செவ்வாய், 18 டிசம்பர், 2018

தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 2

முன்னுரை:

தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - தொகுதி 1 ஐத் தொடர்ந்து அதன் இரண்டாம் தொகுதி இத்துடன் வெளியிடப்படுகிறது. இதில் மொத்தம் 602 பெயர்கள் உள்ளன.
தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 2பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் பொருள்
கயலதி மீன் கோட்மியா சங்கு தமன்மியா பொன்
கயல்மியா மீன் கோடலா மலர் தமனிகா பொன்
கயலிகா மீன் கோடிகா சங்கு தமனிமா பொன்
கயலிதி மீன் கோடிதி சங்கு தமனியா பொன்
கயலிமா மீன் கோடிமா சங்கு தமனினி பொன்
கயலியா மீன் கோடியா சங்கு தளதி குளிர்ச்சி
கயலினி மீன் கோடினி சங்கு தளமியா மலர்
கரதி குளம் கோததி மாலை தளவிகா மலர்
கரந்ததி மலர் கோத்மியா மாலை தளவிமா மலர்
கரந்திகா மலர் கோதிகா மாலை தளவியா மலர்
கரந்திதி மலர் கோதிதி மாலை தளிகா குளிர்ச்சி
கரந்திமா மலர் கோதிமா மாலை தளிதி குளிர்ச்சி
கரந்தியா மலர் கோதியா மாலை தளிமா குளிர்ச்சி
கரந்தினி மலர் கோதினி மாலை தளிமியா குளிர்ச்சி
கரமியா மலர் கோபதி செம்பூச்சி தளிமியா இலை
கர்மியா குளம் கோப்மியா செம்பூச்சி தளியா குளிர்ச்சி
கர்யா குளம் கோபிகா செம்பூச்சி தளிர்கா இலை
கர்வதி மேகம் கோபிதி செம்பூச்சி தளிரதி இலை
கர்வ்யா மேகம் கோபிமா செம்பூச்சி தளிர்மா இலை
கர்விகா மேகம் கோபியா செம்பூச்சி தளிர்யா இலை
கர்விதி மேகம் கோபினி செம்பூச்சி தளிரிகா இலை
கர்விமா மேகம் கோலதி அழகு தளிரிதி இலை
கர்வினி மேகம் கோல்மியா அழகு தளிரினி இலை
கரிகா குளம் கோலிகா அழகு தளினி குளிர்ச்சி
கரிதி குளம் கோலிதி அழகு தாம்ரதி மலர்
கரிமா குளம் கோலிமா அழகு தாம்ரிகா மலர்
கரியா குளம் கோலியா அழகு தாம்ரிதி மலர்
கரினி குளம் கோலினி அழகு தாம்ரிமா மலர்
கருவிளா மலர் சண்பகா மலர் தாம்ரியா மலர்
கலதி அழகு சந்ததி அணி தாம்ரினி மலர்
கல்மியா அழகு சந்திகா அணி தாரதி மாலை
கல்யா அழகு சந்திதி அணி தார்மியா மாலை
கலாமியா தோகை சந்திமா அணி தாரிகா மாலை
கலாமியா மான் சந்தியா அணி தாரிதி மாலை
கலாயதி மான் சலமா நீர் தாரிமா மாலை
கலாயா மான் சலமியா நீர் தாரியா மாலை
கலாயிகா மான் சலவதி நீர் தாரினி மாலை
கலாயிதி மான் சலவிகா நீர் தாழதி மலர்
கலாயினி மான் சலவிதி நீர் தாழ்மியா மலர்
கலாவதி தோகை சலவியா நீர் தாழிகா மலர்
கலாவமா தோகை சலவினி நீர் தாழிதி மலர்
கலாவிகா தோகை சாத்மியா அணி தாழிமா மலர்
கலாவிதி தோகை சாந்ததி அணி தாழியா மலர்
கலாவியா தோகை சாந்திகா அணி தாழினி மலர்
கலாவினி தோகை சாந்திதி அணி தித்ததி பொட்டு
கலிகா அழகு சாந்திமா அணி தித்திகா பொட்டு
கலிதி அழகு சாந்தியா அணி தித்திதி பொட்டு
கலிமா அழகு சாந்தினி அணி தித்திமா பொட்டு
கலினி அழகு சாயதி அழகு தித்தியா பொட்டு
கலைமா மான் சாய்மா அழகு தித்தினி பொட்டு
கவரதி மான் சாய்மியா அழகு தித்மியா பொட்டு
கவர்மியா மான் சாயா அழகு திதலதி பொட்டு
கவரிகா மான் சாயிகா அழகு திதல்மியா பொட்டு
கவரிதி மான் சாயிதி அழகு தித்லிகா பொட்டு
கவரிமா மான் சாயினி அழகு திதலிதி பொட்டு
கவரியா மான் சாலதி அழகு திதலிமா பொட்டு
கவரினி மான் சால்மியா அழகு தித்லியா பொட்டு
கவினதி அழகு சாலிகா அழகு தித்லினி பொட்டு
கவின்மா அழகு சாலிதி அழகு திரதி செல்வம்
கவின்மியா அழகு சாலிமா அழகு திரமியா நீர்
கவினிகா அழகு சாலியா அழகு திர்மியா செல்வம்
