குழந்தைப் பெயர்கள்

 

                    


   திபொச - செயலியில் குழந்தைப் பெயர்கள்

இப்போது திபொச செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவிக் கொள்வதன் மூலம் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை களுக்கான 60000 ++ நவீன தமிழ்ப் பெயர்களை அவற்றின் பொருளோடு காணலாம்.

திபொச - செயலியை கூகுள் பிலாத்தொறுவில் இருந்து கைப்பேசியில் நிறுவிக் கொள்வதற்கான இணைப்பு கீழே:

 

 

 

https://play.google.com/store/apps/details?id=org.sara.thiposa1

200 கருத்துகள்:

  1. குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பவர்கள், பொதுவாக யாழ், மகிழ், புகழ் போன்ற பெயர்களை அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. எனவே இச்சொற்களை வைத்து அதிகம் பெயர்களை உருவாக்க உங்களைப் போன்ற அறிஞர்களுக்கே இயலும்.

    பதிலளிநீக்கு
  2. யாழ், மகிழ், புகழ் போன்ற சொற்களைக் கொண்டு மிகக் குறைவான பெயர்களையே உருவாக்க முடியும். இவற்றை மட்டுமே அதிகம் பயன்படுத்தினால் நாளடைவில் சிக்கல் ஏற்படும். ஏராளமான புதிய பெயர்கள் இத் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அதை நான் கணிக்கவில்லை. நன்றிகள்.

      நிச்சயமாக பயன்படுத்துவேன், பரிந்துரைப்பேன் நண்பர்

      நீக்கு
    2. ஷீ,ஹே,ஹோ,உ,ட, த,கொ,கெள என்ற எழுத்தில் தமிழ் ஆண் குழந்தை பெயர் வேண்டும் ஐயா உதவுங்கல்.

      நீக்கு
    3. ஐயா நான் இந்த தளத்தில் உள்ள பெயர்களை பார்தேன் ஆனாலும் இந்த எழுத்துக்களை(டெ,டோ,ப,பி) கொண்ட புது பெயர் பட்டியல் வேண்டும்

      நீக்கு
    4. டெ, டோ வில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா. ப, பி க்கு இத் தளத்தில் நிறைய பெயர்கள் உள்ளன. புதுப்பெயர்ப் பட்டியல் இன்னும் உருவாகவில்லை.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா,
    ஷீ,ஹே,ஹோ,கொ,கெள என்ற எழுத்தில் தமிழ் பெயர் வேண்டும் ஐயா உதவுங்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்டதில் முதல் மூன்று எழுத்துக்கள் தமிழில்லை. பின் இரண்டுக்கும் ஆணா பெண்ணா என்ற தெளிவு தேவை.

      நீக்கு
    2. https://thiruththam.blogspot.com/2018/12/2.html
      மேற்காணும் சுட்டியில் நீங்கள் கேட்ட பெயர்களைக் காணலாம்.

      நீக்கு
  5. ஐயா வணக்கம் என்னுடைய முதல் பெண்ணுக்கு நில வெண்பா என்று பெயர் வைத்துள்ளேன் எனக்கு இப்போது இரண்டாம் பெண் குழந்தை பிறந்து உள்ளது வழ நான் இப்போது இரண்டாவது குழந்தைக்கு கயல் ஆதினி என்று பெயர் வைக்க ஆசைப்படுகிறேன். இந்த பெயர் நல்ல பெயரா இல்லை வேறு பெயர் வைக்க முயற்சி செய்யலாம எனக்கு யோசனை கூறுங்கள் அல்லது உங்களிடம் வேறு பெயர்கள் சொல்லுங்கள் விரைவாக பதில் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு

  6. ஐயா வணக்கம் என்னுடைய முதல் பெண்ணுக்கு நில வெண்பா என்று பெயர் வைத்துள்ளேன் எனக்கு இப்போது இரண்டாம் பெண் குழந்தை பிறந்து உள்ளது நான் இப்போது இரண்டாவது குழந்தைக்கு கயல் ஆதினி என்று பெயர் வைக்க ஆசைப்படுகிறேன். இந்த பெயர் நல்ல பெயரா இல்லை வேறு பெயர் வைக்க முயற்சி செய்யலாம எனக்கு யோசனை கூறுங்கள் அல்லது உங்களிடம் வேறு பெயர்கள் சொல்லுங்கள் விரைவாக பதில் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் எனக்கு யோசனை கூறுங்கள் ஐயா பெயர் வைக்க இன்னும் இரண்டு நாளிகை உள்ளது

    பதிலளிநீக்கு
  8. நிதி என்பதின் பொருள் செல்வம் என்றல் நிதிதி என்பதின் பொருள் என்ன ஐயா?

    நிதிதி = நிதி(செல்வம்) + தி என்பதின் பொருள்?

    நிதிதி என்னும் பெயர் பெண் குழந்தைக்கு வைக்கலாமா?


