் இடம்.

அபரம்

கவசம்

ஏமாரம்

ஏம் (=பாதுகாப்பு) + ஆர் (=அணி) + அம் = ஏமாரம் >>> அபரம் = பாதுகாப்புக்காக அணிவது.

அபரம்

மேற்கு

அம்மறம்

அம் (=அழகு, ஒளி) + மறை + அம் = அம்மறம் >>> அப்பறம் >>> அபரம் = ஒளி மறைவது = மேற்கு.

அபரம்

மரணச் சடங்குகள்

அம்மறம்

அமை (=பொருந்து, செய்) + அறம் (=மரணம்) = அம்மறம் >>> அப்பறம் >>> அபரம் = மரணத்துடன் பொருந்திய செயல்பாடுகள்

அபரம்

நன்மையற்றது, நேர்மையற்றது

அவ்வறம்

அவி (=அழி, இல்லாகு) + அறம் (=நேர்மை, நன்மை) = அவ்வறம் >>> அப்பறம் >>> அபரம் = நன்மை அற்றது, நேர்மை அற்றது

அபராசிதன்

போரில் வெல்ல இயலாதவன்

அவாரசிறன்

அவி (=இல்லாகு) + ஆர் (=போரிடு) + அசை (=கட்டு, அடக்கு, வெல்) + இறு (=முடி) + அன் = அவாரசிறன் >>> அபராசிதன் = போரில் வெல்ல முடியாதவன்.

அபராணம்

பிற்பகல்

அமாறாணம்

அம் (=ஒளி, பொழுது) + ஆறு (=தணி, குறை) + ஆணம் (=சிறுமை) = அமாறாணம் >>> அபராணம் = ஒளி சிறிதுசிறிதாகத் தணியும் பொழுது.

அபராதம்

குற்றம்

அவறாற்றம்

(2) அவி (=அழி, இல்லாகு) + அறம் + ஆற்று (=செய்) + அம் = அவறாற்றம் >>> அபராத்தம் >>> அபராதம் = அறம் இல்லாத செயல்.

அபராதம்

தண்டம்

அவாரத்தம்

அவம் (=குற்றம்) + ஆர் (=கட்டு) + அத்தம் (=பொருள்) = அவாரத்தம் >>> அபராதம் = குற்றத்திற்காகக் கட்டப்படும் பொருள்.

அபராதி

குற்றவாளி

அபராதி

அபராதம் (=குற்றம்) >>> அபராதி = குற்றம் செய்தவன்.

அபரிச்சின்னம்

அளவற்ற வகையினது

அவறியினம்

அவி (=அழி, இல்லாகு) + அறி (=அள) + இனம் (=வகை) = அவறியினம் >>> அபரிச்சின்னம் = அளவு இல்லாத வகையினது.

அபரிமிதம்

அளவற்ற வகையினது

அவறிவிதம்

அவி (=அழி, இல்லாகு) + அறி (=அள) + விதம் (=வகை) = அவறிவிதம் >>> அபரிமிதம் = அளவு இல்லாத வகையினது.

அபலம்

பயனின்மை

ஏமலம்

ஏமம் (=நன்மை, பயன்) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அபலம் = நன்மை / பயன் அற்றது.

அபலம்

வலுவற்றது

ஏமலம்

ஏமம் (=வலிமை) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அபலம் = வலிமை அற்றது.

அபலாபனம்

குற்றத்தை மூடி மறைத்தல்

அவலப்பணம்

அவலம் (=குற்றம்) + அப்பு (=அடை, மூடு, மறை) + அணம் = அவலப்பணம் >>> அபலாபனம் = குற்றத்தை மூடி மறைத்தல்

அபலை

பெண்

ஏமலை, அமளை

(1) ஏமம் (=வலிமை) + அல் (=எதிர்மறை) + ஐ = ஏமலை >>> அபலை = வலிமை அற்றவள். (2) அம் (=அழகு) + அளி (=இரக்கம்) + ஐ = அமளை >>> அபலை = அழகும் இரக்கமும் கொண்டவள். 

