வெள்ளி, 29 மே, 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 32



சொல்
பொருள்
தமிழ்ச்சொல்
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
புடவி
பூமி, உலகம்
முற்றமி
முற்று (=வளை, சூழ்) + அம் (=நீர்) + இ = முற்றமி >>> புட்டவி >>> புடவி = நீரால் வளைக்கப் / சூழப் பட்டது.
புடிதம்
முட்டி
பிடித்தம்
பிடி (=கொள், அடக்கு) >>> பிடித்தம் >>> புடிதம் = விரல்களை மடக்கி அடக்கப் / கொள்ளப் பட்ட நிலை.
புடபேதம்
வழிமாற்றம், வளைவு
புடைவேறம்
புடை (=வழி) + வேறு (=மாறு) + அம் = புடய்வேறம் >>> புடபேதம் = வழி மாற்றம், வளைவு.
புடோதகம்
தென்னை
புடோதகம்
புடை (=திரட்சி) + உதகம் (=நீர்) = புடோதகம் = நீரை உடைய திரண்ட பொருள் = இளநீர்.
புண்டரம்
பொடியினை நீர்கலந்து பூசுதல்
பூண்டாரம்
பூண் (=அணி, பூசு) + தாரம் (=பொடி, நீர்) = பூண்டாரம் >>> புண்டரம் = சந்தனம், திருநீறு போன்ற பொடிகளை நீரில் குழைத்துப் பூசுதல்.
புண்டரம், புண்டாரம்
வெண்கரும்பு
புற்றாரம்
புல் + தாரம் (=நீர், வெண்மை) = புற்றாரம் >>> புட்டாரம் >>> புண்டரம் = நீர் மிகுந்த வெண்ணிறப் புல்வகை.
புண்டரம், புண்டரீகம்
கழுகு
புட்டரம்
புள் (=பறவை, வட்டம்) + தரம் (=மேலிடம், வலிமை) = புட்டரம் >>> புண்டரம் = வானத்தின் மேலிடத்தில் வட்டமிடுகின்ற வலிமையான பறவை.
புண்டரீகம், புண்டரிகம்
தாமரை
மூடரீகம்
மூடு + அரி (=இதழ், சந்திரன்) + இகம் = மூடரீகம் >>> முட்டரீகம் >>> புண்டரீகம் = சந்திரனைக் கண்டு இதழ்களை மூடிக்கொள்ளும் மலர்.
புண்டரீகம், புண்டரிகம்
வண்டு
மொட்டாரிகம்
மொட்டு (=மலர்) + ஆர் (=பொருந்து, உண்ணு, ஒலி) + இகம் = மொட்டாரிகம் >>> முண்டாரிகம் >>> புண்டரிகம் = மலர்களில் பொருந்தி ஒலித்தவாறே உண்பது.
புண்டரீகம், புண்டரிகம்
புலி
முட்டாரிகம்
முடை (=மாமிசம்) + ஆர் (=உண்ணு, தீ, பொருந்து) + இகம் (=உடல்) = முட்டாரிகம் >>> புண்டரிகம் = மாமிசம் உண்ணக்கூடியதும் தீவண்ணம் பொருந்திய உடலைக் கொண்டதும் ஆனது.
புண்டரீகம், புண்டரிகம்
யானை
விண்டாரிகம்
விண்டு (=மேகம், மலை) + ஆர (=ஒப்ப) + இகம் (=உடல்) = விண்டாரிகம் >>> பிண்டரிகம் >>> புண்டரிகம் = மேகம்போல கருமையும் மலைபோல பெருமையும் மிக்க உடலுடையது
புண்டரீகம், புண்டரிகம்
குட்டநோய்
முட்டாறிகம்
முடம் (=வளைவு, முடக்கம்) + அறு (=நீக்கு, குறை) + இகம் (=உடல்) = முட்டாறிகம் >>> புண்டரீகம் = உடல் உறுப்புக்களைக் குறைத்தும் வளைத்தும் முடங்கச் செய்வது
புண்டரீகம், புண்டரிகம்
வெண்ணிறக் குடை
மூடரிங்கம்
மூடு (=கவி) + அரி (=ஒளி, வெண்மை) + இங்கம் (=பொருள்) = மூடரிங்கம் >>> முட்டரிகம் >>> புண்டரிகம் = கவித்து வைக்கப்படும் வெண்ணிறப் பொருள்.