    பதிலளிநீக்கு
  9. கயல் ஆதினி என்று பெயர் வைக்கலாம ஐயா என்ன பொருள் தரும் ஐயா

    பதிலளிநீக்கு
  10. கயல் ஆதினி என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்குமா ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயலுக்கும் ஆதினிக்கும் பொருள் பொருத்தமில்லை. இருந்தாலும் விரும்பினால் வைக்கலாம். கயல் (=மீன்) + ஆகம் (=கண்) + இனி = கயலாகினி = மீன்போன்ற கண்களைக் கொண்டவள். கயலாகினி, கயலேந்தி, கயலேந்தினி என்றும் பெயர் வைக்கலாம்.

      நீக்கு
  11. ஐயா உங்கள் கருத்திற்கு காத்திருக்கிறேன்!


    நிதி என்பதின் பொருள் செல்வம் என்றல் நிதிதி என்பதின் பொருள் என்ன ஐயா?

    நிதிதி = நிதி(செல்வம்) + தி என்பதின் பொருள்?

    நிதிதி என்னும் பெயர் பெண் குழந்தைக்கு வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதி + இதி = நிதீதி / நிதிதி = செல்வமுடையவள். இப்பெயரை வைக்கலாம். நிதி + அதி = நிததி = மிக்க செல்வமுடையவள். இதையும் வைக்கலாம்.

      நீக்கு
  12. வணக்கம் ஐயா ஆதினி என்ற பெயரோடு எந்த பெயர் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன் உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகர்

    பதிலளிநீக்கு
  13. அழகுப் பொருள் தருபவை: கவின், சீர், திரு, எல், எழில், அமர், ஏர், வீறு, முருகு, சாய். அறிவுப் பொருள் தருபவை: மதி, ஒளி, கணி, புலம், அறம், ஞானம், ஆர், பாண், மெய், மேல், விழி. இவற்றில் எந்தவொரு சொல்லையும் ஆதினிக்கு முன்னொட்டாகப் பயன்படுத்திப் பெயர் சூட்டலாம்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா,

    என் பெண் குழந்தைக்கு பெயர் வைக்க விரும்புகிறேன். தொடக்க எழுத்து மோ, மொ, மௌ. உங்கள் தளத்தில் மோ வில் சில பெயர்களை பார்த்தேன். இன்னும் சில தமிழ் பெயர்களை மோ, மொ வில் பரிந்துரைக்க முடியுமா?

    மிக்க நன்றி 🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகினி, மோகிமா, மோகதி, மோகிதி, மோகியா, மோனிகா, மோனிதி, மோனதி, மோனியா, மோனிமா

      நீக்கு
    2. நன்றி ஐயா.

      "மொ" வில் தொடங்கும் பெயர்களை ஏதாவது பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

      நன்றி.

      நீக்கு
    3. தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.

      நீக்கு
    4. மொகுளிமா, மொகுளினி, மொகுளிகா, மொகுளியா, மொகுளிதி, மொட்டினி, மொட்டிகா, மொட்டிதி, மொழிமா, மொழினி, மொழிதி, மொழியா, மொழிகா.

      நீக்கு
  15. ஐயா மறுபடியும் ஒரு கேள்வி கயல் என்ற பெயருக்கு வேறு சில பொருள் உண்டு என்று கேள்விப்பட்டேன் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு தெரிவிக்க விருப்ப படுகிறேன் கயல் என்ற பெயரில் உள்ள வேறு சில பொருள் இவைகள் பாராட்டு பெறுவது நல்ல திறனுடன் இருப்பது சாதிக்க முயற்சி செய்வது கயல் என்றால் சாதனை வளர்ச்சி நோக்கி செல்வது சுதந்திரமாக இருப்பது மற்றவர்களால் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது போன்ற பல பொருள் உண்டு என்று கேள்வி பட்டேன் இந்த அர்த்தங்கள் உண்மை என்று விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகர்கள். நன்றி வண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயல் என்ற சொல்லுக்கு இத்தனை விளக்கங்களை எங்கும் நான் கண்டதில்லை. ஆதாரங்கள் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். இல்லையெனில் நம்ப வேண்டாம்.

      நீக்கு
  16. இந்த வலைத்தளத்தில் இதை நான் கண்டுபிடித்தேன் நீங்கள் இந்த வலைத்தளைத்தை ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் தயவுசெய்து பார்த்து சொல்லுங்கள்
    Kayal
    தமிழில் Kayal என்ற பெயரின் அர்த்தத்தையும் எண் கணிதத்தையும் அறிந்து கொள்ளுங்கள் | BabyNamesEasy.com

    பதிலளிநீக்கு
  17. த எழுத்தில் தமிழ் பெயர் வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் குழந்தை என்றால்
      https://thiruththam.blogspot.com/2018/12/2.html
      ஆண் குழந்தை என்றால்
      https://thiruththam.blogspot.com/2019/09/2.html

      நீக்கு
  18. சினமிகா, சினாமிகா இதில் எது சரியான உச்சரப்பு மற்றும் பொருள் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  19. கனிரா பெயர் பொருள் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனி (=பழம்) + ஈர் (=இனிமை, பசுமை) + ஆ = கனீரா >>> கனிரா = இனிய பசுமையான பழம். கனீரா தான் சரி.

