சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 2 ன்
தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
சொல்
|
பொருள்
|
தமிழ்ச் சொல்
|
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும் |
~தத்துவம்
|
வலிமை, உறுதி
|
தத்துவம்
|
தாற்று (=தாங்கு) >>> தாத்து
>>> தத்துவம் = தாங்கும் வ்லிமை, உறுதி
|
~தத்துவன்
|
கடவுள்
|
தத்துவன்
|
தத்துவம் >>> தத்துவன் = எங்கும் உள்ள
இறைவன்.
|
~தந்தம்
|
பல்
|
தந்தம்
|
தறி (= அரை) >>> தற்றம் >>>
தத்தம் >>> தந்தம் = உணவை அரைக்க உதவுவது = பல்.
|
~தந்தி
|
நரம்பு, கம்பி
|
தந்தி
|
தந்து >>> தந்தி
|
~தந்திரம்
|
பொய், வஞ்சனை
|
தந்திரம்
|
தத்து (= ஓட்டை) >>> தத்திரம்
>>> தந்திரம் = ஓட்டையைப் போல உள்ளீடற்றது = பொய், வஞ்சனை
|
~தந்து
|
கயிறு, நரம்பு
|
தந்து
|
தறு (= கட்டு)>>> தற்று
>>>தத்து >>> தந்து = கட்ட உதவுவது
|
~தந்துகி
|
குழாய்
|
தந்துகி
|
தத்து (= துளை) >>> தத்துகி
>>> தந்துகி = துளையுடையது
|
~தபதி
|
சிற்பி
|
தபதி
|
தவ்வு (=குறை) >>> தப்பு (= செதுக்கு)
>>> தப்பதி >>> தபதி = செதுக்குபவர்.
|
~தபனம்
|
வெப்பம்
|
தபனம்
|
தபு (= உலர்) >>> தப்பனம் >>>
தபனம் = உலர்த்துவது.
|
~தபால்
|
செய்தி
|
தபால்
|
தம்பு (=சேர்) >>> தப்பு (=சேர்ப்பி)
>>> தப்பல் >>> தபால் = சேர்ப்பிக்கப் பட்டது.
|
~தம்
|
அடக்கிய காற்று
|
தம்
|
தம்பு (=நிறுத்து) >>> தமம் =
நிறுத்தப்பட்டது >>> தம்
|
~தம்பதி
|
தமக்குள் அன்புடையோர்
|
தம்பதி
|
தம் + பத்தி (=அன்பு) = தம்பத்தி >>>
தம்பதி = தமக்குள் ஒத்த அன்புடையவர்கள்.
|
~தம்பம்
|
தூண்
|
தம்பம்
|
தம்பி (= அசையாதுநில்) >>> தம்பம் =
அசைவற்றது
|
~தம்பிரான்
|
கடவுள்
|
தம்பிரான்
|
தம்பி (= அசையாதுநில்) >>> தம்பிரான் =
அசைவற்றவன்
|
~தயார்
|
உருவாகி முடிந்த நிலை
|
தயார்
|
தை (= உருவாக்கு) + ஆர் (=நிறை) >>>
தயார் = உருவாக்கி நிறைவுபெற்ற நிலை.
|
~தயாரி
|
உருவாக்கு
|
தயாரி
|
தயார் >>> தயாரி
|
~தயை / ~தயவு
|
அன்பு
|
தயை / தயவு
|
தாய் >>> தயை, தயவு = தாய் குழந்தைமேல்
கொள்ளுவது
|
~தரக்கு
|
புலி
|
தரக்கு
|
தருக்கு (= வலிமை) >>> தரக்கு = வலிய
விலங்கு
|
~தரங்கம்
|
கடல்
|
தரங்கம்
|
தாலு (= ஒலி) >>> தாறு + அங்கம் (=இடம்)
>>> தாறங்கம் >>> தரங்கம் = எப்போதும் ஒலிப்புடைய இடம்.
|
~தரங்கிணி
|
ஆறு
|
தரங்கிணி
|
தறி (= அறு) >>> தறங்கு >>>
தறங்கிணி = தரங்கிணி = அறுத்துச் செல்லும் இயல்புடையது = ஆறு.
