புதன், 24 பிப்ரவரி, 2021

66 - (அண்டம் -> அந்தச்`து) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

அண்டம்

முட்டை, உருண்டை

அட்டம்

அடை (=அடைகா) + அம் = அட்டம் >>> அண்டம் = அடைக்காக்கப் படுவது = முட்டை > உருண்டை.

அண்டம்

பூமி

அட்டம்

அடை (=கனம், பெருமை, தங்கு, இடம்) + அம் = அட்டம் >>> அண்டம் = பெரிய தங்குமிடம் = பூமி

அண்டம்

வானம்

அற்றம்

அற்றம் (=இன்மை, வெளி) >>> அட்டம் >>> அண்டம் = பெருவெளி

அண்டம்

விதை

ஏற்றம்

ஏறு (=உயிர், தோன்று) + அம் = ஏற்றம் >>> அட்டம் >>> அண்டம் = உயிர் தோன்றுவது = விதை.

அண்டர்

தேவர்

அண்டர்

அண்டம் (=வானம்) >>> அண்டர் = வானுலகத்தவர்

அண்டா

வட்டமான கொள்கலம்

அண்டை

அண்டு (=அடை, கொள், வளையம், வட்டம்) + ஐ = அண்டை >>> அண்டா = வட்டமான கொள்கலம்.

அகிஞ்சை, அகிம்சை

வருத்துதல் இல்லாமை

அகுழை

(2) அகை (=அறு, இல்லாகு) + உழை (=வருத்து) = அகுழை >>> அகிசை >>> அகிஞ்சை >>> அகிம்சை = வருத்துதல் இல்லாமை.

அண்ணை

முட்டாள்

எண்ணை

எண் (=கருது, சிந்தி) + நை (=அழி, இல்லாகு) = எண்ணை >>> அண்ணை = சிந்தனை இல்லாதவன்..

அணிமா

அணுவாகும் ஆற்றல்

அணீமா

அணு (=நுண்மை) + ஈ (=படை, ஆக்கு) + மா (=ஆற்றல்) = அணீமா >>> அணிமா = நுண்ணிதாக ஆகும் ஆற்றல்.

அணு

நுட்பமானது

எண்ணு

எண்மை (=நுட்பம்) + உ = எண்ணு >>> அணு = நுட்பமானது.

அணு

உயிர்

எண்ணு

எண் (=தோன்று, அனுபவி) + உ = எண்ணு >>> அணு = தோன்றி அனுபவிப்பது = உயிர்.

அத்தம்

கண்ணாடி

அழற்றம்

அழல் (=ஒளிர்) >>> அழற்று (=எதிரொளி, பிரதிபலி) + அம் = அழற்றம் >>> அயத்தம் >>> ஐத்தம் >>> அத்தம் = பிரதிபலிப்பது.

அத்தம்

வழி

ஆறு

ஆறு (=வழி) + அம் = அற்றம் >>> அத்தம்

அத்தம்

காடு

அத்தம்

அத்து (=செறி, இடம்) + அம் = அத்தம் = செறிவுடைய இடம்.

அத்தம்

பொருள், செல்வம்

ஆற்றம்

ஆற்று (=வாழ், தேடு, திரட்டு) + அம் = ஆற்றம் >>> அத்தம் = வாழ்வதற்காக தேடித் திரட்டப்படுவது.

அத்தம்

சொற்பொருள்

அற்றம்

அறி + அம் (=சொல்) = அற்றம் >>> அத்தம் = சொல்லில் இருந்து அறியப்படுவது.

அத்தம்

பாதி

அற்றம்

அறு + அம் = அற்றம் >>> அத்தம் = அறுக்கப்பட்டது.

அத்தம்

கை

ஆற்றம்

ஆற்று (=செய், உதவு) + அம் = ஆற்றம் >>> அத்தம் = செய்ய உதவுவது

அத்தம்

ஆடை

ஏந்தம்

ஏந்து (=தரி) + அம் = ஏந்தம் >>> அத்தம் = தரிக்கப்படுவது

அத்தாய்

ஆடை

ஏந்தை

ஏந்து (=தரி) + ஐ = ஏந்தை >>> அத்தை >>> அத்தாய் = தரிக்கப்படுவது

அத்தமனம், அச்`தமனம்

ஒளி மறைவு

அற்றவானம்

அற்றம் (=ஒழிவு) + வான் (=ஆகாயம், ஒளி) + அம் = அற்றவானம் >>> அத்தமனம் >>> அச்`தமனம் = ஆகாயத்தில் ஒளியின் ஒழிவு.

அத்தமனம், அச்`தமனம்

அழிவு

அற்றவணம்

அற்றம் (=அழிவு) + அணம் = அற்றவணம் >>> அத்தமனம் >>> அச்`தமனம் = அழிவு.

அத்தமம், அச்`தமம்

ஒளி மறைவு

அற்றமம்

அற்றம் (=ஒழிவு) + அம் (=அழகு, ஒளி) + அம் = அற்றமம் >>> அத்தமம் >>> அச்`தமம் = ஒளியின் ஒழிவு.

அத்தமயம், அச்`தமயம்

ஒளி மறைவு

அற்றவாயம்

அற்றம் (=ஒழிவு) + ஆய் (=அழகு, ஒளி) + அம் = அற்றவாயம் >>> அத்தமயம் >>> அச்`தமயம் = ஒளியின் ஒழிவு.

அத்தமி

ஒளி மறை

அற்றமி

அற்றமம் (=ஒளி மறைவு) >>> அற்றமி >>> அத்தமி.

