சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
வியட்டி |
தனிமை |
வீயட்டி |
வீ (=இன்மை) + அடை (=சேர், பொருந்து) + இ = வீயட்டி >>> வியட்டி = சேர்க்கை இன்மை. |
வியட்டி |
வெளிப்படை யானது |
மூயட்டி |
மூய் (=துப்பு, வெளிப்படுத்து) + அடை + இ = மூயட்டி >>> மியட்டி >>> வியட்டி = வெளிப்பாடு அடைந்தது. |
வியத்தம் |
வெளிப்படை யானது |
வீயத்தம் |
மூய் (=துப்பு, வெளிப்படுத்து) + அத்து (=பொருந்து) + அம் = மூயத்தம் >>> மியத்தம் >>> வியத்தம் = வெளிப்பாடு பொருந்தியது. |
வியத்தம் |
தனிமையானது |
வீயத்தம் |
வீ (=நீங்கு, தனிப்படு) + அத்து (=பொருந்து) + அம் = வீயத்தம் >>> வியத்தம் = தனிமை பொருந்தியது. |
வியத்தி |
வெளிப்படை, வெளித்தோற்றம், உருவம், விளைவு |
மூயத்தி |
மூய் (=துப்பு, வெளிப்படுத்து) + அத்து (=பொருந்து) + இ = மூயத்தி >>> மியத்தி >>> வியத்தம் = வெளிப்பாடு பொருந்தியது = வெளிப்படை, வெளித்தோற்றம், உருவம், வெளிப்பட்டது (=விளைவு) |
வியத்திகை |
பெருமை, பெரும்புகழ் |
வியாதிகை |
விய (=பாராட்டு, புகழ்) + அதிகம் + ஐ = வியாதிகை >>> வியத்திகை = பெரும்புகழ், பெருமை |
வியதனம் |
கெட்ட குணம் |
பிழைத்தனம் |
பிழை (=தவறு, கேடு) + தன்மை (=குணம்) + அம் = பிழய்த்தனம் >>> வியதனம் = தவறான இயல்பு, கெட்ட குணம் |
வியதாகரம் |
துன்புறும் உயிர்க்கு நன்மை செய்தல் |
வீயாத்தாக்காரம் |
வீ (=அழிவு, துன்பம்) + ஆத்தம் (=உயிர்) + ஆக்கம் (=நன்மை) + ஆர் (=வழங்கு, செய்) + அம் = வீயாத்தாக்காரம் >>> வியதாகரம் = துன்புறும் உயிர்க்கு நன்மை செய்தல். |
வியதிரேகம் |
உடனில்லாநிலை, வேற்றுமை, எதிர்மறை |
வீயத்திரேகம் |
வீ (=மாறு) + அத்து (=பொருந்து) + இரு + ஏகம் (=ஒற்றுமை) = வீயத்திரேகம் >>> வியதிரேகம் = ஒற்றுமையாகப் பொருந்தி இருப்பதற்கு மாறானது = உடனில்லா நிலை, வேறுபாடு, எதிர்மறை. |
வியந்தம் |
பாராட்டு, புகழும் பாடல் |
வியற்றம் |
விய (=பாராட்டு, புகழ்) + அறை (=ஒலி, ஓசை) + அம் = வியற்றம் >>> வியத்தம் >>> வியந்தம் = பாராட்டும் / புகழும் ஓசை வகை |
வியந்தரம் |
பிசாசு |
வீயந்தரம் |
வீ (=உயிர், நீங்கு) + அந்தரம் (=மறைவு) = வீயந்தரம் >>> வியந்தரம் = நீங்கி மறைந்திருக்கும் உயிர் |
வியபிசாரம், வியபசாரம் |
வேறுபட்ட உடல் புணர்ச்சி |
வியவிசாரம் |
வியம் (=உடல்) + அவி (=கெடு, மாறு) + சார் (=பொருந்து, புணர்) + அம் = வியவிசாரம் >>> வியபிசாரம் = மாறுபட்ட உடல்களைப் புணர்தல். |
வியபதிச்டன் |
மிக்க புகழ் உடையவன் |
வியப்பதியன் |
வியப்பு (=பெருமை, புகழ்) + அதி (=மிகுதி) + அன் = வியப்பதியன் >>> வியபதிச்சன் >>> வியபதிச்டன் = மிக்க புகழ் உடையவன் |
வியபதேசம் |
விதிகளை விரித்து ஒக்குமாறு பொருத்துதல் |
