சனி, 30 ஜனவரி, 2021

62 - (வேட்சாடை -> வோரகம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

வேட்சாடை

சட்டைபோன்ற நீண்ட வேட்டி

வேட்டிசட்டை

வேட்டி + சட்டை = வேட்சாடை = சட்டை போல நீண்டு அணியப்படும் வேட்டி.

வேட்சை

சேலை

வேயை

வேய் (=மூடு, சூழ், அணி) + ஐ = வேயை >>> வேச்சை >>> வேட்சை = சுற்றிலும் மூட உதவும் அணி.

வேட்டகம்

தலைப்பாகை

வீற்றாக்கம்

வீறு (=தலை, சுற்று) + ஆக்கம் (=துணி) = வீற்றாக்கம் >>> வேட்டகம் = தலையில் சுற்றப்படும் துணி

வேட்டணம், வேட்டிதம், வேடணம்

சுற்றி வளைத்தல்

வீற்றணம்

வீறு (=சுற்று, சூழ்) + அணம் = வீற்றணம் >>> வேட்டணம் = சூழ்தல், சுற்றிக் கொள்ளுதல்.

வேட்டணம்

காது

வீற்றணம்

வீறு (=ஒலி, அறிவு, உறுப்பு) + அணம் = வீற்றணம் >>> வேட்டணம் = ஒலியை அறியும் உறுப்பு.

வேட்டணம், வேட்டிதம்

சுவர், தடை

வீட்டணம்

விடை (=வேறுபடுத்து, பிரி, தடு) + அணம் = வீட்டணம் >>> வேட்டணம் = வேறுபடுத்தித் / பிரித்துத் தடுப்பது.

வேட்டம்

பசை, பிசின்

மீட்டம்

மிடை (=பொருத்து, ஒட்டு) + அம் (=நீர்) = மீட்டம் >>> மேட்டம் >>> வேட்டம் = ஒட்டும் தன்மையுள்ள நீர்.

வேட்டம்

சாறு, சாரம்

வேட்டம்

வேடு (=வடிகட்டு) + அம் (=நீர்) = வேட்டம் = வடிகட்டிய நீர்.

வேட்டி, வேடம்

ஒருவகை ஆடை

வேட்டி

வேடு (=சுற்றிக் கட்டு) + இ = வேட்டி = சுற்றிக் கட்டுவது.

வேட்டிதம்

மடிப்பு

வீற்றிதம்

வீறு (=வளை, மடி) + இதம் = வீற்றிதம் >>> வேட்டிதம் = மடிப்பு

வேடகம்

காதணி

வீற்றாக்கம்

வீறு (=ஒலி, அறிவு, உறுப்பு) + ஆக்கு (=கட்டு, அணி) + அம் = வீற்றாக்கம் >>> வேட்டாக்கம் >>> வேடகம் = ஒலியை அறியும் உறுப்பில் கட்டப்படும் அணி..

வேடம்

மூடிமறைப்பு

வேட்டம்

வேடு (=சுற்றிக் கட்டு, மூடிமறை) + அம் = வேட்டம் >>> வேடம் = மூடி மறைத்தல்.

வேடிக்கை

அதிசயம், புதுமை

வீறுகை

வீறு (=அதிசயம், புதுமை) + கை = வீறுகை >>> வேறிகை >>> வேடிக்கை = அதிசயம், புதுமை.

வேடிக்கை

அலங்காரம்

வீறுகை

வீறு (=அழகு, மிகுதி) + கை = வீறுகை >>> வேறிகை >>> வேடிக்கை = அழகை மிகுவித்தல்.

வேடிதம்

கெட்ட வாசனை

வேறிறம்

வெறி (=வாசனை) + இறு (=கெடு) + அம் = வேறிறம் >>> வேடிதம் = கெட்ட வாசனை.

வேடை

மரக்கலம்

வீறை

வீறு (=நீர், வெட்டு, கிழி) + ஐ = வீறை >>> வேடை = நீரைக் கிழிப்பது = மரக்கலம்.

வேணி

பெண்மயிர், கூந்தல்

மைநீ

(2) மை (=கருமை) + நீ (=நீளு) = மைநீ >>> மேனி >>> வேணி = கருமையாக நீண்டு இருப்பது = பெண்மயிர், கூந்தல்

வேணி

வேர்

வீழ்நீ

வீழ் (=கீழ் இறங்கு, பிரி) + நீ (=நீளு) = வீழ்நீ >>> வேணி = கீழ் இறங்கிப் பிரிந்து நீள்வது.

வேணி

ஆறு

மைநீ

மை (=நீர்) + நீ (=நீளு) = மைநீ >>> மேனி >>> வேணி = நீண்டு செல்லும் நீர் = ஆறு.

வேணி

வழி, தெரு

முன்னி

முன்னு (=பின்பற்று, செல்) + இ = முன்னி >>> மேணி >>> வேணி = செல்வதற்கானது = வழி, தெரு

வேணி

ஆகாயம், வெளி

விண்

விண் (=ஆகாயம்) + இ = வீணி >>> வேணி = ஆகாயம், வெளி

வேணி

பின்னித் தொங்குவது

பின்னிகை

பின் + இகு (=தாழ்) + ஐ = பின்னிகை >>> பேணிகை >>> வேணிகை = பின்னித் தாழ்ந்திருப்பது.