அத்தவாளம்

மேலாடை

ஏற்றபாளம்

ஏற்றம் (=மேன்மை, மேல்) + பாளம் (=ஆடை) = ஏற்றபாளம் >>> அத்தவாளம் = மேலாடை.

அத்தவாளம்

முந்தானை

அத்தவாலம்

அத்தம் (=ஆடை) + வால் (=நுனி) + அம் = அத்தவாலம் >>> அத்தபாளம் = ஆடையின் நுனி.

அத்தவாளம்

காடு

அத்தவளம்

அத்தம் (=இடம்) + அள் (=செறிவு) + அம் = அத்தவளம் >>> அத்தவாளம் = செறிவுடைய இடம். 

அத்தன்

தந்தை

ஏற்றன்

ஏறு (=உயிர், தோற்றுவி) + அன் = ஏற்றன் >>> அத்தன் = உயிரைத் தோன்றச் செய்தவன் = தந்தை.

அத்தன்

குரு, முதியவன்

ஏற்றன்

ஏறு (=உயர், முதிர்) + அன் = ஏற்றன் >>> அத்தன் = உயர்வுடையவன், முதிர்ந்தவன் = குரு, முதியவன்

அத்தாச்சி, அத்தாட்சி

கையெழுத்து

அத்தாச்சி

அத்தம் (=கை) + ஆசு (=எழுது) + இ = அத்தாச்சி >>> அத்தாட்சி = கையெழுத்து.

அத்தாச்சி, அத்தாட்சி

கண்ட சாட்சி

அற்றாயி

அறி + ஆயம் (= இரகசியம், ஆள்) + இ = அற்றாயி >>> அத்தாசி >>> அத்தாச்சி >>> அத்தாட்சி = இரகசியத்தை அறிந்த ஆள்.

அத்தாச்சி, அத்தாட்சி

சான்று

அத்தாயி

அத்தம் (=பொருள்) + ஆயம் (=கூட்டம், வலிமை, உறுதி) + இ = அத்தாயி >>> அத்தாசி >>> அத்தாச்சி >>> அத்தாட்சி = உறுதி கூட்டும் பொருள்.

அத்தாணி

பெரிய அறை

அற்றாணி

அறை + ஆணி (=பெருமை) = அற்றாணி >>> அத்தாணி = பெரிய அறை

அத்தாயம்

மிதிக்கப்படும் சக்கரம்

எற்றாழம்

எற்று (=மிதி) + ஆழி (=சக்கரம்) + அம் = எற்றாழம் >>> அத்தாயம் = மிதிக்கக்கூடிய சக்கரம்.

அத்தாயம்

மேலே தூக்கிச் சுழற்றுதல்

ஏற்றாழம்

ஏற்று (=தூக்கு) + ஆழி (=வட்டம், சுழற்று) + அம் = ஏற்றாழம் >>> அத்தாயம் = தூக்கிச் சுழற்றுதல்.

அத்தாழம்

மாலைநேரம்

எற்றாழம்

எல் (=ஒளி, வெயில்) + தாழ் (=குறை) + அம் (=நேரம்) = எற்றாழம் >>> அத்தாழம் = வெயில் குறையும் நேரம்.

அத்தாளம்

இரவுச் சாப்பாடு

ஆற்றலம்

ஆற்று (=உண்ணு) + அல் (=இரவு) + அம் = ஆற்றலம் >>> அத்தாளம் = இரவு உணவு.

அத்தி

அக்கா

ஏற்றி

ஏறு (=உயரம், முதல், தோன்று) + இ = ஏற்றி >>> அத்தி = முதலில் தோன்றியவள்.

அத்தி

கடல்

அந்தை

அம் (=நீர்) + தை (=அடை, நிறை) = அந்தை >>> அத்தி = நீர் நிறைந்தது

அத்தி

பிச்சைக்காரன்

ஆற்றீ

ஆற்று (=பசிதணி, உண்ணு, உதவு) + ஈ (=கொடு) = ஆற்றீ >>> அத்தி = உதவியாகக் கொடுத்ததை உண்பவன்.

அத்தி

எலும்பு

அற்றீ

(2) அல் (=தங்கு, எதிர்மறை) + தீ (=எரி) = அற்றீ >>> அத்தி = எரியாமல் தங்கிவிடுவது.

அத்தி

கொலை

அற்றி

அறு (=கொல்) + இ = அற்றி >>> அத்தி = கொலை.

அத்தி

யானை

ஏற்றி

ஏறு (=உயர், பெரு, உயிர்) + இ = ஏற்றி >>> அத்தி = உயரமான பெரிய உயிரி = யானை.

அத்திகாயம்

ஐந்து சேர்ந்த தொகுதி

ஐந்திகாயம்

ஐந்து + இகு (=திரள், சேர்) + ஆயம் (=தொகுதி) = ஐந்திகாயம் >>> அத்திகாயம் = ஐந்து சேர்ந்த தொகுதி.

அத்தியக்கம்

கண்ணால் அறிவது

அற்றியாகம்

அறி + ஆகம் (=கண்) = அற்றியாகம் >>> அத்தியக்கம் = கண்ணால் அறிவது

அத்தியக்கன், அத்தியட்சன்

தலைவன்

ஆதியக்கன்

ஆதி (=முதல், முன்) + இயக்கு + அன் = ஆதியக்கன் >>> அத்தியக்கன்  = முன்னிருந்து இயக்குபவன்.

அத்தியக்கினி

தீயின் முன் கொடுப்பது

ஆதியக்கீனி

ஆதி (=முதல், முன்) + அகை (=எரி) + ஈனு (=கொடு) + இ = ஆதியக்கீனி >>> அத்தியக்கினி = தீயின் முன்னால் கொடுக்கப்படுவது.

