வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 49

 

சொல்

பொருள்

தமிழ்ச்சொல்

மூலச்சொல்லும்

தோன்றிய முறையும்

வப்பிரம்

மதில், கோட்டை

பம்மீரம்

பம்மு (=மூடு, மறை, வளை) + ஈர் (=நீளு) + அம் = பம்மீரம் >>> வப்பிரம் = நீளவாக்கில் வளைத்து மூடியிருப்பது = மதில்.

வப்பிரம்

மலைச் சரிவு

மாமிறம்

மா (=மலை, இடம்) + மிறை (=வளைவு, சரிவு) + அம் = மாமிறம் >>> வப்பிரம் = மலையின் சரிவான இடம்.

வப்பிரம்

அத்திவாரம்

பப்பிறம்

பப்பு (= ஒப்பு, சமம்) + இறை (=பாரம், தங்கல், இடம்) + அம் = பப்பிறம் >>> வப்பிரம் = பாரம் தங்கும் சமமான இடம்.

வப்பிரம்

அகழி

வவ்வீரம்

வவ்வு (=தோண்டு) + ஈர் (=நீளு) + அம் (=நீர்) = வவ்வீரம் >>> வப்பிரம் = நீளமாகத் தோண்டப்பட்ட நீருடைய பள்ளம்.

வப்பிரம்

வயல்

வைப்பீரம்

வைப்பு (=இடம்) + ஈரம் (=பசுமை) = வைப்பீரம் >>> வப்பிரம் = பசுமையும் ஈரமும் கொண்ட இடம்.

வப்பிரம்

புழுதி

வைப்பீரம்

வைப்பு (=இடம், மண்) + ஈர் (=நுண்மை) + அம் = வைப்பீரம் >>> வப்பிரம் = நுண்ணிய மண் துகள்கள்.

வப்பிரம்

ஈயம்

மாழைப்பீரம்

மாழை (=உலோகம்) + பீர் (=வெண்மை) + அம் = மாழைப்பீரம் >>> மய்ப்பீரம் >>> வப்பிரம் = வெண்ணிற உலோகம்

வபனம்

மயிர் நீக்குகை

மயவணம்

மை (=மயிர்) + அவி (=நீக்கு) + அணம் = மயவணம் >>> மாபனம் >>> வபனம் = மயிர் நீக்குகை.

வபனம்

விதைக்கை, விதை, விந்து

பம்மணம்

பம்மு (=மூடு, புதை) + மணி (=விதை) + அம் = பம்மணம் >>> வபனம் = விதைகளைப் புதைத்தல், விதைக்கப்படுவது = விதை, விந்து முதலியன.

வபிலன்

தந்தை

மாமூலன்

மா (=உயிர்) + மூலம் + அன் = மாமூலன் >>> வபுலன் >>> வபிலன் = உயிர்க்கு மூலமானவன்.

வபு

உடல்

மாபூ

மா (=உயிர், இடம்) + பூ (=தோன்று) = மாபூ >>> வபு = உயிர் தோன்றும் இடம் = உடல்.

வபை

கொழுப்பு

மப்பு

மப்பு (=கொழுப்பு) + ஐ = மப்பை >>> வபை

வபை

சாரம்

மயப்பு

மயப்பு (=சாரம்) + ஐ = மயப்பை >>> மாப்பை >>> வபை

வமனம்

வாந்தி

வாவன்னம்

வா (=ஒலி, வெளிப்படுத்து) + அன்னம் (=உணவு) = வாவன்னம் >>> வமனம் = வா வா என்ற ஒலியுடன் உணவைக் கக்குதல்.

