வெள்ளி, 7 ஜூன், 2019

சங்கத் தமிழும் சமற்கிருதமும் - 2



முன்னுரை:

சங்கத் தமிழும் சமற்கிருதமும் என்னும் ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் சங்கத் தமிழ்ச் சொற்கள் சமற்கிருதச் சொல்லாக மாறுவதற்கான 15 விதிமுறைகளைப் பற்றிப் பல சான்றுகளுடன் விளக்கமாகக் கண்டோம். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பகுதியில் மேலும் சில விதிமுறைகளைப் பற்றிச் சான்றுகளுடன் விளக்கமாகக் காணலாம்

16.  செகுமோனை விதி:

தமிழ்ச்சொல்லின் முதலில் வரும் உயிர்மெய் எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது உயிர் அல்லது மெய் பிரிந்து நிற்கும். இவ்வாறு உயிர் அல்லது மெய் செகுக்கப்பட்ட மோனை செகுமோனை எனப்படும். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சில சொற்களைப் பார்க்கலாம்.

கீறு (=உழு) >>> க்ருசி~ (=உழவு)
குரு (=சிவப்பு) >>> க்~ருணி (=சினம்)
சந்தனம் >>> ச்`தன (=சந்தனம் பூசப்படும் மார்பு)
துவை (=ஒலி) >>> த்`வனி
சுரம் (=வழி) >>> ச்`ருதி
குதிர் >>> உத`ர (=வயிறு)
துருவை (=ஆடு) >>> உரப்^ர
குரல்வளை >>> க்~ரீவ
வேங்கை (=புலி) >>> வ்யாக்^ர
ஞாயிறு (=கதிரவன்) >>> ஞ்~யான் (=அறிவு)
கிளர் (=கோபம்) >>> க்லேச`
கடம் (=வழி) >>> க்ரம (=பயணம்)
குருதி (=சிவப்பு) >>> க்ரோத^
சொல் >>> ச்`லோக
சுரும்பு (=வண்டு) >>> ச்`ருதி (=இசை)
கரை (=ஒலி) >>> க்ருச்~ட
செறு (=வயல்) >>> ச்`ருத (=உழவு)
சுவை >>> ச்`வாத்`

17. செகுழ விதி:

தமிழ்மொழியின் சிறப்பு எழுத்தாகிய ழகரமானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது சில இடங்களில் யகர, சகரமாக மாறினாலும் பல இடங்களில் முற்றிலுமாக நீக்கப்படும். இவ்வாறு ழகரம் முற்றிலும் செகுக்கப்படுவதால் இதனை செகுழ விதி என்பர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சில சொற்களைப் பார்க்கலாம்.

ஒழுகை (=வண்டி) >>> ஓக`
கொழுது (=உழு) >>> குந்தல
குழிசி (=பானை) >>> குக்சி` (=வயிறு)
வாழ்த்து >>> வாத`
தொழுதி (=கூட்டம்) >>> ச்`துதி (=கூட்டு வழிபாடு)

18. வல்மாற்று விதி;

தமிழ்ச்சொல்லில் வரும் வல்லின எழுத்துக்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது தம்மின எழுத்துக்களால் மாறுதல் அடையும். இதனை வல்மாற்று விதி என்பர். இவ்விதிக்கு எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் காணலாம்.

சகடு (=வண்டி) >>> சக்தி (=வண்டியை இழுக்கும் ஆற்றல்)
எருது (=காளை) >>> வ்ருச~
சாத்து (=கூட்டம்) >>> ச`ப்`த` (=ஒலி)
ஆடு >>> அச^
உதடு >>> ஓச்~ட

19. அலர்மாற்று விதி:

தமிழ்ச்சொல்லில் வரும் றகர ரகர லகர எழுத்துக்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது றகர ரகரங்கள் லகரமாகவும் லகரம் ரகரமாகவும் மாறுதல் அடையும். இதனை அலர்மாற்று விதி என்பர். இவ்விதிக்கு எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் காணலாம்

செறு (=வயல்) >>> சீ`ல (=உழவு)
நுதல் (=கண்) >>> த்`ருச்~ (=பார்வை)
மட்கலம் (=பானை) >>> மர்கர
புட்டில் >>> பிட்டரக
அரவம் (=ஒலி) >>> ஆலாப

20. பிரசமோனை விதி:

தமிழ்ச்சொற்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது ப்ர, ச`ம், ஆ, உப முதலான பல சொற்களை முன்னொட்டாக ஏற்கும். இவ்வாறு ஏற்பதனைப் பொதுவாக பிரச மோனை என்பர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாக சில சொற்களை மட்டும் இங்கே காணலாம்.

செறு (=வயல்) >>> ப்ரச்`ருத (=உழவு)
ஆன் (=காளை) >>> யான (=வண்டி) >>> ப்ரயாண (=பயணம்)
உரும்பு (=சினம்) >>> ரம்ப` >>> ச`ம்ரம்ப`
தீய்ப்பு >>> தீ`பா >>> ப்ரதீ`பா
தீய் >>> தீ`த்ய >>> ஆதி`த்ய
திகிரி (=கதிரவன்) >>> திக^ >>> ப்ரதிக^ (=ஒளி)
காய் (=ஒளிர்) >>> காச` >>> ப்ரகாச` (=ஒளி)
பை (=ஒளி) >> ப்ரபை^  (=ஒளி)
கோபம் (=செம்பூச்சி) >>> கோப >>> ப்ரகோப (=கடுஞ்சினம்)
தாமரை >>> தாப >>> ஆதப
குருதி >>> ருத்`ர >>> ஆருத்`ர
சேரி (=தெரு) >>> சரதி >>> சஞ்சார (=பயணம்)
கவலை (=வழி) >>> க~மன >>> ப்ரகா~மன் (=பயணம்)
கதி (=வழி) >>> உபகா~தி (=பயணம்)
வாய் (=மொழி) >>> பா^ச~ன >>> ச`ம்பா~ச~ன (=பேச்சு)
நா (=நாக்கு) >>> ந்யாச` >>> உபந்யாச` (=பேச்சு)