      நீக்கு
  20. அய்யா நிதர்த்தனி என்பதன் பொருள் என்ன? உதவிக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதி (=செல்வம்) + அருமை + தன்மை (=பண்பு) + இ = நிதருத்தனி >>> நிதர்த்தனி = அருமையான பண்புகளைக் கொண்ட செல்வம் போன்றவள்.

      நீக்கு
    2. மிக்க மகிழ்ச்சி அய்யா... நன்றிங்க

      நீக்கு
  21. ஐயா, அனலிக்கா என்பது தமிழ் பெயரா, அ, ஆ தூய தமிழ் பெயர்கள் கூறுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனல் (=நெருப்பு) + இகா = அனலிகா = நெருப்பானவள். தூய தமிழ்ப்பெயர் தான். அ, ஆ வில் தொடங்கும் அழகிய தமிழ்ப் பெயர்களைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.

      https://thiruththam.blogspot.com/2018/12/1.html

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. அண்ணா, "அனலிக்கா" அல்லது "அனலிகா" எது சரியானவை?

      நீக்கு
    4. மிக்க நன்றிகள் அண்ணா

      நீக்கு
  22. ஐயா எனது பெண்குழந்தைக்கு பூ.ஷ.ந.ட.எழுத்துகளில் பெயர் வைக்கலாம் என்று இருக்கின்றேன் அழகான பெயர் ஓன்றினை கூறுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரந்த சகரத்திலும் டகரத்திலும் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா. பு, ந எழுத்துக்களில் தொடங்கும் பல பெயர்களைக் கீழ்க்காணும் கொளுவியில் காணலாம்.
      http://thiruththam.blogspot.com/2018/12/blog-post_19.html

      நீக்கு
  23. ஐயா, எனது பெண் குழந்தைக்கு 'அ'வில் தொடங்கும் பெயரைச்சூட்ட விரும்புகிறேன். சங்க கால இளவரசியின் பெயர் ஒன்றை கூறுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்க இலக்கியத்தில் இளவரசிகள் யாரும் பாடப்பெறவில்லை. அகரத்தில் தொடங்கும் ஏராளமான பெண் பெயர்களைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.
      http://thiruththam.blogspot.com/2018/12/1.html

      நீக்கு
  24. சரவண அண்ணா, பெண் குழந்தைக்கு "ஆற்றல்" என்று பெயர் சூட்டலாம? ஆற்றல் என்பது தமிழ் பெயர் தான?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றல் என்பது அருமையான தமிழ்ப்பெயர் தான். விரும்பினால் தாராளமாகச் சூட்டுங்கள். மகிழ்ச்சி.

      நீக்கு
    2. மிக்க நன்றிகள் அண்ணா

      நீக்கு
  25. வணக்கம். என்னுடைய பெண் குழந்தைக்கு செந்தமிழருவி என பெயரிடலாம் என்று உள்ளேன். இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு வைக்கலாமா? மற்றும் பொருள் என்ன என்பதையும் விளக்கவும். இது தூய தமிழ் பெயர்தானா? நன்றிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தமிழருவி - அருமையான தமிழ்ப்பெயர். பெண்ணுக்குத் தாராளமாய் வைக்கலாம். செந்தமிழை அருவியாய்க் கொட்டுபவள் என்று பொருள்.

      நீக்கு
    2. மிக்க நன்றி. தங்கள் தமிழ் பணி தொடரட்டும்.

      நீக்கு
  26. எயினி என்பதன் சரியான பொருள் என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பொருட்கள் உண்டு. (1) எய் (=செலுத்து, அம்பு) + இனி = எயினி = அம்பு செலுத்துபவள் = வேடர் பெண். (2) ஏழ் (=ஒளி, அழகு) + இனி = எழினி >>> எயினி = அழகானவள். (3) ஏ (=பெருக்கம்) + ஈன் (=தா) + இ = எயீனி >>> எயினி = பெருக்கம் தருபவள்.

      நீக்கு
  27. த மற்றும் தா வரிசையில் அழகான புதிய தூய தமிழ் பெயர் கூறுங்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழ்க்காணும் சுட்டியில் நிறைய புதுமையான பெயர்களைக் காணலாம்.
      http://thiruththam.blogspot.com/2018/12/2.html

      நீக்கு
    2. தகழினி பெயர்க்கான அர்த்தம் கூறுங்களேன்

      நீக்கு
    3. தகழி (=விளக்கு) + இனி = தகழினி = விளக்கு போன்றவள்

      நீக்கு
    4. தகழினி இப்பெயரினை என் மகளுக்கு சூட்டலாமா ஐயா,இதுபோன்ற வித்தியாசமான தமிழ்ப்பெயர் கூறுங்கள் ஐயா,த தா வரிசையில்...தகழினி போன்று இச்சாயலில் வேறு அர்த்தம் பொருந்திய பெயர் இருந்தாலும் கூறுங்களேன் ..

