செவ்வாய், 22 ஜனவரி, 2019

அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 8

                                                   அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 8


பிறமொழிச்சொல்     கலைச்சொல்     மேல்விளக்கம் / பயன்படுமுறை


simulate
மான்று
மான (ஓப்ப)ச் செய்
simulated
மான்றிய

simulation
மான்றல்

simulator
மான்றி

simmer
கதப்பு
கதம் / கதகதப்பு =  இளஞ்சூடு
simmering
கதப்பு
பால ஒலையில ஏத்திக் கதப்புல வை
simmered
கதப்பிய

matriculate
மோட்டு

matriculation
மோட்டியல்

matriculated
மோட்டுறு

diode
திசமி
ஒருதிசையில் மட்டும் மின்சாரத்தை அனுமதிப்பது
triode
குவமி
குறணை வலையம் மிகணை என்ற முப்பகுதிகளைக் கொண்டது
audio
ஓரி
கேட்கப்படுவது
audition
ஓர்ப்பு

audible
ஓர்த்தகு
கேட்க முடிகிற
inaudible
ஓர்த்தகா
கேட்க முடியாத
auditorium
ஓர்ப்பகம்

function (verb)
துளங்கு

function
துளா

functioning
துளக்கம்

functional
துளங்கும்

malfunction (verb)
வழுதுளங்கு

malfunction
வழுதுளா

malfunctioning
வழுதுளக்கம்

incident (noun)
உறுகோள்
அந்த உறுகோளுக்குப் பின் அவனிடம் நான் பேசுவதில்லை.
incident (adj.)
உறும்

incidented
உற்ற

incidental
உறுகோளாய்
அவர் அந்த இடத்திற்கு உறுகோளாய் வந்தார்.
incidence
உறுகை
Angle of Incidence =  உறுகைக் கோணம்
incident ray
உறுமாரை / உறுமி
உறும் +  ஆரை
reflect
உறழ்

reflection
உறழ்ச்சி
Angle of Reflection =  உறழ்ச்சிக் கோணம்
reflected
உறழ்ந்த

reflected ray
உறழாரை / உறழி
உறழ் + ஆரை
reflecting
உறழும்

reflector
உறழ்த்தி

deflect
பிறழ்

deflected
பிறழ்ந்த

deflection
பிறழ்ச்சி

deflecting
பிறழும்

deflector
பிறழ்த்தி

deflected ray
பிறழாரை / பிறழி
பிறழ் + ஆரை
deviate
விலகு

deviation
விலக்கம்
Angle of Deviation  =  விலக்கக் கோணம்
deviated
விலகிய

deviating
விலகும்

deviator
விலக்கி

normal
நாம்பி
அவர் இப்போது நாம்பி நிலையில் உள்ளார்.
normally
நாம்பியாய்

normal line
நாம்பிக்கோடு / நாமம்
நடுவில் இருக்கும் செங்குத்துக் கோடு
normalize
நாப்பு

normalized
நாப்பிய

normalization
நாப்பம்

normalizer
நாப்பர்

normalizing
நாப்பும்

embrace
முயங்கு
தழுவு
embraced
முயங்கிய

embracement
முயக்கம்

bracket
முயங்கை
தழுவும் கைகளைப் போன்ற அமைப்பு
foam
நுரை

foamify
நுரச்சு
நுரையினை உண்டாக்கு
foamified
நுரச்சிய

foamifier
நுரச்சர்

route (noun)
கவலை / தடம்

route
கவற்று

routed
கவற்றிய

router / modem
கவற்றி

routing
கவற்றல்

misroute
வழுகவற்று

misrouted
வழுகவற்றிய

guide (verb)
கடற்று
வழி (கடறு)ப் படுத்து
guide
கடறி

guided
கடற்றிய

guidance
கடற்றம்

guider
கடற்றி

misguide
வழுகடற்று
தவறாக வழிநடத்து
misguided
வழுகடற்றிய

misguidance
வழுகடற்றம்

misguider
வழுகடற்றி

system
செவ்வி

systematic
செவ்வியாய்
இங்கே எல்லாம் செவ்வியாய் நடக்கிறது.
systemize
செவ்வு

systemization
செவ்வியம்

systemized
செவ்விய

systemizer
செவ்வுநர்

systemic
செவ்வுறு

analyze
கூறாய்
கூறு + ஆய் =  கூறுகளை /  கூறாக்கி ஆய்வுசெய்
analysis
கூறாய்வு

analyzed
கூறாய்ந்த

analyzer
கூறாயர்

analyzable
கூறாய்சால்

analyzability
கூறாய்சான்மை

execute
நிகழ்த்து

executed
நிகழ்த்திய

executive
நிகதி
Executive Director  =  நிகதி மருக்கர்
execution
நிகழ்த்தம் / நிகதம்

executor
நிகதர்

wave (noun)
அலை

wavy
அலைபுரை
அலைபுரை கூந்தல்
waviness
அலையம்

wave (verb)
அலப்பு

waving
அலப்பும்
He is Waving for You  = அவர் உங்களுக்காக அலப்புகிறார்.
waved
அலப்பிய

