புதன், 6 ஏப்ரல், 2022

107. (சவுக்கம் > சச்~டி) சமக்கிருதச் சொற்பிறப்பியல் - Sanskrit Etymology in Tamil

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சவுக்கம்

சதுரம்

செமுக்கம்

செம்மை (=சமம், செங்குத்து) + உகை (=எழு) + அம் (=நீளம்) = செமுக்கம் >>> சவுக்கம் = செங்குத்தாக எழுகின்ற சமமான நீளங்களைக் கொண்டது = சதுரம்

சவுக்கம்

ஒலி தேயும் காலம்

செவுக்கம்

செவ்வி (=காலம்) + உகு (=தேய்) + அம் (=ஒலி) = செவுக்கம் >>> சவுக்கம் = ஒலி தேயும் காலம்

சவுக்கம்

நேர்மையான விரும்பத்தக்க பேச்சு

செமுக்கம்

செம்மை (=நேர்மை) + உக (=விரும்பு) + அம் (=பேச்சு) = செமுக்கம் >>> சவுக்கம் = நேர்மையான விரும்பத்தக்க பேச்சு

சவுக்கம்

கல் செதுக்கும் உளி

சவுக்கம்

சவுக்கு (=குறை, செதுக்கு) + அம் (=கல்) = சவுக்கம் = கல்லைச் செதுக்குவது = கல் உளி

சவுக்கம்

துண்டு

சவுக்கம்

சவுக்கு (=வெட்டு, துண்டி) + அம் = சவுக்கம் = துண்டு

சவுக்கம்

சதுரத் துண்டு

சவுக்கம்

சவுக்கம் (=சதுரம், துண்டு) >>> சவுக்கம் = சதுரத் துண்டு

சவுக்களி

காதணி

செவிக்கலி

செவி (=காது) + கலை (=அணி) + இ = செவிக்கலி >>> சவுக்களி = காதில் அணிவது

சவுக்களி

ஆடை

அப்புக்கலி

ஆப்பு (=உடல், கட்டு) + கலை (=அணி) + இ = அப்புக்கலி >>> சவுக்களி = உடலில் கட்டுகின்ற அணி = உடை

சவுக்கியம்

நலம், இன்பம்

அவுக்கியம்

அவம் (=கேடு, துன்பம்) + உகு (=நீங்கு) + இயம் (=தன்மை) = அவுக்கியம் >>> சவுக்கியம் >>> சௌக்கியம் = துன்பம் நீங்கியுள்ள தன்மை = இன்பம், நன்மை, நலம்

சவுக்கு

செலுத்துவதற்காக அடிப்பது

அப்புக்கு

அப்பு (=அடி) + உகை (=செலுத்து) + உ = அப்புக்கு >>> சவுக்கு = செலுத்துவதற்காக அடிப்பது

சவுக்கு, சவுக்கை

திண்ணை

அவுக்கு

அவை (=இடம்) + உகை (=உயர், எழுப்பு) + உ = அவுக்கு >>> சவுக்கு = உயரமாக எழுப்பப்பட்ட இடம் = திண்ணை

சவுக்கை

சிறை

எமுக்கை

ஏமம் (=காவலுடைய இடம்) + உகு (=கொடு, கெடு, தவறு) + ஐ = எமுக்கை >>> அவுக்கை >>> சவுக்கை = தவறுக்காகக் கொடுக்கப்படும் காவலுடைய இடம்

சவுக்கை

காவல் நிலையம்

எமுக்கை

ஏமம் (=பாதுகாப்பு) + உகு (=கொடு) + ஐ = எமுக்கை >>> அவுக்கை >>> சவுக்கை = பாதுகாப்பு தருவது

சவுக்கை

விலைமலிவு

எமுக்கை

ஏமம் (=பொன், பொருள், பணம்) + உகு (=தேய், குறை, கொடு) + ஐ = எமுக்கை >>> அவுக்கை >>> சவுக்கை = குறைந்த பணத்திற்குப் பொருளைக் கொடுத்தல்

சவுகரியம், சௌகரியம்

தடையின்மை, சுதந்திரம்

சவுக்கரியம்

சவுக்கை (=சிறை, தடை) + அரி (=நீங்கு) + அம் = சவுக்கரியம் >>> சவுகரியம் = தடையின்மை