வியமத்தேயம் |
வியம் (=விரிவு, வழி, நெறி, விதி) + அத்து (=பொருத்து) + ஏய் (=ஒப்பு) + அம் = வியமத்தேயம் >>> வியபதேசம் = விதிகளை விரித்து ஒப்பப் பொருத்திக் கொள்ளுதல் |
வியபதேசம் |
புகழ்வதைப் போல ஏமாற்றுதல் |
வியமாறேயம் |
விய (=பாராட்டு, புகழ்) + மாறு (=ஒப்பு) + ஏய் (=ஏமாற்று) + அம் = வியமாறேயம் >>> வியபதேசம் = பாராட்டுவதைப் போல ஏமாற்றுதல் |
வியபதேசம் |
நிகழ்வின் காரணத்தைப் பொருத்திக்கூறல் |
வியமத்தேயம் |
வியம் (=வழி, காரணம்) + அத்து (=பொருத்து) + ஏய் (=எதிர்ப்படு, நிகழ்) + அம் (=சொல்) = வியமத்தேயம் >>> வியபதேசம் = நிகழ்வுக்கான காரணத்தைப் பொருந்துமாறு சொல்லுதல். |
வியம் |
சமமற்றது, கரடுமுருடு, வேறுபாடு |
வீயம் |
வீ (=மாறு, வேறுபடு) + அம் = வீயம் >>> வியம் = மாறுபடுவது = சமமற்றது, கரடுமுரடு, வேறுபாடு |
வியம் |
ஒற்றை எண் |
வீயம் |
வீ (=நீங்கு, தனி) + அம் = வீயம் >>> வியம் = தனித்திருப்பது = தனித்து / ஒற்றையாக இருப்பது. |
வியம் |
பறவை |
வியம் |
விய (=பரவு, பற) + அம் = வியம் = பறப்பது |
வியயம் |
பணச் செலவு |
வீயாயம் |
வீ (= நீக்கு, குறை) + ஆயம் (=பணம்) = வீயாயம் >>> வியயம் = பணத்தைக் குறைத்தல் = செலவு செய்தல். |
வியர்த்தம் |
பொருளின்மை, பயனின்மை |
வீயருத்தம் |
வீ (=இன்மை) + அருத்தம் (=கருத்து, பொருள்) = வீயருத்தம் >>> வியர்த்தம் = கருத்து / பொருள் இன்மை, பயனின்மை. |
வியவகாரம் |
தருக்கம், விவாதம் |
வியவாக்காரம் |
வியம் (=வேறுபாடு, விரிவு) + வாக்கு (=பேச்சு) + ஆர் (=கட்டு, வழங்கு) + அம் = வியவாக்காரம் >>> வியவகாரம் = வேறுபட்டு விரிவாகப் பேசுதல். |
வியவகரி |
தருக்கு, விவாதி |
வியவாக்காரி |
வியவாக்காரம் >>> வியவகரி = வேறுபட்டு விரிவாகப் பேசு |
வியவசாயம் |
வேளாண்மை |
வியபசாயம் |
வியம் (=மிகுதி) + பசுமை + ஆயம் (=வருமானம், உற்பத்தி) = வியபசாயம் >>> வியவசாயம் = மிகுதியான பசுமை உற்பத்தி செய்தல். |
வியவசாயம் |
கூரிய / நுட்ப அறிவு |
வையமயாயம் |
வை (=கூர்மை) + அமை (=பொருந்து) + ஆய் (=ஆராய், அறி) + அம் = வையமயாயம் >>> வியவசாயம் = கூர்மை பொருந்திய அறிவு. |
வியவத்தை, வியவச்`தை |
முடிவான நிலை, ஏற்பாடு |
வீயவத்தை |
வீ (=அழி, முடி) + அவத்தை (=நிலை) = வீயவத்தை >>> வியவச்தை = முடிவான நிலை, ஏற்பாடு. |
வியவத்தை, வியவச்`தை |
பதிவுசெய்த ஆவணம் |
வீயம்பத்தை |
வீ (=அழி, முடி) + அம் (=சொல், பேச்சு) + பதி + ஐ = வீயம்பத்தை >>> வியவத்தை >>> வியவச்`தை = பேசி முடித்துப் பதிவுசெய்தல். |
வியவத்தை, வியவச்`தை |
வேறுபாடு |
வியமத்தை |
வியம் (=வேறுபாடு) + அத்து (=பொருந்து) + ஐ = வியமத்தை >>> வியவத்தை >>> வியவச்`தை = வேறுபாடு பொருந்தியது. |
