சனி, 5 மே, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே !


முன்னுரை:
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த தமிழ்

என்று நமது தமிழின் பழம்பெருமையினைப் போற்றுவர் சான்றோர். ஞால முதல்மொழி, உலக மொழிகளின் தாய் என்றெல்லாம் தேவநேயப் பாவாணர் ஐயா அவர்கள் பல சான்றுகளுடன் தமிழின் முதுமையினை உலகோர்க்கு எடுத்துக் காட்டியுள்ளார். தமிழ்மொழியானது தென்னிந்திய மொழிகளின் தாயாக எப்படி விளங்குகின்றது என்று பல தமிழ் அறிஞர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்திய மொழிகளின் தாயாக நமது செம்மொழியாம் தமிழ்மொழி எவ்வாறு விளங்குகின்றது என்பதைப் பற்றி உலகோர்க்கு எடுத்துக்காட்டுவதே இந்த தொடர்க்கட்டுரையின் நோக்கமாகும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்கத் தமிழ்ப் புலவர்களால் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல தமிழ்ச்சொற்கள் இந்தியாவின் பிற மாநில மக்கள் பேசும் மொழிகளில் புகுந்து எவ்வாறெல்லாம் உருமாறி எந்தெந்த பொருட்களில் தற்போது பயன்படுத்தப் படுகின்றன என்பதை இக் கட்டுரையில் காணப் போகிறோம். இந்தியா முழுவதும் தமிழ்மொழி பரவி இருந்திருக்காவிட்டால் இது சாத்தியம் ஆகாது இல்லையா?. ஆம், உண்மையில், இந்தியா முழுவதும் தமிழர்களின் ஆட்சியே சில காலகட்டங்கள் வரையிலும் பரவியிருந்தது. இதைப்பற்றி 'நான்கு கடவுள் - தொல்தமிழகம்' (1) மற்றும் 'இமயம் வென்ற தமிழன்' (2) போன்ற ஆய்வுக் கட்டுரைகள் மேலும் தெளிவான பார்வையைத் தரும். தொடர்கட்டுரையின் முதல் பகுதியாகிய இதில் தலை, முகம், நெற்றி மற்றும் கண்சார்ந்த உறுப்புக்களுக்கான தமிழ்ப்பெயர்கள் எப்படித் திரிபடைந்து பிற மாநில மொழிகளில் வழங்குகின்றன என்பதைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பிறமாநில மொழிகளில் வழங்கப்படும் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதும்போது சரியான ஒலிப்புடன் உணர்த்தவேண்டி 'ஆறுரூபாய் முறை' (3) என்ற ஒலிப்புமுறை இக்கட்டுரையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தலை, நெற்றி சார்ந்த சிலசொற்கள்:

தலை மற்றும் நெற்றிப்பகுதியைக் குறிக்கும் தலை, சேகரம், சிகரம், மத்தகம் ஆகிய தமிழ்ச்சொற்கள் பிற இந்திய மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்குகின்றன என்பதைக் கீழே காணலாம். தலையைக் குறிக்கும் சில தமிழ்ச்சொற்கள் பிற மொழிகளில் தலையை மட்டுமின்றித் தலையின் முன்பகுதியாகிய முகத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.

தலை >>> தல - மலையாளம், தெலுங்கு, கன்னடம்.
தலை >>> தல (முகம்) - இந்தி, செங்கிருதம்.
சேகரம் (தலை) >>> சேக`ரா (முகம்) - இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
சிகரம் (தலை) >>> சி`ர, சி`ரச்`, சி`ர்ச` - இந்தி, செங்கிருதம், மராத்தி, வங்காளம், மலையாளம்.
சிகரம் (தலை) >>> சிக`ரா (முகம்) - பஞ்சாபி`
சிகரம் (தலை) >>> சி`கல (முகம்) - கு~ச்^ராத்தி

மத்தகம் (நெற்றி) >>> மச்`திச்`க் >>> மச்`தக >>> மாதா
மத்தகம் (நெற்றி) >>> மச்`தக - மலையாளம்
மத்தகம் (நெற்றி) >>> மச்`திச்`க் - இந்தி, வங்காளம், செங்கிருதம்
மத்தகம் (நெற்றி) >>> மாதா - இந்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, செங்கிருதம்.

