ஞாயிறு, 29 மார்ச், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 14


சொல்
பொருள்
தமிழ்ச்சொல்
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
பத்ததி
கருத்து
பற்றது
பற்று (=உணர், அறி) >>> பற்றது >>> பற்றதி >>> பத்ததி = அறியப்பட்டது.
பத்தம்
கட்டு
பற்றம்
பற்று (=கட்டு) >>> பற்றம் >>> பத்தம்
பத்தம்
உண்மை
பற்றம்
பற்று (=ஆதாரம்) >>> பற்றம் >>> பத்தம் = ஆதாரமாக விளங்குவது = உண்மை.
பத்தம்
உணவு
வத்தம்
வத்தம் (=உணவு) >>> பத்தம்
பத்தர்
வியாபாரிகள்
பதத்தர்
பதம் (=பொருள்) >>> பதத்தர் >>> பத்தர் = பொருளை வாங்கி விற்பவர்கள்.
பத்தனம்
ஊர்
பற்றணம்
பற்று (=வீடு) >>> பற்றணம் >>> பத்தனம் = வீடுகள் அணைந்த / சேர்ந்த இடம் = ஊர்.
பத்தா
கணவன்
பத்தன்
பற்று (= உரிமை, அன்பு) >>> பற்றன் >>> பத்தன் >>> பத்தா = உரிமையும் அன்பும் உடையவன்
பத்தா
துப்பு, ஆதாரம்
பற்றா
பற்று (=ஆதாரம்) >>> பற்றா >>> பத்தா
பத்தாசு
படகு
பற்றாசு
பற்று + ஆசு (=ஆதாரம்) = பற்றாசு >>> பத்தாசு = நீருக்குள் பற்றிக் கொள்ளும் ஆதாரம்.
பத்தாயம், பத்தயம்
பொறி
பற்றாயம்
பற்று (=பிடி, அகப்படுத்து) + ஆயம் (=கருவி) = பற்றாயம் >>> பத்தாயம் >>> அகப்படுத்தும் கருவி.
பத்தாயம், பத்தயம்
உணவுப் பொருள் களஞ்சியம்
வத்தாயம்
வத்தம் (=உணவு) + ஆயம் (= கூடம்) >>> வத்தாயம் >>> பத்தாயம் = உணவுப்பொருள் சேமிக்கும் கூடம்.
பத்தி
படைப்பிரிவு
பத்தி
பத்து >>> பத்தி = 1 யானை, 1 தேர், 3 குதிரை, 5 காலாட்கள் என்று மொத்தம் 10 உறுப்பினர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவு.
பத்தி
ஒளி
பாற்றி
பாற்று (=அறு) >>> பாற்றி >>> பாத்தி >>> பத்தி = அறுக்கும் இயல்புடையது = ஒளி. ஒ.நோ: பகு (=அறு) >>> பகல், பகர், பக்கம் = ஒளி.
பத்தி
கூரை
பத்தி
பது (=மூடு, மறை) >>> பத்தி = மேலே மூடுவது.
பத்தி, பந்தி
பிரிவு, வரிசை
பாற்றி
பாற்று (=கிழி, வகு, வரையறு) >>> பாற்றி >>> பாத்தி >>> பத்தி, பந்தி = பிரிவு, வரிசை.
பத்தியம்
மருந்துக்கு இசைவானது
பற்றியம்
பற்று (=மருந்து) + இயம் (=இயைவது) = பற்றியம் >>> பத்தியம் = மருந்துக்கு இசைவானது.
பத்தியம்
அக்கறை
பற்றியம்
பற்று >>> பற்றியம் >>> பத்தியம் = அக்கறை.
பத்தியம்
செய்யுள், பாட்டு
பத்தியம்
பதம் (= சொல்) + இயம் = பத்தியம் = சொற்களால் இயற்றப்படுவது = செய்யுள்.
பத்திரம்
அழகு, நன்மை
பைந்திறம்
பசுமை (=அழகு, நன்மை) + திறம் (=தன்மை) = பைந்திறம் >>> பத்திரம்
பத்திரம்
யானை, மலை
பைத்திறம்
பை (=பெரு) + திறம் (=உடல்) = பைத்திறம் >>> பத்திரம் = பெருத்த உடல் கொண்டது.