      நீக்கு
    5. தகழினி பெயர் சூட்டலாம். மேலும் தகர வரிசைப் பெயர்களை இச்சுட்டியில் காணலாம். http://thiruththam.blogspot.com/2018/12/2.html

      நீக்கு
    6. நன்றி அய்யா,இச்சுட்டியில் உள்ளதை தவிர தகழினி போன்று வித்தியாசமான தமிழ்ப்பெயரை கூறுங்கள் அய்யா த தா வரிசையில்

      நீக்கு
    7. தருமிதுனி,தருமிதுல்யா போன்று சூட்டலாமா ...விளக்கம் வேண்டும் ஐயா.

      நீக்கு
    8. தருநிதிலா,இது போன்று சூட்டலாமா..இப்பெயர் அனைத்தும் தமிழ்ப்பெயரா அய்யா விளக்கம் தாருங்கள்..

      நீக்கு
    9. (1) தரு + நித்திலம் (=முத்து) + ஆ = தருநித்திலா >>> தருநிதிலா = முத்தைத் தருவது = சிப்பி. (2) தரு + வீறு (=மிகுதி) + உண் + இ = தருவீறுணி >>> தருமிதுனி = மிக்க உணவைத் தருபவள் = அன்னபூரணி. (3) தரு + வீறு (=சிறப்பு) + உளை (=இசை) + இயம் (=இசைக்கருவி) + ஆ = தருவீறுளியா >>> தருமிதுலியா >>> தருமிதுல்யா = சிறந்த இசையைத் தரும் இசைக்கருவி போன்றவள். இவை எல்லாம் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கலாம்.

      நீக்கு
    10. அய்யா நான் தன்வி என பெயர் சூட்டி உள்ளேன் என் கணவரின் விருப்பத்தினால்...இது தமிழ்ப்பெயரா இதற்கான விளக்கம் தாருங்களேன்

      நீக்கு
    11. தன்மை (=நற்பண்பு) + இ = தன்மி >>> தன்வி = நற்பண்புகளை உடையவள். தமிழ்ப்பெயர் தான். சூட்டலாம்.

      நீக்கு
  28. அண்ணா, "இகா" என்பதன் பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
  29. பொருளுரைத்ததற்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  30. ஐயா நான் என் பெண் குழந்தைக்கு இன்பா என்று பெயர் வைத்து உள்ளேன்.இந்த பெயர் பெண் குழந்தைக்கு வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாய் வைக்கலாம். இன்மிகா, இன்மா, இன்மிதா, இன்மியா, இனிதா, இனிதி ... என்றும் வைக்கலாம்.

      நீக்கு
  31. மிக்க நன்றி ஐயா...இன்பா என்று பெயர் வைத்து விட்டோம்..ஆனால் அதன் பின் இந்த பெயர் பெண் குழந்தைக்கு வைக்கின்ற பெயரா அல்லது ஆண் குழந்தைக்கு வைக்கின்ற பெயர் என்ற குழப்பம் உண்டாயிற்று ஐயா...இன்பா என்பது பெண்பால் விகுதி கொண்ட பெயர் தானே ஐயா? இன்பன் என்றால் தானே ஆண் குழந்தையை குறிக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகார விகுதி பெரும்பான்மை பெண்பாலுக்கு உரியதே. கவிதா, சரோசா, விமலா, கமலா, மாலா .... போல.

      நீக்கு
  32. அய்யா
    தாரா தியா மற்றும் தாரதியா இவ்விரண்டு பெயர்களுக்கும் பொருள் என்ன? பெண்களுக்கான அழகான தமிழ் பெயர்களா ? தங்கள் கருத்து

    பதிலளிநீக்கு
  33. தாரம் (=நீர், செல்வம், இசை) + அதி (=மிகுதி) + ஆ = தாரதியா = நீர் / செல்வம் / இசை மிக்கவள். தாராதியா என்றாலும் அதே பொருட்கள் தான்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம், "நேயாழி" என்ற சொல்லிற்க்கு விளக்கம் தருவீராக. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (1) நேயம் (=அன்பு) + ஆழ் + இ = நேயாழி = ஆழமான அன்புடையவள். (2) நெய் (=ஒளிர்) + ஆழி (=சக்கரம்) = நேயாழி = ஒளிரும் சக்கரம் = சூரியன். (3) நேயம் (=கருணை) + ஆழி (=கடல்) = நேயாழி = கருணைக் கடல்.

      நீக்கு
  35. நன்றி ஐயா. மேலும், நே-வில் தொடங்கும் தமிழ் பெயர்கள் (பெண் குழந்தைக்கு) சிலவற்றை கூறமுடியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேமிகா, நேமினி, நேமியா, நேமிதி, நேமதி, நேதலா, நேரிகா, நேரினி, நேரிதி, நேரதி, நேர்மியா

      நீக்கு
  36. நேரினி, நேத்ரா என்ற பெயர்களுக்கு விளக்கம் தர முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்மை + இனி = நேரினி = நேர்மை ஆனவள். நே (=அன்பு) + திறம் (=மிகுதி) + ஆ = நேத்திறா >>> நேத்திரா = அன்பு மிக்கவள். நேத்திரா தான் தமிழ். நேத்ரா தமிழ் அல்ல. அழைக்கும்போது நேத்ரா என்று அழைத்தாலும் எழுதும்போது நேத்திரா என்றே எழுதுங்கள். நன்றி.

