ஞாயிறு, 17 அக்டோபர், 2021

87. (கிரீவம் > குசோத்தியம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

கிரீவம், KIREEVAM

தொண்டை, கழுத்து, THROAT, NECK

குரீவம்

குரை (=ஒலி) + ஈவு (=கொடை) + அம் = குரீவம் >>> கிரீவம் = ஒலியைக் கொடுப்பது = தொண்டை, கழுத்து

கிருகம், KIRUKAM

வீடு, ABODE

குறிகம்

(3) குறை (=அடங்கு, ஒடுங்கு) + இகம் (=இடம்) = குறிகம் >>> கிருகம் = அடங்கும் / ஒடுங்கும் இடம் = வீடு.

கிருகத்தன், KIRUKATHTHAN

இல்வாழ்பவன், HOUSEHOLDER

கிருகத்தன்

கிருகம் (=வீடு) + அத்து (=பொருந்து) + அன் = கிருகத்தன் = வீட்டுடன் பொருந்தியவன்

கிருகிணி, KIRUKINHI

மனைவி, WIFE

கிருகீனி

கிருகம் (=வீடு) + ஈன் (=உண்டாக்கு) + இ = கிருகீனி >>> கிருகிணி = வீட்டை உண்டாக்குபவள் = மனைவி

கிருசம், KIRUCAM

மெலிவு, LEANNESS, WEAKNESS

குறியம்

குறை (=மெலி, இளை) + இயம் (=தன்மை) = குறியம் >>> கிருசம் = மெலிவு, இளைப்பு.

கிருட்டி, KIRUTTI

பன்றி, HOG

கிறிட்டி

கீறு (=தோண்டு) + இடம் (=பூமி) + இ = கிறிட்டி >>> கிருட்டி = பூமியைத் தோண்டுவது = பன்றி.

கிருட்டிணம், KIRUTTINHAM, கிருட்டிணை, KIRUTTINHAI

மிளகு, PEPPER

கிறிட்டினம்

கிறு (=சுற்று, உருள்) + இட்டு (=சிறுமை) + இனை (=எரி) + அம் (=உணவு) = கிறிட்டினம் >>> கிருட்டிணம் = சிறிய உருண்டையான எரிச்சல் தரும் உணவு = மிளகு

கிருத்தம், KIRUTHTHAM, கிருதம், KIRUTHAM

செய்யப்பட்டது, WHICH IS DONE

குரிற்றம்

கூர் (=செய்) + இறு (=முடி) + அம் = குரிற்றம் >>> கிருத்தம் >>> கிருதம் = செய்து முடிக்கப்பட்டது.

கிருத்தி, KIRUTHTHI, கிருத்திமம், KIRUTHTHIMAM

தோல், SKIN

குறொற்றி

குறை (=தசை) + ஒற்று (=பொருந்து, மறை) + இ = குறொற்றி >>> கிருத்தி = தசையுடன் பொருந்தி மறைப்பது = தோல்

கிருத்திகை, KIRUTHTHIKAI

கார்த்திகை, KAARTHTHIKAI

குறித்தீகை

குறி (=காலம்) + தீ (=விளக்கு) + கை (=ஒழுங்கு, வரிசை, அலங்கரி) = குறித்தீகை >>> கிருத்திகை = விளக்குகளை வரிசையாக அலங்கரிக்கும் காலம்.

கிருத்திமம், KIRUTHTHIMAM

பொய், கற்பனை, IMAGINATION 

குறிறுமம்

குறி (=கருது, கற்பனைசெய்) + இறு (=செய்) + மம் = குறிறுமம் >>> கிறுதுமம் >>> கிருத்திமம் = கற்பனையாகச் செய்தது

கிருத்திமம், KIRUTHTHIMAM

பேய், DEMON

குறிறுமம்

குறை (=தசை, உடல்) + இறு (=அழி) + மா (=உயிர்) + அம் = குறிறுமம் >>> கிறுதுமம் >>> கிருத்திமம் = உயிர் அழிந்த உடலைக் கொண்டது = பேய்.

கிருத்தியம், KIRUTHTHIYAM

தொழில், PROFESSION

குரூதியம்

கூர் (=கருது, செய்) + ஊதியம் = குரூதியம் >>> கிருத்தியம் = ஊதியத்தைக் கருதிச் செய்வது = தொழில்.

கிருத்திரம், KIRUTHTHIRAM

கழுகு, EAGLE

குறுந்துரம், கிறுத்திறம்

(1) குறை (=தசை, அறு, கிழி) + உந்தி (=வயிறு, பறவை) + உரு (=சிவப்பு) + அம் (=உணவு) = குறுந்துரம் >>> கிருத்திரம் = வயிற்றைக் கிழித்துத் தசையை உண்ணும் சிவப்புநிறப் பறவை. (2) கிறு (=சுற்று, வட்டமிடு) + திறம் (=வெளி, ஆகாயம்) = கிறுத்திறம் >>> கிருத்திரம் = ஆகாயத்தில் வட்டமிடுவது.