கவினிதி அழகு சாலினி அழகு திரய்கா நீர்
கவினியா அழகு சிந்ததி மலர் திரவிகா நீர்
கவினினி அழகு சிந்திகா மலர் திராயதி நீர்
காஞ்சதி மலர் சிந்திமா மலர் திராயா நீர்
காஞ்சிகா மலர் சிந்தியா மலர் திராயிதி நீர்
காஞ்சிதி மலர் சிந்தினி மலர் திராயினி நீர்
காஞ்சிமா மலர் சிந்து மலர் திரிகா செல்வம்
காஞ்சியா மலர் சிரலதி பறவை திரிதி செல்வம்
காஞ்சினி மலர் சிரல்மியா பறவை திரியா செல்வம்
காந்தளா மலர் சிரலிகா பறவை திரினி செல்வம்
காப்பதி அணி சிரலிதி பறவை திருமா செல்வம்
காப்பிகா அணி சிரலிமா பறவை திரைமா நீர்
காப்பிதி அணி சிரலியா பறவை திலகா பொட்டு
காப்பியா அணி சிரலினி பறவை திலதி மலர்
காப்பினி அணி சிலதி வானவில் தில்மியா மலர்
காப்புமா அணி சில்மியா வானவில் தில்லதி மலர்
காப்மியா அணி சில்லதி வானவில் தில்லிகா மலர்
காமதி விருப்பம் சில்லிதி வானவில் தில்லிதி மலர்
காம்பதி மலர் சில்விகா வானவில் தில்லியா மலர்
காம்பிகா மலர் சில்வியா வானவில் தில்லினி மலர்
காம்பிதி மலர் சில்வினி வானவில் திலிகா மலர்
காம்பிமா மலர் சிலாய்மா வானவில் திலிதி மலர்
காம்பியா மலர் சிலிகா வானவில் திலிமா மலர்
காம்பினி மலர் சிலிதி வானவில் திலியா மலர்
காம்யா விருப்பம் சிலியா வானவில் திலினி மலர்
காமிகா விருப்பம் சிலினி வானவில் திறலதி அழகு
காமிதி விருப்பம் சிறகதி சிறகு திறல்மியா அழகு
காமியா சோலை சிறகிதி சிறகு திறலிகா அழகு
காமியா மலர் சிறகிமா சிறகு திறலிதி அழகு
காமினி விருப்பம் சிறகியா சிறகு திறலிமா அழகு
காரதி மேகம் சிறகினி சிறகு திறலியா அழகு
கார்மியா மேகம் சீர்கா செல்வம் திறலினி அழகு
கார்யா மேகம் சீரதி செல்வம் தீமதி இன்பம்
கார்வதி மேகம் சீர்மா செல்வம் தீமா இன்பம்
காரவ்யா மேகம் சீர்மியா செல்வம் தீமிகா இன்பம்
கார்விகா மேகம் சீர்யா செல்வம் தீமியா இன்பம்
கார்விதி மேகம் சீரிகா செல்வம் தீமினி இன்பம்
கார்விமா மேகம் சீரிதி செல்வம் துடவதி தோட்டம்
கார்வினி மேகம் சீரினி செல்வம் துடவ்மியா தோட்டம்
காரிகா மேகம் சுடரதி ஒளி துடவிகா தோட்டம்
காரிதி மேகம் சுடர்மியா ஒளி துடவிதி தோட்டம்
காரிமா மேகம் சுடரிகா ஒளி துடவிமா தோட்டம்
காரியா மேகம் சுடரிதி ஒளி துடவியா தோட்டம்
காரினி மேகம் சுடரிமா ஒளி துடவினி தோட்டம்
காலதி பொழுது சுடரியா ஒளி துணரதி மலர்
கால்மா பொழுது சுடரினி ஒளி துணர்மியா மலர்
கால்மியா பொழுது சுவதி இன்பம் துணரிகா மலர்
கால்யா பொழுது சுவ்மியா இன்பம் துணரிதி மலர்
காலிகா பொழுது சுவிகா இன்பம் துணரிமா மலர்
காலிதி பொழுது சுவிதி இன்பம் துணரியா மலர்
காலினி பொழுது சுவிமா இன்பம் துணரினி மலர்
காவதி சோலை சுவியா இன்பம் தும்பதி மலர்
காவிகா சோலை சுவினி இன்பம் தும்பிதி மலர்
காவிதி சோலை சுவையினி இன்பம் தும்பிமா மலர்
காவியா சோலை சூரதி கொடி தும்பியா மலர்
காவினி சோலை சூர்மியா கொடி தும்பினி மலர்
கானதி மணம் சூர்லிகா கொடி துவரதி பவளம்
கான்மியா மணம் சூர்லியா கொடி துவர்மியா பவளம்
கானிகா மணம் சூர்லினி கொடி துவரிகா பவளம்
கானிதி மணம் சூரிகா கொடி துவரிதி பவளம்
கானிமா மணம் சூரிதி கொடி துவரிமா பவளம்
கானியா மணம் சூரிமா கொடி துவரியா பவளம்
கானினி மணம் சூரியா கொடி துவரினி பவளம்
குடசதி மலர் சூரினி கொடி துழாமியா மலர்
குடசிகா மலர் சூலதி மேகம் துழாயதி மலர்
குடசிதி மலர் சூல்மியா மேகம் துழாயா மலர்
குடசிமா மலர் சூலிகா மேகம் துழாயிகா மலர்
