ஞாயிறு, 22 நவம்பர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 56

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

விட்டி, விடி

மலம் கழி

முட்டி

முடை (=துர்நாற்றம், கழிவு) + இ = முட்டி >>> மிட்டி >>> விட்டி = துர்நாற்றத்துடன் கழி.

விட்டை

மலம்

முட்டை

முடை (=துர்நாற்றம், கழிவு) + ஐ >>> முட்டை >>> மிட்டை >>> விட்டை = துர்நாற்றம் மிக்க கழிவு.

விட்டில்

கொலை

வீற்றில்

வீறு (=வெட்டு, கொல்) + இல் = வீற்றில் >>> விட்டில்

விட்டு

வானம்

விண்டு

விண்டு (=ஆகாயம்) >>> விட்டு

விடங்கம்

புறாக்கூடு

புறாகம்

புறா + அகம் (=வீடு, கூடு) = புறாகம் >>> பிடாக்கம் >>> விடங்கம் = புறாவின் வீடு.

விடங்கம்

கொடுங்கை, வளைந்த உறுப்பு

வீறங்கம்

வீறு (=வளை) + அங்கம் (=உறுப்பு) = வீறங்கம் >>> விடங்கம் = வளைவான உறுப்பு.

விடங்கம்

கொடி

வீறகம்

வீறு (=பற) + அகை (=விட்டுவிட்டு இயங்கு, உயர்) + அம் = வீறகம் >>> விடங்கம் = உயரத்தில் விட்டுவிட்டுப் பறப்பது = கொடி.

விடங்கம்

இலிங்கம்

வீறகம்

வீறு (=ஒளி, பெருமை) + அகை (=உயர், எரி) + அம் = வீறகம் >>> விடங்கம் = உயர்ந்து ஒளிரக்கூடிய பெருந்தீ

விடங்கம், விடங்கு

அழகு, இளமை

வீறாக்கம்

வீறு (=ஒளி) + ஆக்கம் (=விளைவு) = வீறாக்கம் >>> விடங்கம் = ஒளியின் விளைவு = அழகு, இளமை

விடங்கம்

ஆண்மை, வீரம்

வீறாக்கம்

வீறு (=வலிமை) + ஆக்கம் (=விளைவு) = வீறாக்கம் >>> விடங்கம் = வலிமையின் விளைவு = ஆண்மை, வீரம்

விடங்கன்

ஆண் அழகன்

விடங்கன்

விடங்கம் (=ஆண்மை, அழகு) + அன் >>> விடங்கன் = ஆண்மை மிக்க அழகன்.

விடணம்

விந்தகம், விதைக்கொட்டை

பீறாணம்

பிற (=தோன்று, உண்டாகு) + ஆண்மை (=வீரியம், விந்து) + அம் = பீறாணம் >>> விடணம் = விந்து உண்டாகுமிடம்

விடதம்

மேகம்

விடாற்றம்

விடம் (=நீர்) + ஆற்று (=கொடு, சொரி) + அம் = விடாற்றம் >>> விடதம் = நீர் கொடுப்பது.

விடதரம்

பாம்பு

விடதறம்

விடம் (=நஞ்சு) + தறி (=வெட்டு, கொல்) + அம் = விடதறம் >>> விடதரம் = நஞ்சினால் கொல்வது.

விடதாரி

விடவைத்தியன்

விடதறி

விடம் (=நஞ்சு) + தறி (=வெட்டு, நீக்கு) = விடதறி >>> விடதாரி = நஞ்சை நீக்குபவன்.

விடதாலி

பூரான்

விடத்தலி

விடம் (=நஞ்சு) + தலை + இ = விடத்தலி >>> விடதாலி = தலையில் நஞ்சு உடையது.

விடபம்

எருது, காளை

விடாவம்

விடை (=ஆண்) + ஆ (=மாடு) + அம் = விடாவம் >>> விடபம் = ஆண் மாடு.

விடபம்

மரக்கிளை

வீறமம்

வீறு (=கிளை) + அமை (=தண்டு) + அம் = வீறமம் >>> விடபம் = கிளைக்கும் தண்டு.