|
~தரங்கு
|
வழி
|
தரங்கு
|
தறி (= அறு) >>> தறங்கு >>>
தரங்கு = அறுக்கப்பட்டது
|
~தராசு
|
துலாம்
|
தராசு
|
தறை (= தட்டையாகு) >>> தறச்சு
(=சமமாக்கு) >>> தறாசு >>> தராசு = சமமாக்கப் படுவது
|
~தரிசனம்
|
காட்சி
|
தெரிசனம்
|
தெருட்சி (=விளக்கம்) >>> தெருட்சினம்
>>> தெருச்சினம் >>> தெரிசனம் >>> த`ர்ச~ன்
>>> தரிசனம் = விளக்குவது
|
~தரித்திரம்
|
வறுமை
|
தரித்திரம்
|
தறி (=அறு)
+ திறம் (=நிலை) = தறித்திறம் >>> தரித்திரம் = எதுவும் அற்ற
நிலை.
|
~தருப்பணம்
|
கொடுப்பித்தல்
|
தருப்பணம்
|
தரு >>> தருப்பி (=கொடுக்கச்செய்)
>>> தருப்பணம்
|
~தலம்
|
இடம்
|
தலம்
|
தலை (=இடம்) >>> தலம்
|
~தவசம்
|
உலர் தானியம்
|
தவசம்
|
தவ்வு (= வற்று) >>> தவ்வசம்
>>> தவசம் = வற்றியது
|
~தவசி
|
உடல் வற்றிய யோகி
|
தவசி
|
தவ்வு (=வற்று) >>> தவ்வசம்
>>> தவசி = யோக வெப்பத்தால் உடல் வற்றிய யோகி
|
~தவம்
|
உடல் மெலித்தல்
|
தவம்
|
தவ்வு (=வற்று) >>> தவம் = யோக
வெப்பத்தால் உடலை வற்றச் செய்தல்.
|
~தளம்
|
படைத்திரள்
|
தளம்
|
தளும்பு (= கூடு) >>> தளம் = கூட்டம்
|
~தற்சமயம்
|
தற்காலம்
|
தற்சமயம்
|
தறு (=நிகழ்) + சமயம் = தறுசமயம் >>>
தற்சமயம்
|
~தனம்
|
செல்வம்
|
தனம்
|
தண (= நீங்கு) >>> தணம் >>>
தனம் = நீங்கும் இயல்புடையது. ஒ.நோ: செல் >>> செல்வம்.
|
~தனம்
|
பால்முலை
|
தனம்
|
தன்னம் (=குழந்தை, கன்று) >>> தனம் =
குழந்தை / கன்று சிறிது சிறிதாகப் பாலைப் பருகும் இடம்.
|
~தனயன்
|
மகன்
|
தனயன்
|
தன்னம் (= குழந்தை) >>> தனயன்
|
~தன்னியம்
|
முலைப்பால்
|
தன்னியம்
|
தன்னு (= சிறிது சிறிதாக எடு) >>>
தன்னியம் = சிறிது சிறிதாக எடுக்கப்படுவது.
|
~தனுசு
|
வில்
|
தனுசு
|
தணிசு (= வளைவு) >>> தணுசு
>>> தனுசு = வளைவானது
|
~தாக்கல்
|
விண்ணப்பம்
|
தாக்கல்
|
தாங்கு (=விரும்பு) >>> தாங்கல்
>>> தாக்கல் = விருப்பம் தெரிவித்தல், விண்ணப்பித்தல்
|
~தாகம்
|
வேட்கை
|
தாகம்
|
தாங்கு (=விரும்பு) >>> தாங்கம்
>>> தாகம் = விருப்பம்
|
~தாசன்
|
அடிமை
|
தாசன்
|
தாழ் (=பணி) >>> தாழன் >>>
தாசன் = அடிபணிபவன்
|
~தாசன்
|
மீனவன்
|
தாசன்
|
தா (=பரவு) >>> தாச்சு (=பரப்பு, வீசு)
>>> தாச்சன் >>> தாசன் = வலைவீசுபவன்.
|
~தாட்சண்யம்
|
கருணை, அன்பு
|
தாச்சிணையம்
|
தயை >>> தாச்சி >>> தாச்சிணை
>>> தாச்சிணையம்
|
~தாட்சம்
|
பள்ளம், குழி
|
தாச்சம்
|
தாழ் (=பள்ளமாகு) >>> தாழம்
>>> தாசம் >>> தாச்சம் >>> தாட்சம் = பள்ளம்.
