திங்கள், 17 டிசம்பர், 2018

தமிழ்ப் பெண்களுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - தொகுதி 1முன்னுரை:

தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்களைச் சூட்டுகின்றனர் என்பதற்கான காரணங்களையும் அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் முந்தைய கட்டுரையில் கண்டோம். அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்த திருச்சங்க முறையினைப் பயன்படுத்திப் பெண் குழந்தைகளுக்குச் சூட்டக் கூடிய வகையில் ஆயிரக்கணக்கான புதுமையான சுருக்கமான தமிழ்ப்பெயர்கள் உருவாக்கப் பட்டுள்ளது. 400 பெயர்களைக் கொண்ட முதல் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் பொருட்களும் கூறப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சாதி மதம் சாராத அழகிய சங்ககாலத் தமிழ்ப் பெயர்கள். தற்காலத்தில் குழந்தைகளுக்குச் சூட்டிவரும் வடமொழிப் பெயர்களைப் போலவே ஒலிப்புமுறையும் அமைப்பும் கொண்டவை. எனவே, வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதைத் தவிர்த்து இப்பெயர்களைச் சூட்டலாம். இப்பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகளைப் பெறலாம்.

 • தமிழ்ப்பற்றும் தமிழன் என்ற உணர்வும் உங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.
 • பெயர்கள் சாதி மதம் சாராதவை என்பதால் எந்த சாதியினரும் எந்த மதத்தினரும் சூட்டிக் கொள்ளலாம். இதனால் சாதி மத நல்லிணக்கம் பேணப்பட்டு சமுதாய மறுமலர்ச்சி உண்டாகும்.
 • தமிழ்ப் பெயர்களைச் சூட்டியவர்களுக்கு அரசுவேலையில் முன்னுரிமை அல்லது ஒதுக்கீடு என்று தமிழக அரசு அறிவித்தால் அதன் பலன்களை உடனடியாக அனுபவிக்க முடியும்.