வியளம் |
செய்திப் பேச்சு |
வியளம் |
வியம் (=போக்கு, நடப்பு) + அள (=பேசு) + அம் = வியளம் = போக்கினை / நடப்பினைப் பேசுதல். |
வியன்சமன் |
ஏற்றத் தாழ்வு |
வியன்சமன் |
வியன் (=சமமின்மை) + சமன் = வியன்சமன் = சமமின்மையும் சமமும் உடையது = ஏற்றத் தாழ்வு. |
வியாக்கியானம், வியாக்கியை |
விளக்க உரை |
வியாக்கியணம், மீயாக்கியணம் |
(1). வியம் (=விரிவு) + ஆக்கு + இயம் (=சொல்) + அணம் = வியாக்கியணம் >>> வியாக்கியானம் = சொல்லை விரிவாக்குதல். (2). மீ (=மிகுதி) + ஆக்கம் (=பெருக்கம்) + இயம் (=சொல்) + அணம் = மீயாக்கியணம் >>> வியாக்கியானம் = சொல்லை மிகுதியாகப் பெருக்குதல். |
வியாக்கிரம் |
புலி |
வீயங்குரம் |
வீ (=அழி, கொல்) + அங்கை + உரம் (=வலிமை) = வீயங்குரம் >>> வியாக்கிரம் >>> கையின் வலிமையால் கொல்வது. |
வியாகரணம் |
இலக்கணம் |
வியக்கரணம் |
வியக்கம் (=பெருமை) + அரி (=எழுத்து) + அணை + அம் = வியக்கரணம் >>> வியாகரணம் = எழுத்துக்களின் பெரும் அணையாக விளங்குவது. ஒ.நோ: இலக்கு (=எழுத்து) + அணை + அம் = இலக்கணம் = எழுத்துக்களின் அணையாக விளங்குவது. |
வியாகாதம் |
இடையூறு |
பையகாற்றம் |
பை (=துன்பம்) + அகை (=தடு) + ஆற்று (=செய்) + அம் = பையகாற்றம் >>> பியாகாத்தம் >>> வியாகாதம் = செயலைத் தடுக்கும் துன்பம். |
வியாகாதம் |
பேரழிவு |
வீயகாதம் |
வீ (=அழிவு) + அகாதம் (=மிகுதி) = வீயகாதம் >>> வியாகாதம் = பேரழிவு |
வியாகுலம் |
கவலை, மயக்கம் |
பையாகுலம் |
பை (=துன்பம்) + ஆகுலம் (=கலக்கம்) = பையாகுலம் >>> பியாகுலம் >>> வியாகுலம் = கலங்கித் துன்புறுதல். |
வியாச்சியம் |
வழக்கு, புகார் |
வீயச்சீயம் |
வீ (=மாறு, எதிர்) + அசை (=கட்டு, சொல்) + ஈ (=கொடு, வழங்கு) + அம் = வீயச்சீயம் >>> வியாச்சியம் = எதிராகக் கட்டி வழங்கப்படும் சொல். |
வியாசங்கம் |
கூட்டுதல் |
மீயசாக்கம் |
மீ (=மிகுதி) + அசை (=கட்டு, சேர்) + ஆக்கம் (=செயல்) = மீயசாக்கம் >>> வியாசங்கம் = மிகுதியாகச் சேர்க்கும் செயல். |
வியாசங்கம் |
கலக்கம், மயக்கம் |
பையசக்கம் |
பை (=துன்பம்) + அசக்கு (=அசை, ஆட்டு) + அம் = பையசக்கம் >>> பியாசங்கம் >>> வியாசங்கம் = அசைக்கும் / ஆட்டும் துன்பம். |
வியாசம் |
பொய், போலி, நடிப்பு |
வீயாசம் |
வீ (=இன்மை) + ஆசு (=ஆதாரம், உண்மை) + அம் = வீயாசம் >>> வியாசம் = உண்மை இன்மை = பொய், போலி, நடிப்பு. |
வியாசநிந்தை |
இகழ்வதைப் போலப் புகழ்தல் |
வியாசநிந்தை |
வியாசம் (=போலி) + நிந்தை (=இகழ்ச்சி) = வியாசநிந்தை = போலியாக இகழ்தல். |
வியாசம் |
பகுத்தல், பிரித்தல் |
வீயசம் |
வீ (=மாறு) + அசை (=கட்டு, சேர்) + அம் = வீயசம் >>> வியாசம் = கட்டுவதற்கு / சேர்ப்பதற்கு மாறானது = பிரித்தல், பகுத்தல். |