அத்தியயனம், அத்தியாபனம், அத்தியானம்

கல்வி, ஆராய்ச்சி

அற்றிழயணம்

அறி + இழை (=ஆராய்) + அணம் = அற்றிழயணம் >>> அத்தியயனம் >>> அத்தியானம் = ஆராய்ந்து அறிதல்.

அத்தியயனம், அத்தியாபனம்

வேதம் ஓதுதல்

அற்றிழயணம்

அறம் (=வேதம்) + இழை (=கூறு, ஓது) + அணம் = அற்றிழயணம் >>> அத்தியயனம் = வேதம் ஓதுதல்.

அத்தியாயம்

நூல் பிரிவு

அற்றிழையம்

(2) அறு (=பிரி) + இழை (=நூல், புத்தகம்) + அம் = அற்றிழையம் >>> அத்தியாயம் = நூல் பிரிவு.

அத்தியாசம்

இல்லாத தன்மையை ஏற்றிக் கூறல்

ஏற்றியசம்

ஏற்று + இயம் (=தன்மை, சொல்) + அசை (=நீங்கு, இல்லாகு, தங்கு, பொருந்து) + அம் = ஏற்றியசம் >>> அத்தியாசம் = இல்லாத தன்மையை பொருந்துமாறு ஏற்றிக் கூறுதல்.

அத்தியாரோபம்

இல்லாத தன்மையை ஏற்றிக் கூறல்

ஏற்றியறொப்பம்

ஏற்று + இயம் (=தன்மை, சொல்) + அறு (=இல்லாகு) + ஒப்பு (=பொருந்து) + அம் = ஏற்றியறொப்பம் >>> அத்தியாரோபம் = இல்லாத தன்மையை பொருந்துமாறு ஏற்றிக் கூறுதல்.

அத்திரம்

குதிரை

ஏத்திறம்

ஏ (=அம்பு) + திறம் (=தன்மை, உடல்) = ஏத்திறம் >>> அத்திரம் = அம்பின் தன்மையைக் (=விரைதலைக்) கொண்ட உடலினது.

அத்திரம், அத்திரி

கழுதை, கோவேறு

ஆற்றிரம்

ஆற்று (=சும) + இரி (=செல், ஓடு) + அம் = ஆற்றிரம் >>> அத்திரம் = சுமந்து செல்வது / ஓடுவது.

அத்திரம்

எறிபடை

எய்த்திறம்

எய் (=செலுத்து, எறி) + திறம் (=வகை) = எய்த்திறம் >>> ஏத்திரம் >>> அத்திரம் = செலுத்தப்படுவது / எறியப்படுவது.

அத்திரம்

நிலையற்றது

அற்றிறம்

அல் (=எதிர்மறை) + திறம் (=நிலை) = அற்றிறம் >>> அத்திரம் = நிலை அற்றது.

அத்திரம், அத்திரி

மலை

ஏற்றிறம்

ஏறு (=உயர், பெரு) + இறை (=இடம்) + அம் = ஏற்றிறம் >>> அத்திரம் = உயரமான பெரிய இடம்.

அத்திரம்

இலந்தை

அத்தீரம்

அத்து (=சிவப்பு) + ஈர் (=இனிமை, சிறுமை) + அம் (=உணவு) = அத்தீரம் >>> அத்திரம் = இனிமையான சிறிய செந்நிற உணவு.

அத்திரி

ஒட்டகம்

அத்திரி

அத்தம் (=பாலைநிலம்) + இரு (=தங்கு, வாழ்) + இ = அத்திரி = பாலைவனத்தில் வாழக் கூடியது.  

அத்திரி

உலைத் துருத்தி

எத்தீரி

எத்து (=காலால் மிதி) + ஈர் (=இழு) + இ = எத்தீரி >>> அத்திரி = காலால் மிதித்து இழுக்கப்படுவது.

அத்திரி

அம்பு

ஆய்த்திறி

ஆய் (=நுண்மை, கூர்மை, குத்து) + திறம் (=நிலைபேறு, உடல்) + இ = ஆய்த்திறி >>> அத்திரி = உடலில் குத்தி நிலைபெறும் கூர்மையது.

அத்திவாரம், அச்`திவாரம்

கட்டுமானம் தாங்குவது

ஆற்றுவாரம்

(2) ஆற்று (=சும, தாங்கு) + ஆர் (=கட்டு) + அம் = ஆற்றுவாரம் >>> அத்திவாரம் >>> அச்`திவாரம் = கட்டுமானத்தைத் தாங்குவது.

அத்திநி

பெண் யானை

அத்தினி

அத்தி (=யானை) + இனி = அத்தினி = பெண் யானை.

அத்து

எல்லை

அற்று

அறு (=வகு, வரையறு) + உ = அற்று >>> அத்து = வரையறுக்கப் பட்டது.

அத்துவம், அத்துவா

வழி

ஆறு

ஆறு (=வழி) + அம் = ஆறுவம் >>> அத்துவம் >>> அத்துவா

அத்துவானம்

தங்குதல் இல்லா இடம்

அத்துவணம்

அத்து (=பொருந்து, தங்கு, இடம்) + அணை (=அவி, ஒழி) + அம் = அத்துவணம் >>> அத்துவானம் = தங்குதல் ஒழிந்த இடம்.

அத்துவிதம், அத்துவைதம்

இரண்டாக இல்லாதது

அற்றுமிதம்

அல் (=எதிர்மறை) + துமி (=வெட்டு, இரண்டாக்கு) + இதம் = அற்றுமிதம் >>> அத்துவிதம் = இரண்டாக இல்லாதது.

