புதன், 19 பிப்ரவரி, 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 6



சொல்
பொருள்
தமிழ்ச்
சொல்
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
~அச்`தி
இருக்கிறது
அத்தி
அத்து (=இரு) >>> அத்தி >>> அச்`தி = இருக்கிறது
~அசைலம், ~அசலம்
மலை
அசைலம், அசலம்
அசை + இலம் = அசையிலம் (= அசைவற்றது) >>> அசைலம் >>> அசலம்
~அப்பு
நீர்
அப்பு
ஆம் (=நீர்) >>> ஆம்பு >>> அம்பு >>> அப்பு
~அபிசேகம்
முழுக்கு
அபிசேகம்
அப்பு (=நீர்) + இசை (=பாட்டு) + கமம் (=நிறைவு) = அப்பிசைகமம் >>> அபிசேகம் = நீரும் பாட்டும் சேர்ந்தது
~அம்புலி
சந்திரன்
அம்புலி
அம் (=அழகு) + ஒளி = அம்மொளி >>> அம்பொளி >>> அம்புலி = அழகிய ஒளி விசுபவன்
~அமாவாசை
இருள் நிலா
அமாவாசை
அம் (=அழகு, ஒளி) + அவிச்சை (=மறைவு) = அமவிச்சை >>> அமாவிசை >>> அமாவாசை = ஒளியின் மறைவு..
~அவதி
துன்பம்
அவதி
அவத்தை (=துன்பம்) >>> அவதி
~அவிச்சை
இருள், மறைவு, அறியாமை
அவிச்சை
அவி >>> அவிசு (=அணை) >>> அவிச்சை = அணைப்பதால் உண்டாவது = இருள் >>> அறியாமை, மறைவு
~ஆகமம்
நூல்
ஆக்கம், ஆகமம்
ஆக்கம் (=நூல்) >>> ஆக்கமம் >>> ஆகமம்
~ஆச்`தி
இருப்பு, செல்வம்
ஆத்தி
அத்து (=இரு) >>> ஆத்தி (=இருப்பு) >>> ஆச்`தி
~ஆச்சரியம்
வியப்பு, மலைப்பு
ஆச்சரியம்
அயர் (=விய, மலை) >>> அசர் >>> அசரியம் >>> ஆசரியம் >>> ஆச்சரியம் = வியக்க / மலைக்கச் செய்வது
~ஆசிரமம்
தங்கும் வீடு
ஆசிருப்பம், ஆசிருமம்
அசை (=தங்கு) + இருப்பம் (=வீடு) = அசையிருப்பம் >>> ஆசிருப்பம் >>> ஆசிருமம் >>> ஆசிரமம்
~ஆத்திகம்
கடவுள் இருப்பு
ஆத்திகம்
ஆத்தி (=இருப்பு) >>> ஆத்திகம் = கடவுள் இருப்பு வாதம்
~ஆலோசனை
பலபேருடைய கருத்து
ஆளோசனை
ஆள் + ஓசனை = ஆளோசனை >>> ஆலோசனை = ஆளாளுக்குச் சொல்லும் கருத்து
~உரகம்
பாம்பு
உரகம்
ஊர் + அகம் (=வயிறு) = ஊரகம் >>> உரகம் = வயிற்றினால் ஊர்வது = பாம்பு.
~கச்`தூரி
ஒருவகை விலங்கு
கத்தூரி
கந்து (=வாசனை) + ஊறு + இ = கந்தூறி >>> கத்தூரி >>> கச்`தூரி = வாசனைப்பொருள் ஊறும் விலங்கு.
~கர்வம்
செருக்கு
கருவம்
கரு (=செறி, திரள்) >>> கருவம் = செறிவு, செருக்கு
~கிருமி
நுண்ணுயிரி
குறுமி
குறுமை (=நுண்மை) >>> குறுமி >>> கிருமி = நுண்ணியது
~கும்பம்
குடம்
கும்பம்
கூம்பு (=குவி) >>> கும்பம் = குவிந்திருப்பது
~ச்`தூபி, ~தூபை, ~தூபிகை
துளைக் கட்டமைப்பு
தூபி, தூபை, தூபிகை
தூம்பு (=நெடுந்துளை) >>> தூம்பி >>> தூபி, தூபை, தூபிகை = உள்ளே நீண்ட துளையுடைய கட்டமைப்பு.
~சகாரி
திட்டு, ஏசு
சகாரி
அகவு (=ஒலி) + அரி (=தொந்தரவு செய்) = அகவரி >>> அகாரி >>> சகாரி = ஒலியால் தொந்தரவு செய்தல்
~சகுனம்
பறவை
சகுனம்
அகவு (=ஒலி) + இனம் = அகவினம் >>> சகவினம் >>> சகௌனம் >>> சகுனம் = ஒலிக்கும் இயல்புடையவை = பறவைகள்.
