வெள்ளி, 30 ஏப்ரல், 2021

74 - (இரணம் -> இலட்டு) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

இரணம், ரணம்

புண்

இராணம்

(2) ஈர் (=அறு, பிள) + ஆணம் (=உடல், சிறுமை) = இராணம் >>> இரணம் >>> ரணம் = உடலின் சிறிய அறுப்பு / பிளவு = புண்.

இரணம், ரணம்

போர்

இறணம்

இறு (=அழி) + அணை (=பொருந்து, கூடு) + அம் = இறணம் >>> இரணம் >>> ரணம் = கூடி அழித்தல்.

இரணம், ரணம்

கடன்

இறணம்

(1) இறு (=விடைசொல், திருப்பிக் கொடு) + அணி (=பொருள்) + அம் = இறணம் >>> இரணம் >>> ரணம் = திருப்பிக் கொடுக்கும் பொருள். (2) இறை (=கடமை, கடன்) + அணம் = இறணம் >>> இரணம் >>> ரணம்.

இரணம்

தங்கம்

இறணம்

இறை (=தலைமை) + அணி (=அலங்காரம், அணிகலம்) + அம் = இறணம் >>> இரணம் >>> ரணம் = அலங்கார அணிகளுள் தலையாயது.

இரணம்

மாணிக்கம்

எராணம்

எரி (=நெருப்பு, சிவப்பு, ஒளிர்) + ஆணம் (=சிறுமை, கல்) = எராணம் >>> இரணம் >>> ரணம் = சிவப்புநிறத்தில் ஒளிரும் சிறிய கல் = மாணிக்கம்.

இரணியம்

தங்கம்

இறணியம்

இறை (=தலைமை) + அணி (=அலங்காரம், அணிகலம்) + அம் = இறணியம் >>> இரணியம் = அலங்கார அணிகளுள் தலையாயது.

இரணியம்

பணம்

இறணியம்

இறு (=திருப்பிக்கொடு) + அணி (=பொருள்) + அம் = இறணியம் >>> இரணியம் = பொருளுக்காகத் திருப்பிக் கொடுப்பது = பணம்.

இரத்தம்

குருதி

இரத்தம்

(3) ஈர் (=அறு, ஒழுகு) + அத்து (=சிவப்பு) + அம் (=நீர்) = இரத்தம் = அறுத்தால் ஒழுகும் செந்நீர்.

இரத்தம்

சிவப்பு, சிவப்புப் பொருட்கள்

எரத்தம்

எரி (=நெருப்பு, சிவப்பு) + அத்தம் (=பொருள்) = எரத்தம் >>> இரத்தம் = சிவப்புநிறப் பொருட்கள் = குங்குமம், செம்பவளம், கொம்பரக்கு...

இரத்தம்

ஈரல்

இரற்றம்

ஈர் (=இரண்டாகு) + அறை (=உறுப்பு) + அம் = இரற்றம் >>> இரத்தம் = இரண்டாகிய உறுப்பு = ஈரல். ஒ.நோ: ஈர் (=இரண்டாகு) + அல் = ஈரல் = இரண்டாகியது.

இரத்தினம்

அறுக்கப்பட்டு பளபளக்கும் சிறிய கற்கள்

இரத்தினம்

ஈர் (=அறு, நுண்மை, சிறுமை, நெய்ப்பு, பளபளப்பு) + அத்தம் (=பொருள்) + இனம் (=வகை) = இரத்தினம் = சிறியதாக அறுக்கப்பட்டு பளபளக்கும் பொருள் வகை = வைரம், வைடூரியம், மாணிக்கம் முதலிய கற்கள்.

இரதபதம்

புறா

இரத்தபாதம்

இரத்தம் (=சிவப்பு) + பாதம் (=கால்) = இரத்தபாதம் >>> இரதபதம் = சிவந்த கால்களைக் கொண்டது = புறா.

இரதம், ரதம்

புணர்ச்சி

இறத்தம்

இறை (=உடல், கை) + அத்து (=பொருத்து, தழுவு) + அம் = இறத்தம் >>> இரதம் = கைகளால் உடலைத் தழுவுதல்.

இரதம், ரதம்

தேர், வண்டி.

இரறம்

இரி (=ஓடு) + அறம் (=சக்கரம்) = இரறம் >>> இரதம் = சக்கரங்களால் ஓடுவது = வண்டி, தேர்

இரதம்

பல்

இறத்தம்

ஈறு + அத்து (=பொருந்து) + அம் = இறத்தம் >>> இரதம் = ஈற்றில் பொருந்தியது = பல்.

இரதம்

சாறு

இறத்தம்

இறு (=வடிகட்டு) + அத்தம் (=பொருள்) = இறத்தம் >>> இரதம் = வடிகட்டிய பொருள் = சாறு.