அத்தூரம்

மரமஞ்சள்

ஆய்த்துரம்

ஆய் (=அழகு, ஒளி, மஞ்சள்) + துரு (=மரம்) + அம் = ஆய்த்துரம் >>> அத்தூரம் = மர மஞ்சள்.

அத்தேயம்

திருடாமை, ஏமாற்றாமை

அற்றேயம்

அறு (=இல்லாகு) + ஏய் (=ஏமாற்று, திருடு) + அம் = அற்றேயம் >>> அத்தேயம் = ஏமாற்றாமை, திருடாமை.

அத்விதீயம்

ஒப்பின்மை

அற்றுவீறியம்

அறு (=இல்லாகு) + வீறு (=ஒப்பு) + இயம் = அற்றுவீறியம் >>> அத்துவீதியம் >>> அத்விதீயம் = ஒப்பில்லாமை.

அதகம்

மருந்து

அற்றகம்

அற்றம் (=வருத்தம், துன்பம், நோய்) + அகை (=முறி) + அம் (=உணவு) = அற்றகம் >>> அத்தகம் >>> அதகம் = நோயை முறிக்கும் உணவு.

அதகம்

உயிரைமீட்கும் உணவு

அற்றகம்

அற்றம் (=மரணம்) + அகை (=முறி, தளிர்) + அம் (=உணவு) = அற்றகம் >>> அத்தகம் >>> அதகம் = மரணத்தை முறித்து தளிர்ப்பிக்கும் உணவு.

அதகம்

சுக்கு

அற்றகம்

அற்றம் (=வறுமை, வறட்சி) + அகை (=கிளை, எரி) + அம் (=உணவு) = அற்றகம் >>> அத்தகம் >>> அதகம் = எரிச்சலூட்டும் வறண்டு கிளைத்த    உணவு.

அதகம்

வலிமையான உடல்

ஆற்றாகம்

ஆற்று (=வலியடை) + ஆகம் (=உடல்) = ஆற்றாகம் >>> ஆத்தாகம் >>> அதகம் = வலுவான உடல்.

அதகன்

பலசாலி

ஆற்றாகன்

அதகம் (=வலுவான உடல்) >>> அதகன் = வலுவான உடலுடையவன்

அதட்டம்

வாயின் கீழ்ப் பற்கள்

அறெயிற்றம்

அறை (=பிளவு, வாய், பள்ளம், கீழ்) + எயிறு (=பல்) + அம் = அறெயிற்றம் >>>> அதேட்டம் >>> அதட்டம் = வாயின் கீழ்ப் பற்கள்.

அதப்பாதாளம்

மிக ஆழத்தில் இருப்பது

அறமாதாளம்

அற (=மிகவும்) + மா (=இடம்) + தாள் (=அடி) + அம் = அறமாதாளம் >>> அதப்பாதாளம் = மிகவும் அடியில் இருக்கும் இடம்.

பாதாளம், பாதலம்

மிக அடியில் இருக்குமிடம்

மாதாளம்

(2) மா (=மிகுதி, இடம்) + தாள் (=அடி) + அம் = மாதாளம் >>> பாதாளம் >>> பாதலம் = மிகவும் அடியில் இருக்கும் இடம்.

அதப்பு

அடக்கம், மரியாதை

ஆறாப்பு

ஆறு (=தணி, அடங்கு) + ஆப்பு = ஆறாப்பு >>> அதப்பு = அடக்கம், மரியாதை. ஒ.நோ: வீறு + ஆப்பு = வீறாப்பு = துணிச்சல்.

அதம்

தாழ்வு, கீழ்

அறம்

அறை (=பள்ளம், தாழ்வு, கீழ்) + அம் = அறம் >>> அதம்

அதம்

அழிவு

அறம்

அறு (=அழி) + அம் = அறம் >>> அதம் = அழிவு

அதமம்

கீழானது

அதமம்

அதம் (=கீழ்) + அம் = அதமம் = கீழானது

அதர்மம்

அறமற்றது

அறாறுவம்

அறு (=இல்லாகு) + ஆறு (=அறம்) + அம் = அறாறுவம் >>> அதருமம் >>> அதர்மம் = அறம் அல்லாதது.

அதரம்

உதடு

அறாரம்

அறை (=வாய்) + ஆரி (=கதவு) + அம் = அறாரம் >>> அதாரம் >>> அதரம் = வாயின் கதவுகள்.

அதலம்

பள்ளமான இடம்

அறளம்

அறை (=பள்ளம்) + அளம் (=இடம்) = அறளம் >>> அதலம் = பள்ளமான இடம்.

அதவை, அதமன்

கீழானவன்

அதவை, அதமன்

அதம் (=கீழ்) + ஐ / அன் = அதவை / அதமன் = கீழானவன்.

அதளை

காவல் வீடு

அறளை

அறை (=வீடு) + அளி (=பாதுகா) + ஐ = அறளை >>> அதளை = காவல் வீடு.

அதளை

புளியுருண்டை

எதளை

எதளா (=புளி) + ஐ = எதளை >>> அதளை = புளி உருண்டை.

அதன்மம்

அறமற்றது

அறணைமம்

அறம் + அணை (=அழி) + மம் = அறணைமம் >>> அதன்மம் = அறம் அழிந்தது.

அதன்மன்

இழிந்தவன்

அறணைமன்

அதன்மம் (=அறமற்றது) + அன் = அதன்மன் = அறமற்றதைச் செய்பவன்

அதனம்

மிகுதி

அதணம்

அதை (=வீங்கு, மிகு) + அணம் = அதணம் >>> அதனம் = மிகுதி

அதனா

பெருமையற்றது, இழிந்தது

அற்றனை

அல் (=எதிர்மறை) + தன்மை (=பெருமை) + ஐ = அற்றனை >>> அத்தனய் >>> அதனா = பெருமையற்றது, இழிவானது.

