புதன், 5 அக்டோபர், 2016

தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும்முன்னுரை:

    ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை நாம் நன்றாக அறிவோம். அந்த அகராதிகள் ஒரு சொல்லுக்கான சரியான பொரு(ட்க)ளைக் காட்டாமல் போனால் என்னென்ன விபரீதங்கள் விளையும்?. செய்யுளை அதாவது பாடலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. அம் மொழி சார்ந்த வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொள்ள முடியாது. பாடல் ஆசிரியரின் உன்னதமான நோக்கத்தினை உணர்ந்துகொள்ள முடியாது. இப்படிப் பல நன்மைகளை நாம் இழக்க நேரிடும். இவ்வளவு இன்றியமையாத பணிகளைச் செய்துவருகின்ற அகராதிகளில் காட்டப்படும் பொருட்களில் குற்றங்கள் உள்ளனவா? என்றும் குறைபாடுகள் உள்ளனவா? என்றும் மீளாய்வு செய்து சரிபார்க்க வேண்டியது தமிழ் அறிஞர்களின் தமிழ் ஆர்வலர்களின் சீரிய கடமையாகும்.

அகராதிகளின் குற்றங்களும் குறைகளும்:

   தமிழ் அகராதிகளில் காணப்படும் தவறுகளை கீழ்க்காணும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
1. அகராதிக் குற்றங்கள்.
சான்றாக, அல்குல் என்ற சொல்லுக்குப் பெண்குறி என்று தவறான இழிவான பொருளைக் காட்டியிருப்பது அகராதிகளின் குற்றமாகும்.
2. அகராதிக் குறைகள்.
சான்றாக, பாம்பு என்ற சொல்லுக்கு மேகம் என்ற பொருளும் உண்டு. இதைக் காட்டாமல் விடுத்தது அகராதிகளின் குறையாகும்.

தமிழ் அகராதிகளின் இன்றைய நிலை:

    தமிழ் அகராதிகளில் கூறப்பட்டுள்ள சொல் - பொருட்களின்மேல் இதுவரை செய்யப்பட்டுள்ள மீளாய்வுகளின் விளைவாக, ஐம்பது (50) சொற்களுக்குத் தவறான பொருட்கள் காட்டப்பட்டிருப்பது அறியப்பட்டுள்ளது. அந்தச் சொற்களுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்களும் காட்டாத பொருட்களும் கீழே அட்டவணையில் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும் பொருளும் தனித்தனியே ஆய்வுசெய்யப்பட்டு அவற்றில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றுக்கான சரியான பொருட்கள் பல ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
 
சொல்
அகராதிகள்
காட்டும்
பொருள்(கள்)
அகராதிகள்
காட்டாத
பொருள்(கள்)
ஆய்வுக்
கட்டுரையின்
பெயர்
அல்குல்
பெண்குறி,
இடுப்பு
நெற்றி
அழகின் மறுபெயர்
அல்குல்
அலங்கு
(தல்)
அசை(தல்), ஒளிசெய்(தல்)
பூ(த்தல்),
கிளைத்தல்,
மின்னுதல்
அலங்கு
என்றால்
என்ன?
அரவு
நச்சுயிரி, ஒலி
மேகம்
திங்களைப் பாம்பு
கொண்டற்று
அரம்பை
வாழை, ஓமம்,
தேவமகளிர்
சந்திரன்
நுதலும்
நுதலப்படாத கருத்துக்களும்
அறல்
கருமணல், நீர்
முதலியன
நத்தை, சிப்பி
முதலியன
பெண்களின்
கூந்தலுக்கு
இயற்கையில்
மணமுண்டா?
அந்தணர்
ஒருவகை சாதி,
முனிவன்,பிரமன்
முதலியன

