வியாழன், 12 நவம்பர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 55

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

விசயம்

கரும்புச்சாறு,  வெல்லப் பாகு, வெல்லக் கட்டி

வேழயம்

வேழம் (=கரும்பு) + அயம் (=நீர், சாறு) = வேழயம் >>> விசயம் = கரும்பில் இருந்து எடுக்கப்படும் நீர் / சாறு = கரும்புச் சாறு >>> வெல்லப்பாகு, வெல்லக்கட்டி

விசயம், விசையம்

வெற்றி

விசியம்

விசி (=கட்டு, அடக்கு, வெல்) + அம் = விசியம் >>> விசையம் >>> விசயம் = கட்டி அடக்குதல் / வெல்லுதல்

விசயம்

வருகை, நுழைகை

முழையம்

முழை (=நுழை, வா) + அம் = முழயம் >>> மிசயம் >>> விசயம் = நுழைகை / வருகை.

விசயம்

வாழ்தல், இருத்தல்

பிழையம்

பிழை (=வாழ், இரு) + அம் = பிழயம் >>> விசயம் = வாழ்தல், இருத்தல்.

விசயம்

ஆகாய விமானம்

விசையம்

விசை (=வானம், வேகமாகச் செல்) + அம் = விசயம் = வானத்தில் வேகமாகச் செல்வது.

விசயம்

சொல்ல விரும்புவது

விழையம்

விழை (=விரும்பு) + அம் (=சொல்) = விழயம் >>> விசயம் = சொல்ல விரும்புவது.

விசயம்

ஒளிவட்டம், சூரியமண்டலம்

பையாழம்

பை (=ஒளி) + ஆழி (=வட்டம்) + அம் = பையாழம் >>> பிசாயம் >>> விசயம் = ஒளிவட்டம்

விசயம்

ஆராய்ச்சி, சந்தேகம்

விழாயம்

விழை (=மதி, அள) + ஆய் (=நுண்மை) + அம் = விழாயம் >>> விசயம் = நுட்பமாக அளத்தல்.

விசயம், விசையம்

அடைக்கலம், பூமி

பிழையம்

பிழை (=தப்பு, வாழ்) + அம் = பிழையம் >>> விசையம் >>> விசயம் = தப்பி வாழும் இடம்.

விசர்

பைத்தியம்

மையல்

மையல் (=பைத்தியம்) >>> மியர் >> விசர்

விசர்க்கம்

ஒழிகை, விட்டுவிடுகை

வீசறுக்கம்

வீ (=ஒழி, நீங்கு) + சறுக்கு (=வழுவு) + அம் = வீசறுக்கம் >>> விசர்க்கம் = வழுவி ஒழிதல் / வழுவி நீங்குதல்.

விசர்க்கம்

மலம் கழித்தல்

பீயருக்கம்

பீ (=மலம்) + அருக்கு (=நீக்கு, கழி) + அம் = பீயருக்கம் >>> விசர்க்கம் = மலம் கழித்தல்.

விசர்க்கம்

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு

விசருகம்

விசை (=வெற்றி, வலப்பக்கம்) + அருகு (=நெருங்கு, சேர்) + அம் = விசருகம் >>> விசர்க்கம் = வலப்பக்கமாக நெருங்குதல் = சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு.

விசர்ச்சனம்

நீக்குகை, வெளியேற்றுகை

வீயறயணம்

வீ (=பிரி) + அறை (=நீங்குகை) + அணம் = வீயறயணம் >>> விசர்சனம் >>> விசர்ச்சனம் = நீங்குமாறு பிரித்தல்.

விசர்ச்சனம்

வெகுமதி

வீசருச்சணம்

வீசு (=வழங்கு) + அருச்சி (=பாராட்டு) + அணம் = வீசருச்சணம் >>> விசர்ச்சனம் = பாராட்டி வழங்கப்படுவது

விசர்ப்பு

பசி

பையார்வு

பை (=எரி) + ஆர்வு (=உண்ணுகை, விருப்பம்) = பையார்வு >>> பிசார்பு >>> விசர்ப்பு = உண்ணவிரும்பும் எரிதலுணர்வு.