அதாலத்து

நீதிமன்றம்

அறளாற்று

அறம் (=நீதி) + அளம் (=இடம்) + ஆற்று (=செய், நடாத்து) = அறளாற்று >>> அதாலத்து = நீதி நடாத்தும் இடம்.

அதி

மிகுதி, பெருமை

அதி, ஆற்றி

(1) அதை (=வீங்கு, மிகு) + இ = அதி = மிகுதி. (2) ஆற்று (=கூட்டு, பெருக்கு) + இ = ஆற்றி >>> ஆத்தி >>> அதி = பெருமை, மிகுதி.

அதிக்கிரமம்

அநீதி, வரம்பு மீறிய செயல்

அறிக்கீறுவம்

அறம் (=நீதி, செயல்) + இக (=கட, மீறு) + ஈறு (=வரம்பு) + அம் = அறிக்கீறுவம் >>> அதிக்கீருமம் >>> அதிக்கிரமம் = வரம்பு மீறிய நீதி ./ செயல்.

அதிக்கிரமி

வரம்பு மீறு

அதிக்கிரமி

அதிக்கிரமம் (=வரம்பு மீறல்) >>> அதிக்கிரமி = வரம்பு மீறு

அதிகம்

இலாபம், மிகுபொருள்

அதிகம்

அதை (=வீங்கு, மிகு) + இக (=திரள், சேர்) + அம் = அதிகம் = மிகுதியாகச் சேர்ந்தது = மிகுபொருள், இலாபம்

அதிகம்

அழகு

ஏறிகம்

ஏறு (=ஒளி) + இகம் (=உடல், பொருள்) = ஏறிகம் >>> அதிகம் = உடலின் / பொருளின் ஒளி.

அதிகன்

ஆசிரியன், குரு

அறிகன்

அறம் (=அறிவு) + இகு (=கொடு) + அன் = அறிகன் >>> அதிகன் = அறிவைக் கொடுப்பவன்.

அதிகரணம்

ஆதாரம், முட்டு

ஆதிகரணம்

ஆதி (=அடிப்படை) + கரம் (=கை) + அணை (=தாங்கு) + அம் = ஆதிகரணம் >>> அதிகரணம் = கைபோலத் தாங்கும் அடிப்படை.

அதிகரணம்

பெருக்கம்

அதைகரணம்

அதை (=வீங்கு, பெருகு) + கரணம் (=செயல்) = அதைகரணம் >>> அதிகரணம் = பெருகும் செயல் = பெருக்கம்.

அதிகரணம்

கல்வி

அறிகரணம்

அறி + கரணம் (=செயல்) = அறிகரணம் >>>அதிகரணம் = அறியுஞ்செயல்

அதிகரணம்

கல்விப் பிரிவு

அறைகரணம்

அறை (=பிரிவு) + கரணம் (=அறிவு, கல்வி) = அறைகரணம் >>> அதைகரணம் >>> அதிகரணம் = கல்விப் பிரிவு

அதிகரி

பெருகு

அதிகரி

அதிகரணம் (=பெருக்கம்) >>> அதிகரி = பெருகு

அதிகரி

கல், பயில்

அதிகரி

அதிகரணம் (=கல்வி) >>> அதிகரி = கல், பயில்

அதிகன்

கடவுள்

அதிகன்

அதிகம் (=மிகுதி, மேம்பாடு) + அன் = அதிகன் = மேம்பட்டவன்

அதிகாரம்

கட்டுப்படுத்துதல், ஆட்சி, விதிமுறை, உரிமை, தகுதி

அதுக்காரம்

(2) அதுக்கு (=அடக்கு) + ஆர் (=கட்டு) + அம் = அதுக்காரம் >>> அதிகாரம் = (1) கட்டி அடக்குதல் = கட்டுப்படுத்துதல், ஆளுகை. (2) கட்டுப்படுத்துவது = விதிமுறை. (3) கட்டுப்பட்டது = உரிமை, தகுதி.

அதிகாரம்

செருக்கு, இறுமாப்பு

அதைகாரம்

அதை (=செருக்கு) + காரம் (=செயல்) = அதைகாரம் >>> அதிகாரம் = செருக்கிய செயல்.

அதிகாரம்

நூல், நூல் பிரிவு

அறிகாரம்

அறம் (=அறிவு) + இகு (=கொடு) + ஆர் (=ஒலி, சொல்) + அம் = அறிகாரம் >>> அதிகாரம் = அறிவை சொல்லிக் கொடுப்பது = நூல், நூல் பிரிவு

அதிகாரம்

நிலம், இடம்

ஆற்றுகாரம்

ஆற்று (=சும, தாங்கு) + காரம் (=வலிமை, பொருள்) = ஆற்றுகாரம் >>> அத்துகாரம் >>> அதிகாரம் = தாங்குகின்ற வலிமையான பொருள்.

அதிசயம்

புதுமையாகத் தோன்றுவது

அறிசேயம்

அறி + சேய் (=இளமை, புதுமை) + அம் = அறிசேயம் >>> அதிசயம் = புதிதாக அறியப்படுவது.

அதிசயம்

சிறப்புக் குணம்

அறிசையம்

அறம் (=தன்மை, குணம்) + இசை (=பெருமை, சிறப்பு) + அம் = அறிசையம் >>> அதிசயம் = சிறப்புக் குணம்.