இரதம்

சுவை

இரறம்

இரை (=உணவு) + அறி + அம் = இரறம் >>> இரதம் = உண்டு அறியப்படுவது = சுவை

இரதம், இரதி

இன்பம், இனிமை

இரறம்

இரி (=கெடு, துன்புறு) + அறு (=இல்லாகு) + அம் = இரறம் >>> இரதம் = கேடு / துன்பம் இல்லாதது = இன்பம், இனிமை

இரதம்

வாயில் ஊறும் நீர், எச்சில்

இறதம்

ஈறு + அதை (=ஊறு, பெருகு) + அம் (=நீர்) = இறதம் >>> இரதம் = ஈறுகளில் ஊறும் / பெருகும் நீர் = எச்சில்

இரதம்

தேன், தேனீ, வண்டு

இரத்தம்

ஈர் (=இனிமை, பளபளப்பு, பசுமை) + அத்து (=சிவப்பு) + அம் (=உணவு) = இரத்தம் >>> இரதம் = இனிப்பான பளபளப்புடைய சிவப்பான உணவு = தேன் >>> தேனை உண்பது = தேனீ

இரதம்

பாதரசம்

இரறம்

ஈர் (=பளபளப்பு) + அறு (=ஒழுகு) + அம் (=ஒளி, வெண்மை) = இரறம் >>> இரதம் = பளபளத்து வெண்மையாக ஒழுகுவது.

இரதம்

கற்பனை

இரறம்

இரி (=அழி, இல்லாகு) + அறி (=நினை) + அம் = இரறம் >>> இரதம் = இல்லாததை நினைப்பது = கற்பனை

இரதம்

இடைவார், அரைஞாண்

இறத்தம்

இறை (=நடு, இடை) + அத்து (=பொருத்து) + அம் = இறத்தம் >>> இரதம் = இடையில் பொருத்தப்படுவது = இடைவார், அரைஞாண்

இரதம்

சிவப்பு மாம்பழ மரம்

இறத்தம்

இறை (=மாமரம்) + அத்து (=சிவப்பு) + அம் = இறத்தம் >>> இரதம் = சிவப்பு மாம்பழ மரம்

இரதனம்

அரை ஞாண்

இறத்தணம்

இறை (=நடு, இடை) + அத்து (=பொருத்து) + அண் (=கயிறு) + அம் = இறத்தணம் >>> இரதனம் = இடையில் பொருத்தும் கயிறு

இரதி

விருப்பம்

இறத்தி

இறை (=அறிவு, மனம்) + அத்து (=பொருந்து) + இ = இறத்தி >>> இரதி = மனதுக்குப் பொருந்தியது = விருப்பம்.

இரதி

புணர்ச்சி

இறத்தி

இறை (=உடல்) + அத்து (=பொருந்து, தழுவு) + இ = இறத்தி >>> இரதி = உடலைத் தழுவுதல் = புணர்ச்சி.

இரதி

பெண் யானை

இரத்தி

இரி (=அஞ்சி ஓடு) + அத்தி (=யானை) = இரத்தி >>> இரதி = அஞ்சி ஓடும் யானை = பெண் யானை

இரதிகன்

தேரோட்டி, பாகன்

இரதுகன்

இரதம் (=தேர்) + உகை (=செலுத்து) + அன் = இரதுகன் >>> இரதிகன் = தேரைச் செலுத்துபவன் = பாகன்

இரந்திரம்

இரகசியம்

இறைத்திறம்

இறை (=மனம், காப்பு) + திறம் (=செய்தி) = இறைத்திறம் >>> இரந்திரம் = மனதிற்குள் காக்கப்பட்ட செய்தி = இரகசியம்

இரந்திரம்

ஓட்டை, வெளி

இறற்றிறம்

இறை (=நிறை) + அல் + திறம் (=வழி, இடம்) = இறற்றிறம் >>> இரத்திரம் >>> இரந்திரம் = நிறையாத இடம் = ஓட்டை, வெளி

இரம்பம்

மரத்தை அறுப்பது

இரம்மம்

ஈர் (=அறு) + அமை (=தண்டு, மரம்) + அம் = இரம்மம் >>> இரம்பம் = தண்டினை / மரத்தினை அறுப்பது

இரம்பிலம்

மிளகு

எரம்மிலம்

எரி + அம் (=உணவு) + இலம் (=சிறுமை) = எரம்மிலம் >>> இரம்பிலம் = எரியக்கூடிய சிறிய உணவு

இரம்மியம்

இனிமை தருவது

இரம்மியம்

ஈர் (=இனிமை) + அமை (=உண்டாக்கு) + இயம் = இரம்மியம் = இனிமை உண்டாக்குவது.

இரமணீயம்

இன்பமானது

இரமணியம்

ஈரம் (=கொடை) + அணி (=இனிமை) + அம் = இரமணியம் >>> இரமணீயம் = இனிமை தருவது.

