முன்னுரை:
சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரும்
இயற்கையை உற்றுநோக்கி அவர்தம் காலத்தில் வாழ்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றிய
பல செய்திகளை இலக்கியப் பாடல்களின் வழியாகப் பதிவுசெய்தனர் என்பதை முன்னர் பல கட்டுரைகளின்
வழியாகக் கண்டோம். சங்கத் தமிழ்ப் புலவர்கள் எத்தனையோ பறவைகளைப் பற்றியும் இலக்கியங்களில்
கூறியிருக்கும் நிலையில் ஒருபாடலில் கூட வண்ணத்துப் பூச்சியைப் பற்றிக் கூறாதது பெரும்
வியப்பைத் தருவதாக இருக்கிறது.
இன்னதென்று வரையறுக்க முடியாத பல வண்ணக் கலவைகளில்
அமைந்த சிறகுகளை ஓசையில்லாமல் அடித்துக்கொண்டு அழகாகப் பறந்து திரிந்து பூக்களில் இருந்து
தேன் உண்ணும் இந்த பட்டாம்பூச்சிகளைப் பற்றிச் சங்க இலக்கியம் பேசவில்லை என்னும் நிலையில்
இந்தியாவில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு இருப்பது
தெரிய வந்துள்ளது. இவ் இனங்கள் அனைத்திற்கும் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றியும்
பட்டாம்பூச்சிகளுக்கும் இளம்பெண்களுக்கும் இருக்கும் தொடர்பினைப் பற்றியும் இக்கட்டுரையில்
விளக்கமாகக் காணலாம்.
பட்டாம்பூச்சியும்
இளம்பெண்களும்:
பட்டாம்பூச்சிகளுக்கும்
இளம்பெண்களுக்கும் என்ன ஒற்றுமை? என்று யாரேனும் கேள்வி கேட்டால் இருவருமே அழகானவர்கள்
என்பதுதான் ஒரே விடையாக இருக்கும். ஆனால் இதைத் தாண்டியும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
சங்ககாலத்தில்
பெண்கள் தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மை பூசியும் புள்ளிகள், கோடுகள் போன்றவற்றை
வரைந்தும் அழகுசெய்தனர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இமைகளில் மட்டுமின்றி
புருவங்களின் மேல்பகுதியாகிய அல்குலின் மீதும் இவ்வாறு பல வண்ணங்களில் பூக்களைப் போல
வரைந்து அழகுசெய்தனர் என்று கண்டோம். இப்படிப் பல வண்ணக் கலவைகளால் பூசி அழகு செய்யப்பட்ட
இமைகளை இமைத்து இமைத்து அவர்கள் பார்க்கும்போது பூக்களின்மேல் அமர்ந்தவாறு வண்ணத்துப்
பூச்சிகள் படபடவென சிறகடித்துப் பறப்பதைப் போலத் தானே தோன்றும். இந்த ஒப்புமையை அடிப்படையாகக்
கொண்டு பட்டாம்பூச்சிகளுக்குப் புதிய பெயர் வைக்கலாம்.
பட்டாம்பூச்சிகளின்
புதுப்பெயர்கள்:
பெண்கள்
தமது இமைகள் மற்றும் புருவ மேல்பகுதிகளில் வரைந்து கொள்ளும் வண்ணப் புள்ளிகளைத் தித்தி
என்றும் திதலை என்றும் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் கூறியுள்ளன. இப் பெயர்களை அடிப்படையாகக்
கொண்டு பட்டாம்பூச்சிகளுக்குப் புதிய பெயர்களைக் கீழ்க்கண்டவாறு படைக்கலாம்.
தித்தி
>>> தித்தினி
திதலை
>>> திதலி
பட்டாம்பூச்சி,
வண்ணத்துப்பூச்சி போன்ற நீளமான பெயர்களுக்குப் பதிலாக, திதலி, தித்தினி ஆகிய பெயர்களையும்
இனி பயன்படுத்தலாம். இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளிலும் பட்டாம்பூச்சிகளைத் திதலீ என்று
அழைப்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.