வமனி

அட்டைப் பூச்சி

வம்பணி

வம்பு (=தோல், தீங்கு) + அணை (=பொருந்து, ஒட்டு) + இ = வம்பணி >>> வமனி = தோலுடன் ஒட்டிக்கொண்டு தீங்கிழைப்பது

வமனி

பருத்தி

மைவானி

மை (=மென்மை) + வான் (=வெண்மை) + இ = மைவானி >>> மவனி >>> வமனி = மென்மையும் வெண்மையும் கொண்டது

வமிசம்

புல்லாங் குழல்

வம்பியம்

வம்பு (=மூங்கில்) + இயம் (=இசைக்கருவி) = வம்பியம் >>> வமிசம் = மூங்கிலில் செய்த இசைக்கருவி 

வமிசம்

மூங்கில்

வம்பியம்

வம்பு (=வளைவு) + இயை + அம் = வம்பியம் >>> வமிசம் = வளைப்பதற்கு இசைவாக இருப்பது.

வயம்

வலிமை

பை

பை (=வலிமை) + அம் = பயம் >>> வயம்.

வயம்

மிகுதி

பையம்

பை (=பெருகு) + அம் = பயம் >>> வயம் = பெருக்கம், மிகுதி

வயம்

வெற்றி

பழம்

பழு (=அனுகூலமாகு, வெல்) + அம் = பழம் >>> வயம் = வெற்றி

வயம்

பறவை

பாயம்

பாய் (=விரை, பற) + அம் = பாயம் >>> வயம் = பறப்பது.

வயம்

இடம், பக்கம்

வாயம்

வாய் (=இடம், பக்கம்) + அம் = வாயம் >>> வயம்

வயம்

மூலம்

வாய்

வாய் (=மூலம்) + அம் = வாயம் >>> வயம்

வயம்

நீர்

பயம்

பயம் (=நீர்) >>> வயம்

வயம்

இரும்பு

மயம்

மை (=கருநிறம், வலிமை) + அம் = மயம் >>> வயம் = வலிமை மிக்க கருநிறப் பொருள்.

வயம்

குதிரை

பாயம்

பாய் (=விரைந்தோடு) + அம் = பாயம் >>> வயம் = விரைந்து ஓடுவது = குதிரை.

வயம்

ஆடு

மையம்

மை (=ஆடு) + அம் = மயம் >>> வயம்

வயம்

முயல்

பாயம்

பாய் (=வெண்மை, தாவி ஓடு) + அம் = பாயம் >>> வயம் = தாவி ஓடும் வெண்ணிற விலங்கு.

வயமம்

அத்திப் பழம்

பயமம்

பை (=எரி, நிறம், மிகு, செறி) + அம் (=உணவு) + அம் = பயமம் >>> வயமம் = தீயின் நிறத்தில் செறிந்திருக்கும் உணவு.

வயசு

வாழ்நாள்

வாழயு

வாழ் + ஐயம் (=காலம்) + உ = வாழயு >>> வயசு = வாழ்நாள்

வயணம்

வழிமுறை

வாயணம்

வாய் (=வழி) + அணம் = வாயணம் >>> வயணம் = வழிமுறை

வயணம்

நிலைமை

வாயணம்

வாய் (=அமை, நிலை) + அணம் = வாயணம் >>> வயணம் = நிலைமை.

வயணம்

விரிவு, பெருக்கம்

பையணம்

பை (=விரி, நீளு) + அணம் = பயணம் >>> வயணம் = விரிவு, பெருக்கம்.

வயணம், வயம்

ஏற்றது

வாயணம்

வாய் (=ஏற்றதாகு) + அணம் = வாயணம் >>> வயணம் = ஏற்றது, பொருத்தமானது.

வயணம்

நேர்த்தி

வாயணம்

வாய் (=நேர்) + அணம் = வாயணம் >>> வயணம் = நேர்த்தி

வயணம்

காரணம்

வாயணம்

வாய் (=நிகழ், மூலம்) + அணம் = வாயணம் >>> வயணம் = நிகழ்வதற்கான மூலம் = காரணம்

வயந்தம்

வசந்தம்

பையாத்தம்

பை (=பசுமை, அழகு) + ஆதி (=தொடக்கம்) + அம் = பயாத்தம் >>> வயந்தம் >>> வசந்தம் = பசுமை அழகின் தொடக்கம்.