பெண்குழந்தைகளுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - முதல் பகுதிபெயர்
பொருள்
பெயர்
பொருள்
பெயர்
பொருள்
அத்ததி
பழம்
ஆம்பிதி
மலர்
எல்மா
ஒளி
அத்திகா
பழம்
ஆம்பிமா
மலர்
எல்மியா
ஒளி
அத்திதி
பழம்
ஆம்பியா
மலர்
எல்யா
ஒளி
அத்திமா
பழம்
ஆம்பிலா
மலர்
எல்லதி
ஒளி
அத்தியா
பழம்
ஆம்பினி
மலர்
எல்லிகா
ஒளி
அத்தினி
பழம்
ஆம்மியா
மலர்
எல்லிதி
ஒளி
அத்மியா
பழம்
ஆரதி
மாலை
எல்லிமா
ஒளி
அதிகா
பழம்
ஆர்மா
மாலை
எல்லியா
ஒளி
அதிமா
பழம்
ஆர்மிகா
மாலை
எல்லினி
ஒளி
அதிமியா
கொடி
ஆர்மியா
மாலை
எழிலதி
மேகம்
அதியா
பழம்
ஆரிதி
மாலை
எழில்மியா
மேகம்
அதிரதி
கொடி
ஆரினி
மாலை
எழிலிகா
மேகம்
அதிரிகா
கொடி
ஆவிரா
மலர்
எழிலிதி
மேகம்
அதிரிதி
கொடி
இசமியா
புகழ்
எழிலிமா
மேகம்
அதிரிமா
கொடி
இசயதி
புகழ்
எழிலியா
மேகம்
அதிரியா
கொடி
இசயிகா
புகழ்
எழிலினி
மேகம்
அதிரினி
கொடி
இசயிதி
புகழ்
எறுழதி
மலர்
அதினி
பழம்
இசாகா
புகழ்
எறுழ்மியா
மலர்
அந்ததி
பொழுது
இசாயா
புகழ்
எறுழிகா
மலர்
அந்திகா
பொழுது
இசைமா
புகழ்
எறுழிதி
மலர்
அந்திதி
பொழுது
இசையினி
புகழ்
எறுழிமா
மலர்
அந்திமா
பொழுது
இணரதி
மலர்
எறுழியா
மலர்
அந்தியா
பொழுது
இணர்மியா
மலர்
எறுழினி
மலர்
அந்தினி
பொழுது
இணரிகா
மலர்
ஏக்கதி
விருப்பம்
அமரதி
விருப்பம்
இணரிதி
மலர்
ஏக்கிகா
விருப்பம்
அமர்மியா
விருப்பம்
இணரிமா
மலர்
ஏக்கிதி
விருப்பம்
அமரிகா
விருப்பம்
இணரியா
மலர்
ஏக்கிமா
விருப்பம்
அமரிதி
விருப்பம்
இணரினி
மலர்
ஏக்கியா
விருப்பம்
அமரிமா
விருப்பம்
இதழதி
மலர்
ஏக்கினி
விருப்பம்
அமரியா
விருப்பம்
இதழ்மியா
மலர்
ஏக்மியா
விருப்பம்
அமரினி
விருப்பம்
இதழிகா
மலர்
ஏடதி
நூல்
அமாயதி
மலர்
இதழிதி
மலர்
ஏட்மியா
நூல்
அமாயா
மலர்
இதழிமா
மலர்
ஏடிகா
நூல்
அமாயிகா
மலர்
இதழியா
மலர்
ஏடிதி
நூல்
அமாயிதி
மலர்
இதழினி
மலர்
ஏடியா
நூல்
அமாயினி
மலர்
இயமதி
கருவி
ஏடினி
நூல்
அமியா
மலர்
இயமா
கருவி
ஏடுமா
நூல்
அமிழதி
மருந்து
இயமிகா
கருவி
ஏமதி
இன்பம்
அமிழ்தினி
மருந்து
இயமிதி
கருவி
ஏமா
இன்பம்
அமிழிகா
மருந்து
இயமியா
கருவி
ஏமிகா
இன்பம்
அமிழிதி
மருந்து
இயமினி
கருவி
ஏமிதி
இன்பம்
அமிழிமா
மருந்து
