குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
- குறள் எண்: 1
தற்போதைய பொருள்:
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
குழப்பங்கள்:
மேற்காணும் உரைகளில் கலைஞர் உரை நீங்கலான மூன்று உரைகளும் ஆதிபகவன் என்பதற்கு பொதுவாக 'கடவுள்' என்று விளக்கம் கொடுத்துள்ளன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடவுள் ஒருவர் அல்லரே. சிவன், விட்டுணு, அல்லா, இயேசு, அருகன், புத்தர் என்று ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒரு கடவுள் உள்ளனரே. வள்ளுவர் இவர்களில் யாரைக் குறிப்பிடுகிறார்?. இது குறித்து இணைய தளங்களில் தேடியபோது பல கருத்துக்கள் கிடைத்தன. அவை கீழே தரப்பட்டுள்ளன.
ஆதிபகவன் என்பது பரமசிவன் தான் என்று சைவர்கள் கூறுகின்றனர். இல்லை இல்லை, ஆதி என்பது வள்ளுவரின் தாய்; பகவன் என்பது அவரது தந்தை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சமண மதத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப தேவரையே இச்சொல் குறிப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர். அத்துடன் நிற்காமல் திருவள்ளுவரை சமணர் என்றும் கூறத் தலைப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு சாரரோ ஆதிபகவன் விட்டுணுவைக் குறிப்பதாகக் கூறி வள்ளுவரை வைணவர் என்று தங்கள் பக்கம் இழுக்கின்றனர். ஆதி பகலவன் என்பதே ஆதி பகவனாக மாறிவிட்டது என்றும் இச்சொல் ஆதி காலத்தில் இருந்து இன்றுவரை வணங்கப்பட்டு வரும் சூரியனையே குறிக்கிறது என்றும் கூறுவார் உளர். இப்படி ஆதிபகவன் குறித்து ஒரு தெளிவான விடையினைக் காண இயலவில்லை. என்றால் உண்மையில் இந்த ஆதிபகவன் யார்?. குழப்பமான இக் கேள்விக்கு சரியான விடையினைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆதிபகவன் - சரியான சொல்லா?
ஆதிபகவன் என்னும் சொல்லே முதலில் தவறானதாகும். இதில் ஒரு எழுத்துப் பிழை உள்ளது. ஆதியகவன் என்பதே சரியான சொல்லாகும். இது கீழ்க்கண்டவாறு இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.
ஆதியகவன் = ஆதி + அகவன்.
ஆதி = காரணம். (மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)
அகவன் = அறிவானவன்.
(அகம் = ஞானம் / அறிவு. மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)
எனவே ஆதியகவன் என்பது காரண அறிவானவன் என்ற பொருளைத் தரும்.
ஆதியகவன் சரியே என நிறுவுதல்:
ஆதிபகவன் என்ற சொல் தவறு; ஆதியகவன் என்பதே சரி என்று முன்னர் கண்டோம். இது எவ்வாறு சரி என்று இங்கே பார்ப்போம்.
தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி விதி என்ற ஒன்று உண்டு. இது மிகவும் இன்றியமையாததாகும். திருவள்ளுவரும் இவ் விதிகளை மீறாமல் குறள்களை இயற்றி உள்ளார். பொதுவாக எழுத்துப் புணர்ச்சியினை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உள்ளடிப் புணர்ச்சி. இன்னொன்று புறவடிப் புணர்ச்சி. இதை ஒரு சான்றுடன் காணலாம்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.
இக் குறளின் இரண்டாம் அடியில் 'அடங்க+பெறின் = அடங்கப் பெறின்' என்ற உள்ளடிப் புணர்ச்சி ( ஒரு அடிக்குள் நிகழும் எழுத்துப் புணர்ச்சி) உள்ளது. முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் இடையிலான 'அறிவறிந்து + ஆற்றின் = அறிவறிந் தாற்றின்' என்பதில் புறவடிப் புணர்ச்சி உள்ளது. புறவடிப் புணர்ச்சி என்பது அடுத்தடுத்த அடிகளுக்கு இடையிலான எழுத்துப் புணர்ச்சியினைக் குறிக்கும். அவ்வகையில் அறிவறிந்து என்ற முதலடியின் ஈற்றுச்சொல் ஆற்றின் என்னும் இரண்டாமடியின் முதல் சொல்லுடன் புணர்ந்து அறிவறிந்தாற்றின் என்று இங்கே வந்துள்ளது. இதுபோன்ற புறவடிப் புணர்ச்சிகளை திருக்குறளில் பல இடங்களில் காணலாம். திருக்குறளில் மட்டுமின்றி பல தமிழ் இலக்கியங்களிலும் இப் புறவடிப் புணர்ச்சியினை காணலாம். இதுபோன்ற ஒரு புறவடிப் புணர்ச்சியே கடவுள் வாழ்த்தின் முதல் பாடலில் வந்துள்ளது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
யகவன் முதற்றே உலகு.