அல்குல்:

இச்சொல்லானது பெண்களின் நெற்றிப் பகுதியினைக் குறிப்பதற்குப் பரவலாகப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்கு நெற்றி என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்கு நெற்றி என்ற பொருளும் உண்டு என்பது ' அழகின் மறுபெயர் அல்குல் '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் மிக விரிவாக நிறுவப்பட்டுள்ளது.(4). நெற்றியைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து நெற்றி / நெற்றி சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

அல்குலிடம் >>> லிலவட >>> லலாட

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்

லலாட        தெலுங்கு, கன்னடம், வங்காளம், இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, செங்கிருதம்
லிலவட       கு~ச்^ராத்தி

முகம்:

முகம் என்னும் தமிழ்ச்சொல் பன்னெடுங்காலமாக இலக்கியங்களிலும் பேச்சுவழக்கிலும் இருந்து வரும் சொல்லாகும். இத் தமிழ்ச்சொல் இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் எவ்வாறு திரிபுற்று முகத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது என்பதைக் கீழே காணலாம்.

முகம் >>> முக`, முக, முகமு, மூக` >>> மூ
முகம் >>> முகர >>> மோக~ர >>> மோரெ

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்

முக`, முக   மலையாளம், கன்னடம், இந்தி, பஞ்சாபி, மராத்தி, கு~ச்^ராத்தி, செங்கிருதம்.
முகமு           தெலுங்கு
மூக`, முகர       பஞ்சாபி`
மூ, மோக~ர       இந்தி
மோரெ           கன்னடம்

மகர ஈற்றுத் தமிழ்ச்சொற்கள் பல னகர ஈறு பெற்று இலக்கியத்தில் வழங்கப்படுவதை அறிவோம். சான்றாக, மரம் என்பது மரன் என்றும் வழங்கப்படுவதைப் போல, முகம் என்பது முகன் என்றும் பல இலக்கிய இடங்களில் வழங்கப்பெறும். இந்த முகன் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து முகத்தைக் குறிக்கும் பிறமொழிச் சொற்கள் எவ்வாறு தோன்றின என்று பார்க்கலாம்.

முகன் >>> முகா`னா >>> ஆனன

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்

முகா`னா         இந்தி
ஆனன           மலையாளம், கன்னடம், கு~ச்^ராத்தி, வங்காளம், செங்கிருதம்.

கண்:

சங்க இலக்கியங்கள் முதல் இற்றை இலக்கியங்கள் வரையிலும் மிகப் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் இது. இலக்கிய வழக்கில் மட்டுமின்றி இன்றைய பேச்சுவழக்கிலும் கூட பெரும்பான்மை இடம் பிடித்துள்ள உறுப்புச் சொல் இது. தமிழில் பன்னெடுங்கால பயன்பாட்டினைக் கண்ட இச்சொல் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமை / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

கண் >>> கண்ணு >>> கண்டி
கண் >>> கணீனிகா

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

கண்ணு          மலையாளம், கன்னடம், தெலுங்கு
கண்டி           தெலுங்கு
கணீனிகா        வங்காளம்

பாவை:

சங்க இலக்கியங்கள் முதல் இற்றை இலக்கியங்கள் வரை பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் இது. இலக்கிய வழக்கில் மட்டுமின்றி இன்றைய பேச்சுவழக்கிலும் கூட இடம் பிடித்துள்ள சொல்லாகும். கண்ணின் கருவிழியைக் குறிக்கும் இச்சொல் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமை / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

பாவை >>> பாப்பெ >>> பப்போடா >>> பாபனி >>> பாம்பன

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

பாப்பெ           கன்னடம் (கருவிழி)
பப்போடா        இந்தி (கண்ணிமை)
பாபனி           மராத்தி (கண்ணிமை)
பாம்பன          கு~ச்^ராத்தி (கண்ணிமை)

ஆகம்:

பெண்களின் கண்களையும் இமைகளையும் குறிப்பதற்குப் பயன்படும் தமிழ்ச்சொல் இது. சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்கு கண் / கண்ணிமை ஆகிய பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இச்சொல்லுக்குக் கண் / கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு என்பது ' தொடி - ஆகம் - தொடர்பு என்ன?. ' என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. (5). இப் புதிய பொருளை உறுதிசெய்யும் வண்ணம், இந்தியாவின் பிற மாநில மொழிகளில் இச்சொல் எவ்வாறெல்லாம் திரிந்து கண்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

ஆகம் >>> ஆங்க் >>> அங்க்க >>> அக்சி~ >>> சக்சு~

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

ஆங்க்           இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், செங்கிருதம், ஒரியா
அங்க்க          பஞ்சாபி`
அக்சி~           மலையாளம், கன்னடம், செங்கிருதம், வங்காளம், இந்தி 
சக்சு~            மலையாளம், கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.