அபவருக்கம், அபவர்க்கம்

மேனிலை, முத்தி

அவாவருகம்

அவி (=அழி, இற) + ஆவி (=உயிர்) + அருகு (=சேர், இடம்) + அம் = அவாவருகம் >>> அபவருக்கம் = இறந்த உயிர் சேரும் இடம்.

அபவாக்கு

தீங்கு தரும் சொல்

அவவாக்கு

அவம் (=கேடு) + வாக்கு (=சொல்) = அவவாக்கு >>> அபவாக்கு = கேடு தரும் சொல்.

அபவாதம்

பொய்யான கூற்று

அவவாதம்

அவம் (=பொய்) + வாதம் (=சொல், கூற்று) = அவவாதம் >>> அபவாதம் = பொய்யான கூற்று.

அபச்`மாரம்

கால்கை வலிப்பு நோய்

அவச்சுவாரம்

அவி (=பணி, வளை) + அச்சு (=உடல்) + வார் (=நீளு, இழு) + அம் = அவச்சுவாரம் >>> அபச்`மாரம் = உடல் வளைத்து இழுக்கப்படும் நோய்.

அபச்`மாரம்

வெறுக்கத் தக்கது

அவாய்மாறம்

அவாய் (=விருப்பம்) + மாறு (=எதிர்) + அம் = அவாய்மாறம் >>> அபச்`மாரம் = விருப்பத்திற்கு எதிரானது.

அபாக்கியம்

துரதிருச்~டம்

அவாக்கியம்

அவி (=அழி, இல்லாகு) + ஆக்கம் (=நற்பேறு) + இயம் = அவாக்கியம் >>> அபாக்கியம் = நற்பேறு இன்மை.

அபாங்கம்

கடைக்கண் பார்வை

ஆய்பக்கம்

ஆய் (=பார்) + பக்கம் (=ஓரம்) = ஆய்பக்கம் >>> அபாங்கம் = ஓரமாகப் பார்த்தல் = கடைக்கண் பார்வை.

அபாண்டம்

இல்லாத பழியைக் கூறுதல்

அவற்றம்

அவம் (=குற்றம், பழி) + அறை ( =இன்மை, சொல்) + அம் = அவற்றம் >>> அபட்டம் >>> அபாண்டம் = இல்லாத பழியைக் கூறுதல்.

அபாத்திரன்

கொடைக்குப் பொருத்தமற்றவன்

அவற்றிரன்

அவி (=அழி, இல்லாகு) + அறம் (=கொடை) + இரு (=பொருந்து) + அன் = அவற்றிரன் >>> அபாத்திரன் = கொடைக்குப் பொருத்தம் இல்லாதவன்

அபாயம்

மறைந்திருக்கும் அழிவு / கேடு

அவாயம்

அவி (=அழி, கெடு) + ஆயம் (=இரகசியம், மறைந்திருப்பது) = அவாயம் >>> அபாயம் = மறைந்திருக்கும் கேடு / அழிவு.

அபார்த்தம்

தவறான கருத்து / பொருள்

அவருத்தம்

அவம் (=குற்றம், தவறு) + அருத்தம் (=கருத்து, பொருள்) = அவருத்தம் >>> அபாருத்தம் = தவறான கருத்து / பொருள்.

அபாரம்

அளவற்றது

அவறம்

அவி (=அழி, இல்லாகு) + அறு (=வரையறு, முடி) + அம் = அவறம் >>> அபாரம் = வரையறை / முடிவு இல்லாதது.

அபாரம்

அருமை எனப் பாராட்டுதல்

அம்மரம்

அம் (=சொல்) + அருமை + அம் = அம்மரம் >>> அப்பரம் >>> அபாரம் = அருமை என்று சொல்லுதல்.

அபாவம்

இருப்பின்மை

அமாவம்

அமை (=இரு) + அவி (=அழி, இல்லாகு) + அம் = அமாவம் >>> அபாவம் = இருப்பு இல்லாமை.

அபானம்

ஆசனவாய்

ஆய்வனம்

ஆய் (=மலம், நீக்கு, கழி) + வனம் (=வழி) = ஆய்வனம் >>> அபானம் = மலம் கழிக்கும் வழி.