இக் குறளில் முதல் அடியின் ஈற்றில் வரும் ஆதி என்னும் சொல் இரண்டாம் அடியின் முதலாக வரும் அகவன் என்ற சொல்லுடன் புணரும்போது நன்னூல் சூத்திரம் 162 இன் படி கீழ்க்கண்டவாறு ஆகும்.
ஆதி + அகவன் = ஆதி+ய்+அகவன் (ய் என்பது உடம்படுமெய்)
= ஆதியகவன்.
எனவே புணர்ச்சி விதிப்படி ஆதியகவன் என்பதே சரியாகும். திருவள்ளுவரும் ஓலைச்சுவடியில் ஆதியகவன் என்றே எழுதியிருப்பார். பிற்கால மக்கள் ஓலைச்சுவடியில் இருந்து எடுத்து எழுதும்போது தவறுதலாக ஆதிபகவன் என்று எழுதிவிட்டனர். இத் தவறே நாம் மேலே கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஆகும்.
அறிவே தெய்வம்:
வள்ளுவர் கடவுள் இருப்பதை மறுக்கவில்லை. அதேசமயம் கடவுளுக்கு ஒரு மதத்தை கற்பிக்கவோ பருப்பொருள் வடிவம் கொடுக்கவோ இல்லை. வள்ளுவர் கடவுளை அறிவின் வடிவமாகவே காண்கிறார். 'சுத்த அறிவே சிவம்' என்று தாயுமானவரும் 'அறிவே தெய்வம்' என்று பாரதியாரும் ' அறிவே கடவுள்' என்று திருமூலரும் இதே நோக்கில் கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடவுளைப் பற்றிய வள்ளுவரது தெளிவான இந் நோக்கினை இதோ கீழ்க்காணும் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் காணலாம்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.
இப்பாடலில் 'இறைவன் தூய அறிவின் வடிவானவன்' என்பதனை 'வாலறிவன்' என்ற சொல்லால் நேரடியாக உணர்த்துகிறார். அதுமட்டுமின்றி கீழ்க்காணும் பாடல்களிலும் 'இறைவன் அறிவு வடிவானவன்' என்ற கருத்தினை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைக்கிறார்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வர்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகல் புரிந்தார் மாட்டு.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.
மேற்காணும் ஏழு பாடல்களும் இறைவனின் அடிசேர்தலைப் பற்றியே கூறுகின்றன. உண்மையில் இந்த 'அடிசேர்தல்' என்றால் என்ன?. என்று பார்ப்போம்.
பகுத்தறிவும் ஏன் என்ற கேள்வியும்:
உயிரினினங்களில் மனிதன் மட்டுமே கேள்விகள் கேட்கிறான். இக் கேள்விகள் பலவகைப்படும். எங்கே, எப்படி, எப்போது, யாரால், எதனால், எவற்றால், எவர்களால், ஏன் என்று கேள்விச் சொற்கள் பல உள்ளன. இவற்றுள் ஏன் என்ற கேள்விச்சொல் காரணம் பற்றி எழுவது; மிக மிக இன்றியமையாது; எல்லையற்ற ஆற்றல் கொண்டது; கீழ்நிலையில் உள்ள ஒருவனை மேல்நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையது; சிந்திக்கும் திறனைத் தூண்டுவது; புரட்சிக்கு அடிகோலி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவுவது. இப்படி இக் கேள்வியின் சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதுவல்ல நம் நோக்கம்.
உண்மையில் ஏன் என்னும் கேள்வி ஒரு முடிவில்லாமல் இயங்குகின்ற ஒரு குடைகருவி போன்றாகும். மற்ற கேள்விச் சொற்களை பயன்படுத்துவதில் ஓர் எல்லை உண்டு. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மற்ற கேள்விச் சொற்களை பயன்படுத்த முடியாது. ஆனால் ஏன் என்ற கேள்வியை மட்டும் எல்லை இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஏன் என்ற கேள்வியே கேட்கப் படாத மாதிரி யாராலும் விடை கூற முடியாது. நீங்கள் விரும்பினால் முயன்று பாருங்கள்.
