திங்கள், 25 அக்டோபர், 2021

89. (குத்தகை > குரல்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

குத்தகை, KUTHTHAKAI

குறுகியகால இட ஒப்பந்தம், SHORT TERM LAND CONTRACT

குற்றகை

குறு (=வாங்கு, சிறிதாகு) + அகம் (=வயல், இடம், காலம்) + ஐ = குற்றகை >>> குத்தகை = வயலை / இடத்தைச் சிறிது காலத்திற்கு வாங்குதல்.

குத்தம், KUTHTHAM

எருது, BULL

கிற்றம், குத்தம்

(1) கீறு (=உழு) + அம் (=பொருத்து, பூட்டு) = கிற்றம் >>> குத்தம் = உழுவதற்குப் பூட்டப்படுவது = எருது. (2) குத்து (=கொம்பால் முட்டு) + அம் = குத்தம் = கொம்பினால் முட்டுவது = காளை.

குத்தன், KUTHTHAN

மன்னன், KING, இறைவன், GOD

குத்தன்

குத்தி (=மண், பூமி) + அன் = குத்தன் = பூமிக்குரியவன் = மன்னன், இறைவன்.

குத்தி, KUTHTHI, குப்தி, KUPTHI

திரிகரண அடக்கம், CONTROL ON THOUGHT, SPEECH AND ACTION

குற்றி

குறை (=விருப்பம், சொல், செயல், ஒடுக்கு, அடக்கு) + இ = குற்றி >>> குத்தி >>> குப்தி = விருப்பம், சொல், செயல் ஆகியவற்றை அடக்குதல்.

குத்தி, KUTHTHI

மண், SOIL

குத்தி

குத்து (=தோண்டு) + இ = குத்தி = தோண்டப்படுவது

குத்தி, KUTHTHI

பகை, ENMITY

குத்தி

குத்து (=எதிர்) + இ = குத்தி >>> குச்~தி = எதிர்ப்பு, பகை

குத்தி, KUTHTHI

சண்டை, FIGHT

குத்தி

குத்து (=தாக்கு) + இ = குத்தி >>> குச்~தி = தாக்குதல்

குத்திரம், KUTHTHIRAM

இழிசொல், SLANDER

கீழ்த்திறம்

கீழ் (=தாழ்வு, இழிவு) + திறம் (=செய்தி, சொல்) = கீழ்த்திறம் >>> குத்திரம் = இழிசொல்.

குத்திரம், KUTHTHIRAM

வஞ்சனை, FRAUD

கீழ்த்திறம்

கீழ் (=பிளவு, கவடு) + திறம் (=முறை) = கீழ்த்திறம் >>> குத்திரம் = கவடுபட்ட முறை = வஞ்சனை.

குத்திரம், KUTHTHIRAM

இழிநிலை, LOWNESS

கீழ்த்திறம்

கீழ் (=தாழ்வு, இழிவு) + திறம் (=தன்மை) = கீழ்த்திறம் >>> குத்திரம் = இழிந்த தன்மை.

குத்திரம், KUTHTHIRAM

குரூரம், CRUELTY

கீழ்த்திறம்

கீழ் (=அழி, கொல்) + திறம் (=தன்மை) = கீழ்த்திறம்  >>> குத்திரம் = அழிக்கும் தன்மை = குரூரம்.

குத்திரம், KUTHTHIRAM

மலை, HILL

குத்திரம்

(1) குத்தி (=பூமி) + இருமை (=பெருமை, உயர்வு) + அம் = குத்திரம் = பெருத்து உயர்ந்திருக்கும் பூமி = மலை. (2) குன்று (=மேடு) + இருமை (=பெருமை, உயர்வு) + அம் = குன்றிரம் >>> குற்றிரம் >>> குத்திரம் = உயர்ந்து பெருத்திருக்கும் மேடு = மலை.

குத்திரம், KUTHTHIRAM

கயிறு, COIR, சணல், HEMP

குற்றீரம், குந்தீரம்

(1) குறை (=சுருக்கு, கட்டு) + ஈர் (=இழு) + அம் (=நீளம்) = குற்றீரம் >>> குத்திரம் = இழுத்துக் கட்டப்படும் நீண்ட பொருள் = கயிறு. (2) குந்து (=நார்) + ஈர் (=உரி) + அம் = குந்தீரம் >>> குத்திரம் = உரிக்கப்பட்ட நார் = சணல்.

குத்தினி, KUTHTHINI, குத்துனி, KUTHTHUNI

சேலை வகை, KIND OF SAREE

குற்றினி

கூறை (=சேலை) + இனம் (=வகை) + இ = குற்றினி >>> குத்தினி = சேலை வகை

குத்பா, KUTHPAA

மதப் பிரசங்கம், SERMON

குறுமா

கூறு + மா (=கடவுள், பெருமை, வலிமை) = குறுமா >>> குதுபா >>> குத்பா = கடவுளின் வலிமையையும் பெருமையையும் பெரிதாகக் கூறுதல் = மதப் பிரசங்கம்

குதகீலம், KUTHAKEELAM

மூலநோய், PILES

குதகீளம்

குதம் (=ஆசனவாய்) + கீள் (=பிள, வெடி) + அம் = குதகீளம் >>> குதகீலம் = ஆசனவாய் வெடிப்பு.