அபிசாரம்

அழிவுக்காக செய்யும் யாகம்

அவியறம்

அவி (=அழி, யாகம்) + அறை (=ஒலி, ஓது) + அம் = அவியறம் >>> அபிசாரம் = அழிப்பதற்காக யாகத்தில் ஓதுதல்.

அபிஞ்ஞன்

அறிவாளி

ஏவிச்சன்

ஏ (=பெருக்கம்) + விச்சை (=அறிவு) + அன் = ஏவிச்சன் >>> அபிஞ்சன் >>> அபிஞ்ஞன் = பேரறிவு உடையவன்.

அபிட்டம்

பாதரசம்

அமிற்றம்

அம் (=அழகு, ஒளி, வெண்மை) + இறு (=கொல்) + அம் (=நீர்) = அமிற்றம் >>> அபிட்டம் = கொல்கின்ற வெள்ளொளி மிக்க நீர்.

அபிசேகம்

திருமுழுக்கு

அம்பூசேங்கம்

(2) அம் (=நீர்) + பூசு (=கழுவு) + ஏங்கு (=ஒலி, ஓது) + அம் = அம்பூசேங்கம் >>> அப்பிசேக்கம் >>> அபிசேகம் = ஓதியவாறே நீரால் கழுவுதல்.

அபிசேகம்

கிரீடம்

ஐமுச்செஃகம்

ஐ (=தலைவன், அரசன், பெருமை) + முச்சி (=தலையுச்சி) + எஃகு (=இரும்பு) + அம் = ஐமுச்செஃகம் >>> அபிசேகம் = தலைவனின் / அரசனின் தலையில் பெருமைக்காக சூட்டப்படும் இரும்புப் பொருள்.

அபிடேகம்

திருமுழுக்கு

அப்பிடேங்கம்

அப்பு (=நீர்) + இடு (=சொரி, நீக்கு, கழுவு) + ஏங்கு (=ஒலி, ஓது) + அம் = அப்பிடேங்கம் >>> அபிடேகம் = ஓதியவாறே நீரைச் சொரிந்து கழுவுதல்

அபிடேகம்

கிரீடம்

ஐமுடெஃகம்

ஐ (=தலைவன், அரசன், பெருமை) + முடி (=தலை, சூட்டு) + எஃகு (=இரும்பு) + அம் = ஐமுடெஃகம் >>> அபிடேகம் = தலைவனின் / அரசனின் தலையில் பெருமைக்காக சூட்டப்படும் இரும்புப் பொருள்.

அபிதார்த்தம்

முதலில்தோன்றும் பொருள்

ஐபிறாருத்தம்

ஐ (=தலைமை, முதன்மை) + பிற (=தோன்று) + அருத்தம் (=பொருள்) = ஐபிறாருத்தம் >>> அபிதார்த்தம் = முதலில் தோன்றும் பொருள்.

அபிதானம்

பெயர்ச்சொல்

அம்விதாணம்

அம் (=சொல்) + வித (=விளக்கு) + ஆணம் (=பொருள்) = அம்விதாணம் >>> அவ்விதானம் >>> அபிதானம் = பொருளை விளக்கும் சொல்.

அபிதை

விளக்கும் சொல்

அம்விதை

அம் (=சொல்) + வித (=விளக்கு) + ஐ = அம்விதை >>> அவ்விதை >>> அபிதை = விளக்கச்சொல்.

அபினயம், அபிநயம்

குறிப்பால் உணர்த்தும் அசைவு

அமுன்னாயம்

அம் (=சொல்) + உன்னம் (=கருத்து, குறிப்பு) + ஆய் (=அசை) + அம் = அமுன்னாயம் >>> அபுன்னயம் <>> அபினயம் >>> அபிநயம் = கருத்தைக் குறிப்பால் கூறும் அசைவு.

அபினவம், அபிநவம்

மிகவும் புதியது

ஏபுனைமம்

ஏ (=பெருக்கம், மிகுதி) + புனை (=புதுமை) + மம் = ஏபுனைமம் >>> அபினவம் >>> அபிநவம் = மிகப் புதுமையானது.