      நீக்கு
  37. விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  38. களிறா,களிரா,கலிரா
    பொருள் விளக்கம் கிடைக்குமா???

    களிறு(யானை)
    களிப்பு(மகிழ்வு)
    இரா என்றால் இல்லாதவள் என்று பொருள் வருமோ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (1) களிறு (=ஆண்யானை) + ஆ = களிறா = ஆண்யானையைப் போன்றவன். (2) கலி (=கடல், எழு) + ஈர் + ஆ = கலீரா >>> கலிரா = கடலை ஈர்த்து எழுவது = மேகம். (3) களி (=தேன், மகிழ்) + ஈர் + ஆ = களீரா >>> களிரா = தேனை ஈர்த்து மகிழ்வது = தேனீ.

      நீக்கு
    2. இது நற்றமிழ் பெயர்கள் தானே!!!
      இதில் ஏதேனும் சூட்டலாம் தானே?
      உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்..
      காரொன், நீரொன் போல சில பெயர்களை என்க்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன்..

      நீக்கு
  39. ஐயா,வணக்கம் ஆதிரா என்ற பெயரின் பொருள் விளக்கம் கூறுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதீரன் = காளையின் துணிச்சல் கொண்டவன், ஆதிரன் = பசுக் கூட்டத்தை உடையவன், பசுவைப் போன்றவன், அதிரன் = இந்த மூன்று பொருட்களும் கொண்டது

      நீக்கு
  40. ஐயா
    1)பெயர் வைக்கும் பழந்தமிழர் பின்பற்றிய முறை பற்றி விளக்குங்கள்
    2)ஜாதகம் பார்த்து முதலெழுத்துபடி பெயர் வைக்க வேண்டுமா?
    3)நியூமராலஜி பார்க்க வேண்டுமா?
    4)எந்த எழுத்துகளில் முடிவது போல் பெயர் வைத்தல் கூடாது?
    விளக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதகம், எண்கணிதம் பார்க்காமல் நீங்கள் விரும்பும் வண்ணம் தமிழ்ப் பெயர் வைக்கலாம். நிபந்தனைகள் இல்லை.

      நீக்கு
  41. என் பெண் குழந்தைக்கான தொடக்க எழுத்து கா பட்டியல் தயவுசெய்து அழகான தமிழ் இலியாக்கியா பெயர்களை என்னிடம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்ட பெயர்களை இத் தளத்தில் காணலாம். http://thiruththam.blogspot.com/2018/12/2.html

      நீக்கு
  42. தன்வந்தி, நவநிதா என்னும் பெயர்களுக்கு அர்த்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனம் (=செல்வம்) + அத்து (=கூடு, மிகு) + இ = தனவத்தி >>> தன்வந்தி = மிக்க செல்வம் உடையவள். நாமம் (=நிறைவு) + நிதி (=செல்வம்) = நமநிதி >>> நவநிதி = செல்வம் நிறைந்தவள்.

      நீக்கு
  43. ஐயா, த்ரிஷ்யா பெயர் அர்த்தம் கூற முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு (=அழகு, செல்வம்) + சீ (=ஒளி) + ஆ = திருசீயா >>> திருசியா = ஒளிரும் அழகும் செல்வமும் உடையவள். திருசியா தான் தமிழ்.

      நீக்கு
  44. ஐயா‌, சு எழுத்தில் தொடங்கும் ஆண் பெயர் கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  45. அய்யா வணக்கம் இரட்டை குழந்தைகள் ஆண், பெண் ஈ, ஊ, ஏ என்ற எழுத்தில் பெயர்கள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  46. ஐயா என் பெண் குழந்தைக்கு இன்பா என்று பெயர் வைத்திருந்தோம்...ஆனால் அது ஆண் பெண் இருவருக்கும் வைக்கின்ற பெயர் என சிலர் சொல்கிறார்கள். பெண்பால் மட்டும் குறிக்க இன்பா என்ற பெயருடன் என்ன பெயர் சேர்க்கலாம் ஐயா அறிவுரை கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  47. ஐயா எங்கள் பெண் குழந்தைக்கு இன்பா என்று பெயர் வைத்திருந்தோம். ஆனால் இந்த பெயர் ஆண் பெண் இருவருக்கும் வைக்கின்ற பெயர் என சிலர் சொல்கிறார்கள். பெண்பால் மட்டும் குறிக்க இன்பா என்ற பெயருடன் என்ன பெயர் சேர்க்கலாம் என அறிவுரை கூறுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  48. ஐயா இன்பா என்பது ஆண் குழந்தைக்கு வைக்கின்ற பெயரா அல்லது பெண் குழந்தைக்கு வைக்கின்ற பெயரா அல்லது இருவருக்கும் வைக்கலாமா?...இருவருக்கும் பொதுவான பெயர் வைக்க கூடாது என்று கூறுகிறார்கேள அது உண்மையா?என் குழப்பத்திற்கு தெளிவு கூறுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  49. ஐயா இன்பானிகா என்று பெயர் வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  50. ஐயா இன்பா என்பது ஆண்பால் பெயரா பெண்பால் பெயரா என்று மட்டும் விளக்கம் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்குழந்தை என்றால் இன்பிகா, இன்பியா, இன்பதி, இன்பிதி, இன்பினி என்று வைக்கலாம்.