இந்தியமொழிகளில்
பட்டாம்பூச்சியின் பெயர்கள்:
இந்தியாவில்
பேசப்படும் பல்வேறு மொழிகளில் பட்டாம்பூச்சிகளுக்கான பெயர்கள் என்னென்ன என்று கீழே
காணலாம்.
மலையாளம்
– சித்ரசலபம், பூம்பட்ட, பூம்பாலா, சபலவியக்தி
தெலுங்கு
– ஆகுசிலகா, சீதாகோகசிலகா, சிலகா
கன்னடம்
– சிட்டெ
இந்தி
– திதலீ
மராத்தி
– பூலபாக்கரூ
குசராத்தி
– பூதும், பறவானோ, பதங்கியும்
வங்காளம்
– பிரசாபதி
பஞ்சாபி
– திதலீ
ஒடியா
- பிரசாபதி
சமற்கிருதம்
– சித்ரபதங்கா
பட்டாம்பூச்சி
வகைகளும் பெயர்சூட்டலும்:
பட்டாம்பூச்சிகளுக்குத்
தமிழில் திதலி என்றும் தித்தினி என்றும் பொதுப்பெயர் சூட்டலாம் என்று மேலே கண்டோம்.
இனி, திதலிகளின் 300 க்கும் மேற்பட்ட வகைகளுக்கும் தனித்தனியே எவ்வாறு தமிழ்ப்பெயர்களைச்
சூட்டலாம் என்று இங்கே காணலாம்.
திதலிகளின்
உடலமைப்பினைப் பற்றிக் கூறுமிடத்து, அதன் சிறகுகளில்தான் மிக அதிகமான வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பலவகையான வண்ணங்கள், வேலைப்பாடுகள் மற்றும் சிறப்புக் கூறுகளைக் காணமுடிகிறது. இவைதவிர,
சிலவகைத் திதலிகளின் உடல் நிறமும் அவற்றின் சிறப்புக் கூறாக அமைந்து விடுகிறது.
திதலி
இனங்களுக்குப் பெயர் சூட்டும்போது மேற்கண்ட அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
திதலிகளின் பெயர்ப் பட்டியலில் பயன்படுத்தப் பட்டுள்ள சுருக்கச் சொற்களுக்கான விளக்கங்களைக்
கீழே காணலாம்.
சுருக்கப்
பெயர் விளக்கங்கள்:
கருஞ்சி
/ கார்சி – கருநிறச் சிறகினை உடையது
பழுசி
– பழுப்புநிறச் சிறகினை உடையது
வெண்சி
/ பால்சி – வெண்நிறச் சிறகினை உடையது
பைஞ்சி
– பச்சைநிறச் சிறகினை உடையது
நீல்சி
– நீலநிறச் சிறகினை உடையது
தேன்சி
– தேன்நிறச் சிறகினை உடையது
கபிசி
– கபிலநிறச் சிறகினை உடையது
செஞ்சி
– செந்நிறச் சிறகினை உடையது
மஞ்சி
– மஞ்சள்நிறச் சிறகினை உடையது
ஒண்சி
/ ஒளிசி – செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறச் சிறகினை உடையது
குருசி
– பல வண்ணக் கலப்புடைய சிறகினைக் கொண்டது
கோசி
– இலைக்கோசு போன்ற சிறகினைக் கொண்டது.