குதபம், KUTHAPAM

பகல்நேரப் பிரிவு, DAY TIME DIVISION

குறமம்

கூறு (=பிரிவு) + அமை (=காலம்) + அம் (=ஒளி, பகல்) = குறமம் >>> குதபம் = பகல் காலத்தின் பிரிவு.

குதபம், KUTHAPAM

தருப்பை, DHARBA GRASS

குந்தமம், கிற்றமம், குற்றமம்

(1) குந்து (=அமர்) + அமை (=புல்) + அம் = குந்தமம் >>> குத்தபம் >>> குதபம் = அமரும் புல். (2) கீற்று (=இலை, புல்) + அமை (=தங்கு, அமர்) + அம் = கிற்றமம் >>> குத்தபம் >>> குதபம் = அமரும் புல். (3) குறை (=புல்) + அமை (=அமர்) + அம் = குற்றமம் >>> குத்தபம் >>> குதபம் = அமரும் புல்.

குதம், KUTHAM

யாகம், OBLATION

கொந்தம்

கொந்து (=எரி) + அம் (=கடவுள், அழைப்பு, உணவு, ஊட்டு) = கொந்தம் >>> குத்தம் >>> குதம் = கடவுளை அழைத்து எரியூட்டுதல் = யாகம்.

குதம், KUTHAM

தருப்பை, DHARBA GRASS

கிற்றம், குறம்

(1) கீற்று (=இலை, புல்) + அம் (=அமை, அமர்) = கிற்றம் >>> குத்தம் >>> குதம் = அமரும் புல். (2) குறை (=புல்) + அம் (=அமை, அமர்) = குறம் >>> குதம் = அமரும் புல்.

குதம், KUTHAM

ஆசனவாய், ANUS

குறம்

குறை (=ஓட்டை, கழி, தசை, உடல், சுருங்கு) + அம் = குறம் >>> குதம் = உடல் கழிவுக்கான சுருங்கக் கூடிய ஓட்டை = ஆசனவாய்.

குதம், KUTHAM

தும்மல், SNEEZE

குறம்

குறு (=நீக்கு, வெளியேற்று, விரை) + அம் (=ஒலி, நீர்) = குறம் >>> குதம் = ஒலியுடன் விரைந்து நீரை வெளியேற்றுதல்.

குதம், KUTHAM

வெங்காயம், ONION

கொந்தம்

கொந்து (=கண், எரி, கொத்து) + அம் (=நீர், வரவழை, உணவு, காய்) = கொந்தம் >>> குத்தம் >>> குதம் = எரிச்சலால் கண்களில் நீரை வரவழைக்கும் கொத்துக்காய் = வெங்காயம்.

குதம், KUTHAM

மிகுதி, MULTITUDE

கொத்தம்

கொத்து (=திரள், மிகுதி) + அம் = கொத்தம் >>> குதம்

குதம், KUTHAM, குதாம், KUTHAAM

பண்டகசாலை, GODOWN

கொத்தம்

கொத்து (=தானியம், திரள், மிகுதி) + அம் (=இடம், உணவு) = கொத்தம் >>> குதம் = உணவு தானியம் மிக்க இடம்

குதர்க்கம், KUTHARKKAM

விதண்டாவாதம், SOPHISTRY

குறருக்கம்

கூறு (=பேசு) + அருக்கு (=அழி) + அம் = குறருக்கம் >>> குதர்க்கம் = பீசியதை அழித்துப் பேசுதல் = தான் கூறியதையோ பிறர் கூறியதையோ இல்லை என மறுத்துப் பேசுதல் = விதண்டாவாதம்.

குதர்க்கம், KUTHARKKAM

விலை குறைதல், LOWERING OF PRICE

குறருக்கம்

கூறு (=விலை) + அருகு (=குறை) + அம் = குறருக்கம் >>> குதர்க்கம் = விலை குறைதல்.

குதனம், KUTHANAM, குதனை, KUTHANAI

கவனம், CAREFULNESS

குற்றணம்

குறி (=தியானி, கவனி) + அணம் = குற்றணம் >>> குத்தனம் >>> குதனம் = கவனம்

குதனம், KUTHANAM, குதனை, KUTHANAI

தூய்மை, PURITY

கொதணம்

கோது (=கழிவு, நீக்கு) + அணம் = கொதணம் >>> குதனம் = கழிவுகளை நீக்குதல் = தூய்மையாக்கல், தூய்மை.

குதனம், KUTHANAM, குதனை, KUTHANAI

செயல் வலிமை, DEXTERITY

கிற்றணம்

கிறு (=செய், வலுவாகு) + அணம் = கிற்றணம் >>> குத்தனம் >>> குதனம் = செயல் வலிமை

குதுகலம், KUTHUKALAM, குதூகலம், KUTHOOKALAM

பெருமகிழ்ச்சி, GREAT JOY

குதிகளம்

குதி (=மிகுதி) + களி (=மகிழ்ச்சி) + அம் = குதிகளம் >>> குதுகலம் >>> குதூகலம் = மிக்க மகிழ்ச்சி.