விசரம்

கூட்டம்

மூசாரம்

மூசு (=மொய், கூடு) + ஆர் (=பொருந்து) + அம் = மூசாரம் >>> மிசரம் >>> விசரம் = கூடிப் பொருந்தியது.

விசரம்

கொலை

வீயறம்

வீ (=பறவை, உயிர்) + அறு (=நீக்கு) + அம் = வீயறம் >>> விசரம் = உயிரை நீக்குதல்.

விசரன்

பைத்தியக்காரன்

விசரன்

விசர் (=பைத்தியம்) + அன் = விசரன் = பைத்தியக்காரன்

விசலம், விசளம்

கஞ்சி

மிசலம்

மிசை (=உணவு) + அலம் (=வறுமை) = மிசலம் >>> விசலம் = வறுமை உணவு.

விசலம், விசளம்

இளந்தளிர்

பையளம்

பை (=பசுமை) + அளி (=ஈனு, படை) + அம் = பையளம் >>> பிசளம் >>> விசலம் = பசுமையாக ஈனப்படுவது.

விசலிகை

கொடிமல்லிகை

வீசளிகை

வீசு (=மண) + அளி (=குளிர்ச்சி, கொடு) + இக (=கட, பரவு, படர்) + ஐ = வீசளிகை >>> விசலிகை = நறுமணமும் குளிர்ச்சியும் தரும் பூக்களைக் கொண்ட படர்கொடி.

விசளை

அளவுப் பாத்திரம்

பிழாளை

பிழா (=பாத்திரம்) + அள + ஐ = பிழாளை >>> விசளை = அளக்கும் பாத்திரம்

விசனம்

கவலை, துயரம்

பையாணம்

பையா (=வருந்து, கவலைப்படு) + அணம் = பையாணம் >>> பிசனம் >>> விசனம் = கவலை, வருத்தம்

விசனம்

விடாமுயற்சி

முயாணம்

முய (=முயலு) + ஆணம் (=உறுதி) = முயாணம் >>> மிசாணம் >>> விசனம் = உறுதியான முயற்சி

விசனம்

வேட்டையாட / கொல்ல விருப்பம்

வீயாணம்

வீ (=அழி, கொல்) + ஆணம் (=விருப்பம்) = வீயாணம் >>> விசனம் = அழிப்பதில் / கொல்வதில் விருப்பம்

விசனம்

பேராசை

மீயாணம்

மீ (=பெரிய) + ஆணம் (-=விருப்பம், ஆசை) = மீயாணம் >>> விசனம் = பேராசை.

விசனம்

மக்களை அழித்தல்

வீசனம்

வீ (=அழி, கொல்) + சனம் (=மக்கள்) = வீசனம் >>> விசனம் = மக்களைக் கொல்லுதல்.

விசனம்

தனிமை

வீயணம்

வீ (=நீங்கு, தனி) + அணம் = வீயணம் >>> விசனம் = தனித்து இருத்தல்.

விசனம்

விசிறி

வீசணம்

வீசு + அணை (=பொருந்து, உதவி) + அம் = வீசணம் >>> விசனம் = காற்று பொருந்துமாறு வீச உதவுவது.

விசாணம்

விலங்குகளின் கொம்பு

மிசாணம்

மிசை (=தலை, உச்சி) + ஆணம் (=பற்றுக்கோடு) = மிசாணம் >>> விசாணம் = தலை உச்சியில் இருக்கும் பற்றுக்கோடு.

வியாதி, விசாதி

நோய்

வீயாற்றி

(2). வீ (=கேடு) + ஆற்று (=வலியடை, செய்) + இ = வீயாற்றி >>> வீயாத்தி >>> வியாதி = வலியும் கேடும் தருவது

விசாதி

வேறுபட்ட சாதி

வீசாதி

வீ (=மாறு) + சாதி = வீசாதி >>> விசாதி = மாறுபட்ட சாதி

விசாரணம், விசாரணை

நுணுகி அறிதல், ஆராய்ச்சி

வையறணம்

வை (=கூர்மை, நுட்பம்) + அறி + அணம் = வையறணம் >>> விசாரணம் >>> விசாரணை = நுணுகி அறிதல்.