விடபம்

பெரும் புதர்

மிடைமம்

மிடை (=தூறு, புதர்) + மா (=பெரிய) + அம் = மிடைமம் >>> விடபம் = பெரும் புதர்

விடபம்

தூண்

முட்டமம்

முட்டு (=ஆதாரம்) + அமை (=பொறு, தாங்கு) + அம் = முட்டமம் >>> மிடபம் >>> விடபம் = தாங்கும் ஆதாரம்

விடபம்

தளிர்

பிறப்பம்

பிற (=தோன்று, வெளிப்படு) + பை (=பசுமை) + அம் = பிறப்பம் >>> விடபம் = பசுமையாக வெளிப்படுவது.

விடபம்

பரவுகை, விசாலிக்கை

விறபம்

விற (=மிகு) + பா (=பரப்பு) + அம் = விறபம் >>> விடபம் = பரப்பு மிகுதல்.

விடபம்

விந்து

பிறப்பம்

பிற + பை (=வெண்மை) + அம் (=நீர்) = பிறப்பம் >>> விடபம் = பிறப்புக்குரிய வெண்ணிற நீர்.

விடபி, விடவி

மரம்

விடபி

விடபம் (=கிளை) + இ = விடபி = கிளைகளை உடையது

விடம்

நஞ்சு

வீறம்

வீறு (=வெட்டு, கொல்) + அம் (=நீர், உணவு) = வீறம் >>> விடம் = கொல்லும் நீர் / உணவு.

விடம்

நீர், மழை

விண்டம்

விண்டு (=மேகம்) + அம் (=உணவு) = விண்டம் >>> விட்டம் >>> விடம் = மேக உணவு.

விடம்

மரக்கிளை

வீறம்

வீறு (=கிளை) + அம் = வீறம் >>> விடம் = கிளைப்பது

விடம்

மலை

விண்டு

விண்டு (=மலை) + அம் = விண்டம் >>>விட்டம்>>> விடம்

விடம்

இடம்

புடை

புடை (=இடம்) + அம் = புட்டம் >>> பிடம் >>> விடம்

விடம்பம், விடம்பனம்

வேடம், நடிப்பு, பித்தலாட்டம்

மூடப்பம்

மூடு (=மறை) + அப்பு (=பூசு) + அம் = மூடப்பம் >>> மிடம்பம் >>> விடம்பம் = பூசி மறைத்தல்.

விடம்பன்

நடிகன்

விடம்பன்

விடம்பம் (=நடிப்பு) + அன் = விடம்பன்

விடம்பனம்

இகழ்ச்சி, கிண்டல், நையாண்டி

பிற்றைப்பணம்

பிற்றை (=தாழ்வு) + பணி (=சொல்) + அம் = பிற்றய்ப்பணம் >>> விட்டம்பணம் >>> விடம்பனம் = தாழ்த்திக் கூறும் சொல் = இகழ்ச்சி, கிண்டல், கேலி

விடம்பனம்

தொந்தரவு

விடமம்

விடமம் (=துன்பம், தொல்லை) + அணம் = விடம்மணம் >>> விடம்பனம்

விடமம்

சமமின்மை, கரடுமுருடு

விடமம்

விடு (=நீங்கு, இல்லாகு) + அமை (=பொருந்து, சமமாகு) + அம் = விடமம் = சமமாக இல்லாமை.

விடமம்

பொருத்தமற்றது

விடமம்

விடு (=நீங்கு, இல்லாகு) + அமை (=பொருந்து) + அம் = விடமம் = பொருத்தம் இல்லாமை.

விடமம்

தொடர் துன்பம், தொந்தரவு

விறவம்

விற (=மிகு) + அவம் (=துன்பம்) = விறவம் >>> விடமம் = மிகுதியான துன்பம்

விடமம்

அச்சம்

விறவம்

விற (=அஞ்சு) + அம் = விறவம் >>> விடமம்

விடமம்

வலிமையின்மை

வீறவம்

வீறு (=வலிமை) + அவம் (=இன்மை) = வீறவம் >>> விடமம் = வலிமை இன்மை

விடயம்

சொல்ல விரும்புவது

விடாயம்

விடு (=சொல்) + ஆய் (=விரும்பு) + அம் = விடாயம் >>> விடயம் = சொல்ல விரும்புவது.