~சகுனம்
ஒலி, நிமித்தம்
சகுனம்
சகுனம் (=பறவை) >>> சகுனம் = நிமித்தமாகக் கருதப்படும் பறவை ஒலி. ஒ.நோ: புள் (=பறவை) >>> புள் (=பறவை ஒலி, நிமித்தம்)
~சங்கீர்த்தனம், ~சங்கீதம்
இசை
சங்கீர்த்தனம், சங்கீதம்
சங்கு + ஈர்த்தம் = சங்கீர்த்தம் >>> சங்கீர்த்தனம், சங்கீதம் = சங்கை நீட்டி முழக்கும் ஓசை = இயற்கையாய்க் கிடைத்த சங்கில் முழக்கிய முதல் ஒலியே இசையின் பெயரானது...
~சடங்கு
பின்பற்றும் வழிமுறை
சடங்கு
அடங்கு (=பணி, பின்பற்று) >>> சடங்கு = பின்பற்ற வேண்டியவை.
~சபதம்
உறுதிமொழி
செப்பிதம்
செப்பு (=கூறு) >>> செப்பிதம் >>> செபிதம் >>> சபதம் = கூறப்பட்டது.
~சவால்
போட்டிக்கு அழைத்தல்
சவால்
ஞாவு >>> ஞாவல் (=போருக்கு அழைத்தல்) >>> சாவல் >>> சவால் = போட்டிக்கு அழைத்தல்.
~சாதம்
சோறு, படையல்
சாதம்
சாற்று (=படை) >>> சாத்து >>> சாத்தம் >>> சாதம் = படைக்கப்பட்டது = படையல் சோறு.
~சுக்கு
உலர் இஞ்சி
சுக்கு
சுருக்கு (=உலர்த்து) >>> சூர்க்கு >>> சுக்கு = உலர்ந்தது
~சுருதி
இசை, ஒலி
சுருதி
சுரம் (=நெடுந்துளை) + உதி (=தோன்று) = சுருதி = நெடுந்துளையில் தோன்றுவது = இசை
~சூக்குமம்
நுட்பம்
சூர்க்கம்
சுருக்கம் (=சிறுமை, நுட்பம்) >>> சூர்க்கம் >>> சூக்குமம்
~சோலி
வேலை
சோலி
செயல் >>> செயலி >>> சோலி
~டோலாக்கு
காதணி
தோலாக்கு
துயல் (=ஆடு) + அக்கம் (=மணி) >>> துயலக்கம் >>> தோலக்கம் >>> தோலாக்கு = காதில் ஆடும் மணி
~டோலி
சுமக்கப்படுவது
தோளி
தோள் >>> தோளி >>> டோலி = தோளில் சுமக்கப்படுவது
~துப்பாக்கி
துளை செய்யும் கருவி
துப்பாக்கி
தூம்பு (=துளை) + ஆக்கி = தூம்பாக்கி >>> தும்பாக்கி >>> துப்பாக்கி = துளையினை உண்டாக்குவது.
~தூச~ணம்
பழிச்சொல்
தூசணம்
தூசி (=பழிகூறு) >>> தூசணம் >>> தூச~ணம்
~தூசரம்
எண்ணை
தோசுரம், தூசரம்
தோயுறு (=பூசப்படு) >>> தோயுறம் >>> தோசுரம் >>> தூசரம் = பூசப்படுவது
~தூசி
போர், படை
தூசி
துஞ்சு (=சாவு) >>> துச்சு (=கொல்) >>> துச்சி >>> தூசி = கொல்லும் போர், படை.
~தூசி~
பழிகூறு
தூசி
தூசி (=புழுதி) >>> தூசி~ = புழுதி தூற்று = பழிகூறு
~தூசியம்
கூடாரம்
தூசியம்
துஞ்சு (=தங்கு) >>> துஞ்சியம் >>> தூசியம் = தங்குமிடம்
~தூட்டி
ஆடை
தூச்சி
தூசி (= ஆடை) >>> தூச்சி >>> தூச்~டி >>> தூட்டி
~தூணம்
பகை
தூணம்
துணி (=பிரி, பகு) >>> தூணம் = பிரிப்பது
~தூணிகர்
வணிகர்
துனிகர்
துல் (=தராசு) + நிகர் = துனிகர் >>> தூணிகர் = தராசு போன்றவர்கள் = வணிகர்கள்
~தூதம்
வசைச்சொல்
தூதம்
தூற்று (=திட்டு) >>> தூத்து >>> தூத்தம் >>> தூதம்
~தூதன்
செய்தியைப் பரப்புபவன்
தூதன்
தூது (=செய்தி) >>> தூதன்
~தூதனம்
மூங்கில்
தூதனம்
தூறு (=புதர்) >>> தூறனம் >>> தூதனம் = புதர்போலச் செறிந்து வளர்வது
~தூதி
பாம்பின் பல்
தூதி
துறு (=துளை) >>> துது>>> தூதி = துளையுடை நச்சுப்பல் .