வன்சி
- அடர்ந்தநிறச் சிறகினை உடையது
மென்சி
- வெளுத்தநிறச் சிறகினை உடையது
கண்சி
– கண்போன்ற அமைப்புக்களைக் கொண்ட சிறகினை உடையது
கூர்ச்சி
– சிறகின் பின்புறத்தில் கூரிய அமைப்புக்களைக் கொண்டது
பெருஞ்சி
/ இருஞ்சி – பெரிய சிறகினைக் கொண்டது
குறுஞ்சி
– சிறிய சிறகினைக் கொண்டது
அஞ்சி
– அழகிய சிறகினைக் கொண்டது
வரிச்சி
– பலவரிகளைக் கொண்ட சிறகினைக் கொண்டது
புகர்சி
– பல புள்ளிகளைக் கொண்ட சிறகினை உடையது
அறுசி
– அறுந்ததைப் போன்ற சிறகினைக் கொண்டது
புன்சி
– அழகற்ற சிறகினைக் கொண்டது
வரைசி
– வரையப்பட்டதைப் போன்ற சிறகினைக் கொண்டது
சூர்சி
– பேய்போல அச்சம் தரும் சிறகினைக் கொண்டது
மழுசி
/ வாள்சி – மழு/வாள் போன்ற அமைப்புடைய சிறகினைக் கொண்டது
திதலிகளின்
பெயர்ப் பட்டியல்:
வ.எண்
|
ஆங்கிலப் பெயர்
|
தமிழ்ப்பெயர்
|
1
|
common
rose
|
செவ்வுடல் கருஞ்சி
|
2
|
crimson
rose
|
சேயுடல் கருஞ்சி
|
3
|
malabar
rose
|
செம்மேனி கருஞ்சி
|
4
|
common
bluebottle
|
இருவெண் பழுசி
|
5
|
common
jay
|
பால்பொறி பழுசி
|
6
|
tailed
jay
|
பைம்பொறி கபிசி
|
7
|
spot
swordtail
|
வெள்வரிக் கூர்வாலி
|
8
|
fivebar
swordtail
|
பைவரிக் கூர்வாலி
|
9
|
common
mime
|
சிதர்வரி கருஞ்சி
|
10
|
lime
|
உடுச்சிறை
|
11
|
malabar
banded swallowtail
|
வெண்பொறி மழுவாலி
|
12
|
malabar
raven
|
வெள்வரை கபிசி
|
13
|
red
helen
|
செம்பொறி மழுவாலி
|
14
|
paris
peacock
|
செங்கண் மழுவாலி
|
15
|
blue
mormon
|
கரும்புகர் கருஞ்சி
|
16
|
malabar
banded peacock
|
தோகை மழுவாலி
|
17
|
common
mormon
|
சுறவாய் கருஞ்சி
|
18
|
common
banded peacock
|
வெண்படு பைஞ்சி
|
19
|
common
jezebel
|
செவ்வரை ஒண்சி
|
20
|
common
emigrant
|
பழுக்கறை மஞ்சி
|
21
|
mottled
emigrant
|
இலைவரி பைஞ்சி
|
22
|
small
grass yellow
|
பைவரி மஞ்சி
|
23
|
spotless
grass yellow
|
ஒள்வரி பைஞ்சி
|
24
|
onespot
grass yellow
|
பழுப்புகர் மஞ்சி
|
25
|
common
grass yellow
|
பசும்புல் மஞ்சி
|
26
|
three
spot grass yellow
|
பல்புகர் மஞ்சி
|
27
|
nilgiri
clouded yellow
|
ஒருகறை பைஞ்சி
|
28
|
psyche
|
பாசிறை வெண்சி
|
29
|
painted
saw tooth
|
செவ்வரை குருசி
|
30
|
indian
cabbage white
|
பாசிலை கோசி
|
31
|
common
gull
|
பைவரி கருஞ்சி
|
32
|
lesser
gull
|
வெள்ளெழில் கருஞ்சி
|
33
|
pioneer
/ caper white
|
ஒளிவரி வெண்சி
|
34
|
plain
puffin
|
சருகன் வெண்சி
|
35
|
spot puffin
|
குருகன் வெண்சி
|
36
|
chocolate
albatross
|
பழுவரை கபிசி
|
37
|
striped
albatross
|
பழுவரி வெண்சி
|
38
|
common
albatross
|
தேன்விரை பால்சி
