முன்னுரை:
இந்திய மொழிகளின் தாய் தமிழே - என்ற தொடர்
ஆய்வுக் கட்டுரையின் முதல் ஏழு பகுதிகளில் மனித உடலின் புற உறுப்புகளைப் பற்றியும்
விலங்குகளைப் பற்றியும் தீ, சினம், வெப்பம், ஒளி, செம்மை, மாடு, பால் மற்றும் வேளாண்மை
பற்றியும் விரிவாகக் கண்டோம். இவற்றைக் குறிப்பிடுவதற்குப் பயன்படும் தமிழ்ச்சொற்கள்
பலவும் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து பயன்பாட்டில் உள்ளன
என்று அறிந்து கொண்டோம். அதுமட்டுமின்றி, சங்க இலக்கியங்களில் சக்கரமும் வண்டியும்
எத்தகைய இடங்களைப் பிடித்திருந்தன என்றும் சக்கரங்கள், வண்டிகள் மற்றும் பானைகள் செய்யும்
கலையினைத் தமிழர்கள் பிறரிடமிருந்து கற்கவில்லை என்றும் "சங்க இலக்கியத்தில் வண்டியும்
சக்கரமும்" என்ற ஆய்வுக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டோம். இக்
கூற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சக்கரம், வண்டி, வழி, பயணம் மற்றும் கலங்கள்
தொடர்பான தமிழ்ச்சொற்கள் பலவும் பிற மாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து பயன்படுத்தப்
படுகின்றன என்பதை எட்டாவது பகுதியான இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
வண்டி தொடர்பான சொற்கள்:
வண்டியைக் குறிப்பதற்குத் தமிழில் பாண்டில்,
சகடம், சாகாடு, ஒழுகை, தேர், வையம் போன்ற பல சொற்கள் உண்டு. இத் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளில்
திரிந்து வண்டியைக் குறிக்கும் விதங்களைக் கீழே காணலாம்.
பாண்டில் >>> ப`ண்டி`
>>> வண்டி
சகடம் >>> ச~கட >>> க~டா`,
கடாரா
சாகாடு >>> கா~டி`, கா~டு`ம்
ஒழுகை >>> வொழுகை >>>
வாகி`ன், வாக`ன, வாக`க, ச`ம்வாக`க
ஒழுகை >>> ஓகை >>> ஓக`,
ஓக`ச`, யோக~ >>> யுக்~ய
தேர் >>> தேரு
சொல்வடிவம் பேசப்படும்
மொழிகள்
ப`ண்டி` தெலுங்கு,
கன்னடம்
வண்டி மலையாளம்
ச~கட மலையாளம், இந்தி, மராத்தி, செங்கிருதம்,
கு~ச்^ராத்தி, வங்காளம்,
க~டா` பஞ்சாபி
கடாரா மராத்தி
கா~டி` கன்னடம்,
இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி,
வங்காளம், பஞ்சாபி, ஒரியா
கா~டு`ம் கு~ச்^ராத்தி
வாக`ன மலையாளம்,
தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி,
செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி,
ஒரியா
வாக`க, ச`ம்வாக`க இந்தி
தேரு மலையாளம், கன்னடம்
ஓக`, ஓக`ச`, யோக~ செங்கிருதம்
யுக்~ய, வாகி`ன் செங்கிருதம்
வண்டி என்றாலே மாட்டுவண்டி தான் அனைவருக்கும்
நினைவுக்கு வரும். காளைமாடு பூட்டிய வண்டிகளே மிகப் பழங்காலத்தில் இருந்து இன்றுவரையிலும்
இழுவைத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் குதிரை வண்டிகளின்
தோற்றம் மிகப் பிற்பாடு எழுந்ததே. வண்டியைக் குறிக்கும் சகடு என்னும் தமிழ்ச்சொல் வண்டியை
இழுக்கும் காளைமாட்டினைக் குறிக்கப் பயன்படுவதனை முன்னர் 7 ஆம் பகுதியில் கண்டோம்.