|
~தாட்சிணை
|
கருணை, அன்பு
|
தாச்சிணை
|
தயை (=அன்பு) >>> தாச்சி >>>
தாச்சிணை >>> தாட்சிணை
|
~தாட்டன்
|
போக்கிரி
|
தாட்டன்
|
தட்டு (=அடி) >>> தாட்டன் = அடித்துத்
துன்புறுத்துபவன்
|
~தாட்டன்
|
தலைவன்
|
தாட்டன்
|
தாடு (=வலிமை, தலைமை ) >>> தாட்டன்
|
~தாட்டிகன்
|
போக்கிரி
|
தாட்டிகன்
|
தட்டு (=அடி) >>> தாட்டன் >>>
தாட்டிகன்
|
~தாடம் / ~தாடனம்
|
அடி
|
தாடம் / தாடனம்
|
தட்டு (=அடி) >>> தாட்டம் >>>
தாடம், தாடனம்
|
~தாடி / ~தாடை
|
மோவாய்
|
தாடி / தாடை
|
தாள் (=மோவாய்) >>> தாடு >>>
தாடி, தாடை
|
~தாடு
|
வலிமை, தலைமை
|
தாடு
|
தாள் (=கால், முயற்சி) >>> தாட்டு
>>> தாடு = முயல்வதற்கான வலிமை, தாங்குகின்ற தலைமை
|
~தாத்திரம்
|
கோடாரி
|
தாத்திரம்
|
தாற்று (=வெட்டு) >>> தாத்து
>>> தாத்திரம் = வெட்டுவது
|
~தாத்திரி
|
பூமி, தாய்
|
தாத்திரி
|
தாற்று (=தாங்கு)>>>
தாத்து>>> தாத்திரி = தாங்குவது /பவள்
|
~தாது
|
பொடி
|
தாது
|
தறை (=நொறுக்கு) >>> தாதை >>>
தாது = நொறுங்கியது
|
~தாது
|
காது
|
தாது
|
தத்து (=ஓட்டை) >>> தாது = துளையுடையது
|
~தாந்தனம்
|
காற்று
|
தாந்தனம்
|
தத்து (=பரவு, வீசு) >>> தாத்து
>>> தாத்தனம் >>> தாந்தனம் = பரவும் / வீசும் இயல்புடையது
|
~தாப்பானை
|
கும்கி யானை
|
தாப்பானை
|
தாம்பு (=கட்டுப்படுத்து) + ஆனை = தாம்பானை
>>> தாப்பானை = பிற யானைகளைக் கட்டுப்படுத்துவது
|
~தாப்பு
|
நேரம்
|
தாப்பு
|
தப்பு (=நீங்கு) >>> தாப்பு = நீங்கும்
இயல்புடையது
|
~தாபம்
|
வேட்கை
|
தாபம்
|
தபு (= உலர்) >>> தாபம் = உலர்ச்சியால்
உண்டாவது.
|
~தாபம்
|
கேடு
|
தாபம்
|
தபு (=கெடு) >>> தாபம்
|
~தாபரம்
|
மலை, பூமி
|
தாபரம்
|
தாவரம் (=நிலையானது) >>> தாபரம் =
நிலையானவை
|
~தாபனம்
|
நிறுவனம்
|
தாபனம்
|
தாம்பு (=நிலைநிறுத்து) >>> தாம்பனம்
>>> தாபனம் = நிலைநிறுத்தப் பட்டது.
|
~தாமதம்
|
காலநீட்டம்
|
தாமதம்
|
தாவு (=தாண்டு, நீட்டு) >>> தாவதம்
>>> தாமதம் = தாண்டி நீட்டப்பட்டது.