வயறு

கொக்கி

வாயாரு

வாய் (=வளைவு) + ஆர் (=பொருந்து, கூர்மை) + உ = வாயாரு >>> வயறு = வளைவும் கூர்மையும் கொண்டு பொருந்தக் கூடியது.

வயறு

கயிறு

வாயாரு

வாய் (=ஏற்றதாகு) + ஆர் (=கட்டு) + உ = வாயாரு >>> வயறு = கட்டுவதற்கு ஏற்றது.

வயனம்

பேச்சு

வாயணம்

வாய் (=உறுப்பு, மொழி) + அணை (=பொருந்து) + அம் = வாயணம் >>> வயனம் = வாயில் பொருந்திய மொழி

வயனர்

பறவை உடலினர்

வயாணர்

வயம் (=பறவை) + ஆணம் (=உடல்) + அர் = வயாணர் >>> வயனர் = பறவை போன்ற உடலமைப்பு உடையவர்.

வயானம்

பறவை

வயம்

வயம் (=பறவை) + அணம் = வயணம் >>> வயானம்

வயிடூரியம்

பூனைக் கண்போன்ற அரத்தினம்

வயிறுறியம்

வயம் (=கோடு) + இறை (=கண்) + உறை (=தங்கு, பொருந்து) + இயம் (=ஒளி, தன்மை) = வயிறுறியம் >>> வயிடூரியம் = கண்ணில் பொருந்திய ஒளிக்கோடு போன்ற தன்மை கொண்டது.

கிருட்டினன்

திருமால்

குருட்டினன்

குருடு (=இருள், கருமை) + இனம் (=குலம்) + அன் = குருட்டினன் >>> கிருட்டினன் = கருநிறங் கொண்ட குலத்தினன்.

விச்~ணு

திருமால்

மையினு

மை (=கருமை) + இனம் (=குலம்) + உ = மையினு >>> வைசிணு >>> விச்~ணு = கருநிறங் கொண்ட குலத்தினன்.

வயிணவம்

திருமாலியம்

மயினவம்

மையினு (=திருமால்) + ஆவு (=விரும்பு) + அம் = மயினவம் >>> வயிணவம் = திருமாலை வழிபடும் முறை.

வயித்தியம், வைத்தியம்

நோயை அழித்தல்

வயிற்றியம்

வயா (=நோய்) + இறு (=அழி) + இயம் = வயிற்றியம் >>> வயித்தியம் >>> வைத்தியம் = நோயை அழிக்கும் முறை.

வயிதா, வாய்தா

வாய்ப்பு கொடுத்தல்

வாய்தா

வாய் (=வாய்ப்பு) + தா (=கொடு) = வாய்தா >>> வயிதா = வாய்ப்பு கொடுத்தல்.

வயிந்தவம்

மாயை

மைத்தவம்

மை (=மயக்கம்) + தவம் (=நிலை) = மயித்தவம் >>> வயிந்தவம் = மயக்கம் உண்டாக்கும் நிலை.

வயிந்தவம்

குதிரை

பாய்த்தாவம்

பாய் (=விரை) + தா (=தாவு, வலிமை)  + அம் = பாய்த்தாவம் >>> வயிந்தவம் = தாவி விரையும் வலிய விலங்கு.

வயிரம்

மின்னல்

மயீரம்

மை (=வானம்) + ஈர் (=அறு, பிள) + அம் (=ஒளி) = மயீரம் >>> வயிரம் = வானத்தைப் பிளக்கும் ஒளி.

வயிரம், வைரம்

அரத்தினப் பொருள்

பயீரம்

பை (=வலிமை, மிகு, அழகு) + ஈர் (=அறு, பிள) + அம் (=ஒளி) = பயீரம் >>> வயிரம் >>> வைரம் = அறுக்கும் வலிமை மிக்க அழகிய ஒளிரும் பொருள்.

வயிரம்

வலிமை, வலிமையானது

பயிரம்

பை (=வலிமை) + இரு (=பொருந்து) + அம் = பயிரம் >>> வயிரம் = வலிமை பொருந்தியது. 