பத்திரம்
பாதுகாப்பு
பைத்திறம், பதிரம், மாய்த்திறம்
(1). பை + திறம் (=வேசம், மறைப்பு) = பைத்திறம் >>> பத்திரம் = பைக்குள் மறைத்தல். (2). பது (=மூடு, மறை) >>> பதிரம் >>> பத்திரம் = மூடி மறைத்தல், பாதுகாத்தல். (3) மாய் (=மூடு, மறை) + திறம் (=நிலை) = மாய்த்திறம் >>> மாத்திறம் >>> பத்திரம் = மூடிமறைத்த நிலை.
பத்திரம்
குதிரைத் தொழு
பற்றிரம்
பற்று (=கட்டு) >>> பற்றிரம் >>> பத்திரம் = கட்டி வைக்கும் இடம்.
பத்திரம், பத்திரி
இதழ், ஏடு, சிறகு, தாள் போன்றன
வற்றிரம்
வற்று (=மெலி) >>> வற்றிரம் >>> வத்திரம் >>> பத்திரம் = மெலிவானது = இதழ், ஏடு, சிறகு, தாள்
பத்திரம், பத்திரி
இலை
பைந்திறம்
பசுமை + திறம் (=மிகுதி) = பைந்திறம் >>> பத்திரம் = பசுமை மிக்கது = இலை. 
பத்திரி
குதிரை, பறவை, அம்பு
பற்றிரி
பற்று (=தொடர்) + இரி (=விரை, ஓடு, பாய்) = பற்றிரி >>> பத்திரி = தொடர்ந்து விரைவது / ஓடுவது / பாய்வது = குதிரை, பறவை, அம்பு
பத்திரி, பத்திரை
காளி
பைத்திறி
பை (=சின) + திறம் (=மிகுதி) = பைத்திறம் >>> பைத்திறி >>> பத்திரி = சினம் மிக்கவள்
பத்திரிகை
தாள், ஏடு
பத்திரிகை
பத்திரி (=தாள், ஏடு) >>> பத்திரிகை
பத்திரை
பசு
பைத்திரை
பைது (=பசுமையானது) + இரை (=உணவு) = பைத்திரை >>> பத்திரை = பசுமையான உணவுகளை உண்பது = பசு.
பத்தினி
மனைவி
பற்றினி
பற்று (=அன்பு, உரிமை) >>> பற்றினி >>> பத்தினி = அன்பும் உரிமையும் கொண்டவள்.
பத்தேமாரி
படகு
பத்தேமாரி
பற்று + ஏம் (=பாதுகாப்பு) + ஆரி = பற்றேமாரி >>> பத்தேமாரி = பற்றினால் பாதுகாப்பு அளிப்பது.
பதப்பர்
மணல்மூட்டைத் தடுப்புச் சுவர்
பதப்பர்
பது (=மூடு, மறை) + அப்பு (=திணி) + அர் = பதப்பர் = மணல் மூட்டைகளைத் திணித்துச் செய்யப்படும் மறைப்பு / தடுப்புச் சுவர்.
பதம்
சொல்
மாற்று
மாற்று (=பேச்சு) >>> மாத்து >>> மாத்தம் >>> பாத்தம் >>> பதம் = சொல்
பதம்
ஒளி
பாறம்
பாறு (=அறு) >>> பாறம் >>> பாதம் >>> பதம் = அறுக்கும் இயல்புடையது = ஒளி. ஒ.நோ: பகு (=அறு) >>> பகல், பகர், பக்கம் = ஒளி.
பதம்
சோதிடக் கட்டம், கட்டம், நிலை
பாறம்
பாறு (=அறு, வகு) >>> பாறம் >>> பாதம் >>> பதம் = வகுக்கப்பட்டது = கட்டம், நிலை.
