சனி, 19 பிப்ரவரி, 2022

8. (இப்பி > இரை) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 8 - Ippi to Irai

 

தமிழ்ச்

சொல்

பொருள்

மேற்கோள்

பிறப்பியல்

இப்பி

சிப்பி

நற். 87

இமை (=ஒளிர், கண்ணிமை) + ஈ (=பகு, ஒப்பு, படை) = இம்மீ >>> இப்பி = ஒளிரும் கண்ணிமையைப் போல பகுப்புக்களைக் கொண்ட படைப்பு = சிப்பி

இம்பர்

இவ்விடம்

புற. 287

இவ் (=இந்த) + ஆர் (=இடம்) = இவ்வார் >>> இம்பர் = இந்த இடம்

இம்மை

இப்பிறவி

புற. 134

இ (=இந்த) + மை (=பிறவி) = இம்மை = இப்பிறவி

இமயம், இமையம்

இந்தியாவின் வடக்கில் உள்ள பெரிய மலை

நற். 356, புற. 369

ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, பெருக்கம்) + ஆய் (=பொன்) + அம் (=ஒளி, அழகு) = எவாயம் >>> இமயம் = பொன்னழகு ஒளிரும் மேல்நோக்கிய அடுக்கினைக் கொண்ட பெரிய இடம்

இமில்

காளையின் திமில்

கலி. 102

இவர் / இவ (=ஓடு, பாய், செறி) + ஏல் (=அடக்கு, பற்று) = இவேல் >>> இமில் = ஓடுவதை அடக்குவதற்காக பாய்ந்து பற்றப்படும் செறிவுடையது = காளையின் திமில்

இமை

அஞ்சனத்தால் எழுதப்படுவது

கலி. 70

ஈ (=எழுது, படை) + மை (=அஞ்சனம்) = இமை = அஞ்சனத்தால் எழுதிப் படைக்கப்படுவது

இமை

இரவு

குறு. 285

ஏமம் (=இரவு) + ஐ = எமை >>> இமை

இயம், இயன்

இசைக்கருவி

சிறு. 125, கலி. 36

ஈ (=படை) + அம் (=இனிமை, ஒலி) = இயம் = இனிய ஒலியைப் படைப்பது = இசைக்கருவி

இயம்

வயல்

குறி. 99

ஈ (=கீறு, உண்டாக்கு) + அம் (=உணவு, இடம்) = இயம் = உணவை உண்டாக்கக் கீறப்படும் இடம் = வயல்

இயம்

மேல்நோக்கிய வளைவு

ஐங். 377

ஏ (=மேல்நோக்குகை) + அம் (=வளைவு) = எயம் >>> இயம் = மேல்நோக்கிய வளைவு

இயக்கம்

அசைவு

நற். 44

இயங்கு (=அசை) + அம் = இயங்கம் >>> இயக்கம் = அசைவு

இயக்கம், இயக்கு

ஓசை

கலி. 41, அக. 100

இயக்கு (=ஒலி) + அம் = இயக்கம்

இயக்கம்

பயண ஓசை

அக. 351

இயக்கு (=பயணம், ஒலி) + அம் = இயக்கம் = பயண ஓசை

இயக்கு

பயணம்

நற். 79

இயங்கு (=செல், பயணி) >>> இயக்கு = பயணம்

இயங்கல்

பயணம்

நற். 47

இயங்கு (=செல், பயணி) + அல் = இயங்கல் = பயணம்

இயல்

நடை, பயணம்

நெடு. 98, பரி. 9

எழு (=செல், நட) + அல் = எழல் >>> இயல் = நடை, பயணம்

இயல்

அழகு, ஒளி, நிறம்

குறி. 126, அக. 142, அக. 324

ஈ (=அழி) + அல் (=இருள்) = இயல் = இருளை அழிப்பது = ஒளி >>> அழகு

இயல்

இயற்கை, தன்மை

மது. 774, குறு. 229

இழை (=செய்) + அல் (=எதிர்மறை) = இழல் >>> இயல் = செய்யப் படாதது = இயற்கை >>> தன்மை

இயல்

தோற்றம், ஆக்கம்

பட். 149, நற். 192

எழு (=தோன்று, ஆகு) + அல் = எழல் >>> இயல் = தோற்றம், ஆக்கம்

இயல்

பொருத்தம், ஒப்பு

நற். 90, குறு. 189

இயை (=பொருந்து) + அல் = இயல் = பொருத்தம், ஒப்பு

இயல்

உடல்

நற். 20

உய் (=உயிர்வாழ்) + அல் = உயல் >>> இயல் = உயிர் வாழ்வது = உடல்

இயல்

பெருமை, மிகுதி

பதி. 24

எழு (=மிகு) + அல் = எழல் >>> இயல் = மிகுதி, பெருமை

இயல்

மாதம்

பதி. 74

ஊழ் (=ஒளி, சிந்து) + அல் (=இரவு) = உழல் >>> இயல் = இரவில் ஒளி சிந்துபவன் = சந்திரன் >>> மாதம்