      நீக்கு
    2. ஐயா இன்பா என்று வைத்து விட்டோம் அதனுடன் என்ன சேர்ப்பது ஐயா...

      நீக்கு
  51. ஸ்ரீ என்ற எழுத்து சேர்த்து இன்பாஸ்ரீ என்று வைக்கலாமா ஐயா... இன்பாஸ்ரீ பெண்பால் மட்டும் தானே குறிக்கும் ஐயா..

    பதிலளிநீக்கு
  52. இன்பா யாமினி
    இன்பா யாழினி
    இன்பா ஆதினி
    இது போன்று எதாவது சேர்த்து வைக்கலாமா ஐயா..
    ஆலோசனை தாருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா...பொருத்தமான தமிழ் பெயர் இருந்தால் கூறுங்கள் ஐயா...மிகவும் உதவியாக இருக்கும்...

      நீக்கு
    2. இன்ப கோபிகா, இன்ப யாழினி, இன்ப சாரதி, இன்ப கோலிமா, இன்ப சந்தியா, இன்ப சாயிகா .... போல வைக்கலாம்.

      நீக்கு
  53. இன்பா வர்னி
    இன்பா வர்னிகா
    இது போன்று என்ன பெயர் சேர்க்கலாம் என்று கூறுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  54. ஐயா ஆலோசனை தாருங்கள் ஐயா...இன்பா உடன் என்ன பெயர் சேர்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  55. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  56. ஐயா. என் பெண் குழந்தைக்கு அபி நவிரா என பெயரிடலாம் என்று உள்ளேன். இதன் பொருள் என்ன என்பதையும் விளக்கவும். இது தூய தமிழ் பெயர்தானா? நன்றிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபிநவிரா என்றால் மிகுதியான உணவுகளைக் கொண்டவள் என்று பொருள். அவி (=உணவு) + நாமம் (=நிறைவு) + இரு + ஆ = அவிநமிரா >>> அபிநவிரா = உணவு நிறைந்து இருப்பவள். தமிழ்ப்பெயர் தான். வைக்கலாம்.

      நீக்கு
    2. நவிரா என்பதற்கு மலை உச்சி என்று மற்ற தளங்களில் சொல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து

      நவிர் = மலை உச்சி

      அபி என்றல் பொதுவாக என்ன பொருள் ஐயா. இது நிறைய துணை பெயர்களாக பார்க்கிறேன்.

      நீக்கு
    3. ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. வழங்கும் இடத்துக்கு ஏற்றாற்போல் பொருள் கொள்ள வேண்டும். அபி என்பதும் அவ்வாறே.

      நீக்கு
  57. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  58. ஐயா இன்பாழினி என வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  59. ஐயா, என் பெண் குழந்தைக்கு விதுனி என பெயரிடலாம் என்று உள்ளேன். இதன் பொருள் என்ன என்பதையும் விளக்கவும். இது தூய தமிழ் பெயர்தானா? நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதுனி தமிழ்ப்பெயர் தான். வீறு (=மிகுதி, செல்வம்) + உண்மை (=இருப்பு) + இ = விறுணி >>> விதுனி = செல்வம் மிகுதியாக இருப்பவள் = திருமகள்.

      நீக்கு
  60. பு எழுத்தில் தொடங்கும் முருகன் பெயர்கள்

    பதிலளிநீக்கு
  61. ஐயா, தன்யா தமிழ் பெயரா...
    அர்த்தம் என்ன...
    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (1) தன்மை (=நற்குணம்) + இயை (=பொருந்து) + ஆ = தனியா = நற்குணம் பொருந்தியவள். (2) தனம் (=செல்வம்) + ஈ (=கொடு) + ஆ = தனீயா = செல்வம் தருபவள் = திருமகள். (3) தண்மை (=குளிர்ச்சி, அருள்) + இயை (=நிறை) + ஆ = தணியா = அருள் நிறைந்தவள். தனியா, தனீயா, தணியா தான் தமிழ். தன்யா தமிழல்ல. அழைக்கும்போது தன்யா என்றாலும் தன்யா என்று எழுதக்கூடாது.

      நீக்கு
  62. காலை வணக்கம் ஐயா‌ என் பெண் குழந்தைக்கு க கு ச‌ ஞ த எழுத்துக்களில் நள்ள பெயர்கள் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் விரும்பும் பெயர்களை இச்சுட்டியில் காணலாம்.http://thiruththam.blogspot.com/2018/12/2.html

      நீக்கு
  63. ஐயா, பெயரின் அர்த்தத்தை விளக்க முடியுமா - ஜஷ்வந்திகா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாய் (=கடவுள்) + பத்தி (=அன்பு) + இகா = சாய்பத்திகா > சச்வந்திகா = கடவுள்மேல் அன்பு கொண்டவள். சாய்பத்திகா / சாய்வந்திகா தான் தமிழ்.