குடசியா மலர் சூலிதி மேகம் துழாயிதி மலர்
குடசினி மலர் சூலிமா மேகம் துழாயிமா மலர்
குடமியா மலர் சூலியா மேகம் துழாயினி மலர்
குர்மியா ஒளி சூலினி மேகம் துளதி நீர்
குரலதி மலர் செம்மலா மலர் துளிகா நீர்
குரல்மியா மலர் செருந்ததி மலர் துளிதி நீர்
குரலிகா மலர் செருந்திகா மலர் துளிமா நீர்
குரலிதி மலர் செருந்திதி மலர் துளிமியா நீர்
குரலிமா மலர் செருந்திமா மலர் துளியா நீர்
குரலியா மலர் செருந்தியா மலர் துளினி நீர்
குரலினி மலர் செருந்தினி மலர் தூமியா சிறகு
குர்வதி ஒளி செருமியா மலர் தூரதி கருவி
குர்விகா ஒளி செருவிளா மலர் தூர்மியா கருவி
குர்விதி ஒளி செவதி பொழுது தூரிகா கருவி
குர்வினி ஒளி செவ்மியா பொழுது தூரிதி கருவி
குரிகா ஒளி செவ்வதி பொழுது தூரிமா கருவி
குரியா ஒளி செவ்விகா பொழுது தூரியா கருவி
குரினி ஒளி செவ்விதி பொழுது தூரினி கருவி
குருகிலா மலர் செவ்விமா பொழுது தூவதி சிறகு
குலதி இலை செவ்வியா பொழுது தூவிகா சிறகு
குல்மியா இலை செவ்வினி பொழுது தூவிதி சிறகு
குல்லதி இலை செவிகா பொழுது தூவிமா சிறகு
குல்லிகா இலை செவிதி பொழுது தூவியா சிறகு
குல்லிதி இலை செவினி பொழுது தூவினி சிறகு
குல்லிமா இலை சென்மியா தலை தேமதி தேன்
குல்லியா இலை சென்னதி தலை தேமிகா தேன்
குல்லினி இலை சென்னிகா தலை தேமிதி தேன்
குலிகா இலை சென்னிதி தலை தேமிமா தேன்
குலிதி இலை சென்னிமா தலை தேமியா தேன்
குலிமா இலை சென்னியா தலை தேமினி தேன்
குலியா இலை சென்னினி தலை தேரதி தேர்
குலினி இலை சேடதி மலர் தேர்மியா தேர்
குவமியா மலர் சேட்மியா மலர் தேரிகா தேர்
குவளதி மலர் சேடிகா மலர் தேரிதி தேர்
குவளிகா மலர் சேடிதி மலர் தேரிமா தேர்
குவளிதி மலர் சேடிமா மலர் தேரியா தேர்
குவளிமா மலர் சேடியா மலர் தேரினி தேர்
குவளியா மலர் சேடினி மலர் தேனதி தேன்
குவளினி மலர் சேயதி அழகி தேன்மியா தேன்
குறிஞ்சிகா மலர் சேயா அழகி தேனிகா தேன்
குறிஞ்சிமா மலர் சேயிகா அழகி தேனிதி தேன்
குறிஞ்சியா மலர் சேயிதி அழகி தேனிமா தேன்
குறிஞ்சினி மலர் சேயிமா அழகி தேனியா தேன்
கூவிரா மலர் சேயினி அழகி தேனினி தேன்
கூவிளா மலர் ஞாழதி மலர் தொடதி அணி
கேழதி ஒளி ஞாழ்மியா மலர் தொடிகா அணி
கேழ்மியா ஒளி ஞாழிகா மலர் தொடிதி அணி
கேழிகா ஒளி ஞாழிதி மலர் தொடிமா அணி
கேழிதி ஒளி ஞாழிமா மலர் தொடிமியா அணி
கேழிமா ஒளி ஞாழியா மலர் தொடியா அணி
கேழியா ஒளி ஞாழினி மலர் தொடினி அணி
கேழினி ஒளி தகரதி மலர் தோகதி தோகை
கொடிகா கொடி தகர்மியா மலர் தோகிகா தோகை
கொடிதி கொடி தகரிகா மலர் தோகிதி தோகை
கொடிமா கொடி தகரிதி மலர் தோகிமா தோகை
கொடிமியா கொடி தகரிமா மலர் தோகியா தோகை
கொடியா கொடி தகரியா மலர் தோகினி தோகை
கொடினி கொடி தகரினி மலர் தோடதி மலர்
கொண்மதி மேகம் தண்டதி வேல் தோட்மியா மலர்
கொண்மா மேகம் தண்டிகா வேல் தோடிகா மலர்
கொண்மிகா மேகம் தண்டிதி வேல் தோடிதி மலர்
கொண்மிதி மேகம் தண்டிமா வேல் தோடிமா மலர்
கொண்மியா மேகம் தண்டியா வேல் தோடியா மலர்
கொண்மினி மேகம் தண்டினி வேல் தோடினி மலர்
கொண்யா மேகம் தண்ணதி குளிர்ச்சி தோமியா தோகை
கோகதி மலர் தண்ணிதி குளிர்ச்சி தோளதி கண்
கோகிகா மலர் தண்ணினி குளிர்ச்சி தோள்மியா கண்
கோகிதி மலர் தண்மா குளிர்ச்சி தோளிகா கண்
கோகிமா மலர் தண்மியா குளிர்ச்சி தோளிதி கண்
கோகியா மலர் தணிகா குளிர்ச்சி தோளிமா கண்
கோகினி மலர் தணியா குளிர்ச்சி தோளியா கண்
கோங்கினி மலர் தமநிதி பொன் தோளினி கண்
கோடதி சங்கு தமனதி பொன்