புண்டரீகம், புண்டரிகம்
புற்று
புற்றரீகம்
புற்று (=வீடு) + அரி (=கறையான்) + இகம் = புற்றரீகம் >>> புட்டரீகம் >>> புண்டரீகம் = கறையான் வீடு.
புண்டரீகம், புண்டரிகம்
சிங்காசனம்
புட்டரீங்கம்
புடை (=பக்கம்) + அரி (=சிங்கம்) + இங்கு (=தங்கு, இரு) + அம் = புட்டரீங்கம் >>> புண்டரீகம் = பக்கங்களில் சிங்கமுகம் தாங்கிய இருக்கை.
புண்டரீகம், புண்டரிகம்
சவரிமுடி
முட்டாரிகம்
முடி (=தலைமயிர்) + ஆர் (=கட்டு, பொருத்து) + இகம் = முட்டாரிகம் >>> புண்டரிகம் = பொருத்தக்கூடிய தலைமயிர்.
புண்டரீகம், புண்டரிகம்
யாகம்
மூட்டாரிங்கம்
மூட்டு + ஆர் (=தீ, உண்ணு) + இங்கம் (=பொருள்) = மூட்டாரிங்கம் >>> புண்டரிகம் = தீக்குப் பொருட்களை உண்ணக் கொடுத்து மூட்டுதல்.
புண்ணியம்
முன்வினைப் பயன்
முன்னீயம்
(2). முன் + ஈ (=கொடு, வழங்கு) + அம் = முன்னீயம் >>> புண்ணியம் = முன்னர் வழங்கியதன் பயன்.
புண்ணியம்
நீர்த்தொட்டி
புண்ணியம்
புணை (=தெப்பம்) + இயம் = புண்ணியம் = சிறிய தெப்பம் போன்ற அமைப்புடையது.
புத்தகம், புச்`தகம்
கல்விநூல்
புத்தகம்
புத்தி (=அறிவு) + அகம் (=உள்) = புத்தகம் >>> புச்`தகம் = அறிவினை உள்ளே உடையது.
புத்தகம்
ஓவியத் துணி
பொற்றாக்கம்
பொறி (=வரை) + ஆக்கம் (=துணி) = பொற்றாக்கம் >>> புத்தகம் = வரையப்பட்ட துணி
புத்தகம்
மயிலிறகு
புத்தாகம்
புதுமை (=அதிசயம், அழகு) + ஆகம் (=இமை) = புத்தாகம் >>> புத்தகம் = அதிசயமான அழகான கண்ணிமை.
புக்தம், புத்தம்
உணவு
முக்கம்
முக்கு (=உண்ணு) + அம் = முக்கம் >>> புக்கம் >>> புக்தம் >>> புத்தம் = உண்ணப்படுவது.
புத்தளி
புல்லால் ஆன பொம்மை
முத்தாளி
முத்தம் (=புல்) + ஆள் + இ = முத்தாளி >>> புத்தளி = புற்களைக் கொண்டு ஆள்போலச் செய்யப்பட்டது.
புத்தி, புந்தி
அறிவு
முற்றி
முற்று (=தங்கு, நிறை, முதிர்) + இ = முற்றி >>> புத்தி = மனதில் தங்கி நிறைவதும் முதிர்ச்சி அடைவதும் ஆனது.
புக்தி, புத்தி
அனுபவ அறிவு
முக்கி
முக்கு (=உண்ணு, அனுபவி) + இ = முக்கி >>> புக்கி >>> புக்தி >>> புத்தி = அனுபவ அறிவு.
புத்திரகன்
வஞ்சகன்
வித்திரகன்
வித்தை (=தந்திரம்) + இருமை (=கருமை, இருள்) + அகன் = வித்திரகன் >>> பித்திரகன் >>> புத்திரகன் = தந்திரமும் இருளும் நிறைந்த மனதினை உடையவன்.
புத்திரகன்
அன்பன்
முற்றீரகன்
முற்று (=முதிர், நிறை) + ஈரம் (=அன்பு) + அகன் = முற்றீரகன் >>> புத்திரகன் = முதிர்ந்த அன்பினைக் கொண்டவன்.
புத்திரம்
குழந்தை
பூத்திறம், புத்தீரம்
(1). பூ (=தோன்று, மலர்) + திறம் (=தன்மை, உடல்) = பூத்திறம் >>> புத்திரம் = புதிதாய்த் தோன்றிய தன்மையும் மலர் போன்ற உடலும் கொண்டது. (2) புதுமை (=புதிது) + ஈரம் (=பசுமை) = புத்தீரம் >>> புத்திரம் = புதிதாய்ப் பிறந்த பச்சுடல்.