கிருத்திரிமம், KIRUTHTHIRIMAM, கிருத்துருமம், KIRUTHTHURUMAM

சேட்டை, MISCHIEF

கிருத்தூறுமம்

கிருத்தம் (=செயல்) + ஊறு (=துன்பம்) + மம் = கிருத்தூறுமம் >>> கிருத்துருமம், கிருத்திரிமம்= துன்புறுத்தும் செயல் = சேட்டை.

கிருத்திரிமம், KIRUTHTHIRIMAM, கிருத்துருமம், KIRUTHTHURUMAM

பொய், வஞ்சனை, FRAUD

குறித்திரிபம்

குறி (=முன்னறிவி, சொல்) + திரிபு (=மாற்றம்) + அம் = குறித்திரிபம் >>> கிருத்திரிமம் >>> கிருத்துருமம் = முன்னறிவித்துச் சொன்னதற்கு மாறானது = பொய், வஞ்சனை.

கிருதக்கு, KIRUTHAKKU

அட்டகாசம், ROGUERY

குறுதாக்கு

குறு (=குத்து) + தாக்கு (=அடி) = குறுதாக்கு >>> கிருதக்கு = அடித்துக் குத்துதல் = கொடுஞ்செயல், அட்டகாசம்.

கிருதம், KIRUTHAM

நெய், GHEE

குறூற்றம்

குறை (=மெலி, உருக்கு) + ஊற்று + அம் (=ஒளி, உணவு, நீர்) = குறூற்றம் >>> கிருத்தம் >>> கிருதம் = உணவில் உருக்கி ஊற்றப்படும் ஒளிமிக்க நீர்ம உணவு = நெய்.

கிருதம், KIRUTHAM, கிருது, KIRUTHU, கிறுது, KIRHUTHU

கருவம், ARROGANCE

குரோதம்

கூர் (=மிகு, கருது) + ஓதம் (=பெருமை) = குரோதம் >>> கிருதம் = மிகவும் பெருமையாகக் கருதுதல் = இறுமாப்பு, கருவம்

கிருதாமீசை, KIRUTHAA MEECAI

கன்னமீசை, WHISKERS

குறுதைமீசை

குறு (=மேல்நோக்கி இழு) + தை (=பொருத்து) + மீசை = குறுதைமீசை >>> கிருதாமீசை = மேல்நோக்கி இழுத்துப் பொருத்திய மீசை.

கிருதி, KIRUTHI

பாட்டு, இசை, SONG, MUSIC

குரிதி

குரை (=ஒலி) + இதம் (=இனிமை) + இ = குரிதி >>> கிருதி = இனிமையான ஒலி = இசை, பாட்டு

கிருபணம், KIRUPANHAM

கஞ்சத்தனம், MISERLINESS

குறுபணம்

குறு (=சுருக்கு, கொடு, செலவழி) + பணம் = குறுபணம் >>> கிருபணம் = பணத்தைச் சுருக்கிக் கொடுத்தல் / செலவழித்தல்  = கஞ்சத்தனம்.

கிருபணன், KIRUPANHAN

கஞ்சன், MISER

கிருபணன்

கிருபணம் (=கஞ்சத்தனம்) + அன் = கிருபணன் = கஞ்சன்

கிருபை, KIRUPAI

கருணை, MERCY

குறுவை

குறை (=மெலி, உருகு, நெகிழ்) + உவ (=விரும்பு) + ஐ = குறுவை >>> கிருபை = நெகிழ்ந்து விரும்புதல் = கருணை.

கிருமி, KIRUMI

அழிக்கும் நுண்ணுயிரி, VIRUS, புழு, WORM

குறுவீ, குறுமெய்

(4) குறு (=நுணுகு, கொடு) + வீ (=உயிர், அழிவு) = குறுவீ >>> கிருமி = அழிவைத் தரும் நுண்ணுயிரி. (5)  குறு (=சிறிதாகு, இழு, செல்) + மெய் (=உடல், உயிர்) = குறுமெய் >>> கிருமி = உடலை இழுத்து இழுத்துச் செல்லும் சிறிய உயிரி = புழு

கிருச்~ணம், KIRUSHNHAM

கருமை, DARKNESS

குறூழீனம்

குறை + ஊழ் (=ஒளி) + ஈன் (=உண்டாகு) + அம் = குறூழீனம் >>> கிருசிணம்>>> கிருச்~ணம் = ஒளியின் குறைவினால் உண்டாவது = இருள், கருமை.

கிருசி~, KIRUSHI

வேளாண்மை, AGRICULTURE

குருழி

குரு (=கொட்டை, விதை) + உழு + இ = குருழி >>> கிருசி~ = உழுது விதைத்தல் = வேளாண்மை.

கிருசி~, KIRUSHI

பெருமுயற்சி, GREAT EFFORT

குருழி

கூர் (=மிகு) + உழை + இ = குருழி >>> கிருசி~ = மிகுதியான  உழைப்பு = பெருமுயற்சி.