என்றால் ஏன் என்ற கேள்வி எப்போது நிற்கும்?. எங்கே முடியும்?. இவற்றின் விடை: 'இறைவன்' ஆகும். ஆம், இறைவனே ஏன் என்ற கேள்வியின் முடிவாவான். ஏனென்றால் இறைவன் காரண அறிவானவன். காரண அறிவை அறிய உதவும் கேள்வியான ஏன் என்ற கேள்விக்கு காரண அறிவாய் விளங்கும் இறைவன் தானே விடையாக இருக்க முடியும். எல்லையற்ற புரியாத புதிர்களால் நிறைந்து இருக்கும் இவ் உலகில் எவ்வளவோ இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சான்றாக நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றதை நாம் அறிவோம். ஆனால் ஏன் நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றது?. இந்த ஒரு கேள்விக்கே நம் அறிவியலாளர்களால் இன்னும் சரியான விடை காண முடியவில்லை. அப்படியே அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து இக் கேள்விக்கு விடை கூறி விட்டாலும் அதற்கும் ஒரு ஏன் போட்டுவிட்டால் அவர்கள் கதி என்னாகும்?. ஆம், ஏன் என்ற கேள்வி கேட்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் அதற்கான விடையினைக் காண மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இப்படி மனிதனை உந்தும் ஆற்றலாகவும் ஏன் என்ற கேள்வி விளங்குகிறது.
காரண அறிவின் வடிவாய் விளங்கும் இறைவனே உலகில் உள்ள அனைத்துக் கேள்விகளின் அடிப்பொருள் அதாவது இறுதி விடை ஆவான். இந்த இறுதி விடை ஆகிய அடிப்பொருள் காண்டலையே அடிசேர்தல் என்று கூறுகிறார் வள்ளுவர். தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல் ஆகிய சொற்கள் அனைத்தும் ஏன் என்ற கேள்விகளால் நாம் நம்முள் குடைந்து குடைந்து அடிப்பொருள் ஆகிய இறைவனை அடைய வேண்டும் என்னும் பொருளையே உணர்த்தி நிற்கின்றன.
இப்படி மேலே கண்ட ஏழு பாடல்களிலும் இறைவனை அறிவின் வடிவாகவே போற்றியுள்ளார் வள்ளுவர். அதுமட்டுமின்றி இறைவனை அடையும் முறையினையும் நமக்கு மறைமுகமாக உணர்த்திச் சென்றிருக்கின்றார். இதிலிருந்து வள்ளுவர் எழுதியது ஆதியகவன் தான் என்பதனை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
முடிவுரை:
தாள் வணங்குதல், அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கு பாதங்களைத் தொட்டு வணங்குதல், பாதங்களில் தலையை வைத்து வணங்குதல் என்றெல்லாம் பொருள் கொண்டு வள்ளுவர் கடவுளுக்கு உருவம் கொடுத்திருப்பதாகக் க்ருதி அவரை தத்தம் மதங்களின் பக்கம் இழுக்க முயன்றுள்ளனர் நமது முன்னோர்கள். இது தவறாகும். ஏனென்றால் ஒரு பாடலுக்குப் பொருள் கூறுமிடத்து தன்கருத்தை ஏற்றிக் கூறாமல் நடுநிலையில் நின்று ஆசிரியரின் கருத்து என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பொருள் கூற வேண்டும் என்பதே விதியாகும்.
கடவுள் வாழ்த்தில் வரும் அனைத்துப் பாடல்களும் இறைவனை அறிவின் வடிவமாகக் காட்டும்போது ஆறாவது பாடலான ' பொறிவாயில் ஐந்தவித்தான்' என்ற பாடல் மட்டும் விதிவிலக்காகவும் நெருடலாகவும் உள்ளது. ஏனென்றால் ஐம்பொறிகளையும் அடக்குதல் என்பது ஐம்பொறிகள் உடைய மாந்தர்க்குரிய செயலாகும். அதை உருவமில்லாத இறைவனுக்கு ஏற்றிக் கூறுவது மிகப் பெரும் தவறாகும். நீத்தார் பெருமையில் வரவேண்டிய இக் குறளை தவறுதலாகவோ வேண்டுமென்றோ சிலர் கடவுள் வாழ்த்தில் சேர்த்துள்ளனர். இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்.