வியாசம் |
கட்டுரை |
மீயாசம் |
மீ (=மிகுதி) + ஆசு (=எழுது) + அம் (=சொல்) = மீயாசம் >>> வியாசம் = மிகுதியான சொற்களால் எழுதப்பட்டது. |
வியாத்தி, வியாப்தி |
உடன் நிகழ்ச்சி |
வியத்தி |
வியம் (=போக்கு, நிகழ்வு) + அத்து (=பொருந்து, உடனாகு) + இ = வியத்தி >>> வியாத்தி >>> வியாப்தி = உடன் நிகழ்ச்சி. |
வியாத்திரம் |
தொழில், வேலை |
வீயாற்றிரம் |
வீ (=மாறு) + ஆற்றிரு (=ஓய்வெடு) + அம் = வீயாற்றிரம் >>> வியாத்திரம் = ஓய்வெடுப்பதற்கு மாறானது = தொழில் / வேலை செய்தல். |
வியாத்துவம் |
பரவியிருக்கும் தன்மை |
வியத்துவம் |
விய (=பரவு) + துவம் (=தன்மை) = வியத்துவம் >>> வியாத்துவம் = பரவியிருக்கும் தன்மை. |
வியாதம் |
வேறுபடுத்துகை |
வீயத்தம் |
வீ (=மாறு) + அத்து (=பொருத்து) + அம் = வீயத்தம் >>> வியாதம் = பொருத்துவதற்கு மாறானது = வேறுபடுத்துதல். |
வியாதன் |
வேடன் |
வீயாழ்த்தன் |
வீ (=உயிர், அழி, கொல்) + ஆழ்த்து (=மறை) + அன் = வீயாழ்த்தன் >>> வியாதன் = மறைந்திருந்து உயிர்களைக் கொல்பவன். |
வியாதன் |
இழிந்தவன் |
விழாத்தன் |
விழு (=இழி) + ஆத்தம் (=உயிர்) + அன் = விழாத்தன் >>> வியாதன் = இழிவான உயிர். |
வியாதி |
நோய், துன்பம் |
வீயாற்றி |
(3) வீ (=உயிர், கேடு) + ஆற்று (=கொடு) + இ = வீயாற்றி >>> வியாத்தி >>> வியாதி = உயிர்க்குக் கேடு தருவது. |
வியாதுதம் |
இயக்கம் உடைய பொருள் |
வியத்துறம் |
விய (=பரவு, இயங்கு) + அத்தம் (=பொருள்) + உறு (=உடையதாகு) + அம் = வியத்துறம் >>> வியாதுதம் = இயக்கம் உடைய பொருள். |
வியாத்தம், வியாப்தம் |
பரவுதல் பொருந்தியது |
வியாத்தம் |
விய (=பரவு) + அத்து (=பொருந்து, அடை) + அம் = வியாத்தம் >>> வியாப்தம் = பரவுதல் பொருந்தியது. |
வியாத்தி, வியாப்தி |
பரவி இருப்பது |
வியாத்தி |
விய (=பரவு) + அத்து (=பொருந்து, இரு) + இ = வியாத்தி >>> வியாப்தி = பரவி இருப்பது. |
வியாப்பியம் |
பரவுதல் பொருந்தியது |
வியாம்மியம் |
விய (=பரவு) + அமை (=பொருந்து) + இயம் = வியாம்மியம் >>> வியாப்பியம் = பரவுதல் பொருந்தியது. |
வியாபகம் |
பரவியிருக்கும் தன்மை |
வியபாங்கம் |
விய (=பரவு) + பாங்கு (=தன்மை) + அம் = வியபாங்கம் >>> வியாபகம் = பரவியிருக்கும் தன்மை. |
வியாபகன் |
கடவுள் |
வியபாங்கன் |
விய (=பரவு) + பாங்கு (=தன்மை) + அன் = வியபாங்கன் >>> வியாபகன் = பரவியிருக்கும் தன்மையைக் கொண்டவன். |
வியாபரி |
விரிவாகக் கூறு |
வியவாரி |
வியம் (=விரிவு) + வாரி (=சொல்லு) = வியவாரி >>> வியாபரி = விரிவாகக் கூறு.. |
வியாபாதம் |
ஏமாற்று, வஞ்சகம் |
வீயம்பறம் |
வீ (=மாறு) + அம் (=சொல்) + பறை (=கூறு) + அம் = வீயம்பறம் >>> வியாபாதம் = கூறிய சொல்லில் இருந்து மாறுதல். |