சவுசம், சௌசம்

சுத்தம் செய்தல், பாவமன்னிப்பு

அவுயம்

அவம் (=குற்றம், கறை) + உய் (=நீக்கு) + அம் = அவுயம் >>> சவுசம் = குற்றம் / கறை நீக்குதல்

சவுசன்னியம், சௌசன்னியம்

இனிய குணம்

அவுயன்னியம்

அவம் (=தீங்கு) + உய் (=கொடு) + அன்மை + இயம் (=தன்மை) = அவுயன்னியம் >>> சவுசன்னியம் = தீங்கு தராத தன்மை = இனிய குணம்

சவுசன்னியம், சௌசன்னியம்

நட்பு

அவிழன்னியம்

அவிழ் (=நீங்கு) + அன்னியம் (=வேற்றுமை) = அவிழன்னியம் >>> சவுசன்னியம் = வேற்றுமை அற்றது

சவுடோல்

அம்பாரி

அப்பிறோயல்

அப்பு (=யானை, அம்பு) + இறை (=இடம், உயரம், மேல்) + ஒய் (=செலுத்து) + அல் = அப்பிறோயல் >>> சவிடோயல் >>> சவுடோல் = யானையின் மேல் அம்பு செலுத்துமிடம்

சவுண்டம், சௌண்டம்

கள்

எமூட்டம்

ஏம் (=இன்பம், மயக்கம்) + ஊட்டு + அம் (=நீர், உணவு) = எமூட்டம் >>> அவுண்டம் >>> சவுண்டம் = இன்பமும் மயக்கமும் ஊட்டுகின்ற நீருணவு = கள்

சவுண்டிகன், சௌண்டிகன்

கள் விற்பவன்

சவுண்டிகன்

சவுண்டம் (=கள்) + இகு (=கொடு) + அன் = சவுண்டிகன் = கள்ளைத் தருபவன்

சவுத்தி, சௌத்தி

சதுரம்

செவுற்றி

செம்மை (=சமம், செங்குத்து) + உறை (=நீளம்) + இ = செவுற்றி >>> சவுத்தி = சமமான செங்குத்தான நீளங்களைக் கொண்டது = சதுரம்

சவுத்து, சௌத்து, சவுதம்

செயல் திட்டம், சடங்கு

அமுத்து

அமை (=செய்) + உத்தி (=திட்டம்) + உ = அமுத்து >>> சவுத்து = செயல் திட்டம்

சவுத்து, சௌத்து

நாலில் ஒரு பங்காகச் செலுத்துப் படுவது

சவுத்துய்

சவுத்தி (=சதுரம், நான்கு) + உய் (=பிரி, வகு, கொடு) = சவுத்துய் >>> சவுத்து = நான்காக வகுத்துக் கொடுப்பது

சவுதம், சௌதம்

விலைக் குறைவு

எமுறம்

ஏமம் (=தங்கம், பணம்) + உறை (=கொடு, பொருள், குறைவு) + அம் = எமுறம் >>> அவுதம் >>> சவுதம் = குறைந்த பணத்திற்குப் பொருளைக் கொடுத்தல்

சவுதம், சௌதம்

விற்பனை ஆகாதது

அவிற்றம்

ஆய் (=நீங்கு, இல்லாகு) + விற்று (=விற்பனை) + அம் = அவிற்றம் >>> சவுத்தம் >>> சவுதம் = விற்பனை ஆகாதது

சவுதம், சௌதம்

ஓய்வு, சோர்வு

அவுந்தம்

(1) அவி (=இல்லாகு) + உந்து (=அசை) + அம் = அவுந்தம் >>> சவுதம் = அசைவின்மை = ஓய்வு. (2) ஆவி (=வலிமை) + உந்து (=நீங்கு, இல்லாகு) + அம் = அவுந்தம் >>> சவுதம் = வலிமை இன்மை = சோர்வு

சவுதி

சடங்கு செய்வோன்

சவுதி

சவுதம் (=சடங்கு) + இ = சவுதி = சடங்கு செய்பவன்

சவுந்தரம், சவுந்தரியம், சௌந்தரியம்

அழகு

சுந்தரம்

(1) சுந்தரம் (=அழகு) >>> சௌந்தரம் >>> சவுந்தரம் (2) சுந்தரம் (=அழகு) + இயம் = சுந்தரியம் >>> சௌந்தரியம்