இரலதி
மான்
ஏமியா
இன்பம்
அமிழியா
மருந்து
இரல்மியா
மான்
ஏமினி
இன்பம்
அமிழினி
மருந்து
இரலிகா
மான்
ஏரதி
அழகு
அமைமா
மலர்
இரலிதி
மான்
ஏர்மா
அழகு
அய்மா
அழகு
இரலிமா
மான்
ஏர்மியா
அழகு
அயிகா
அழகு
இரலியா
மான்
ஏரிகா
அழகு
அயிலதி
கூர்மை
இரலினி
மான்
ஏரிதி
அழகு
அயில்மியா
கூர்மை
இலமியா
மலர்
ஏரினி
அழகு
அயிலிகா
கூர்மை
இலவதி
மலர்
ஏன்மியா
தோட்டம்
அயிலிதி
கூர்மை
இலவிகா
மலர்
ஏனலதி
தோட்டம்
அயிலிமா
கூர்மை
இலவிதி
மலர்
ஏனலிகா
தோட்டம்
அயிலியா
கூர்மை
இலவிமா
மலர்
ஏனலிதி
தோட்டம்
அயிலினி
கூர்மை
இலவியா
மலர்
ஏனலிமா
தோட்டம்
அரதி
மாலை
இலவினி
மலர்
ஏனலியா
தோட்டம்
அரமதி
கூர்மை
இவரதி
கொடி
ஏனலினி
தோட்டம்
அர்மா
மாலை
இவர்மியா
கொடி
ஐமியா
அழகு
அரமிகா
கூர்மை
இவரிகா
கொடி
ஐயதி
அழகு
அரமிதி
கூர்மை
இவரிதி
கொடி
ஐயிதி
அழகு
அரமியா
கூர்மை
இவரிமா
கொடி
ஐயினி
அழகு
அரமினி
கூர்மை
இவரியா
கொடி
ஒள்மியா
ஒளி
அரவதி
மேகம்
இவரினி
கொடி
ஒள்ளதி
ஒளி
அரவிகா
மேகம்
இறல்கா
தேன்
ஒள்ளிகா
ஒளி
அரவிதி
மேகம்
இறல்யா
தேன்
ஒள்ளிதி
ஒளி
அரவிமா
மேகம்
இறாமியா
தேன்
ஒள்ளியா
ஒளி
அரவியா
மேகம்
இறாலதி
தேன்
ஒள்ளினி
ஒளி
அரவினி
மேகம்
இறாலிகா
தேன்
ஒளிமா
ஒளி
அரிதி
மாலை
இறாலிதி
தேன்
ஒளியா
ஒளி
அரினி
மாலை
இறாலிமா
தேன்
ஒளிவிகா
ஒளி
அருமியா
நீர்
இறாலியா
தேன்
ஒளிவியா
ஒளி
அருவதி
நீர்
இறாலினி
தேன்
ஒளிவினி
ஒளி
அருவிகா
நீர்
இன்மிகா
இன்பம்
ஓதிகா
கண்
அருவிதி
நீர்
இன்மியா
இன்பம்
ஓதிமா
கண்
அருவிமா
நீர்
இன்னதி
இன்பம்
ஓதியா
கண்
அருவியா
நீர்
இன்னிதி
இன்பம்
ஓதினி
கண்
அருவினி
நீர்
இனிகா
இன்பம்
ஓமியா
படம்
அவ்மியா
விருப்பம்
இனிமா
இன்பம்
ஓவதி
படம்
அவ்வதி
விருப்பம்
இனியா
இன்பம்
ஓவிகா
படம்
அவ்விகா
விருப்பம்
இனினி
இன்பம்
ஓவிதி
படம்
அவ்விதி
விருப்பம்
ஈங்கதி
கொடி
ஓவிமா
படம்
அவ்விமா
விருப்பம்
ஈங்கிகா
கொடி
ஓவியா
படம்
அவ்வியா
விருப்பம்
ஈங்கிதி
கொடி
ஓவினி
படம்
அவ்வினி
விருப்பம்
ஈங்கிமா
கொடி
கடமா
மான்
அவிகா
விருப்பம்
ஈங்கியா
கொடி
கடமிகா
மான்
அவிமா
விருப்பம்
ஈங்கினி
கொடி
கடமியா
மான்
அவியா
விருப்பம்
ஈன்மியா
கொடி
கடமினி
மான்
அவினி
விருப்பம்
உத்ததி
படம்
கடயா
மான்