விடயம், விடையம்

தேசம்

வீறாயம்

வீறு (=பெருமை, நிலம்) + ஆயம் (=மக்கள் கூட்டம்) = வீறாயம் >>> விடயம் = மக்கள் கூட்டமிக்க பெருநிலம்

விடயம்

பயன், விளைவு

பிறாயம்

பிற (=தோன்று) + ஆயம் (=வருவாய், விளைச்சல்) = பிறாயம் >>> விடயம் = தோன்றும் விளைச்சல்

விடயம்

விந்து

பிறாயம்

பிற + ஆய் (=வெண்மை) + அம் (=நீர்) = பிறாயம் >>> விடயம் = பிறப்புக்குரிய வெண்ணிற நீர்.

விடயம்

புணர்ச்சி இன்பம்

மிடாயம்

மிடை (=கல, புணர்) + ஆயம் (=வருவாய், விளைவு) = மிடாயம் >>> விடயம் = புணர்ச்சியால் விளைவது.

விடயம், விடையம்

வெற்றிலை பாக்கு உணவு

முறியம்

முறி (=இலை) + அம் (=உணவு) = முறியம் >>> மிடியம் >>> விடையம் >>> விடயம் = இலை உணவு

விடயம்

அடைக்கலம்

வீடாயம்

வீடு + ஆய் (=துன்பம், நீக்கு) + அம் = வீடாயம் >>> விடயம் = துன்பங்களை நீக்கும் வீடு.

விடயி

ஐம்புலன்

பிடயி

பிடி (=பற்று, பொறி) + அய் (=ஐந்து) + இ = பிடயி >>> விடயி = பற்றுகின்ற பொறி ஐந்து = ஐம்புலன்.

விடயி

அரசன்

வீறயி

வீறு (=நிலம்) + அய் (=தலைவன்) + இ = வீறயி >>> விடயி = நிலத்தின் தலைவன்.

விடர்

பெருச்சாளி

வீறல்

வீறு (=நிலம், பிளவு, பெருமை, உயிர்) + அல் (=இருள், கருமை) = வீறல் >>> விடர் = நிலப்பிளவில் இருக்கும் கருநிறம் கொண்ட பெரிய உயிரி.

விடருகம், விடரூகம்

பூனை

வீறருகம்

வீறு (=துணிவு) + அருகு (=அரிதாகு) + அம் = வீறருகம் >>> விடருகம் = துணிவு அரிதானது

விடருகம்

பாம்பு

விடருக்கம்

விடம் (=நஞ்சு) + அருக்கு (=அழி, கொல்) + அம் = விடருக்கம் >>> விடருகம் = நஞ்சினால் கொல்வது

விடலம்

வெள்ளைப்பூடு

வீறாலம்

வீறு (=வீரியம், காரம்) + ஆல் (=வெண்மை) + அம் (=உணவு) = வீறாலம் >>> விடலம் = காரமான வெண்ணிற உணவு = வெள்ளைப் பூண்டு.

விடலம்

குதிரை

வீறலம்

வீறு (=விரை, பெருமை, உயிர்) + அலை (=திரி, ஓடு) + அம் = வீறலம் >>> விடலம் = விரைந்து ஓடும் பெரிய உயிரி = குதிரை.

விடலம்

நஞ்சு

வீறலம்

வீறு (=நன்மை, நலம்) + அல் + அம் (=உணவு) = வீறலம் >>> விடலம் = நலமற்ற உணவு.

விடலி

மலடி

பிறலீ

பிற + அல் + ஈ (=ஈனு) = பிறலீ >>> விடலி = பிறப்பு ஈனாதவள் = மலட்டுப் பெண்.

விடலை

வலிமைமிக்க இளைஞன்

விறலை

விறல் (=வெற்றி, வலிமை, இளமை) + ஐ = விறலை >>> விடலை = வெற்றியும் வலிமையும் கொண்ட இளைஞன்

விடன்

வீரன்

வீறன்

வீறு (=வலிமை, துணிச்சல்) + அன் = வீறன் >>> விடன் = வலிமையும் துணிவும் உடையவன்.