கிரேச்`தன், KIRAESTHAN

பெரியோன், HONOURABLE MAN

குரேற்றன்

குரை (=பெருமை) + ஏற்றம் (=மிகுதி) + அன் = குரேற்றன் >>> கிரேத்தன் >>> கிரேச்`தன் = பெருமை மிக்கவன்

கிரௌஞ்சம், KIROUNCAM

அன்றில், INDIAN LOVE BIRD

கிரவுஞ்சம்

கிரவுஞ்சம் (=அன்றில்) >>> கிரௌஞ்சம்

கிரௌரியம், KIROURIYAM

கொடுமை, CRUELTY

குறூறியம்

குறு (=கொடு) + ஊறு (=துன்பம்) + இயம் (=தன்மை) = குறூறியம் >>> கிரோரியம் >>> கிரௌரியம் = துன்பம் தரும் தன்மை = கொடுமை.

கில்பிச~ம், KILPISHAM

பாவம், SIN

கில்பிழம்

கில் (=செய்) + பிழை (=குற்றம்) + அம் = கில்பிழம் >>> கில்பிச~ம் = குற்றச்செயல் = பாவம்.

கில்லம், KILLAM

கழுத்து, NECK

கயிலம்

கயில் (=கழுத்து) + அம் = கயிலம் >>> கைலம் >>> கில்லம்

கில்லாடி, KILLAADI

கெட்டிக்காரன், EXPERT

கில்லாடி

கில் (=வலுவாகு) + ஆடு + இ = கில்லாடி = ஆட்டத்தில் வல்லவன் = கெட்டிக்காரன்

கில்லாடி, KILLAADI

ஆட்டக்காரன், PLAYER

கில்லாடி

கில் (=செய்) + ஆடு + இ = கில்லாடி = ஆட்டக்காரன்.

கிலம், KILAM

சிதைவு, RUINS

குலம்

குலை (=சிதை) + அம் = குலம் >>> கிலம் = சிதைவு.

கிலம், KILAM

சிறிது, TRIFLE

கிளம்

கிள் (=சிறிதளவு எடு) + அம் = கிளம் >>> கிலம் = சிறிதளவு

கிலி, KILI

பயம், FEAR

குலி

குலை (=நடுங்கு) + இ = குலி >>> கிலி = நடுக்கம், அச்சம்

கிலி, KILI

தாறுமாறு, DISORDER

குலி

குலை (= தாறுமாறாகு) + இ = குலி >>> கிலி = தாறுமாறு

கிலிச்~டம், KILISHTAM

பொருள்குழப்பம், UNINTELLIGIBILITY

குலிற்றம்

குலை (=தடுமாறு) + இறை (=பொருள்) + அம் = குலிற்றம் >>> கிலிட்டம் >>> கிலிச்~டம் = பொருள் தடுமாற்றம்.

கிலீபம், KILEEPAM

அலி, HERMOPHRODITE

குலீவம்

குலை (=தடுமாறு) + ஈவு (=பிரிவு) + அம் = குலீவம் >>> கிலீபம் = தடுமாற்றம் உடைய பிரிவு = அலி.

கிலுப்தம், KILUPTHAM

உறுதி, CERTAINTY

குலிற்றம்

குலை (=மாறு) + இறு (=அழி, இல்லாகு) + அம் = குலிற்றம் >>> கிலுத்தம் >>> கிலுப்தம் = மாற்றமின்மை = உறுதி.

கிலேசம், KILAECAM

கவலை, SORROW

குலாயம்

குலை (=அழி) + ஆய் (=கொண்டாடு, மகிழ்) + அம் = குலாயம் >>> கிலேசம் = மகிழ்ச்சியை அழிப்பது = கவலை.

கிலேசி, KILAECI

வருந்து, TO PAIN

கிலேசி

கிலேசம் (=கவலை) + இ = கிலேசி = வருந்து, கவலைப்படு

கிலேதம், KILAETHAM

புண்கழுநீர், LOTION

குளேறம்

குளி (=கழுவு) + ஏறு (=புண்) + அம் (=மருந்து, நீர்) = குளேறம் >>> கிலேதம் = புண்ணைக் கழுவும் மருந்து நீர்.

கிறிசு, KIRHICU

கத்தி, DAGGER

கிரிசு

கிரிசு (=கத்தி) >>> கிறிசு

கிறுசன், KIRHUCAN

மஞ்சள், TURMERIC

குறூழன்

குறை (=அராவு, தேய்) + ஊழ் (=தசை, உடல், ஒளி, அழகு, முற்று) + அன் = குறூழன் >>> கிறுசன் = ஒளிரும் அழகுக்காக உடலில் தேய்க்கப்படும் முற்றிய பொருள் = மஞ்சள் கிழங்கு

கின்னம், KINNAM

துன்பம், DISTRESS, நோய், DISEASE

குன்றம்

குன்று (=வாடு, வருந்து) + அம் = குன்றம் >>> கின்னம் = வாட்டுவது / வருத்துவது = துன்பம், நோய்

கின்னரம், KINNARAM, கின்னரி, KINNARI

யாழ், LUTE

கிண்ணரம்

கிண் + அரி (=நார், ஒலி, கட்டு) + அம் (=நீளம்) = கிண்ணரம் >>> கின்னரம் = கிண்கிண் என்று ஒலிக்கின்ற நீண்ட நார்களால் கட்டப்பட்டது = யாழ், வீணை.