~தூது
பரப்பப்படும் செய்தி
தூது
தூற்று (=பரப்பு, அறிவி) >>> தூத்து >>> தூது = பரப்பப்படும் / அறிவிக்கப்படும் செய்தி
~தூபம் / ~தூமம்
புகை, வெயில்
தூபம் / தூமம்
துவர் (=உலர்த்து) >>> தூவம் >>> தூபம், தூமம் = உலர்த்த உதவுவது = புகை, வெயில்
~தூரணம்
விரைவு
தூரணம்
துர (=ஓடு, விரை) >>> துரணம் >>> தூரணம்
~தூரம்
தொலைவு
தூரம்
துர (=செல், கட) >>> தூரம் = கடக்க வேண்டியது
~தூர்வகம்
பொதிமாடு
தூர்வகம்
தூர்வு (=பொதி) + அகம் >>> தூர்வகம் = பொதிமாடு
~தூர்வம்
தொப்பூழ்
தூர்வம்
தூர் (=அடை) >>> தூர்வம் = அடைக்கப்பட்ட துளை
~தூரி
எருது
தூரி
உரம் (=வலிமை) >>> துரம் >>> தூரி = வலிமையானது
~தூரியம்
எறிபடை, வேல்
தூரியம்
தூர் (=தூரம்) + ஏயம் = தூரேயம் >>> தூரியம் = தூரமாக எய்யப்படுவது.
~தூரியம்
நஞ்சு
தூரியம்
தூர் (=அழி) + இயம் = தூரியம் = அழிக்கும் தன்மையது
~தூலம்
பருத்தி, இலவம், பஞ்சு
தூலம்
துல்லம் (=வெண்மை) >>> தூலம் = வெண்ணிறத்தது = பஞ்சு, பருத்தி, இலவம்
~தூலம்
பருமை
தூலம்
துலம் (=பஞ்சு) >>> தூலம் = பஞ்சைப் போலப் பருத்தது
 ~தூலி
இறகு
தூலி
துல்லம் (=வெண்மை) >>> தூலி = அன்னத்தின் சிறகு
~தூலிகை
எழுதுகோல்
தூலிகை
துலக்கு (=விளக்கு, தேய், பூசு) >>> தூலிகை = விளக்க / தேய்க்க / பூச உதவுவது
~தூவத்தி
வாள்
தூவத்தி
துமி (=வெட்டு, பிள) >>> துமித்தி >>> தூவத்தி = பிளப்பது
~தூள், ~தூளி
பொடி
தூள், தூளி
துகள் (=பொடி) >>> தூள், தூளி
~தூளி
ஒலி
தூலி
துல்லம் (=ஒலி) >>> தூலி >>> தூளி
~தூளி
படுக்கை
தூலி
துயிலி (=படுக்கை) >>> தூலி >>> தூளி
~தூனம்
துன்பம்
தூனம்
துனி (=துன்பம்) >>> தூனம்
~தெகிடி
பொய், புரட்டு
தெகிடி
தெக்கு (=புரள்) >>> தெகிட்டு (=புரட்டு) >>> தெகிடி
~தேசனம்
மூங்கில்
தேசனம்
தீச்சு (=எரி) >>> தீச்சனம் >>> தேசனம் = எரியுண்டாக்குவது
~தேசான்
உலர் இஞ்சி
தேசான்
தேய் (=வற்று, உலர்) >>> தேயன் >>> தேசான் = உலர்ந்தது
~தேசி
எலுமிச்சை
தேசி
தேசு (=ஒளி) >>> தேசி = ஒளிமிக்க பழம்
~தேசிகன்
ஆசிரியன், குரு
தேசிகன்
தேய் (=விளக்கு) >>> தேயிகன் >>> தேசிகன் = விளக்குபவன் = ஆசிரியர், குரு
~தேசு
பொன், புகழ்
தேசு
தேசு (=ஒளி) >>> தேசு = ஒளிர்வது = பொன், புகழ்
~தேசு, ~தேசம், ~தேசிகம்
ஒளி, அழகு, அறிவு,
தேசு, தேசம், தேசிகம்
தேய் (=விளக்கு) >>> தேசு, தேசம், தேசிகம் = விளக்குவதால் உண்டாவது = ஒளி, அறிவு, அழகு.