வியாபாதனம் |
கொலை |
வீயாப்பறணம் |
வீ (=உயிர்) + ஆப்பு (=உடல்) + அறு (=நீக்கு) + அணம் = வீயாப்பறணம் >>> வியாபாதனம் = உடலில் இருந்து உயிரை நீக்குதல். |
வியாபி |
பரவு |
வியவு |
வியவு (=பரவு) + இ = வியவி >>> வியாபி |
வியாபிருதி |
மறைக்கப்படாத நிலை |
வீயப்புறுதி |
வீ (=இன்மை) + அப்பு (=மூடு, மறை) + உறுதி (=நிலை) = வீயப்புறுதி >>> வியாபிருதி = மறைக்கப்படாத நிலை. |
வியாபினி |
பரவி இருப்பது |
வியவுணி |
விய (=பரவு) + உண்மை (=இருப்பு) + இ = வியவுணி >>> வியாபினி = பரவி இருப்பது. |
வியாமோகம் |
பேராசை |
வியமோகம் |
வியம் (=விரிவு, மிகுதி) + மோகம் (=விருப்பம்) = வியமோகம் >>> வியாமோகம் = பேராசை. |
வியாயாமம் |
உடல் பயிற்சி |
பையாயாப்பம் |
பையா (=வருத்து) + யாப்பு (=உடல்) + அம் = பையாயாப்பம் >>> பியாயாமம் >>> வியாயாமம் = உடலை வருத்திச் செய்தல். |
வியார்த்தி |
பொருள் விளக்கம் |
வியாருத்தி |
விய (=விரி) + அருத்து (=ஊட்டு) + இ = வியாருத்தி >>> வியார்த்தி = விரிவாக ஊட்டப்படுவது. |
வியாவிருத்தி |
தள்ளுபடி, விலக்கு |
வீயாவுறுதி |
வீ (=மாறு) + ஆவு (=விரும்பு) + உறுதி (=கொள்ளுகை) = வீயாவுறுதி >>> வியாவிருத்தி = விரும்பிக் கொள்வதற்கு மாறானது. |
வியாழம் |
பாம்பு |
மையழம் |
மை (=நஞ்சு) + அழி (=கொல்) + அம் = மையழம் >>> மியாழம் >>> வியாழம் = நஞ்சினால் கொல்வது = பாம்பு. |
வியாலம், வியாழம் |
பெரிய கோள் |
வியாலம் |
வியம் (=பெருமை) + ஆலம் (=உலகம், கோள்) = வியாலம் >>> வியாழம் = பெரிய கோள். ஒ.நோ: ஆலம் >>> யாலம் >>> ஞாலம். |
வியாளம் |
பாம்பு |
வீயாலம் |
வீ (=அழி. கொல்) + ஆலம் (=நஞ்சு) = வீயாலம் >>> வியாளம் = நஞ்சினால் கொல்வது = பாம்பு |
வியாளம் |
புலி |
மையலம் |
மை (=உடல், கருமை) + அலை (=வளைவு) + அம் = மையலம் >>> மியாளம் >>> வியாளம் = உடலில் கருநிற வளைவுகளைக் கொண்டது. |
வியாளம் |
கெட்ட குணமுள்ள யானை |
வீயாளம் |
வீ (=கெடு) + யாளி (=யானை) + அம் = வீயாளம் >>> வியாளம் = கெட்ட யானை. |
வியானம், விசானம் |
சுடுகாடு |
பையாணம் |
பை (=உடல், எரி) + ஆணம் (=இடம்) = பையாணம் >>> பியானம் >>> வியானம் = உடலை எரிக்கும் இடம். |
மயானம், மசானம் |
சுடுகாடு |
பய்யாணம் |
(3). பை (=உடல், எரி) + ஆணம் (=இடம்) = பய்யாணம் >>> மயானம் = உடலை எரிக்கும் இடம். |
உற்பத்தி |
பொருட்பெருக்கம், ஆக்கம் |
ஊறுபத்தி |
(2). ஊறு (=பெருகு) + பதம் (=பொருள், செயல்) + இ = ஊறுபத்தி >>> உற்பத்தி = பொருளைப் பெருக்கும் செயல், உருவாக்குதல். |
வியுற்பத்தி |
சொல் ஆக்க முறை |
மிழுற்பத்தி |
மிழ (=பேசு, சொல்) + உற்பத்தி (=ஆக்கம்) = மிழுற்பத்தி >>> வியுற்பத்தி = சொல்லின் ஆக்கம். |