|
39
|
lesser
albatross
|
பால்படு பைஞ்சி
|
40
|
small
salmon arab
|
பழுவரை மஞ்சி
|
41
|
small
orange tip
|
ஒளிமுனை வெண்சி
|
42
|
crimson
tip
|
செம்முனை வெண்சி
|
43
|
plain
orange tip
|
எல்முனை வெண்சி
|
44
|
large
salmon arab
|
பழுசிதர் மஞ்சி
|
45
|
white
orange tip
|
மஞ்சள் வெண்சி
|
46
|
yellow
orange tip
|
ஒளிமுனை பைஞ்சி
|
47
|
common
wanderer
|
வெண்வரி பழுவரை
|
48
|
dark
wanderer
|
வெண்வரி கார்வரை
|
49
|
great
orange tip
|
ஒளிமுனை பெருஞ்சி
|
50
|
common
five ring
|
ஐங்கண் அஞ்சி
|
51
|
southern
duffer
|
இருங்கண் அஞ்சி
|
52
|
travancore
evening brown
|
அங்கண் பழுசி
|
53
|
common
evening brown
|
குறுங்கண் பழுசி
|
54
|
palm
king
|
உறுகண் பழுசி
|
55
|
great
evening brown
|
புள்ளி பழுசி
|
56
|
dark
evening brown
|
அறைவாய் பழுசி
|
57
|
tailed
palm fly
|
அரவாய் பழுசி
|
58
|
bamboo
tree brown
|
பரல்கண் பழுசி
|
59
|
tamil
tree brown
|
சிதர்கண் பழுசி
|
60
|
common
tree brown
|
மலிகண் பழுசி
|
61
|
common
bush brown
|
கருங்கண் பழுசி
|
62
|
whitebar
bush brown
|
வெண்தார் கண்சி
|
63
|
dark
brand bush brown
|
வெள்வரி கண்சி
|
64
|
tamil
bush brown
|
தூவரி கண்சி
|
65
|
long
brand bush brown
|
மீவெளிர் பழுசி
|
66
|
red
disc bush brown
|
அனல்கண் பழுசி
|
67
|
glad
eye bush brown
|
நகுகண் பழுசி
|
68
|
red
eye bush brown
|
செம்பியல் பழுசி
|
69
|
nigger
|
பெருந்தார் கண்சி
|
70
|
jewel
four ring
|
ஆந்தைக் கண்சி
|
71
|
tamil
cats eye
|
வெருகுக் கண்சி
|
72
|
common
four ring
|
குடிஞைக் கண்சி
|
73
|
common
three ring
|
முக்கண் மென்சி
|
74
|
white
four ring
|
நால்கண் மென்சி
|
75
|
striated
five ring
|
ஐங்கண் வரிச்சி
|
76
|
baby
five ring
|
ஐங்கண் மென்சி
|
77
|
nilgiri
four ring
|
நால்கண் வரிச்சி
|
78
|
anamalous
nawab
|
பன்னிற கூர்ச்சி
|
79
|
palni
four ring
|
நால்கண் பழுசி
|
80
|
common
nawab
|
ஒண்ணிற கூர்ச்சி
|
81
|
blue
nawab
|
நீல்நிற கூர்ச்சி
|
82
|
black
rajah
|
அரசக் கருஞ்சி
|
83
|
cruiser
|
மஞ்சிடை பழுசி
|
84
|
tawny
rajah
|
அரசக் குருசி
|
85
|
tamil
lacewing
|
அரவாய் புகர்சி
|
86
|
tamil
yeoman
|
சிற்றலை ஒளிசி
|
87
|
tawny
coster
|
கரும்புகர் குருசி
|
88
|
black
prince
|
இளவல் கருஞ்சி
|
89
|
small
leopard
|
வேங்கை குறுஞ்சி
|
90
|
rustic
|
துருமுனை பழுசி
|
91
|
common
leopard
|
வேங்கை பெருஞ்சி
|
92
|
nilgiri
frittilary
|
வேங்கை குருசி
|
93
|
palni
frittilary
|
வேங்கை மென்சி
|
94
|
painted