வயிரம்

கூர்மை, கூர்மையானது

வயிரம்

வை (=கூர்மை) + இரு (=பொருந்து) + அம் = வயிரம் = கூர்மை பொருந்தியது

வயிரம்

ஊதுகொம்பு

வயிர்

வயிர் (=ஊதுகொம்பு) + அம் = வயிரம்

வயிரம்

சினம்

வயிரம்

வயிர் (=சின) + அம் = வயிரம் = சினம்

வயிரம், வயிரியம்

கம்பளித் துணி

மயிரம், மயிரியம்

மயிர் + இயம் / அம் = மயிரியம் / மயிரம் >>> வயிரியம் / வயிரம் = மயிரால் ஆன துணி.

வயிரம்

தண்டாயுதம்

பயிறம்

பை (=வலிமை) + இறு (=தாக்கு, அழி) + அம் = பயிறம் >>> வயிரம் = தாக்கி அழிக்கும் வலிமையான பொருள்.

வயிருவம், வயிரவம்

அச்சம் தரும் வடிவம்

பயுருவம்

பை (=அஞ்சு) + உருவம் = பயுருவம் >>> வயிருவம் >>> வயிரவம் = அஞ்சத்தக்க உருவம் கொண்டது.

வயிராக்கியம், வைராக்கியம்

வலிமையான எண்ணம்

வயிராக்கியம்

வயிரம் (=வலிமை) + ஆக்கம் (=அறிவு, எண்ணம்) + இயம் = வயிராக்கியம் >>> வைராக்கியம் = வலிமையான எண்ணம்.

வயிராகம், வைராகம்

பற்றின்மை

வயிறகம்

வயா (=ஆசை, விருப்பம்) + இறு (=அழி, நீக்கு) + அகம் (=உள்ளம்) = வயிறகம் >>> வயிராகம் = உள்ளத்தில் ஆசைகளை அழித்த நிலை.

வயிராகம், வைராகம்

பிடிவாதம், ஊக்கம்

வயிராகம்

வயிரம் (=வலிமை) + அகம் (=அறிவு, எண்ணம்) = வயிராகம் = வலிமையான எண்ணம் = ஊக்கம், பிடிவாதம்

வயிரி, வைரி

எதிரி, பகை

வாழிறி

வாழ் + இறு (=அழி, கெடு) + இ = வாழிறி >>> வயிரி >>> வைரி = வாழ்வைக் கெடுப்பது / அழிப்பது.

வயிலத்தி

பாதத்தின் அடி

வாயிலத்தி

வாயில் (=வழி) + அத்து (=பொருந்து) + இ = வாயிலத்தி >>> வயிலத்தி = வழியில் பொருந்துவது = பாதத்தின் அடிப்பகுதி

வயினம்

பறவை

பாயினம்

பாய் (=விரை) + இனம் = பாயினம் >>> வயினம் = விரைந்து செல்லும் இனம்.

வயினன்

கருடன்

பயினன்

பை (=சினம், வலிமை) + இனை (=வருத்து, கொல்) + அன் = பயினன் >>> வயினன் = வருத்திக் கொல்லும் சினமும் வலிமையும் மிக்க பறவை.

வயோதிகம்

வாழ்ந்து கழித்துக் கடந்தநிலை

வாழுந்திகம்

வாழ் + உந்து (=தள்ளு, கழி) + இக (=கட) + அம் = வாழுந்திகம் >>> வயுத்திகம் >>> வயோதிகம் = வாழ்ந்து கழித்துக் கடந்த நிலை.

வருக்கம்,. வர்க்கம்

பெருக்கம், கூட்டம், இனம்

பருக்கம்

பருக்கு (=பெருக்கு) + அம் = பருக்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = பெருக்கம், கூட்டம், இனம்.