      நீக்கு
  64. ஐயா ரி வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்

    பதிலளிநீக்கு
  65. கி என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர்கள் link தருக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கி எழுத்தில் இல்லை. மாற்றாக, கு எழுத்திலும் வைக்கலாம். சுட்டி : http://thiruththam.blogspot.com/2018/12/2.html

      நீக்கு
  66. ஐயா,
    மெ, மை வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் வேண்டும். தங்களது வலைதள பக்கம் கண்டேன் வேறு சில பெயர்கள் பரிந்துரைக்க இயலுமா

    பதிலளிநீக்கு
  67. பெயர் சூட்ட இன்னும் மூன்று தினங்களே உள்ளது மெ, மை பெண் குழந்தை பெயர்கள் பரிந்துரைக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  68. மைந்தவி, மைனதி, மைமிதா, மைத்திரி பெயர் பொருள் என்ன இவை தமிழ் பெயர்களா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தமிழ்ப் பெயர்களே. (1) மை (=நீர்) + தவ (=மிகுதி) + இ = மைந்தவி = மிக்கநீர் அதாவது கடல் போன்றவள். (2) மை (=ஆகாயம்) + நதி = மைனதி = ஆகாயநதி போன்றவள். (3) மை (=ஆகாயம்) + மிதி (=அளவு, அறிவு) + ஆ = மைமிதா = ஆகாய அளவு அறிவுடையவள். (4) மை (=களங்கம்) + தீர் (=அறு) + இ = மைத்தீரி > மைத்திரி = களங்கம் அற்றவள்.

      நீக்கு
  69. ஐயா வணக்கம்,
    நன்றிகள் பல. மிகவும் குழப்பமான சூழ்நிலையில் அழகாகவும் ஆழமாகவும் விவரித்தமைக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  70. அய்யா வணக்கம், மகிழ் ஆருத்ரா தமிழ்ப்பெயர் தானா? பொருள் என்ன? பெண் குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை + திறமை + ஆ = அருந்திறா > ஆருத்ரா = அரிய திறமையைக் கொண்டவள். தமிழ்ப்பெயர் தான். பெண்ணுக்கும் வைக்கலாம்.

      நீக்கு
  71. அய்யா வணக்கம்,
    எனது மகளுக்கு கவிமொழி என பெயர் யோசித்தோம் தற்போது கவிமொழி பெயர் பின்னால் சேர்ப்பதற்கு ஏற்ப பெயர்களை கூறவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சிறிய பெயர்களை பின்னொட்டாகப் பயன்படுத்தலாம். இதே தளத்தில் பாருங்கள்.

      நீக்கு
  72. ஷீ,ஹே,ஹோ,உ,ட, த,கொ,கெள என்ற எழுத்தில் தமிழ் ஆண் குழந்தை பெயர் வேண்டும் ஐயா உதவுங்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்டவற்றில் உ, த, கொ,கௌ - இவற்றை முதலாகக் கொண்டு வருபவையே தமிழ்ப்பெயர்கள். இதே தளத்தில் பெயர்களைக் காணலாம்.

      நீக்கு
  73. தூரிகை = எழுதுகோல். தூரிகா என்று பெயர் வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  74. ஆதவன் ஆதீரன், ஆதவ் ஆதீரன், ஆதித் ஆதீரன் இந்த பெயர்கள் உடைய விளக்கம் மற்றும் இதுபோன்று நமக்கு பிடித்த இரண்டு பெயர்களை சேர்த்து வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ (=உண்டாக்கு) + தவம் (=வெப்பம்) + அன் = ஆதவன் = வெப்பத்தை உண்டாக்குபவன் = சூரியன். ஆதி + இறை + அன் = ஆதிறன் > ஆதிரன், ஆதீரன் = முதற்கடவுள். ஆதவ் என்பது ஆதவனின் வடமொழி வடிவம். கூட்டுச் சொல்லானாலும் தமிழ் வடிவப் பெயர்களையே சேர்த்துச் சூட்டலாம்.

      நீக்கு
  75. அதேபோன்று அதியன் ஆதீரன் பெயர் வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  76. கா,கி,வெ,வோ என்ற தமிழ் எழுத்துகளில் ஆண் குழந்தை
    பெயர்கள் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வோ தொடக்க எழுத்தில் தமிழ்ப் பெயர் இல்லை. ஏனை எழுத்துக்களுக்கு இத் தளத்தில் பார்க்கலாம்.