வேணு

மூங்கில், புல்லாங்குழல்

புணை

புணை (=மூங்கில்) + உ = பூணு >>> வீணு >>> வேணு = மூங்கில், மூங்கில் குழல்

வேணு

வில்

வீனு

வின்மை (=வில் தொழில்) + உ = வீனு >>> வேணு = வில் தொழில் செய்ய உதவுவது.

வேணு

வாள்

பின்னு

பின் (=பிள, வெட்டு) + உ = பின்னு >>> விணு >>> வேணு = வெட்ட உதவுவது = வாள்.

வேணுகம்

யானைத்தோட்டி

மூனுகம்

முனி (=யானை) + உகை (=செலுத்து, ஓட்டு) + அம் = மூனுகம் >>> மேணுகம் >>> வேணுகம் = யானையைச் செலுத்துபவன்

வேணுசம்

மூங்கில் அரிசி

வேணீயம்

வேணு (=மூங்கில்) + ஈ (=கொடு) + அம் (=உணவு) = வேணீயம் >>> வேணுசம் = மூங்கில் கொடுக்கும் உணவு

வேணுனம்

மிளகு

வேநுணம்

வே (=எரி) + நுண்மை (=சிறுமை) + அம் (=உணவு) = வேநுணம் >>> வேணுனம் = எரியக்கூடிய சிறிய உணவுப் பொருள்.

வேத்தன், வேதி

அறிஞன்

வீற்றன், வேற்றன்

(1) வீறு (=அறிவு, மிகுதி) + அன் = வீற்றன் >>> வேத்தன் = மிக்க அறிவினைக் கொண்டவன். (2) வெறி (=பார், அறி, மிகுதி) + அன் = வேற்றன் >>> வேத்தன் = மிக்க அறிவுடையவன்.

வேத்தியன்

நன்கு அறியத் தக்கவன்

வேற்றியன்

வெறி (=பார், அறி, மிகுதி) + இயை (=பொருந்து, தகு) + அன் = வேற்றியன் >>> வேத்தியன் = நன்கு அறியத் தக்கவன்

வேத்தியம்

அடையாளம்

வேற்றியம்

வெறி (=பார், அறி) + இயம் (=தன்மை) = வேற்றியம் >>> வேத்தியம் = அறியும் தன்மையது = அடையாளம்

வேத்திரதரன்

வாயில் காவலன்

வேற்றிறதரன்

வேல் + திறம் (=வழி, வாசல்) + தரி (=தாங்கு) + அன் = வேற்றிறதரன் >>> வேத்திரதரன் = வாசலில் வேலைத் தாங்கி நிற்பவன் = வாயில் காப்போன்

வேத்திரம்

அம்பு

வைத்துரம்

வை (=கூர்மை) + துர (=செலுத்து) + அம் = வைத்துரம் >>> வீத்துரம் >>> வேத்திரம் = செலுத்தப்படும் கூரிய பொருள்

வேத்திரம்

பிரம்பு

வேய்த்திறம்

வேய் (=மூங்கில்) + திறம் (=குலம்) = வேய்த்திறம் >>> வேத்திரம் = மூங்கில் குலத்தைச் சார்ந்தது

வேத்திரம்

இலந்தைப் பழம்

வேத்துரம்

வெதை (=கொட்டை) + உரு (=சிவப்பு, மிகு, பெரு) + அம் (=உணவு) = வேத்துரம் >>> வேத்திரம் = பெரிய கொட்டையைக் கொண்ட சிவப்புநிற உணவு.

வேதகம்

வேறுபடுத்துதல்

வேறாக்கம்

வேறு + ஆக்கம் (=செயல்) = வேறாக்கம் >>> வேதகம் = வேறுபடுத்தும் செயல்

வேதகம்

வேறுபாடு, பகை

வேறகம்

வேறு (=மாற்றம்) + அகம் = வேறகம் >>> வேதகம் = மாற்றத்தைக் கொண்டது.

வேதகம்

வஞ்சனை

வேய்தகம்

வேய் (=மூடு, மறை) + தகு (=பொருந்து, செய்) + அம் = வேய்தகம் >>> வேதகம் = மறைப்பு பொருந்திய செயல்.

வேதகம்

தங்கத்தைப் புடமிடுதல், புடமிட்ட பொன்

வேதங்கம்

வே (=எரி, வெப்பமூட்டு) + தங்கம் = வேதங்கம் >>> வேதகம் = தங்கத்தை வெப்பமூட்டுதல், வெப்பமூட்டிய தங்கம்

வேதகம்

மாற்றம் செய்யும் பொருள்

வேறாக்கம்

வேறு (=மாற்றம்) + ஆக்கம் (=செயல், பொருள்) = வேறாக்கம் >>> வேதகம் = மாற்றத்தைச் செய்யும் பொருள்.

வேதகம், வேதங்கம்

சிறு ஆடை

வீறாக்கம்

வீறு (=துண்டு) + ஆக்கம் (=ஆடை) = வீறாக்கம் >>> வேதகம் = சிறிய ஆடை.