கின்னரம், KINNARAM

ஆந்தை, OWL

குன்றாரம்

குன்று (=கெடு, அழி) + ஆர் (=ஒலி) + அம் (=ஒளி, பொழுது, பறவை) = குன்றாரம் >>> குன்னாரம் >>> கின்னரம் = ஒளி அழிந்த பொழுதில் ஒலிக்கின்ற பறவை = ஆந்தை.

கிச்`தி, KISTHI

நிலவரி, LAND TAX

குழிறி

குழி (=நிலம்) + இறை (=வரி) + இ = குழிறி >>> கிசிதி >>> கிச்`தி = நிலவரி.

கீகசம், KEEKACAM

எலும்பை ஒட்டிய தசை, BONE FLESH

கீழ்கழம்

கீழ் (=அடி) + கழி (=தசை) + அம் = கீழ்கழம் >>> கீகசம் = அடியில் உள்ள தசை = எலும்பை ஒட்டிய தசை.

கீகடம், KEEKATAM

குறுக்கம், NARROWNESS

குங்கடம்

குங்கு (=சிறு) + அடு (=நெருங்கு) + அம் = குங்கடம் >>> கீகடம் = நெருங்கிச் சிறுத்தது

கீசகம், KEECAKAM

மூங்கில், BAMBOO

கூழகம்

குழை (=வளை, துளை) + அகம் (=மரம்) = கூழகம் >>> கீசகம் = வளையக்கூடிய துளையுடைய மரம் = மூங்கில்.

கீசகம், KEECAKAM

குரங்கு, MONKEY

கூழகம்

குழை (=வளை, கிளை) + அகம் (=மரம், உடல், உயிர்) = கூழகம் >>> கீசகம் = வளைந்த உடலைக் கொண்ட மரக்கிளைகளில் வாழும் உயிரி = குரங்கு. ஒ.நோ: கூர் (=வளை) + அங்கம் (=உடல்) + உ = குரங்கு = வளைந்த உடலைக் கொண்டது.

கீடம், KEETAM

புழு, WORM, வண்டு, BEETLE

கூடம்

குடை (=துளை, உட்புகு) + அம் = கூடம் >>> கீடம் = துளைத்து உட்புகுவது = புழு, வண்டு.

கீடமணி, KEETAMANI

மின்மினி, GLOW WORM

கீடமணி

கீடம் (=புழு) + மணி (=ஒளி) = கீடமணி = ஒளிரும் புழு.= மின்மினிப் பூச்சி

கீணம், KEENHAM

சிதைவு, கேடு, DETERIORATION

குன்றம்

குன்று (=கெடு, சிதை) + அம் = குன்றம் >>> கின்னம் >>> கீணம் = சிதைவு, கேடு.

கீணர், KEENHAR

கீழோர், MEAN

கீணர்

கீணம் (=கேடு) + அர் = கீணர் = கெட்டவர் = கீழோர்.

கீதம், KEETHAM, கீதி, KEETHI

பாட்டு, SONG

கூறம்

கூறு (=சொல், ஒலி) + அம் (=இனிமை, நீளம்) = கூறம் >>> கீதம் = இனிமையாக நீட்டி ஒலிக்கப்படுவது = பாட்டு

கீதம், KEETHAM

தேனீ, BEE

கூறம்

கூறு (=சொல், ஒலி) + அம் (=இனிமை, உணவு, நீர்) = கூறம் >>> கீதம் = இனிய நீருணவை ஒலித்தவாறே உண்பது = தேனீ

கீதம், KEETHAM

மூங்கில், BAMBOO

கூறம்

குறை (=ஓட்டை) + அம் (=நீளம்) = கூறம் >>> கீதம் = நீண்ட ஓட்டையைக் கொண்டது = மூங்கில்.

கீர், KEER

சொல், WORD

கூர்

கூர் (=பேச்சு, சொல்) >>> கீர்

கீர்த்தனம், கீர்த்தனை, கீர்த்தி, KEERTHTHANAM, KEERTHTHANAI, KEERTHTHI

புகழ், பாட்டு, PRAISE, SONG

குரூத்தணம்

குரை (=பெருமை, ஒலி, கூறு) + ஊது (=பெரிதாக்கு, இசை) + அணம் = குரூத்தணம் = கிருத்தனம் >>> கீர்த்தனம் = பெருமைகளைப் பெரிதாக்கி இசைத்துக் கூறல் = புகழ், பாட்டு.

கீரம், KEERAM

கிளி, PARROT

கீரம்

கீர் (=சொல், பேச்சு) + அம் (=அழகு, பறவை) = கீரம் = பேசுகின்ற அழகிய பறவை = கிளி.

கீரம், KEERAM

நீர், WATER, பால், MILK

கூறம்

குறை (=முக) + அம் (=இனிமை, உணவு) = கூறம் >>> கீரம் = முகக்கப்படும் இனிய உணவு = நீர், பால்.

கீரை, KEERAI

இலை, LEAVE

கூறை

(3) குறு (=பறி, சிறிய) + ஐ (=அழகு, மென்மை, பசுமை) = கூறை >>> கீரை = பறிக்கப்படும் பசுமையான சிறிய மென்பொருள்.

கீல், KEEL

பொருத்து, JOINT, கீல், HINGE

கயில்

கயில் (=பொருத்து, பொருத்துவது) >>> கைல் >>> கீல் = பொருத்து, பொருத்த உதவும் பொருள்.