ஆகம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து தோன்றிய மேற்காணும் சொற்கள் கண்களைக் குறிக்கப் பயன்படுவதைப் போல ஆகம் என்ற சொல்லில் இருந்து தோன்றும் கீழ்க்காணும் சொற்கள் முகம், தலை மற்றும் முன்பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. காரணம், கண்கள் தலையின் முன்பகுதியாகிய முகத்தில் இருப்பதால்.

ஆகம் >>> அகா~ரி >>> அக்~ர

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

அகா~ரி          இந்தி
அக்~ர            இந்தி, கன்னடம், மலையாளம், செங்கிருதம், வங்காளம், கு~ச்^ராத்தி.

கண்ணைக் குறிப்பதான ஆகம் என்ற தமிழ்ச்சொல் வடமொழிக்குச் சென்று அக்சி~ என்று திரிந்தது என்று மேலே கண்டோம். இவ்வாறு திரிந்த அக்சி~ என்ற சொல்லானது மறுபடியும் தமிழுக்கு வரும்போது அக்கு என்று உருமாறி வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அக்கு தொடர்பான சில சொற்களும் பொருட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அக்கு / அக்கம் = கண்
அக்குப் பீளை = கண் பீளை (திருப்புகழ். 573)
அக்கு >>> அக்குசு, அக்கறை = கண்களால் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல்.
(ருத்`ராக்கம் = ருத்`ர + அக்கம் = சிவந்த கண் போன்ற கொட்டை.
குருதி >>> ருத்`ர = சிவப்பு, ஆகம் >>> அக்சி~ >>> அக்கு, அக்கம் = கண்.)

நுதல்:

நுதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் பெரிதும் பரிந்துரைப்பது நெற்றி என்ற பொருளைத்தான். இச்சொல்லானது பல தமிழ் இலக்கியங்களில் நெற்றி என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. இச்சொல் பிற இந்திய மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து நெற்றிப் பகுதியை உணர்த்துவதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

நுதல் >>> நுது`ரு
நுதல் >>> நிதிலம் >>> நித்தில >>> நெத்தி
நுதல் >>> நொச`லு

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

நுது`ரு           தெலுங்கு
நிதிலம்          மலையாளம்
நித்தில, நெத்தி   கன்னடம்
நொச`லு         தெலுங்கு, கன்னடம்

நுதல் என்ற மேற்காணும் தமிழ்ச்சொல்லுக்கு நெற்றி என்ற பொருள் மட்டுமின்றி கண் / கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு. ஆனால் இப்பொருட்கள் தமிழ் அகராதிகளில் குறிப்பிடப்படவில்லை. நுதல் என்னும் சொல்லுக்கு இப்புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி ' நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(6). இப் புதிய பொருளை உறுதிசெய்யும் வண்ணம், இந்தியாவின் பிற மாநில மொழிகளில் இச்சொல் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம். இவற்றில் சில சொற்கள் கண்களை மட்டுமின்றி கண்பார்வையினைக் குறிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.

நுதல் >>> நேத்ர (கண்) >>> த்`ருச்~டி (கண், பார்வை) >>> த^ர்ச~ன் (பார்வை)
நுதல் >>> புத்லி >>> தைலி

சொல் வடிவம்        பேசப்படும் மொழிகள்    
             
நேத்ர                 இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், 
                      தெலுங்கு, செங்கிருதம், பஞ்சாபி`, ஒரியா.
த்`ருச்~டி, த^ர்ச~ன்     மலையாளம், கன்னடம், பஞ்சாபி`, இந்தி, வங்காளம், செங்கிருதம்.
புத்லி, தைலி          இந்தி.

தோள்:

இச்சொல்லானது பெண்களின் கண்கள் மற்றும் விழிகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்கு கண் / விழி ஆகிய பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண் / விழி ஆகிய பொருட்களும் உண்டு என்பது ' தோள் என்றால் என்ன? '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(7). இந்த புதிய பொருளுக்கு உறுதிசேர்க்கும் வண்ணம், இந்தியாவின் பிற மாநில மொழிகளில் இச்சொல் எவ்வாறெல்லாம் திரிந்து கண்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

தோள் >>> டோ`ளா, டோ`ளோ.
தோள் >>> தோ`ர்.