இரமணீயம்

சிறந்த அழகுடையது

இறைமணியம்

இறை (=உயர்வு, சிறப்பு) + மணி (=அழகு) + அம் = இறைமணியம் >>> இரமணீயம் = சிறந்த அழகுடையது.

இரவணம்

ஒட்டகம்

இரவெனம்

ஈரம் (=நீர், அறிவு) + வென் (=முதுகு) + அம் = இரவெனம் >>> இரவணம் = முதுகில் நீரை உடையதாக அறியப்படுவது.

இரவி

வணிகம், வியாபாரம்

இறமி

இறு (=கொடு) + அமை (=கொள், வாங்கு) + இ = இறமி >>> இரவி = கொடுக்கல் வாங்கல் = வியாபாரம், வணிகம்

இரவி

சூரியன்

இரவி

இருமை (=இருள்) + அவி (=அழி) = இரவி = இருளை அழிப்பவன்

இரவி

மலை

இரவி

இருமை (=பெருமை, உயரம்) + அவை (=இடம்) + இ = இரவி = உயரமான பெரிய இடம் = மலை.

இரவிக்கை, ரவிக்கை

மார்புத் துணி

இறாப்பிகை

இறு (=கட்டு) + ஆப்பு (=உடல், மார்பு) + இகம் (=பொருள்) + ஐ = இறாப்பிகை >>> இரவிக்கை = மார்பில் கட்டும் பொருள்.

இரவு

மஞ்சள்

இறமு

இறு (=கொடு) + அம் (=அழகு, ஒளி) + உ = இறமு >>> இரவு = அழகும் ஒளியும் தருவது = மஞ்சள்.

இரவை

நுண்பொருள்

இரமை

ஈர் (=நுட்பம்) + அமை = இரமை >>> இரவை = நுட்பமாக அமைந்தது

இரவை

துப்பாக்கிக் குண்டு

இரேவை

ஈர் (=நுண்மை, அறு) + ஏவு + ஐ = இரேவை >>> இரவை = ஏவி அறுக்கும் நுண்பொருள் = துப்பாக்கிக் குண்டு.

இரவை

வயிரம்

இரம்பை

ஈரம் (=அறுவை) + பை (=ஒளி, வலிமை, பொருள்) = இரம்பை >>> இரவை = வலுவான பொருளையும் அறுக்க வல்ல ஒளிரும் பொருள்.

இராக்கதன்

அரக்கன்

இராக்கதன்

இருமை (=பெருமை) + ஆக்கம் (=உடல், வலிமை, செயல்) + அதம் (=அழிவு, நாசம்) + அன் = இராக்கதன் = பெரிய வலிய உடலால் நாசம் செய்பவன் = அரக்கன்

இராகம்

இனிமையாக நீட்டி ஒலித்தல்

இராக்கம்

ஈர் (=இனிமை, இழு, நீட்டு) + ஆக்கம் (=சொல்) = இராக்கம் >>> இராகம் >>> ராகம் = இனிமையாக நீட்டிச் சொல்லுதல்

இராகம்

ஆசை

இராகம்

ஈர் + ஆகம் (=மனம்) = இராகம் = மனதை ஈர்ப்பது

இராகம்

நிறம், அழகு, சிவப்பு

இராகம்

ஈர் + ஆகம் (=கண்) = இராகம் = கண்களை ஈர்ப்பது = அழகிய நிறம், சிவப்பு

இராகி, ராகி

கேழ்வரகு

எராகி

எரி (=சிவப்பு) + அஃகம் (=தானியம்) + இ = எராகி >>> இராகி >>> ராகி = சிவப்புநிறத் தானியம்.

இராகு, ராகு

பாம்பு

இராகு

இரி (=ஓடு) + ஆகம் (=உடல், வயிறு) + உ = இராகு >>> ராகு = வயிற்றால் ஓடுவது = பாம்பு.

இராச்சியம், ராச்சியம்

அரசன் ஆளுமிடம்

இறாட்சியம்

இறை (=அரசன், இடம்) + ஆட்சி + அம் = இறாட்சியம் >>> இராச்சியம் >>> ராச்^யம் = அரசனின் ஆட்சிக்குரிய இடம்

இராசன், ராசன், இராயன், ராசா

அரசன்

இறாயன்

இறை (=காவல்) + ஆயம் (=மக்கள் கூட்டம்) + அன் = இறாயன் >>> இராசன் = மக்கள் கூட்டத்தைக் காப்பவன்.

இராசன்

சந்திரன்

இராயன்

இரா (=இரவு) + ஆய் (=ஒளி) + அன் = இராயன் >>> இராசன் = இரவில் ஒளி தருபவன் = சந்திரன்.