சவுபாக்கியம், சௌபாக்கியம்

செல்வம் மற்றும் இன்பத்தின் மிகுதி

உப்பாக்கியம்

உப்பு (=இன்பம், மிகு) + ஆக்கம் (=செல்வம்) + இயம் (=நிலை) = உப்பாக்கியம் >>> சுப்பாக்கியம் >>> சௌபாக்கியம் = செல்வமும் இன்பமும் மிக்க நிலை

சவுபானம், சௌபானம்

மாடிப்படி, ஏணி

உப்பாணம்

உப்பு (=உயர்) + ஆணம் (=பற்றுக்கோடு) = உப்பாணம் >>> சுப்பானம் >>> சௌபானம் = உயர்வதற்கான பற்றுக்கோடு

சவுமியம், சௌமியம்

அமைதியான அழகு

அம்மியம்

அம்மை (=அமைதி, அழகு) + இயம் = அம்மியம் >>> சவ்மியம் >>> சௌமியம் = அமைதியான அழகு

சவுரம், சௌரம்

சூரியன்

ஊரம்

உரு (=எரி) + அம் (=ஒளி) = ஊரம் >>> சூரம் >>> சௌரம் = எரிக்கும் ஒளியுடையவன் = சூரியன்

சவுரி, சௌரி

எமன்

அவுரி

ஆவி (=உயிர்) + உரி (=அபகரி) = அவுரி >>> சவுரி = உயிரை அபகரிப்பவன் = எமன்

சவுரி, சௌரி

திருடன்

யமுரி

யாமம் (=இருள்) + உரி (=அபகரி) = யமுரி >>> சவுரி = இருளில் அபகரிப்பவன் = திருடன்

சவுரியம், சௌரியம்

திருட்டு

யமுரியம்

யாமம் (=இருள்) + உரி (=அபகரி) + அம் = யமுரியம் >>> சவுரியம் = இருளில் அபகரித்தல் = திருட்டு

சவுரியம், சௌரியம்

வீரம்

சூரியம்

சூர் (=வீரம்) + இயம் = சூரியம் >>> சௌரியம்

சவுல், சௌல்

மகிழ்ச்சி

அமுள்

அம் (=இனிமை) + உள் (=உள்ளம்) = அமுள் >>> சவுல் >>> சௌல் = உள்ளத்து இனிமை = மகிழ்ச்சி

சவுல், சௌல்

கருப்பம்

சூல்

சூல் (=கருப்பம்) >>> சௌல்

சவுளம், சௌளம்

மயிர் மழிக்கை

அவுளம்

அவி (=குறை, நீக்கு) + உளை (=மயிர்) + அம் = அவுளம் >>> சவுளம் >>> சௌளம் = மயிர் குறைப்பு / நீக்கம்

சவை

கூட்டம்

அவை

அவை (=கூட்டம்) >>> சவை

சள்ளல்

சேறு

அள்ளல்

அள்ளல் (=சேறு) >>> சள்ளல்

சள்ளை

சண்டை

எல்லை

ஏல் (=சண்டையிடு) + ஐ = எல்லை >>> அள்ளை >>> சள்ளை = சண்டை

சளகன்

நிலையற்ற மனம் கொண்டவன்

அலகன்

அலை + அகம் (=மனம்) + அன் = அலகன் >>> சளகன் = அலையும் மனம் கொண்டவன்

சளம்

துன்பம்

அலம்

அலை (=வருத்து, துன்புறுத்து) + அம் = அலம் >>> சளம் = துன்பம்

சளம்

வஞ்சனை, பொய்

அலம்

அலை (=நிலைகெடு, மயக்கு) + அம் = அலம் >>> சளம் = மயக்குவது = வஞ்சனை, பொய்

சளம்

கோபம்

சலம்

சலி (=சின) + அம் = சலம் >>> சளம் = சினம்

சளி

குளிர்ச்சி

அளி

அளி (=குளிர்ச்சி) >>> சளி

சளி

கபம்

அலிழை

ஆலி (=வெண்ணிற நீர்க் கட்டி) + இழை (=மென்மையாக்கு, மூச்சிரை) = அலிழை >>> சளி = மூச்சிரைக்கச் செய்யும் மென்மையான வெண்ணிற நீர்க் கட்டி = கபம்.

