முன்னுரை:
சங்கப் புலவர்கள் நாவில் பயின்றுவந்து பல காலங்களாகப் பின்பற்றப்பட்டு இன்றளவும் புழக்கத்தில் இருந்துவருகின்ற பல தமிழ்ச்சொற்களுள் ஒன்றுதான் 'கூழை' என்பதாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இற்றைத் தமிழ் அகராதிகள் கூறியிருந்தபோதிலும், சில இலக்கியப் பாடல்களில் எப்பொருளும் பொருந்தாத நிலையே காணப்படுகின்றது. இது இப்பொருளுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் காணலாம்.
கூழை - தற்போதைய அகராதிப்பொருட்கள்:
கூழை என்னும் சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கூழை¹ kūḻai , n. < குழை-. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல் (தொல். பொ. 262). 2. Feathers, plumage; இறகு. (திவா.) 3. Peacock's tail; மயிற்றோகை. (பிங்.) 4. Tail; வால். புன்கூழையங் குறுநரி (கல்லா. 89, 18). 5. Middle, centre; நடு. (திவா.) , n. prob. khulla. 1. That which is short; குட்டையானது. நாய் கூழைவா லாற் குழைக்கின்றதுபோல (திவ். திருவாய். 9, 4, 3). 2. [T. kūḷa, K. kūḻe, Mhr. khuḷa.] Dullness of intellect, stupidity; புத்திக்குறைவு. கூழைமாந்தர்தஞ் செல்கதி (தேவா. 462, 9). 3. A mode of versification. See கூழைத்தொடை. ஈறிலி கூழை (காரிகை, உறுப். 19). 4. Dwarf snake. See கூழைப்பாம்பு. (சங். அக.) , n. < குழை¹-. 1. Mud, mire; சேறு. கூழை பாய்வயல் (தேவா. 473, 8). 2. cf. kuš. Gold; பொன். (அக. நி.), , n. cf. kūla. 1. Rear of an army; படையின் பின்னணி. கூழைதார் கொண்டி யாம் பொருதும் (புறநா. 88, 1). 2. Hindmost row, as of a herd of cows; கடைவரிசை. அவன்றான் . . . பிற்கூழையிலே நிற்குமாய்த்து (ஈடு, 9, 9, ப்ர.). n. Drum; முரசு. (அக. நி.).
கூழை என்னும் சொல்லுக்கு, பெண்களின் தலைமயிர், இறகு, மயில்தோகை, வால், நடு, குட்டையானது, புத்திக்குறைவு, ஒருவகைத்தொடை, ஒருவகைப்பாம்பு, சேறு, பொன், படையின் பின்னணி, கடைசிவரிசை, முரசு என்று 14 விதமான பொருட்களை அகராதிகள் கூறியிருக்கின்றன.
பொருள் பொருந்தா இடங்கள்:
தமிழ் அகராதிகள் மேலே கூறியுள்ள 14 விதமான பொருட்களில் எதுவும் பொருந்தாத சில இலக்கிய இடங்களைக் கீழே காணலாம்.
கூழையும் சந்தனமும்:
பெண்கள் தமது கூழையில் சந்தனக் குழம்பினைப் பூசியதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்
தகைபெற வாரி புலர்வுஇடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140
இப்பாடலில் வரும் ஐம்பால் மற்றும் கூழையில் சந்தனக் குழம்பினைப் பூசியதால் அது உலர உலர கீழே துகள்கள் உதிர்வதைப் பற்றி மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதற்கும் கூழை என்பதற்கும் பெண்களின் தலைமயிர் என்று பொருள்கொண்டால், பெண்கள் தமது தலைமயிரில் சந்தனக் குழம்பினைப் பூசிக் காயவைத்தார்கள் என்று பொருள்வரும். ஆனால், உண்மையில் எந்தவொரு பெண்ணும் தலைமயிரில் சந்தனக் குழம்பினைப் பூசிக்கொள்ளமாட்டார். அவ்வாறு பூசிக்கொள்வது பெண்களின் பழக்கமுமில்லை. இதைப்பற்றி விரிவாக முச்சி என்றால் என்ன? என்ற கட்டுரையிலும் கண்டுள்ளோம். இதிலிருந்து இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதும் கூழை என்பதும் தலைமயிரினைக் குறித்து வரவில்லை என்பதும் கூழை என்ற சொல்லுக்கு அகராதிப் பொருட்கள் நீங்கலாக புதியதோர் பொருள் உள்ளது என்பதும் உறுதியாகிறது.