இராசனம், இராசனை

வெள்ளைப் பூண்டு

எராயன்னம்

எரி + ஆய் (=சிறுமை, அழகு, வெண்மை + அன்னம் (=உணவு) = எராயன்னம் >>> இராசனம் / இராசனை = எரிகின்ற சிறு வெள்ளுணவு

இராசாங்கம், ராசாங்கம்

அரசின் உறுப்புக்கள்

இறையங்கம்

இறை (=அரசு) + அங்கம் = இறையங்கம் >>> இராசாங்கம் = அரசின் அங்கங்கள்

இராசாங்கம், ராசாங்கம்

அரசாட்சி

இறையாக்கம்

இறை (=அரசு, காவல்) + ஆக்கம் (=நன்மை, செயல்) = இறையாக்கம் >>> இராசாங்கம் = அரசு காத்து நன்மை செய்தல்.

இராசாத்தி, ராசாத்தி

அரசி

இறையத்தி

இறை (=அரசன்) + அத்து (=சேர், கூடு) + இ = இறையத்தி >>> இராசாத்தி >>> ராசாத்தி = அரசனுடன் கூடுபவள்.

இராசாளி, ராசாளி

வலிய பறவை

இராசாளி

இரி (=பற, அழி, கொல்) + ஆசு (=விரைவு) + ஆள் + இ = இராசாளி >>> ராசாளி = விரைந்து கொல்லும் ஆளுமை உடைய பறவை.

இராசி

வரிசை

இராசி

ஈர் (=அறு, வகு) + ஆசு (=ஒழுங்கு) + இ = இராசி = வகுக்கப்பட்ட ஒழுங்கு = வரிசை

இராசி, ராசி

சாதகத்தில் நட்சத்திரங்களின் வீடு, வீடு

இறாயி, இராசி

(1) இறை (=தங்கல், உயரம், ஆசனம்) + ஆயம் (=ஒளி, கூட்டம்) + இ = இறாயி >>> இராசி = ஒளிக்கூட்டம் தங்கும் உயரமான ஆசனம். (2) இரு (=தங்கு) + ஆசு (=பற்றுக்கோடு) + இ = இராசி = தங்கும் பற்றுக்கோடு.

இராசி, ராசி

கூட்டம்,குவியல், மொத்தம், இனம், பொருத்தம்

இராயி

இரு + ஆயம் (=கூட்டம்) + இ = இராயி >>> இராசி = கூடி இருப்பது = கூட்டம், இனம், குவியல், மொத்தம், பொருத்தம், சமாதானம்.

இராசி, ராசி

அதிட்டம்

இறாயி

இறு (=அழி, இல்லாகு) + ஆய் (=அறி, கணி, நன்மை) + இ = இறாயி >>> இராசி = கணிக்கப்படாத நன்மை = அதிட்டம்.

இராசிநாமா

தொடர்பை விலக்கிக் கொள்ளுதல்

இராசினமா

(2) இரி (=நீக்கு, விலக்கு) + ஆசு (=பற்று, தொடர்பு) + இனம் (=கூட்டம்) + ஆ = இராசினமா >>> இராசினாமா, இராசிநாமா = கூட்டத்தில் இருந்து தொடர்பினை விலக்கிக் கொள்ளுதல்.

இராசியம்

மறைவான இடம்

இறாசியம்

இறை (=காவல், மறைப்பு) + ஆசு (=இடம்) + இயம் = இறாசியம் >>> இராசியம் = மறைவான இடம்

இராசியம்

தாமரை

இறசியம்

இறு (=அழி) + அசை (=வாடு, கூம்பு) + இயம் (=ஒளி) = இறசியம் >>> இராசியம் = ஒளி அழிந்ததும் வாடிக் கூம்புவது.

இராசீவம்

தாமரை

இறசிமம்

இறு (=அழி) + அசை (=வாடு, கூம்பு) + இமை (=ஒளிர்) + அம் = இறசிமம் >>> இராசீவம் = ஒளி அழிந்ததும் வாடிக் கூம்புவது.

இராட்சதன்

அரக்கன்

இராச்சதன்

இருமை (=பெருமை) + ஆசு (=ஆணவம், செருக்கு) + அதம் (=அழிவு) + அன் = இராச்சதன் >>> இராட்சதன் = செருக்கி அழிக்கும் பெரியவன்.

இராட்டினம், இராட்டு

தொடர்ந்து சுற்றப்படுவது

இராட்டினம்

(2) ஈர் (=இழு, நீளு, தொடர்) + ஆட்டு (=சுற்று) + இனம் (=வகை) = இராட்டினம் = தொடர்ந்து சுற்றப்படும் வகை.

இராடம்

கழுதை

இறாறம்

இறு (=கட்டு) + ஆறு (=பொறு, சும) + அம் = இறாறம் >>> இராடம் = கட்டியதைப் பொறுமையாகச் சுமப்பது = கழுதை.

இராணி

அரசி

இறாணி

இறை (=அரசன்) + ஆணம் (=அன்பு) + இ = இறாணி >>> இராணி = அரசனின் அன்புக்குரியவள்.