வருக்கம், வர்க்கம்

பேய், பிசாசு

மரிக்கம்

மரி (=சாவு, இற) + இகம் (=உடல்) = மரிக்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = இறந்த உடலைக் கொண்டது

வருக்கம், வர்க்கம்

கொல்லும் வடிநீர்

வரிக்கம்

வரி (=வடி) + இகு (=கொல்) + அம் (=நீர்) = வரிக்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = கொல்கின்ற வடிநீர் = எருக்கஞ்சாறு

வர்க்கம்

தீ

பருங்கம்

பருங்கு (=அழி, இல்லாதுசெய்) + அம் (=நீர்) = பருங்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = நீரை இல்லாது செய்வது.  

வர்க்கு

பேரேடு

வரிங்கு

வரி (=எழுது) + இங்கு (=தங்கு, பொருந்து) = வரிங்கு >>> வர்க்கு = எழுத்துக்கள் பொருந்தியது = பேரேடு.

வர்க்கு

கஞ்சி

பருக்கு

பருகு (=குடி) >>> பருக்கு >>> வர்க்கு = குடிக்கும் உணவு.

வர்ச்சம், வர்ச்சனம், வர்ச்சனீயம்

அனுபவித்தலைக் கைவிடுதல்

மறுய்யம்

மற (=கைவிடு) + உய் (=அனுபவி) + அம் = மறுய்யம் >>> வருச்சம் >>> வர்ச்சம் = அனுபவித்தலைக் கைவிடுதல்.

வர்ச்சி

கைவிடு

வர்ச்சி

வர்ச்சம் (=கைவிடல்) >>> வர்ச்சி = கைவிடு

வர்ச்சியம்

விலக்கத்தக்கது

வர்ச்சியம்

வர்ச்சி (=கைவிடு) + இயம் = வர்ச்சியம் = கைவிடத்தக்கது

வர்ணகம்

சந்தனம்

மண்ணாகம்

மண் (=பூசு, சேறு, குழைவு) + ஆகம் (=மார்பு) = மண்ணாகம் >>> வர்ணகம் = மார்பில் பூசப்படும் குழைபொருள்.

வர்ணம்

நிறம்

வண்ணம்

வண்ணம் (=நிறம்) >>> வர்ணம்

வர்ணம்

கூட்டம், இனம்

மண்ணம்

மண (=கூடு) + அம் = மண்ணம் >>> வர்ணம் = கூட்டம்

வர்ணம்

ஒலி

பாணம்

பாணி (=ஒலி) + அம் = பாணம் >>> வண்ணம் >>> வர்ணம்

வர்ணம்

எழுத்து

வண்ணம்

வண்ணம் (=எழுத்து) >>> வர்ணம்

வர்ணம்

குணம்

மாணம்

மாண் (=பண்பு) + அம் = மாணம் >>> வண்ணம் >>> வர்ணம்

வர்ணனை, வருணனை

விரிவான பேச்சு

பண்ணானை

பணி (=பேச்சு) + ஆன் (=விரி) + ஐ = பண்ணானை >>> வண்ணனை >>> வர்ணனை = விரிவான பேச்சு

வர்ணி, வருணி

விரிவாகப் பேசு

வண்ணி

வர்ணனை (=விரிவான பேச்சு) >>> வர்ணி >>> வருணி = விரிவாகப் பேசு

வர்ணியம், வருணியம்

உவமேயம்

மானியம்

மான் (=ஒப்பு) + இயை (=பொருந்து) + அம் = மானியம் >>> வண்ணியம் >>> வர்ணியம் = ஒப்பாகப் பொருந்துவது.

வர்த்தகம்

பொருட்களை விற்பனைக்கு அனுப்புதல்

மாறுந்தகம்

மாறு (=விற்பனை) + உந்து (=அனுப்பு, மிகு) + அகம் (=பொருள்) = மாறுந்தகம் >>> வருத்தகம் >>> வர்த்தகம் = மிகுதியான பொருட்களை விற்பனைக்கு அனுப்புதல்.

வர்த்தமானம்

நிகழ்காலம்

பரித்தவணம்

பரி (=ஓடு, நட) + தவணை (=காலம்) + அம் = பரித்தவணம் >>> வருத்தமானம் >>> வர்த்தமானம் = நடப்புக் காலம்

வர்த்தனம்

ஊன்றுகை, நிலைநிறுத்துகை

மருத்தனம்

மருவு / மரு (=பதி, ஊன்று) + தன்மை + அம் = மருத்தனம் >>> வர்த்தனம் = ஊன்றுகை, நிலைநாட்டுகை.