அபினிவேசம், அபிநிவேசம்

மிக்க ஆர்வம், ஈடுபாடு

அமீனுவேயம்

அமை (=நிறை, மிகு) + ஈனு (=தோற்றுவி, காட்டு) + வெய் (=விரும்பு) + அம் = அமீனுவேயம் >>> அபினிவேசம் >>> அபிநிவேசம் = மிகுந்த விருப்பம் காட்டுதல்.

அபிப்பிராயம்

வெளிப்படையான கருத்து

ஆவீவிறயம்

ஆவி (=வெளிப்படுத்து) + ஈவு (=கொடை) + இறை (=கருத்து) + அம் = ஆவீவிறயம் >>> அபிபிரயம் >>> அபிப்பிராயம் = வெளிப்படையாகத் தரப்படும் கருத்து.

அபிமதம்

விருப்பம்

ஆவுமதம்

ஆவு (=விரும்பு) + மதி (=எண்ணம்) + அம் = ஆவுமதம் >>> அவிமதம் >>> அபிமதம் = விரும்பும் எண்ணம் = விருப்பம்.

அபிமானம்

உள்ள விருப்பம், ஆசை, பற்று

ஆவுமனம்

ஆவு (=விரும்பு) + மனம் (=உள்ளம்) = ஆவுமனம் >>> அவிமனம் >>> அபிமானம் = உள்ள விருப்பம் = பற்று, ஆசை.

அபிமானம்

உள்ள மகிழ்ச்சி

ஆவுமனம்

ஆவு (=விரும்பு, மகிழ்) + மனம் (=உள்ளம்) = ஆவுமனம் >>> அவிமனம் >>> அபிமானம் = உள்ள மகிழ்ச்சி.

அபிமானம்

தவறான மதிப்பீடு

அவிமாணம்

அவி (=கெடு, தவறு) + மாண் (=அளவு, மதிப்பு) + அம் = அவிமாணம் >>> அபிமானம் = தவறான மதிப்பீடு.

அபிமானம்

மரியாதை, மதிப்பு

ஆவுமாணம்

ஆவு (=விரும்பு) + மாண் (=அளவு, மதிப்பு) + அம் = ஆவுமாணம் >>> அவிமானம் >>> அபிமானம் = விரும்பத்தக்க மதிப்பு = மரியாதை.

அபிமானம்

ஆதரவு

அமீவணம்

அமை (=பொறு, தாங்கு) + ஈவு (=கொடை) + அணம் = அமீவணம் >>> அபிமானம் = தாங்கிக் கொடுத்தல்.

அபிமானி

மதி, ஆதரி

அபிமானி

அபிமானம் (=மதிப்பு, ஆதாரவு) >>> அபிமானி = மதி, ஆதரி

அபிமுகம்

நேர்முகம்

அமைமுகம்

அமை (=நிகழ், நேர்) + முகம் = அமைமுகம் >>> அமிமுகம் >>> அபிமுகம் = நேர்முகம்.

அபியுக்தன்

அறிஞன்

அமையூக்கன்

அமை (=நிறை, மிகு) + ஊகம் (=அறிவு) + அன் = அமையூக்கன் >>> அமியுக்தன் >>> அபியுக்தன் = மிகுந்த அறிவுடையவன்.

அபிராமம்

அழகானது

அவிரமம்

அவிர் (=ஒளிர்) + அம் (=அழகு) + அம் = அவிரமம் >>> அபிராமம் = ஒளிரும் அழகுடையது.

அபிராமன்

மிக இனிமை ஆனவன்

அமீரமன்

அமை (=நிறை, மிகு) + ஈரம் (=அன்பு, இனிமை) + அன் = அமீரமன் >>> அபிராமன் = மிக இனிமையானவன்.

அபிலாசை

மனம் நிறைந்த விருப்பம்

அமுள்ளாசை

அமை (=நிறை) + உள்ளம் (=மனம்) + ஆசை (=விருப்பம்) = அமுள்ளாசை >>> அபுல்லாசை >>> அபிலாசை = மனதில் நிறைந்த விருப்பம்.