பதம்
தகுதி
பற்றம்
பற்று (=பொருந்து, தகு) >>> பற்றம் >>> பத்தம் >>> பதம் = பொருத்தம், தகுதி
பதம், பாதை
வழி, இடம்
பாறம், பாறை
பாறு (=ஓடு, கட) >>> பாறம், பாறை >>> பாதம், பதம், பாதை = ஓடும் / கடக்கும் வழி.
பதமம்
சந்திரன்
பதமம்
பதம் (=இனிமை, ஒளி) >>> பதமம் = இனிய ஒளி தருபவன் = சந்திரன்
பதமம்
பறவை, விட்டில்
பறமம்
பற >>> பறமம் >>> பதமம் = பறப்பது
பதரி
இலந்தைப் பழம்
பதரி
பதர் (= தோல்) >>> பதரி = சதைப்பற்று இல்லாமல் தோல் மட்டுமே உண்ணப்படும் பழம் தரும் மரம்.
பதலம், பதனம்
பாதுகாப்பு
பதலம், பதனம்
பது (=மூடு, மறை) >>> பதலம், பதனம் = மூடி மறைத்தல்.
பதலை
தாழி, கலசம்
பற்றல், பத்தல்
பற்றல் (=கொள்ளுதல்) >>> பத்தல் >>> பத்தலை >>> பதலை = கொள்ளும் கலம்.
பதலை
படகு
பற்றலை
பற்று (=ஆதரவு, பிடிமானம்) + அலை (=நீர்) = பற்றலை >>> பத்தலை >>> பதலை = நீருக்குள் ஆதரவாக விளங்குவது. ஒ.நோ: பற்று (=ஆதரவு) >>> பற்றி >>> பஃறி = ஆதரவாக இருப்பது = படகு.
பதலை
பறை, மத்தளம்
பதலை
பதை (=நடுங்கு, துடி) + அலை (=அடி) = பதலை = நடுங்குமாறு / துடிக்குமாறு அடிக்கப்படுவது.
பதலை
மலை
மாற்றலை
மால் (=உயரம், பெருமை, மேகம்) + தலை (=இடம், உச்சி) = மாற்றலை >>> மாத்தலை >>> பதலை = உயரமும் பெருமையும் கொண்ட இடமானதும் மேகங்களை உச்சியில் அணிந்ததும் ஆகியது.
பதவல், பதவை
குப்பை, செத்தை
பாறவல்
பாறு (=சிதறு) + அவல் (=நிலம்) = பாறவல் >>> பதவல் = நிலத்தில் சிதறிக் கிடப்பவை.
பதவி, பதவை
வழி, நிலை
பதம்
பதம் (=வழி, நிலை) >>> பதமை, பதமி >>> பதவை, பதவி = வழி, நிலை
பதனம்
நிலைகேடு, தாழ்வு
பாறனம்
பாறு (=நிலைகெடு, தாழ்) >>> பாறனம் >>> பதனம் = நிலைகேடு, தாழ்வு, இறக்கம்
பதனம்
அமைதி
பற்றணம்
பற்று (=பொருந்து, அமை) >>> பற்றணம் >>> பத்தனம் >>> பதனம் = அமைதி
பதாகம், பதாகை
பறக்கும் கொடி
பறாக்கம்
பற + ஆக்கம் (=துணி) >>> பறாக்கம் >>> பதாகம், பதாகை = பறக்கின்ற துணி.
பதாதி
காலாட்படை
பதாதி
பதம் (=கால்) + ஆதி (=பயணம்) = பதாதி = காலால் பயணம் செய்வோர்.
பதாதி
படைப்பிரிவு
பத்தாதி
பத்து + ஆதி (=கூட்டம்) = பத்தாதி >>> பதாதி = 1 யானை, 1 தேர், 3 குதிரை, 5 காலாட்கள் என்று மொத்தம் 10 உறுப்பினர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவு.
பதார்த்தம்
சொற்பொருள்
பதாருத்தம்
பதம் (=சொல்) + அருத்து (=ஊட்டு) + அம் = பதாருத்தம் >>> பதார்த்தம் = சொல்லினால் ஊட்டப்படுவது = சொற்பொருள், கருத்து.