வர்த்தனம், வர்த்தனை

பெருக்கம், வளர்ச்சி

பருத்தனம்

பரு (=பெருகு, வளர்) + தன்மை + அம் = பருத்தனம் >>> வர்த்தனம் = பெருக்கம், வளர்ச்சி.

வர்த்தனை

ஏற்ற இறக்கமாகப் பாடுதல்

வார்த்தணை

வார் (=நீட்டு, உயர்த்து) + தணி (=குறை) + ஐ = வார்த்தணை >>> வர்த்தனை = குரலை உயர்த்தி நீட்டியும் குறைத்தும் பாடுதல்.

வர்த்தனை

தானமாகக் கொடுக்கப்பட்டது

வார்த்தானை

வார் + தானம் + ஐ = வார்த்தானை >>> வர்த்தனை = தானம் வார்க்கப் பட்டது.

வர்த்தனை

செல்வப் பெருக்கு

பருத்தனை

பரு (=பெருகு) + தனம் (=செல்வம்) + ஐ = பருத்தனை >>> வர்த்தனை = செல்வப் பெருக்கு.

வர்த்தி

பெருகு

வர்த்தி

வர்த்தனம் (=பெருக்கம்) >>> வர்த்தி = பெருக்கு

வர்த்தி

நிலைப்படு, தங்கு

வர்த்தி

வர்த்தனம் (=நிலைநிற்கை) >>> வர்த்தி = நிலையாகு, தங்கு

வர்த்தி

ஆலாபி

வர்த்தி

வர்த்தனை (=ஆலாபனை) >>> வர்த்தி = ஆலாபி

வர்த்தி

தானம் செய்

வர்த்தி

வர்த்தனை (=தானக்கொடை) >>> வர்த்தி = தானம் கொடு

வர்த்துலம், வர்த்துளம்

வட்டம், வட்டமானது, உருண்டையானது

பருத்துளம்

பருதி (=வட்டம், உருண்டை) + உள் + அம் = பருத்துளம் >>> வர்த்துளம் >>> வர்த்துலம் = வட்டமாக / உருண்டையாக இருப்பது = வட்டம், வட்டமானது, உருண்டையானது

வர்மம்

மறைவான பகை, உட்பகை

மாறுமம்

மாறு (=மறை, பகை) + மம் = மாறுமம் >>> மர்மம் >>> வர்மம் = மறைவான பகை, உட்பகை

வர்மன், வர்மி

உட்பகையாளன்

வர்மன், வர்மி

வர்மம் (=உட்பகை) >>> வர்மன், வர்மி = உட்பகையாளன்

வர்மி

பகை, எதிர்

வர்மி

வர்மம் (=உட்பகை) >>> வர்மி = பகை, எதிர்

வர்சம், வருசம்

மழைநீர்

மாரீயம்

மாரி (=மேகம்) + ஈ (=கொடு) + அம் (=நீர்) = மாரீயம் >>> வரிசம் >>> வருசம் >>> வர்சம் = மேகம் கொடுக்கும் நீர்

வர்சம், வருசம்

ஆண்டு

மரூழம்

மரை (=சுற்று) + ஊழி (=காலம்) + அம் = மரூழம் >>> வருசம் >>> வர்சம் = காலச்சுற்று.

வர்சி

பொழி, பெய்

வர்சி

வருசம் (=மழை) >>> வர்சி = மழையைப் போல பொழி

வரகதி

மோட்டம்

பரகதி

பரம் (=மேல்) + கதி (=நிலை) = பரகதி >>> வரகதி = மேலான நிலை = மோட்டம்.