அதாவது,
சகடு >>> ச`க`ரி >>> ச~க்கரி
>>> ச~க்வர - செங்கிருதம். பொருள்: காளைமாடு.
அதைப்போலவே, காளைமாட்டினைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்
பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து காளைகளைப் பூட்டிய வண்டியைக் குறிப்பதற்கும் கீழ்க்காணும்
விதங்களில் பயன்படுகின்றன.
எருது >>> ரத - மலையாளம், தெலுங்கு,
கன்னடம், இந்தி, மராத்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
ஆன் >>> யான - தெலுங்கு, இந்தி,
செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம் >>> ச`ம்யான, கோ~யான - செங்கிருதம்
ஆன் >>> அனச்`, அனுகோ`ட` - செங்கிருதம்
பகடு >>> பகி`யா - இந்தி
காளைமாடுகள் / குதிரைகள் வண்டியை இழுத்துச்செல்லும்
செயலினை ஈர்த்தல் என்ற சொல்லாலும் குறிப்பிடுவது வழக்கம். ஈர்த்துச் செல்லப்படும் வண்டி
என்ற பொருளில் வரும் ஈர்வையம் என்ற தமிழ்ச்சொல்லானது செங்கிருத மொழியில் அடையும் மாற்றம்
கீழே காட்டப்பட்டுள்ளது.
ஈர் + வையம் >>> ஈர்வையம்
>>> ஈர்வை >>> சீ^ர்வி - செங்கிருதம்.
மேலே கண்ட ஈர்வை என்ற சொல்லை இருசக்கர வண்டிகளுக்கான
தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தலாம்.
சக்கரம் தொடர்பான சொற்கள்:
வண்டியைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச்சொற்கள்
பிறமாநில மொழிகளில் அடையும் மாற்றங்களை மேலே கண்டோம். இனி, வண்டியின் ஆழியைக் குறிக்கும்
பல்வேறு தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் அடையும் மாற்றங்களையும் கீழே காணலாம்.
சகடு, சாகாடு, ஆழி, நேமி, திகிரி, கால்,
உருளி, ஆரம் போன்ற சொற்கள் தமிழில் வண்டியின் ஆழியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்
படுகின்றன. இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் திரிந்து பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.
சகடு >>> சகரீ, சக்ர
>>> சரகா
சாகாடு >>> சாகா >>> சாக
>>> சக்கா
உருளி >>> உருண்டை
>>> ராண்டெ
கால் >>> கா~லி
நேமி >>> நபி^ >>> சு`நாப^
திகிரி >>> கி^ரணி
ஆரம் >>> அரின்
சொல்வடிவம் பேசப்படும்
மொழிகள்
சகரீ இந்தி
சக்ர மலையாளம்,
தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி,
கு~ச்^ராத்தி, வங்காளம்,
பஞ்சாபி, ஒரியா.
சரகா இந்தி,
வங்காளம்
சாகா வங்காளம்
சாக இந்தி,
மராத்தி
சக்கா இந்தி
உருண்டை மலையாளம்
ராண்டெ கன்னடம்
கா~லி கன்னடம்
நபி^, சு`நாப^ செங்கிருதம்
கி^ரணி இந்தி
அரின் செங்கிருதம்
வண்டியின் ஆழியைக் குறிக்கும் சகடு என்னும்
தமிழ்ச்சொல்லானது செங்கிருத மொழியில் திரிந்து வண்டியை இழுக்கும் காளையினைக் குறிப்பதைப்
போலவே காளையைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் பிறமொழியில் திரிந்து வண்டியின் ஆழியைக்
குறிக்கவும் கீழ்க்காணுமாறு பயன்படுகிறது.
எருது >>> வ்ருத்ர - செங்கிருதம்.
பகடு >>> பகி`யா >>> பாயா
- இந்தி
சங்கத் தமிழில் மண்டிலம் என்ற சொல்லுண்டு.