வேதகம்

கர்ப்பூரம்

வீறாக்கம்

வீறு (=ஒளி, வெண்மை, வட்டம்) + ஆக்கம் (=பொருள்) = வீறாக்கம் >>> வேதகம் = ஒளிதரும் வட்டமான வெண்ணிறப் பொருள்

வேதகம்

உணவு தானியம்

வீறாக்கம், வீறக்கம்

(1) வீறு (=துண்டு, துகள்) + ஆக்கம் (=உணவு) = வீறாக்கம் >>> வேதகம் = உணவுத் துகள் = உணவு தானியம். (2) வீறு (=உணவு) + அக்கம் (=தானியம்) = வீறக்கம் >>> வேதகம் = உணவு தானியம்

வேதகம்

வெளிப்படுத்துகை, அறிவிப்பு

வீறகம்

வீறு (=வெளிப்படு) + அகம் (=உள்) = வீறகம் >>> வேதகம் = உள்ளிருப்பதை வெளிப்படுத்துதல் = அறிவிப்பு

வேதகன்

அறிவிப்போன்

வேதகன்

வேதகம் (=அறிவிப்பு) + அன் = வேதகன் = அறிவிப்போன்

வேதசம்

பிரம்பு

வேய்தாயம்

வேய் (=மூங்கில்) + தாயம் (=குலம்) = வேய்தாயம் >>> வேதசம் = மூங்கில் குலத்தைச் சேர்ந்தது

வேதண்டம்

மலை

மீதடம்

மீ (=உயரம்) + தடம் (=அகலம், இடம்) = மீதடம் >>> வீதட்டம் >>> வேதண்டம் = அகலமும் உயரமும் கொண்ட இடம்

வேதண்டம்

யானை

மைதட்டம்

மை (=கருமை, உடல்) + தடி (=பெரு) + அம் = மைதட்டம் >>> மீதட்டம் >>> மேதண்டம் >>> வேதண்டம் = கரிய பெரிய உடலைக் கொண்டது = யானை.

வேதம்

அறிவு

வீறு

வீறு (=அறிவு) + அம் = வீறம் >>> வேதம்

வேதம்

விளக்கம்

வீறம்

வீறு (=பெருமை, விரிவு) + அம் (=சொல்) = வீறம் >>> வேதம் = விரிவான சொல் = விளக்கம்

வேதம்,வேதை, வேதனம்

துளையிடல், குடைதல்

வீறம்

வீறு (=வெட்டு, தோண்டு) + அம் = வீறம் >>> வேதம் = தோண்டுதல், குடைதல், துளையிடல்

வேதம்

ஆழம்

வீறம்

வீறு (=தோண்டு, ஆழப்படுத்து) + அம் = வீறம் >>> வேதம் = ஆழம்

வேதன், வேதா

கடவுள்

வீறன்

வீறு (=உலகம், ஒளி) + அன் = வீறன் >>> வேதன் = உலகிற்கு ஒளியாக விளங்குபவன் = கடவுள்

வேதனம்

கூலி

வேதனம்

வே (=வருந்து, உழை) + தனம் (=பணம்) = வேதனம் = உழைப்பிற்கான பணம் = கூலி

வேதனம்

அறிவு

வீறன்னம்

வீறு (=ஒளி) + அன்ன (=போல) + அம் = வீறன்னம் >>> வேதனம் = ஒளியைப் போன்றது = அறிவு.

வேதனம், வேது,வேதை, வேதனை

துன்பம்

வேதணம்

வேது (=வருத்தம்) + அணம் = வேதணம் >>> வேதனம், வேதனை = வருத்தம், துன்பம்

வேதனம்

தங்கம்

வேதனம்

வே (=எரி, ஒளிர்) + தனம் (=செல்வம்) = வேதனம் = ஒளிரும் செல்வம் = தங்கம்

வேதனி

துளையிடுவது

வேதனி

வேதனம் (=துளையிடல்) + இ = வேதனி = துளையிடு கருவி

வேதனி

வெந்தயம்

வெற்றன்னி

வெறு (=கச) + அன்னம் (=உணவு) + இ = வெற்றன்னி >>> வேத்தனி >>> வேதனி = கசப்பான உணவு.

வேதா

சூரியன்

வேதா

வேது (=வெப்பம்) + ஆ = வேதா = வெப்பமானவன்

வேதாந்தம்

வேதமுடிவுகளைக் கூறுவது

வேதாந்தம்

வேதம் + அந்தம் (=முடிவு) = வேதாந்தம் = வேத முடிவுகளைக் கூறுவது

வேதாளம்

பெரிய பேய்

வேறாலம்

வெறி (=பேய்) + ஆலம் (=பெருமை) = வேறாலம் >>> வேதாளம் = பெரிய பேய்.

வேதி

புலவன்

வீறி

வீறு (=அறிவு, மிகுதி) + இ = வீறி >>> வேதி = அறிவு மிக்கவன்

வேதி, வேதிகை

மேடை, பீடம்

வீறி

வீறு (=உயர், இடம்) + இ = வீறி >>> வேதி = உயரமான இடம்

வேதி

சுவர், தடுப்பு

வீறி

வீறு (=எதிர், தடு, பிரி) + இ = வீறி >>> வேதி = தடுத்துப் பிரிப்பது

வேதி

ஓமகுண்டம்

வீறீ

வீறு (=தீ, பொருள், இடம்) + ஈ (=கொடு, இடு) = வீறீ >>> வேதி = தீயில் பொருட்களை இடும் இடம்.