பதார்த்தம்
உணவுப்பொருள்
பதாருந்தம்
பதம் (= பொருள்) + அருந்து (= உண்ணு) + அம் = பதாருந்தம் >>> பதார்த்தம் = உண்ணும் பொருள்
பதி
குதிரை
பறி
பறி (=விரை, ஓடு) >>> பதி = விரைந்து ஓடுவது
பதி
குரு
பதி
மதி (=அறிவு) >>> பதி = அறிஞன் = குரு
பதி
தலைவன்
பதி
மதி (=மதிப்பு, சிறப்பு) >>> பதி = சிறப்பு மிக்கவன்
பதி
கணவன்
பற்றி
பற்று (=அன்பு, உரிமை) >>> பற்றி >>> பத்தி >>> பதி = அன்பும் உரிமையும் கொண்டவன்.
பதிகம்
பத்து இறைப் பாடல்கள் அடங்கியது
பத்திகம்
பத்து (= அன்பு, எண்) >>> பத்தி >>> பத்திகம் >>> பதிகம் = இறைவன்மேல் கொண்ட அன்பினைப் பத்து எண்ணிக்கையில் பாடும் முறை.
பதிகம்
பாயிரம்
பாற்றிகை
பால் (=இயல்பு) + திகை (=விளக்கு) = பாற்றிகை >>> பாத்திகம் >>> பதிகம் = நூலின் இயல்பினை விளக்கும் பகுதி.
பதிகன்
வழிப்போக்கன், காலாள்
பதிகன்
பதம் (=வழி) + இகன் (=செல்பவன்) = பதிகன் = வழியில் செல்பவன்.
பதிட்டி, பதிட்டு
நிலைநிறுத்து
பதிட்டு
பதி (=பொருத்து, நிலைநிறுத்து) + இடு (=வை) >>> பதிட்டு >>> பதிட்டி = நிலைநிறுத்தி வை
பதிட்டிதம்
நிலைநிறுத்தப் பட்டது
பதிட்டிதம்
பதிட்டு (=நிலைநிறுத்து) >>> பதிட்டிதம் = நிலைநிறுத்தப் பட்டது.
பதிட்டை
நிலைநிறுத்தம்
பதிட்டை
பதிட்டு (=நிலைநிறுத்து) >>> பதிட்டை
பதித்திரி
உலைத்துருத்தி
பதித்துரி
பதி (=மிதி) + துர (=இயக்கு) = பதித்துர >>> பதித்துரி >>> பதித்திரி = மிதித்து இயக்கப்படுவது.
பதிமை
பொம்மை
பதிமை
பதி (=அச்சிடு, அச்சு உண்டாக்கு) >>> பதிமை = அச்சு, போலி.
பதியம்
பாட்டு
பதியம்
பதி (=எழுது) >>> பதியம் = எழுதப்பட்டது = எழுத்து, சொல், பாட்டு.
பதிரன்
செவிடன்
பற்றிலன்
பற்று (=கொள், செவிமடு) + இலன் = பற்றிலன் >>> பத்திலன் >>> பதிரன் = கேள்வி இல்லாதவன்.
பதில்
விடை
பதில்
பதி (=நிறை, எழுது) >>> பதில் = கேள்வியை நிறைவு செய்யும் எழுத்து. ஒ.நோ: நிரப்பு = பதில் சொல்லு, விடை கூறு. 
பதுமம்
நரகம்
பாற்றுமம்
பாற்று (=கொல், தோண்டு) >>> பாற்றுமம் >>> பாத்துமம் >>> பதுமம் = பாவிகளைக் கொன்று குவிக்கும் பள்ளமான இடம்.
பதுமம்
ஒரு பேரெண்
பதுமம், பைதூமம்
(1). பதுமம் >>> பதுமம் = நீரில் தோன்றிய நெருப்பென ஒளிரும் தாமரை மலர்களைப் போல வானில் ஒளிரும் மீன்களின் எண்ணிக்கை. (2) பை (=மிகு, கூடு, பெருகு) + தூமம் (=நெருப்பு, விண்மீன்) = பைதூமம் >>> பதுமம் = விண்மீன் கூட்டம்..