கீல், KEEL, கீலம், KEELAM

தார், TAR

குழெல்

குழை (=இளகு, சேறு, ஒப்பு) + எல் (=வெயில், இரவு, கருமை) = குழெல் >>> கியெல் >>> கியில் >>> கீல் = வெயிலில் கருஞ்சேறு போல இளகுவது.

கீலகம், KEELAKAM

ஆணி, NAIL

கீலெஃகம்

கீல் (=பொருத்து) + எஃகு (=கூர்மை, இரும்பு) + அம் = கீலெஃகம் >>> கீலகம் = பொருத்தப்படும் கூரிய இரும்பு = ஆணி.

கீலகம், KEELAKAM

பொருத்து, JOINT

கீலகம்

கீல் (=பொருத்து) + அகம் = கீலகம் = பொருத்துடையது

கீலகம், KEELAKAM, கீலம், KEELAM

தந்திரம், SHREWDNESS

கீளகம்

கிளை (=கவடு) + அகம் (=எண்ணம்) = கீளகம் >>> கீலகம் = கவடுபட்ட எண்ணம் = வஞ்சனை, தந்திரம்

கீலம், KEELAM

ஆணி, NAIL

குயிலம்

குயில் (=இணை, துளை, பதி) + அம் (=நீளம்) >>> குயிலம் கியிலம் >>> கீலம் = துளைத்துப் பதிந்து இணைக்கின்ற நீண்ட பொருள் = ஆணி. 

கீலம், KEELAM

தீச்சுடர், FLAME

கீளம்

கிளு (=எரி, ஒளிர்) + அம் = கீளம் >>> கீலம் = எரியொளி

கீலம், KEELAM

பிசின், RESIN

கயிலம்

கயில் (=பொருத்து, ஒட்டு) + அம் (=ஒளி) = கயிலம் >>> கைலம் >>> கீலம் = ஒளிர்கின்ற ஒட்டும் பொருள்.  

கீலம், KEELAM

துண்டு, PIECE

கீள்

கீள் (=கூறு, துண்டு) + அம் = கீளம் >>> கீலம்

கீலம், KEELAM

வெட்டு, INCISION

கீளம்

கீள் (=கிழி, வெட்டு) + அம் = கீளம் >>> கீலம்

கீலாலம், KEELAALAM

நீர், WATER

கீளலம்

கிளு (=எரி) + அலை (=கெடு, அழி) + அம் = கீளலம் >>> கீலாலம் = எரியை அழிப்பது = நீர்.

கீலாலம், KEELAALAM

இரத்தம், BLOOD

கீளலம்

கிளு (=எரி, தீ) + அலை (=கொலை, ஓடு) + அம் (=நிறம், நீர்) = கீளலம் >>> கீலாலம் = கொல்லும்போது ஓடுகின்ற தீநிற நீர் = இரத்தம். ஒ.நோ: இரி (=ஓடு) + அத்து (=கொலை, சிவப்பு) + அம் (=நீர்) = இரத்தம் = கொல்லும்போது ஓடுகின்ற சிவப்புநிற நீர்.

கீலாலம், KEELAALAM

காடி, VINEGAR

குலாலம்

குலை (=நடுங்கு) + ஆல் (=நீர்) + அம் (=உணவு) = குலாலம் >>> கிலாலம் >>> கீலாலம் = நடுங்கச் செய்கின்ற நீருணவு = காடி.

கீலன், KEELAN

தந்திரக்காரன், ARTFUL MAN

கீலன்

கீலம் (=தந்திரம்) + அன் = கீலன் = தந்திரக்காரன்

கீலி, KEELI

தந்திரக்காரி, ARTFUL WOMAN

கீலி

கீலம் (=தந்திரம்) + இ = கீலி = தந்திரக்காரி

கீனம், KEENAM

இழிவு, MEANNESS, குறைவு, WANT

குன்றம்

குன்று (=குறை, இழி) + அம் = குன்றம் >>> கின்னம் >>> கீனம் = குறைவு, இழிவு.

கீச்`தி, KEESTHI, கீத்தி, KEETHTHI

வீணை, VEENA, யாழ், LUTE

கழிற்றி

காழ் (=மரத்தண்டு, நரம்பு, வலிமை) + இறு (=வடி) + இ = கழிற்றி >>> கயித்தி >>> கைத்தி >>> கீத்தி >>> கீச்`தி = வலுவான நரம்புகளால் வடித்த மரத்தண்டு = வீணை, யாழ்

கு, KU

நிலம், EARTH

கீழ்

கீழ் (=அடிப்பகுதி, நிலம்) >>> கீ >>> கூ >>> கு. ஒ.நோ: காழ் >>> கா, கூழ் >>> கூ, வீழ் >>> வீ.

குக்கர், KUKKAR

இழிந்தோர், MEAN

குங்கர்

குங்கு (=குன்று, இழி) + அர் = குங்கர் >>> குக்கர் = இழிந்தோர்

குக்கல், KUKKAL, குக்கன், KUKKAN

நாய், DOG

குங்கல், குங்கன்

குங்கு (=குன்று, இழி) + அல் / அன் = குங்கல் / குங்கன் >>> குக்கல் / குக்கன் = இழிந்தது = நாய்.