அதிட்டம்

காண/கணிக்கப் படாதது

அறிற்றம்

அறி (=காண், கணி) + இறு (=அழி, இல்லாகு) + அம் = அறிற்றம் >>> அதிட்டம் = காணப் / கணிக்கப் படாதது.

அதிட்டம்

மிளகு

அதுற்றம்

அதி (=மிகுதி) + உறை (=காரம்) + அம் (=உணவு) = அதுற்றம் >>> அதிட்டம் = காரம் மிக்க உணவு.

அதிதி

விருந்தினர்

ஏதிறி

(2) ஏது (=தொடர்பு, பழக்கம்) + இறு (=அழி, இல்லாகு) + இ = ஏதிறி >>> அதிதி = பழக்கம் இல்லாதவர்.

அதிபதி

பெருந்தலைவன்

அதிபதி

அதி (=மிகுதி, பெருமை) + பதி (=தலைவன்) = அதிபதி = பெருந்தலைவன்

அதிபன்

பெரிய மனிதர்

அதிமன்

அதி (=மிகுதி, பெருமை) + மன் (=மனிதன்) = அதிமன் >>> அதிபன் = பெரிய மனிதன்.

அதியன்

கடவுள்

ஆதியன்

ஆதி (=முதல்) + அன் = ஆதியன் >>> அதியன் = முதலானவன்.

அதியால்

பெரியோர் காணிக்கை

அதியளி

அதி (=பெருமை, சிறப்பு) + அளி (=கொடு) = அதியளி >>> அதியால் = பெரியோருக்குச் சிறப்பித்துக் கொடுக்கப்படுவது.

அதிரசம்

வட்டமான இனிப்பு உணவு

அறீரசம்

அறை (=பள்ளம், ஓட்டை) + ஈர் (=இனிமை) + அசை (=வளை, வட்டமாகு, உண்ணு) + அம் = அறீரசம் >>> அதிரசம் = ஓட்டையுடைய வட்டமான இனிய உணவுப் பொருள்.

அதிராயம்

வியக்கத் தக்கது

அதிரேயம்

அதிர் (=விய) + ஏய் (=பொருந்து) + அம் = அதிரேயம் >>> அதிராயம் = வியப்பு பொருந்தியது.

அதிரித்தம்

பிரம்மாண்டம்

அதிருற்றம்

அதிர் (=விய) + உறு (=அடை, மிகுதி, பெருமை) + அம் = அதிருற்றம் >>> அதிரித்தம் = வியப்பு உறும் மிகுதி / பெருமை = பிரம்மாண்டம்.

அதிருசியம்

பார்க்க இயலாதது

அறிறுயியம்

அறு (=இல்லாகு) + இறை (=பார்) + உய் (=அனுபவி) + இயை (=இயலு) + அம் = அறிறுயியம் >>> அதிருசியம் = பார்த்து அனுபவிக்க இயலாதது.

அதிருச்~டம், அதிருட்டம்

பார்க்க இயலாதது

அறிறுற்றம்

அறு (=இல்லாகு) + இறை (=பார்) + உறு (=அனுபவி) + அம் = அறிறுற்றம் >>> அதிருட்டம் >>> அதிருச்~டம் = பார்த்து அனுபவிக்க இயலாதது.

அதிருச்~டம், அதிருட்டம்

முன்னரே அறியக்கூடாத நன்மை

அறிறுற்றம்

அறம் (=அறிவு, நன்மை) + இறு (=அழி, இல்லாகு) + உறு (=நிகழ், கூடு) + அம் = அறிறுற்றம் >>> அதிருட்டம் >>> அதிருச்~டம் = அறியக் கூடாத நல் நிகழ்வு.

அதிரேகம்

பிரம்மாண்டம்

அதிரெக்கம்

அதிர் (=விய) + எக்கு (=குவி, மிகு) + அம் = அதிரெக்கம் >>> அதிரேகம் = வியப்ப்பூட்டும் மிகுதி = பிரம்மாண்டம்.

விருட்டி, விருச்~டி

மழை

வேரூட்டி

(2) வேரம் (=மேகக்கூட்டம்) + ஊட்டு + இ = வேரூட்டி >>> விருட்டி >>> விருச்~டி = மேகங்கள் ஊட்டுவது = மழை.

அதிட்டானம்

நிலைக்களம்

அறூற்றணம்

அறை (=இடம்) + ஊற்று (=பற்றுக்கோடு) + அணம் = அறூற்றணம் >>> அதிட்டானம் >>> அதிச்~டானம் = பற்றுக்கோடான இடம்

அதீதம்

எல்லை கடந்தது

அறீறம்

அறு (=நீங்கு, கட) + ஈறு (=முடிவு, எல்லை) + அம் = அறீறம் >>> அதீதம் = எல்லை கடந்தது.

அதீதம்

இறையறிவு

அறீறம்

அறி + இறை + அம் = அறீறம் >>> அதீதம் = இறை பற்றிய அறிவு.

அதீதர்

ஞானியர்

அறீறர்

அறி + இறை + அர் = அறீறர் >>> அதீதர் = இறை பற்றிய அறிவினர்

அதீபனம்

அதிகமாக உண்ண நினைப்பது

ஆற்றுமனம்

ஆற்று (=மிகு, பசிதணி, உண்) + மனம் (=எண்ணம்) = ஆற்றுமனம் >>> அத்துபனம் >>> அதீபனம் = அதிகமாக உண்பதற்கான எண்ணம்.

அதீனம்

வசம், கட்டுப்பாடு

ஆறீனம்

ஆறு (=அடங்கு) + ஈனு (=கொடு, ஒப்படை) + அம் = ஆறீனம் >>> அதீனம் = ஒப்படைத்து அடங்குதல் = வசப்படுதல், கட்டுப்படுதல்.