வியுற்பத்தி |
மிகுதியான மொழியறிவு |
மிழுறுபத்தி |
மிழம் (மொழி) + உறு (=மிகுதி) + பதம் (=அறிவு) + இ = மிழுறுபத்தி >> வியுற்பத்தி = மிகுதியான மொழி அறிவு. |
வியூகம் |
தையல் |
வையிங்கம் |
வை (=கூர்மை, ஊசி) + இங்கு (=குத்து, தை) + அம் = வையிங்கம் >>> வியூகம் = ஊசியால் தைத்தல். |
வியூகம் |
போர்ப்படை அமைப்பு |
வீயுகம் |
வீ (=கொல், பகை, பிரி) + உகை (=பதி, அமை) + அம் = வீயுகம் >>> வியூகம் = பகையைக் கொல்ல அமைக்கப்படும் பிரிவு. |
வியூகம் |
திரள், கூட்டம் |
வீயுகம் |
வீ (=மாறு) + உகு (=சிதறு) + அம் = வீயுகம் >>> வியூகம் = சிதறுவதற்கு மாறானது = ஒன்று சேர்வது = கூட்டம் |
வியோகம் |
பிரிவு, நீக்கம் |
வீயோகம் |
வீ (=மாறு) + யோகம் (=சேர்க்கை) = வீயோகம் >>> வியோகம் = சேர்க்கைக்கு மாறானது = பிரிவு, நீக்கம் |
வியோகம் |
உயிர் மரணம் |
வீயோகம் |
வீ (=உயிர்) + யோகம் (=மரணம்) = வீயோகம் >>> வியோகம் = உயிரின் மரணம். |
வியோடம் |
சுக்கு |
பையோடம் |
பை (=பசுமை, எரி) + ஓடு (=நீங்கு) + அம் (=உணவு) = பையோடம் >>> பியோடம் >>> வியோடம் = பசுமை நீங்கிய எரியும் உணவு. |
வியோமம் |
ஆகாயம் |
வியோவம் |
வியம் (=விரிவு) + ஓவம் (=உயரம்) = வியோவம் >>> வியோமம் = உயரத்தில் விரிந்திருப்பது. |
வியோமமஞ்சரம் |
பறக்கும் கொடி |
மீயோவபஞ்சாரம் |
மீ (=மேலிடம்) + ஓவம் (=உயரம்) + பஞ்சு (=துணி) + ஆர் (=கட்டு, தண்டு) + அம் = மீயோவபஞ்சாரம் >>> வியோமமஞ்சரம் = உயரமான தண்டின் மேலிடத்தில் கட்டப்பட்டுள்ள துணி. |
விரகம் |
காதல் பிரிவு |
வீறகம் |
வீறு (=நீக்கம், பிரிவு) + அகம் (=அன்பு, காதல்) = வீறகம் >>> விரகம் = காதல் பிரிவு |
விரகம் |
உலர்த்துகை |
வீறாக்கம் |
வீறு (=நீக்கு) + ஆக்கம் (=நீர், பொருள், செயல்) = வீறாக்கம் >>> விரகம் = பொருளில் உள்ள நீரை நீக்கும் செயல். |
விரகம் |
பொருந்தாக் காதல் |
மிறகம் |
மிறை (=குற்றம்) + அகம் (=அன்பு, காதல்) = மிறகம் >>> விரகம் = குற்றமுடைய காதல் = பொருந்தாக் காதல் |
விரகம் |
அறிவு, திறமை |
விரகு |
விரகு (=அறிவு) + அம் = விரகம் = அறிவு, திறமை |
விரகிணி |
காதலரைப் பிரிந்த பெண் |
விரகினி |
விரகம் (=காதல் பிரிவு) + இனி = விரகினி >>> விரகிணி = காதலரைப் பிரிந்த பெண். |
விரகிணி |
சம்பளம் |
மிறகீனி |
மிறை (=உழை, பாடுபடு) + அகம் (=பொருள்) + ஈனு (=கொடு) + இ = மிறகீனி >>> விரகிணி = உழைப்புக்காக கொடுக்கப்படும் பொருள். |
விரசம் |
தவறான ஆசை |
மிறாசம் |
மிறை (=குற்றம், பழி) + ஆசை (=விருப்பம்) + அம் = மிறாசம் >>> விரசம் = குற்றம் / பழி பொருந்திய விருப்பம் = தவறான ஆசை. |
விரசம் |
வெறுப்பு |
வீறாசம் |
வீறு (=நீக்கம், இன்மை) + ஆசை + அம் = வீறாசம் >>> விரசம் = ஆசை இன்மை = வெறுப்பு. |