இராணுவம்

போர்ப்படை

இறண்ணுவம்

ஈறு (=எல்லை, அழிவு) + அண்ணு (=நெருங்கு, கூடு) + அம் = இறண்ணுவம் >>> இராணுவம் = எல்லையில் கூடி அழிக்கும் கூட்டம்.

இராத்திரி

இரவு

இறாத்திரி

இறை (=பொழுது) + ஆதி (=சூரியன்) + இரி (=நீங்கு) = இறாத்திரி >>> இராத்திரி = சூரியன் நீங்கிய பொழுது.

இராத்திரி

மஞ்சள்

இரைத்திரி

ஈர் (=எழுது, பூசு) + ஐ (=அழகு) + திரு (=ஒளி, பெண்) + இ = இரைத்திரி >>> இராத்திரி = ஒளிரும் அழகுக்காகப் பெண்கள் பூசுவது.

இராதம்

கடைக்கொள்ளி

எராறம்

எரி (=தீ) + ஆறு (=தணி, உலர்) + அம் = எராறம் >>> இராதம் = தீ எரிந்து தணிந்த உலர்பொருள்.

இராதா

எண்ணம்

இறைதா

இறை (=மனம்) + தா (=உண்டாகு, தோன்று) = இறைதா >>> இராதா = மனதில் தோன்றுவது = எண்ணம்

இராமம்

கண்கவர் அழகு

இராவம்

ஈர் (=கவர்) + ஆ (=உண்டாக்கு) + அம் (=அழகு) = இராவம் >>> இராமம் = கவர்ச்சியை உண்டாக்கும் அழகு = கண்ணைக் கவரும் அழகு.

இராமம்

மனம் விரும்பத் தக்கது

இறாவம்

இறை (=மனம்) + ஆவு (=விரும்பு) + அம் = இறாவம் >>> இராமம் = மனம் விரும்பத் தக்கது.

இராமன்

சந்திரன்

இராவான்

இரா (=இரவு) + வான் (=வானம், ஒளி) = இராவான் >>> இராமன் = இரவில் வானத்தில் ஒளிர்பவன் = சந்திரன்.

இராயசம்

எழுத்து வேலை

இறையாசம்

இறை (=கடமை, வேலை) + ஆசு (=எழுத்து) + அம் = இறையாசம் >>> இராயசம் = எழுத்து வேலை.

இராவடி

ஏலக்காய்

இராவடி

ஈர் (=பசுமை, பிள) + ஆவி (=புகை, நறுமணம்) + அடு (=சமை) + இ = இராவடி = சமையலில் நறுமணத்திற்காக பிளந்து இடும் பசும்பொருள்

இராவணம்

விளக்கு

இராவணம்

இரா (=இரவு) + அணை (=பொருத்து, அவி) + அம் = இராவணம் = இரவில் பொருத்தி அணைக்கப்படுவது.

இராவணம்

அழுகை

இறைபனம்

இறை (=கண்) + பனி + அம் = இறைபனம் >>> இராவணம் = கண்கள் பனித்தல் = அழுகை.

இராவணன்

கடவுள்

இராவணன்

இரு (=நிலைபெறு) + ஆவணம் (=ஆளுமை) + அன் = இராவணன் = நிலையாக ஆள்பவன் = கடவுள்.

இராவணன்

சீதையைக் கடத்தியவன்

இரவ்வணன்

ஈர் (=இழு) + அவ்வை (=பெண்) + அணை (=சிறை) + அன் = இரவ்வணன் >>> இராவணன் = பெண்ணை இழுத்துச்சென்று சிறைவைத்தவன்.

இராவுத்தன், இரௌத்தன்

குதிரைத் தலைவன்

இறைவீதன்

இறை (=தலைவன்) + வீதி (=குதிரை) + அன் = இறைவீதன் >>> இராவுத்தன் >>> இரௌத்தன் = குதிரைத் தலைவன்

இரிணம்

உவர்நிலம்

இறிணம்

இறை (=சிதறு, நிலம், பொடி) + இணை (=சேர், கல) + அம் (=அழகு, வெண்மை) = இறிணம் >>> இரிணம் >>> இருணம் = வெண்பொடி சிதறிக் கலந்திருக்கும் நிலம்.

இரித்தை

பொழுது

இறுது

இறுது (=பொழுது0 + ஐ = இறுதை >>> இரித்தை

இருசு

நேர்மை

இறிசு

இறு (=அழி, இல்லாகு) + இசை (=பணி, வளை) + உ = இறிசு >>> இருசு = வளைவு இல்லாமை = நேர்மை.