விசாரணம், விசாரணை

மேற்பார்வை

மிசறணம்

மிசை (=மேற்புறம்) + அறி + அணம் = மிசறணம் >>> விசாரணம் >>> விசாரணை = மேற்புறமாக அறிதல்.

விசாரதன்

அறிஞன், வல்லவன்

மீயறத்தன்

மீ (=மேன்மை) + அறி + அத்து (=பொருந்து) + அன் = மீயறத்தன் >>> வீசரத்தன் >>> விசாரதன் = மேம்பட்ட அறிவு பொருந்தியவன் = அறிஞன், வல்லவன்

விசாரம்

நுணுகி அறிதல், ஆராய்ச்சி

வையறம்

வை (=கூர்மை, நுட்பம்) + அறி + அம் = வையறம் >>> விசரம் >>> விசாரம் = நுணுகி அறிதல்.

விசாரம்

கவலை

வீசாரம்

வீ (=துன்பம், வருத்தம்) + சாரி (=தொடர்ச்சி) + அம் = வீசாரம் >>> விசாரம் = தொடர்ந்து வருந்துதல்.

விசாரி

ஆராய், கேட்டறி

விசாரி

விசாரம் (=ஆராய்ச்சி) >>> விசாரி = ஆராய், கேட்டு அறி

விசாரி

கவலைப்படு

விசாரி

விசாரம் (=கவலை) >>> விசாரி = கவலைப்படு

விசாரி

ஆராய்ச்சியாளன்

விசாரி

விசாரம் (=ஆராய்ச்சி) + இ = விசாரி = ஆராய்ச்சியாளன்

விசாரிதன்

புகழ் மிக்கவன்

வியாரிதன்

விய (=போற்று, புகழ்) + ஆர் (=நிறை, மிகு) + இதன் = வியாரிதன் >>> விசாரிதன் = புகழ் மிக்கவன்.

விசாலம்

அகலமானது, பெரியது, விரிவு

வியலம்

வியல் (=அகலமான) + அம் = வியலம் >>> விசாலம் = அகலமானது, பெரியது, விரிவு

விசாலம்

பேரழகு

பையளம்

பை (=அழகு) +அள் (=செறி, மிகு) + அம் = பையளம் >>> பிசலம் >>> விசாலம் = அழகு மிக்கது

விசாலம்

பறவை

பையாலம்

பை (=விரி, பரவு, பற) + ஆலம் (=வானம்) = பையாலம் >>> பிசாலம் >>> விசாலம் = வானில் பறப்பது

விசாலம்

மான்

விசலம்

விசை (=வேகம், விரைவு) + அலை (=திரி, ஓடு) + அம் = விசலம் >>> விசாலம் = விரைந்து ஓடுவது.

விசாலம்

வாழை

பையளம்

பை (=அழகு, ஒளி) + அளி (=மிகுதி, கனி, கொடு) + அம் (=உணவு) = பையளம் >>> பிசலம் >>> விசாலம் = ஒளிமிக்க கனிகளை உணவாகக் கொடுப்பது

விசாலி

விரிவடை

விசாலி

விசாலம் (=விரிவு) >>> விசாலி = விரிவடை

விசானம்

மயானம்

பையாணம்

பை (=எரி) + ஆணம் (=உடல், இடம்) = பையாணம் >>> பிசானம் >>> விசானம் = உடலை எரிக்கும் இடம்.

விசி

தாமரைத் தண்டு

விச்சி

விச்சம் (=தாமரை) + இ = விச்சி >>> விசி = தாமரை நூல்

விசி

அலை

வியி

வியம் (=சமமற்றது) + இ = வியி >>> விசி = வளைவானது

விசிகம்

அம்பு

வீசிகம்

வீசு (=எறி, ஏவு) + இகு (=கொல்) + அம் = வீசிகம் >>> விசிகம் = ஏவிக் கொல்ல உதவுவது.