இச்சொல்லுக்குப் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டியுள்ளன. அவற்றில் வட்டமாகச்
சுற்றுதல் என்ற பொருளும் உண்டு. நாம் அன்றாடம் கண்ணில் காண்பதான பூமி, கதிரவன், நிலா
ஆகிய மூன்றும் நாள்தோறும் சுற்றிக்கொண்டே இருப்பதால் இம்மூன்றையும் மண்டிலம் என்ற சொல்லால்
குறித்தனர் சங்கப் புலவர். இந்த இயற்கைப் பொருட்களைப் போலவே வட்டமாகச் சுழலும் தன்மையுடையதும்
செயற்கையாகச் செய்யப்பட்டதுமான சக்கரத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படலாயிற்று. இது
எவ்வாறு எனில், எப்படிக் கதிரவன் வானத்தில் பல கதிர்களைப் பரப்பியவாறு வலம்வருகிறதோ
அதைப்போலவே வண்டிச்சக்கரமும் பல கதிர்களைக் கொண்டதாகப் பூமியில் சுற்றிவருகிறது. இந்த
ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டே நேமி, திகிரி, மண்டிலம் ஆகிய சொற்களைக் கொண்டு சக்கரத்தையும்
கதிரவனையும் ஒருசேரக் குறித்தனர் எனலாம். சக்கரத்தையும் குறிப்பதான மண்டிலம் என்ற தமிழ்ச்சொல்லானது
பிறமொழியில் கீழ்க்காணுமாறு திரிந்து சக்கரத்தைக் குறிக்கிறது.
மண்டிலம் >>> மண்ட`ல - செங்கிருதம்
சக்கரத்தின் பல்வேறு உறுப்புக்களைக் குறிப்பதான
சூட்டு, அயில், கதிர், ஆர், ஆரம், குறடு, உருளி, கீழ்மரம், அச்சு, பார் போன்ற சொற்களைப்
பற்றிச் சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும் என்ற ஆய்வுக் கட்டுரையில் கண்டோம்.
இச்சொற்கள் பிறமொழிகளில் திரிந்து சக்கரத்தின் உறுப்புக்களையும் வண்டியினையும் குறிக்கப்
பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.
அச்சு >>> அக்ச~ - மலையாளம், தெலுங்கு,
கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, வங்காளம், கு~ச்^ராத்தி, பஞ்சாபி, ஒரியா.
கதிர் >>> த^ரீ (கு~ச்^ராத்தி)
>>> தூ^ர, தூ^ரீ - பஞ்சாபி
கதிர் >>> க~ர்த >>> க்ருதிகா
- செங்கிருதம்
வழி தொடர்பான சொற்கள்:
வழி என்பது சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும்
புழக்கத்தில் இருந்துவரும் ஒரு சொல்லாகும். இச்சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. வழி
என்பது நடக்கும் பாதையினை மட்டுமின்றி செய்முறையினையும் சிக்கலுக்கான தீர்வினையும்
கூடக் குறிக்கும். பொதுவாக ஒரு இடத்தில் வழி எப்படி உருவாகிறது என்றால் அந்த இடத்தில்
வண்டிகளோ உயிரினங்களோ தொடர்ந்து செல்லச்செல்ல அங்கே வழி உண்டாகிறது. அதுமட்டுமின்றி,
பெரும் தடையாக முன்னால் அடைத்துக்கொண்டு நிற்கும் ஒருபொருள் இரண்டாகப் பிளந்தாலும்
அங்கே முன்னேறிச் செல்ல ஒரு வழி உண்டாகிவிடும். இப்படி உண்டாகிய வழிகள் தான் பின்னாளில்
பெரிதாக மாறித் தெருவாகும். இத் தெரு அல்லது வழியினைக் குறிக்கத் தமிழில் வழி, தெரு,
அதர், அத்தம், இடை, ஆவணம், மறுகு, முடுக்கர், கடம், இயவு, பதம், வாய், சேரி, சுரம்,
கவலை, நெறி, ஒதுக்கு, ஆறு, கதி போன்ற பல சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இத் தமிழ்ச்சொற்கள்
பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து வழி அல்லது தெருவினைக் குறிக்கப் பயன்படும் முறைகளைக்
கீழே காணலாம்.