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

டோ`ளா          மராத்தி, ஒரியா.
டோ`ளோ        கு~ச்^ராத்தி
தோ`ர்            இந்தி.

நுசுப்பு:

இச்சொல்லானது பெண்களின் கண் இமைகளைக் குறிப்பதற்குப் பயன்பட்டதாகும். சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் இமை என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்பது ' கதுப்பு - ஓதி - நுசுப்பு '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(8). கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / கண்ணிமை ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

நுசுப்பு >>> நச^`ர >>> நயன
நுசுப்பு >>> போபசும் (தலைகீழ் திரிபு) >>> பாசு`ம் >>> பக்ச~ம், பக்ச்~ம
நுசுப்பு >>> சோப >>> சபர
நுசுப்பு >>> ச்`வப்ன >>> சொப்பன
நுசுப்பு >>> நிசா~னா

சொல் வடிவம்           பேசப்படும் மொழிகள்    

நயன (கண்)              மலையாளம், கன்னடம், செங்கிருதம், இந்தி, 
                         கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`
போபசும் (இமை)         கு~ச்^ராத்தி
பக்ச~ம், பக்ச்~ம (இமை)   செங்கிருதம், வங்காளம்.
சபர (இமை)              பஞ்சாபி`

கண், இமைகளை மட்டுமின்றிக் கண்ணின் காட்சியையும் கண்கள் அமைந்திருக்கும் முகத்தினையும் கூட குறிக்கப் பயன்படுகின்றன.

சொல் வடிவம்         பேசப்படும் மொழிகள்    

நச^`ர (காட்சி)          இந்தி, வங்காளம், பஞ்சாபி`   
ச்`வப்ன (காட்சி)        இந்தி, செங்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, 
                       மராத்தி, வங்காளம், கு~ச்^ராத்தி
சொப்பன (காட்சி)       மலையாளம், கன்னடம்.
நிசா~னா (காட்சி)       இந்தி
பாசு`ம் (முகம்)          கு~ச்^ராத்தி
சோப (முகம்)           வங்காளம்

இறை:

இச்சொல்லானது பெண்களின் கண் இமைகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் இமை என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்பது ' இறை என்றால் என்ன? '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(9). கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் இமைகளைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

இறை >>> றெப்பெ
இறை (இறய்) >>> ரச்~மி

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

றெப்பெ         கன்னடம், தெலுங்கு.
ரச்~மி           வங்காளம்.      

ஐம்பால்:

இத் தமிழ்ச்சொல்லானது பெண்களின் கண் இமைகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்கள் உட்பட ஒருசில தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் இமை என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்பது ' பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும் '. என்ற ஆய்வுக்கட்டுரையில் காணலாம்.(10) கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமைகளைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

ஐம்பால் >>> போல, பீல
ஐம்பால் >>> அம்ப`க
ஐம்பால் >>> பாலக்

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

போல, பீல       மலையாளம்
அம்ப`க           கன்னடம்
பாலக்            பஞ்சாபி`, இந்தி

முலை:

இச்சொல்லானது பெண்களின் கண் மற்றும் கண்இமைகளைக் குறிப்பதற்குப் பரவலாகப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் , கண்ணிமை ஆகிய பொருட்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண், கண்ணிமை என்ற பொருட்களும் உண்டு என்பது ' கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் மிக விரிவாக நிறுவப்பட்டுள்ளது.(11). கண், கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமை / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

முலை >>> விலோசன >>> லோசன
முலை >>> லோமா (தலைகீழ் திரிபு)

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

விலோசன        கன்னடம், இந்தி, கு~ச்^ராத்தி, செங்கிருதம்.
லோசன          தெலுங்கு, செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்
லோமா (இமை)   வங்காளம்

நகில், நகார்:

இத் தமிழ்ச்சொற்களானவை பெண்களின் கண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டவை. சங்க இலக்கியங்கள் உட்பட ஒருசில தமிழ் இலக்கியங்களில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொற்களுக்குக் கண் என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொற்களுக்குக் கண் என்ற பொருளும் உண்டு என்பது ' பானை மீனும் யானை மருப்பும் ' என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாக நிறுவப்பட்டுள்ளது.(12). கண்ணைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொற்கள் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / கண்ணின் காட்சியைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

நகார், நகில் >>> நகா, நகெ >>> நிகா~

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

நகா, நகெ        பஞ்சாபி` (கண்)
நிகா~            இந்தி (கண், காட்சி)

நகில் என்ற தமிழ்ச்சொல் கீழ்க்கண்டவாறு திரிந்து முகத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. காரணம், கண்கள் முகத்தில் இருப்பதால்.