குக்கி, KUKKI

வயிறு, STOMACH

கூழ்க்கீழ்

கூழ் (=உணவு) + கீழ் (=சிதை, அரைபடு, பள்ளம்) = கூழ்க்கீழ் >>> குக்கி = உணவு அரைபடும் பள்ளம் = வயிறு.

குக்குடம், KUKKUTAM

கோழி, HEN

கொக்கூறம்

கொக் + கூறு (=ஒலி) + அம் (=பறவை) = கொக்கூறம் >>> குக்குடம் = கொக் கொக் என்று ஒலிக்கும் பறவை = கோழி.

குகரம், KUKARAM

மலைக்குகை, HILL CAVE

குங்கரம்

குங்கு (=குறை, குடை) + அரி (=மலை) + அம் = குங்கரம் >>> குகரம் = மலைக்குடைவு = மலைக்குகை.

குகரம், KUKARAM

சுரங்கம், MINES

குங்கறம்

குங்கு (=குறை, குடை) + அறை (=நிலம்) + அம் (=நீளம்) = குங்கறம் >>> குகரம் = நிலத்தில் நீளமாகக் குடையப்பட்டது.

குகு, KUKU

அமாவாசை, NO MOON DAY

குங்கூழ்

குங்கு (=குன்று, அழி) + ஊழ் (=ஒளி, முற்று, பொழுது) = குங்கூழ் >>> குகு = ஒளியானது முற்றும் அழிந்திருக்கும் பொழுது = அமாவாசை.

குகுலா, KUKULAA

தேனீ, BEE

கொங்குலா

கொங்கு (=பூந்தாது, தேன்) + உலை (=அலை) + ஆ = கொங்குலா >>> குகுலா = பூந்தாதுக்களில் உள்ள தேனுக்காக அலைவது = தேனீ.

குகை, KUKAI

குடைவு, CAVE, சுரங்கம், MINES, சிமிழ், CRUCIBLE

குங்கை

(2) குங்கு (=குறை, குடை) + ஐ = குங்கை >>> குகை = குடையப்பட்டது / குடைவுடையது = குடைவு, சுரங்கம், சிமிழ்.

குங்கிலியம், KUNKILIYAM, குங்குலு, KUNKULU

வாசப் புகைதரும் பிசினுடைய மரம், SHOREA

குய்க்கீலீயம்

குய் (=நறுமணப் புகை) + கீலம் (=பிசின்) + ஈ (=தா) + அம் = குய்க்கீலீயம் >>> குங்கிலியம் = நறுமணப் புகைதரும் பிசினைத் தருவது.

குங்குமம், KUNKUMAM

சிவப்புப் பொடி, RED SAFFRON

கொங்கிமம்

கொங்கு (=தாது, பொடி) + இமை (=கண்ணிமை, ஒளிர்) + அம் (=அழகு, சிவப்பு) = கொங்கிமம் >>> குங்குமம் = இமைகளின் மேலாக சிவப்பாக ஒளிரும் பொடி.

குச்சம், KUCCAM, குஞ்சம், KUNJAM, குச்சு, KUCCU

கொத்து, BUNCH

கீழம்

கிழி (=முடிச்சு, கொத்து) + அம் = கீழம் >>> கூசம் >>> குச்சம் >>> குஞ்சம்.

குச்சம், KUCCAM, குசம், KUCAM, குச்சு, KUCCU, குசை, KUCAI

புல், GRASS

கூழம்

குழை (=வளை, இலை) + அம் (=நீளம்) = கூழம் >>> குசம் >>> குச்சம் = நீண்டு வளைந்திருக்கும் இலை = புல்.

குச்சம், KUCCAM

இழிசொல், SLANDER

கீழம்

கீழ் (=இழிவு) + அம் (=சொல்) = கீழம் >>> கூசம் >>> குச்சம் = இழிசொல்

குச்சரி, KUCCARI

உடை, DRESS

கொய்யாரி

கொய் (=அறு) + ஆர் (=அணி, உடுத்து) + இ = கொய்யாரி >>> குச்சாரி >>> குச்சரி = கொய்து உடுத்துவது.

குச்சி, KUCCI

உச்சி, SUMMIT

குஞ்சி

குஞ்சி (=குடுமி, உச்சி) >>> குச்சி

குச்சிகை, KUCCIKAI

வீணை, VEENA, யாழ், LUTE

கொச்சிகை

கொச்சம் (=நார், நரம்பு) + இகு (=வாசி, ஒலி) + ஐ = கொச்சிகை >>> குச்சிகை = நரம்புகளை வாசித்து ஒலிக்கப்படுவது.

குச்சிதம், KUCCITHAM

இழிவு, MEAN

கிழிதம்

கீழ் (=இழிவு) + இதம் = கிழிதம் >>> குசிதம் >>> குச்சிதம்

குச்சு, KUCCU

காதணி, EAR ORNAMENT

குழை

குழை (=காதணி) + உ = குழு >>> குசு >>> குச்சு

குச்சை, KUCCAI

கொசுவம், CLOTH PLAIT OF WOMEN

கிழை

கிழி (=ஆடை, பிரிவு, முடிச்சு, கொத்து) + ஐ = கிழை >>> குசை >>> குச்சை = ஆடைப் பிரிவுகளின் கொத்தான முடிச்சு.