courtesan
|
வெள்வரி கருஞ்சி
|
95
|
neptis
clinia
|
வெள்ளிடை பழுசி
|
96
|
common
sailer
|
வெண்புகர் பழுசி
|
97
|
chestnut
streaked sailer
|
வெள்விதிர் பழுசி
|
98
|
yellow
jack sailer
|
பழுவிடை மஞ்சி
|
99
|
southern
short banded sailer
|
வெண்சிதர் பழுசி
|
100
|
sullied
sailer
|
வெண்சிதர் கருஞ்சி
|
101
|
common
lascar
|
மஞ்சிடை கருஞ்சி
|
102
|
extra
lascar
|
மஞ்சிடை கார்சி
|
103
|
colour
sergeant
|
செம்முனை கருஞ்சி
|
104
|
southern
staff sergeant
|
செம்புகர் கருஞ்சி
|
105
|
commander
|
வெள்ளிடை செஞ்சி
|
106
|
southern
black vein sergeant
|
வெள்வரை கருஞ்சி
|
107
|
grey
count
|
வெண்ணரை பழுசி
|
108
|
guady
baron
|
பன்னிற பைஞ்சி
|
109
|
common
sergeant
|
மூவரி பழுசி
|
110
|
baronet
|
கரும்புகர் ஒளிசி
|
111
|
clipper
|
கார்வரை மஞ்சி
|
112
|
blue
baron
|
நீல்நரை கருஞ்சி
|
113
|
common
baron
|
மீவெண் பழுசி
|
114
|
redspot
duke
|
செம்புகர் பைஞ்சி
|
115
|
joker
|
மூவெண் பழுசி
|
116
|
angled
castor
|
செக்கர் அஞ்சி
|
117
|
common
map
|
சிதர்படு வெண்சி
|
118
|
yellow
pansy
|
நீல்கண் மஞ்சி
|
119
|
lemon
pansy
|
செங்கண் கருஞ்சி
|
120
|
common
beak
|
மஞ்செறி புன்சி
|
121
|
common
castor
|
அறல்படு பழுசி
|
122
|
club
beak
|
அறுவரி கருஞ்சி
|
123
|
blue
pansy
|
அறுகண் வன்சி
|
124
|
peacock
pansy
|
தோகை நீல்சி
|
125
|
grey
pansy
|
சாம்பர் கண்சி
|
126
|
painted
lady
|
பல்பொறி அஞ்சி
|
127
|
chocolate
pansy
|
பழுப்புகர் கபிசி
|
128
|
indian
red admiral
|
செவ்வரை கருஞ்சி
|
129
|
blue
admiral
|
வெள்வரை அறுசி
|
130
|
great
egg fly
|
வெள்வரை பெருஞ்சி
|
131
|
danaid
egg fly
|
கருமுனை ஒண்சி
|
132
|
autumn
leaf
|
பழுப்புறு இலைச்சி
|
133
|
southern
blue oak leaf
|
சருகன் பழுசி
|
134
|
glassy
tiger
|
வெண்பொறி மென்சி
|
135
|
nilgiri
tiger
|
விசிறன் பழுசி
|
136
|
blue
tiger
|
நீல்பொறி கருஞ்சி
|
137
|
dark
blue tiger
|
கருநீலக் கருஞ்சி
|
138
|
plain
tiger
|
பழுமுனை ஒண்சி
|
139
|
striped
tiger
|
வயப்பொறி கருஞ்சி
|
140
|
common
indian crow
|
வெண்பொறி அஞ்சி
|
141
|
double
branded crow
|
இருவரி பழுசி
|
142
|
brown
king crow
|
வெண்புகர் கபிசி
|
143
|
malabar
tree nymph
|
கருங்கண் வெண்சி
|
144
|
suffused
double banded judy
|
செப்புறு பழுசி
|
145
|
lankan
plum judy
|
துருபடு வரிச்சி
|
146
|
spotted
pierrot
|
கரும்பொறி வெண்சி
|
147
|
dark
pierrot
|
கரும்புகர் வெண்சி
|
148
|
angled
pierrot
|
கருஞ்சிதர் வெண்சி
|
149
|