இயல்

அறிவு

பரி. 3

உய் (=அறிவி) + அல் = உயல் >>> இயல் = அறிவு

இயல்

வகை, பிரிவு

பரி. 20

ஈ (=வகு, பிரி) + அல் = இயல் = பிரிவு, வகை

இயல்

செயல்

அக. 182

இழை (=செய்) + அல் = இழல் >>> இயல் = செயல்

இயல்

கொடை

அக. 208

ஈ (=கொடு) + அல் = இயல் = கொடை

இயல்

வீடு

புற. 229

இழை (=கூடு, பொருந்து, தங்கு, கட்டு) + அல் = இழல் >>> இயல் = கூடித் தங்குவதற்காகக் கட்டப்படுவது = வீடு

இயல்

முறை, விதி

அக. 262

இழை (=விதி) + அல் = இழல் >>> இயல் = விதி, முறை

இயல்பு

அறிவு

பரி. 9

இயல் (=அறிவு) + பு = இயல்பு

இயல்பு

தன்மை

அக. 65

இயல் (=தன்மை) + பு = இயல்பு

இயல்பு

கொடை

புற. 302

இயல் (=கொடை) + பு = இயல்பு

இயல்பு

உடல்

திரு. 136

இயல் (=உடல்) + பு = இயல்பு

இயல்பு

வீடு

திரு. 177

இயல் (=வீடு) + பு = இயல்பு

இயல்பு

முறை

மலை. 537

இயல் (=முறை) + பு = இயல்பு

இயவர், இயவன்

இசைக்கருவி ஒலிப்பவர்

மது. 304, அக. 356

இயம் (=இசைக்கருவி) + ஆர் (=ஒலி) = இயவார் >>> இயவர் = இசைக்கருவிகளை ஒலிப்பவர்

இயவர்

பகைவர்

பதி. 78

இயைவு (=ஒப்பு, உடன்பாடு) + ஆ (=எதிர்மறை) + ஆர் = இயைவார் >>> இயவர் = உடன்பாடு இல்லாதவர் = எதிரி

இயவு

இடம்

அக. 374

உழை (=இடம்) + வு = உழைவு = இயவு

இயவு

வழி

அக. 218

இழை (=பிரி, செல், நீள், அமை) + வு = இழைவு >>> இயவு = செல்வதற்காக நீளமாய் அமைந்தது = வழி

இயவு

பயணம்

மலை. 323

இழை (=பிரி, செல்) + வு = இழைவு >>> இயவு = செல்லுதல்

இயவுள்

கடவுள்

திரு. 274

(1) ஈ (=படை) + அவை (=இடம், உலகம், உயிர்க்கூட்டம்) + உள் = இயவுள் = உலகையும் உயிர்க் கூட்டத்தையும் படைத்தவன். (2) இய (=கட) + உள் (=உள்ளம்) = இயவுள் = உள்ளத்தைக் கடந்தவன். ஒ.நோ: கட + உள் (=உள்ளம்) = கடவுள் = உள்ளத்தைக் கடந்தவன்.

இயவுள்

தலைமை

அக. 29

ஈ (=கொடு, இடு) + அம் (=கட்டளை) + உள் = இயமுள் >>> இயவுள் = கட்டளை இடுவது = தலைமை

இயற்கை

தன்மை

புற. 2

இயல் (=தன்மை) + கை = இயற்கை

இயைபு

நிலை

அக. 297

இயை (=பொருந்து, நில்) + பு = இயைபு = நிலை

இயைபு

பொருத்தம்

கலி. 123

இயை (=பொருந்து) + பு = இயைபு = பொருத்தம்

இரவு, இரா, இர

இருள் மிக்க பொழுது

ஐங். 172, குறு. 145, அக. 160

இருமை (=கருமை) + அமை (=நிறை, பொழுது) + உ = இரமு >>> இரவு >>> இரா >>> இர = கருமை நிறைந்த பொழுது.

இரக்கம்

கடந்ததை நினைந்துருகல்

புற. 243

ஈரம் (=நீர்ப்பற்று, நினைவு) + ஆகம் (=கண்) = இராகம் >>> இரக்கம் = கண்ணில் ஈரத்தை உண்டாக்கும் நினைவு  

இரங்கல்

பேரொலி

பதி. 31

இருமை (=பெருமை) + அகவு / அக (=ஒலி) + அல் = இரகல் >>> இரங்கல் = பேரொலி

இரண்டு

ஒன்றை அடுத்த எண்

பரி. 3

ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது..