அபிவியக்தி

விரும்பியதை நிகழ்த்துதல், வெளிக்காட்டுதல்

அமைவிழாற்றி

அமை (=நிகழ்) + விழை (=விரும்பு, கருது) + ஆற்று (=செய்) + இ = அமைவிழாற்றி >>> அமிவியாத்தி >>> அபிவியக்தி = விரும்பியதை / கருதியதை நிகழ்த்துதல், வெளிக்காட்டுதல்.

அபிவிருத்தி

மிகுதியான வளர்ச்சி

அமைவிருத்தி

அமை (=நிறை, மிகு) + விருத்தி (=பெருக்கம், வளர்ச்சி) = அமைவிருத்தி >>> அமிவிருத்தி >>> அபிவிருத்தி = மிகுதியான வளர்ச்சி.

அபின்னம்

வேறுபடாதது

அம்மினம்

அமை (=பொருந்து) + இனம் (=ஒப்பு) = அம்மினம் >>> அபின்னம் = ஒப்புமை பொருந்தியது = வேறுபாடு அற்றது.

அபின்னம்

சிதைவின்மை

அவின்னம்

அவை (=சிதை) + இன்மை + அம் = அவின்னம் >>> அபின்னம் = சிதைவு இன்மை

அபீட்டம், அபீச்~டம்

விருப்பம்

ஆவிற்றம்

ஆவு (=விரும்பு) + இறை (=கருத்து, எண்ணம்) + அம் = ஆவிற்றம் >>> அபீட்டம் >>> அபீச்~டம் = விரும்பும் எண்ணம்.

அபுதன்

அறிவற்றவன்

அவீதன்

அவி (=அழி, இல்லாகு) + இதம் (=அறிவு) + அன் = அவீதன் >>> அபுதன் = அறிவு இல்லாதவன்

அபூதம்

தோன்றி இராதது

அவுதம்

அவி (=அழி, இல்லாகு) + உதி (=தோன்று) + அம் = அவுதம் >>> அபூதம் = தோற்றம் இல்லாதது, தோன்றி இராதது.

அபூர்வம்

பெறுவதற்கு அரியது

அமுரவம்

அமை (=அடை) + உர (=கடினமாகு) + அம் = அமுரவம் >>> அபூர்வம் = அடைவதற்குக் கடினமானது.

அபூர்வம்

தோன்றி இராதது

அவுருவம்

அவி (=அழி, இல்லாகு) + உரு (=தோன்று) + அம் = அவுருவம் >>> அபூர்வம் = தோற்றம் இல்லாதது, தோன்றி இராதது.

அபேட்சை

வின்ணப்பம்

அவேயை

அவா (=விருப்பம்) + ஏய் (=சொல்) + ஐ = அவேயை >>> அபேச்சை >>> அபேட்சை = விருப்பத்தைச் சொல்லுதல் = விண்ணப்பம்

அபேட்சி

விண்ணப்பி

அபேச்சி

அபேச்சை (=விண்ணப்பம்) >>> அபேச்சி >>> அபேட்சி

அபேதம்

வேறுபாடற்றது

அவேறம்

அவி (=அழி, இல்லாகு) + ஏறு (=பிளவு, பிரிவு, வேறுபாடு) + அம் = அவேறம் >>> அபேதம் = வேறுபாடு அற்றது.

அபோச்சியம்

விலக்கப்பட்ட உணவு

அமோழியம்

அம் (=உண்ணு) + ஒழி (=விலக்கு) + அம் = அமோழியம் >>> அபோசியம் >>> அபோச்சியம் = விலக்கப்பட்ட உணவு.

அபோதம்

அறிவின்மை

அவோத்தம்

அவி (=அழி, இல்லாகு) + ஓத்து (=கல்வி, அறிவு) + அம் = அவோத்தம் >>> அபோதம் = கல்வி / அறிவு இன்மை.

தயை, தயவு

விருப்பம், அன்பு

தாழை

தாழ் (=விரும்பு) + ஐ = தாழை >>> தயை = விருப்பம், அன்பு.

தயாளினி

தாய் அன்பைத் தருபவள்

தாயளீனி

தாய் (=அம்மா) + அளி (=அன்பு) + ஈனு (=கொடு) + இ = தாயளீனி >>> தயாளினி = அம்மாவின் அன்பினைக் கொடுப்பவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.