வழி >>> வழி - மலையாளம்
மறுகு >>> மார்க~ - மலையாளம், தெலுங்கு,
கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
அதர் >>> தா`ரி (தெலுங்கு, கன்னடம்)
>>> தூ`ரி, தரிகா, தௌ`ரா (இந்தி) >>> தரிகோ - கு~ச்^ராத்தி
அதர் >>> அந்தர - கன்னடம், இந்தி
அதர் >>> த்`வார - மலையாளம், தெலுங்கு,
கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
அதர் >>> அத்^வ (கு~ச்^ராத்தி,
செங்கிருதம்) >>> தோ`வா (தெலுங்கு)
அதர் >>> த^ர்தி - மராத்தி
பதம் >>> பத (இந்தி, செங்கிருதம்,
கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா) >>> பந்த (இந்தி, செங்கிருதம், மராத்தி,
கு~ச்^ராத்தி, வங்காளம்) >>> பந்தாவ் (மலையாளம்)
பதம் >>> பாத - மலையாளம், தெலுங்கு,
கு~ச்^ராத்தி
பதம் >>> பத >>> ஆபத
(எதிர்மறை). வழி / தீர்வு என்னும் பொருளுக்கு எதிர்ப்பொருளான தடை / இடையூறு என்னும்
பொருளில் இச்சொல் ஆபத்து, ஆபத்தி என்றும் பல மொழிகளில் வழங்கிவருகிறது.
பதம் >>> பத்த^தி (கன்னடம், செங்கிருதம்,
கு~ச்^ராத்தி, வங்காளம்) >>> பத்த^டி (மலையாளம்)
பதம் >>> பத்யா, பத்`வன், பத`வீ
- செங்கிருதம்
வாய் >>> வாச` >>> மாச
- செங்கிருதம்
வாய் >>> வயுன - செங்கிருதம்
வாய் >>> பாய >>> உபாய
(மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி)
>>> உபச்^மன் - செங்கிருதம்
சேரி >>> சே~ரீ (கு~ச்^ராத்தி)
சுரம் >>> சூ`ரி >>> ச்`ருதி,
ச்~ரோணி, ச`ரணி - செங்கிருதம்
கவலை >>> க~ல்லீ, க~லீ - கன்னடம்,
இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி.
கவலை >>> காலீ >>> ஆலீ
- மராத்தி
கவலை >>> க~மன, க~ம, நிக~ம, நிக~மன
- வங்காளம்.
முடுக்கர் >>> ட`க~ர (இந்தி, கு~ச்^ராத்தி)
>>> ட^ங்க~ (இந்தி) >>> ட`க~ (இந்தி)
கடம் >>> க்ரம - மலையாளம், தெலுங்கு,
கன்னடம்.
கதி >>> க~தி (மலையாளம், செங்கிருதம்,
கு~ச்^ராத்தி) >>> கா`தி`(கன்னடம்)
கதி >>> க~ந்து - செங்கிருதம்.
துன்பங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கும்போது
செல்லும் வழி தெரியாமல் மனம் கலங்கி நிற்போம். இதுமாதிரியான சூழ்நிலையில் என்ன செய்வதென்றே
தெரியாமல் விழிபிதுங்கி நிற்போருக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்
அவர்கள் கீழ்க்காணுமாறு அறிவுரை கூறியுள்ளார்.
" நடப்பதற்குப் பாதை இல்லை என்று கலங்காதே.
நீ நடந்தால்....