உழவர்
அறவாழி அந்தணன்
(யார் அந்தணர்?)
ஆகம்
உடல், மார்பு
முதலியன
கண்,
கண்ணிமை
தொடி- ஆகம்
தொடர்பு என்ன?
ஆழி
சக்கரம், வட்டம்,
மோதிரமுதலியன
சட்டிக்
கலப்பை,
வட்டக்குழி
அறவாழி அந்தணன்
(யார் அந்தணர்?)
இறை
கடவுள், உயரம்,
தலை முதலியன
கண்ணிமை
இறை என்றால்
என்ன?
இந்திரன்
தேவர் தலைவன்
சூரியன்
இந்திரவிழாவும்
தைப்பொங்கலும்
எயிறு
பல், தந்தம்
கண்,
கடைக்கண்
எயிறு என்றால்
என்ன?
ஓதி
தலைமயிர்,கல்வி முதலியன
கண்ணிமை
கதுப்பு-ஓதி-நுசுப்பு
கதுப்பு
தலைமயிர்,கன்னம்
முதலியன
கண்ணிமை
கதுப்பு-ஓதி-நுசுப்பு
கவரிமா
மான்வகை,
ஒருவகை மாடு
அன்னப்
பறவை
கவரிமா(ன்)
குறங்கு
தொடை,கொக்கி,
கிளைக்கால்
கண்ணிமை
குறங்கு என்றால்
என்ன?
குடம்பை
கூடு, முட்டை,
உடல், தொட்டி
கூண்டு
கூண்டுப் பறவைகள்
கூந்தல்
பெண்களின்
தலைமயிர்
கண்ணிமை
பெண்களின்
கூந்தலுக்கு
இயற்கையில்
மணமுண்டா?
சிறுபுறம்
பிடரி, முதுகு,
கொடை
கண், கன்னம்,
கண்ணிமை
சிறுபுறம் என்பது…
சும்முதல்
மூச்சுவாங்குதல்
அதிர்தல்,
ஒலித்தல்
சும்மா (இரு )
என்றால் என்ன?
தசும்பு
குடம், கொப்பரை,
கலசம், பொன்
சொம்பு
தசும்பு என்றால்
என்ன?
தாமரைக்
கண்ணான்
திருமால்
சந்திரன்
தாமரைக்
கண்ணான் உலகு
தெய்வம்
கடவுள், புதுமை,
விதி முதலியன
பசுமாடு
திருக்குறளில்
தெய்வம் (1 & 2)
தேவர்
வானுலகத்தவர்,
கடவுளர் முதலியன
காளைமாடு
திருக்குறள் காட்டும்
தேவர் யார்?
தொடி
கைவளை, பூண்
முதலியன
கண்விளிம்பு
மைப்பூச்சு
தொடி – ஆகம்
தொடர்பு என்ன?
தோள்
புஜம், கை
கண்,
கண்விளிம்பு
தோள் என்றால்
என்ன?
பசப்பு,
பசலை
பச்சை / பொன் நிறம், தேமல், அழகு முதலியன
கண்ணீர்
பசப்பு என்றால்
என்ன?
பசத்தல்
பசுமையாதல்,
நிறம் வேறுபடுதல்
அழுதல்
பசப்பு என்றால்
என்ன?
பார்ப்பான்
ஒருவகை சாதி
ஆசிரியன்
திருவள்ளுவர் சாதி
சமயங்களை
ஆதரித்தாரா?
பாம்பு
நச்சுயிரி, ராகு,
கேது முதலியன
மேகம்
திங்களைப் பாம்பு
கொண்டற்று
புகழ்
பெருமை, சிறப்பு
இரக்கம்
புகழொடு தோன்றுக
புத்தேள்
தெய்வம், புதுமை
ஆசிரியர், குரு
புத்தேள் நாடு
நாள்
தினம், முற்பகல்,
காலம் முதலியன
ஒளி
நாளும் வாளும்
நிணம்
கொழுப்பு,
மாமிசம்
வெண்ணெய்,
நெய்
திருக்குறளில்
நிணமும்
புலால் மறுப்பும்
நுசுப்பு
இடுப்பு
கண்ணிமை
கதுப்பு-ஓதி-நுசுப்பு
நுதல்
நெற்றி, புருவம்,
சொல் முதலியன
கண்,
கண்ணிமை
நுதலும்
நுதலப்படாத கருத்துக்களும்
நூல்
புத்தகம், பஞ்சு,
கயிறு, கல்வி முதலியன
ஏர்,
கலப்பை
நூல் என்றால்
என்ன?
முகம்
தலையின் முன்
பகுதி, வாசல்
முதலியன
கண்
இன்னொரு முகம்
முறுவல்
பல், புன்னகை
முதலியன
கண்
முறுவல் என்றால்
என்ன?
முயக்கம்
உடலுறவு,
தழுவுகை