98 கருத்துகள்:

 1. தொடர்ந்து வாசிக்கிறேன், பிரமித்துப்போய்விட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. உண்மை. தமிழ்மொழி அத்தகையதோர் ஆழமும் அதில் மூழ்குவோர்க்கு பேரின்பமும் தரும் சொல்லமுதக் கடல். :))

  பதிலளிநீக்கு
 3. இதை தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கும் பெயர்களை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. கர் , தாம், குர் ஆகிய சொற்களின் பொருள் என்ன ஐயா பொருள் என்ன ஐயா?

  பதிலளிநீக்கு
 5. கர் என்பது கரை(குளம்), கருவி(மேகம்) ஆகிய சொற்களின் வேர். குர் என்பது குரு(ஒளி)வின் வேர். தாம்ர என்பது தாமரையின் வேர்.

  பதிலளிநீக்கு
 6. ஐயா, காந்தள் பெயருடன் வேறு பெயர் சேர்த்து வேண்டும். பெண் குழந்தைக்கு பெயர் வைக்கலாம் என்று உள்ளேன். தயவு செய்து பதிலளியுங்கள்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஐயா வை,கி,வே எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் பகிரவும்

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்,தாரகன் இப்பெயர் முருகனால் வதைக்கப்பட்ட அசுரன் என்று விளக்கம் தருகின்றனர். என் குழந்தைக்கு வைக்கலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாரகனுக்குப் பதிலாக தாரிகன், தார்மன், தார்மியன் என்று பெயர் சூட்டலாம் ஐயா.

   நீக்கு
 10. எனது பெண் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் கூறுங்கள் ஐயா, த,தி,செ,சோ. எனது மனைவி தன்சிகா என்ற பெயர் வைக்குமாறு கூறுகிறார். தாங்கள் தான் எங்கள் இருவருக்கும் பிடித்த பெயரை கூறவேண்டும் . நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செவ்விகா, செருந்திகா, தமனிகா, தளிகா, தளிரிகா போன்றவற்றில் ஒன்றை வைக்கலாம். இன்னும் வேண்டும் என்றால் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.
   http://thiruththam.blogspot.com/2018/12/2.html

   நீக்கு
 11. ஐயா,
  திவ்யசிவன்யா, சிவந்திகா , திவ்யசிவானி, திவ்யதாரினி, இவை அனைத்தும் தமிழ் பெயர்களா? தன்சிகா என்பதும் தமிழ் பெயரா? தயவுகூர்ந்து விளக்குங்கள் ஐயா. எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது எங்களால் சரியான பெயரை தெரிவு செய்ய இயலவில்லை. தாங்கள் தான் எங்கள் குழப்பத்தை போக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது மகளின் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி , தயவுகூர்ந்து எங்களுக்கு உதவுமாரு பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  இவன்,
  சிவகுமார்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் தமிழ்ப்பெயர்கள் தான். தாராளமாகச் சூட்டுங்கள். வாழ்த்துக்கள். :))