striped
pierrot
|
கருவரி வெண்சி
|
150
|
zebra
blue
|
கபிவரி வெண்சி
|
151
|
banded
blue pierrot
|
கருந்தார் வெண்சி
|
152
|
common
pierrot
|
கருமாண் வெண்சி
|
153
|
ape
fly
|
பழுவலை வெண்சி
|
154
|
bright
babul blue
|
நீல்வரி பழுசி
|
155
|
dull
babul blue
|
மழுங்குறு வெண்சி
|
156
|
indian
cupid
|
இணைக்கண் புன்சி
|
157
|
african
babul blue
|
நிறைகண் நீல்சி
|
158
|
white
hedge blue
|
வெள்விரை நீல்சி
|
159
|
white
disc hedge blue
|
வெண்படு நீல்சி
|
160
|
common
hedge blue
|
கரும்புகர் நீல்சி
|
161
|
hempson
hedge blue
|
கருஞ்சிதர் நீல்சி
|
162
|
pale
grass blue
|
பசுவிரை நீல்சி
|
163
|
dark
grass blue
|
கருங்கண் கபிசி
|
164
|
malayan
|
கருவலை வெண்சி
|
165
|
plain
hedge blue
|
வெள்மாண் நீல்சி
|
166
|
quaker
|
கறைபடு நீல்சி
|
167
|
lesser
grass blue
|
கருங்கண் புன்சி
|
168
|
tiny
grass blue
|
சிறுகண் புன்சி
|
169
|
small
cupid
|
பழுப்புறு புன்சி
|
170
|
lime
blue
|
கண்ணுறு புன்சி
|
171
|
plains
cupid
|
பழுக்கண் பழுசி
|
172
|
eastern
grass jewel
|
வெள்வரை தேன்சி
|
173
|
gram
blue
|
செங்கண் புன்சி
|
174
|
forget-me-not
|
ஒருகண் புன்சி
|
175
|
silver
forget-me-not
|
ஒருகண் மென்சி
|
176
|
pea
blue
|
இருகண் பழுசி
|
177
|
dark
cerulean
|
செங்கண் வன்சி
|
178
|
common
cerulean
|
செங்கண் மென்சி
|
179
|
metallic
cerulean
|
ஒளிகண் மென்சி
|
180
|
large
fourline blue
|
கருங்கண் வன்சி
|
181
|
pale
fourline blue
|
கருங்கண் மென்சி
|
182
|
transparent
6line blue
|
அறுவரி மென்சி
|
183
|
opaque
6line blue
|
அறுவரி வன்சி
|
184
|
pointed
line blue
|
பழுவரி வன்சி
|
185
|
white
tipped line blue
|
வெள்வரி மென்சி
|
186
|
tailless
line blue
|
பழுவரி மென்சி
|
187
|
common
line blue
|
பழுவரி கண்சி
|
188
|
dingy
line blue
|
திரைபடு புன்சி
|
189
|
red
pierrot
|
செக்கர் வெண்சி
|
190
|
western
centaur oakblue
|
தேனிற வரிச்சி
|
191
|
pointed
ciliate blue
|
கூர்முனை பழுசி
|
192
|
ciliate
blue
|
மழுமுனை பழுசி
|
193
|
tamil
oakblue
|
வெள்ளறை கருஞ்சி
|
194
|
large
oakblue
|
கண்சிதர் பழுசி
|
195
|
dark
broken band oakblue
|
கண்முறி பழுசி
|
196
|
rosy
/ kanara oakblue
|
இருகூர் பழுசி
|
197
|
abeirant
oakblue
|
கார்விரை பழுசி
|
198
|
manytailed
oakblue
|
பல்கூர் புன்சி
|
199
|
common
acacia blue
|
இருகூர் புன்சி
|
200
|
silver
streak blue
|
வெண்படு தேன்சி
|
201
|
silver
streaked acacia blue
|
வெண்படு புன்சி
|
202
|
leaf
blue