விடாணம்

விலங்குகளின் கொம்பு

வீறாணம்

வீறு (=தலை, முளை, வலிமை) + ஆணம் (=பற்றுக்கோடு) = வீறாணம் >>> விடாணம் = தலையில் முளைக்கும் வலிமையான பற்றுக்கோடு.

விடாணி

யானை

வீறாணி

வீறு (=உயிர், பெருமை, மிகுதி) + ஆண் (=வலிமை) + இ = வீறாணி >>> விடாணி = வலிமை மிக்க பெரிய உயிரி

விடாதம்

மயக்கம்

மூடறம்

மூடு (=மறை) + அறி + அம் = மூடறம் >>> மிடாதம் >>> விடாதம் = அறிவு மூடிய நிலை.

விடாலகம், விடாரகம்

பூனை

வீறலகம்

வீறு (=துணிச்சல்) + அல் + அகம் (=உள்ளம்) = வீறலகம் >>> விடாலகம் = உள்ளத்தில் துணிவு அற்றது.

விடாலம்

பூனை

வீறலம்

வீறு (=துணிச்சல்) + அல் + அம் = வீறலம் >>> விடாலம் = துணிச்சல் அற்றது.

விடாலம்

கண்மணி

வீறாலம்

வீறு (=வட்டம், ஒளி, பிரி) + ஆலம் (=கருமை) = வீறாலம் >>> விடாலம் = ஒளியைப் பிரிக்கும் கருப்பு வட்டம்.

விடி

திரைச்சீலை

முறி

முறி (=மூடு, துணி) >>> மிடி >>> விடி = மூடும் துணி

விடிவு

அச்சம், அஞ்சி ஒழிதல்.

விறீவு

விற (=அஞ்சு) + ஈவு (=ஒழி) = விறீவு >>> விடிவு = அஞ்சி ஒழிதல்.

விடுவம்

சம ஒளி நாள்

விடுவம்

விடு (=இணங்கு, சமமாகு, வெளிப்படு) + அம் (=ஒளி) = விடுவம் = ஒளியானது சம அளவில் வெளிப்படும் நாள்.

விடை

எருது, ஆட்டுக்கடா, ஆண் மான்.

விடை

விடை (=சின, தாக்கு, ஆண்) >>> விடை = சினந்து தாக்கும் ஆண் விலங்கு

விடை

பூனை

வீறை

விற (=அஞ்சு, மிகு) + ஐ = வீறை >>> விடை = மிகுதியாக அஞ்சுவது = பூனை

விடை

குதிரை

விடை

விடை (=விரைந்து பாய்) >>> விடை = விரைந்து பாய்வது

விடை

பாம்பு

விடை

விடம் (=நஞ்சு) + ஐ = விடை = நஞ்சுடையது.

விண்டம்

விதை

வீறம்

வீறு (=உயிர், வெளிப்படுத்து) + அம் = வீறம் >>> விற்றம் >>> விட்டம் >>> விண்டம் = உயிரை வெளிப்படுத்துவது

விண்டபூரகம்

மாதுளம்பழம்

விண்டபூரகம்

விண்டம் (=விதை) + பூர் (=நிறை) + அகம் (=உள்ளே) = விண்டபூரகம் = உள்ளே விதைகள் நிறைந்தது.

விண்டுகம்

தாமரை

முற்றூகம்

முறி (=மூடு, இதழ்) + ஊகம் (=கருமை, இரவு) = முற்றூகம் >>> மிட்டூகம் >>> விண்டுகம் = இரவில் இதழ்களை மூடிக்கொள்வது.

விண்ணப்பம்

விருப்பத்தைச் சொல்லுதல்

வேணவ்வம்

வேணவா (=விருப்பம்) + அம் (=சொல்) = வேணவ்வம் >>> வெண்ணப்பம் >>> விண்ணப்பம் = விருப்பத்தைச் சொல்லுதல்.