பார்வை
திருக்குறளில்
முயக்கம்
முயங்கு
தல்
தழுவுதல்,
உடலுறவு கொள்ளுதல்
பார்த்தல்,
தோன்றுதல்
சங்க கால முதலிரவும்
காதலர் தினமும்
முலை
பெண்களின்
மார்பகம்
கண்,
கண்ணிமை
கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?
மேனி
உடல், வடிவம்
நிறம் முதலியன
கண்,
கண்ணிமை
மேனி என்றால்
என்ன?
வடு
மாம்பிஞ்சு, தழும்பு முதலியன
நத்தை, சிப்பி,
கறையான்,
சோழி, கறை
வடு என்றால்
என்ன?
வளை
வளையல்
கண்மைபூச்சு
இறை என்றால்
என்ன?
வான்பகை
பெரும்பகை
மலை
வடிவேல் எறிந்த
வான்பகை
வித்து
விதை, விந்து,
சந்ததி முதலியன
ஈரம், நீர்
வித்தும் இடவேண்டுமோ?
வித்தகன்
வல்லவன், அதிசயத்தன்மை
உடையவன்,
கம்மாளன்
இரக்கமுடையோர்,
கொடையாளர்
யார் வித்தகர்?
வேட்டல்
யாகம்,
லியாணம்
முலி 
பசியாற்றுதல்
திருக்குறளில்
வேள்வியும்
வேட்டலும்
வேள்வி
யாகம், லியாணம் முலி
பசியாற்றுதல்
திருக்குறளில்
வேள்வியும்
வேட்டலும்
வேனில்
பருவம், வெப்பம்
முதலியன
நுங்கு,
பனைமரம்
மாசில் வீணை
ம(றை)றந்துபோன தமிழ்ப் பண்பாட்டு / வரலாற்றுக் கூறுகள்:

    தமிழ் அகராதிகள் சொற்களுக்குச் சரியான பொருட்களைக் காட்ட மறந்ததின் மோசமான விளைவுகளில் ஒன்று தான் சங்கத் தமிழரின் பண்பாட்டு / வரலாற்றுக் கூறுகளை அறியமுடியாமல் போனது. ஒரு கல்லுக்குள் பல சிற்பங்கள் ஒளிந்திருந்தாலும் அதனைச் சரியான முறையில் உளிகொண்டு செதுக்கினால் ஒழிய எதையும் வெளிக்கொணர முடியாது. அரைகுறையாக செதுக்கப்பட்டால் அச் சிற்பத்தால் எந்தப் பயனுமில்லை. அதைப்போல ஒரு சொல் எனும் கல்லை சரியான முறையில் ஆய்வென்னும் உளிகொண்டு செதுக்கினால் தான் சரியான பொருளென்னும் சிலையினை வெளிக்கொணர முடியும். அரைகுறை ஆய்வுகளால் வெளிப்படும் பொருண்முடிபுகளால் ஒரு பயனும் இல்லை. அவ்வகையில், தவறான பொருட்களால் நாம் இழந்துவிட்ட தமிழரின் பண்பாட்டு மற்றும் வரலாற்றுக் கூறுகள் சிலவற்றை இங்கே காணலாம்.