அதுவே பாதையாகி விடும். "
அவர் சொன்னதைப் போல நடக்க நடக்கப் பாதை உருவாகும்
என்பதுதான் எக்காலத்திலும் உண்மை. நடத்தல் அல்லது செல்லுதலைக் குறிப்பதற்குத் தமிழில்
செல், நட, மிதி, கட, மடு, அயர், ஓச்சு போன்ற பல சொற்கள் உண்டு. இச்சொற்கள் சற்றே திரிந்து
பிறமாநில மொழிகளில் வழி அல்லது தெருவினைக் குறிக்கப் பயன்படுவதனைக் கீழே காணலாம்.
மிதி >>> பீ`தி` (கன்னடம்)
>>> வீதி (மலையாளம், தெலுங்கு, செங்கிருதம், கு~ச்^ராத்தி) >>> வீதிகா
(இந்தி, செங்கிருதம்)
கட >>> கட`கீ - கு~ச்^ராத்தி
மடு >>> மட^ (கு~ச்^ராத்தி)
>>> வாட- மராத்தி, கு~ச்^ராத்தி
நட >>> நட`தெ - கன்னடம்
அயர் >>> அயன (இந்தி, செங்கிருதம்,
வங்காளம்) >>> அச^னி (செங்கிருதம்)
ஓச்சு (செலுத்து) >>> யோச^னா -
செங்கிருதம்
மனிதர்கள் மட்டுமின்றி, வண்டிகள் தொடர்ந்து
செல்லும்போதும் அங்கே வழி உருவாவதுண்டு. சங்ககாலம் தொட்டு வண்டிகளில் எருதுகளே பூட்டிப்
பயன்படுத்தப் பட்டதால் எருதுகளைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களும் வண்டிகளைக் குறிக்கும்
தமிழ்ச் சொற்களும் பிறமாநில மொழிகளில் திரிந்து வழியைக் குறிப்பிடுவதற்காகக் கீழ்க்காணும்
முறைகளில் பயன்படுகின்றன.
பாண்டில் >>> பண்டன், பேண்ட` -
செங்கிருதம்
பகடு >>> பக~ட`ண்டி` (இந்தி, கு~ச்^ராத்தி)
>>> பக~தி - கு~ச்^ராத்தி
பகடு >>> ப^ங்கி~ - செங்கிருதம்
எருது >>> ரீதி (மலையாளம், தெலுங்கு,
கன்னடம், இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்) >>> ரூதி^ (கன்னடம்)
எருது >>> வ்ருத்ர (செங்கிருதம்)
>>> வர்த்மன் (செங்கிருதம், வங்காளம்), வர்தனெ (கன்னடம்), வர்தனி (செங்கிருதம்)
எருது >>> வ்ருச~ >>>
வ்ரச^தி (செங்கிருதம்) >>> ராச்`தா - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
ஆன் >>> யானி - செங்கிருதம்
ஒழுகை >>> ஓகை >>> யோக~
(செங்கிருதம்) >>> யுக்தி ( மலையாளம், தெலுங்கு, கன்னடம், செங்கிருதம், இந்தி,
கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா ) >>> சு^க்தி, சு^க~தி
- கு~ச்^ராத்தி
சகடு >>> ச`ட`க் - இந்தி
மக்கள் பயணம் செய்வதற்கு வசதியாக தார்ச்சாலையோ
புகைவண்டிச் சாலையோ அமைக்கும்போது வழியில் பெரிய மலைகள் எதிர்ப்பட்டால் அதனைக் குடைந்து
வழி உருவாக்குவதனைப் பார்க்கிறோம். இப்படிக் குடையும் வினையினைக் குயிலுதல், பொளிதல்
ஆகிய சொற்களால் குறிப்பது தமிழ் இலக்கிய வழக்கம். இச்சொற்கள் பிறமொழிகளில் திரிந்து
வழியைக் குறிக்கும் முறையினைக் கீழே காணலாம்.