புத்திரன்
மகன்
புத்திரன்
புத்திரம் (=குழந்தை) >>> புத்திரன் = ஆண் குழந்தை
புத்திரி
மகள்
புத்திரி
புத்திரம் (=குழந்தை) >>> புத்திரி = பெண் குழந்தை
புத்திரிகை
ஓவியம் வரையப்பட்ட பொம்மை
பொத்திரிகை
பொத்து (=பொய்) + ஈர் (=எழுது) + இகம் (=உடல்) + ஐ = பொத்தீரிகை >>> புத்திரிகை = ஓவியம் எழுதப்பட்ட பொய்யான உடல் போன்றது.
புத்தேள்
ஆசிரியர்
புத்தேல்
புத்தி (=அறிவு) + ஏல் (=பொருந்து, மிகு) = புத்தேல் >>> புத்தேள் = அறிவு மிகுதியாகப் பொருந்தப் பெற்றவர்.
புதசனன்
பேரறிஞன்
புத்தாசானன்
புத்தி (=அறிவு) + ஆசான் + அன் = புத்தாசானன் >>> புதசனன் = ஆசானுக்குரிய அறிவைக் கொண்டவன்.
புதப்பிரியம்
மரகதம்
புத்தவிரியம்
புதுமை (=பசுமை) + அவிர் (=விளங்கு, ஒளிர்) + இயம் = புத்தவிரியம் >>> புதப்பிரியம் = பசுமை ஒளிரும் பொருள்.
புதம்
மேகம்
முத்தம்
முத்து (=நீர்த்துளி, மேலானது) + அம் = முத்தம் >>> புதம் = நீர்த்துளிகளைச் சொரியும் மேலான பொருள்.
வித்தை, புத்தி, புந்தி
அறிவு, கல்வி
வீற்றை, வித்தை, புத்தி
வீறு (=பகு, மேம்படு, ஒளி) + ஐ = வீற்றை >>> வித்தை >>> பித்தி >>> புத்தி = பகுத்துக் காண்பதும் மேம்பாட்டைத் தருவதும் ஒளிபோலத் தெளிவுடையதும் ஆனது.
புதல்
புருவம்
முறல்
முறி (=வளை, துண்டு) + அல் = முறல் >>> புதல் = வளைந்து இருக்கும் சிறு துண்டு = புருவம்.
புத்தன், புதன்
புலவன்
புத்தன்
புத்தி (=அறிவு) + அன் = புத்தன் >>> புதன் = அறிஞன்
புதானன்
குரு
புத்தானன்
புத்தி (=அறிவு) + ஆன் (=நிறை) + அன் = புத்தானன் >>> புதானன் = அறிவு நிறைந்தவன்.
புதிலி
எண்ணை உடைய பை
பைதைலி
பை + தைலம் + இ = பைதைலி >>> பிதிலி >>> புதிலி = எண்ணை ஊற்றும் பை.
புமான்
ஆண்மகன், கணவன்
பூவான்
பூ (=படை) + வான் (=வலிமை) = பூவான் >>> புமான் = படைக்கும் வலிமை கொண்டவன்.
புமான்
ஆன்மா, உயிர்
பூமாண்
பூ (=தோன்று, பிற) + மாண் (=இற) = பூமாண் >>> புமான் = பிறப்பும் இறப்பும் உடையது.
புயகம், புயங்கம்
பாம்பு
பையகம்
பை (=படப்பொறி, சீறு) + அகம் = பையகம் >>> பியகம் >>> புயகம் = படப்பொறியை உடையதும் சீறுவதுமான பாம்பு.
புயாந்தரம்
மார்பு
மொயந்தரம்
மொய் (=வலிமை, திரள்) + அந்தரம் (=நடு) = மொயந்தரம் >>> புயாந்தரம் = வலிமைமிக்க திரண்ட நடுப்பகுதி.
புரசை, புரோசை
கட்டுக் கயிறு
புரசை, புரோசை
புரி (=கயிறு) + அசை (=கட்டு) = புரசை = கட்டும் கயிறு
புரோகிதம், புரகிதம்
மரபுப்படி செய்வித்தல்
புரோக்கிதம்
புரை (=பழமை, மரபு) + ஓக்கு (=செய்) + இதம் = புரோக்கிதம் >>> புரோகிதம் = மரபுப்படி செய்தல்.