   நீக்கு
  2. ஐயா,
   மேற்க்கூறிய அனைத்து பெயர்களின் மூலங்களையும் , பொருளையும் தெரிவியுங்கள். நன்றி சிவகுமார்

   நீக்கு
  3. ஐயா,
   மேற்க்கூறிய அனைத்து பெயர்களின் மூலங்களையும் , பொருளையும் தெரிவியுங்கள். நன்றி சிவகுமார்

   நீக்கு
  4. திவ்யசிவன்யா, திவ்யசிவானி = சிவனைப் போல சிவப்பழகு உடையவள். சிவந்திகா = சிவப்பானவள். திவ்யதாரணி = ஒளியும் அழகும் உடையவள். தனுசிகா = வில்லைப் போல வளைவுடையவள்.

   நீக்கு
 12. ஐயா வணக்கம் ச,சா,சி வரிசையில் பெண் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் சொல்லுங்கள் மற்றும் சிற்பிகா பெயர் பின்னால் சேர்ப்பதற்கு ஏற்ற பெயர்களை கூறுங்கள்

  பதிலளிநீக்கு
 13. மே, மை இல் பெயர்கள் பதிவிட வேண்டுகிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் பெயர்கள் - மேகலா, மேகினி, மேகதி, மேகிதி, மேகனி, மேகிகா, மேகியா, மேகிமா, மேதினி, மேதிமா, மேதியா, மேதிகா, மைதிலி

   நீக்கு
 14. வணக்கம் ஐயா !!
  என் பெண் குழந்தைக்கு "கயில் நிதிலா" என பெயற்றிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். உங்கள் கருத்து

  நன்றி
  லோகேஷ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நித்திலம் என்றால் முத்து. கயில் என்றால் பூட்டு, சேர்க்கை, மாலை என்று பொருள். கயில் நிதிலா என்றால் முத்துமாலை என்று பொருள்.

   நீக்கு
  2. மிக்க நன்றி பதிலளித்தமைக்கு !!

   நீக்கு
 15. ஐயா எனக்கு இரண்டு பெயர் உள்ள தமிழ் பெண் பெயர் வேண்டும்

  பதிலளிநீக்கு
 16. ஐயா என் மகளுக்கு த தி து தொ என்ற எழுத்தில் பெயர் வைக்கவேண்டும் நாங்கள் ஆருத்ரா அதீல அபூர்வா என்ற பெயர்கள் எங்களுக்கு பிடித்துள்ளது இதற்கு தகுந்த பெயர்கள் சொல்லுங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பக்கத்திலேயே நீங்கள் கேட்ட பெயர்கள் உள்ளன. அவற்றில் சிறிதாக உள்ள பெயரை நீங்கள் ஆருத்ர, அபூர்வ என்ற பெயர்களின் பின்னால் சேர்க்கலாம். சில சான்றுகள்: தமனிகா,திலதி, திலிகா, திலிமா, திலியா, திறலிகா, திறலிமா, தொடிகா, தொடினி, தும்பினி, தும்பிமா ...

   நீக்கு
 17. வணக்கம் ஐயா,
  தன்விகா என்பது தமிழ் பெயரா ? பெயரின் பொருள் என்ன ?
  நன்றி,
  சிவகுமார்.

  பதிலளிநீக்கு
 18. தன்மை + இகா = தன்மிகா >>> தன்விகா = தன்மையானவள் = நற்குணம் மிக்கவள் என்று பொருள். தன்மிகா, தன்விகா - இரண்டும் தமிழ்ப் பெயர்கள் தான்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஐயா,

  தழலினி - தழல்+இனி. நெருப்பு போன்றவள்.
  தாழினி - தாழ்+இனி. பணிவானவள்,தாழ்மையானவள்.

  இந்த இரண்டு பெயர்களின் பொருள் சரியா?

  இல்லையெனில் பொருள், அதை எப்படி பிரிப்பது என்ற விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயர்களின் பொருள் சரியே. தாராளமாய் வைக்கலாம்.

   நீக்கு
  2. சினாமிகா, சிவானி பொருள் please send me

   நீக்கு
  3. சிவம் + அண் (=நெருங்கு) + இ = சிவணி >>> சிவானி = சிவனுக்கு நெருக்கமானவள் = பார்வதி. சினை (=மலர்மொட்டு) + அம் (=அழகு) + இகா = சினமிகா >>> சினாமிகா = அழகிய மலர்மொட்டு போன்றவள்

   நீக்கு
 20. மிக்க நன்றி ஐயா. ஒரு சந்தேகம். தாழினி - மலர் என்று உங்கள் பட்டியலில் கொடுத்துள்ளீா்கள். அதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. ஐயா வணக்கம். ரித்விக் ௭ன்ற பெயரின் பொருள் கூறுங்கள்.

