பிறந்து வளர்ந்து தற்போது வாழும் ஊர் அருப்புக்கோட்டை (மதுரையில் இருந்து 50 கி.மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது.) கோட்டையில் பிறந்ததாலோ என்னவோ கோட்டையைப் பிடிக்கும் எண்ணம் பசுமையாய் என் நெஞ்சில் எப்போதும் உண்டு. 😜
கற்றது தமிழ் என்றாலும் முதலில் கற்றது தொழில்நுட்பக் கல்வியே. விருத்தாசலத்தில் கரம்பக நுட்பக் கல்வி கற்றபின், ஆந்திராவிலும் ஒரிசாவிலும் கருநாடகாவிலும் 15 ஆண்டுகள் ஏற்றுமதி இறக்குமதி சந்தையியல் பணி. பணியின்போதே தொலைதூரக் கல்விமுறையில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம். 😍
2010 ஆம் ஆண்டு முதல் சொந்த ஊரில் இணையதள சேவை மையம் நடத்திக்கொண்டும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதி வெளியிட்டுக் கொண்டும் வருகிறேன். 🙏
' எமக்குத்
தொழில் கவிதை ' என்று பாரதியைப்
போல உறுதியாய்ச் சொல்ல இயலவில்லை என்னால்.
காரணம், தமிழை மட்டுமே தொழுதுவந்தால்
சோறுகிடைக்குமா என்ற அச்சமும் ஐயமுமே.
அதனால் தான் பிழைப்புக்காக ஒரு
சுயதொழில் அதிலே கிடைக்கும் ஓய்வுநேரங்களில்
ஆய்வு என்று எனது காலச்
சக்கரம் சுழல்கிறது.
எனது சுயதொழில் பற்றிய தகவல்கள் யாருக்கேனும்
பயன்படக் கூடும் என்பதால் கீழே
கொடுத்துள்ளேன்.
துறைப்புகவி (
PASSPORT)
வானிக்கடவி (FLIGHT
TICKET)
பேரிக்கடவி (BUS
TICKET)
நேடிக்கடவி (TRAIN
TICKET)
பான் அட்டை (PAN CARD)
ஆதார் அட்டை - புதியது & திருத்தம்
வாக்காளர் அட்டை - புதியது & திருத்தம்
குடும்ப அட்டை - புதியது & திருத்தம்
நிலப்பட்டா மற்றும் வில்லங்கம்
குழந்தைப் பெயர் மற்றும் சாதகம்
திருப்பதி வழிபாடு / தங்குமிடம் முன்பதிவு
சாயிபாபா வழிபாடு / தங்குமிடம் முன்பதிவு
ஐயப்ப வழிபாடு முன்பதிவு
வதி பதிவு & தாக்கல் & செலுத்தல் (I.T. REGN / RETURN /
PAYMENT)
சபதி பதிவு மற்றும் தாக்கல். (GST REGN / RETURN)
வேலைவாய்ப்பு பதிவு, சேர்க்கை மற்றும் புதுப்பித்தல்
தமிழக அரசு & மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்தல்
பணப் பரிமாற்றம்.
.... இன்னும் பல.
தகவல்
தொடர்புக்கான
முகவரி:
சைபர்நெட் சேவை மையம்
34 பி`, புதுக்கடைத் தெரு
எச்`.ஆர்.எச்`. வணிக
வளாகம்
அருப்புக்கோட்டை - 626101.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
செல்பேசி: 9003664799
மின்னஞ்சல்:
vaendhan@gmail.com
முகநூல்:
facebook.com/thiruththam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.