|
~தாம்பத்தியம்
|
தமக்குள் அன்புடைமை
|
தாம்பத்தியம்
|
தம் + பத்தி (=அன்பு) >>> தம்பத்தி
>>> தாம்பத்தியம் = தமக்குள் ஒத்த அன்புடைமை
|
~தாம்பிரம்
|
சிவப்பு
|
தாம்பிரம்
|
தாமரை (=செம்மலர்) >>> தாமிரம்
>>> தாம்பிரம் = சிவப்பு
|
~தாமம்
|
ஒளி
|
தாமம்
|
தாவு (=தாண்டு, நீட்டு) >>> தாவம்
>>> தாமம் = மிகவும் நீளமானது = ஒளிக்கதிர்
|
~தாமம்
|
மாலை
|
தாமம்
|
தாவு (=தாண்டு, நீட்டு) >>> தாவம்
>>> தாமம் = நீளமாகத் தொடுக்கப்பட்டது = மாலை
|
~தாமம்
|
மலை, பூமி
|
தாமம்
|
தம்பி (=அசையாதுநில்) >>> தாம்பம்
>>> தாமம் = அசையாமல் நிற்பது = மலை, பூமி
|
~தாமன்
|
சூரியன்
|
தாமன்
|
தாமம் (=ஒளி) >>> தாமன் = ஒளி தருபவன்
|
~தாமிச்சிரம்
|
இருள்
|
தாமிற்றம்
|
தாமம் (=ஒளி) + இற்றம் = தாமிற்றம் >>>
தாமிச்`ர >>> தாமிச்சிரம் = ஒளி அறுதி = இருள்.
|
~தாமிரசூடம்
|
சேவல் கோழி
|
தாமிரசூடம்
|
தாமிரம் (=சிவப்பு) + சூடு (=கொண்டை) =
தாமிரசூடு >>> தாமிரசூடம் = சிவப்புநிறக் கொண்டையை உடையது.
|
~தாமிரம்
|
செம்பு, செப்பு
|
தாமிரம்
|
தாமரை (=செம்மலர்) >>> தாமிரம் =
சிவப்பு
|
~தாரகம் / ~தாரகை
|
பூமி
|
தாரகம் / தாரகை
|
தாரம் (=உணவு, பொருள்) >>> தாரகம்,
தாரகை = உணவையும் பொருட்களையும் வழங்குவது.
|
~தாரகை
|
விண்மீன்
|
தாரகை
|
தார் (=கூட்டம்) + அகை (=எரி, ஒளிர்) = தாரகை =
கூட்டமாக எரிபவை / ஒளிர்பவை.
|
~தாரணி
|
எமன்
|
தறிணி
|
தறி (=நீக்கு) >>> தறிணி = உயிரை
நீக்குபவன்
|
~தாரணி / ~தரணி
|
பூமி
|
தாரணி / தரணி
|
தாரம் (=உணவு, பொருள்) >>> தாரணி
>>> தரணி = உணவையும் பொருட்களையும் வழங்குவது.
|
~தாரம்
|
நஞ்சு
|
தாறம்
|
தறி (=நீக்கு) >>> தாறம் = உயிரை
நீக்குவது
|
~தாரி
|
தாங்குவோன்
|
தாரி
|
தரி (=அணி, தாங்கு) >>> தாரி =
அணிவோன், தாங்குவோன்
|
~தாரி / ~தாரை
|
வழி
|
தாறி / தாறை
|
தறி (=வெட்டு) >>> தாறி >>>
தாறை = வெட்டி உருவாக்கப்பட்டது = வழி
|
~தாரிப்பு
|
உதவி
|
தாரிப்பு
|
தரி (=தாங்கு) >>> தாரி >>>
தாரிப்பு = தாங்குதல்
|
~தாருணம்
|
அதிர்வு, நடுக்கம்
|
தாறுணம்
|
தாலு (=ஒலி) >>> தாறு >>>
தாறுணம் = அதிர்வு
|
~தாரை
|
ஆயுதம்
|
தாறை
|
தறி (=வெட்டு) >>> தாறை >>>
தாரை = வெட்டுவது
|
~தாலம்
|
பனைமரம்
|
தாலம்
|
தாலு (=ஒலி) >>> தாலம் = ஒலிக்கும்
மடலுடையது
|
~தாலி / ~தாலம்
|
பாத்திரம்
|
தாலி / தாலம்
|
தல்லம் (=குழி) >>> தாலம், தாலி =
குழிவானது
|
~தாவணி
|
பெண்களின் ஆடை
|
தாவணி
|
தழுவு (=புணர்) + அணி = தழுவணி >>> தாவணி = பெண்கள்
புணரும் பருவம் எட்டியதும் அணிவது.