வேதி

வேறாக்கு

வேறீ

வேறு + ஈ (=படை, ஆக்கு) = வேறீ >>> வேதி = வேறாக்கு

வேதி

பகையை உருவாக்கு

வேறீ

வெறு (=பகை) + ஈ (=படை, ஆக்கு) = வேறீ >>> வேதி = பகையை உருவாக்கு

வேதி

நலியச்செய், வருத்து

வேதீ

வெய்து / வேது (=துன்பம்) + ஈ (=கொடு) = வேதீ >>> வேதி = துன்பத்தைக் கொடு = வருத்து, நலியச்செய்

வேதி

பூசு

மேத்தி

மெத்து (=அப்பு, பூசு) + இ = மேத்தி >>> வேதி

வேதிகை

பலகை

வீறிகை

வீறு (=அறு, பொருள்) + இகு (=வீழ்த்து, படியச்செய், சமமாக்கு) + ஐ = வீறிகை >>> வேதிகை = சமமாக அறுக்கப்பட்ட பொருள்.

வேதிகை

தெரு

வீதி

வீதி (=தெரு) + கை = வீதிகை >>> வேதிகை

வேதிகை

வேறுபடுத்துகை

வேதிகை

வேதி (=வேறாக்கு) + கை = வேதிகை = வேறாக்குகை

வேதிகை

கேடகம்

வேதிகை

வேதி (=தடுப்பு) + கை = வேதிகை = கையில் இருக்கும் தடுப்பு

வேதிகை

அம்பு

வீதுகை

வீ (=கொல்) + துகை (=இடி, குத்து) = வீதுகை >>> வேதிகை = குத்திக் கொல்வது.

வேதிதம்

துளையிடல்

வீறிதம்

வீறு (=வெட்டு, தோண்டு) + இதம் = வீறிதம் >>> வேதிதம் = தோண்டுதல், குடைதல், துளையிடல்

வேதிதம்

குழாய்

வீறிறம்

வீறு (=வெட்டு, தோண்டு, துளை) + இறை (=தங்கு, பொருந்து) + அம் = வீறிறம் >>> வேதிதம் = துளை பொருந்தியது

வேதினம்

வாள் முதலியன

வீறினம்

வீறு (=அறு, பொருள்) + இனம் (=வகை) = வீறினம் >>> வேதினம் = அறுக்கும் பொருள் வகை

வேது

வேறுபாடு

வேது

வேறு >>> வேது = வேறுபாடு

வேதை

இரசவாதம்

வேதை

வேதி (=வேறாக்கு) + ஐ = வேதை = ஒருபொருளை வேறுபொருளாக மாற்றுதல்.

வேதை

இரேகை

வெறி

வெறி (=ஒழுங்கு, வரிசை) + ஐ = வேறை >>> வேதை = வரிசையாய் இருப்பது = வரி, இரேகை

வேந்தன்

சூரியன்

வேத்தன்

வேது (=வெப்பம்) + அன் = வேத்தன் >>> வேந்தன் = வெப்பமானவன் = சூரியன்

வேந்தன்

சந்திரன்

வீற்றன்

வீறு (=ஒளி, வெண்மை, இனிமை) + அன் = வீற்றன் >>> வேத்தன் >>> வேந்தன் = இனிய வெள்ளொளி தருபவன்.

வேபனம், வேபம்

அசைவு, செலவு

வீவணம்

வீவு (=நீக்கம், செலவு) + அணம் = வீவணம் >>> வேபனம் = செலவு, அசைவு

வேபனம்

பயம்

பேம்

பேம் (=அச்சம்) + அணம் = பேமணம் >>> வேபனம்

வேபி

நடுங்கு, அஞ்சு

பேமி

பேம் (=அச்சம்) + இ = பேமி >>> வேபி = அஞ்சு, நடுங்கு

வேம்பனம்

கள்

மைபானம்

மை (=மயக்கம்) + பானம் = மைபானம் >>> மீம்பனம் >>> மேம்பனம் >>> வேம்பனம் = மயக்கம் தரும் பானம்

வெந்தயம்

கசப்பான சிறிய உணவு

வெற்றாயம்

(3) வெறு (=கச) + ஆய் (=சிறுமை) + அம் (=உணவு) = வெற்றாயம் >>> வெத்தயம் >>> வெந்தயம் = கசப்பான சிறிய உணவு.

வேமம், வேமா

நெசவுத்தறி

வேய்மம்

வேய் (=அணி, கூட்டு, உருவாக்கு) + மம் = வேய்மம் >>> வேமம் = அணியை உருவாக்குவது.

வேயாம்

இலந்தைப் பழம்

வேயம்

வேய் (=மூடு, மறை, ஏமாற்று) + அம் (=உணவு) = வேயம் >>> வேயாம் = உள்ளே சதையின்றி கொட்டையை மட்டுமே கொண்டு மூடி மறைத்து ஏமாற்றும் உணவு.

வேரகம்

கற்பூரம்

வேறகம்

வெறி (=வட்டம், விரை, வாசனை) + அகை (=எரி) + அம் = வேறகம் >>> வேரகம் = விரைந்து எரிகின்ற வட்டமான வாசனை மிக்க பொருள் = கற்பூரம்.

வேரடம்

இலந்தை

வேரடம்

வெரை (=கொட்டை) + அடை (=பெரு, நிறை) + அம் (=உணவு) = வேரடம் = பெரிய கொட்டையால் நிறைந்த உணவு. .