1.   தமிழ்ப்பெண்கள் முகத்திரை அணிதல்:

  
பழங்காலத் தமிழகத்தில் பெண்கள் தமது முகத்தினை வெளிப்படையாகக் காட்டாமல் தமது ஆடைகொண்டு முகத்திரையாக மறைத்திருப்பர். இத் திரையானது முதுகுப்புறத்திலிருந்து தலைக்கு மேலாகக் கொண்டுவரப்பட்டு முகத்தில் கண்பகுதி வரையிலும் மறைக்கப்படுமாறு தொங்கவிடப் பட்டிருக்கும். இத் திரையினால் பெண்களின் முதுகுப்பகுதி, தலைமயிர் ஆகியன முழுவதும் மறைக்கப்படுவதுடன் முகத்தில் நெற்றியும், கண்களும் மறைக்கப்பட்டிருக்கும். அருகில் உள்ள படம் இதனைத் தெளிவாகக் காட்டும்.

      பெண்கள் முகத்திரையால் தமது கண்களை மூடியிருப்பதனை யானையின் கண்களை முகபடாம் கொண்டு மூடியிருப்பதுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

              கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
              படாஅ முலைமேல் துகில். – 1087.

    இப் பாடலில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற சரியான பொருளை அகராதிகள்  காட்டாததால், இப் பாடலின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலும் இப் பாடலில் கூறப்பட்டிருக்கும் பழந்தமிழரின் பண்பாட்டுக் கூறினை அறிந்துகொள்ள முடியாமலும் போயிற்று. தமிழகப் பெண்களிடையே இன்று முற்றிலும் வழக்கொழிந்துபோன இப் பழக்கமானது, இன்றளவும் வடநாட்டுப் பெண்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும். முலை என்ற சொல்லின் பொருள் பற்றிய முழுமையான தகவலை ‘ கண்ணகி மதுரையை எரித்தது எப்படி ? ‘ என்ற ஆய்வுக் கட்டுரையில் காணலாம்.

2.   பழந்தமிழரின் காதலர் தினம்;

    காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிவளர்த்து வந்த தமிழ்ச் சமூகம் தமக்கான காதலர் தினத்தை மறந்துபோனது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றேயாகும். இன்று மேலைநாட்டாரின் பழக்க வழக்கப்படி பிப்ரவரி 14 ம் தேதியினை காதலர் தினமாகக் கொண்டாடிவருகிறது. இதற்கெல்லாம் காரணம், தமிழ் அகராதிகள் முயக்கம் என்ற சொல்லுக்கான சரியான பொருளைக் காட்டாமல் விட்டதேயாகும். 

   பழந்தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருநாளில் முழுநிலா வெளிச்சத்தில் ஆற்றங்கரையில் காதலர் தினத்தைக் கொண்டாடி வந்ததைக் கீழ்க்காணும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

    …….விறற்போர்ச் சோழர் இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
              வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
              உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்
              பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்….. - அகம்.137

      கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்          
              வெம் கண் நெடு வேள் வில்விழா காணும்
              பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் - சிலப். ஊர்காண்

     இப் பாடல்களில் வரும் முயக்கம் என்னும் சொல்லுக்கு ‘ பார்த்தல் அல்லது தரிசித்தல் ‘ என்ற சரியான பொருளை அகராதிகள் காட்டாததால் பங்குனி மாதத்தில் உத்திர நாளன்று காதலர்கள் ஒன்றுகூடி காமதேவனுக்கு வில்விழா எடுத்து முழுநிலவைக் கண்டு மகிழ்ந்திருந்த செய்தியினை அறியமுடியாமல் போயிற்று. இதைப் பற்றிய மேலதிக தகவல்களை ‘ சங்ககால முதலிரவும் காதலர் தினமும் ‘ என்ற ஆய்வுக் கட்டுரையில் காணலாம்.

    காதலர்கள் முழுநிலவின் ஒளியில் நனைந்தவாறு இருக்கும்போது, காதலன் தனது காதலியின் கண்கள் தரும் இன்பத்தைவிடவா இந்த சந்திரன் தந்துவிடப் போகிறது என்றுகூறி காதலியின் கண்ணழகினைப் புகழ்வதாகக் கீழ்க்காணும் குறளில் வள்ளுவரும் கூறுகிறார்.

            தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
            தாமரைக் கண்ணான் உலகு. – 1103.

    இப்பாடலில் வரும் ‘தாமரைக்கண்ணான்’ என்ற சொல்லுக்கு ‘ சந்திரன் ‘ என்ற பொருளையும் ‘தோள்’ என்ற சொல்லுக்கு ‘கண்’ என்ற பொருளையும் காட்டுவதற்கு அகராதிகள் தவறியதால், இப் பாடலின் மெய்ப்பொருளை அறியமுடியாமல் போயிற்று. இதுபற்றிய மேலதிக தகவல்களை ‘ தாமரைக்கண்ணான் உலகு ‘ மற்றும் ‘ தோள் என்றால் என்ன?’ ஆகிய கட்டுரைகளில் கண்டு மகிழலாம்.

3.   புத்தேள் நாடென்னும் பூலோக சொர்க்கம்:

   இறந்தபின்னர் சொர்க்கம் செல்வோமா நரகம் செல்வோமா என்றில்லாமல் தாம் வாழும் மண்ணிலேயே ஒரு சொர்க்கத்துக்கு நிகரான நகரினைத் தனியே உருவாக்கி வாழ்ந்துவந்தனர் பழந்தமிழர்கள். இதனைப் புத்தேள் நாடு, புத்தேள் உலகம் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த பூலோக சொர்க்கமானது மதுரையில் வைகை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்தது என்று கீழ்க்காணும் மதுரைக் காஞ்சிப் பாடல் குறிப்பிடுகிறது.

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ...  -     -மதுரைக்காஞ்சி - 700

     நல்ல கல்வி அறிவும் நற்குணங்களும் நிறைந்த பெரியோர்களாகிய ஆசிரியர்களின் நல்வாழ்வுக்கென்று தனியாக புத்தேள் நாடு என்னும் பூலோக சொர்க்கத்தினை உருவாக்கி, அதற்கு ஒரு மதில்சுவரை எழுப்பி, காவலும் கட்டுப்பாடும் விதித்துப் பாதுகாத்து வந்தனர். புத்தேள் என்னும் சொல்லுக்கு ஆசிரியன் என்னும் பொருளை அகராதிகள் காட்டத் தவறியதால், இச் செய்தியினை அறிந்துகொள்ள முடியாமல் போயிற்று. இதைப்பற்றிய மேலதிக தகவல்களை ‘ புத்தேள் நாடு ‘ என்னும் கட்டுரையில் காணலாம்.

    இதுபோல பழந்தமிழரின் பல வரலாற்று / பண்பாட்டுக் கூறுகளை அகராதிகள் காட்டிய தவறான பொருட்களால் அறியமுடியாமல் இழந்திருக்கிறோம். 

முடிவுரை:

  இதுவரை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள ஐம்பது சொற்களுக்குமான ஆய்வுக் கட்டுரைகளையும் இணையத்தில் காணலாம். இந்நிலையில், பசலை, பசலை, பசத்தல், மேனி, நுதல், பாம்பு, அரவு, கூந்தல், அறல், முலை, அல்குல் ஆகிய சொற்களுக்கான ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் தனியாகத் தொகுத்து ‘ தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும் ‘ என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழ் ஆய்வாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய நூல். இந்நூலை வாங்க விரும்புவோர் நூல் ஒன்றுக்கு ரூ.200 மட்டும் (தபால் செலவு உட்பட) கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

கணக்கு எண்: 1709135000003090.     கணக்கு பெயர்: RAJAGOMATHI S
IFSC CODE: KVBL0001709             வங்கி பெயர்: KARUR VYSYA BANK

ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்க விரும்புவோர் நூல்விலையில் தள்ளுபடி மற்றும் கமிசன் பெறுவதற்கு கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியிலோ எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: vaendhan@gmail.com.  செல்பேசி: 9003664799. போன்: 04566-224212.