|
வாடல் புன்சி
|
203
|
common
silver line
|
செவ்விடை வெண்சி
|
204
|
plumbeous
silver line
|
வெள்வரி செஞ்சி
|
205
|
short
silver line
|
வெள்ளிடை கருஞ்சி
|
206
|
abnormal
silver line
|
பழுவரி புன்சி
|
207
|
liliac
silver line
|
பழுவரி பால்சி
|
208
|
scarce
shot silver line
|
மஞ்சிடை செஞ்சி
|
209
|
long
banded silverline
|
மஞ்செறி செஞ்சி
|
210
|
common
tinsel
|
பல்பொறி பால்சி
|
211
|
common
imperial
|
வெள்ளை நெடுவாலி
|
212
|
yam
fly
|
பழுப்புப் பிளவாலி
|
213
|
monkey
puzzle
|
பல்வால் பழுசி
|
214
|
common
onyx
|
வெள்ளிடை பைஞ்சி
|
215
|
redspot
|
செம்பொறி வெண்சி
|
216
|
peacock
royal
|
மயில்கண் பழுசி
|
217
|
spotted
royal
|
கார்சிதர் வெண்சி
|
218
|
plains
blue royal
|
மயில்கண் வெண்சி
|
219
|
nilgiri
tit
|
நீல்படு பால்சி
|
220
|
banded
royal
|
கார்வரை வெண்சி
|
221
|
orchid
tit
|
மயில்கண் புன்சி
|
222
|
pluffy
tit
|
வெள்ளரை பழுசி
|
223
|
cornelion
|
சிறுகண் பழுசி
|
224
|
large
guava blue
|
பழுக்கண் மென்சி
|
225
|
common
guava blue
|
மயில்கண் நீல்சி
|
226
|
plane
|
பழுவிடை வெண்சி
|
227
|
indian
red flash
|
சாம்பர் வெண்சி
|
228
|
malabar
flash
|
நெடுவரி பழுசி
|
229
|
indian
sun beam
|
செக்கர் ஒண்சி
|
230
|
slate
flash
|
மயில்கண் கபிசி
|
231
|
indigo
flash
|
பழுவரி தேன்சி
|
232
|
toothed
sun beam
|
வெள்வரி நீல்சி
|
233
|
shiva
sun beam
|
கறைவரி நீல்சி
|
234
|
pale
green awlet
|
ஒண்முக வரிச்சி
|
235
|
orange
awlet
|
செம்முக தேன்சி
|
236
|
white
banded awl
|
வெள்வரி கார்சி
|
237
|
orange
tail awl
|
ஒள்வரை கருஞ்சி
|
238
|
common
banded awl
|
வெண்வரி தேன்சி
|
239
|
common
awl
|
மெல்வரி தேன்சி
|
240
|
plain
banded awl
|
வெண்படு மென்சி
|
241
|
brown
awl
|
புன்வரி பழுசி
|
242
|
indian
awl king
|
ஒண்முனை பைஞ்சி
|
243
|
common
spotted flat
|
கருவெண் கபிசி
|
244
|
malabar
spotted flat
|
வெண்சிதர் கபிசி
|
245
|
tamil
/ dusky spotted flat
|
இருபுகர் பழுசி
|
246
|
restricted
spotted flat
|
இருபுகர் கபிசி
|
247
|
ceylon
snow flat
|
வெள்ளடி பழுசி
|
248
|
water
snow flat
|
வெருகடி பழுசி
|
249
|
suffused
snow flat
|
வெள்வரை பழுசி
|
250
|
common
yellow breasted flat
|
வெள்ளிடை நீல்சி
|
251
|
fulvous
pied flat
|
கறைபடு தேன்சி
|
252
|
tricolor
flat
|
தேன்படு பழுசி
|
253
|
common
small flat
|
சிற்றுரு புன்சி
|
254
|
spotted
small flat
|
வெண்புகர் அறுசி
|
255
|
black
angled flat
|
புலிமுக தேன்சி
|
256
|