சரவணன் அய்யா,
பதிலளிநீக்கு”ஆதியகவன்” என்று நீங்கள் குறிப்பிடுவது ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால் அதை மேலாய்வுகள் செய்த பின்னர்தான் இறுதியாக ஒப்புக் கொள்ள முடியும். ஆனால்...
//அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
யகவன் முதற்றே உலகு//
என்று நீங்கள் சீர் பிரித்துக் குறிப்பிடுவது சரியில்லை. தளை தட்டுகிறது.
அன்புடன்
அரவிந்த்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு'வ' என்பது உண்மையில் 'ல' வாக இருந்திருக்கலாம் என்று ஒரு விளக்கக் கட்டுரையில் படித்தேன். பகலன் (பகலவன்). சரியான பொருள் என்று தோன்றுகிறது. சூரியனிலிருந்து தொடக்கும் என்பது பொருந்துகிறது.
நீக்கு*தொடக்கம்'
நீக்குமற்றுமொரு விஷயம், ஆதிபகவன் என்றால் என்ன என்பதும் ஆய்வுக்குரியது.
பதிலளிநீக்குஅது ஆதி என்னும் பகவனா?
ஆதி ஆகிய பகவனா?
பகவனாகிய ஆதியா? அது எதைக் குறிக்கிறது என்பது ஆய்வுக்குரியது.
“ஆதி பகவன் அருமறை ஔதுமின்” என்பது திருமூலர் வாக்கு.
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் என்று மண்டல நிகண்டு கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது.
ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல்
சோதி பராசக்தி தான் பசுவே சொந்தமாகாதோ - என்கிறது ஒரு சித்தர் பாடல்.
ஆக ”ஆதிபகவன்” என்பது எதைக்குறிக்கிறது, அது போல ”ஆதியகவன்” என்பது எதைக் குறிக்கிறது, அது பிற அக்கால சமகால அல்லது முன்னோடி, பின்னோடி இலக்கியங்களில் பயன்பட்டிருக்கிறதா, அதே பொருளில் பயின்று வந்திருக்கிறதே என்பதை தெள்ளிதின் ஆய்ந்த பின்னரே அது குறித்த இறுதி முடிவை எடுக்க இயலும்.
நற் கட்டுரைக்கு நன்றி! இது ஆய்வுப்புலத்தில் மேலாய்வுகளுக்கு வழி வகுக்கட்டும்.
அன்புடன்
அரவிந்த்
THE WORD "ADIBHAGAVAN" LITERALLY REFERS TO SUN....AND THRIUVALLUVAR KNOWS THE EXISTENCE OF VARIOUS RELIGIONS..IN TAMILNADU...AND PEOPLE WHERE CONFUSED OF FOLLOWING WHICH RELIGION...HE SAYS"NEETALUM MAZHITHTHALUM VENDAAA.."SO HE IS A SPRITUAL PERSON...BUT NOT RELIGIOUS PERSON...HE IS RATIONALIST....HE DIRECTS THE PEOPLE OF TAMILNADU..IN RIGHT WAY...AWAY FROM RELIGION...SO ADHIBHAGAN...DOESNOT REFERS TO ANY GOD....IN THE WORD.."THAAMARAI KANNAN ULAGU".,..HE JUST TEASES LORD VISHNU//AND IN THE WORD.."INDIRANAYE SALUM KARI"..HE GOES AGAINST LORD INDIRAN...HE IS LIKE PERIYAR..HE LIKE JESUS..HE IS LIKE..ANNADURAI...SO HE IS A RATIONALIST...BUT NOT A ATHEIST.
நீக்குஆதி பகவன் என்றால் முதற் கடவுள் என்ற பொருள் தரும் என்ற கருத்திற்கு இடம் அளிக்க வில்லையா ?
பதிலளிநீக்குஆதி பகவன் என்றால் முழு முதற் கடவுள் என்ற பொருள் தரும் என்ற கருத்திற்கு இடம் அளிக்க வில்லையா ?
பதிலளிநீக்குஅன்பு நன்பருக்கு,
பதிலளிநீக்குஉங்கள் விருப்பம் போல் குறளை மாற்றாதீர்கள்.
வள்ளுவரின் குறளில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் அவர் ஞானத்தில் வெளியிட்டவை.
இங்கு ஆதி பகவன் என்பது ஆதி அந்தம் கடந்த ஒன்றான பரம் பொருளை குறிக்கும்.