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 22. ஐயா வணக்கம்,

  தாரா ௭ன்பது தமிழஂ பெயரா?

  ஆமஂ எனஂறாலஂ பெயரின் பொருள் கூறுங்கள்.

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாரா - பெண்ணுக்குரிய தமிழ்ப்பெயர்.
   தார் = பூ, மொட்டு, மாலை.
   தார் + ஆ = தாரா = பூ / மொட்டு / மாலை போன்றவள்.

   நீக்கு
 23. ஐயா வணக்கம்,

  தாரணா ௭ன்பது தமிழஂ பெயரா?

  ஆமஂ எனஂறாலஂ பெயரின் பொருள் மாலை எனஂபது சரியா?

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 24. தார் என்றால் மாலை. தார் + அணி = தாரணி = மாலை அணிந்தவள். தாரணி என்றோ தாரணா என்றோ வைக்கலாம். தமிழ்ப்பெயர் தான்.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம். என்னுடைய மகளுக்கு இறைவன் முருகன் பெயர் நிறைந்த இக்கால தமிழ் பெயர்கள் சிலவற்றை கூறவும்.

  பதிலளிநீக்கு
 26. மன்னிக்கவும். முருகன் பெயர்கள் ஏராளமான பிற தளங்களில் கிடைக்கின்றன. இத் தளத்தில் உள்ளவை சாதி மதம் சாராத பொதுப்பெயர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 27. தன்யஸ்ரீ தமிழ் பெயரா ? அதன் அர்த்தம் என்னவென்று கூறவும். ஒருவேளை அது சமஸ்கிருத பெயர் என்றால், அதன் தமிழ் பெயரை கூறவும் .நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தணியைசீரி என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு வடிவமே தன்யாஸ்ரீ. தண் (=அன்பு) + இயை (=பொருந்து) + சீர் (=செல்வம், அழகு, பெருமை) + இ = தணியைசீரி = அன்பும் அழகும் செல்வமும் பெருமையும் பொருந்தியவள். ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து என்பதால் அதனைத் தவிர்த்து தன்யாசீர் / தன்யசீர் என்று வைக்கலாம்.

   நீக்கு
 28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாழல் (=கொன்றை) மரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்த பெயர்களே ஞாழியா, ஞாழினி நாழி என்றால் உள்ளே நீண்ட துளையுடையது என்று பொருள். உள்ளே துளையுடைய பழத்தைக் கொடுப்பதால் கொன்றைக்கு ஞாழல் (நாழி + அள் = நாழள் >>> ஞாழல்)என்று பெயர்.

   நீக்கு
 29. ஐயா வணக்கம்,

  எனது பெண் குழந்தை பூரம் நட்சத்திரம் பெயர்கள், மோ, ட, டி, டூ ஆரம்பிக்கும் வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைய கோளாறினால் உடன் பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்கவும். ட,டி,டூ வில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா. மோவில் தொடங்கும் தமிழ்ப் பெயர்களை இத் தளத்திலேயே பார்க்கலாம். நன்றி.

   நீக்கு
 30. வணக்கம், முதல் முறையாக இந்த தளத்திற்கு வந்துள்ளேன். நான் தேடி வந்ததை விட மிக அதிகமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நன்றிகள் பல.
  உங்களுடையது மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள முயற்ச்சி. வாழ்த்துகள்.


  ஞாழன் என்ற பெயருடன், தொடக்கத்தில் ச சா சி தே தோ ல், ஈரெழுத்தில் அமைக்கக்கூடிய அழகிய ஆண் பெயரை(பெயர்களை) பரிந்துரைக்கிறார்களா? அதன் பொருளுடன்?
  உதாரணமாக சீர்ஞாழன், சாயி(க)ஞாழன்

  ஞாழன் என்றாலும் கொன்றை என்ற பொருள் தானா? அப்படி என்றால் மேற்கூறிய உதாரணங்களுக்கு வரும் பொருள் ஆணிற்கு ஏற்புடையதாக இருக்காதா??

  நன்றிகளுடன் மாலதி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திற்கு நன்றி. ஞாழன் என்பது ஆணுக்குரிய தமிழ்ப்பெயர். கொன்றையைப் போன்றவன் என்று பொருள் கொள்ளலாம். இத்துடன் சீர் (=புகழ்), செம் (=சிறப்பு), சால் (=நற்பண்பு), சூர் (=வீரம்), தண் (=குளிர்ச்சி), சாய் (=ஒளி), தேன் (=இனிமை) போன்ற முன்னொட்டுக்களைப் பொருத்திப் பெயர் சூட்டலாம்.