வேரம்

மஞ்சள்

வேரம்

வேர் (=எரி, ஒளிர்) + அம் (=அழகு) = வேரம் = ஒளிவீசும் அழகுடைய வேர்.

வேரம்

நீராவி

வேரம்

வேர் (=ஆவியாகு) + அம் (=நீர்) = வேரம் = ஆவியான நீர்.

வேலசம்

மிளகு

வீளயம்

விளம் (=சினம், எரிச்சல்) + ஐ (=சிறுமை) + அம் (=உணவு) = வீளயம் >>> வேலசம் = எரிச்சல் தரும் சிறு உணவு.

வேலம்

தோட்டம், வயல்

வீளம், வேலி

(1) விளை (=உற்பத்திசெய்) + அம் (=உணவு) = வீளம் >>> வேலம் = உணவை உற்பத்தி செய்வது. (2) வேலி (=வயல்) + அம் = வேலம்

வேலை

கடல், கடற்கரை, கடல் அலை

வெள்ளம்

வெள்ளம் (=நீர், மிகுதி) + ஐ = வெள்ளை >>> வேலை = மிகுதியான நீரினைக் கொண்டது = கடல் >>> கடற்கரை, கடல் அலை

வேலை

காலம்

வேளை

வெளி (=வெளிப்படு, தோன்று, நிகழ்) + ஐ = வேளை >>> வேலை = தோன்றுவது / நிகழ்வது = காலம். ஒ.நோ: (1) நேர் (=நிகழ்) + அம் = நேரம். (2) அமை (=நிகழ்) + அம் = அமையம் = நேரம் (3) கால் (=வெளிப்படு, நிகழ்) + அம் = காலம்.

வேலை

கரும்பு

வேலை

வெல்லம் + ஐ = வேலை = வெல்லம் தருவது

வேவம்

தனிமை

வீவு

வீவு (=பிரிவு, தனிமை) + அம் = வீவம் >>> வேவம்

வேவம்

துன்பம்

வேவம்

வே (=வருந்து, துன்புறு) + அம் = வேவம் = வருத்தம், துன்பம்

வேழம்பம்

வஞ்சனை

வீழவம்

வீழ் (=கெடு, அழி) + அவம் (=பொய்) = வீழவம் >>> வேழம்பம் = பொய்யால் கெடுத்தல் / அழித்தல் = வஞ்சித்தல்.

வேழம்பம்

இகழ்ச்சி, ஏளனம்

வீழம்மம்

வீழ் (=தாழ்) + அம் (=சொல்) + அம் = வீழம்மம் >>> வேழம்பம் = சொல்லால் தாழ்த்துதல்.

வெட்டியான்

தீயை மூட்டுபவன்

வேட்டீயான்

வேள் (=மூட்டு) + தீ + ஆன் = வேட்டீயான் >>> வெட்டியான் = தீயை மூட்டுபவன்

வேற்றலம்

காற்று

வேற்றலம்

வெறுமை (=வெளி) + அலை (=திரி) + அம் = வேற்றலம் = வெளியில் அலைந்து திரிவது.

வேசா^ர்

வீண்

விழல்

விழல் (=வீண்) >>> வெயர் >>> வேசார் = பயனின்மை

வேசா^ரி

விலைமகள்

வீசாரி

வீ (=கேடு) + சார் (=செல், நட) + இ = வீசாரி >>> வேசா^ரி = கெட்ட நடத்தை கொண்டவள்

வேச்~டகம்

பிசின்

பீசகம்

பிசு (=ஒட்டு) + அகம் (=பொருள்) = பீசகம் >>> பேச்சகம் >>> வேச்~டகம் = ஒட்டும் பொருள்

வேச்~டணம்

கைக்காப்பு

வேட்டாணம்

வேடு (=சுற்றிக் கட்டு) + ஆணை (=உறுதிமொழி) + அம் = வேட்டாணம் >>> வேச்~டணம் = உறுதிமொழி கூறி சுற்றிக்கட்டும் பொருள் = கைக்காப்பு

வேச்~டணம்

சுழற்சி

வீற்றணம்

வீறு (=சுற்று) + அணம் = வீற்றணம் >>> வேட்டணம் >>> வேச்~டணம் = சுற்றுதல், சுழற்சி

வேச்~டை

துன்பம்

வேட்டை

வேட்டை (=துன்பம்) >>> வேச்~டை

வேசம்

பாசாங்கு, மாறு வடிவம்

வேயம்

வேய் (=மூடி, மறை, ஏமாற்று) + அம் = வேயம் >>> வேசம் = மூடி மறைத்து ஏமாற்றுதல்

வைகட்சம்

மேலாடை

மீகச்சம்

மீ (=மேல்) + கச்சு (=ஆடை) + அம் = மீகச்சம் >>> மைகட்சம் >>> வைகட்சம் = மேலாடை

வைகரி

தெளிவாகக் கேட்கும் ஒலி

வயங்கரி

வயங்கு (=தெளி) + அரி (=ஒலி) = வயங்கரி >>> வய்ங்கரி >>> வைகரி = தெளிவாகக் கேட்கும் ஒலி

வைகரி

ஒழுங்குமுறை, திட்டம்

வைகரி

வைகு (=தங்கு, அமை) + அரி (=வரி, ஒழுங்கு) = வைகரி = ஒழுங்குடன் அமைக்கப்பட்டது.