புரோகிதர், புரகிதர்
மரபுப்படி செய்விப்பவர்
புரோக்கிதர்
புரை (=பழமை, மரபு) + ஓக்கு (=செய்) + இதர் = புரோக்கிதர் >>> புரோகிதர் = மரபுப்படி செய்பவர்.
புரணம்
அசைவு
புரணம்
புரி (=அசை, ஆடு) + அணம் = புரணம் = அசைவு.
புரணம்
தோன்றுகை, ஒளி
புரணம்
புரி (=தோன்று, விளங்கு) + அணம் = புரணம் = தோன்றுகை, விளக்கம் = ஒளி.
புரணம்
மயக்கம்
புரணம்
புரி (=சுற்று) + அணம் = புரணம் = சுற்றி மயங்குதல்.
புரந்தரம்
தோள்
புறந்தரம்
புறம் (=பக்கம்) + தரம் (=வலிமை) = புறந்தரம் >>> புரந்தரம் = வலிமையான பக்க உறுப்பு.
புரச்`கரணம்
நிறைவு செய்தல்
புரைகரணம்
புரை (=பொருத்து, முழுமைசெய்) + கரணம் (=செயல்) = புரய்கரணம் >>> புரச்`கரணம் = முழுமை செய்தல்.
புரச்`காரம்
மரியாதை செய்தல்
புரைகாரம்
புரை (=பெருமை) + காரம் (=செயல்) = புரய்காரம் >>> புரச்`காரம் = பெருமைப் படுத்துதல் / மரியாதை செய்தல்.
புரச்`கரி
மரியாதை செய்
புரைகரி
புரச்`காரம் (=மரியாதை செய்தல்) >>> புரச்`கரி = மரியாதை செய்.
புராகிருதபாவம்
முன் செய்த தீவினை
புரைகிருதபாவம்
புரை (=பழமை) + கிருதம் (=செயல்) + பாவம் (=தீவினை) = புரய்கிருதபாவம் >>> புராகிருதபாவம் = முன்செய்த தீவினை
புராகிருதம்
முன் செய்தது
புரைகிருதம்
புரை (=பழமை) + கிருதம் (=செயல்) = புரய்கிருதம் >>> புராகிருதம் = முன் செய்தது.
புராணிகன், புராணீகன்
புராணம் வாசிப்பவன்
புராணிங்கன்
புராணம் + இங்கம் (=அறிவு) + அன் = புராணிங்கன் >>> புராணிகன் = புராணங்களின் அறிவினைக் கொண்டவன்.
புராணோக்தம்
புராணங்களில் கூறப்பட்டது
புராணோத்தம்
புராணம் + ஓது (=கூறு) + அம் = புராணோத்தம் >>> புராணோக்தம் = புராணங்களில் கூறப்பட்டது.
புராதனம்
பழையது, பழங்கஞ்சி
புரைதனம்
புரை (=பழமை) + தன்மை + அம் = புரய்தனம் >>> புராதனம் = பழமைத் தன்மை வாய்ந்தது, பழங்கஞ்சி.
புராதனர்
முன்னோர்
புராதனர்
புராதனம் (=பழமை) >>> புராதனர் = முன்னோர்
புராந்திமம்
மிகப் பழமை வாய்ந்தது
புரதிமம்
புரை (=பழமை) + அதி + மம் = புரதிமம் >>> புராந்திமம் = மிகப் பழமை வாய்ந்தது.
புரிசம்
கிடைத்தற்கு அரியது
புரையம்
புரை (=பழமை) + அம் = புரையம் >>> புரிசம் = பழையது, கிடைத்தற்கு அரியது.
பிரியம்
விருப்பம்
புரியம்
(3). புரி (=விரும்பு) + அம் = புரியம் >>> பிரியம் = விருப்பம்.
புரிசாலம்
விண்ணப்பம்
புரிசாலம்
புரி (=விரும்பு, சொல்) + சால் (=பொருந்து) + அம் = புரிசாலம் = விருப்பத்தைப் பொருத்தமாகச் சொல்லுதல்.
புரியட்டகம்
நுட்பமான உடல்
புரியற்றகம்
புரி (=உடல்) + அற்றம் (=நுண்மை) + அகம் = புரியற்றகம் >>> புரியட்டகம் = நுட்ப உடல். ஒ.நோ: அற்றம் >>> அற்பம்.
புரீசம், புரீச~ம், புரீடம்
மலம்
புலிழம்
புல் (=இழிவு) + இழி (=வெளிப்படு, விழு) + அம் = புலிழம் >>> புரீசம் >>> புரீடம் = வெளிப்பட்டு விழுகின்ற இழிபொருள்.