குதுகலி, KUTHUKALI, குதூகலி, KUTHOOKALI

பெரிதாக மகிழ், BE OVER JOYFUL

குதிகளி

குதி (=மிகுதி) + களி (=மகிழ்) = குதிகளி >>> குதுகலி >>> குதூகலி = மிகுதியாக மகிழ்.

குதை, KUTHAI

அம்பின் அடிப்பாகம், BOTTOM NOTCH OF AN ARROW

குதெய்

குதி (=காலின் அடி) + எய் (=அம்பு) = குதெய் >>> குதை = அம்பினது காலின் அடிப்பகுதி.

குதை, KUTHAI

அம்பு, ARROW

குத்தெய்

குத்து + எய் (=செலுத்து) = குத்தெய் >>> குத்தை >>> குதை = செலுத்திக் குத்தப்படுவதும் = அம்பு.

குதை, KUTHAI

பூட்டும் வளையம், CLASP OF ORNAMENT

கிறேய்

கிறு (=சுற்று, வட்டமடி) + ஏய் (=பொருத்து) = கிறேய் >>> குதேய் >>> குதை = பொருத்தப்படும் வட்டப்பொருள்

குதை, KUTHAI

செயல், ACTION

கிறை

கிறு (=செய்) + ஐ = கிறை >>> குதை = செயல், முயற்சி

குதை, KUTHAI

பசி, HUNGER

குறை

குறை (=தசை, உடல், உண்ணு, வேட்கை) >>> குதை = உடலுக்கான உணவு வேட்கை = பசி.

குந்தக்கம், KUNTHAKKAM, குந்தகம், KUNTHAKAM

கேடு, DANGER

குன்றாக்கம்

குன்று (=அழி) + ஆக்கம் (=நன்மை) = குன்றாக்கம் >>> குந்தக்கம் >>> குந்தகம் = நன்மையின் அழிவு = கேடு.

குந்தகம், KUNTHAKAM

தடை, OBSTACLE

குத்தகம்

குத்து (=தடு) + அகம் = குத்தகம் >>> குந்தகம் = தடை

குந்தகம், KUNTHAKAM

விலை மலிவு, LOWERING OF PRICE

குற்றேங்கம்

கூறு (=விலை) + ஏங்கு (=இளை, மெலி0 + அம் = குற்றேங்கம் >>> குத்தேக்கம் >>> குந்தகம் = விலை மெலிவு.

குந்தம், KUNTHAM

குதிரை, HORSE

குத்தம்

குதி (=பாய், மிகுதி) + அம் (=கட்டளை, நீளம், தூரம்) = குத்தம் >>> குந்தம் = கட்டளையிட்டதும் வெகுதூரம் பாய்ந்தோடுவது.

குந்தம், KUNTHAM

நஞ்சு, POISON

குன்றம்

குன்று (=அழி) + அம் (=உணவு) = குன்றம் >>> குந்தம் = அழிவைத் தரும் உணவு = நஞ்சு.

குந்தம், KUNTHAM

வைக்கோல் போர், HEY STACK

குன்றம்

குன்று (=குவியல், வாடு) + அம் (=நீளம், உணவு, ஒளி) = குன்றம் >>>> குந்தம் = ஒளிமிக்க வாடிய நீண்ட உணவின் குவியல் = வைக்கோல் போர்.

குந்தம், KUNTHAM

கேடு, DISTRESS

குன்றம்

குன்று (=அழி, கெடு) + அம் = குன்றம் >>> குந்தம் = கேடு

குந்தம், KUNTHAM

குத்துக்கோல், PIKE, கைவேல், SPEAR

குத்தம்

குத்து (=கைப்பிடி) + அம் (=நீளம்) = குத்தம் >>> குந்தம் = கைப்பிடித்துக் குத்துகின்ற நீளமான பொருள் = குத்துக்கோல், கைவேல்

குந்தம், KUNTHAM

கண்ணோய், EYE DISEASE

குந்தேம்

குந்து (=கண்) + ஏம் (=துன்பம், நோய்) = குந்தேம் >>> குந்தம் = கண் நோய்.

குந்தம், KUNTHAM

தூய்மை, PURITY

கொத்தம்

கோது (=கழிவு, நீக்கு) + அம் = கொத்தம் >>> குந்தம் = கழிவுகளை நீக்குதல் = தூய்மையாக்கல், தூய்மை.

குந்தளம், KUNTHALHAM

பெண்களின் தலைமயிர், WOMEN’S HAIR

குற்றலம், கூந்தல்

(1) குறை (=மயிர், வெட்டு) + அல் (=இன்மை) + அம் = குற்றலம் >>> குத்தளம் >>> குந்தளம் = வெட்டப்படாத மயிர் = பெண்களின் தலைமயிர். (2) கூந்தல் (=பெண்களின் தலைமயிர்) + அம் = குந்தலம் >>> குந்தளம்.