வைகல்லியம்

குறைபாடு, வெறுமை

வைகல்லியம்

வைகல் (=கழிகை) + இயம் = வைகல்லியம் = கழிவதால் உண்டாவது = குறைபாடு, வெறுமை

வைகாசம்

விடியல் காலம்

வைகாயம், மைகழம்

(1) வைகு (=விடி) + ஆயு (=பொழுது) + அம் = வைகாயம் >>> வைகாசம் = விடியும் பொழுது. (2) மை (=இருள்) + கழி (=நீங்கு) + அம் (=பொழுது) = மைகழம் >>> வைகாசம் = இருள் நீங்கும் பொழுது

வைகாலம்

மாலைப் பொழுது

பைகாலம்

பை (=ஒளி, மயங்கு) + காலம் = பைகாலம் >>> வைகாலம் = ஒளி மயங்கும் காலம் = மாலை வேளை

வைகிருதம், வைகிருத்தியம்

வெறுப்பு

வைகீரிதம்

வைகு (=வற்று, நீங்கு) + ஈரம் (=அன்பு) + இதம் = வைகீரிதம் >>> வைகிருதம் = அன்பு வற்றிய / நீங்கிய நிலை.

வைகுண்ணியம்

குண மாறுபாடு

வீகுண்ணியம்

வீ (=மாறு) + குணம் + இயம் = வீகுண்ணியம் >>> வைகுண்ணியம் = குணமாறுபாடு.

வைகுண்ணியம்

உடல்குறை

வைகூனியம்

வைகு (=கழி, குறை) + ஊன் (=உடல்) + இயம் = வைகூனியம் >>> வைகுண்ணியம் = உடல் குறைபாடு

வைகுல்லியம், வைகூலியம்

பகை, எதிரிடை

வீகூளியம்

வீ (=மாறு) + கூள் (=திரள், சேர்) + இயம் = வீகூளியம் >>> வைகூலியம் >>> வைகுல்லியம் = சேர்க்கைக்கு மாறானது = பகை, எதிரிடை

வைங்கியாரம்

பகை

வீகுழாரம்

வீ (=மாறு) + குழு (=கூட்டம்) + ஆர் (=பொருந்து, சேர்) + அம் = வீகுழாரம் >>> வைங்கியாரம் = கூட்டத்தில் சேர்வதற்கு மாறானது

வைசத்தியம்

தூய்மை

மையற்றியம்

மை (=கறை) + அறு (=நீங்கு) + இயம் (=தன்மை) = மையற்றியம் >>> வைசத்தியம் = கறை நீங்கிய தன்மை

வைசத்தியம்

உண்மை

பீழற்றியம்

பிழை (=பொய்) + அறு + இயம் = பீழற்றியம் >>> பைசத்தியம் >>> வைசத்தியம் = பொய்த்தல் அற்றது.

வைசிகம்

விபச்சாரம்

வேசிகம்

வேசை (=விலைமகள்) + இக (=செல், நட) + அம் = வேசிகம் >>> வைசிகம் = விலைமகளின் நடத்தை.

வைசிகம்

தளிர்

பையுகம்

பை (=பசுமை) + உகை (=எழு, தோன்று) + அம் = பையுகம் >>> வைசிகம் = பசுமையாகத் தோன்றுவது.

வைசிகம்

காரணம்

வழியுகம்

வழி + உகை (=தோன்று) + அம் = வழியுகம் >>> வயிசுகம் >>> வைசிகம் = தோன்றும் வழி = காரணம்.

வைசித்திரி

புதுமை

விசித்திரம்

விசித்திரம் (=புதுமை) + இ = விசித்திரி >>> வைசித்திரி

வைசியன்

வணிகன்

பையீயன்

பை (=பணம், பொருள்) + ஈ (=வழங்கு) + அன் = பையீயன் >>> வைசியன் = பணத்திற்குப் பொருள் வழங்குபவன்.

வைடம்மியம்

மாறுபாடு, பகை

வேறம்மியம்

வெறுமை (=இன்மை) + அமை (=பொருந்து) + இயம் = வேறம்மியம் >>> வைடம்மியம் = பொருத்தம் இன்மை.

வைடாலம்

பூனை

விடாலம்

விடாலம் (=பூனை) >>> வைடாலம்

வைடாலம்

பொய், வஞ்சனை

வீறலம்

வீறு (=உறுதி) + அல் + அம் = வீறலம் >>> வைடாலம் = உறுதி அற்றது = பொய், வஞ்சனை

வைணவம்

மூங்கிலரிசி

வேயுணவம்

வேய் (=மூங்கில்) + உணவு + அம் = வேயுணவம் >>> வெய்ணவம் >>> வைணவம் = மூங்கில் உணவு

வைணவி

புல்லாங்குழல்

வேய்நாவி

வேய் (=மூங்கில், துளை) + நாவு (=பாடு, இசை) + இ = வேய்நாவி >>> வெய்ணவி >>> வைணவி = துளைக்கப்பட்ட மூங்கில் இசைக் கருவி = புல்லாங்குழல்.