சளுக்கு

செருக்கு, மதியாமை

அலூக்கு

அல் (=இன்மை) + ஊக்கு (=கருது, மதி) = அலூக்கு >>> சளுக்கு = மதியாமை

சளுகம், சளூகம்

அட்டைப் பூச்சி

அள்ளூக்கம்

அள்ளு (=கையால் எடு) + ஊக்கு (=நெகிழ், தப்பு) + அம் (=பூச்சி) = அள்ளூக்கம் >>> சளூகம் >>> சளுகம் = கையால் எடுத்தால் நெகிழ்ந்து தப்புகின்ற பூச்சி

சளை

வருந்து, சோர்

அலை

அலை (=வருந்து, சோர்) >>> சளை

சற்கருமம்

நற்செயல்

அறுகருமம்

ஆறு (=நன்மை) + கருமம் (=செயல்) = அறுகருமம் >>> சற்கருமம் = நற்செயல்

சற்கரி

உபசரி

அறுகரி

ஆறு (=அடங்கு, பணி) + கரை (=அழை) + இ = அறுகரி >>> சற்கரி = அழைத்துப் பணி

சற்காரம்

உபசாரம்

சற்கரம்

சற்கரி (=உபசரி) + அம் = சற்கரம் >>> சற்காரம்

சற்குணம்

நற்பண்பு

அறுகுணம்

ஆறு (=நன்மை) + குணம் (=பண்பு) = அறுகுணம் >>> சற்குணம் = நற்பண்பு

சற்குரு

ஆசாரியன்

அறுகுரு

ஆறு (=அறம், வழி)) + குரு (=ஆசிரியன்) = அறுகுரு >>> சற்குரு = அறவழி ஆசிரியன்

சற்சங்கம்

அறவழிக் கூட்டம்

அறுசங்கம்

ஆறு (=அறம், வழி) + சங்கம் (=கூட்டம்) = அறுசங்கம் >>> சற்சங்கம் = அறவழிக் கூட்டம்

சற்சலம்

தெளிந்த நீர்

எற்சலம்

எல் (=ஒளி, தெளிவு) + சலம் (=நீர்) = எற்சலம் >>> அற்சலம் >>> சற்சலம் = ஒளி / தெளிவுடைய நீர்

சறை

தாழ்வு

அறை

அறை (=பள்ளம், தாழ்வு) >>> சறை

சன்மம், சென்மம்

பிறப்பு

என்மம்

ஏல் (=நிகழ், தோன்று) + மம் = என்மம் >>> சென்மம் >>> சன்மம் = தோற்றம், பிறப்பு

சன்மார்க்கம்

நன்னெறி

அணுமருங்கம்

ஆணு (=நன்மை) + மருங்கு (=வழி, நெறி) + அம் = அணுமருங்கம் >>> சனுமருக்கம் >>> சன்மார்க்கம் = நன்னெறி

சன்மானம், சென்மானம்

வெகுமதி

என்மாணம்

ஏல் (=தகு, பெறு) + மாண் (=சிறப்பு) + அம் = என்மாணம் >>> சென்மானம் >>> சன்மானம் = சிறப்புக்குத் தக்கவாறு பெறப்படுவது = வெகுமதி

சன்னத்தம்

தயாராகுகை

அண்ணாற்றம்

அண்ணு (=நெருங்கு) + ஆற்று (=செய்) + அம் = அண்ணாற்றம் >>> சன்னத்தம் = செயலுக்கு நெருக்கமாதல்

சன்னத்தம்

போர்க்கவசம்

அண்ணற்றம்

அணி + அறு (=மறை) + அம் (=போர்) = அண்ணற்றம் >>> சன்னத்தம் = போருக்காக மறைத்து அணிவது

சன்னதம்

ஆவேசம்

அண்ணேற்றம்

அணு (=உயிர்) + ஏறு (=குடிபுகு) + அம் (=தெய்வம்) = அண்ணேற்றம் >>> அன்னேத்தம் >>> சன்னதம் = தெய்வம் உயிரில் குடிபுகுதல்