விண்ணாணம்

விஞ்ஞானம்

விஞ்ஞானம்

விஞ்ஞானம் >>> விண்ணாணம்

விண்ணாணம்

திறமை மிக்க நிலை

மிண்டாணம்

மிண்டு (=மிகு) + ஆண்மை (=வலிமை, திறமை) + அம் = மிண்டாணம் >>> விண்ணாணம் = திறமை மிகுதி

விண்ணாணம்

செருக்கு, இறுமாப்பு

மிண்டாணம்

மிண்டு (=மிகு) + ஆண்மை (=இறுமாப்பு) + அம் = மிண்டாணம் >>> விண்ணாணம் = செருக்கு மிகுதி

வித்தகம்

அறிவு, கல்வி

வீற்றகம்

வீறு (=ஒளி) + அகம் (=உள்ளம்) = வீற்றகம் >>> வித்தகம் = உள்ளத்தின் ஒளி = அறிவு, கல்வி

வித்தகம்

அறிவுத் திறமை

வீற்றகம்

வீறு (=வலிமை, திறமை) + அகம் (=அறிவு) = வீற்றகம் >>> வித்தகம் = அறிவுத் திறமை.

வித்தகம்

பெருமை

வீறு

வீறு (=பெருமை) + அகம் = வீற்றகம் >>> வித்தகம் = பெருமை.

வித்தகம்

அதிசயம்

விந்தை

விந்தை (=அதிசயம்) + அகம் = விந்தகம் >>> வித்தகம்

வித்தகம்

நன்மை

வீறு

வீறு (=நன்மை) + அகம் = வீற்றகம் >>> வித்தகம்

வித்தகம்

தனிச்சிறப்புடைய படைப்பு / செயல்

வீற்றாக்கம்

வீறு (=தனிச்சிறப்பு) + ஆக்கம் (=படைப்பு, செயல்) = வீற்றாக்கம் >>> வித்தகம் = தனிச்சிறப்புடைய படைப்பு / செயல்

வித்தகம்

திருத்தம், செம்மை

முற்றாக்கம்

முறை (=ஒழுங்கு) + ஆக்கம் (=செயல்) = முற்றாக்கம் >>> மித்தகம் >>> வித்தகம் = ஒழுங்கு செய்தல்.

வித்தகம்

பேரறிவு

வீற்றகம்

வீறு (=மிகுதி) + அகம் (=அறிவு) = வீற்றகம் >>> வித்தகம் = அறிவின் மிகுதி.

வித்தகம்

தூது

வீழ்த்தகம், வித்தகம்

(1). வீழ் (= விரும்பு) + தகு (=பொருந்து, சேர்) + அம் (=சொல்) = வீழ்த்தகம் >>> வித்தகம் = விரும்புமாறு சொல்லிச் சேர்த்து வைப்பது. (2). வித்து (=பரப்பு) + அகம் (=அறிவு, செய்தி) = வித்தகம் >>> செய்தியைப் பரப்புதல்

வித்தகம்

இடையன் வீடு

பைத்தகம்

பை (=பால்) + தகு (=கிடை) + அம் = பைத்தகம் >>> பித்தகம் >>> வித்தகம் = பால் கிடைக்கும் இடம்.

வித்தகன்

இடையன்

வித்தகன்

வித்தகம் (=பால் கிடைக்கும் இடம்) >>> வித்தகன்

வித்தம், வித்தி, வித்தை

அறிவு, கல்வி

புத்தி

புத்தி (=அறிவு) + அம் = புத்தம் >>> பித்தம் >>> வித்தம்

வித்தம்

பொன், செல்வம்

வீறு

வீறு (=வளம், செல்வம்) + அம் = வீற்றம் >>> வித்தம்

வித்தம்

பாக்கியம்

வீறு

வீறு (=நல்வினை, பேறு) + அம் = வீற்றம் >>> வித்தம்

வித்தம்

இகழ்ச்சி, கிண்டல், நையாண்டி

வீழ்த்தம்

வீழ்த்து (=தாழ்த்து, இகழ்) + அம் (=சொல்) = வீழ்த்தம் >>> வித்தம் = இகழும் சொல்.

வித்தம்

கூட்டம்

முத்தம்

முத்து (=சேர், கூடு) + அம் = முத்தம் >>> மித்தம் >>> வித்தம் = சேர்க்கை, கூட்டம்

வித்தம்

கொடை

பீந்தம்

பீந்து (=கொடு) + அம் = பீந்தம் >>> வித்தம் = கொடை

வித்தாரம், வித்தரம்

மிகப் பெரியது

வீற்றாரம்

வீறு (=பெருமை) + ஆர் (=மிகு) + அம் = வீற்றாரம் >>> வித்தாரம் = மிகப் பெரியது.