வைணுகம்

யானைத் தோட்டி

மைநுகம்

மை (=யானை) + நுகம் (=கூர்ந்தடி) = மைநுகம் >>> வைணுகம் = யானைக்கான கூர்ந்தடி

வைதவியம்

விதவைத் தன்மை

விதவியம்

விதவை + இயம் = விதவியம் >>> வைதவியம் = விதவைத் தன்மை

வைதன்மியம்

ஒப்பின்மை

வீதன்மியம்

வீ (=இன்மை) + தன்மை + இயை (=ஒப்பு) + அம் = வீதன்மியம் >>> வைதன்மியம் = ஒப்பான தன்மை இன்மை

வைதனிகம்

அற்றைக் கூலி

வைதனீகம்

வை (=நாள்) + தனம் (=பணம்) + ஈ (=கொடு) + கம் (=வேலை) = வைதனீகம் >>> வைதனிகம் = வேலைக்காக நாள்தோறும் கொடுக்கப்படும் பணம்  அற்றைக் கூலி

வைதாளி

புகழ்ச்சிப் பாட்டு

மீதாளி

மீ (=மேல், உயரம்) + தாளம் (=பாட்டு) + இ = மீதாளி >>> மைதாளி >>> வைதாளி = உயர்த்திப் பாடுதல்.

வைதாளிகர்

புகழ்ந்து பாடுவோர்

வைதாளிகர்

வைதாளி (=புகழ்ச்சிப் பாட்டு) + கர் = வைதாளிகர் = புகழ்ந்து பாடுவோர்.

வைதிகம், வைதீகம்

வேதநெறி

வேதிகம்

வேதம் + இகம் = வேதிகம் >>> வைதிகம் = வேதநெறி

வைதேகன்

வணிகன்

பைதூக்கன்

பை (=பொருள்) + தூக்கு (=தராசு, நிறு) + அன் = பைதூக்கன் >>> வைதேகன் = பொருளைத் தராசில் நிறுப்பவன்.

வைதேயன்

முட்டாள்

வீறேழன்

வீறு (=அறிவு) + ஏழ்மை (=வறுமை, இன்மை) + அன் = வீறேழன் >>> வைதேயன் = அறிவு இல்லாதவன்

வைந்தவம்

குதிரை

வயிந்தவம், வீற்றமம்

(1) வயிந்தவம் (=குதிரை) >>> வைந்தவம். (2) வீறு (=வலிமை, விரைவு, மிகுதி, மிருகம்) + அமை + அம் = வீற்றமம் >>> வீத்தவம் >>> வைந்தவம் = வலிமையும் விரைவும் மிக்க விலங்கு

வைந்தவம்

மாயை

வயிந்தவம், வீத்தவம்

(1) வயிந்தவம் (=மாயை) >>> வைந்தவம். (2) வீ (=மாறு) + தவம் (=வலிமை, உறுதி) = வீத்தவம் >>> வைந்தவம் = உறுதிக்கு மாறானது = பொய், மாயை.

வைபவம்

புகழ், பெருமை

மீபாவம்

மீ (=மேன்மை, சிறப்பு) + பா (=பரப்பு) + அம் (=சொல்) = மீபாவம் >>> மைபவம் >>> வைபவம் = சிறப்பைப் பரப்பும் சொல்

வைபவம்

வரலாறு

வழிபவம்

வழி + பவ (=தோன்று) + அம் = வழிபவம் >>> வயிபவம் >>> வைபவம் = தோன்றிய வழி.

வைபவம்

சிறப்பு நிகழ்ச்சி

மீபவம்

மீ (=மேன்மை, சிறப்பு) + பவ (=நிகழ்) + அம் = மீபவம் >>> மைபவம் >>> வைபவம் = சிறப்பு நிகழ்ச்சி.

வைபோகம்

சிறப்பு நிகழ்ச்சி

மீபுகம்

மீ (=மேன்மை, சிறப்பு) + புகு (=நிகழ்) + அம் = மீபுகம் >>> மைபூகம் >>> வைபோகம் = சிறப்பு நிகழ்ச்சி.

வைபோகம்

பெருமகிழ்ச்சி, பேரின்பம்

மீபோகம்

மீ (=மிகுதி) + போகம் (=இன்பம்) = மீபோகம் >>> மைபோகம் >>> வைபோகம் = பேரின்பம்

வைபோகம்

பெருஞ்செல்வம்

மீபோகம்

மீ (=மிகுதி) + போகம் (=பொருள், செல்வம்) = மீபோகம் >>> மைபோகம் >>> வைபோகம் = பெருஞ்செல்வம்

வைபோகம்

கூரிய அறிவு

வைபூகம்

வை (=கூர்மை) + புகு (=அறி) + அம் = வைபூகம் >>> வைபோகம் = கூரிய அறிவு

வைபோகம்

இயங்கும் முறை

வழிபோகம்

வழி (=முறை) + போகு (=செல், இயங்கு) + அம் = வழிபோகம் >>> வயிபோகம் >>> வைபோகம் = இயங்கும் முறை

வைபோகி

அறிவாளி

வைபோகி

வைபோகம் (=கூரறிவு) + இ = வைபோகி = கூரறிவு உடையவன்

வைமாத்திரேயன்

மாற்றாந் தாய்க்குப் பிறந்தவன்

வீமாதிரெழன்

வீ (=மாறு) + மாதிரு (=தாய்) + எழு (=தோன்று, பிற) + அன் = வீமாதிரெழன் >>> வைமாத்திரேயன் = மாற்றுத் தாய்க்குப் பிறந்தவன்.