குசம், KUCAM

நீர், WATER, மழை, RAIN

குழம்

குழை (=தளிர், தோன்றச்செய்) + அம் = குழம் >>> குசம் = தளிர்களைத் தோன்றச் செய்வது = மழை, நீர்.

குசம், KUCAM

மரம், TREE

குழம்

குழை (=தளிர், உருவாக்கு) + அம் (=மிகுதி) = குழம் >>> குசம் = மிகுதியான தளிர்களை உருவாக்குவது = மரம்.

குசம், KUCAM

முலை, BREAST

குழம்

குழை (=நெகிழ், தளிர், மழலை) + அம் (=உண், பால்) = குழம் >>> குசம் = மழலைக்கு நெகிழ்ந்து பாலூட்டுவது = முலை.

குசர், KUCAR, கொசர், KOCAR

கொசுறு, EXTRA GAIN

குழார்

கூழ் (=பொருள்) + ஆர் (=பெறு, மிகு) = குழார் >>> குசர் >>> கொசர் = மிகுதியாகப் பெறப்படும் பொருள்.

குசலம், KUCALAM

தந்திரம், CUNNINGNESS

கிழளம்

கீழ் (=பிளவு, கவடு) + அள (=கருது, சிந்தி) + அம் = கிழளம் >>> குசலம் = கவடுபட்ட சிந்தனை = தந்திரம்.

குசலம், KUCALAM

மாயாசாலம், MAGIC ART

குழளம்

கூழை (=இமை, கண், அறியாமை, மயக்கம்) + அளை (=சூடு, கட்டு) + அம் = குழளம் >>> குசலம் = கண்களை மயக்கிக் கட்டுதல் = மாயாசாலம்.

குசலம், KUCALAM

அன்புமொழி, SWEET WORDS

குழளம்

குழை (=நெருங்கி உறவாடு) + அளி (=அன்பு, பேசு) + அம் = குழளம் >>> குசலம் = நெருங்கி உறவாடி அன்பாகப் பேசுவது

குசலம், KUCALAM

பெருவளம், PROSPERITY

கொழளம்

கோழ் (=செழிப்பு, வளம்) + அள் (=செறி, மிகு) + அம் = கொழளம் >>> குசலம் = மிக்க வளம்.

குசலம், KUCALAM

நற்குணம், GOODNESS

கிழலம்

கீழ் (=கயமை) + அல் (=இன்மை) + அம் = கிழலம் >>> குசலம் = கயமை இல்லாமை = நற்குணம், பெருமை.

குசலம், KUCALAM

மகிழ்ச்சி, நலம், HAPPINESS

குழலம்

குழை (=வருந்து, வாடு) + அல் (=இன்மை) + அம் = குழலம் >>> குசலம் = வருத்தம் / வாட்டம் இன்மை = மகிழ்ச்சி, நலம்

குசலம், KUCALAM

கெட்டி, STRONGNESS

குழலம்

குழை (=நெகிழ்) + அல் (=இன்மை) + அம் = குழலம் >>> குசலம் = நெகிழ்வின்மை = உறுதி, கெட்டி.

குசவம், KUCAVAM

கொசுவம், CLOTH PLAIT OF WOMEN

கிழவம்

கிழி (=ஆடை, பிரிவு, முடிச்சு) + அமை + அம் = கிழவம் >>> குசவம் = ஆடைப் பிரிவுகளில் அமைத்த முடிச்சு.

குசாண்டு, KUCAANTU

இழிகுணம், MEANNESS

கிழாற்று

கீழ் (=இழிவு) + ஆறு (=இயல்பு, குணம்) + உ = கிழாற்று >>> குசாட்டு >>> குசாண்டு = இழிகுணம்.

குசாமத்தி, KUCAAMATHTHI

முகத்துதி, FLATTERY

குழேய்மதி

கூழை (=கண்) + ஏய் (=எதிர்ப்படு, சொல்லு) + மதி (=பெருமை) = குழேய்மதி >>> குசேமத்தி >>> குசாமத்தி = கண் எதிரே பெருமைகளைச் சொல்லுதல்.

குசால், KUCAAL

மகிழ்ச்சி, JOY

குழல்

குழை (=வருந்து, வாடு) + அல் (=இன்மை) = குழல் >>> குசல் >>> குசால் = வருத்தம் / வாட்டம் இன்மை = மகிழ்ச்சி.

குசினி, KUCINI

குட்டையானது, DWARF

குழினி

கூழை (=குட்டை) + இனம் (=வகை) + இ = குழினி >>> குசினி = குட்டையான வகை

குசினி, KUCINI

சமையல், COOKING

குழீனி

கூழ் (=உணவு) + ஈன் (=உருவாக்கு) + இ = குழீனி >>> குசினி = உணவை உருவாக்குதல் = சமையல்.