குந்தனம், KUNTHANAM

இரத்தினம், GEM STONE

கிற்றாணம்

கீற்று (=ஒளி, துண்டு) + ஆணம் (=கல்) = கிற்றாணம் >>> குத்தானம் >>> குந்தனம் = ஒளியுடைய கல் துண்டு.

குந்தனம், KUNTHANAM

தங்கம், GOLD

கிற்றணம்

கீற்று (=ஒளி) + அணி (=அழகு, அணிகலன்) + அம் = கிற்றணம் >>> குத்தனம் >>> குந்தனம் = அழகிய ஒளிமிக்க அணிகலன்

குந்தா, KUNTHAA

காலின் அடிப்பகுதி, BOTTOM OF LEG

குதி

குதி (=காலின் அடிப்பகுதி) + ஆ = குத்தா >>> குந்தா

குந்தா, KUNTHAA

பின்புறம், BACK SIDE

குற்றா

குறை (=ஒடுங்கு, மறை) + ஆ = குற்றா >>> குத்தா >>> குந்தா = மறைப்பு, பின்புறம்.

குந்தாணி, KUNTHAANHI

கண்ணோய், EYE DISEASE

கொந்தாணி

கொந்து (=கண்) + ஆணி = கொந்தாணி >>> குந்தாணி = கண்ணில் தோன்றும் ஆணி.

குந்தாளி, KUNTHAALHI, குந்தாலி, KUNTHAALI

தோண்டுவது, PICK AXE

குத்தளி

குத்து (=தோண்டு) + அள் (=கூர்மை) + இ = குத்தளி >>> குந்தாளி >>> குந்தாலி = தோண்டுகின்ற கூர்ம்பொருள்

குந்திருக்கம், KUNTHIRUKKAM, குந்துருகம், KUNTHURUKAM

சாம்பிராணி, FRANKINCENSE

கொந்தெரிக்கம்

கோந்து (=பிசின்) + எரி (=தீமூட்டு, புகை) + கம் (=வாசனை) = கொந்தெரிக்கம் >>> குந்திருக்கம் >>> குந்துருகம் = வாசனைப் புகைக்காக எரிக்கப்படும் பிசின் = சாம்பிராணி.

குநகம், KUNAKAM

நகம் அழுகல் நோய், NAIL FUNGUS

கூழ்நகம்

கூழ் (=கெடு, அழுகு) + நகம் = கூழ்நகம் >>> குநகம் = அழுகிய நகம் = நகச் சொத்தை.

குப்பம், KUPPAM, குப்பை, KUPPAI, கும்பம், KUMPAM

கூட்டம், CROWD, குவியல், HEAP

கும்பம்

கூம்பு (=குவி, கூடு) + அம் = கும்பம் >>> குப்பம் = கூட்டம், குவியல்.

குப்பாயம், KUPPAAYAM, குப்பாசம், KUPPAACAM

சட்டை, SHIRT

கொப்பயம்

கோ (=உடுத்து, மூட்டு) + பை (=துணி) + அம் = கொப்பயம் >>> குப்பாயம் >>> குப்பாசம் = உடுத்தி மூட்டப்படும் துணி = சட்டை.

குப்பாயம், KUPPAAYAM, குப்பாசம், KUPPAACAM

பாம்புச் சட்டை, SERPENT’S OFF SKIN

கொய்ப்பயம்

கொய் (=பிரி, களை) + பை (=பாம்பு) + அம் = கொய்ப்பயம் >>> குப்பாயம் >>> குப்பாசம் = பாம்பு களைவது = பாம்புச்சட்டை

குப்பை, KUPPAI

கழிவுக் குவியல், RUBBISH

குவ்வாய்

குவி (=ஒன்றுசேர்) + ஆய் (=நீக்கு, கழி) = குவ்வாய் >>> குப்பை = ஒன்றுசேர்த்து நீக்கப்படும் கழிவுப் பொருட்கள்.

குப்பை, KUPPAI

அழுகிய மலம், ROTTEN DUNG

கூழ்ப்பீ

கூழ் (=கெடு, அழுகு) + பீ (=மலம்) = கூழ்ப்பீ >>> குப்பை = அழுகிய மலம்.

குப்பி, KUPPI

குவிந்து நீண்டது, FUNNEL, VIAL

குவ்விழி

குவி (=சுருங்கு) + இழு (=நீளு) + இ = குவ்விழி >>> குப்பியி >>> குப்பி = சுருங்கிக் குவிந்து நீண்டது.

குபதம், KUPATHAM

கெட்டவழி, WRONG COURSE

கூழ்பதம்

கூழ் (=கெடு) + பதம் (=வழி) = கூழ்பதம் >>> குபதம் = கெட்ட வழி

குபலம், KUPALAM

பலவீனம், WEAKNESS

கூழ்வலம்

கூழ் (=கெடு) + வலம் (=வலிமை) = கூழ்வலம் >>> குபலம் = வலிமைக் கேடு = பலவீனம்.