குயில் >>> கூசா (இந்தி), கூஞ்ச
(கு~ச்^ராத்தி)
பொளி >>> போ`ள - மராத்தி
சங்ககாலத்தில் சாத்தர்கள் எனப்பட்ட வணிகர்கள்
தமது மாட்டுவண்டிகளில் கடலில் விளைந்த உப்பினை ஏற்றிக்கொண்டு சென்று ஊருக்குள் விற்பர்
என்றும் இவர்கள் தமது உப்பு வண்டிகளின் போக்குவரத்திற்காகக் கல்லையும் மணலையும் கொண்டு
பாதைகள் அமைத்திருந்தனர் என்றும் சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும் என்ற ஆய்வுக்
கட்டுரையில் விரிவாகக் கண்டோம். சாத்து வண்டிகள் இயங்கும் பாதை என்பதால் இப்பாதைகள்
சாத்துவரி என்றும் சாத்து என்றும் அழைக்கப்பட்டன. வண்டிப்பாதைகளைக் குறித்துவந்த இத்
தமிழ்ச் சொற்களில் இருந்து பிறமொழிகளில் தெரு / வழியைக் குறிக்கும் சொற்கள் தோன்றிய
விதங்களைக் கீழே காணலாம்.
சாத்துவரி >>> சத்வரீ - செங்கிருதம்
சாத்து >>> சந்து - தெலுங்கு, கன்னடம்,
மலையாளம்
சாத்து >>> சா`த`ன - மலையாளம்,
தெலுங்கு, கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி,
ஒரியா.
பயணம் தொடர்பான சொற்கள்:
சக்கரங்களும் வண்டிகளும் கண்டறியப்படாத காலத்தில்
மக்கள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குக் கால்நடையாகவே சென்று வந்தார்கள். பின்னர்
மாட்டுவண்டிகளிலும் அதன்பின் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்யத் துவங்கினார்கள் என்று
வரலாறு கூறுகிறது. ஆக, பயணம் என்பது ஆதியில் நடைபயணமாகவும் பின்னர் வண்டிப் பயணமாகவும்
மாறியது எனலாம். எவ்வகைப் பயணமாயினும் வழி என்ற ஒன்று இருந்தால்தான் பயணம் நடைபெறும்.
அவ்வகையில், வழியைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து
நடை மற்றும் பயணத்தைக் குறிக்கக் கீழ்க்காணுமாறு பயன்படுகின்றன.
அதர் >>> யாத்ரா (மலையாளம், தெலுங்கு,
கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.)
>>> யாதி (ப்ரயாதி, ச`ம்யாதி - செங்கிருதம்) >>> யதன (பர்யதன) -
மலையாளம், கன்னடம், வங்காளம்.
அதர் >>> அத்^வ (கு~ச்^ராத்தி,
செங்கிருதம்) >>> அத்^வக~, அத்^வக~தி - செங்கிருதம்
அதர் >>> தூ`ரி, தௌ`ரா - இந்தி
வாய் >>> வாச` >>> ப்ரவாச`
- கன்னடம், செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி
கடம் >>> க்ரம (செங்கிருதம்)
>>> க்ரமன (பரிக்ரமன - மலையாளம், செங்கிருதம், வங்காளம்)
கவலை >>> க~மன (மலையாளம், தெலுங்கு,
வங்காளம், கு~ச்^ராத்தி) >>> க~மிக, ப்ரகா~மன் - செங்கிருதம்.
கதி >>> உபகா~தி, சி^கா~தி - செங்கிருதம்
கதி >>> கதம (இந்தி)
>>> க`ந்தன (வங்காளம்) >>> கி`ந்தன - கு~ச்^ராத்தி
இயவு >>> இசவு >>> ச`வாரி
(மலையாளம்) >>> ச`ஃபர் (இந்தி) >>> ச`பர - கு~ச்^ராத்தி, பஞ்சாபி
ஒதுக்கு >>> ஓக்கு
>>> கோ`கு~க`, கோ`கிகெ~, கோ`க~த, கோ`கதன - கன்னடம்
சேரி >>> சார (ச`ஞ்சார - கன்னடம்,
கு~ச்^ராத்தி, மலையாளம், செங்கிருதம்) >>> சரதி (செங்கிருதம்)
>>> சரண (வங்காளம்) >>> ஆசரண (இந்தி, வங்காளம்).