அன்சதி
மலர்
உத்திகா
படம்
கடவதி
மான்
அன்சிகா
மலர்
உத்திதி
படம்
கடவினி
மான்
அன்சிதி
மலர்
உத்திமா
படம்
கடிகா
மணம்
அன்சியா
மலர்
உத்தியா
படம்
கடிமா
மணம்
அன்சினி
மலர்
உத்தினி
படம்
கடிமியா
மணம்
அன்னதி
பறவை
உத்மியா
படம்
கடியா
மணம்
அன்னமா
பறவை
உவமதி
அழகு
கடிவதி
மணம்
அன்னிதி
பறவை
உவமிகா
அழகு
கடிவிகா
மணம்
அன்னினி
பறவை
உவமிதி
அழகு
கடிவிதி
மணம்
அனாகா
பறவை
உவமிமா
அழகு
கடிவியா
மணம்
அனாமிகா
பறவை
உவமியா
அழகு
கடிவினி
மணம்
அனாமியா
பறவை
உவமினி
அழகு
கண்ணதி
மாலை
அனாயா
பறவை
உவரதி
நீர்
கண்ணிகா
மாலை
அனிச்`மியா
மலர்
உவர்மியா
நீர்
கண்ணிதி
மாலை
அனிச்சதி
மலர்
உவரிகா
நீர்
கண்ணிமா
மாலை
அனிச்சமா
மலர்
உவரிதி
நீர்
கண்ணியா
மாலை
அனிச்சிகா
மலர்
உவரிமா
நீர்
கண்ணினி
மாலை
அனிச்சிதி
மலர்
உவரியா
நீர்
கண்மியா
மாலை
அனிச்சியா
மலர்
உவரினி
நீர்
கதிரதி
ஒளி
அனிச்சினி
மலர்
உவலதி
இலை
கதிர்மியா
ஒளி
அனிசா
மலர்
உவல்மியா
இலை
கதிரிகா
ஒளி
ஆகதி
கண்
உவலிகா
இலை
கதிரிதி
ஒளி
ஆக்மதி
கண்
உவலிதி
இலை
கதிரிமா
ஒளி
ஆகம்யா
கண்
உவலிமா
இலை
கதிரியா
ஒளி
ஆகமா
கண்
உவலியா
இலை
கதிரினி
ஒளி
ஆகமிகா
கண்
உவலினி
இலை
கதுமா
கண்
ஆக்மிகா
கண்
உழாயதி
மான்
கதுமிகா
கண்
ஆக்மிதி
கண்
உழாய்மியா
மான்
கதுமியா
கண்
ஆக்மியா
கண்
உழாயா
மான்
கதுயா
கண்
ஆக்மினி
கண்
உழாயிகா
மான்
கதுவதி
கண்
ஆகிகா
கண்
உழாயிதி
மான்
கதுவிதி
கண்
ஆகிதி
கண்
உழாயினி
மான்
கதுவினி
கண்
ஆகினி
கண்
உழைமா
மான்
கமதி
மணம்
ஆசினி
பழம்
எஃகதி
கருவி
கமநதி
மேகம்
ஆத்ததி
மலர்
எஃகிகா
கருவி
கமநிதி
மேகம்
ஆத்திகா
மலர்
எஃகிதி
கருவி
கம்யா
மணம்
ஆத்திதி
மலர்
எஃகிமா
கருவி
கமழதி
மணம்
ஆத்திமா
மலர்
எஃகியா
கருவி
கமழ்மியா
மணம்
ஆத்தியா
மலர்
எஃகினி
கருவி
கமழிகா
மணம்
ஆத்தினி
மலர்
எஃமியா
கருவி
கமழிதி
மணம்
ஆத்மியா
மலர்
எகினதி
பறவை
கமழிமா
மணம்
ஆதிகா
மலர்
எகின்மா
பறவை
கமழியா
மணம்
ஆதிமா
மலர்
எகின்மியா
பறவை
கமழினி
மணம்
ஆதியா
மலர்
எகினிகா
பறவை
கமன்மா
மேகம்
ஆதினி
மலர்
எகினிதி
பறவை
கமன்யா
மேகம்
ஆம்பதி
மலர்
எகினியா
பறவை
கமனிகா
மேகம்
ஆம்பிகா
மலர்
எகினினி
பறவை
கமிகா
மணம்
எல்கா
ஒளி
கமிதி
மணம்
கமினி
மணம்