வித்தரம்

நரகம்

வீற்றறம்

வீறு (=அடி, கொல், சாவு, தண்டி) + அறை (=பள்ளம்) + அம் = வீற்றறம் >>> வித்தரம் = இறந்தவர்கள் அடித்துத் தண்டிக்கப்படும் பள்ளமான இடம்.

வித்தரி

பெரிதாக்கு

வித்தரி

வித்தரம் (=பெருமை) >>> வித்தரி = பெரிதாக்கு

வித்தம்

ஈடுபாடு, ஆர்வம்

மைந்து

மைந்து (=விருப்பம்) + அம் = மைந்தம் >>> மித்தம் >>> வித்தம் = விருப்பம், ஆர்வம், ஈடுபாடு

வித்தம்

துறவு

வீற்றம்

வீறு (=செல்வம், புகழ், நீக்கு) + அம் = வீற்றம் >>> வித்தம் = செல்வத்தையும் புகழையும் நீக்கிய நிலை.

வித்தாரம்

பேரறிவு

வித்தாரம்

வித்தம் (=அறிவு) + ஆர் (=மிகு) + அம் = வித்தாரம் = மிக்க அறிவு.

வித்தி

பகுப்பு

வீற்றி

வீறு (=வெட்டு, பகு) + இ = வீற்றி >>> வித்தி = பகுப்பு

வித்தி

சம்பாத்தியம்

முற்றி

முற்று (=அடை, பெருக்கு) + இ = முற்றி >>> மித்தி >>> வித்தி = பெருக்கமாக அடைந்தது.

வித்தி

பகுத்தறிவு, ஆராய்ச்சி

வீற்றி

வீறு (=வெட்டு, பகு, அறிவு) + இ = வீற்றி >>> வித்தி = பகுத்து அறிதல்

வித்தியாசம்

மாறுபடும் கணக்கீடு

முறியாயம்

(2). முறி (=மாறுபடு) + ஆய் (=ஆராய், கணக்கிடு) + அம் = முறியாயம் >>> மிதியாசம் >>> வித்தியாசம் = மாறுபடும் கணக்கீடு.

வித்தியாரம்

பெரு விருப்பம்

மைந்தியாரம்

மைந்து (=விருப்பம்) + இயை (=பொருந்து) + ஆர் (=மிகு) + அம் = மைந்தியாரம் >>> மித்தியாரம் >>> வித்தியாரம் = மிகுதியாகப் பொருந்திய விருப்பம்.

வித்தியாரம்

மிகப் பழமையானது

முத்தியாரம்

முதுமை (=பழமை) + இயை (=பொருந்து) + ஆர் (=மிகு) + அம் = முத்தியாரம் >>> மித்தியாரம் >>> வித்தியாரம் = மிகவும் பழமையானது

வித்திரணம், விச்`திரணம்

பரப்பு

பிதிரணம்

பிதிர் (=பரவு) + அணம் = பிதிரணம் >>> வித்திரணம் = பரப்பு

வித்திரதி, வித்துருதி

காயம், புண்

பிதிரத்தி

பிதிர் (=வெட்டுப்படு) + அத்து (=சிவப்பு) + இ = பிதிரத்தி >>> வித்திரதி = வெட்டுப்பட்டுச் சிவப்பாகத் தோன்றுவது

வித்திரதி, வித்துருதி

பெரும் பரப்பு

பிதிரதி

பிதிர் (=பரவு) + அதி (=மிகுதி) = பிதிரதி >>> வித்திரதி = மிகுதியான பரப்பு

வித்திராவணம்

உலோகங்களை உருக்குதல்

வீத்திரவணம்

வீ (=மாற்று) + திரவம் (=நீர்மம்) + அணம் = வீத்திரவணம் >>> வித்திராவணம் = திரவமாக மாற்றுதல்.