குபலம், KUPALAM

தோல்வி, FAILURE, நட்டம், LOSS

கூழ்வலம்

கூழ் (=கெடு) + வலம் (=வெற்றி) = கூழ்வலம் >>> குபலம் = வெற்றிக் கேடு = தோல்வி, நட்டம்

குபார், KUPAAR, குபாரா, KUPAARAA

கூக்குரல், OUTCRY

குவார்

கூவு + ஆர் (=ஒலி) = குவார் >>> குபார் = கூவி ஒலித்தல் = கூக்குரல்.

குபார், KUPAAR, குபாரா, KUPAARAA

வாந்திபேதி, VIBRIO CHOLERAE

கூழ்பறா

கூழ் (=உணவு, கெடு) + பறி (=ஒலியுடன் வெளிப்படு) + ஆ = கூழ்பறா >>> குபாரா = உண்ட உணவு கெட்டு ஒலியுடன் வெளிப்படுதல் = வாந்தி பேதி

குபிதம், KUPITHAM

சினம், ANGER

கொபிதம்

கோபம் (=சினம்) + இதம் = கொபிதம் >>> குபிதம்

குபேரன், KUBAERAN

பணக்காரன், RICH MAN

குப்பரன்

குப்பை (=குவியல்) + அரி (=பொன்) + அன் = குப்பரன் >>> குபேரன் = பொற்குவியலைக் கொண்டவன் = பணக்காரன்

குபேரன், KUBAERAN

சந்திரன், MOON

கோபரன்

கோ (=அரசன், ஆள்பவன்) + பரி (=இருள்) + அன் = கோபரன் >>> குபேரன் = இருளில் ஆள்பவன் = சந்திரன்

கும்பகம், KUMPAKAM

மூச்சை அடக்கல், BREATH RETENTION

கும்பகம்

(2) கூம்பு (=ஒடுங்கு, அடங்கு) + அகம் (=உள், உயிர், மூச்சு) = கும்பகம் = மூச்சை உள்ளே அடக்குதல்

கும்பம், KUMPAM

குவிந்த பாத்திரம், NARROW MOUTH JAR

கும்பம்

கூம்பு (=குவி, மொட்டு, தேக்கு) + அம் (=நீர், ஒப்பு) = கும்பம் = மொட்டு போல் குவிந்த நீரைத் தேக்கும் பொருள்.

கும்பம், KUMPAM

நெற்றி, FOREHEAD

கும்பம்

கூம்பு (=குவி, வளை, குனி) + அம் (=கடவுள், கும்பிடு, பொருத்து) = கும்பம் = கடவுளைக் கும்பிடும்போது குனிந்து பொருந்தச்செய்வது = நெற்றி.

கும்பளம், KUMPALHAM

பூசணி, PUMPKIN

கொம்மளம்

கொம்மை (=பெருமை, திரள்) + அளி (=காய்) + அம் = கொம்மளம் >>> கும்பளம் = பெருத்துத் திரண்ட காய் = பூசணி.

கும்பி, KUMPI

சேறு, MIRE

கூம்பு

கூம்பு (=சேறு) + இ = கும்பி

கும்பி, KUMPI

வயிறு, STOMACH

கூழ்பை

கூழ் (=உணவு) + பை (=எரி, கலம்) = கூழ்பை >>> குய்பி >>> கும்பி = உணவு எரிக்கப்படும் கலம் = வயிறு.

கும்பி, KUMPI

யானை, ELEPHANT

கொம்மி

கொம்மை (=பெருமை, மார்பு, உடல்) + இ = கொம்மி >>> கும்பி = பெரிய உடலைக் கொண்டது = யானை.

கும்பி, KUMPI

நரகம், HELL

கும்மிழி

குமை (=அழிவு, மரணம், வருத்து, தண்டி) + இழி (=குற்றம், பள்ளம்) = கும்மிழி >>> குப்பியி >>> கும்பி = மரணித்தோர் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படும் பள்ளம் = நரகம்.

கும்பிகை, KUMPIKAI

பறை வகை, KIND OF DRUM

கும்மிகை

குமை (=அடி) + இகு (=வாசி) + ஐ = கும்மிகை >>> கும்பிகை = அடித்து வாசிக்கப்படுவது = பறை வகை.

கும்மட்டம், KUMMATTAM

உருண்டை விளக்கு, GLOBE SHAPED LAMP

கும்பண்டம்

கும்பு (=எரி, ஒளிர்) + அண்டம் (=உருண்டை) = கும்பண்டம் >>> கும்மட்டம் = உருண்டையாக ஒளிர்வது.

கும்மட்டம், KUMMATTAM

விமானக்கூண்டு, DOME

கும்பட்டம்

கூம்பு + அடை (=ஒப்பு, அமை, மூடு) + அம் = கும்பட்டம் >>> கும்மட்டம் = கூம்பு போல அமைத்து மூடப்படுவது.

கும்மட்டம், KUMMATTAM

மேல் வளைவு, ARCH

கொம்மட்டம்

கொம்மை (=வட்டம், கட்டிடம்) + அடை (=அமை) + அம் = கொம்மட்டம் >>> கும்மட்டம் = கட்டிடத்தின் வட்ட அமைப்பு

கும்மாளம், KUMMAALHAM

விளையாட்டு, SPORT

கும்பலம்

கும்பு (=கூடு) + அலை (=திரி, ஆடு) + அம் (=சிரிப்பு) = கும்பலம் >>> கும்மாளம் = கூடிச் சிரித்து ஆடுதல்.