அதுலம்

ஒப்பற்றது

ஆறிலம்

ஆறு (=அடங்கு, ஒப்பு) + இல் + அம் = ஆறிலம் >>> அதிலம் >>> அதுலம் = ஒப்பில்லாதது. 

அதைரியம்

அச்சம்

அதிரியம்

அதிர் (=அஞ்சு) + இயம் = அதிரியம் >>> அதைரியம் = அச்சம்

அதோங்கம்

இடுப்பின் கீழ்ப் பகுதி

அறோக்கம்

அறை (=கீழ், பகுதி) + உக்கம் (=இடுப்பு) = அறோக்கம் >>> அதோங்கம் = இடுப்பின் கீழுள்ள பகுதி

அந்தக்காரி

ஒளிரும்அழகு உடையவள்

ஏற்றக்காரி

ஏறு (=ஒளி) + அம் (=அழகு) + காரி = ஏற்றக்காரி >>> அத்தக்காரி >>> அந்தகாரி = ஒளிரும் அழகுடையவள்

அந்தக்கரணம்

அறிவுக் கருவிகள்

அற்றக்கரணம்

அறம் (=அறிவு) + கரணம் (=கருவி) = அற்றக்கரணம் >>> அத்தக்கரணம் >>> அந்தக்கரணம் = அறிவுக் கருவிகள்.

அந்தகன்

எமன்

அற்றகன்

அற்றம் (=அழிவு) + அகம் (=உயிர்) + அன் = அற்றகன் >>> அத்தகன் >>> அந்தகன் = உயிரை அழிப்பவன்.

அந்தகன்

குருடன்

அற்றாகன்

அற்றம் (=இன்மை) + ஆகம் (=கண்) + அன் = அற்றாகன் >>> அத்தகன் >>> அந்தகன் = கண்கள் அற்றவன்.

அந்தகாரம்

இருள், அறியாமை

அற்றகரம்

அற்றம் (=இன்மை) + கரம் (=ஒளி) = அற்றகரம் >>> அத்தகரம் >>> அந்தகாரம் = ஒளியின்மை = இருள், அறியாமை.

அந்தகோலம், அந்தகோரம்

நெல்லிக்கனி

ஏற்றகோளம்

ஏறு (=ஒளி, மிகு) + அம் (=அழகு, நீர், உணவு) + கோளம் (=உருண்டை) = ஏற்றகோளம் >>> அத்தகோலம் >>> அந்தகோலம் >>> அந்தகோரம் = அழகிய ஒளியுடன் சாறுமிக்க உருண்டையான உணவுப் பொருள்.

அந்தப்புரம்

மகளிர் வசிப்பிடம்

ஏறாப்புறம்

ஏறு (=ஆண், நுழை) + ஆ (=எதிர்மறை) + புறம் (=பகுதி) = ஏறாப்புறம் >>> அத்தப்புரம் >> அந்தப்புரம் = ஆண்கள் நுழைய இயலாத பகுதி.

அந்தம்

முடிவு, மரணம்

அற்றம்

அற்றம் (=முடிவு, அழிவு) >>> அத்தம் >>> அந்தம் = முடிவு, அழிவு, மரணம்.

அந்தம்

அழகு, ஒளி, பேரழகு

ஏற்றம்

ஏறு (=ஒளி) + அம் (=அழகு) = ஏற்றம் >>> அத்தம் >>> அந்தம் = ஒளிரும் அழகு.

அந்தம்

இருள், குருடு, அறியாமை

அற்றம்

(2) அறு (=இல்லாகு) + அம் (=அழகு, ஒளி) = அற்றம் >>> அத்தம் >>> அந்தம் = ஒளி இல்லாமை = இருள், குருடு, அறியாமை.

அந்தர்

சுமக்கத்தக்க கட்டு பாரம், கம்பிகளின் எடை

ஆற்றார், அந்தார்

(1) ஆற்று (=சும, போதியதாகு) + ஆர் (=தண்டு, கம்பி, கட்டு) = ஆற்றார் >>> ஆத்தார் >>> அந்தர் = சுமக்கப் போதியதாய்க் கட்டப்பட்ட கம்பிகள். (2) அந்தை (=எடை) + ஆர் (=தண்டு, கம்பி, கட்டு) = அந்தார் >>> அந்தர் கட்டிய கம்பிகளின் எடை. 

அந்தரங்கம்

இரகசியம்

அற்றாரகம்

அற்றம் (=இன்மை, மறைப்பு) + ஆர் (=ஒலி, சொல்) + அகம் (=மனம்) = அற்றாரகம் >>> அத்தரகம் >>> அந்தரங்கம் = சொல்லாமல் மனதில் மறைக்கப்பட்டது = இரகசியம்.

அந்தரங்கம்

நெருங்கிய நட்பு / உறவு

அத்தாரகம்

அதி (=மிகவும்) + ஆர் (=பொருந்து) + அகம் (=மனம்) = அத்தாரகம் >>> அந்தரங்கம் = மிகுதியான மனப் பொருத்தம்.

அந்தரம்

ஆகாயம், பெருவெளி

அற்றாரம்

அற்றம் (=இன்மை, வெளி) + ஆர் (=நிறை, பரவு) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = பரந்து நிறைந்த வெளி.

அந்தரம்

இருள்

அற்றாரம்

அற்றம் (=மறைப்பு) + ஆர் (=நிறை, பரவு) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = பரந்து நிறைந்த மறைப்பு.