பதுமம், பத்மம்
தாமரை
பதுமம்
பது (=மூடு, மறை) >>> பதுமம் >>> பத்மம் = இரவில் இதழ்களை மூடி மறைத்துக் கொள்ளும் மலர்.
பதுமை,
பொம்மை
பற்றுமை, மாற்றுமை
(1). பற்று (=பொருந்து, ஒப்பு) >>> பற்றுமை >>> பத்துமை >>> பதுமை = ஒப்பானது. (2) மறுப்ப (=போல) >>> மாற்று >>> மாற்றுமை >>> பாத்துமை >>> பதுமை = ஒப்பானது. ஒ.நோ: போல >>> போன்மை >>> பொம்மை.
பதேசம்
நாடு
பைத்தேயம்
பை (=பர) + தேயம் (=இடம்) = பைத்தேயம் >>> பதேசம் = பரந்த இடம் = நாடு
பந்தகம்
அடைமானம்
பற்றாக்கம்
பற்று (=கட்டு) + ஆக்கம் (=பொருள்) = பற்றாக்கம் >>> பத்தாக்கம் >>> பந்தகம் = ஈடாகக் கட்டப்பட்ட பொருள் = அடைமானம்.
பந்தணம், பந்தனம், பந்தனை
பற்று, கட்டு
பற்றணம், பற்றணை
பற்று (=கட்டு) >>> பற்றணம் / பற்றணை >>> பத்தணம்  / பத்தணை >>> பந்தணம் / பந்தனம் / பந்தனை = கட்டு.
பந்தம்
கட்டுப்பாடு
பற்றம்
பற்று (=கட்டு) >>> பற்றம் >>> பத்தம் >>> பந்தம் = கட்டுப்பாடு
பந்தம்
மதில்
பத்தம்
பது ( = மூடு, மறை ) >>> பத்தம் >>> பந்தம் = மறைப்பு = சுவர், கோட்டை மதில்
பந்தம்
அழகு
பதம்
பதம் (=அழகு) >>> பத்தம் >>> பந்தம்
பந்தம்
தீவட்டி, விளக்கு
பற்றம்
பற்று (=மூட்டு) >>> பற்றம் >>> பத்தம் >>> பந்தம் = தீ மூட்டப்பட்டது = தீவட்டி.
பந்தம், பந்தனம்
கயிறு, இழை
பற்றம்
பற்று (=கட்டு) >>> பற்றம் >>> பத்தம் >>> பந்தம் = கட்ட உதவுவது = கயிறு, நூல்.
பந்தம், பந்து
உருண்டை, சுழல்வது
பந்து
மத்து (=கடை, சுழற்று) >>> பத்து >>> பந்து = சுழலும் வட்ட வடிவினது.
பந்தயம்
போட்டி
பற்றாயம்
பற்று (= சேர், தொடர் ) + ஆயம் (=ஆட்டம்) = பற்றாயம் >>> பத்தாயம் >>> பந்தயம் = பலர் சேர்ந்து தொடர்ந்து ஆடும் விளையாட்டு. 
பந்தயம்
அடைமானம்
பற்றாயம்
பற்று (=கட்டு) + ஆயம் (=பொருள்) = பற்றாயம் >>> பத்தாயம் >>> பந்தயம் = ஈடாகக் கட்டப்பட்ட பொருள் = அடைமானப் பொருள்.
பந்தி
கட்டு, கூடு
பற்றி
பற்று (=கட்டு, சேர், கூடு) >>> பற்றி >>> பத்தி >>> பந்தி = கட்டு, கூடு
பந்துரம்
ஒளி, அழகு
பந்துறம்
பந்தம் (=விளக்கு) + உறு (=அடை) = பந்துறு >>> பந்துறம் >>> பந்துரம் = விளக்கில் இருந்து அடையப்படுவது = ஒளி >>> அழகு.