வித்திராவணம்

துரத்துகை

வீத்துரவணம்

வீ (=நீங்கு) + துரவு (=செலுத்து, ஓட்டு) + அணம் = வீத்துரவணம் >>> வித்திராவணம் = நீங்குமாறு ஓட்டுதல்

வித்துத்து

மின்னல்

வீற்றுத்து

வீறு (=ஒளி, பிள) + உதி (=தோன்று) + உ = வீற்றுத்து >>> வித்துத்து = பிளப்பதைப் போலத் தோன்றும் ஒளி.

வித்துரு

மின்னல்

வீற்றுரு

வீறு (=ஒளி, பிள) + உரு (=தோன்று) = வீற்றுரு >>> வித்துரு = பிளப்பதைப் போலத் தோன்றும் ஒளி.

வித்துருமம், வித்துரு

பவளம்

பைத்துறுவம்

பை (=அழகு, நிறம், வலிமை) + துறு (=செறி) + அம் (=நீர்) = பைத்துறுவம் >>> பித்துருமம் >>> வித்துருமம், வித்துரு = நீருக்குள் செறிந்து காணப்படும் அழகிய நிறமுடைய வலிமையான பொருள்.

வித்துருமம்

முளை, இளந்தளிர்

வித்துருவம்

வித்து (=விதை) + உரு (=தோன்று) + அம் = வித்துருவம் >>> வித்துருமம் = விதையில் இருந்து தோன்றுவது

வித்துவஞ்சம்

அவமானம்

வீற்றுமாயம்

வீறு (=பெருமை) + மாய் (=அழி) + அம் = வீற்றுமாயம் >>> வித்துவாசம் >>> வித்துவஞ்சம் = பெருமையை அழிப்பது

வித்துவஞ்சம்

பகை, வெறுப்பு

வீற்றுபாசம்

வீறு (=வெட்டு, பிரி) + பாசம் (=அன்பு, நட்பு) = வீற்றுபாசம் >>> வித்துவஞ்சம் = நட்பைப் பிரிப்பது.

வித்துவம்

புலமை

வீற்றுவம்

வீறு (=ஒளி, அறிவு, மிகுதி) + அம் = வீற்றுவம் >>> வித்துவம் = மிக்க அறிவு,

வித்துவான்

புலவன்

வித்துவான்

வித்துவம் (=புலமை) >>> வித்துவான்

வித்துவேடம்

பகை

வீற்றுவேட்டம்

வீறு (=வெட்டு, பிரி) + வேட்டம் (=விருப்பம், நட்பு) = வீற்றுவேட்டம் >>> வித்துவேடம் = நட்பைப் பிரிப்பது

வித்துவேசணம்

பகை

வீற்றுமேயணம்

வீறு (=வெட்டு, பிரி) + மே (=அன்பு) + அணம் = வீற்றுமேயணம் >>> வித்துவேசணம் = அன்பைப் பிரிப்பது

வித்துவேசி

பகைவன்

வீற்றுமேயி

வீறு (=வெட்டு, பிரி) + மே (=அன்பு) + இ = வீற்றுமேயி >>> வித்துவேசி = அன்பைப் பிரிப்பவன்.

வித

விரிவாகப் பேசு

பீத்து

பீத்து (=விரிவாகப் பேசு) >>> வித

விதண்டம், விதண்டை

சிறிதும் பயனற்றது / பெரு வீண்

மீதண்டம்

மீ (=மிகுதி) + தண்டம் (=பயனின்மை, வீண்) = மீதண்டம் >>> விதண்டம் = சிறிதும் பயனற்றது / பெரு வீண்.

விததி

பெரும் கூட்டம்

வித்ததி

வித்தம் (=கூட்டம்) + அதி (=மிகுதி) = வித்ததி >>> விததி = பெரும் கூட்டம்

விததி

வரிசை, தெரு

வீறாறி

வீறு (=வெட்டு, வகு) + ஆறு (=நெறி) + இ = வீறாறி >>> விததி = வகுக்கப்பட்ட நெறி.

விததி

பெரும் பரப்பு, விரிவான இடம்

வீறறி

வீறு (=பெருமை) + அறை (=இடம்) + இ = வீறறி >>> விததி = பெரிய இடம்.