சன்னதம்

தெய்வ வாக்கு

அண்ணேற்றம்

அணு (=உயிர்) + ஏறு (=குடிபுகு) + அம் (=தெய்வம், சொல்) = அண்ணேற்றம் >>> அன்னேத்தம் >>> சன்னதம் = தெய்வம் உயிரில் குடிபுகுந்து சொல்வது

சன்னதம்

கடுங்கோபம்

அன்றதம்

அன்று (=சின) + அதி (=மிகுதி) + அம் = அன்றதம் >>> சன்னதம் = மிக்க சினம்

சன்னதம்

செருக்கு

அண்ணறம்

அணை (=படு, அடங்கு) + அறு (=இல்லாகு) + அம் = அண்ணறம் >>> சன்னதம் = அடக்கம் இல்லாமை

சன்னதி, சன்னிதி

கோயில்

அண்ணிறி

அணை (=கட்டு) + இறை (=கடவுள், தங்கல்) + இ = அண்ணிறி >>> சன்னிதி = கடவுள் தங்குவதற்காக கட்டப்படுவது = கோயில்

சன்னதி, சன்னிதி

கடவுட்கு முன்னுள்ள இடம்

அண்ணிறி

அணை (=இடம்) + இறை (=கடவுள், முன்புறம்) + இ = அண்ணிறி >>> சன்னிதி = கடவுட்கு முன்னுள்ள இடம்

சன்னம்

சிறுமை, நுட்பம்

ஆணம்

ஆணம் (=சிறுமை, நுட்பம்) >>> சாணம் >>> சன்னம்

சன்னம்

சாந்து

ஆணம்

ஆணம் (=சிறுமை, நுட்பம், குழைவு) >>> சாணம் >>> சன்னம் = நுட்பமாய்க் குழைந்தது = சாந்து

சன்னல்

பலகணி

சன்னளை

சன்னம் (=சிறுமை) + அளை (=பொருத்து, வீடு, ஓட்டை) = சன்னளை >>> சன்னல் = சிறிய ஓட்டைகளுடன் வீடுகளில் பொருத்தப் படுவது = பலகணி

சன்னாகம்

போர்க்கவசம்

அண்ணகம்

அணி + அகை (=தடு, மறை) + அம் (=போர்) = அண்ணகம் >>> சன்னாகம் = போருக்காக மறைத்து அணிவது

சன்னாகம்

தயாராகுகை

அண்ணாக்கம்

அண்ணு (=நெருங்கு) + ஆக்கு (=செய்) + அம் = அண்ணாக்கம் >>> சன்னாகம் = செயலுக்கு நெருக்கமாதல்

சன்னாசம்

துறவு

அண்ணாசம்

அணை (=அடை) + ஆசு (=பற்று) + அம் (=கடவுள்) = அண்ணாசம் >>> சன்னாசம் = கடவுளையே பற்றாக அடைதல் = துறவு

சன்னாசி

துறவி

அண்ணாசி

அண்ணாசம் (=துறவு) + இ = அண்ணாசி >>> சன்னாசி = துறவி

சன்னி

பெயருடையது

அன்னெய்

அம் (=சொல், அழைப்பு) + நெய் (=பொருந்து) = அன்னெய் >>> சன்னி = அழைக்கும் சொல் பொருந்தியது

சன்னிதானம்

கோயில்

அண்ணிறணம்

அணை (=கட்டு) + இறை (=கடவுள், தங்கல்) + அணம் = அண்ணிறணம் >>> சன்னிதானம் = கடவுள் தங்குவதற்காக கட்டப்படுவது = கோயில்

சன்னியாசம்

துறவு

அணியாசம்

அணி (=பொருந்து, அடை) + ஆசு (=பற்று) + அம் (=கடவுள்) = அணியாசம் >>> சன்னியாசம் = கடவுளையே பற்றாக அடைதல் = துறவு

சன்னியாசி

துறவி

அணியாசி

அணியாசம் (=துறவு) + இ = அணியாசி >>> சன்னியாசி

சன்னியம்

மஞ்சள்

அணியம்

அணி (=முகம், பூசு) + அம் (=ஒளி, அழகு) = அணியம் >>> சன்னியம் = ஒளிரும் முக அழகுக்காகப் பூசுவது