விசிகம்

இரும்பு உலக்கை

பையிங்கம்

பை (=வலிமை) + இங்கு (=குத்து) + அம் = பையிங்கம் >>> பிசிக்கம் >>> விசிகம் = குத்த உதவும் வலிய பொருள்.

விசிகம், விசிகரம்

நீரலை

வியிகம்

வியம் (=சமமற்றது, வளைவு) + இக (=கட, பரவு) + அம் (=நீர்) = வியிகம் >>> விசிகம் = வளைந்து பரவும் நீர்.

விசிகிலம்

மல்லிகை

மீயிகிளம்

மீ (=மிகுதி) + இகம் (=நறுமணம்) + இளமை (=மயக்கம்) + அம் = மீயிகிளம் >>> மிசிகிலம் >>> விசிகிலம் = மயங்கச் செய்யும் நறுமணம் மிக்கது.

விசிகை

கருத்து

மிசுகை

மிசை (=தலை) + உகை (=எழு, உதி, செலுத்து) = மிசுகை >>> விசிகை = தலையில் உதித்துச் செலுத்தப்படுவது = கருத்து.

விசிகை

தெரு

வீயிகை

விய (=கட) + இகம் (=நிலம்) + ஐ = வீயிகை >>> விசிகை = கடக்கும் நிலம்.

விசிகை

கடப்பாரை

விசிகை

விசை (=உயர்த்து, நெம்பு) + இக (=கட) + ஐ = விசிகை = நெம்பிக் கடத்துவது.

விசிகை

மருத்துவமனை

வீயிகை

வீ (=நோய், நீக்கு) + இகம் (=இடம்) + ஐ = வீயிகை >>> விசிகை = நோய் நீக்கும் இடம்.

விசிட்டம்

மிகச் சிறப்புடையது

மீயிற்றம்

மீ (=மிகுதி) + இறை (=மேன்மை, சிறப்பு) + அம் = மீயிற்றம் >>> விசிட்டம் = சிறப்பு மிக்கது

விசித்தி

கடுகு

வீசிற்றி

வீசம் (=விதை) + இறை (=தூவு, நுண்மை) + இ = வீசிற்றி >>> விசித்தி = தூவப்படும் நுண்ணிய விதைகள்.

விசித்திரம்

சிறப்பான வேலைப்பாடு

மிசைத்திறம்

மிசை (=மேன்மை, சிறப்பு) + திறம் (=திறமை, வேலைப்பாடு) = மிசைத்திறம் >>> விசித்திரம் = சிறந்த வேலைப்பாடு

விசித்திரம்

பேரழகு

மீசித்திரம்

மீ (-=மிகுதி) + சித்திரம் (=அழகு) = மீசித்திரம் >>> விசித்திரம் = மிகுந்த அழகு

விசித்திரம்

அதிசயம், வேடிக்கை

விழித்திறம்

விழி (=விய, திகை) + திறம் (=வகை) = விழித்திறம் >>> விசித்திரம் = வியக்கும் / திகைக்கும் வகையினது.

விசித்திரம்

இறுமாப்பு

விசைத்திறம்

விசை (=துள்ளு, திமிர்) + திறம் (=தன்மை) = விசைத்திறம் >>> விசித்திரம் = திமிர்த்தன்மை.

விசித்திரம்

நிலையான மேன்மை

மிசைத்திரம்

மிசை (=மேன்மை) + திரம் (=நிலைபேறு) = மிசைத்திரம் >>> விசித்திரம் = நிலையான மேன்மை.

விசிதம், பிசிதம்

சாம்பல்

பையிறம்

(2) பை (=எரி, வெண்மை) + இறு (=முடி) + அம் = பையிறம் >>> பிசிதம் >>> விசிதம் = எரிந்து முடிந்த வெண்பொருள்.