குசினி, KUCINI

குதிரை, HORSE

கொயிணி

கொய் (=அறு) + இணை (=கூந்தல்) + இ = கொயிணி >>> குசினி = அறுக்கப்படும் கூந்தலைக் கொண்டது = குதிரை.

குசினி, KUCINI

இளமை, TENDERNESS

குழினி

குழை (=தளிர்) + இனம் (=ஒப்பு, தன்மை) + இ = குழினி >>> குசினி = தளிர் ஒத்த தன்மை = இளமை.

குசு, KUCU

குதவாயு, FART

குயுய்

குய்யம் (=குதம்) + உய் (=நீங்கு, காற்று) = குயுய் >>> குசு = குதத்தில் இருந்து நீங்கும் காற்று.

குசுமம், KUCUMAM

பூ, FLOWER

குயுவம்

குய் (=நறுமணம்) + உவ (=விரும்பு) + அம் (=அழகு, நிறம்) = குயுவம் >>> குசுமம் = நறுமணம் மற்றும் அழகிய நிறத்திற்காக விரும்பப்படுவது = மலர்.

குசூர், KUCOOR

கவனமின்மை, CARELESSNESS

கிழோர்

கீழ் (=அழி, இல்லாகு) + ஓர் (=கவனி) = கிழோர் >>> குசோர் >>> குசூர் = கவனம் இல்லாமை.

குசேசயம், KUCAECAYAM

தாமரை, LOTUS

குழேழாயம்

குழை (=சேறு, மலர்) + எழு (=தோன்று) + ஆய் (=அழகு) + அம் = குழேழாயம் >>> குசேசாயம் >>> குசேசயம் = சேற்றில் தோன்றும் அழகிய மலர் = தாமரை.

குசை, KUCAI

கடிவாளம், BRIDLE

கீழ்

கீழ் (=கடிவாளம்) + ஐ = கிழை >>> குசை

குசை, KUCAI, குசி, KUCI

மகிழ்ச்சி, JOY

கொஞ்சை, கொஞ்சி

கொஞ்சு (=மகிழ்) + ஐ / இ = கொஞ்சை / கொஞ்சி >>> குச்சை / குச்சி >>> குசை / குசி = மகிழ்ச்சி

குசை, KUCAI

கூந்தல், WOMEN’S HAIR, MANE

கூழை

கூழை (=கூந்தல்) >>> குசை = பெண்களின் தலைமயிர், குதிரையின் பிடரிமயிர்.

குசோத்தியம், KUCOATHTHIYAM

பரிகாசம், MOCKERY

கொஞ்சொற்றியம்

கொஞ்சு (=மகிழ்) + ஒற்று (=தாக்கு) + இயம் (=சொல்) = கொஞ்சொற்றியம் >>> குசோத்தியம் = சொற்களால் தாக்கி மகிழ்தல் = பரிகாசம், கிண்டல்.

குசோத்தியம், KUCOATHTHIYAM

தந்திரம்,

கிழோத்தியம்

கீழ் (=பிளவு, கவடு) + ஓதி (=அறிவு) + இயம் = கிழோத்தியம் >>> குசோத்தியம் = கவடுபட்ட அறிவு = தந்திரம்.

குசோத்தியம், KUCOATHTHIYAM

பொருத்தமற்ற கேள்வி, UNFIT QUESTION

கிழொற்றியம்

கீழ் (=அழி, இல்லாகு) + ஒற்று (=கேள்) + இயை (=பொருந்து) + அம் = கிழொற்றியம் >>> குசோத்தியம் = பொருத்தம் இல்லாத கேள்வி.

கிழங்கு, KIZANKU

தோண்டிய உணவு, TUBER

கிழக்கு

கீழ் (=தோண்டியெடு) + அகம் (=பூமி, உணவு) + உ = கிழக்கு >>> கிழங்கு = பூமியைத் தோண்டி எடுத்த உணவு.

இரத்தம், IRATHTHAM

குருதி, BLOOD

இரத்தம்

(4) இரி (=ஓடு) + அத்து (=கொலை, சிவப்பு) + அம் (=நீர்) = இரத்தம் = கொல்லும்போது ஓடுகின்ற சிவப்புநிற நீர்

ஆம்பல், AAMPAL

ஆம்பல் மலர், AAMPAL

அவ்வல்

ஆவி (=நீர்நிலை, திற, மலர்) + அல் (=இரவு) = அவ்வல் >>> ஆம்பல் = இரவில் மலரும் நீர்ப் பூ.

கெலசம், KELACAM, கிலசை, KILACAI

தொழில், PROFESSION

கிலாயம்

கில் (=செய்) + ஆயம் (=வருமானம்) = கிலாயம் >>> கெலசம் = வருமானத்திற்காகச் செய்யப்படுவது = தொழில்

குரூரம், KUROORAM

கொடுமை, CRUELTY

குறூறம்

குறு (=கொடு) + ஊறு (=துன்பம்) + அம் = குறூறம் >>> குரூரம் = துன்பம் தருதல் = கொடுமை.

குரோதம், KUROATHAM

கடுஞ்சினம், WRATH

குரோதம்

குரு (=சிவ, சின) + ஓதி (=கண்) + அம் = குரோதம் = கண்கள் சிவக்குமாறு சினத்தல் = கடுங்கோபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.