சன்னிவேசம்

கட்டமைப்பு

அணிவேயம்

அணி (=கட்டு) + வேய் (=பதி, அமை) + அம் = அணிவேயம் >>> சன்னிவேசம் = கட்டமைப்பு

சன்னை

குறிப்புமொழி

எண்ணை

எண்ணு (=கருது) + ஐ (=நுட்பம்) = எண்ணை >>> சென்னை >>> சன்னை = நுட்பக் கருத்து = குறிப்புமொழி

சன்னை

கிண்டல், பரிகாசம்

அண்ணாய்

அணி (=சொல்) + ஆய் (=குத்து, கொண்டாடு) =  அண்ணாய் >>> சன்னை = சொற்களால் குத்திக் கொண்டாடுதல்

சன்னை

மரத்தண்டு

அணை

அணை (=மரத்தண்டு) >>> சணை >>> சன்னை

சன்னை

முரசு

அண்ணாய்

அணி (=சூழ், வட்டமாகு, ஒலி, பெருமை) + ஆய் (= மென்மை, தாக்கு) = அண்ணாய் >>> சன்னை = தாக்கி ஒலிக்கப்படும் பெரிய வட்டமான மெல்லிய பொருள்.

சனகன்

தந்தை

அணகன்

அணை (=உண்டாக்கு) + அகம் (=உள், உயிர்) + அன் = அணகன் >>> சனகன் = உள்ளே உயிரை உண்டாக்குபவன்

சனம்

உயிர்க் கூட்டம், மக்கள் திரள்

அணம்

அணு (=உயிர்) + அம் (=பொருந்து, கூடு) = அணம் >>> சனம் = உயிர்க் கூட்டம், மக்கள் திரள்

சனனம்

பிறப்பு

அணணம்

அணை (=பிற) + அணம் = அணணம் >>> சனனம் = பிறப்பு

சனனி

தாய்

அணணி

அணு (=உயிர்) + அணை (=பிறப்பி) + இ = அணணி >>> சனனி = உயிரைப் பிறப்பிப்பவள் = தாய்

சனாதனம்

மிகப் பழமையானது

அணாதணம்

அணி (=பெருமை, மிகுதி, பொருந்து) + ஆதி (=பழமை) + அணம் = அணாதணம் >>> சனாதனம் = மிகப் பழமை வாய்ந்தது.

சனார்த்தனம்

சுக்கு

அனற்றனம்

அனற்று (=எரி) + அணை (=தண்டு) + அம் (=உணவு, ஒப்பு) = அனற்றனம் >>> சனார்த்தனம் = எரிச்சலுடைய தண்டு போன்ற உணவு = சுக்கு.

சனி

துன்பம்

அன்மை

அன்மை (=தீமை, துன்பம்) + இ = அனி >>> சனி

சனி

கருமை

எனீ

எல் (=ஒளி) + நீ (=நீங்கு) = எனீ >>> அனி >>> சனி = ஒளி நீங்கியது = இருள், கருமை

சனி

பிற

அணை

அணை (=உண்டாகு, பிற) + இ = அணி >>> சனி

சனிப்பு

பிறப்பு

அணிப்பு

சனி (=பிற) + பு = சனிப்பு = பிறப்பு

சனியன்

தண்டில் செறித்துக் குத்துவது

அணீயண்

அணை (=தண்டு) + ஈ (=அறு, குத்து) + அண் (=செறி) = அணீயண் >>> சனியன் = தண்டில் செறித்துக் குத்துவது

சனு

விருப்பமானது, விருப்பமானவர்

அணு

ஆணம் (=விருப்பம்) + உ = அணு >>> சனு = விருப்பமானது, விருப்பமானவர்

சனு

பிறப்பு

அணு

அணை (=உண்டாகு, பிற) + உ = அணு >>> சனு = பிறப்பு

சனுகம்

மிளகு

அணுக்கம்

ஆணம் (=சிறுமை, உணவு) + உக்கம் (=தீ, எரிச்சல்) = அணுக்கம் >>> சனுகம் = எரிச்சலுடைய சிறிய உணவு

சசா

தண்டனை

அசாய்

ஆசு (=குற்றம்) + ஆய் (=வருத்து) = அசாய் >>> சசா = குற்றத்திற்காக வருத்துவது = தண்டனை

சட்டி, சச்~டி

ஆறாவது

ஆறு

ஆறு + இ = அற்றி >>> சட்டி >>> சச்~டி = ஆறாவது