வைமானிகர்

விமானத்தில் செல்பவர்

விமானிகர்

விமானம் + இக (=செல்) + அர் = விமானிகர் >>> வைமானிகர் = விமானத்தில் செல்பவர்கள்.

வையாளி

குதிரை வண்டிப் பாதை

வையாளி

வையம் (=குதிரை வண்டி, தேர்) + அளம் (=இடம், பாதை) + இ = வையாளி = குதிரைவண்டி / தேர்ப் பாதை

வையாளி

குதிரை ஏற்றம்

வையாளி

வையம் (=குதிரை) + ஆள் (=பயன்படுத்து) + இ = வையாளி = குதிரையை ஆளுதல்

வைரகரம்

பகைமை

வீறகரம்

வீறம் (=பகை) + கரம் = வீறகரம் >>> வைரகரம் = பகைமை

வைரம்

நவமணிகளில் ஒன்று

வீறம்

வீறு (=ஒளி, வலிமை, கல், வெண்மை) + அம் = வீறம் >>> வைரம் = ஒளிவீசும் வலிமையான வெண்ணிறக் கல்

வைரம்

சினம்

வீறம்

வீறு (=சின) + அம் = வீறம் >>> வைரம் = சினம்

வைரம், வைரிதை

பகை

வீறம்

வீறு (=எதிர்) + அம் = வீறம் >>> வைரம் = எதிர்ப்பு = பகை

வைரம், வைரிதை, வைரியம், வீரியம்

வீரம்

வீறம்

வீறு (=வலிமை, துணிவு) + அம் = வீறம் >>> வைரம்

வைராக்கியம்

பொருள் பற்றின்மை

வீறாக்கியம், வயிறாக்கியம்

(1). வீறு (=நீக்கு, ஒழி) + ஆக்கம் (=செல்வம், ஈட்டம்) + இயம் = வீறாக்கியம் >>> வைராக்கியம் = செல்வம் ஈட்டுதலை ஒழித்தல். (2) வயா (=விருப்பம், ஆசை) + இறு (=அழி, நீக்கு) + ஆக்கம் (=செல்வம்) + இயம் = வயிறாக்கியம் >>> வைராக்கியம் = செல்வத்தின் மீதான ஆசையை நீக்குதல்.

வைராக்கியம், வைராங்கியம்

பகை, வெறுப்பு

வீறாக்கியம்

வீறு (=எதிர்) + ஆக்கம் (=ஈட்டம், சேர்க்கை) + இயம் = வீறாக்கியம் >>> வைராக்கியம் = சேர்க்கைக்கு எதிரானது.

வைராகி

துறவி

வயிராகி

வயிராகம் (=துறவு) + இ = வயிராகி >>> வைராகி = துறவி

வைராடம்

தம்பலப் பூச்சி

வீறாறம்

வீறு (=சிவப்பு, வட்டம், அழகு) + ஆறு (=பொறு, இயங்கு) + அம் = வீறாறம் >>> வைராடம் = பொறுமையாக இயங்குகின்ற சிவப்பு அழகுடைய வட்டமான பூச்சி. 

வைரி

வல்லூறு, கழுகு

வீறி

வீறு (=வலிமை, வட்டம், சுற்று, வெளி, ஆகாயம், உயிரி) + இ = வீறி = வைரி = ஆகாயத்தில் வட்டமாகச் சுற்றும் வலிய உயிரி

வைரூப்பியம்

கோணலான உருவம்

வீயுருவியம்

வீ (=மாறு, கோணு) + உருவம் + இயம் = வீயுருவியம் >>> வைரூப்பியம் = கோணலான உருவம்

வைரோசனன், வயிரோசனன்

சூரியன்

வீறோச்சானன்

வீறு (=மிகுதி, ஒளி, வெப்பம்) + ஓச்சு (=செலுத்து) + ஆன் (=நிறை, பரப்பு) + அன் = வீறோச்சானன் >>> வைரோசனன் = மிகுதியான ஒளியையும் வெப்பத்தையும் செலுத்திப் பரப்புபவன்.

வைலட்சணம்

கோணலான தோற்றம்

வீலச்சணம்

வீ (=மாறு, கோணு) + இலச்சணம் (=தோற்றம்) = வீலச்சணம் >>> வைலட்சணம் = கோணலான தோற்றம்

லட்சணம்

தோற்றம், உருவம்

இலச்சணம்

இலைச்சு (=தோற்றுவி, உருவாக்கு) + அணம் = இலச்சணம் >>> லட்சணம் = தோற்றம், உருவம்

வைவச்சுதன்

எமன்

வீவச்சூறன்

வீ (=உயிர்) + வசி (=பிள, பிரி) + ஊறு (=கொலை) + அன் = வீவச்சூறன் >>> வைவச்சுதன் = உயிரைப் பிரித்துக் கொல்பவன்

வைசம்யம், வைச~ம்யம்

குறும்புத் தனம்

விசம்மியம்

விசமம் (=குறும்பு) + இயம் = விசம்மியம் >>> வைசம்யம் = குறும்புத் தனம்

வோரகம்

எழுத்து

போறகம்

பொறி (=எழுது) + அகம் = போறகம் >>> வோரகம் = எழுதப்பட்டது