வள்ளுவர் ஒரு சித்தர். சித்தர் பாடல்கள் எல்லாம் மறைபொருளாகதான் இருக்கும்.
அன்புடன்
நக்கினம் சிவம்
VALLUVAR IS NOT A SITHTHAR...THEN HOW HE HAS WRITTEN KAMATHTHUPAAL..??
நீக்குHE WRITES THE KAMMATHUPPAL..AS IF HE FEELS IN LOVE WITH A GIRL...
SO HE IS A RATIONALIST..NOT A SITHTHAR..
இதுக்கு சுகாத்தியரே ( ஸ்காட் துரை) தேவலாம்
பதிலளிநீக்குஐயா.. ஆதி பகவன் என்றால் அது உருவ கடவுளையே குறிக்கிறது என்று எவ்வாறு சொல்கிறீர்கள்..?
பதிலளிநீக்குஆதி பகவன் தாங்கள் சொல்வது போல் ஞானத்தின் ஆதியாகிய கடவுள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது..?
நன்றி,
லோகநாதன்.
திரு. லோகநாதன்
பதிலளிநீக்குஆதி பகவன் என்றால் முழுமுதல் கடவுள் என்று பொருள் கூறுகிறார்கள். அந்த முழுமுதல் கடவுள் யார் என்பதில் தான் சிக்கல். சிவன், விஷ்ணு, பிள்ளையார், ரிஷபதேவர் என்று ஆளாளுக்கு ஒரு பேர் சொல்கிறார்கள். அதை விளக்குவதற்காகத் தான் இந்தக் கட்டுரை.
மேலும் பகவன் என்ற சொல் கடவுளைக் குறிக்கும் என்றால் அது முழுமுதல் கடவுளைத் தான் குறிக்கும். ஏனென்றால் வள்ளுவரைப் பொருத்தமட்டில் கடவுள் ஒருவரே என்பதால் ஆதி என்னும் அடைமொழி இங்கே தேவையேயில்லை. அவ்வகையில் பார்த்தால் இங்கே வரும் ஆதி பகவன் என்பது சரியான சொல் வழக்கு அல்ல என்பது புலப்படும்.
அன்புடன்,
தி.பொ.ச.
விளக்கத்திற்கு நன்றிகள்.. (மிகத் தாமதமாக பதிலுரைத்தலுக்கு மன்னிக்கவும்)
பதிலளிநீக்குநன்றி,
லோகநாதன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமென்பொருள் தொழில் நுட்பத்தில் பொருட்பால் , குறுந்தொகையில் பெருந்தரவு மற்றும் வள்ளுவத்தில் அளவீடுகள் எனும் தலைப்புகளில் அனுப்பலாமா?
பதிலளிநீக்குஅய்யா! உங்களை போன்று எமக்கு தமிழில் பரிச்சயமும் அறிவும் திறமும் இல்லை. உமது பதிவுகள் போற்றத்தக்கவையே. இருப்பினும் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
பதிலளிநீக்குபக என்ற சொல் ஆறு குணங்களை குறிக்கும் என்பது சான்றோர் அபிப்ராயம். அவ்வாறு குணம் பொருந்தியதால் கண்ணனின் கீதையும் பகவத்கீதை என்றே குறிப்பிடப்படுகிறது.
மேலோட்டமான அறிவு அல்லது பகுத்தறிவினால் மட்டுமே எல்லாவற்றையும் கடந்து இருக்கும் கடவுளை அறிய இயலாது என்பதும் சான்றோர் அபிப்ராயம். அறிவையும் கடந்து சுத்த அறிவாய் இருப்பவர் எவரோ அவரே கடவுள் - கட + உள்.
வேதாந்தம் என்றாலே அறிவின் முடிவு. வேதம் என்றால் அறிவு என பொருள்படும்.
அகரம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் அற்புதமாக கையாளப்பட்டுள்ளது. திருப்புகழில் அருணகிரியார் அகரமுதலென உரை செய் ஐம்பத்தொரு அக்ஷரமும் என்றூ அகரமுமாகி என்றெல்லாம் பன்விதமாய் முருகனை குறிப்பிடுகின்றார். முருகனை பற்றி வாரியார் சொல்லி இருப்பதிலோ அவர் தமிழ் என்பது முருகனின் ஓர் உருவம் என்றே சொல்கிறார். அவரும் ஒரு அரிய தமிழ் ஞானம் பெற்றவரே.