இருசு

அச்சுமரம்

இறுழு

இறை (=நடு, இருத்தல், மரம்) + உழ (=சுற்று) + உ = இறுழு >>> இருசு = நடுவில் இருந்து சுற்றச்செய்யும் மரம் = அச்சு மரம்

இருசு

மூங்கில்

இறிசு

இறை (=வணங்கு, வளை, மரம்) + இசி (=இழு, நீளு) + உ = இறிசு >>> இருசு = வளையக்கூடிய நீளமான மரம்

இருணம்

கடன்

இறினம்

இறு (=திருப்பிக்கொடு) + இனம் (=பொருள்) = இறினம் >>> இருணம் = திருப்பிக் கொடுக்கும் பொருள்.

இருத்தி

கடவுள் தந்த ஆற்றல்

இறீதூ

இறை (=கடவுள்) + ஈ (=கொடு) + தூ (=ஆற்றல்) = இறீதூ >>> இருத்தி = கடவுள் கொடுத்த ஆற்றல்.

இருதம்

விவசாயம், யாசகம்

இருந்தம்

இரை (=உணவு) + உந்து (=பெருக்கு) + அம் = இருந்தம் >>> இருதம் = உணவைப் பெருக்குதல்.

இருதயம்

இரத்தத்தைப் பாய்ச்சுவது

உருந்தயம்

உரு (=சிவப்பு) + உந்து (=செலுத்து, பாய்ச்சு) + அயம் (=நீர்) = உருந்தயம் >>> இருதயம் = சிவப்புநீரைப் பாய்ச்சுவது.

இருதயம்

மனம்

இறுதயம்

இறை (=எண்ணம்) + உதி (=தோன்று) + அயம் (=இடம்) = இறுதயம் >>> இருதயம் = எண்ணம் தோன்றும் இடம்

இருது, ருது

காலம்

இருது

(2) இரி (=கெடு, அழி) + உதி (=தோன்று) + உ = இருது = தோன்றியதும் அழிந்து போவது = காலம்.

இருது, ருது

மகளிர் பூப்பு

இறுந்து

(2) இறை (=பருவம், இடுப்பு, பாய்) + உந்து (=வெளிப்படு) = இறுந்து >>> இருது = பருவந்தோறும் இடுப்பில் இருந்து பாய்ந்து வெளிப்படுவது

இருந்தை, இருந்து, இருந்தில்

மரக்கரி

இருந்தை

இருமை (=கருமை) + தை (=மரம், உண்டாக்கு) = இருந்தை = மரத்தில் இருந்து உண்டாக்கிய கரும்பொருள்.

இரேகை, ரேகை

கையில் செல்லும் வரி

இறேகை

(2) இறை (=கை, வரி) + ஏகு (=செல்) + ஐ = இறேகை >>> இரேகை >>> ரேகை = கையில் செல்லும் வரிகள்.

இரேக்கு

பூவிதழ்

இரேக்கு

ஈர் (=மென்மை) + எஃகு (=அவிழ்) = இரேக்கு = அவிழும் மென்பொருள்

இரேக்கு, ரேக்கு

இரும்புத் தகடு

இறேக்கு

இறை (=சமம், பரப்பு) + எஃகு (=இரும்பு) = இறேக்கு >>> இரேக்கு >>> ரேக்கு = சமதளமாய்ப் பரப்பப்பட்ட இரும்பு.

இரேகை

அரசு வரி

இறேக்கை

இறை (=அரசன், வரி) + எக்கு (=குவி, திரட்டு) + ஐ = இறேக்கை >>> இரேகை = அரசனால் திரட்டப்படும் வரி.

இரேகை

இரும்பில் உள்ள அளவுக் கோடு

இறேகை

இறை (=அளவு, வரி) + எஃகு (=இரும்பு) + ஐ = இறேகை >>> இரேகை >>> ரேகை = இரும்பில் உள்ள அளவுக்கோடு

இரேகை

எழுத்து

இரேகை

ஈர் (=எழுது) + எஃகு (=இரும்பு) + ஐ = இரேகை = இரும்பால் எழுதியது

இரேசகம்

மூச்சை இழுத்து வெளிவிடுதல்

இறேழகம்

இறை (=பாய்ச்சு) + எழு + அகம் (=உயிர், மூச்சு) =இறேழகம் >>> இரேசகம் = மூச்சை எழுப்பிப் பாய்ச்சுதல்.

இரேசகம்

பேதி, பேதிமருந்து

இரேச்சகம்

இரி (=கலங்கு, விரை) + எச்சம் (=மலம்) + அகம் (=வயிறு) = இரேச்சகம் >>> இரேசகம் = வயிறு கலங்கி மலம் விரைதல்.

இரேசகி, இரேசி

மூச்சை விடு

இரேசகி

இரேசகம் (=மூச்சை விடுதல்) >>> இரேசகி = மூச்சை வெளிவிடு

இரேணு

மண் துகள்

இரேணு

ஈர் (=நுண்மை) + ஏணி (=நிலம், மண்) + உ = இரேணு = நுண்ணிய மண்

இரேணுகம்

மிளகு

இரேணீகம்

இருமை (=கருமை) + எண் (=மதி) + ஈகை (=தங்கம்) + அம் = இரேணீகம் >>> இரேணுகம் = கருப்புத் தங்கமாக மதிக்கப்படுவது

இரேதசு

விந்து

இறைதழு

(2) இறை (=உடல், நீர்பாய்ச்சு, பொழுது) + தழு (=புணர்) = இறைதழு >>> இரேதசு = உடல்கள் புணரும் போது பாயும் நீர்ப்பொருள்.