விசிதம்

வெண்மை

பையிதம்

பை (=அழகு, ஒளி, நிறம்) + இதம் (=நன்மை) = பையிதம் >>> பிசிதம் >>> விசிதம் = நல்ல நிறம் = வெண்ணிறம்.

விசிமந்தம், பிசிமந்தம், பிசுமந்தம்

வேம்பு

பையீபாந்தம்

பை (=பசுமை, குளிர்ச்சி) + ஈ (=கொடு) + பாந்து (=மூடு, நிழல்செய்) + அம் = பையீபாந்தம் >>> பிசிமந்தம் >>> விசிமந்தம் = குளிர்ந்த நிழல் தரும் பசுமரம்.

விசியுழி

வெற்றி நோக்கம்

விசையுளி

விசை (=வெற்றி) + உள் (=கருது) + இ = விசையுளி >>> விசியுழி = வெற்றியை மட்டுமே கருதுதல்.

சிரமம்

உடல் உழைப்பு

உரவம்

உரவு (=வலிமை, கடுமை, அலை, திரி) + அம் = உரவம் >>> சுரவம் >>> சிரமம் = கடுமையாக அலைந்து திரிதல்.

விசிராமம்

ஓய்வு, அமைதி

வீசிரமம்

வீ (=நீங்கு, ஒழி) + சிரமம் (=உடல் உழைப்பு) = வீசிரமம் >>> விசிராமம் = உடல் உழைப்பு ஒழிந்த நிலை.

விசிலம்

கஞ்சி

மிசிலம்

மிசை (=உணவு) + இலம் (=வறுமை) = மிசிலம் >>> விசிலம் = வறுமையின் உணவு.

விசுத்தம், விசுத்தி

மிகத் தூய்மை

மீசுத்தம்

மீ (=மிகுதி) + சுத்தம் (=தூய்மை) = மீசுத்தம் >>> விசுத்தம்

விசுத்தி

பந்த நீக்கம், விடுதலை

வீசுற்றி

வீ (=நீங்கு) + சுற்றம் (=பந்தம்) + இ = வீசுற்றி >>> விசுத்தி = பந்த நீக்கம்

விசுத்தி

ஆராய்ச்சி, சந்தேகம்

வையுற்றி

வை (=கூர்மை, நுட்பம்) + உறு (=நினை, கருது) + இ = வையுற்றி >>> விசுத்தி = நுட்பமாகக் கருதுதல்.

விசுத்தி

திருத்தம்

பிழுத்தி

பிழை + உத்து (=நீக்கு) + இ = பிழுத்தி >>> விசுத்தி = பிழையை நீக்குதல்.

விசுத்தி

சமமாக /ஒப்பாகக் கருதப்படுவது

பிசுற்றி

பிசி (=சமம்) + உறு (=கருது) + இ = பிசுற்றி >>> விசுத்தி = சமமாகக் கருதப்படுவது.

விசுதம்

புடலங்காய்

பையிறம்

பை (=பசுமை, வெண்மை) + இறை (=வளைந்து தொங்கு) + அம் (=உணவு) = பையிறம் >>> பிசிதம் >>> விசுதம் = பச்சைநிறமும் வெண்நிறமும் கொண்டு வளைந்து தொங்கும் உணவுப் பொருள்.

விசுமிகினி

வேம்பு

விசும்பிகினி

விசும்பு (=மேகம்) + இகு (=தாழ்த்து, வீழ்த்து) + ஈனு (=படை) + இ = விசும்பிகினி >>> விசுமிகினி = மேகங்களைத் தாழ்த்தி வீழ்த்தி மழையைப் படைக்க வல்லது.