நடராஜரின் டமருவில் தோன்றிய பதினான்கு ஒலிகளே உலகனைத்துமுள்ள மொழிகள் அனைத்துக்கும் ஆதாரம் என்பதும் சான்றோர் வாக்காக உளது. அதில் முதல் 'அ'தான்.
தொடர்ந்தொரு கருத்து பதிவுமிடுகிறேன்.
பல கருத்துக்களில் எல்லோருக்கும் ஏற்றதான கருத்தை சொல்வது நடுநிலை அல்ல. அது இதமானது என்று வேண்டுமானால் சொல்லலாம். நடுநிலை என்பது தனக்கு "சரி" என முற்றிலும் படுவதை உரைப்பதே ஆகும்.
பதிலளிநீக்குஅப்படி நீங்கள் கருத்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி.
ஆயின் கடந்த காலத்தில் ஆதிசங்கரர் ஆகட்டும் கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகட்டும் கம்பர் ஆகட்டும் இன்னும் பெரிய சான்றோர் அனவைரின் பெருத்த படைப்புகளை எல்லாம் இறைவனோ அல்லது மாபெரும் ஆற்றல் மிக்கவரோ வந்துதான் அவர்கள் செய்ததை அங்கீகரித்து சரி என சொல்லி உள்ளனர். வலைத்தளங்களில் கருத்து பரிமாறுவது ஒவ்வொருவருக்கு சரி என படுவதே. அது சான்றோர் கருத்து ஆக இருக்கும் வரையில் முற்றிலும் சரி என சொல்லல் இயலாது. இருப்பினும் ரசனையானது என்றும் மனதிற்கு வளம் தருவதென்றும் சொல்ல தகும்.
நீத்தார் என்றும் இந்திரன் என்றும் தென்புலத்தார் என்றும் வள்ளுவர் சொல்லி இருப்பதால் அவர் தமிழ்நாட்டில் அவர் காலத்தில் வழங்கி இருந்த சமய வழிபாட்டை ஒட்டியே பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் என்பதற்கு அதிக இடம் இருக்கிறது.
நன்றி வணக்கம்.
Krishna is the supreme personality of Godhead
பதிலளிநீக்கு== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==
கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 33 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.
ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.
== கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==
அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1
சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே
'''நித்யமான ஆனந்தம்,இருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.'''
கோபால தாபனீ உபநிஷத் 1.3
நீக்குக்ருஷ்;ணோ வை பரமம் தைவதம்
'''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்'''
கோபால தாபனீ உபநிஷத் 1..21
ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய:
'''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்'''
ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி:
நீக்கு'''கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.'''
யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி:
'''வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.'''
கோபால தாபனீ உபநிஷத் 1..24
யோ ப்ரஹ்மாணம் விததாதி: பூர்வம் யோ வேதாம்ஷ் ச காபயதிஸ்ம க்ருஷ்ண:
'''ஆதியில் பிரம்மனுக்கு வேத ஞானத்தை உபதேசித்ததும்.. புராதன காலத்தில் வேத ஞானத்தை அளித்ததும் கிருஷ்ணரே.'''
இதையே பத்மபுராணம் : நாம சிந்தாமணிஹ் க்ருஷ்ணஸ்
'''நாமங்களில் அனைத்தைவும் விட தலைசிறந்த மணிமகுடநாமம் கிருஷ்ணா என்பதாகும்.'''
வேதங்களில் உள்ளபடி :அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் :
ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர:
'''தேவகியின் மைந்தனான கிரஷ்ணரே முழுமுதற்கடவுள்'''
சத்சித் ஆனந்த ரூபாய க்ருஷ்ண:
'''நித்யமான ஆனந்தமயமான உருவமுடையவர் கிருஷ்ணரே.'''
== கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும் பிற தேவிதேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை ==
பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.
நீக்குபாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை சரணடைந்த எவனும்இ எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நெறியில் முழுமையாய் ஈடுபட்ட எவனும்இ தேவருக்கோ முனிவருக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினருக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்வித கடன் படாதவனாகிவிடுகின்றான்.
பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.
நீக்குபாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்
''' கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்'''
கிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.
வேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் கிருஷ்ணரை மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது.