புரு
பருமை, மிகுதி
புரை
புரை (=பெருமை) + உ = புரு = பருமை, மிகுதி
புரு
சொர்க்கம்
புரை
புரை (=உயர்வு, மேல், வீடு) + உ = புரு = மேலான வீடு.
புரு
குழந்தை
புரு
புரி (=ஈனு) + உ = புரு = ஈனப்பட்டது.
புருசன், புருடன்
உயிர், ஆன்மா
புருயன்
புரி (=தோன்று) + உய் (=வாழ்) + அன் = புருயன் >>> புருசன் >>> புருடன் = தோன்றி வாழ்வது.
புருசன், புருடன்
கடவுள், ஆண், கணவன்
புருயன்
புரி (=படை) + உய் (=செய்) + அன் = புருயன் >>> புருசன் >>> புருடன் = படைத்தலைச் செய்பவன்
புருடை, புருடா
பொய்
புருடை
புரை (=பொய்) + உடை = புருடை = பொய்யானது.
புருண்டி
மல்லிகை
விருட்டி
விரை (=நறுமணம்) + உடை (=கொள், மலர்) + இ = விருட்டி >>> பிருண்டி >>> புருண்டி = நறுமணம் கொண்ட மலர்.
புரூணம், புருணம்
கரு
புரூனம்
புரி (=தோன்று, உருவாகு) + ஊன் (=தசை) + அம் = புரூனம் >>> புரூணம் >>> புருணம் = உருவான தசைப்பிண்டம்.
புருணம்
இளமை
வீறுடம்
வீறு (=அழகு, வளை) + உடை + அம் = வீறுடம் >>> பீருணம் >>> புருணம் = அழகும் வளையும் தன்மையும் உடையது.
புருவம்
குதிரை
வீறுமம்
வீறு (=பொலிவு, வலிமை, வேகம்) + மா (=விலங்கு) + அம் = வீறுமம் >>> பீருவம் >>> புருவம் = பொலிவும் வலிமையும் வேகமும் கொண்ட விலங்கு.
புருவம்
கண்ணுக்கு மேலிருப்பது
வீறுமம்
வீறு (=வளைவு, துண்டு) + மம் = வீறுமம் >>> பீருவம் >>> புருவம் = வளைவினை உடைய சிறு துண்டு.
புருவம்
எல்லை, வரம்பு.
வீறுமம்
வீறு (=வெட்டு, பிரி) + மம் = வீறுமம் >>> பீருவம் >>> புருவம் = பிரிப்பது = எல்லை, வரம்பு.
புருசன்
அணு
பொறூழன்
பொறி (=துகள்) + ஊழ் (=குணம்) + அன் = பொறூழன் >>> பொருசன் >>> புருசன் = துகளின் தன்மை கொண்டது.
புரூரம்
புருவம்
வீறுறம்
வீறு (=வளைவு, துண்டு) + உறு + அம் = வீறுறம் >>> பீருரம் >>> புரூரம் = வளைவினை உடைய சிறு துண்டு.
புரோக்கணம், புரோக்ச~ணம், புரோட்சணம்
மந்திரம் சொல்லி நீர் தெளித்தல்
பிலோக்கணம்
பில் (=நீர்த்துளி) + ஓக்கு (=உயர்த்து, வீசு) + அணம் = பிலோக்கணம் >>> புரோக்கணம் >>> புரோக்ச~ணம் >>> புரோட்சணம் = நீர்த்துளிகளை அள்ளி உயர்த்தி வீசுதல்.
புரோகதி
முன்னால் செல்வது
புரோகதி
புரை (=பழமை, முன்னர்) + உகை (=செல்) + தி = புரோகய்தி >> புரோகதி = முன்னால் செல்வது.
புரோகம், புரோகதி
நாய்
புரோகம், புரோகதி
புரை (=பற்று, பிடி) + உகை (=தூண்டு, செலுத்து) + அம் / தி = புரோகம் / புரோகதி = பிடிப்பதற்காகத் தூண்டப்படுவது.
புரோகன்
பெருமையில் உயர்ந்தவன்
புரோங்கன்
புரை (=பெருமை) + ஓங்கு (=உயர்) + அன் = புரோங்கன் >>> புரோகன் = பெருமையில் உயர்ந்தவன்.