குமண்டை, KUMANTAI

வட்டக் கூத்து, CIRCULAR DANCE

கொமாட்டை

கொம்மை (=வட்டம், கூட்டம்) + ஆட்டம் (=நடனம்) + ஐ = கொமாட்டை >>> குமண்டை = வட்டமாகக் கூடிய நடனம்.

குமண்டை, KUMANTAI

செருக்குச் செயல், HAUGHTY DEED

கொமாட்டை

கொம்மை (=செருக்கு) + ஆடு (=செய்) + ஐ = கொமாட்டை >>> குமண்டை = செருக்குடைய செயல்.

குமதி, KUMATHI

கெட்ட அறிவினன், EVIL MINDED PERSON

கூழ்மதி

கூழ் (=கெடு) + மதி (=அறிவு) = கூழ்மதி >>> குமதி = கெட்ட அறிவுடையவன்

குமரி, KUMARI, குமர், KUMAR, குமாரி, KUMAARI

இளம்பெண், VIRGIN

கொமாரி

கொம்மை (=இளமை, அழகு) + ஆர் (=நிறை) + இ = கொமாரி >>> குமரி = இளமை அழகு நிறைந்தவள் = இளம்பெண்

குமரி, KUMARI, குமர், KUMAR

அழிவின்மை, UNDESTROYABILITY

குமறி

குமை (=அழிவு, மரணம்) + அறு (=இல்லாகு) + இ = குமறி >>> குமரி = அழிவு / மரணம் இல்லாமை.

குமரம், KUMARAM

கொம்பற்றது, HORNLESS

கொம்பறம்

கொம்பு + அறு + அம் = கொம்பறம் >>> கும்மரம் >>> குமரம் = கொம்பு இல்லாதது

குமரன், KUMARAN, குமாரன், KUMAARAN

இளைஞன், YOUTH

கொமாரன்

கொம்மை (=இளமை, வலிமை) + ஆர் (=நிறை) + அன் = கொமாரன் >>> குமாரன் >>> குமரன் = இளமையும் வலிமையும் நிறைந்தவன் = இளைஞன்

குமரி, KUMARI

கற்றாழை, ALOE VERA

கொமரி

கொம்மை (=வட்டம், திரட்சி) + அரி (=பச்சை, கூர்மை, முள்) = கொமரி >>> குமரி = பச்சை நிறத்தில் வட்டமாகத் திரண்டு முட்களைக் கொண்டது = கற்றாழை.

குமரி, KUMARI

மலை விவசாயம், HILL VEGETATION

குப்பேரி

குப்பம் (=மேடு, மலை) + ஏர் (=விவசாயம்) + இ = குப்பேரி >>> குமேரி >>> குமரி = மலையில் செய்யும் விவசாயம்

குமாத்தா, KUMAATHTHAA, குமாச்`தா, KUMAASTHAA

கோப்பாளன், CLERK

கொப்பாற்றா

கோப்பு + ஆற்று (=செய், உருவாக்கு) + ஆ = கொப்பாற்றா >>> கும்மாத்தா >>> குமாச்`தா = கோப்புகளை உருவாக்குபவன்.

குமாரத்தி, KUMAARATHTHI

இளம்பெண், VIRGIN

கொமாரத்தி

கொம்மை (=இளமை) + ஆர் (=அழகு, நிறை) + அத்து (=பொருந்து) + இ = கொமாரத்தி >>> குமாரத்தி = இளமை அழகு நிறையப் பொருந்தியவள் = இளம்பெண்

குமாரம், KUMAARAM

சுத்தத் தங்கம், PURE GOLD

குமரம்

குமை (=உருக்கு) + அரி (=குற்றம், கசடு, நீக்கு, பொன்) + அம் = குமரம் >>> குமாரம் = உருக்கிக் கசடு நீக்கிய பொன்.

குமாரி, KUMAARI

பொன் கரைப்பான், SOLVENT OF GOLD

குமாரீ

குமாரம் (=பொன்) + ஈ (=அழிவு) = குமாரீ >>> குமாரி = தங்கத்தை அழிப்பது = பொன்னைக் கரைப்பது

குமான், KUMAAN

சந்தேகம், SUSPICION

கூழ்மன்

கூழ் (=கெடு, அழி) + மன் (=எண்ணம், உறுதியாகு) = கூழ்மன் >>> குமான் = எண்ணத்தில் உறுதியின்மை = சந்தேகம்

குமிலம், KUMILAM

பேரொலி, TUMULT

குவூளம்

குவி (=திரள், பெருகு) + ஊளை (=ஒலி) + அம் = குவூளம் >>> குமூலம் >>> குமிலம் = பேரொலி.

குமுதம், KUMUTHAM

அல்லி, LILY

குவுறம்

குவி (=மூடு) + உறை (=மலர்) + அம் (=ஒளி, பகல்) = குவுறம் >>> குமுதம் = பகலில் மூடிக்கொள்ளும் மலர் = அல்லி.