   நீக்கு
 31. வணக்கம் ஐயா.பெண்களை வாய,போய என்று அழைப்பது ‌சரியா?

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் ஐயா.பெண்களை பலர் வா ய, போ ய, என்று அழைக்கின்றனர்.இது மரியாதையான வார்த்தையா?ஐயா.தயவுசெய்து பதிலளிக்கவும்.

  பதிலளிநீக்கு
 33. சேனாவதி ஐராவதி
  சுரபி சுவனம் சுவநயா சுமந்தி
  சுதி சுபி சுழலி சுயி

  அருமையாக உள்ளது இவ்வினணய பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா. மேற்கூறிய பெயர்கள் தமிழில் உள்ளனவ நன்றி!

  பதிலளிநீக்கு
 34. வாழ்த்திற்கு நன்றி. நீங்கள் காட்டியுள்ள பெயர்கள் அனைத்தும் தமிழ்தான். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 35. ஐயா வணக்கம் என் மகள் 29.08.2021 அன்று மாலை நேரத்தில் 06.38 பிறந்தாள். நல்ல தமிழ் கலந்த தெய்வீக பெயரை இக்கால கட்டத்தில் பொருந்ததனவாய் பதிவு செய்யவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டி, டு, டே, டோ. ஆயில்யம் நட்சத்திரம்

   நீக்கு
  2. இந்த எழுத்துக்களில் தமிழ்ப்பெயர்களே இல்லை. 29.8.2021 இன்னும் வரவேயில்லையே. :))

   நீக்கு
 36. பதில்கள்
  1. ஊண் (=உணவு) + இகு (=கொடு) + ஆ = ஊணிகா >>> யூனிகா = உணவு தருபவள் = அம்மா, அன்னபூரணி.

   நீக்கு
 37. வீரமிக்க பெண் பெயர் வேண்டும். உதவுங்கள்

  பதிலளிநீக்கு
 38. வீரம் பொருள் தரும் பெண் பெயர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீரம் உடையவள் என்னும் பொருளைத் தரும் பெண்பால் பெயர்கள்: சுரனிகா, சுரனிதி, சுரன்மா, சுரனதி, சுரன்மியா, சுரனி, சுரனா, மோனிகா, மோனி, மோனா, சூரிகா, சூரினி, சூரிதி, சூரதி, சூர்மியா, தீரிகா, தீரினி, தீர்மியா, தீரிதி, தீரதி, தீரா .....

   நீக்கு
 39. சங்கமித்ரா மற்றும் சங்கமிதுனி தமிழ் பெயர்களா, விளக்கம் கூறவும்,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மின்னஞ்சலுக்கு விளக்கம் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

   நீக்கு
 40. களிரா, களிறா, கலிரா பொருள் விளக்கம் கிடைக்குமா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. (1) களிறு (=ஆண்யானை) + ஆ = களிறா = ஆண்யானையைப் போன்றவன். (2) கலி (=கடல், எழு) + ஈர் + ஆ = கலீரா >>> கலிரா = கடலை ஈர்த்து எழுவது = மேகம். (3) களி (=தேன், மகிழ்) + ஈர் + ஆ = களீரா >>> களிரா = தேனை ஈர்த்து மகிழ்வது = தேனீ.

   நீக்கு
 41. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 42. ஐயா வணக்கம், ஆதிரா என்பது தமிழ் பெயரா, மேலும் இப்பெயருக்கான விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. (1) ஆதிரை + ஆ = ஆதிரா = ஆதிரையில் பிறந்தவள். (2) அதி (=மிகுதி) + இரை (=உணவு) + ஆ = ஆதிரா = மிக்க உணவைக் கொண்டவள் = அன்னபூரணி. (3) ஆதி (=கடவுள்) + இரு (=தங்கு) + ஆ (=பசு) = ஆதிரா = கடவுள் தங்கிய பசு = காமதேனு. ஆதிரா தமிழ்ப் பெயர் தான்.

   நீக்கு
  2. தாங்கள் கூறிய விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா, எங்கள் குழந்தைக்கு ஆதிரா என பெயர் சூட்ட இருக்கிறோம். நன்றி.....

   நீக்கு
 43. ஐயா வணக்கம், சிற்பிகா இப்பெயருக்கான விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 44. சிறு (=குறை, செதுக்கு) + பூ (=உண்டாக்கு, வடிவம்) + இகா = சிறுபிகா >>> சிற்பிகா = செதுக்கி உண்டாக்கிய வடிவம் போன்றவள் = சிலை போன்றவள்.