விசுருதி

புகழ்

வியுறுதி

விய (=பாராட்டு) + உறுதி (=சொல்) = வியுறுதி >>> விசுருதி = பாராட்டுச் சொல்

விசுவம், விச்`வம்

ஆகாயம், அண்டம்

விசும்பம்

விசும்பு (=ஆகாயம், அண்டம்) + அம் = விசும்பம் >>> விசுவ்வம் >>> விசுவம் >>> விச்`வம்

விசுவம், விச்`வம்

திருமால்

விசும்பம்

விசும்பு (=மேகம்) + அம் = விசும்பம் >>> விசுவ்வம் >>> விசுவம் >>> விச்`வம் = மேக உருவினன்

விசுவம்

சுக்கு

பையுவம்

பை (=பசுமை, எரி) + உவி (=வற்று, மெலி) + அம் (=உணவு) = பையுவம் >>> பிசுவம் >>> விசுவம் = பசுமை வற்றி மெலிந்த எரியக் கூடிய உணவுப் பொருள்.

விசுவம்

உண்மை

 

விழு (=நேர், நிகழ்) + அம் = விழுவம் >>> விசுவம் = நேர்வு, நிகழ்வு, உண்மை.

விசுவாசம், விச்`வாசம்

உண்மையாய் இருத்தல்

விசைவாசம்

(2) விசை (=உறுதி, உண்மை) + வாசம் (=இருத்தல்) = விசைவாசம் >>> விசிவாசம் >>> விசுவாசம், விச்`வாசம் >>> உண்மையுடன் இருத்தல்.

விசுவாசி

வேங்கை

வீயீவயி

வீ (=மலர்) + ஈ (=படை) + வயம் (=புலி, வரி) + இ = வீயீவயி >>> விசிவசி >>> விசுவாசி = புலியின் வரிகளைப் போல மலர்களைப் படைப்பது.

விசுவா மித்திரம்

போலித்தன்மை, புரட்டு

விழுமமிற்றிறம்

விழுமம் (=தூய்மை, உண்மை) + இல் + திறம் (=தன்மை) = விழுமமிற்றிறம் >>> விசுவமித்திரம் >>> விசுவாமித்திரம் >>> உண்மை அற்ற நிலை.

விசுளி

கள்

பையுளீ

பையுள் (=மயக்கம்) + ஈ (=கொடு) = பையுளீ >>> பிசுளி >>> விசுளி = மயக்கம் தருவது.

விசூகை

தலைச்சுற்றல்

மூழுக்கை

மூழ் (=வளை, சுற்று) + உக்கம் (=தலை) + ஐ = மூழுக்கை >>> மிசுக்கை >>> விசூகை = தலை சுற்றுதல்.

விசூசிகை

வாந்திபேதி

மிசூழிகை

மிசை (=உண்ணு, உணவு) + ஊழ் (=பதனழி, கெடு) + இகு (=வெளியேறு, ஒலி) + ஐ = மிசூழிகை >>> விசூசிகை = உண்ட உணவு கெட்டு ஒலியுடன் வெளியேறுதல்.

விசேடணம்

அடைமொழி

வியேற்றணம்

விய (=பாராட்டு, புகழ்) + ஏற்று (=பொருத்து) + அணம் = வியேற்றணம் >>> விசேட்டணம் >>> விசேடணம் = புகழுக்காகப் பொருத்தப்படுவது.

விசேடம்

அடைமொழி

வியேற்றம்

விய (=பாராட்டு, புகழ்) + ஏற்று (=பொருத்து) + அம் (=சொல்) = வியேற்றம் >>> விசேட்டம் >>> விசேடம் = புகழுக்காகப் பொருத்தப்படும் சொல்.

விசேடம்

தனிச்சிறப்பு

மிசேறம்

மிசை (=மேன்மை, சிறப்பு) + எறி (=நீக்கு, தனிமைசெய்) + அம் = மிசேறம் >>> விசேடம் = தனிச்சிறப்பு.

விசேடம்

சிறப்புச் செய்தி

மிசேறம்

மிசை (=மேன்மை, சிறப்பு) + ஏறு (=ஒலி, கூறு) + அம் = மிசேறம் >>> விசேடம் = சிறப்பாகக் கூறுவது.

விசேடி

சிறப்பாக்கிக் கூறு

விசேடி

விசேடம் (=சிறப்பு) >>> விசேடி = சிறப்பாக்கிக் கூறு

விசேடியம்

சிறப்பு பெற்றது

விசேடியம்

விசேடம் (=சிறப்பு) + இயை (=பொருந்து) + அம் = விசேடியம் = சிறப்பு பொருந்தியது.