      நீக்கு
  77. ஐயா , "ஹோ" என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர் சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு
  78. வணக்கம்,

    "தேவயாழோன்" & "தேவயாழன்" பெயர் அர்த்தம் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  79. அப்படியே பொருள் கொண்டால் தேவர்களின் யாழ் போன்றவன் என்று வரும். ஆனால், அது சிறப்பாக இருக்காது. தேம் = இனிமை. தேம் + அ = தேம > தேவ = இனிய. எனவே, தேவ யாழோன் என்பதற்கு இனிய யாழ் போன்றவன் என்று பொருள் கொள்வதே சிறப்பு. தேயாழோன் / தேயாழன் என்றும் பயன்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  80. ஐயா அறம் என்ற பொருள் கொண்ட ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பெயர்கள் வேண்டும்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது குழந்தைப் பெயர்கள் யாவும் திபொச செயலியில் வந்து விட்டது. செல்பேசியில் செயலியை நிறுவுவதற்கு மேலே கொடுத்துள்ள கூகுள் பிலாத்தொறுவிற்கான இணைப்பைச் சொடுக்கவும்.

      நீக்கு
  81. ஐயா வணக்கம்,

    ஆத்விக் தமிழ் பெயரா, இத்துடன் இணைக்க வேறேதேனும் பெயர்கள் இருந்தால் கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்விக் தமிழ் அல்ல. ஆதம் (=அன்பு) + இக (=கட, மிகு) + அன் = ஆதவிகன் = அன்பு மிக்கவன். ஆதவிகன் என்பதே தமிழ். இணைக்கும் பெயர்களுக்குத் திபொச செயலியைப் பயன்படுத்துங்கள்.

      நீக்கு
  82. ஐயா ப,பா, பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகள் பெயர்கள் கூற முடியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏராளமான பெயர்கள் உள்ளன. திபொச செயலியைப் பதிவிறக்கிப் பாருங்கள்.

      நீக்கு
  83. ஐயா,

    இந்த பெண் குழந்தையின் பெயரின் அர்த்தத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் - "பிரதர்ஷிகா" / Pradarshika

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரம் (=முன்) + தருசி (=காண், சிந்தி) + இகா = புரதருசிகா > பிரதருசிகா = முற்போக்குச் சிந்தனையைக் கொண்டவள். பிரதருசிகா தான் தமிழ். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  84. ஐயா, என் பெண் குழந்தைக்கு நான் "நலவெண்பா" என்று பெயரிட்டுள்ளேன்.
    இது சரியான தமிழ் பெயர்தானா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் + வெண்மை + பா = நலவெண்பா = நலமும் அழகும் மிக்க பாடல். அருமையான தமிழ்ப் பெயர். வைக்கலாம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      நீக்கு
    2. உங்கள் பதிலால் நான் மிக மகிழ்ந்தேன். நன்றி!

      நீக்கு
  85. ஐயா வணக்கம், எமது தம்பிக்கும் எமக்கு ஒரே நேரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியாக ஒலியில் ஒலிக்கும் பெயர்த் தொடரில் இருக்கும் தமிழ் பெயர்களை குறிப்பிடவும். பெயர்கள் தொடங்கும் எழுத்துக்கள் "மை" மற்றும் "மெ"... தங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்... நன்றி

    பதிலளிநீக்கு
  86. பதில்கள்
    1. நிறைய இருக்கு. திபொச செயலியை இறக்கிப் பாருங்க. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  87. ஐயா, ஆதிரா என்ற பெயரின் பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (1) ஆதி+இறை+ஆ = முதல் கடவுள். (2) அதி+இரை+ஆ = மிக்க உணவுடையவள், அன்னபூரணி. (3) அத்தம்+இருமை+ஆ = செல்வம் மிக்கவள், இலக்குமி.

      நீக்கு
  88. ஐயா, நிலானிகா என்ற பெயரின் பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
  89. ஜயா பாண்டியன் என்ற பெயர் இறுதியாக வருமாறாக ஆண் குழந்தை பெயர்கள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திபொச செயலியில் ஏராளமான சிறிய பெயர்கள் உள்ளன. இவற்றை நீங்கள் பாண்டியன் பெயருக்கு முன் ஒட்டாக பயன்படுத்தலாம்.

      நீக்கு
  90. ஐயா

    இலன்

    இளன்
    இழன் பொருள் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  91. ஐயா

    சிவ பெருமான் சார்ந்த ஆண் குழந்தை பெயர்கள் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  92. கடவுள் சார்ந்த பெயர்கள் என்று தனியாக இல்லை. எல்லாம் பொதுப் பெயர்களே. நன்றி.

    பதிலளிநீக்கு
  93. கார்வின் தமிழ் பெயரா அல்லது ஆங்கிலப் பெயரா? கார்வின் என்பது தமிழ் பெயராக இருப்பின் அதன் சரியான பொருள் என்ன கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார் = பசுமை, மழை, மேகம். கார்+மின்(=விகுதி) = கார்மின் > கார்வின் = பசுமை ஆனவன், மழை போன்றவன் என்றெல்லாம் பொருள் வரும். கார்மின், கார்வின் - தூய தமிழ்ப் பெயர்களே.

      நீக்கு
  94. ஐயா சியாணுகா,சைசவி,கைரவி,தநைரா, இவைகள் தமிழ் பெயர்களா? விளக்கம் தாருங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.