waver
அலப்பர்

wavefront
அலைமுகம்

range
கொணர் / வரம்பு

ranger
கொணரி

ranging
கொணரல் / வரம்பல்

arrange
கொணர்த்து
தனது எல்லைக்குள் கொண்டுவா
arranged
கொணர்த்திய

arrangement
கொணா
இந்த விழாவுக்கான மொத்தக் கொணாவையும் இவர்தான் செய்தார்.
arranging
கொணர்த்தல்

arranger
கொணர்த்தி

surround
சூழ்

surrounded
சூழ்ந்த

surrounding
சூழல்

juvenile
மஞ்சு
இளமை, அழகு
rejuvenate
மஞ்சு
மேகம் போல முதிர்ந்ததை இளமையாக்கு
rejuvenated
மஞ்சிய

rejuvenator
மஞ்சுநர்

rejuvenation
மஞ்சியம்
முதிர்ந்த கடல்நீரை மேகம் முகர்ந்து புதுநீராய்த் தருவதைப் போன்ற செயல்
rejuvenative
மஞ்சி
இளமையைத் தரும் உணவு / மருந்து
tax
உல்கு / வரி
வரியை விதி
taxation
உல்கி
வரிவிதிப்பு
taxable
உல்குசால்
வரிவிதிக்கத் தக்க
taxed
உல்கிய
வரிவிதிக்கப் பட்ட
plier
கொடிறு
கொடிறு (நண்டு) கைகளைப் போன்ற அமைப்புடைய கருவி
tongue & groove plier
கிளிவாய்க் கொடிறு

needle nose plier
கூர்ங்கொடிறு
கூர்நுதிக் கொடிறு
round nose plier
மழுக்கொடிறு
மழுமுனைக் கொடிறு
gear (noun)
துத்தி
துத்தியின் காய் போன்ற அமைப்புடைய பல்சக்கரம்
gear
துத்து

geared
துத்திய

gearing
துத்தியம்

clutch (noun)
கதுவி

clutch
கதுவு

clutched
கதுவிய

clutching
கதுவல்

axle
அச்சு

gear & axle
துத்தியும் அச்சும்
துத்தியும் அச்சும் போல இணைந்திருப்பீராக.
machine
கதினம்
கதி (இயக்கம்) யுடன் தொடர்புடைய கருவி
machinist
கதினர்
கதினர் படிப்புக்கு இப்போதும் வேலைவாய்ப்பு உண்டு.
mechanic
கதினி
என்னோட ஈரியச் சரிபண்ண கதினிகிட்ட விட்ருக்கேன்
mechanical
கதின
Mechanical Engineering  =  கதினப் பொறியியல்
mechanism
கதினியம்
இந்த வண்டியோட கதினியம் என்ன?
mechanize
கதினு

mechanized
கதினிய

mechanization
கதினுவம்

mechanizable
கதின்சால்

mechanistic
கதினேய
கதின் + ஏய =   இயந்திரத் தனமான
mechanistic work
கதினேயப் பணி
இயந்திரத் தனமான வேலை
engine
பொறி

engineer
பொறியாளர்

engineering
பொறியியல்

mechanical engineering
கதினப் பொறியியல்
சுருக்கமாக, கதிறியல் என்று பேச்சுவழக்கில் கூறலாம்
mechanical engineer
கதினப் பொறியாளர்
சுருக்கமாக, கதிறியர் என்று பேச்சுவழக்கில் கூறலாம்
thermal
தெறும
தெறுதல் = சுடுதல். வெப்பத்துடன் தொடர்புடையது.
thermo
தெறும

thermic
தெறும

meter
கன்னல்
அளவிடும் கருவி
thermometer
தெறுமக் கன்னல்

thermal engineering
தெறுமப் பொறியியல்

thermodynamics
தெறும நுடியம்

dynamic
நுடியை / நுடிய
நுடி + இயை =  இயக்கத்துடன் தொடர்புடைய
dynamics
நுடியம்

dynamo
நுடிமி
சுழற்சியின் மூலம் மின்சாரம் உண்டாக்கும் கருவி
differ
வேறு

differed
வேறிய

difference
வேறுபாடு / வேற்றுமை

different
வேறான

differentiate
வேற்று

differentiation
வேற்றியம்

differentiated
வேற்றிய

differential
வேற்றியல்

differentiator
வேற்றியர்

potential difference
நோன் வேற்றுமை

voltage
நோவே
நோன் வேற்றுமையின் அலகு
voltmeter
நோவே கன்னல்
நோன் வேற்றுமையைக் கணக்கிடும் கருவி
integer
காந்தளெண்