இரண்டு

பொய்

குறு. 312

இறை (=மறைப்பு, சொல்) + அண்டு (=அடை, பொருந்து) = இறண்டு >>> இரண்டு = மறைப்பு பொருந்திய சொல்

இரத்தல்

பிச்சை எடுத்தல்

புற. 154

இறை (=வணங்கு, கை, நிறை, சொல்) + தல் = இறைத்தல் >>> இரத்தல் = கைகளை நிறைக்குமாறு வணங்கிச் சொல்லுதல்

இரதி

பேரழகி

பரி. 19

ஏர் (=அழகு, மிகுதி) + அத்து (=பொருந்து) + இ = எரத்தி >>> இரதி = மிக்க அழகு பொருந்தியவள்

இரலை

மான் வகை

முல் 99

(1) உரு (=மான், தண்டு, கொம்பு) + அலை (=திரி) = உரலை >>> இரலை = திரிந்த கொம்புடைய மான். (2) உரு (=மான், நிறம்) + அல் (=இருள்) + ஐ = உரலை >>> இரலை = கருநிற மான்

இரவு

பிச்சை

குறு. 283

இறை (=வணங்கு, கை, நிறை, சொல்) + பு = இறைபு >>> இரவு = கைகளை நிறைக்குமாறு வணங்கிச் சொல்லுதல்

இரவல்

பிச்சை

புற. 328

இரவு (=பிச்சை) + அல் = இரவல்

இரவல்

வயல்

பதி. 59

ஈர் (=பசுமை, ஈரம்) + அவல் (=பள்ளம்) = இரவல் = ஈரமும் பசுமையும் உடைய பள்ளம் = வயல்

இரவலன், இரவலர்

பிச்சைக்காரர்

புற. 180, பதி. 54

இரவல் (=பிச்சை) + அன் / அர் = இரவலன் / இரவலர் = பிச்சை எடுப்போர்

இரியல்

ஓட்டம்

பெரு. 202

இரி (=ஓடு) + அல் = இரியல் = ஓட்டம்

இரியல்

பயணம்

பெரு. 432

இரி (=செல், பயணி) + அல் = இரியல் = பயணம்

இரியல்

பெருங்கொடை

புற. 135

இருமை (=பெருமை) + இயல் (=கொடை) = இரியல் = பெருங்கொடை

இரிவு

அச்சம்

கலி. 92

இரி (=அஞ்சு) + பு = இரிபு >>> இரிவு = அச்சம்

இருக்கை

ஊர், ஆசனம்

பொரு. 169, பதி. 42

இரு (=தங்கு, அமர்) + கை = இருக்கை = தங்குவது / அமர்வது = ஊர், ஆசனம்

இருக்கை

கட்டு, பிணி

பொரு. 15

இறுக்கு (=கட்டு) + ஐ = இறுக்கை >>> இருக்கை = கட்டு

இருக்கை

நிலை

நற். 181

இரு (=தங்கு, நில்) + கை = இருக்கை = நிலை

இருக்கை

கொடை

நற். 381

இறு (=கொடு) + கை = இறுக்கை >>> இருக்கை = கொடை

இருப்பு

ஊர், தங்கல்

மது. 143, பொரு. 39

இரு (=தங்கு) + பு = இருப்பு = தங்குவது, தங்கல்

இருப்பு, இரும்பு

வலுவான உலோகம்

புற. 369, பெரு. 91

(1) இருமை (=கருமை) + பூ (=பொன்) = இருப்பூ >>> இருப்பு >>> இரும்பு = கரும்பொன். (2) எறி (=அடி, நுகர்வி) + பூ (=தீ, உண்டாக்கு) = எறிப்பூ >>> இருப்பு >>> இரும்பு = தீயை நுகர்வித்து அடித்து உண்டாக்கப்படுவது

இருப்பை

இனிப்பான பூ

நற். 279

இலை (=பூ) + உப்பு (=இனிப்பு) + ஐ = இலுப்பை >>> இருப்பை = இனிப்புடைய பூ

இருவி, இருவை

உணவு முளைத் தண்டு

குறு. 133, ஐங். 286

உரு (=உணவு, முளை, தண்டு) + இ = உருவி >>> இருவி = உணவு முளைக்கும் தண்டு

இருள்

ஒளி நீங்கியது

திரு. 91

இரி (=நீங்கு) + ஒள் (=ஒளி) = இரொள் >>> இருள் = ஒளி நீங்கியது.

இருள்

அறியாமை

பெரு. 445

இரி (=நீங்கு) + உள் (=உள்ளம், அறிவு) = இருள் = அறிவு நீங்கியது = அறியாமை

இருள்

மேகம்

நற். 270

ஈர் (=நீர், இழு) + உள் (=எழுச்சி) = இருள் = நீரை இழுத்து எழுவது = மேகம்

இருள்

யானை

புற. 126

இருமை (=கருமை, பெருமை) + உள் (=எழுச்சி) = இருள் = கருப்பு நிறத்தில் பெரிதாக எழுச்சி உடையது = யானை

இரை

உணவு

நற். 123

ஈர் (=உண்) + ஐ = இரை = உணவு

இரை

பெருமை

புற. 371

இருமை (=பெருமை) + ஐ = இரை