விரயம், விரசம் |
பலனின்மை, வீண் |
வீறாயம் |
வீறு (=நீக்கம், இன்மை) + ஆயம் (=நன்மை, பலன்) = வீறாயம் >>> விரயம் >>> விரசம் = பலன் இன்மை = வீண் |
விரசை |
மாட்டுத்தொழுவம் |
வீறாயை |
வீறு (=இடம்) + ஆயம் (=மாட்டுக் கூட்டம்) + ஐ = வீறாயை >>> விரசை = மாட்டுக் கூட்டத்திற்கான இடம். |
விரணம் |
காயம், புண் |
வீறாணம் |
வீறு (=கீறு) + ஆணம் (=உடல்) = வீறாணம் >>> விரணம் = உடலில் உண்டான கீறல் = வெட்டுக் காயம், புண். |
விரணம் |
வீக்கம், கட்டி |
வீறாணம் |
வீறு (=மிகு, வீங்கு, தனிமை) + ஆணம் (=உடல்) = வீறாணம் >>> விரணம் = உடலில் தனியாக உண்டாகும் வீக்கம் = கட்டி. |
விரணம் |
உடல் முறிவு |
முறாணம் |
முறி + ஆணம் (=உடல்) = முறாணம் >>> மிரணம் >>> விரணம் = உடலில் உண்டாகும் முறிவு |
விரணம் |
பகைமை |
வீறணம் |
வீறு (=நீக்கம், இன்மை) + அணை (=சேர், இணங்கு) + அம் = வீறணம் >>> விரணம் = இணக்கம் இன்மை. |
விரத்தம், விரதம் |
பற்று நீக்கம், துறவு, வெறுப்பு |
வீறத்தம் |
வீறு (=நீக்கு) + அத்து (=சேர், பற்று) + அம் = வீறத்தம் >>> விரத்தம் >>> விரதம் = பற்று நீக்கம் = துறவு, வெறுப்பு. |
விரத்தன் |
துறவி |
வீறத்தன் |
வீறத்தம் (=துறவு) + அன் = வீறத்தன் >>> விரத்தன் = துறந்தவன் |
விரத்தி, விரக்தி |
பற்றின்மை, வெறுப்பு. |
வீறத்தி |
வீறு (=இன்மை) + அத்து (=சேர், பற்று) + இ = வீறத்தி >>> விரத்தி >>> விரக்தி = பற்று இன்மை,, வெறுப்பு. |
விரதம் |
நோன்பு, தவம் |
மிறாற்றம் |
மிறை (=துன்பம், நோவு) + ஆற்று (=பொறு) + அம் = மிறாற்றம் >>> விராத்தம் >>> விரதம் = துன்பத்தைப் / நோவைப் பொறுத்தல். |
விரதம் |
சபதம், உறுதிமொழி |
வீறறம் |
வீறு (=வலிமை, உறுதி) + அறை (=சொல், மொழி) + அம் = வீறறம் >>> விரதம் = உறுதிமொழி. |
விரயம் |
பெருஞ்செலவு |
வீறாயம் |
வீறு (=மிகுதி, பொருள், செல்வம்) + ஆய் (=களை, குறை) + அம் = வீறாயம் >>> விரயம் = பொருள் / செல்வம் மிகுதியாகக் குறைதல். |
விரயம் |
பேதி |
வீறாயம் |
வீறு (=மிகுதி, நீங்கு) + ஆய் (=மலம்) + அம் = வீறாயம் >>> விரயம் = மலம் மிகுதியாக நீங்குதல். |
விரளம், விரலம் |
செறிவின்மை, இடைவெளி |
வீறளம் |
வீறு (=நீக்கம், இன்மை) + அள் (=செறிவு) + அம் = வீறளம் >>> விரளம் >>> விரலம் = செறிவின்மை = இடைவெளி, அவகாசம் |
விரளம் |
அருமை, மிகக் குறைவு |
வீறலம் |
வீறு (=மிகுதி) + அல (=குறை) + அம் = வீறலம் >>> விரலம் >>> விரளம் = மிகக் குறைவு = அரிது, அருமை. |
விராகம், விராகு |
பற்றின்மை, துறவு |
வீறகம் |
வீறு (=நீக்கம், இன்மை) + அகம் (=அன்பு, பற்று) = வீறகம் >>> விராகம் = பற்றின்மை. |
விராகன் |
துறவி |
வீறகன் |