integral
காந்தளை
காந்தள் மலர் போன்று தொகுப்புடைய
integrate
காந்தளி

integrated
காந்தளித்த

integration
காந்தளியம்

integrator
காந்தளியர்

calculate
கணக்கிடு / கணி

calculated
கணக்கிட்ட / கணித்த

calculator
கணிதி

calculation
கணக்கீடு

calculus
கணக்கு

mathematics
கணிதம்

mathematical
கணிதஞ்சால்

mathematician
கணிதர்

differential calculus
வேற்றியல் கணக்கு

integral calculus
காந்தளைக் கணக்கு

enquire
விசாரி

enquiry
விசாரணை

enquired
விசாரித்த

investigate
உசாம்பு
கேட்டு அறி
investigated
உசாந்த

investigation
உசாப்பு
இந்த வழக்கின் உசாப்பு நடந்துகொண்டுள்ளது
investigator
உசாமர்

amalgam
கலவை

amalgamate
கலாவு

amalgamated
கலாவிய

amalgamation
கலாவல்

resist
முரண்

resistance
முரணை

resistivity
முரணியம்

resistor
முரணி

resistant
முரண்சால்

potent
நோலி
வலிமை மிக்கவர்
potential
நோன்
வலிமை
impotent
நோலா
வலிமை அற்றவர்
potentiate
நோன்று
வலிமை ஏற்று
potentiation
நோன்றியம்

potenciated
நோன்றிய

mass
கணம்

massive
கணஞ்சால்

massif
கணமலை

weigh
நிறு

weighed
நிறுத்த

weighing
நிறுத்தல்

weight
நிறை

weighable
நிறைசால்

volume
களன்
கொள்ளப்பட்ட இடம்,  ஒலி
voluminous
களஞ்சால்

volumize
களப்பு

volumized
களப்பிய

volumizer
களப்பர்

volumizing
களப்பம்

volumetric
களமிசெகி

metric
மிசெகி
மி - மீட்டர்,   செ = செகண்ட்,  கி - கிலோகிராம்
metric system
மிசெகி செவ்வி

vision
நோக்கம்

visual
நகார்

visualize
நகாரி

visualized
நகாரித்த

visualizer
நகாரிதர்

scope
கண்
இடம், காணும் உறுப்பு
scope (verb)
காண்
பார்
scopy
கணியம்

spectrum
தாரகம்
கிளியின் கழுத்துபோல வண்ணப் பட்டைகளைக் கொண்டது
spectroscopy
தார்க்கணியம்

spectroscope
தார்க்காணி

spectrometer
தார்க்கன்னல்

spectrograph
தார்நுகி

microscope
அக்காணி
micro = அஃகம்
microscopy
அக்கணியம்

compute
கணி

computing
கணிப்பு

computer
கணி / கணினி

computerize
கணியேற்று

computerized
கணியேற்றிய

computerization
கணியேற்றம்

photo
புநுகி / படம்

photon
புகர்


photonics
புகரியம்

photograph
புகர்நுகி
சுருக்கமாக புநுகி
photography
புகர்நுகுதி
சுருக்கமாக புநுதி
photographer
புகர்நுகுதர்
சுருக்கமாக புநுதர்
measure
அள

measured
அளந்த

measurement
அளவு

measuring
அளக்கும்

titrate
ததராய்
ததர் + ஆய் = செறிவினை ஆய்வுசெய்
titrated
ததராய்ந்த

titration
ததராய்வு

titrator / titrant
ததரை
செறிவினை ஆய்வுசெய்ய உதவும் துளியம்
titratable
ததராயேல்

titratability
ததராயேன்மை

titrand / analyte
ததரி
செறிவு ஆய்வுசெய்யப்படும் துளியம்
esteem
சீர்

esteemed
சீர்மிகு

estimate
சீராய்

estimated
சீராய்ந்த

estimation
சீராய்வு

estimator
சீராய்வர்

comma
கீறல்

tab
கண்டம்

comma separated value
கீறல் பிரி மதிப்பு

tab separated value
கண்டப் பிரி மதிப்பு

csv file
கீபிம யாப்பு

tsv file
கபிம யாப்பு

plasma
வெசாழி
வெப்பமும் சாரமும் கொண்ட கலுழி
flow
கலுழ்

flowing
கலுழும்

flowable
கலுழிய

flowability
கலுழியம்

fluid
கலுழி

fluidity
கலுழியம்

fluidize
கலுழ்த்து

fluidized
கலுழ்த்திய

fluidization
கலுழ்த்தம்

fluidizer
கலுழ்த்தர்

fluidizable
கலுழ்த்தகு

channel
அத்தம்

channelize
அத்து

channelized
அத்திய

channelizer
அத்தியர்

channelization
அத்தியம்

graph (verb)
நுகு
வயலில் நுகம் (ஏர்) போல குறுக்குநெடுக்காகக் கீறு
graph (noun)
நுகி

graphy
நுகுதி

graphics
நுகுதை

grapher
நுகுதர்

graphology
நுகியல்

graphologist
நுகியர்

autograph
தன்னுகி

radiograph
ஆர்நுகி

radiography
ஆர்நுகுதி

radiographer
ஆர்நுகுதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.