chestnut
angle
|
மின்கொடி அறுசி
|
257
|
golden
angle
|
தேன்படு வரைசி
|
258
|
indian
grizzled skipper
|
பால்பொறி கபிசி
|
259
|
pigmy
grass hopper
|
சிறுமுக புன்சி
|
260
|
african
mallow skipper
|
பழுவரி கபிசி
|
261
|
dingy
grass hopper
|
தேன்படு மழுசி
|
262
|
bush hopper
|
பழுவரி மஞ்சி
|
263
|
indian
ace
|
பழுவரை தேன்சி
|
264
|
moores
ace
|
வெள்வரி தேன்சி
|
265
|
bicolor
ace
|
இருநிற தேன்சி
|
266
|
madras
ace
|
கார்வரை தேன்சி
|
267
|
southern
spotted ace
|
வெண்புகர் தேன்சி
|
268
|
tamil
/ sitala ace
|
தேன்படு குறுஞ்சி
|
269
|
eversheds
ace
|
மஞ்சுறு தேன்சி
|
270
|
chestnut
bob
|
முதுதேன் வரிச்சி
|
271
|
coon
|
தேன்படு கபிசி
|
272
|
common
banded demon
|
வெண்படு சூர்சி
|
273
|
restricted
demon
|
வெண்சிதர் சூர்சி
|
274
|
maculate
lancer
|
வாள்வாய் வரைச்சி
|
275
|
grass
demon
|
கருவெண் சூர்சி
|
276
|
coorg
forest hopper
|
மழுவரி புன்சி
|
277
|
indian
palm bob
|
குறுவரி குறுஞ்சி
|
278
|
vindhyan
bob
|
வாள்முக தேன்சி
|
279
|
small
palm bob
|
செங்கண் தேன்சி
|
280
|
wax
dart
|
மஞ்சள் மென்சி
|
281
|
hempsons
hedge hopper
|
தெள்வரி தேன்சி
|
282
|
common
tree flitter
|
துருவெண் தேன்சி
|
283
|
yellow
base / golden tree flitter
|
ஒண்முதல் கருஞ்சி
|
284
|
purple
spotted flitter
|
கருஞ்சிதர் தேன்சி
|
285
|
rounded
palm redeye
|
செங்கண் கபிசி
|
286
|
giant
redeye
|
செங்கண் பெருஞ்சி
|
287
|
common
redeye
|
செங்கண் இருஞ்சி
|
288
|
common
/ oriental grass dart
|
வரையுறு தேன்சி
|
289
|
tamil
/ tawny spotted grass dart
|
கருஞ்சிதர் வாள்சி
|
290
|
tamil
dartlet
|
மஞ்சள் தேன்சி
|
291
|
indian
/ common dartlet
|
கறைசிதர் தேன்சி
|
292
|
pale
palm dart
|
வெள்ளக மஞ்சி
|
293
|
straight
swift
|
பல்வரி தேன்சி
|
294
|
dark
palm dart
|
ஒள்ளக தேன்சி
|
295
|
rice
swift
|
வெள்ளக பைஞ்சி
|
296
|
bevans
shift
|
கார்படு தேன்சி
|
297
|
dark
/ little branded swift
|
துகளுறு வன்சி
|
298
|
large
branded swift
|
வெண்பொறி வன்சி
|
299
|
small
branded swift
|
சிற்றுரு வன்சி
|
300
|
conjoined
swift
|
பொறிப்புகர் தேன்சி
|
301
|
contiguous
swift
|
வெண்படு கபிசி
|
302
|
paint
brush swift
|
வெண்பொறி கபிசி
|
303
|
philliphine
swift
|
நுண்புகர் தேன்சி
|
304
|
kanara
swift
|
வெண்பொறி தேன்சி
|
305
|
variable
plain palm swift
|
கபிசிதர் மஞ்சி
|
அருமையா இருக்கு... நல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே. :))
நீக்கு