முடுக்கர் >>> ட`க~ர, ட^ங்க~, ட`க~
(இந்தி)
அடுத்து நடை பற்றிய சொற்களைக் காணலாம். நடத்தல்
என்னும் வினையுடன் தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் பலவும் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து
பயணம் மற்றும் வழியினைக் குறிக்கும் விதங்களைப் பற்றிக் கீழே காணலாம்.
செலவு >>> சலதி - செங்கிருதம்
செலவு >>> சால் (இந்தி, மராத்தி,
கு~ச்^ராத்தி), சாலகே~ (மராத்தி), சலன (வங்காளம், மலையாளம், செங்கிருதம்), சல்னா (இந்தி)
திரிகை >>> திரிகெ~ (தெலுங்கு)
>>> திருக~தா (கன்னடம்)
அடி >>> அடன் (செங்கிருதம், கு~ச்^ராத்தி)
>>> பர்யடன் (மராத்தி), தே`சா~டன் (இந்தி) >>> அடதி, பர்யடதி (செங்கிருதம்)
>>> அட்டா^த - கன்னடம்.
நடை >>> நடெ`, நடி`கெ~ (கன்னடம்),
நடக்க (தெலுங்கு), நடத்தம் (மலையாளம்)
பெயர்தல் >>> பைத`ல் - இந்தி.
நடைபயணத்துடன் தொடர்புடைய தமிழ்ச்சொற்களை
மேலே கண்டோம். இனி, வண்டிப் பயணத்துடன் தொடர்புடைய தமிழ்ச் சொற்களைப் பற்றியும் காணலாம்.
வண்டிப் பயணம் என்றாலே காளைமாடுகளே பெரிதும் பயன்பட்டதால், எருதினைக் குறிக்கும் தமிழ்ப்
பெயர்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து பயணத்தைக் குறிக்கப் பயன்படும் விதங்களைக்
கீழே காணலாம்.
எருது >>> வ்ருச~ >>>
வ்ரச^தி, வ்ரச்^ய (செங்கிருதம்) >>> ப்`ரச்^ய, ப்`ரசே^ - வங்காளம்.
ஆன் >>> யான (செங்கிருதம்)
>>> ப்ரயான (மலையாளம், தெலுங்கு, கன்னடம்)
கலங்கள் தொடர்பான சொற்கள்:
முதன்முதலில் உலகில் சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும்
அவற்றைப் பானைசெய்யும் குயவர்கள்தான் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. எனவேதான் சக்கரங்களைப்
பற்றிய இக்கட்டுரையில் பானை அல்லது பானைபோன்ற கலங்களைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச்
சொற்கள் பிற மொழிகளில் எவ்வாறு திரிந்து பானை அல்லது கலங்களைக் குறிப்பதற்காக வழங்கப்படுகின்றன
என்பதும் காட்டப்படுகிறது.
பானை மற்றும் பானை போன்ற கலங்களைக் குறிக்கத்
தமிழில் பல சொற்கள் உண்டு. பானை, கலம், பத்தல்/பத்தர், கடிஞை, குழிசி, தசும்பு, மிடா,
தாழி, சாடி, மண்டை, குடம், புட்டில், வள்ளம், பேழை, வட்டி, கரகம், கரண்டை, சால் போன்ற
பல சொற்கள் தமிழில் உண்டு. இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து பல்வகைப்பட்ட
கலங்களைக் குறிக்கப் பயன்படுமாற்றைக் கீழே காணலாம்.