விசேளம்

அடைமொழி

வியேலம்

விய (=பாராட்டு, புகழ்) + ஏல் (=பொருந்து) + அம் (=சொல்) = வியேலம் >>> விசேளம் = பாராட்டுக்காகப் பொருத்திய சொல்.

விசேசம்

அடைமொழி, சிறப்புச்சொல்

வியேயம்

(1) விய (=பாராட்டு, புகழ்) + ஏய் (=பொருந்து) + அம் (=சொல்) = வியேயம் >>> விசேசம் = பாராட்டுக்காகப் பொருத்திய சொல். (2) மிசை (=மேன்மை, சிறப்பு) + ஏய் (=பொருந்து) + அம் (=சொல்) = மிசேயம் >>> விசேசம் = சிறப்புச் சொல்

விசோகம்

கவலையின்மை

வீசோகம்

வீ (=நீங்கு) + சோகம் (=கவலை) = வீசோகம் >>> விசோகம்

விசோதனம்

சுத்தம் செய்தல்

மையொற்றணம்

மை (=கறை, களங்கம்) + ஒற்று (=தள்ளு, நீக்கு) + அணம் = மையொற்றணம் >>> மிசொத்தனம் >>> விசோதனம் = கறையை / களங்கத்தை நீக்குதல்.

விஞ்சனம்

முத்திரை, அடையாளம்

மிச்சாணம்

மிசை (=மேன்மை, சிறப்பு) + ஆணை (=உருவம்) + அம் = மிச்சாணம் >>> விஞ்சனம் = மேன்மை காட்டும் உருவம்

விஞ்சனம், வெஞ்சனம்

காய்க் குழம்பு, குழம்புக் காய்

மூசாணம்

மூசு (=காய்) + ஆணம் (=குழம்பு) = மூசாணம் >>> மிஞ்சனம் >>> விஞ்சனம் = காய்க் குழம்பு, குழம்புக் காய்

விஞ்சை, விஞ்ஞை

அறிவு, கல்வி

விச்சை

விச்சை (=அறிவு) >>> விஞ்சை >>> விஞ்ஞை = கல்வி, கலை

விஞ்ஞாதம்

நன்கு அறியப்பட்டது

மீயறம்

மீ (=மிகுதி) + அறி + அம் = மீயறம் >>> விசதம் >>> விச்சாதம் >>> விஞ்ஞாதம் = மிகவும் அறியப்பட்டது

விஞ்ஞாதம்

மேலான அறிவு

மீயறம்

மீ (=மிகுதி, மேன்மை) + அறி + அம் = மீயறம் >>> விசதம் >>> விச்சாதம் >>> விஞ்ஞாதம் = மேலான அறிவு.

விஞ்ஞாபனம்

விண்ணப்பம்

வீழவாணம்

விழு (=பணி, சொல்) + அவா (=விருப்பம்) + அணம் = வீழவாணம் = விசபானம் >>> விச்சாபனம் >>> விஞ்ஞாபனம் = விருப்பத்தைப் பணிவாகக் கூறுதல்.

ஞானம்

உண்மை, அறிவு

ஆணை

ஆணை (=உண்மை) + அம் >>> ஆணம் >>> யாணம் >>> ஞானம் = உண்மை, அறிவு.