45 கருத்துகள்:

 1. ஆக்மியா- இதில் உள்ள ஆக் என்னும் சொல்லின் பொருள் என்ன ஐயா?

  பதிலளிநீக்கு
 2. நதி , நிதி ஆகியன தமிழ்ச் சொற்களே இல்லை.. அவை சமற்கிருத சொற்களாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நதியைப் பற்றி வேறொரு இடத்தில் விளக்கி விட்டேன். நிதி சங்ககாலத் தமிழ்ச் சொல்.

   நீக்கு
 3. தயவுசெய்து ஒரு நல்ல தமிழ் பெண் பெயர்கள் யூ, யோ, வுக்குள் சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூவில் தொடங்கும் சொற்கள் பெயராகச் சூட்டத் தகுதியற்றவை. யோவில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா. இவற்றுக்கு மாற்றாக, ஊ, ஓ வில் தொடங்கும் பெயர்களை நீங்கள் விரும்பினால் வைக்கலாம். இப் பெயர்கள் இந்த தளத்திலேயே உள்ளன. நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஆம். இயல் என்பது மிகப் பழமை வாய்ந்த தமிழ்ச் சொல் தான்.

   நீக்கு
  2. நன்றி. "இயல்" என்று மட்டும் பெயரிடுவது சரியா?(பெண் குழந்தை) அல்லது "இயலினி" போல் சேர்த்து வைக்க வேண்டுமா?

   நீக்கு
  3. இயல் என்று மட்டும் வைக்கலாம். கயல் என்று அழைப்பதைப் போல இயல் என்று அழைப்பார்கள். இயலினி என்று வைத்தால் வேகமாக அழைக்கும்போது யாலினி என்றுதான் வரும்.

   நீக்கு
 5. லயா என்பது தமிழ் பெயரா? லயா என்பதின் அர்த்தம் என்ன தாங்கள் விளக்க இயலுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்ச் சொற்கள் லகரத்தில் தொடங்காது என்பதால் லயா தமிழ்ச்சொல் அல்ல. மாறாக, ஆலயா, அலாயா, இலாயா, சிலாயா .... போன்று வைக்கலாம்.

   நீக்கு
 6. மிக்க நன்றி ஐயா. சு, சே, சோ என தொடங்கும் பெண் குழந்தைகள் பெயர்கள் தாங்கள் உதவ வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழ்க்காணும் சுட்டியில் உங்களுக்கான பெயர்களைக் காணலாம்.
   http://thiruththam.blogspot.com/2018/12/2.html

   நீக்கு
 7. ஐயா சினமிகா மற்றும் சினாமிகா இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? சினாமிகா என்பது. தமிழ் பெயரா

  பதிலளிநீக்கு
 8. சினமிகா என்பது தமிழ்ப்பெயர் தான். சினம் + இகா = சினமிகா. சினாமிகா என்றும் கூறலாம். ஆனால் இப்பெயருக்கான பொருள் சினம் மிகுந்தவள். எனவே இப்பெயரைத் தவிர்ப்பது நலம். மாறாக, சினயிகா, சினாயிகா என்று வைக்கலாம். பூமொட்டு போன்றவள் என்பது இதன் பொருள்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா.அகரா ஆண் பால் பெயரா என விளக்கம் கூறுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அகரன் என்பதே ஆண்பால் பெயர். அகரை என்னும் பெண்பால் பெயரின் திரிபே அகரா. அகரனை அழைக்கும்போது அகரா என்று மாறும்.

   நீக்கு
 10. நன்றி ஐயா.ஆக அகரன் என்று இல்லாமல் அகரா என என் ஆண் குழந்தைக்கு சூட்டலாமா?சற்று புதிய பெயராக இருக்குமே என எண்ணுகிறேன்.அகரா என்றால் முதன்மையானவன் என பொருள் கொள்ளலாமா?ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அகரன் அல்லது அகரா என்று வைக்கலாம். அகரன் என்றால் முதன்மையானவன் என்று பொருள்.

   நீக்கு
 11. உங்கள் பதிலுக்கு மிக மிக நன்றி ஐயா.மிக்க மகிழ்ச்சி ஐயா

  பதிலளிநீக்கு
 12. பதில்கள்
  1. அருள் + ஆசி + இனி = அருளாசினி = அருளும் ஆசியும் உடையவள். எனவே அருளாசினி தமிழ்ப் பெயர் தான்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஆர்கவின் என்றால் பேரழகு என்று பொருள். தமிழ்ப்பெயர் தான். அடுத்தமுறை முயன்று தமிழில் அச்சடிக்க வேண்டுகிறேன். :)

   நீக்கு
 14. ஐயா, பெயரில் ஆ, க அல்லது கா ஆகிய இரண்டு எழுத்துகளும் வருமாறு ஆண் குழந்தை பெயரைக் கூறுங்கள். ஆரிகன், ஆவிகன் தவிர்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக்கன், ஆங்கன், ஆகன், ஆகமன், ஆகரன், ஆசரிகன், ஆசிகன், ஆசுகன், ஆணிகன், ஆதிகன், ஆமிகன், ஆபிகன், ஆலிகன், ஆழிகன்.