அந்தரம்

நடுப்பகுதி, இடை, உள், இடைவெளி

அற்றரம்

அறை (=பிரிவு, பகுதி, வெளி) + அரை (=பாதி, நடு, இடை) + அம் = அற்றரம் >>> அத்தரம் >>> அந்தரம் = நடுப்பகுதி, இடைப்பகுதி, இடைவெளி >>> உள்வெளி.

அந்தரம்

வேறுபாடு

அத்தறம்

அத்து (=பொருந்து) + அறு (=இல்லாகு) + அம் = அத்தறம் >>> அந்தரம் = பொருத்தம் இல்லாமை.

அந்தரம்

விபரீதம், விபத்து

அற்றறம்

அறி (=கணி) + அறு (=இல்லாகு, பாழாகு, கெடு) + அம் = அற்றறம் >>> அத்தரம் >>> அந்தரம் = கணிக்க இயலாத கேடு.

அந்தரம்

கோவில்

அற்றாரம்

அறம் (=தருமம், புண்ணியம்) + ஆர் (=நிறை, பூமி, இடம்) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = புண்ணியம் நிறைந்த இடம்.

அந்தரம்

கூட்டம்

அத்தாரம்

அத்து (=பொருந்து, சேர்) + ஆர் (=மிகுதி) + அம் = அத்தாரம் >>> அந்தரம் = மிகுதியான சேர்க்கை.

அந்தரம்

முடிவு

அற்றாரம்

அற (=முழுவதும்) + ஆர் (=நிறை) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = முழுமையாக நிறைதல்..

அந்தரம்

தனிமை

அற்றாரம்

அறு (=இல்லாகு) + ஆர் (=பொருந்து, சேர்) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = பொருந்தி / சேர்ந்து இல்லாமை.

அந்தராயம்

இடையூறு

அந்தராயம்

அந்தரம் (=இடை) + ஆய் (=வருந்து, துன்புறு) + அம் = அந்தராயம் = இடையில் உண்டாகும் துன்பம்.

அந்தராயம்

உள்பகுதியின் வருமானம்

அந்தராயம்

அந்தரம் (=உள்பகுதி) + ஆயம் (=வருமானம்) = அந்தராயம் = உள்பகுதியால் வரும் வருமானம்.

அந்தராளம்

உள்ளிடம்

அந்தரளம்

அந்தரம் (=உள்) + அளம் (=இடம்) = அந்தரளம் >>> அந்தராளம் = உள்ளிடம்.

அந்தரி

பறை

அற்றாரி

அறை (=அடி) + ஆர் (=ஒலி, வட்டம்) + இ = அற்றாரி >>> அத்தரி >>> அந்தரி = அடித்து ஒலிக்கப்படும் வட்டப் பொருள்.

அந்தரி

தனித்திரு, வேறுபடு

அந்தரி

அந்தரம் (=தனிமை, வேறுபாடு) >>> அந்தரி = தனித்திரு, வேறுபடு

அந்தரிட்சம்

ஆகாயம்

அந்தருச்சம்

அந்தரம் (=வெளி) + உச்சி + அம் = அந்தருச்சம் >>> அந்தரிட்சம் = உச்சியில் உள்ள வெளி = ஆகாயம்.

அந்தரிதம்

கழித்துப் பெற்ற மீதி

அந்தரிறம்

அந்தரம் (=வேறுபாடு) + இறை (=விடை) + அம் = அந்தரிறம் >>> அந்தரிதம் = வேறுபாட்டு விடை.

அந்தலை

சந்திப்பு

அற்றளை

அறை (=பிரிவு, இடம்) + அள (=கல, சேர்) + ஐ = அற்றளை >>> அத்தலை >>> அந்தலை = பிரிவுகள் சேரும் இடம்.

அந்தலை

எல்லை

அற்றளை

அறு (=பிரி) + அளம் (=இடம்) + ஐ = அற்றளை >>> அத்தலை >>> அந்தலை = இடங்களைப் பிரிப்பது.

அந்தலை

மேடு

ஏற்றளை

ஏறு (=உயர், குவி) + அளம் (=இடம்) + ஐ = ஏற்றளை >>> அத்தலை >>> அந்தலை = குவிந்த இடம்.

அந்தளகம்

கவசம்

அற்றளகம்

அற்றம் (=மறைப்பு) + அள் (=இரும்பு) + அகம் (=மார்பு) = அற்றளகம் >>> அத்தளகம் >>> அந்தளகம் = மார்பை மறைக்கும் இரும்பு.

அந்தளம்

கவசம்

அற்றளம்

அற்றம் (=மறைப்பு) + அள் (=இரும்பு) + அம் = அற்றளம் >>> அத்தளம் >>> அந்தளம் = மறைக்கும் இரும்பு.

அந்தன்

எமன்

அற்றன்

அறு (=கொல்) + அன் = அற்றன் >>> அத்தன் >>> அந்தன். = கொல்பவன்

அந்தன்

அழகன், குருடன், முட்டாள்

அந்தன்

அந்தம் (=அழகு, குருடு, அறியாமை) + அன் = அந்தன் = அழகன், குருடன், அறியாதவன்.

அந்தச்`து

வாழ்க்கைத் தரம்

ஏறாற்று

ஏறு (=உயர், வளர்) + ஆற்று (=வாழ்) = ஏறாற்று >>> அதாத்து >>> அந்தச்`து = வாழ்வில் வளர்ந்த உயரம்.

அந்தச்`து

மாடிவீடு

ஏறற்று

ஏறு (=உயரம், குடிபுகு) + அறை (=வீடு) + உ = ஏறற்று >>> அதத்து >>> அந்தச்`து = உயரத்தில் குடிபுகும் வீடு.