குமுதம், KUMUTHAM

யானை, ELEPHANT

குவூறம்

குவி (=கூடு, பெரு) + ஊறு (=தசை, உடல்) + அம் = குவூறம் >>> குமுதம் = பெரிய உடலைக் கொண்டது = யானை

குமுதம், KUMUTHAM

சேனை, ARMY

குப்பூறம்

குப்பு (=கூட்டம்) + ஊறு (=கொலை) + அம் (=போர்) = குப்பூறம் >>> குமுதம் = கொல்கின்ற போர்க் கூட்டம் = சேனை.

குமுதம், KUMUTHAM

மிகுதி, ABUNDANCE

குமிதம்

குமி (=மிகு) + இதம் = குமிதம் >>> குமுதம் = மிகுதி.

குமுதம், KUMUTHAM

கண் நோய், EYE DISEASE

குமிறம்

குமை (=துன்பம், நோய்) + இறை (=கண்) + அம் = குமிறம் >>> குமுதம் = கண் நோய்.

குமுதம், KUMUTHAM

அடுப்பு, STOVE

கும்புறம்

கும்பு (=எரி) + உறை (=கூடு) + அம் = கும்புறம் >>> கும்முதம் >>> குமுதம் = எரிப்பதற்கான கூடு = அடுப்பு.

குமுதம், KUMUTHAM

பேரொலி, TUMULT

குவுறம்

கூவு (=ஒலி) + உறு (=மிகு) + அம் = குவுறம் >>> குமுதம் = மிகுதியான ஒலி.

குமுதம், KUMUTHAM

தருப்பை, DHARBA GRASS

கொமுறம்

கோ (=தை) + முறை (=இலை, புல்) + அம் (=அமர்) = கொமுறம் >>> குமுதம் = அமர்வதற்காகத் தைக்கப்படும் புல்

குமேரு, KUMAERU

தெற்கு, SOUTH

கொவெறு

கோ (=திசை) + வெறி (=பேய்) + உ = கொவெறு >>> குமேரு = பேய்களுக்கான திசை = தெற்கு

குய்யம், KUYYAM

பெண்குறி, FEMALE GENITAL ORGAN

கூழம்

குழி (=ஓட்டை, துளை) + அம் (=கூடு, புணர் = கூழம் >>> கூயம் >>> குய்யம் = புணர்ச்சிக்கான துளை.

குய்யம், KUYYAM

வஞ்சனை, FRAUD

கூழம்

குழை (=அன்பு + அம் (=போலி) = கூழம் >>> கூயம் >>> குய்யம் = போலியான அன்பு = வஞ்சனை.

குய்யம், KUYYAM

மறைவிடம், SECRET PLACE

கூழம்

குழி (=ஓட்டை) + அம் (=பொருந்து, தங்கு) = கூழம் >>> கூயம் >>> குய்யம் = தங்கும் ஓட்டை = மறைவிடம்.

குயம், KUYAM

முலை, BREAST

கூழம்

குழை (=குழந்தை) + அம் (=உணவு, பால்) = கூழம் >>> குயம் = குழந்தைக்குப் பால் ஊட்டுவது = முலை.

குயம், KUYAM, குசம், KUCAM

தருப்பைப் புல், DHARBA GRASS

கூழம்

குழை (=இலை, புல்) + அம் (=அமர்) = கூழம் >>> குயம் >>> குசம் = அமர்வதற்கான புல் = தருப்பை.

குயலன், KUYALAN, குசலன், KUCALAN

கெட்டிக்காரன், MAN OF DEXTERITY

குயலன்

குயலம் (=கெட்டி) + அன் = குயலன் >>> குசலன் = கெட்டிக்காரன்

குயிலாயம், KUYILAAYAM

பறவைக் கூடு, BIRD’S NEST

குயிலேயம்

குயில் (=பின்னு, செய்) + ஏய் (=பொருந்து, தங்கு) + அம் (=பறவை) = குயிலேயம் >>> குயிலாயம் = பறவைகள் தங்குவதற்காகப் பின்னிச் செய்வது = கூடு.

குயிலாயம், KUYILAAYAM

சுவர் உள்ளறை, NICHE IN A WALL

குயிலாயம்

குயில் (=துளையிடு, பதி) + ஆயம் (=சுவர், இரகசியம்) = குயிலாயம் = சுவரில் துளையிட்டு இரகசியமாகப் பதிக்கப்படுவது = சுவர் உள்ளறை

குயிலாயம், KUYILAAYAM

மட்கல வனையகம், POTTER’S WORKSHOP

குழிலையம்

குழை (=சேறு, திரட்டு, வளை) + இல் (=இடம்) + ஐயம் (=பானை) = குழிலையம் >>> குயிலாயம் = சேற்றைத் திரட்டிப் பானையாக வளைக்கும் இடம்.