விஞ்ஞானம்

உண்மை அறிவு

மெய்ஞ்ஞானம்

மெய் (=உண்மை) + ஞானம் (=அறிவு) = மெய்ஞ்ஞானம் >>> மிஞ்ஞானம் >>> விஞ்ஞானம் = உண்மை அறிவு

விஞ்ஞானம்

உலக அறிவு

வைஞ்ஞானம்

வை (=உலகம்) + ஞானம் (=அறிவு) = வைஞ்ஞானம் >>> விஞ்ஞானம் = உலகம் பற்றிய அறிவு

விச்`தாரம்

பெரும்பரப்பு

விய்யாரம்

விய (=பரவு) + ஆர் (=மிகு, பெரு) + அம் = விய்யாரம் >>> விச்சாரம் >>> விச்`தாரம் = பெரும் பரப்பு

விட்கம்பம்

விட்டக் கம்பு

விட்டகம்பம்

விட்டம் + கம்பு + அம் = விட்டகம்பம் >>> விட்கம்பம்

விட்கம்பம்

பெரிய இடம், பெரும்பரப்பு

வீறுகாப்பம்

வீறு (=பெருமை) + காப்பு (=இடம்) + அம் = வீறுகாப்பம் >>> விடுகம்பம் >>> விட்கம்பம்.

விட்சேபம்

ஏவி எறியப் படுவது

வீசேவம்

வீசு (=எறி) + ஏவு + அம் = வீசேவம் >>> விச்சேவம் >>> விட்சேபம் = ஏவி எறியப்படுவது.

விட்சேபம்

சுருங்கி நீளும் தன்மை

விச்சேவம்

விசி (=கட்டு, சுருக்கு) + ஏவு (=செலுத்து, நீட்டு) + அம் = விச்சேவம் >>> விட்சேபம் = சுருங்கி நீளும் தன்மை

விட்சேபம்

வான்மண்டல மத்தியிரேகை

முச்சேவம்

முசி (=வெட்டு, நடு) + ஏ (=மேலிடம், வானம்) + அம் = முச்சேவம் >>> மிட்சேபம் >>> விட்சேபம் = வானத்தை நடுவில் வெட்டுவதாகக் கருதப்படும் கோடு.

விட்சேபம்

பேரச்சம், மனக்கலக்கம்

விறச்செப்பம்

விற (=மிகு, அஞ்சு) + செப்பம் (=நெஞ்சு, மனம்) = விறச்செப்பம் >>> விற்செபம் >>> விட்சேபம் = உள்ளத்தில் மிகுதியாக அஞ்சுதல், உள்ளம் கலங்குதல்.

விட்டபம்

பூமி

முற்றமம்

முற்று (=சூழ்) + அம் (=நீர்) + அம் = முற்றமம் >>> மிட்டபம் >>> விட்டபம் = நீரால் சூழப்பட்டது.

விட்டம்

குறுக்காகத் தாங்கும் ஆதாரம்

முட்டம்

முட்டு (=குறுக்கிடு, தாங்கு, ஆதாரம்) + அம் = முட்டம் >>> மிட்டம் >>> விட்டம் = குறுக்காகத் தாங்கும் ஆதாரம்.

விட்டம்

வட்டத்தைப் பகுப்பது

வீற்றம்

வீறு (=வட்டம், வெட்டு, பகு) + அம் = வீற்றம் >>> விட்டம் = வட்டத்தைப் பகுப்பது.

விட்டம்

உடல்

முட்டை

முட்டை (=உடல்) + அம் = முட்டம் >>> மிட்டம் >>> விட்டம்

விட்டரம்

இருக்கை

வீற்றாரம்

வீறு (=அமர், பொருள்) + ஆர் (=பொருந்து) + அம் = வீற்றாரம் >>> விட்டரம் = பொருந்தி அமரும் பொருள்.

விட்டரம்

கொள்கலம்

பிட்டாரம்

பிடி (=கொள்) + ஆர் (=நிறை) + அம் = பிட்டாரம் >>> விட்டரம் = கொண்டு நிறைவது

விட்டரம்

மரம்

வீற்றாரம்

வீறு (=கிளை, பெருமை) + ஆர் (=பூமி, பொருந்து) + அம் = வீற்றாரம் >>> விட்டரம் = பூமியில் பொருந்தி பெரிதாகக் கிளைத்து வளர்வது.

விட்டரம்

கைப்பிடிப் பசும்புல்

பிட்டரம்

பிடி + அரி (=புல்) + அம் = பிட்டரம் >>> விட்டரம் = கைப்பிடிப் பசும்புல்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.