|
~தாவரம்
|
நிலையானது
|
தாவரம்
|
தா (=கட, செல்) + அற்றம் = தாவற்றம்
>>> தாவறம் >>> தாவரம் = கடப்பு அல்லது செலவு அற்றது
|
~தாளம்
|
ஓசை
|
தாலம்
|
தாலு (=ஒலி) >>> தாலம் >>>
தாளம்
|
~தாற்பரியம்
|
பாராட்டு, விளக்கம்
|
தாற்பரியம்
|
தால் (=நாக்கு) + பரியம் (=பரிசு) = தாற்பரியம்
= நாவின் பரிசு = பாராட்டு, விளக்கம்
|
~தாறம்
|
ஒலி
|
தாறம்
|
தாலு (=ஒலி) >>> தாறு >>>
தாறம்
|
~தான்
|
துண்டு
|
தான்
|
தனி (=,பிரி) >>> தான் = பிரிவுற்றது
|
~தானம்
|
நிலை, இடம்
|
தானம்
|
தாள் (=கால்) >>> தாணி (=நில்,
நிலையாகு) >>> தாணம் >>> தானம் = நிலை, இடம்
|
~தான்றி
|
பொழுது
|
தான்றி
|
தனி (=பிரி) >>> தான்றி = பிரிவுபடுவது
|
~திக்கு
|
திசை, வழி
|
திக்கு
|
திகை (=துணி) >>> திக்கு =
துணியப்பட்டது = வழி, திசை
|
~திதி
|
நிலை, பிரிவு
|
திதி
|
திறம் (=நிலை) >>> திதம் >>>
ச்`தித, ச்`திதி >>> திதி
|
~திப்பியம்
|
சொர்க்கம்
|
திப்பியம்
|
தீவியம் (=இன்பம்) >>> திப்பியம் =
இன்பம் நிறைந்தது
|
~திமி / ~திமிலம்
|
பெரிய மீன்
|
திமி / திமிலம்
|
திம்மு (=பெரு) >>> திம்மி
>>> திமி, திமிலம் = பெரிய மீன்
|
~திமிங்கிலம்
|
மிகப் பெரிய மீன்
|
திமிங்கிலம்
|
திமி (=பெருமீன்) + கிலம் (=கொல்வது) =
திமிங்கிலம் = பெரிய மீனையும் கொல்வது
|
~திமிரம்
|
மறைப்பு, இருள்
|
திமிரம்
|
திம்மு (=பெரு) >>> திம்மிரம் (=
பெருக்கம்) >>> திமிரம் = பெருக்கத்தால் உண்டாகும் மறைப்பு
|
~தியாகம்
|
கைவிடல்
|
தியாகம்
|
தியங்கு (=தளர், கைவிடு) >>> தியக்கம்
>>> தியாகம்
|
~தியாச்சியம்
|
கழிக்க வேண்டியன
|
தேச்சியம்
|
தேய் >>> தேய்ச்சு (=கழி) >>>
தேய்ச்சியம் >>> தேச்சியம் >>> த்யாச்^ய >>>
தியாச்சியம் = கழிக்க வேண்டியன
|
~தியாலம்
|
நேரம்
|
தேயலம்
|
துயல் (=அசை, நீங்கு) >>> துயலம்
>>> தியாலம்
|
~தியானம்
|
ஊழ்கம்
|
தோயணம்
|
தோய் (=மூழ்கு) >>> தோயணம்
>>> த்`யான் >>> தியானம் = ஒன்றில் மூழ்கி அதாவது ஆழ்ந்து
சிந்தித்தல்
|
~தியானி
|
ஊழ்கு
|
தோயணி
|
தோயணம் >>> தோயணி = ஒன்றில் ஆழ்ந்து
சிந்தி
|
~தியுதி
|
ஒளி
|
தியுதி
|
தீ + உதி = தீயுதி >>> தியுதி = தீயில்
பிறப்பது
|
~திரச்`கரி
|
ஒதுக்கு, அவமதி
|
திரச்சரி
|
திரை (=ஒதுங்கு) >>> திரைச்சு
(=ஒதுக்கு) >>> திரச்சரி >>> திரச்`கரி = அவமதி
|
~திரச்`கரி
|
மறைப்புசெய்
|
திரச்சரி
|
திரை >>> திரைச்சு (=மறை) >>>
திரச்சரி >>> திரச்`கரி
|