வீறு (=நீக்கம், இன்மை) + அகம் (=அன்பு, பற்று) + அன் = வீறகன் >>> விராகன் = பற்று இல்லாதவன். |
விராகன் |
கடவுள் |
வீறாக்கன் |
வீறு (=இடம், உலகம்) + ஆக்கு (=படை) + அன் = வீறாக்கன் >>> விராகன் = உலகைப் படைத்தவன் |
விராட்டு |
கடவுள் |
வீறாற்று, விராற்று |
(1). வீறு (=இடம், உலகம்) + ஆற்று (=செய், நடத்து) = வீறாற்று >>> விராட்டு = உலகைச் செய்து நடத்துபவன். (2) விரை (=உயிர்) + ஆற்று (=பசியைத் தணி) = விராற்று >>> விராட்டு = உயிர்களின் பசியைத் தணிப்பவன் = கடவுள். |
விராட்டு |
பருந்து |
வீறாட்டு |
வீறு (=வலிமை, பெருமை) + ஆடு (=பற) + உ = வீறாட்டு >>> விராட்டு = வலிமை மிக்க பெரிய பறவை. |
விராணி |
யானை |
வீறாணி |
வீறு (=வலிமை, பெருமை) + ஆணம் (=உடல்) + இ = வீறாணி >>> விராணி = பெரிய வலிய உடலைக் கொண்டது. |
விராத்தம் |
வரி வசூல் |
மிறாற்றம் |
மிறை (=வரி) + ஆற்று (=கூட்டு, திரட்டு) + அம் = மிறாற்றம் >>> விராத்தம் = வரி திரட்டுதல். |
விராதம் |
கைவேலை, கூலிவேலை |
மிறாத்தம் |
மிறை (=பாடுபடு, உழை) + அத்தம் (=கை) = மிறாத்தம் >>> விராதம் = கையினால் செய்யும் உழைப்பு. |
விராதனன் |
கொலைகாரன் |
வீறாத்தணன் |
வீறு (=நீக்கு) + ஆத்தம் (=உயிர்) + அணன் = வீறாத்தணன் >>> விராதனன் = உயிரை நீக்குபவன். |
விராதீனன் |
கூலிக்காரன் |
மிறத்தீனன் |
மிறை (=பாடுபடு, உழை) + அத்தம் (=பொருள்) + ஈனு (=கொடு) + அன் = மிறத்தீனன் >>> விராதீனன் = உழைப்புக்காக பொருள் கொடுக்கப்படுபவன் |
விராதீனன் |
வேலையற்றவன் |
மிறற்றினன் |
மிறை (=உழைப்பு, வேலை) + அறை (=இன்மை) + இனம் (=ஆள்) + அன் = மிறற்றினன் >>> விராதீனன் = வேலை இல்லாத ஆள். |
விராமம் |
முடிவு, நிறைவு |
பூரமம் |
பூர் (=நிறை, முடி) + அமை + அம் = பூரமம் >>> பிராமம் >>> விராமம் = நிறைவு / முடிவு அமையப் பெற்றது. |
விராமம் |
மெய்யெழுத்து |
வீறாப்பம் |
வீறு (=கீறு, எழுது) + ஆப்பு (=உடல், மெய்) + அம் = வீறாப்பம் >>> விராமம் = மெய் எழுத்து. |
விராமம் |
ஓய்வு |
மிறாவம் |
மிறை (=உழைப்பு) + அவி (=அழி, இல்லாகு) + அம் = மிறாவம் >>> விராமம் = உழைப்பு இல்லாமை = ஓய்வு. |
விராயம் |
தளவாடம் |
மிறாயம் |
மிறை (=உழைப்பு, வேலை) + ஆயம் (=பொருள், தொகுதி) = மிறாயம் >>> விராயம் = வேலைக்கான பொருட்களின் தொகுதி. |
விராலம் |
பூனை |
மிரளம் |
மிரள் (=மிகுதியாக அஞ்சு) + அம் = மிரளம் >>> விராளம் >>> விராலம் = மிகவும் அஞ்சுவது. |
விராவம் |
பேரொலி, ஆரவாரம் |
வீறாம்பம் |
வீறு (=மிகுதி) + ஆம்பி (=ஒலி) + அம் = வீறாம்பம் >>> விராவம் = மிகுதியான ஒலி. |
விராளி |
பிரிவு |
வீறளி |
வீறு (=இன்மை) + அள் (=செறிவு, நெருக்கம்) + இ = வீறளி >>> விராளி = நெருக்கம் இன்மை = பிரிவு |