இரேயம்

கள், சாராயம்

இறேயம்

இறு (=வடிகட்டு) + ஏய் (=வஞ்சி, மயக்கு) + அம் (=நீர், உணவு) = இறேயம் >>> இரேயம் = வடிகட்டப்படும் மயக்குகின்ற நீருணவு.

இரேழி

முன்வாசலுக்கும் வீட்டுக்கதவுக்கும் இடைப்பட்டது

இறேழி

இறை (=வீட்டிறப்பு, முன், இடம்) + எழு (=தொடங்கு, பரவு) + இ = இறேழி >>> இரேழி = வீட்டிறப்பில் இருந்து தொடங்கி முன்னால் பரவியுள்ள இடம்

இரவுத்திரம், இரௌத்திரம்

கடுங்கோபம்

இறவித்துரம்

இறை (=கண்) + அவி (=புழுங்கு, சின) + துரு (=சிவப்பு) + அம் = இறவித்துரம் >>> இரவுத்திரம் >>> இரௌத்திரம் = கண்களைச் சிவப்பாக்கும் சினம்.

இரௌரவம்

நரகம்

இறவூறவம்

(2) இற + அவை (=இடம்) + ஊறு (=துன்பம்) + அவம் (=குற்றம்) = இறவூறவம் >>> இரௌரவம் = இறந்தவர்கள் செய்த குற்றத்திற்காகத் துன்புறுத்தப்படும் இடம்

இலக்கணம், இலக்கணை

மொழியின் எல்லை

இலக்கணம்

இலக்கு (=எழுத்து, மொழி) + அணை (=கரை, எல்லை) + அம் = இலக்கணம் = மொழிக்கு எல்லையாக விளங்குவது.

இலக்கணம்

அழகு

இலக்கணம்

இலக்கம் (=ஒளி) + அணம் = இலக்கணம் >>> லக்ச~ண = ஒளி, அழகு

இலக்கணம், இலக்கு

அடையாளம், குறியீடு

இலக்கணம்

இலக்கு (=விளக்கு, அறியச்செய்) + அணம் = இலக்கணம் = அறியச் செய்வது = குறியீடு, அடையாளம்.

இலக்கம், இலக்கு, இலக்கியம்

குறி

இலக்கம்

இல் (=துளை) + அக்கு (=கண்) + அம் = இலக்கம் = கண்களால் துளைக்கப்படுவது = குறி.

இலக்காரம், இலக்கர்

ஆடை

இலக்காரம்

இல் (=இன்மை, நிர்வாணம்) + அகம் (=உடல்) + ஆர் (=அணி, மறை) + அம் = இலக்காரம் = உடலின் நிர்வாணத்தை மறைத்து அணிவது.

இலக்கி, இலக்கு

எழுது, வரை

இலக்கி, இலக்கு

இலக்கு (=எழுத்து) >>> இலக்கு, இலக்கி = எழுது, வரை, குறி

இலக்கிதம்

குறிக்கப்பட்டது

இலக்கிதம்

இலக்கி (=எழுது, குறி) + இதம் = இலக்கிதம் = குறிக்கப்பட்டது

இலக்கியம்

கல்வி நூல்

இலக்கியம்

இலக்கு (=எழுத்து) + இயை (=நிறை) + அம் = இலக்கியம் = எழுத்துக்களால் நிறைந்தது.

இலக்கினம்

சோதிடத்தில் பிறக்கும் பிரிவு

இலங்கினம்

இலங்கு (=விளங்கு, தோன்று, பிற) + இனம் (=மனிதன், பிரிவு) = இலங்கினம் >>> இலக்கினம் = மனிதஉயிர் பிறக்கும் பிரிவு.

இலக்கு

குறிக்கோள், தீர்மானம்

எலக்கு

எல்லை (=முடிவு) + அகம் (=எண்ணம்) + உ = எலக்கு >>> இலக்கு = முடிவான எண்ணம் = தீர்மானம், குறிக்கோள்

இலக்கு

அளவு

எலக்கு

எல்லை (=முடிவு) + அகம் (=எண்ணம்) + உ = எலக்கு >>> இலக்கு = எண்ணிய முடிவு = அளவு.