  பதிலளிநீக்கு
 45. தாழினி சரியான பொருள் என்ன ஐயா?
  தாழி – வாயகன்ற சால், வைகுண்டம், சாடி, அரிதாரம், கடல்
  தாழ் – தாழ்ப்பாள், சீப்பு, திறவுகோல், நீளம், விரல் மோதிர வகை, வணக்கம்
  இவை இரண்டிற்கும் பொருள் இவைகளை காட்டுகிறது.
  தாழி+இனி அல்லது தாழ்+இனி என்று பிரித்தால் பொருள் சரியாகயில்லை என்ற எண்ணம் தோற்றுகிறாது. கொஞ்சம் விளக்கவும்.

  பதிலளிநீக்கு
 46. ஐயா வணக்கம், ருத்ர ஸ்ரீ என்பது தமிழ் பெயரா, மேலும் இப்பெயருக்கான விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருமை(=மிகுதி) + திரம் (=நிலை) + சீர் (=செல்வம், புகழ்) = இருத்திரசீர் = நிலையான மிக்க செல்வமும் புகழும் கொண்டவள் = திருமகள். இருத்திரசீர் தான் தமிழ்.

   நீக்கு
 47. ஐயா வணக்கம், ரு, ரே, ரோ, த என தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை பதிவிடவும். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரு, ரே, ரோவில் தமிழ்ப்பெயர்கள் தொடங்கா. த-வில் தொடங்கும் பெயர்களை இங்கே காணலாம். http://thiruththam.blogspot.com/2018/12/2.html

   நீக்கு
  2. ஐயா,எனது பெயர் ப.பாண்டிக்குமரன்,எனது தாயின் பெயர் அய்யம்மாள், எனது மகளுக்கு என் தாயின் பெயர் சேர்த்து வருமாறு சிறிய தமிழ் பெயர்களை கூறவும்...(எ.கா: அய்மா, அயிரினி..)

   நீக்கு
 48. ஐயா என் பெண் குழந்தைக்கு பெயர வைக்க வேண்டும் அ ஆ எழுத்தில தொடங்கும் தமிழ் பெயர் கூறுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏராளமான குழந்தைப் பெயர்களை அவற்றின் பொருளுடன் இப்போது திபொச செயலியில் காணலாம். கூகுள் பிலாத் தொறுவில் இப்போது பதிவிறக்கலாம். திபொச அல்லது thiposa என்று தேடிப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

   நீக்கு
 49. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 50. ஐயா வணக்கம்,
  நீங்கள் ஆற்றி வரும் இந்த தமிழ் தொண்டு அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
  அதற்கு முதலில் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக மகிழச்சியடைக்கிறேன் .
  தமிழாள் என்று என் மகளுக்கு பெயர் வைக்க விழைகிறேன். தயவுசெய்து பெயரினுடைய பொருளையும், எழுத்து பிழை உள்ளதா என்பதையும் தெரிவிக்கவும்.
  நன்றிகளுடன்
  மணிகண்டன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிகத் தாமதமான பதில் தான். மன்னிக்கவும். எப்படியோ கவனிக்காமல் விட்டு விட்டேன். வேறு உதவி தேவை என்றால் கேளுங்கள். உடன் பதில் அளிக்கிறேன். தமிழாள் என்றால் தமிழை ஆள்பவள் என்று பொருள்.

   நீக்கு
 51. ஐயா,எனது பெயர் ப.பாண்டிக்குமரன்,எனது தாயின் பெயர் அய்யம்மாள், எனது மகளுக்கு என் தாயின் பெயர் சேர்த்து வருமாறு சிறிய தமிழ் பெயர்களை கூறவும்...(எ.கா: அய்மா, அயிரினி..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் விரும்பும் வகையிலான பெயர்களை எனது திபொச செயலியில் தமிழ் ஆசான் பகுதியில் காணலாம்.

   நீக்கு
  2. ஐயா... வணக்கம்... என்னுடைய பெண் குழந்தைக்கு "சிற்பிகா" என்று பெயர் வைத்துள்ளனர்...சிற்பிகா என்ற பெயர் தூய தமிழ் பெயரா?.. எதேனும் சமஸ்கிருதம் சொல் கலந்து உள்ளதா... விளக்கம் கூற முடியுமா?

   நீக்கு
  3. சிற்பம்+இகா =சிற்பிகா = சிலை போன்றவள். மின்னஞ்சலில் ஏற்கெனவே அனுப்பி உள்ளேன்.

   நீக்கு
 52. வணக்கம் மோ,மொ மௌ என்ற எழுத்தில் தொடங்கும் புதுமையான தமிழ் பெயர்கள் கூறூங்கள்

  பதிலளிநீக்கு
 53. வணக்கம் மோ,மொ மௌ என்ற எழுத்தில் தொடங்கும் புதுமையான தமிழ் பெயர்கள் கூறுங்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.