   நீக்கு
 15. ஐயா, மிக்க நன்றி. ஒரு சிறு ஐயம். கவினேசன் பிரித்துப் பொருள் தாருங்கள்

  பதிலளிநீக்கு
 16. கவின் + நேசன் என்று பிரிக்கலாமா? அல்லது கவி + நேசன்? என்று பிரிக்கலாமா கவி என்பது வடமொழியா? கவின் + நேசன் புணர்ச்சியில் எவ்வாறு புணரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவி + நேசன் = கவிநேசன் >>> கவினேசன். கவின் + நேசன் = கவின்னேசன். எல்லாமே தமிழ்ச்சொற்கள் தான்.

   நீக்கு
 17. கவி என்ற சொல் வடமொழி என்று பாவாணர் கூறி இருக்கிறாரே. அதனால் தான் கவி என்ற சொல் தமிழா என்ற ஐயம் ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
 18. கவ்வை (=ஒலி, இசை, பாட்டு) + இ = கவ்வி >>> கவி = பாடுபவர். கவி தமிழ்ச்சொல் தான் நண்பரே.

  பதிலளிநீக்கு
 19. ஐயா மாதங்கி என்பது தமிழ் பெயர் தானா? அப்படியானால் அதற்கு பொருள் என்னவென்று சற்று விளக்குவீர்களா.

  பதிலளிநீக்கு
 20. மாதங்கி என்னும் தமிழ்ச்சொல்லுக்கு பார்வதி, திருமகள், பூ, தேன் கூடு என்றெல்லாம் பொருளுண்டு. எப்ப்டி என்று கீழே பார்க்கலாம்.
  (1) மாது (=பெண்) + அங்கம் (=உடல், பாகம்) + அன் = மாதங்கன் = பெண்ணை உடலில் பாகமாகக் கொண்டவன் = சிவன். மாதங்கன் என்பதன் பெண்பால் பெயர் மாதங்கி = பார்வதி (2) மா (=செல்வம்) + தங்கு + இ = மாதங்கி = செல்வம் தங்கி இருப்பவள் = திருமகள். (3) மது (=தேன்) + அகம் + இ = மாதக்கி >>> மாதங்கி = தேனை அகத்தே கொண்டது = தேன் கூடு, மலர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான விளக்கம் ஐயா நன்றி. இத்தனை அர்த்தங்கள் உண்டென்று எதிர்பார்க்கவில்லை. தமிழ் வியப்பும் செழிப்பும் நிரம்ப பெற்ற மொழி என்பது உண்மையே :)

   நீக்கு
 21. ஐயா ,நற்பவி என்ற பெயரை பெண் குழந்தைக்கு வைக்கலாமா

  பதிலளிநீக்கு
 22. நன்மை + பவ (=உண்டாக்கு) + இ = நற்பவி = நன்மைகளை உண்டாக்குபவள். எனவே இப்பெயரைப் பெண் குழந்தைக்குச் சூட்டலாம்.

  பதிலளிநீக்கு
 23. மிக்க நன்றி ஐயா , நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட ஒரு மூல ஜப மந்திரம்
  என்று அறிந்தேன் . மந்திர சொல்லை குழந்தைகளுக்கு பெயராக வைப்பதில் ஏதேனும் தவறு உண்டா ,தாங்கள் அறிந்தால் சற்று விளக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறில்லை. தாராளமாய் வைக்கலாம். காயத்ரி என்னும் மூல மந்திரப் பெயர் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறதே.

   நீக்கு
 24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.