குயுக்தி, KUYUKTHI

கெட்ட அறிவு, PERVERTED THOUGHT

குழுத்தி

கூழ் (=கெடு) + உதி (=அறிவு) = குழுத்தி >>> குயுத்தி >>> குயுக்தி = கெட்ட அறிவு

குரகதம், KURAKATHAM

குதிரை, HORSE

கிறகதம்

கிற (=சுற்று) + கதி (=பயணம்) + அம் (=கட்டளை, நீளம், செருக்கு) = கிறகதம் >>> குரகதம் = கட்டளையிட்டதும் நீளமாகச் சுற்றிப் பயணிக்கும் செருக்குடையது. 

குரங்கம், KURANKAM

மான், DEER

குறக்கம்

குறு (=விரை) + அகை (=உயர், தாவு, செல், ) + அம் (=அழகு, செருக்கு) = குறக்கம் >>> குரங்கம் = உயரமாகத் தாவி விரைந்து செல்கின்ற செருக்கும் அழகும் உடையது = மான்.

குரங்கம், KURANKAM, குரங்கு, KURANKU

விலங்கு, BEAST

குறக்கம்

குறு (=குத்து, தாக்கு) + அகம் (=உயிரி, செருக்கு) + அம் = குறக்கம் >>> குரங்கம் = செருக்கித் தாக்கும் உயிரி = விலங்கு.

குரங்கி, KURANKI

சந்திரன், MOON

குறக்கீ

குறை + அகை (=எரி, ஒளிர்) + ஈ (=தா) = குறக்கீ >>> குரங்கி = குறைவான ஒளியைத் தருபவன் = சந்திரன்

குரண்டம், KURANTAM

கொக்கு, CRANE

குராட்டம்

குர் + ஆடு (=ஒலி, பற) + அம் (=வெண்மை, நீர்) = குராட்டம் >>> குரண்டம் = குர்குர் என ஒலிக்கும் வெள்ளை நீர்ப்பறவை

குரத்தம், KURATHTHAM

பேரொலி, TUMULT

குரற்றம்

கூர் (=மிகுதி) + அறை (=ஒலி) + அம் = குரற்றம் >>> குரத்தம் = மிகுதியான ஒலி.

குரப்பம், KURAPPAM

குதிரை தேய்கருவி, CURRYCOMB

குரப்பம்

குரை (=குதிரை, பரப்பு) + அப்பு (=நீர், ஒற்று, பூசு, தேய்) + அம் = குரப்பம் = நீரில் ஒற்றிப் பரப்பிக் குதிரையைத் தேய்ப்பது.

குரம், KURAM

தருப்பை, DHARBA

குறம்

குறை (=புல்) + அம் (=அமர்) = குறம் >>> குரம் = அமரும் புல்

குரம், KURAM

பசு, COW

குறம்

குறு (=கொடு) + அம் (=பால், தெய்வம்) = குறம் >>> குரம் = பால் தரும் தெய்வம்  = பசு.

குரல், KURAL

பெண் தலைமயிர், WOMEN’S HAIR LOCK

குறல்

குறை (வெட்டு, மயிர்) + அல் (=இன்மை) = குறல் >>> குரல் = வெட்டப்படாத மயிர் = பெண்கள் தலைமயிர்.

குரல், KURAL

சிறகு, WING, FEATHER

குறாள்

குறு (=விரை, பற) + ஆள் (=பயன்படுத்து) = குறாள் >>> குரல் = பறப்பதற்குப் பயன்படுத்துவது = சிறகு

குரல், KURAL

ஒலி, SOUND, WORD

குறல்

கூறு (=ஒலி, பேசு) + அல் = குறல் >>> குரல் = ஒலி, பேச்சு

குரல், KURAL

தொண்டை, THROAT

குறாள்

கூறு (=ஒலி, பேசு) + ஆள் = குறாள் >>> குரல் = ஒலியை / பேச்சை ஆள்வது = தொண்டை.

ஆயம், AAYAM

சுவர், WALL

ஆயம்

ஆயம் (=நீளம், இரகசியம், மறைப்பு) = நீண்ட மறைப்பு = சுவர்

அபிசேகம், APICAEKAM

திருமுழுக்கு, HOLY SHOWER

அப்பிசேகம்

(2) அப்பு (=நீர், பூசு) + இசை (=புகழ், பாட்டு) + ஏகம் (=ஒப்பற்றது, இறை) = அப்பிசேகம் >>> அபிசேகம் = புகழ்ந்து பாடியவாறே இறைவனுக்கு நீர் பூசுதல்.

குந்தாணி, KUNTHAANHI

உரல், MORTAR

குத்தாணி

குத்து + ஆணம் (=கல்) + இ = குத்தாணி >>> குந்தாணி = குத்தப்படும் கல் = உரல்.

கூந்தல், KOONTHAL

பெண் தலைமயிர், WOMEN’S HAIR

கூற்றல்

குறை (=மயிர், வெட்டு) + அல் (=இன்மை) = கூற்றல் >>> கூத்தல் >>> கூந்தல் = வெட்டப்படாத மயிர்.

குதிரை, KUTHIRAI

குதிரை, HORSE

குதிரை

குதி (=பாய், மிகுதி) + இரி (=விரை, ஓடு) + ஐ = குதிரை = மிகவும் விரைவாகப் பாய்ந்து ஓடுவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.