அதர்வணவேதம் : நாராயணோபனிஷத்தில் : ஏகோவை நாராயண ஆஸீன் ந ப்ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி ஸமௌ நேமே த்யாவாப்ருதீவி ந நக்ஷத்ராணி ந ஸூர்ய: ஸ எகாகீ ந ரமேத தஸ்ய த்யானாந்த: ஸ்தஸ்ய யத்ர சாண்டோகை: க்ரிய மாணோஷ்டகாதி ஸம்ஜ்ஞகா ஸ்துதி ஸ்தோமலு ஸ்தோமம் உச்யதே.
'''படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார்.'''
இதே விசயம் கீதை 10.8 ல் : அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
நானே எல்லாவற்றின் உற்பத்தி மூலம் எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன என்கிறார் கிருஷ்ணர்..
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
'''நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.'''
ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே
நீக்கு'''பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்'''
யஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்
'''எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்'''
இதே விசயம் கீதை 8.21ல் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம
'''எதை அடைந்த பின் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறப்பதில்லையோ அந்த இடம் என்னுடையது எனகிறார் கிருஷ்ணர்.'''
அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில்
எதஸ்யைவ யஜநே சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மாநம் வேதயதி ஓங்காராதிகம் மநுமாவர்த்தயேத் ஸங்கரஹித: அப்பாநயத் தத் விஷ்ணோ பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய: திவீவ சக்ஷஷுராததம் தஸ்மாதேநம் நித்யமாவர்த்தயேத் நித்யமா வர்த்தயேதிதி.
'''இந்த கோபாலமந்திரத்தை ஜபம்செய்து சந்திரனைத்தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கப்பெற்றவனாய் பரமாத்மாவை அறிந்தான். ஆகையால் பலனில் பற்றற்றவனாய் கோபாலமந்திரத்தை ஓங்காரத்துடன் பல தடவை படிக்கக்கடவன். இதை ஜபித்த சிவனும் பரமாத்மாவை ஸாக்ஷத்கரித்து விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான். எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள். அப்பரமபதம் ஆகாயத்தில் விளங்குபவனும் உலகெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸூர்யனைப்போல் பிரகாசிக்கிறது. ஆகையால் இம்மந்திரத்தை தினந்தோறும் ஜபிக்க வேண்டும்.
'''சந்த்ரத்வஜோ (அ)கமத் விஷ்ணோ பரமம்பதமவ்யயம் '''''
சந்திரனைத்தலையில் கொண்ட சிவனும் விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான்.
''' வ்ருஷபத்வஜ வந்த்யாய பார்த்தஸாரதயே நம: '''
ரிஷபக்கொடியோனால் (சிவன்) பூஜிக்கப்பட்டவனும் அர்ஜுனனுக்கு ஸாரதியான பெருமானுக்கு நமஸ்காரம்
மேலே கூறிய வேத விசயங்கள் பார்க்கும் போது சிவபெருமான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தரே ஆவார்
'''முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்'''
நீக்குபுருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.
'''ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அ)ஜாயத்'''
மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.'''
சாந்தோக்யத்தில் : விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய
'''முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு'''
சாஸ்வதம் சிவம் அச்யுதம் ''' உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.'''
தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: '''உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.'''
ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸந:
'''நாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.'''
ப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்
'''பிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்'''
நிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ(அ)ஸ்தி கஸ்சித்
'''ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.
'''
தைத்திரீய நாராயணவல்லியில் : நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: ச தத்ஸர்வம் நாராயண: ஸ்தித:
'''பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.'''
ரிக்வேத புருஷசூக்தத்தில் : உதாம்ருதத்வஸ்யேஸாந: ஹ்ரீஸ்ச தே லக்ஷமீஸ்ச பத்ந்யௌ இஷ்டம் மநிஷாண
'''மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே. லக்ஷமிதேவியும் பூமிதேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள். உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தும் பெறக்கடவோம்.'''
ரிக்வேத மண்டலத்தில் 1.5.22.5: தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
'''விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள்.'''
ஸஷுபாலோபநிஷத்தில் : தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏகஏவ நாராயண: உத்பவ ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:
'''அனைத்தையும் தரிப்பவனும் அனைத்தையும் விதிப்பவனும் செய்பவனும் சிறந்த விகாரங்களை உடையவனும் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே. பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே
'''
மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸஷுஹ்ருத் கதி நாராயண:
'''தாய், தந்தை, ஸஹோதரன் முதலான எல்லா உறவாகவும் புகலிடமாகவும் உபாயமாகவும் நண்பனாகவும் கதியாக இருப்பவன் நாராயணன் ஒருவனே
'''
யஜுஸ் ஸம்ஹிதா 5.5 அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:
'''தேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .
'''
நாராயணோபனிஷத்தில் : விஷ்ணு மஹேஸ்ராக்யைர் நாராயணாம் ஸைஸ் ஸத்வதமோகுண ப்ரதாநை:
'''நாராயணரின் அம்சங்களாய் ஸத்வதமோகுணத்தில் வருபவர்கள் விஷ்ணு மஹேஸ்வரர்களே.'''
பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.
நீக்குவாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.
Continue 2
-2-
நீக்கு== வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==
பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு:
மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய '''சிவனுக்கு ஆத்மா விஷ்ணு'''
யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.
பத்மபுராணத்தில் : விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்
சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ்மியின் பக்தன் சிவன் எனவே வில்வ இலையை தன் தலையில் தங்குகிறார்.
கருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை. அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.
வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ந ப்ரஹ்மா ந ச சங்கர
'''வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.'''
ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி
வேதவியாசர் கூறுகிறார் ''' கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.'''
ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.
விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.
தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்.
== பத்மபுராணத்தில (பூனா ஆநந்தாஸ்ரமபதிப்பில் உத்தரகண்டம் 263ம் அத்தியாயத்தில் உள்ளபடி) ==
பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.
இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
நீக்குமுதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.
கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண புராணங்கள் சொர்கத்தையும் தாமஸகுண புராணங்கள் நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்.
நீக்குமேலே கூறிய விசயங்கள் வேதங்களில் என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே உள்ளது சத்வ குணபுராணங்களில் மட்டுமே. ராஜஸகுண புராணங்கள் தாமஸகுண புராணங்களில் சில இடங்களில் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என கூறியுள்ளது ஆனாலும் அதில் கூறியபடி நடந்தால் அது பாவத்தையே உண்டாக்கும். இதே போல் உபநிஷத்துகளும் சத்வ குண உபநிஷத்துகள் விஷ்ணு சம்பந்தமானவை மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண உபநிஷத்துகள் பிரம்மா சம்பந்தமானவை சொர்கத்தையும் தாமஸகுண உபநிஷத்துகள் சிவன் சம்பந்தமானவை நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்
= பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள் ==
நீக்கு1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.
2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.
3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.
4.வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம். 5.கிருஷ்ணரின் புனித நாமத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.
6.புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம்.
7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.
8.வேதத்தில் கர்மகாண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.
9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம் 10.பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.
(யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம ருத்ராதி தேவதை: ஸமத்வேனைவ வீகேஷதஸ பாஷண்டீ பவேத் த்ருதம்)
'''பிரம்மா,சிவபெருமான் போன்ற தேவர்களைக்கூட நாராயணருக்குச் சமமாக பார்க்க கூடாது, பார்ப்பவனை நாஸ்திகன் என்பர்.
'''
Continue 3
இறைவனின் இலக்கணம்
பதிலளிநீக்குஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3
ஓர் இறை கொள்கை
தனக்கு உவைமை
இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
35:15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்;
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
35:28 அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
5:35 அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக – சாதனமாக உள்ளது என்பர்.
prophet Mohamed is not the one and only prophet , but previously there were many
பதிலளிநீக்கு13:38 உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம்.
15:10. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற பல சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்
13:7 ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு.
16:113 அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதர் வந்தார்.
in local language (eg Hebrew Sanskrit Tamil )
14:4 எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம் .
4:164. (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை
தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல்
பதிலளிநீக்குஸஜ்தா (சிரம் பணிதல்) எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19
காலடி சிர வணக்கம் / ஸஜ்தா
பதிலளிநீக்குவாலறிவன் நற்றாள் தொழாஅர்
மாணடி சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்
அந்தணன் தாள்சேர்ந்தார்க்
எண்குணத்தான் தாளை
இறைவன் அடிசேரா தார்.
இறைவனை வணங்கும் முறை , இறைவனை எப்படி தொழுவது ?
இறைவன் காலடியில் விலெந்து கூப்பிடு / பிராத்தனை ஸை
தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல்
ஸஜ்தா (சிரம் பணிதல்) எனும் வணக்கம் - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19
13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன
22:77. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்
48:29 ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்