பத்தர் >>> பாத்ர - மலையாளம், தெலுங்கு,
கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
எப்படி மறுகு >>> மார்க என்றானதோ,
அதர் >>> யாத்ரா என்றானதோ
அதே விதிமுறைப்படி பத்தர் >>> பாத்ர
என்றாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற விதிமுறைகளைப் பற்றித் தனிக்கட்டுரையில்
விரிவாகக் காணலாம்.
பத்தர் >>> ப`ர்தன் - இந்தி, வங்காளம்.
கலம் >>> கலச` - மலையாளம், தெலுங்கு,
கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
கலம் >>> க~ம்லா (இந்தி)
>>> க~ம்சா^ - வங்காளம்
குடம் >>> குடம் (மலையாளம்)
>>> க^டமு, கட`வ (தெலுங்கு) >>> கொட` (கன்னடம்)
குடம் >>> கும்டா >>>
குண்டா` (தெலுங்கு, கன்னடம்) >>> குண்டீ`, குண்டி`கா (செங்கிருதம்), குண்டி`லா
- கு~ச்^ராத்தி
கடிஞை >>> க~டி`கெ`, குடி`கெ (கன்னடம்)
மண்டை >>> பண்ட`, பாண்ட` - மலையாளம்,
தெலுங்கு, கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி,
ஒரியா.
மண்+கலம் = மட்கலம் >>> மட்கா
(இந்தி), மட`கெ (கன்னடம்) >>> மொகெ~ - கன்னடம்
மட்கலம் >>> மர்கரா - செங்கிருதம்
பானை >>> பானபாத்ர - வங்காளம்
பானை >>> பா^ச^ன (மலையாளம், கு~ச்^ராத்தி)
>>> வாச`ன - கு~ச்^ராத்தி
சாடி >>> சட்டி (மலையாளம்)
>>> சரு, ச~ராவ (செங்கிருதம்) >>> சவரிகெ~ - கன்னடம்
பேழை >>> பேய (இந்தி)
>>> ப்யாலா - இந்தி
புட்டில் >>> பட்டீலா - பஞ்சாபி.
புட்டில் >>> பிட்டரக - செங்கிருதம்
கரகம் >>> கரங்க~ (வங்காளம்)
>>> கர்பர (செங்கிருதம்) >>> கரவா - இந்தி
கரகம் >>> காகு~ - தெலுங்கு
கரகம் >>> க^டக - செங்கிருதம்
>>> க^ட (செங்கிருதம், வங்காளம்) >>> க~டோ` (கு~ச்^ராத்தி)
>>> கடோரா - இந்தி
கரண்டை >>> கரண்ட` - கன்னடம்
கலங்களைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப் பெயர்களில்
இருந்து பிறமொழிச் சொற்கள் எவ்வாறு தோன்றின என்று மேலே கண்டோம். இந்தக் கலங்களில் நீர்
முதலானவை ஊற்றி வைக்கப்படுவதால், கலங்களைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களில் இருந்து
நீர்மப் பொருட்களின் பெயர்களும் பிற மொழிகளில் தோன்றியுள்ளன. அதைப்பற்றிக் கீழே காணலாம்.
பானை >>> பானம், பானக, பானி
சால் >>> ச`லம், ச^ல
முடிவுரை:
சங்ககாலத் தமிழர்கள் வண்டி, சக்கரம், வழி,
பயணம் மற்றும் கலங்களைக் குறிக்கப் பயன்படுத்திய தமிழ்ச்சொற்களில் இருந்து சற்றே திரிந்து
பிறமொழிச் சொற்கள் எவ்வாறு தோன்றின என்று மேலே விரிவாகக் கண்டோம். இவற்றையெல்லாம் தொகுத்துப்
பார்க்குமிடத்து, இந்தியத் துணைக் கண்டத்தில் முதன்முதலில் வண்டி, சக்கரம் மற்றும்
கலங்களை உருவாக்கி வாழ்ந்துவந்த பழமையான பண்பாட்டினைக் கொண்டவர்கள் தமிழர்களே என்பது
உறுதியாகிறது.