புரோசு
புரோகிதர்
புரோச்சு
புரை (=பழமை, மரபு) + ஓச்சு (=நடத்து, செய்வி) = புரோச்சு >>> புரோசு = மரபுப்படி செய்விப்பவர்.
புரோடாசம்
வேள்வியில் இடப்படும் மாவுப்பொருள்
பொறோற்றாயம்
பொறி (=தீ) + ஒற்று (=வீழ்த்து) + ஆய் (=நுண்மை, மாவு) + அம் = பொறோற்றாயம் >>> புரோட்டாசம் >>> புரோடாசம் = வேள்வித் தீயில் வீழ்த்தப்படும் மாவுப் பொருள்.
புரோடி
நீரோட்டம்
பிலோடி
பில் (=நீர்) + ஓடு + இ = பிலோடி >>> புரோடி = நீரோட்டம்
புரோதம்
மூக்கு
புரோதம்
புரை (=தப்பு, ஓடு, குழாய்) + ஊதை (=காற்று) + அம் = புரோதம் = காற்று ஓடுகின்ற குழாய் போன்ற அமைப்பு.
புரோதாயம்
குளத்துநீரில் சுத்தம்செய்யும் சடங்கு / மரபு
புரோத்தயம்
புரை (=மரபு) + உத்து (=கழி, சுத்தம்செய்) + அயம் (=குளம், நீர்) = புரோத்தயம் >>> புரோதாயம் = குளத்துநீரில் சுத்தம் செய்கின்ற மரபு / சடங்கு.
புல்லகண்டம்
பனங்கற்கண்டு
புல்லகண்டம்
புல் (=பனை) + அம் (=உணவு) + கண்டம் (=துண்டு) = புல்லகண்டம் = பனையிலிருந்து பெறும் துண்டு உணவு.
திங்கள்
சந்திரன்
தீங்கால்
தீம் (=இனிமை) + கால் (=ஒளிக்கீற்று) = தீங்கால் >>> திங்கள் = இனிமையான ஒளி வீசுவது.
புல்லம்
பொலிகாளை
பொல்லம்
பொலி (=பெருக்கு, காளை) + அம் = பொல்லம் >>> புல்லம் = இனப்பெருக்கம் செய்ய உதவும் காளை.
புல்லம்
மலர்
பொல்லம்
பொலி (=ஒளிர், விளங்கு, மலர்) + அம் = பொல்லம் >>> புல்லம் = மலர்ந்து விளங்குவது.
புல்லர்
வேடர்
புள்ளார்
புள் (=பறவை) + ஆர் (=கட்டு, பிடி) = புள்ளார் >>> புல்லர் = பறவைகளைப் பிடிப்பவன்.
புலாகம்
மலர்ந்த சோறு
பொல்லாக்கம்
பொலி (=மலர்) + ஆக்கம் (=உணவு) = பொல்லாக்கம் >>> புலாகம் = மலர்ந்த உணவு.
புலாதி
கவலை, கலக்கம்
புலாதி
(1). புலம் (=எண்ணம், சிந்தனை) + அதி (=மிகுதி) = புலாதி = மிகுதியான சிந்தனை = கவலை, கலக்கம். (2). புல (=வருந்து) + அதி (=மிகுதி) = புலாதி = மிகுதியாக வருந்துதல்.
புலிங்கம்
தீப்பொறி
பொலிகம்
பொலம் (=பொன்னிறம், தீ) + இகு (=சொரி, அழி) + அம் = பொலிகம் >>> புலிங்கம் = தீயில் இருந்து பொன்னிறமாகச் சொரியப்பட்டு அழியக் கூடியது. 
புலிங்கம்
ஊர்க்குருவி, சிட்டுக் குருவி
புளிகம்
புள் (=பறவை, கிட்டி) + இகம் (=உடல்) = புளிகம் >>> புலிங்கம் = கிட்டிபோல சிறிய உடல்கொண்ட பறவை. ஒ.நோ: சிறு + குருவி = சிற்றுக் குருவி >>> சிட்டுக் குருவி.
புலிந்தன்
வேடன்
புளிற்றன்
புள் (=பறவை) + இறு (=வீழ்த்து, கொல்) + அன் = புளிற்றன் >>> புலித்தன் >>> புலிந்தன் = பறவைகளை வீழ்த்திக் கொல்பவன் = வேடன்.
புலிரிகம்
பாம்பு
பொளீறிகம்
பொள் (=துளை) + ஈறு (=பல்) + இகம் = பொளீறிகம் >>> புலிரிகம் = பல்லில் துளையினைக் கொண்டது.