நகில் >>> நக்கல = முகம் - கு~ச்^ராத்தி மொழியில்.

புருவம்:


கண்களின் மேலே எல்லைக்கோடுகளைப் போல இருக்கும் புருவமானது சங்க இலக்கியங்கள் முதல் இன்றுவரையிலும் புழக்கத்தில் இருந்து வருவதான ஒரு தமிழ்ச்சொல்லாகும். தமிழில் பன்னெடுங்கால பயன்பாட்டினைக் கண்ட இச்சொல் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் புருவங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

புருவம் >>> புரிகம்
புருவம் >>> ப^ரவட
புருவம் >>> ப்^ருகுடி >>> ப்^ருலடா >>> ப்^ரூ
புருவம் >>> பு^வய
புருவம் >>> ப^வ்ம் >>> ப^வ்ங், ப^ம்ர

சொல் வடிவம்   பேசப்படும் மொழிகள்    

புரிகம்           மலையாளம்
ப^ரவட          பஞ்சாபி`
ப்^ருகுடி         இந்தி, கு~ச்^ராத்தி  
ப்^ருலடா        ஒரியா.
ப்^ரூ             கு~ச்^ராத்தி, வங்காளம்
பு^வய           மராத்தி
ப^வுங்           இந்தி, கு~ச்^ராத்தி
ப^ம்ர            கு~ச்^ராத்தி

முடிவுரை:

தமிழ்மொழியில் தலை, நெற்றி, முகம், கண், இமை, புருவம் ஆகியவற்றைக் குறிப்பதான பல சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு உருமாறி அப்பொருட்களை மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய பிற பொருட்களையும் குறிக்கின்றன என்பதைப் பற்றி மேலே பல சான்றுகளுடன் கண்டோம். மேலே கூறப்படாத சில காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன..

நாட்டம் (கண்) >>> நோட்ட (காட்சி) - கன்னடம்
நோக்கம் (கண்) >>> நோகா (காட்சி) - இந்தி
விழி >>> மிழி - மலையாளம்
இமை >>> இவெ - கன்னடம்

 ............ தொடரும் ................

பார்வைக்கு:

1. நான்கு கடவுள் - தொல்தமிழகம் - http://thiruththam.blogspot.in/2011/10/3.html
2. இமயம் வென்ற தமிழன் - http://thiruththam.blogspot.in/2017/02/blog-post.html
3. ஆறுரூபாய் முறை - http://thiruththam.blogspot.in/2018/04/blog-post_26.html
4. அழகின் மறுபெயர் அல்குல் - http://thiruththam.blogspot.in/2015/06/blog-post.html
5. தொடி - ஆகம் - தொடர்பு என்ன?. - http://thiruththam.blogspot.in/2015/05/blog-post.html
6. நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் - http://thiruththam.blogspot.in/2015/06/blog-post_24.html
7. தோள் என்றால் என்ன? - http://thiruththam.blogspot.in/2011/03/blog-post.html
8. கதுப்பு - ஓதி - நுசுப்பு - http://thiruththam.blogspot.in/2015/05/blog-post_14.html
9. இறை என்றால் என்ன? - http://thiruththam.blogspot.in/2013/06/blog-post_14.html
10. பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும் - http://thiruththam.blogspot.in/2017/08/blog-post_26.html
11. கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? - http://thiruththam.blogspot.in/2015/07/blog-post.html
12. பானை மீனும் யானை மருப்பும் - http://thiruththam.blogspot.in/2018/05/blog-post.html2 கருத்துகள்:

  1. இன்றுதான் உங்கள் தளத்தினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அரிய பதிவுகளைக் கண்டேன். தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து படிப்பதுடன் உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் உங்கள் நண்பர்களுடனும் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். :))

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.