பந்தோபச்`து, பந்தோபத்து
பாதுகாவல்
பத்தோம்பத்தம்
பது (=மூடு, மறை) + ஓம்பு (= பாதுகா) + அத்தம் (=வழிமுறை) = பத்தோம்பத்தம் >>> பந்தோப்பத்து >>> பந்தோபச்`து = மறைத்துப் பாதுகாக்கும் முறை
பற்றை
துண்டு, குயவர் அரிவாள்
பாற்றை
பாற்று (=அறு) >>> பாற்றை >>> பற்றை = (1) அறுக்கப்பட்டது (2) அறுக்க உதவுவது.
பாதகம், பதகம்
அழிவு, கேடு
பாறகம்
பாறு (=அழிவு, கேடு) + அகம் = பாறகம் = பாதகம் = அழிவை / கேட்டினை உடையது.
பாத்திரம்
குணநிலை
பாற்றிறம்
பால் (=குணம்) + திறம் (=நிலை) = பாற்றிறம் >>> பாத்திரம் = குணநிலை.
பாதம், பதம்
கால்
பாறம்
பாறு (=ஓடு, கட) >>> பாறம் >>> பாதம் >>> பதம் = ஓட / கடக்க உதவுவது = கால்.
பாதரசம்
அழிவைத் தரும் நீர்மக் கனிமம்
பாறரிசம்
பாறு (=அழிவு, கேடு) + அரிசம் (=நீர்மம்) = பாறரிசம் >>> பாதரிசம் >>> பாதரசம் = அழிவைத் / கேட்டைத் தரும் நீர்மக் கனிமம்.
பிரச்சினை
சிக்கல்
பிறழ்ச்சி
பிறழ் >>> பிறழ்ச்சி (=ஒழுங்கின்மை, தாறுமாறு) >>> பிறழ்ச்சினை >>> பிரச்சினை = சிக்கல்
பிரச்சினை, பிரசினம்
கேள்வி
விரிச்சி
விரிச்சி (=கேள்வி) >>> விரிச்சினை >>> பிரச்சினை, பிரசினம் = கேள்வி. பி.கு: பழங்காலத்தில் ஒரு செயல் நடக்குமா நடக்காதா என்று அறிவதற்காக, நெல்லும் மலரும் தூவி தங்களது கேள்வியைக் கேட்டு அடங்கி நிற்பார்கள். அப்போது பறவை ஏதேனும் ஒலி எழுப்பினால் அது ஒலித்த திசையைக் கொண்டு நடக்கும் நடக்காது என்று முடிவு எடுப்பார்கள். இதனை விரிச்சி என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
பீதி
பயம்
விதிர்
விதிர் (= அஞ்சு) >>> பிதிர் >>> பீதி = அச்சம்
பொம்மை
போலியானது
போன்மை
(2). போல >>> போன்மை >>> பொம்மை = போலி.
யுத்தம்
போர்
உந்தம்
உந்து (=எறி, தாக்கு) >>> உந்தம் >>> உத்தம் >>> யுத்தம் = எறிவதும் தாக்குவதுமான செயல்.
ரசம்
சாறு, நீர்மம்
அரிசம்
(2). அரி >>> அரிச்சு (=வடிகட்டு) >>> அரிச்சம் >>> அரிசம் >>> ரசம் = வடிகட்டப்பட்டது.
வதனம்
முகம்
பந்தனம்
பந்து + அனம் >>> பந்தனம் >>> பத்தனம் >>> வதனம் = பந்துபோன்ற வட்ட வடிவ உறுப்பு.
வித்தியாசம்
வேறுபட்ட கணக்கு
வீற்றாயம், வேற்றாயம்
(1). வீற்று (=வேறுபாடு) + ஆயம் (=கணக்கு) = வீற்றாயம் = வித்தாசம் >>> வித்யாசம் >>> வித்தியாசம் = வேறுபாட்டுக் கணக்கு. (2) வேறு + ஆயம் = வேற்றாயம் >>> வெத்தாசம் >>> வித்யாசம் >>> வித்தியாசம் = வேறுபடும் கணக்கு.
வைத்தியம்
மருத்துவம்
பற்றியம்
பற்று (=மருந்து) + இயம் = பற்றியம் >>> பத்தியம் >>> வத்தியம் >>> வைத்தியம் = மருந்தியம்.