இலக்கு

பகை, எதிரி

இலக்கு

இல் (=அழிவு) + அகை (=தாக்கு) + உ = இலக்கு = தாக்கி அழிக்கப்பட வேண்டியது = பகை, எதிரி

இலக்குமி

திருமகள், செல்வம்

இலக்குமி

இல் (=வறுமை) + அகை (=செழி) + உமி (=அழி) = இலக்குமி = வறுமையை அழித்துச் செழிக்கச் செய்பவள் = திருமகள், செல்வம்

இலக்குமி

மஞ்சள்

இலக்குபை

இலக்கு (=வரை, பூசு, தோற்றுவி) + பை (=பொருள், பசுமை, அழகு, இளமை) = இலக்குபை >>> இலக்குபி >>> இலக்குமி = இளமை அழகு தோன்றச்செய்யும் பசுமையான பூசுபொருள்.

இலக்கை

ஆடை

இலக்கை

இல் (=இன்மை, நிர்வாணம்) + அகை (=நீக்கு, இல்லாக்கு) + ஐ = இலக்கை = நிர்வாணத்தை இல்லாமல் செய்வது.

இலகடம்

அம்பாரி

இலேகடம்

இல் (=இடம்) + ஏ (=மேல், அம்பு, எய்தல்) + கடம் (=யானை) = இலேகடம் >>> இலகடம் = யானை மேலிருந்து அம்பு எய்யும் இடம்

இலகு

எளிது, இலேசு, சிறுமை

எளகு

எள் (=எள்விதை, ஒப்பு) + அகம் (=தன்மை) + உ = எளகு >>> இலகு = எள்விதையை ஒத்த தன்மை உடையது.

இலகிமா

இலேசாக்கும் ஆற்றல்

எளகுமா

எளகு (=இலேசு) + மா (=ஆற்றல்) = எளகுமா >>> இலகிமா = இலேசாக்கும் ஆற்றல்.

இலங்கம்

கூடுதல், சேர்க்கை

இலக்கம்

இல் (=இன்மை) + அகை (=நீங்கு, பிரி) + அம் = இலக்கம் >>> இலங்கம் = பிரிவு இல்லாமை

இலங்கனம்

தடை

இலக்கணம்

இல் (=செல், இயங்கு) + அகை (=தடு) + அணம் = இலக்கணம் >>> இலங்கனம் = செல்ல / இயங்கத் தடை.

இலங்கனம், லங்கணம்

பட்டினி

இலக்கணம்

இல் (=இன்மை) + அகம் (=வயிறு, உணவு) + அணம் = இலக்கணம் >>> இலங்கனம் = வயிற்றுக்கு உணவு இன்மை.

இலங்கை

ஆற்றிடைக்குறை

எலக்கை

ஏல் (=நீர்) + அகம் (=எழுச்சி, உயர்வு, பூமி) + ஐ = எலக்கை >>> இலங்கை = நீரில் இருந்து எழுந்த / உயர்ந்த பூமி.

இலச்சினை

முத்திரை, அடையாளம்

இலச்சீனை

(2) இல் (=துளை, குத்து) + அச்சு (=வடிவம்) + ஈனு (=உண்டாக்கு) + ஐ = இலச்சீனை >>> இலச்சினை = குத்தி உண்டாக்கும் வடிவம்

இலச்சை, லச்சை^

கூச்சம், வெட்கம்

இளச்சை

இளை (=சோர், பின்வாங்கு) + அசை (=நுடங்கு, வளை) + ஐ = இளச்சை >>> இலச்சை = பின்வாங்கி வளைதல் = கூசுதல், வெட்குதல்.

இலஞ்சம்

மறைவாகப் பெறப்படும் குற்றப் பொருள்

எலாச்சம்

ஏல் (=கொள், பெறு) + ஆசு (=கவசம், மறைப்பு, குற்றம்) + அம் = எலாச்சம் >>> இலஞ்சம் = குற்றமாகக் கொள்ளப்படுவதால் மறைவாகப் பெறப்படுவது.

இலக்கம், இலட்சம், லட்சம்

நூறாயிரம்

இலக்கம்

(2) இல் (=ஆகாயம்) + அகை (=எரி, ஒளிர், மதி) + அம் = இலக்கம் >>> இலக்ச~ம் >>> இலட்சம் = ஆகாயத்தில் ஒளிர்பவற்றின் மதிப்பு.

இலட்சியம், லட்சியம்

குறிக்கோள்

எலச்சியம்

ஏல் (=எதிர்கொள்) + அச்சு (=உடல், பொருள்) + இயம் = எலச்சியம் >>> இலட்சியம் >>> லட்சியம் = எதிர்கொள்ளும் பொருள்.

இலட்டு, லட்டு, இலட்டுகம், இலட்டுவம்

ஏலம் கலந்த உருண்டையான இனிப்பு உணவு

எலாட்டு

(2) ஏலம் + ஆடு (=கல, செய், சமை, பொடியாகு, வட்டமிடு) + உ = எலாட்டு >>> இலட்டு = சமைத்த மாவுடன் ஏலக்காய் கலந்து வட்டமாகச் செய்யப்படுவது.