வரகாத்திரம்

யானைத்தலை, பெரும்புள்ளி

பரகாத்திரம்

பரம் (=தலை) + காத்திரம் (=பெருமை) = பரகாத்திரம் >>> வரகாத்திரம் = பெரிய தலை = யானைத்தலை, பெரும்புள்ளி

வரகுணம்

உயர்ந்த குணம்

பரகுணம்

பரம் (=மேல்) + குணம் = பரகுணம் >>> வரகுணம் = மேலான குணம்

வரடம்

முல்லை முகை

மரடம்

மரு (=நறுமணம்) + அடை (=மொட்டு) + அம் (=அழகு, வெண்மை) = மரடம் >>> வரடம் = நறுமணம் கொண்ட வெண்ணிற மொட்டு = முல்லை மொக்கு

வரடம்

அன்னப் பறவை

பறடம்

பற + அடை (=அடைக்கலம்) + அம் (=நீர், வெண்மை) = பறடம் >>> வரடம் = நீரை அடைக்கலமாய்க் கொண்ட வெண்ணிறப் பறவை = அன்னம்

வரடை

தோல்வார்

வாரறை

வார் (=நீளு, தோல்) + அறு + ஐ = வாரறை >>> வரடை = நீளமாக அறுக்கப்பட்ட தோல்.

வரண்டகம்

பெரிய உருண்டை

பரண்டகம்

பரு (=பெரிய) + அண்டம் (=முட்டை) + அகம் (=பொருள்) = பரண்டகம் >>> வரண்டகம் = பெரிய முட்டையான பொருள்

வரண்டகம்

சுவர்

மறட்டகம்

மறு (=தடு) + அடை + அகம் (=இடம்) = மறட்டகம் >>> வரண்டகம் = இடத்தைத் தடுத்து அடைப்பது = சுவர்.

வரண்டகம்

முகப்பரு

பரட்டாகம்

பரு + அடை + ஆகம் (=முகம்) = பரட்டாகம் >>> வரண்டகம் = முகத்தில் அடைத்திருக்கும் பருக்கள்.

வரண்டகம்

யானையின் மேல் இருக்கை

பரண்ணாகம்

பரம் (=மேல்) + அணை (=இருக்கை) + ஆகம் (=உடல்) = பரண்ணாகம் >>> வரண்டகம் = உடலின் மேலான இருக்கை

வரண்டம்

நீண்ட பாதை

வாராற்றம்

வார் (=நீளு) + ஆறு (=வழி) + அம் = வாராற்றம் >>> வரட்டம் >>> வரண்டம் = நீண்ட பாதை.

வரண்டம்

தூண்டில் கயிறு

வாரட்டம்

வார் (=நீளு, கயிறு) + அடை (=புகுத்து, உட்செலுத்து) + அம் (=நீர்) = வாரட்டம் >>> வரண்டம் = நீரினுள் செலுத்தப்படும் நீளமான கயிறு.

வரண்டம்

புற் குவியல்

வரட்டம்

வரி (=குவி) + அடை (=இலை, புல்) + அம் = வரட்டம் >>> வரண்டம் = புற் குவியல்.

வரணம்

தெரிவுசெய்தல், நியமித்தல்

வரணம்

வரை (=வரையறு, தேர்ந்தெடு) + அணம் = வரணம் = தேர்ந்தெடுத்தல், நியமித்தல்.

வரணம்

சூழ்தல், மறைப்பு, தடுப்புச்சுவர்

மறணம்

மறை (=சூழ், தடு) + அணம் = மறணம் >>> வரணம் = சூழ்தல், தடுப்புச்சுவர், மறைப்பு

வரணம்

சட்டை

பரணம்

பரி (=அணி) + அணம் = பரணம் >>> வரணம் = அணியப்படுவது = சட்டை.

வரணம்

ஒட்டகம்

வாராணம்

வார் (=நீளு) + ஆணம் (=உடல்) = வாராணம் >>> வரணம் = நீண்ட உடலைக் கொண்டது.

வரணம்

முலைப்பால்

மாரன்னம்

மார் (=முலை) + அன்னம் (=உணவு) = மாரன்னம் >>> வரணம் = முலையில் இருந்து பெறும் உணவு.