21. விரிமோனை / விரிமெய் விதி:

தமிழ்ச்சொல்லின் முதல் எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது சில நேரங்களில் இரண்டு எழுத்தாக விரிந்து நிற்கும். சான்றாக, நா என்பது ந்யா என்றும் த, து என்பன த்வ என்றும் சு, சீ என்பன ச்வ என்றும் வே என்பது வ்யா என்றும் விரிந்து நிற்கும். இதனை விரிமோனை என்பர். முதல் எழுத்தே அன்றி ஏனை எழுத்துக்கள் அவ்வாறு மாறுவதனை விரிமெய் என்பர். இவ்விதிக்கு எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் காணலாம்.

நா (=நாக்கு) >>> ந்யாச` (=பேச்சு)
அதர் (=வழி) >>> த்`வார
துள (=அசை) >>> த்வச^ (=அசைகொடி)
சுரம் (=வெப்பம்) >>> ச்^வர (=காய்ச்சல்)
வேங்கை (=புலி) >>> வ்யாக்^ர
சீர் (=இசை) >>> ச்`வர
நுசுப்பு (=இமை) >>> ச்`வப்ன (=கனவு)
பருதி (பூமி) >>> ப்ருத்வி

22. இயமாற்று விதி:

சில தமிழ்ச்சொற்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது ஈற்றில், ஈற்றயலில் உள்ள இகர ஓசையானது அகர ஓசையாக மாறும். இதனை இயமாற்று விதி என்பர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சில சொற்களை இங்கே காணலாம்.

மண்டிலம் (=கதிரவன்) >>> மண்டல (=சக்கரம்)
கதி (=பயணம்) >>> கத`
பதி >>> பாத`
மதி (=நிலவு) >>> மாத
அடி (=நடத்தல்) >>> அடன் (=பயணம்)
புகல்வி (=காளை) >>> புங்கவ
பொலி (=காளை) >>> ப`ல`த`

23. ஒலிபெயர்ச்சி விதி:

சில தமிழ்ச்சொற்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது மோனையின் உயிரோசை நீங்கி எதுகையின் மேல் ஏறியும் வரும். இதனை ஒலிபெயர்ச்சி விதி என்பர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சில சொற்களை இங்கே காணலாம்.

சொல் >>> ச்`லோக
சிதர் (=நீர்) >>> ச்`தீர்வி
குருதி (=சிவப்பு) >>> க்ரூத`, க்ரோத` (=சினம்)
இலக்கு (எழுது) >>> லிக்

24. போலிமாற்று விதி:

தமிழ்ச்சொற்களில் உள்ள சில எழுத்துக்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது தமக்குரிய போலி எழுத்தாக மாறும். சான்றாக, லவும் ளவும் போலிகள்; னவும் ணவும் போலிகள்; ரவும் றவும் போலிகள். ஆகும். இவ்வாறு போலி எழுத்துக்களால் மாற்றப்படுவதால் இதனைப் போலிமாற்று விதி என்பர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சில சொற்களை இங்கே காணலாம்

வான் (=மழை) >>> வாணி (=மேகம்)
வளி (=மேகம்) >>> வல
உறை (=மழை) >>> வ்ரச^
தொறு (=மாடு) >>> ச்`தூ`ர
செறு (=வயல்) >>> சீ`ர (=உழவு)

25. மெய்கெடல் விதி:

தமிழ்ச்சொற்களில் சில  சமற்கிருதச் சொல்லாக மாறும்போது சொல்லின் இடையில் உள்ள சில மெய்யெழுத்துக்கள் முற்றிலும் கெட்டு அழியும். இதனை மெய்கெடல் விதி என்பர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சில சொற்களை இங்கே காணலாம்

புகல்வி (=காளை) >>> புங்கவ – லகரம் கெட்டது.
துருத்தி (=பால்மடி) >>> து`க்~த^ (=பால்) – ரகரம் கெட்டது
துருத்தி (=வயிறு) >>> துந்த – ரகரம் கெட்டது
துருவை (=ஆடு) >>> ச்`துபா` - ரகரம் கெட்டது
சந்தனம் >>> ச்`தன – நகரம் கெட்டது
வேங்கை (=புலி) >>> வ்யாக்^ர – ஙகரம் கெட்டது
தீய்ப்பு >>> தீ`பா (=ஒளி) – யகரம் கெட்டது
சிலம்பு (=ஒலி) >>> ச^ல்ப – மகரம் கெட்டது
பாம்பு (=மேகம்) >>> பா^வன (=நீர்) – மகரம் கெட்டது

…………………………. தொடரும் …………………………

9 கருத்துகள்:

  1. ஒவ்வொரு விதிக்குள்ள பெயரையும் மனதில் வைத்துக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அருமையான தரப்படுகின்ற பொருளை தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா. விதியின் பெயர்கள் மிக எளிமையாகவே அமைந்துள்ளன. இ கரம் யகரமாக மாறுவது இயமாற்று, லகரம் ரகரமாக மாறுவது அலர்மாற்று போல....நன்றி. :))

      நீக்கு
  2. நல்லது உங்கள் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் நண்பரே. எனது இணையதளத்தையே பெயராகக் கொண்டு மாமரக் குயில்போல் மறைந்துள்ள தங்கள் முகம் காட்டுங்களேன். :))

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.