கூழையும் நெறியும்:
பெண்களின் கூழையில் குறுநெறிகள் தோன்றுவதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
கூழையும் குறுநெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் என .. - அகம். 315
ஒரு பெண்ணின் கூழையில் குறுநெறிகள் தோன்றியதாலும் அவளது முலையின் மென்முகம் செப்புவடிவம் கொண்டதாலும் அப்பெண் ஓர் ஆடவனுக்குப் பெண்துணையாக மாறும் பருவத்தை அடைந்துவிட்டதாக இப்பாடலுக்குப் பொருள் கூறுகின்றனர். இப்பாடலில் வரும் கூழை என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டு அப் பெண்ணின் தலைமயிரில் பல குறுகிய வளைவுகள் அல்லது சுருள்கள் தோன்றியதால் அவள் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள் என்று விளக்கம் கொள்கின்றனர். இவ் விளக்கம் பொருத்தமானதா என்றால் இல்லை எனலாம். காரணம், பெண்களுடைய தலைமயிரில் இயற்கையாகவே பல குறுகிய வளைவுகளோ சுருள்களோ உருவாவதில்லை. அவர்கள் செயற்கையாகச் செய்யும் வினைகளால் மட்டுமே அப்படியான விளைவுகளைத் தமது தலைமயிரில் உருவாக்கிக் கொள்ளமுடியும். இது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். நீக்ரோ போன்ற சில இனங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேண்டுமானால் சுருள்சுருளான தலைமயிர் இருக்கலாம். ஆனால் அதுகூட அவர்களது சிறுவயது முதலே சுருள்சுருளாகத்தான் இருக்கும். திருமண வயதுக்கும் தலைமயிரில் உள்ள சுருள்களுக்கும் ஒரு தொடர்புமில்லை என்பதால் இப்பாடலில் வரும் கூழை என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.
கூழையும் மணியும்:
பெண்களின் கூழையினை ஒளிவீசும் மணியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல்.
நீல மாமணி நிமிர்ந்து இயன்று அன்ன
கோலம் கொண்ட குறு நெறி கூழை - பெருங்.இலாவா.
பெரிய நீலமணி ஒன்று தானே முயன்று அசைவதைப் போல அழகுடையதும் குறுகிய வளைவுகளை உடையதுமான கூழை என்று இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். இப்பாடலில் பெண்களின் கூழையினை நீலமணியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். இப்பாடலில் வரும் கூழை என்பதற்குப் பெண்களின் தலைமயிர் என்று பொருள்கொண்டால், பெண்களின் தலைமயிரானது நீலமணி போல இருந்தது என்று விளக்கம் வரும். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மணியானது உருண்டை வடிவில் ஒளிரும் பண்புடையது. ஆனால், பெண்களின் கூந்தலுக்கு உருண்டை வடிவமோ ஒளிரும் பண்போ கிடையாது. பொருத்தமே இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிடுவது புலவர்களின் வழக்கம் இல்லை என்பதால் இப்பாடலில் வரும் கூழை என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.
கூழை - புதிய பொருள் என்ன?
கூழை என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருள்:
கண்ணிமை .
கூழை - பெயர்க்காரணம்:
பெண்களின் கண்ணிமைகளுக்குக் கூழை என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்று கீழே காணலாம்.
1. குழையும் அதாவது நெகிழும் தன்மை உடையதால் இமைகளுக்குக் கூழை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
குழைதல் ----> கூழை
2. கூழ் போன்ற நறுஞ்சேறு / சாந்தினைப்பூசி அழகுசெய்யப்படுவதால் கூழை என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
கூழ் ------> கூழை
நிறுவுதல்:
கூழை என்பதற்குக் கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனைப் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் கீழே காணலாம்.
கண்ணிமைகளில் சாந்து பூசுதல்:
பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் குளிர்ச்சியும் நறுமணமும் தரவல்ல சந்தனம், தகரம், கத்தூரி முதலான பொருட்களைத் தனியாகவோ பிற சாந்துகளுடன் கலந்தோ பூசுவர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அதைப்போல கூழை ஆகிய இமையின் மேலும் இவற்றைப் பூசிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.
....நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்- கம்ப.அயோ.5/10

இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதும் கூழையினைப் போலவே இமைகளைக் குறிப்பதாகும். பொதுவாக சந்தனக் குழம்பானது உலர உலர துகள் துகளாக உதிர்ந்து விடும் தன்மையது. ஆகவே பெண்கள் ஒருநாளில் இதனைப் பலமுறை பூசுவதுண்டு. தனது தாய் தன்னைத் திட்டிவிடுவாள் என்று பயந்து, சந்தனத்தைக்கூடச் சரியாகப் பூசி முடிக்காமல் தனது மேலாடை சரிந்துவிழாமல் இருக்க அதனைக் கைகளால் தழுவிக்கொண்டு அவசர அவசரமாகக் கொல்லைப்புறத்தில் இருக்கின்ற காட்டுக்குள் ஓடிப்போகும் ஒரு தலைவியைப் பற்றிய பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
......யானும் என் சாந்து உளர் கூழை முடியா
நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன்.. - கலி.115
கண்ணிமைகளும் வரிகளும்:
பெண்களின் கண்ணிமைகளில் பலருக்கு இயற்கையாகவே பல வரிகள் காணப்படும் என்று முன்னர் கண்டுள்ளோம். இவ் வரிகள் உண்டாவதற்குக் காரணம், இவர்களது கண்கள் உருண்டு திரண்டு பெரியதாக இருப்பதே ஆகும். இமைகளின் சுருங்கி விரியும் தன்மையினால் இயற்கையாகவே பல சுருக்கங்கள் அதாவது வரிகள் தோன்றிவிடும். இந்த சுருக்கங்கள் அல்லது வரிகளையே நெறிகள் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவை இயல்பாகவே அளவில் குறுகியவை என்பதால் இவற்றைக் குறுநெறி என்று குறிப்பிடுவர். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
....கோலம் கொண்ட குறுநெறிக் கூழை - பெருங்.இலாவா.
....நெறிபடு கூழை கார் முதிர்பு இருந்த .. - நற்.368
பெண்கள் வளர வளரச் சிறிதாக இருந்த அவரது கண்கள் அகன்று பெரிதாகும்; அதற்கேற்ப அவரது கண்ணிமைகளும் மெலிந்து பெரிதாகும். இதனால் அவரது இமைகளில் பல நெறிகள் அதாவது வரிகள் உருவாகும். இயற்கையாகவே அவரது விழிகள் உருண்டு திரண்டு அழகாகத் தோன்றத் துவங்கும். போதாக்குறைக்கு தமது கண்ணிமைகளின் மேல் பல வண்ணச்சாந்துகளைக் கொண்டு பூசி அழகும் செய்வர். பலவரிகளைக் கொண்டதும் செந்நிறத்தில் மைபூசி குங்குமச்சிமிழ் போலக் குவிந்து தோன்றுவதுமான அழகிய கண்களை உடையதோர் மங்கையைக் கண்டு மனம் மயங்காத காளையர் உண்டோ?. அப்படிப்பட்ட ஒரு மங்கையைப் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறும் செய்தியினைக் காண்போம்.
கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும்
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே. - அகம். 315
பொருள்: என் மகளின் கண்ணிமையில் குறுகிய வரிகள் தோன்றின; அவளது கண்களோ குங்குமச் சிமிழைப் போல உருண்டு திரண்டு விட்டன. (கண்டவர் மயங்கும் கண்ணழகி ஆனதால்) இவளுக்குப் பெண்துணை தேவையென்று பலநாட்களாக எனது கண்பார்வையில் இருக்குமாறு வீட்டுக்குள் செறித்து வைத்திருந்தேன் நேற்றுவரை. இன்று ஒருநாள் எனது அறியாமையினால் வீட்டுக்குள் அவளைச் செறித்துவைக்காமல் போய்விட்டேனே! ஐயகோ! கூரிய வேலையுடைய ஒரு விடலை சொன்ன பொய்யினை உண்மையென்று நம்பி, தான் அணிந்திருந்த கால்சிலம்பினைக் கூடக் கழிக்காமல் வழுதியின் கூடல்நகர் போல வளம்மிக்க தனது ஊரினைக் கடந்து, நீரில்லாததால் புறாக்கள் குடைந்துண்ட நெல்லிக்காய்கள் நூலறுந்து வீழும் துளையுடைய பளிங்குக்காசுகளைப் போல கோடைக்காற்றிலே உதிர்வதான பாலைநில வழியாக அவனுடன் நெடுந்தூரம் சென்ற என் மகள், தேக்கின் அகன்ற இலைகளால் மூடப்பட்ட புதர்போன்ற குடிசையில் இறைச்சி உண்ணும் கானக மனிதர் வாழ்கின்ற சிறுகுடி எனும் ஊரில் தான் இனி வாழ்வாளோ!
பெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும்வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவதுண்டு. இப்புலம்பல் இன்று நேற்றல்ல சங்ககாலத்திலும் இருந்துள்ளது என்பதற்கு இப்பாடல் ஓர் சான்றாகும்.
கண்ணிமைகளும் மணியும்:
பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை ஒளிரும் மணிகளுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று மேனி என்றால் என்ன என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். அதைப்போல பெண்களின் கூழையாகிய இமைகளையும் நீலமணிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல் வரி கீழே:
....நீல மாமணி நிமிர்ந்து இயன்று அன்ன
கோலம் கொண்ட குறு நெறி கூழை... - பெருங்.இலாவா.
உருண்டு திரண்ட விழிகளுடன் நீலநிறத்தில் மைபூசி இருக்கும்போது பெண்களின் கண்கள் பார்ப்பதற்குப் பெரியதோர் நீலமணியினைப் போலவே தோன்றும். அத்துடன், இமைகள் எப்போதும் அசையும் தன்மை உடையவை என்பதால், வெறுமனே நீலமணி என்று கூறாமல் தானே முயன்று அசையும் தன்மை கொண்டதோர் நீலமணி என்று சிறப்பித்துக் கூறுகிறார் புலவர்.
முடிவுரை:
பெண்களைப் பொருத்தமட்டில் கூழை என்பது அவரது கண்ணிமையினையும் குறிக்கும் என்று மேலே கண்டோம். பொதுவாக பெண்களின் கூழையில் அதாவது கண்ணிமைகளில் பல வரிகள் காணப்படும் என்று மேலே கண்டோம். இமைகளில் காணப்படும் வரிகளைப் போல இருப்பதால் ஒழுங்குடன் கூடிய அணிவகுப்பு / வரிசையினைக் குறிக்கவும் கூழை என்ற சொல்லினை பயன்படுத்தலாயினர் எனலாம்.
அதுமட்டுமின்றி, பெண்களின் உருண்டு திரண்ட விழிகளும் மையுண்ட இமைகளும் சேர்ந்து காண்பதற்கு மணிகளைப் போலவும் தோன்றும் என்று மேலே கண்டோம். இந்த மணிகளைப் போலவே உருண்டு திரண்டு கூர்முனை ஏதுமின்றி வழவழப்புடன் கூடிய சிலவகைக் கற்களும் உண்டு. இக்கற்களையே கூழாங்கல் என்று அழைக்கிறோம். கூழாங்கற்களில் பல வண்ணங்களும் உண்டு. காண்பதற்கு வழவழப்பாய்த் தோன்றும் கூழாங்கல் என்ற பெயரின் காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கூழாங்கல் = கூழ் + ஆம் + கல் = வழவழப்பினை / மழுக்கத்தினை உடைய சிறுகல்.
வழவழப்பினை / மழுக்கத்தினைக் குறித்து வந்த கூழ் என்ற சொல்லானது நாளடைவில் வெட்டுண்டு மழுங்கிய கை, வால், கொம்பு போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.
கூழைக்கை = குறைக்கப்பட்டு மழுங்கிய கை
கூழைக்கொம்பன் = மழுங்கிய கொம்புள்ள மாடு
கூழைநரி = வால் குட்டையான நரி.
வெட்டுண்டு மழுங்கிய கை, வால், கொம்பு போன்றவை குறையுடையவை / குட்டையானவை என்பதால், கூழை என்ற சொல்லானது நாளடைவில் குறைபாடுடையதையும் குட்டையானதையும் குறிக்கப் பயன்படலாயிற்று. கூழை என்னும் சொல்லின் பொருள் விரிவாக்கப் படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) கூழை = கண்ணிமை சங்கப் புலவர்கள் நாவில் பயின்றுவந்து பல காலங்களாகப் பின்பற்றப்பட்டு இன்றளவும் புழக்கத்தில் இருந்துவருகின்ற பல தமிழ்ச்சொற்களுள் ஒன்றுதான் 'கூழை' என்பதாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இற்றைத் தமிழ் அகராதிகள் கூறியிருந்தபோதிலும், சில இலக்கியப் பாடல்களில் எப்பொருளும் பொருந்தாத நிலையே காணப்படுகின்றது. இது இப்பொருளுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் காணலாம்.

===> திரட்சி + வழவழப்பு
( மணி, கூழாங்கல்... )
===> மழுக்கம்
( மழுங்கிய கை, வால், கொம்பு....)
===> குறைபாடு, குட்டை
2) கூழை = கண்ணிமை
===> வரிகள்
===> வரிசை