~தேயம்
பொன்
தேயம்
தீய் (=எரி) >>> தீயம் >>> தேயம் = தீ போல் ஒளிர்வது
~தேயம்
சிந்திக்கப்படுவது
தோயம்
தோய் (=மூழ்கு) >>> தோயம் >>> தேயம் = சிந்திக்கப்படுவது
~தேயனம்
ஒளி
தேயனம்
தேய் (=விளக்கு) >>> தேயனம் = ஒளி = விளக்குவதால் உண்டாவது
~தேயு
தீ
தேயு
தீய் >>> தீயு >>> தேயு
~தேவனம்
தாமரை
தேவனம்
தீவண்ணம் >>> தேவண்ணம் >>> தேவனம் = தீநிற மலர்
~தேனு
பசு, எருமை
தேனு
தேன் (=பால்) >>> தேனு = பால் கொடுப்பது
~தைசதம்
நெய், எண்ணை
தைசதம்
தேய் >>> தேய்ச்சு (=பூசு) >>> தேய்ச்சதம் >>> தைசதம் = பூசப்படுவது = எண்ணை, நெய்
~தைலி
பை
தைலி
தையல் >>> தையலி >>> தைலி = தைக்கப்பட்டது = பை
~தைனியம்
சிறுமை, வறுமை, இழிவு
தைனியம்
தன்னம் (=சிறுமை) >>> தன்னியம் >>> தைனியம் = சிறுமை, வறுமை, இழிவு
~தொக்கு
சிறுமை, அற்பம், எளிமை
தொக்கு
துகை (=நசுக்கு, பொடிசெய்) >>>> துக்கு >>> தொக்கு = பொடி, அற்பம், சிறுமை, எளிமை.
~தொக்கு
தோல், பற்று
தொக்கு
துவக்கு (=தோல்) >>> தொக்கு = தோல், பற்றியிருப்பது
~தோக்குமம்
மேகம்
தோக்குமம்
தொகு (=திரள்) >>> தொகுமம் >>> தோக்குமம் = திரள்வது
~தோகம்
சிறுமை, குழந்தை
தோகம்
தொகு (=சுருங்கு) >>> தோகம் = சுருக்கம், சிறுமை >>> சிறியது = குழந்தை
~தோகம்
துக்கம்
தோகம்
துக்கம் >>> தோகம்
~தோகம்
பால்
தோகம்
துய் (=உண்) >>> துய்கம் >>> தோகம் = உணவு
~தோட்டா
துப்பாக்கிக் குண்டு
தோட்டா
தொடு (=துளை) >>> தோட்டா = துளைப்பது
~தோதகம்
வருத்தம்
தோதகம்
தூறு (=துன்பம்) +அகம் = தூறகம் >>>தோறகம் >>> தோதகம்
~தோதகம்
வஞ்சகம், மாயாசாலம்
தூரகம், தோரகம்
தூர் (=மூடு, மறை) + அகம் = தூரகம் >>> தோரகம் >>> தோதகம் = மூடி மறைக்கும் செயல்
~தோமம்
கூட்டம்
தொகுமம்
தொகு (=திரள்) >>> தொகுமம் >>> தோமம் = திரட்சி
~தோயதி
கடல், நீர்
தோயதி
தோய் (=நீர்) + அதி (=மிகுதி) = தோயதி = நீர்த்திரள்
~தோயம்
நீர்
தோயம்
தோய் (=நனை) >>> தோயம் = நனைப்பது
~தோரணம்
தொங்கல்
தோரணம்
துயல் (=தொங்கு) >>> துயலணம் >>> தோலணம் >>> தோரணம் = தொங்குவது
~தோரணம்
குரங்கு
தோரணம்
துயல் (=தொங்கு) >>> துயலணம் >>> தோலணம் >>> தோரணம் = கிளைகளில் தொங்குவது
~தோரணன்
பாகன்
தோரணன்
துர (=ஓட்டு) >>> துரவுநன் >>> தோரணன் = ஓட்டுபவன்
~தோரணை
செய்முறை
தோரணை
தோன்று >>>> தோற்று (=உருவாக்கு, செய்) >>> தோற்றணை >>> தோரணை = செய்யும் முறை.
~தோராயம்
சற்றொப்புமை
தூறேயம், தோராயம்
தூறு (=பொடி, சிறுமை) + ஏய (=ஒப்ப) = தூறேய (=சிறிதொப்ப) >>> தோராயம் = சற்றொப்புமை.
~தோராயம்
எடைபோடுதல், கணக்கிடல்
தோராயம்
துயல் >>> துயற்று (=தொங்கவிடு) + ஆய் (=கணக்கிடு) = துயற்றாய் >>>துயற்றாயம் >>> தோறாயம் >>> தோராயம்
~தோரி
சோறு
தோரி
தோரை (=நெல், அரிசி) >>> தோரி
~தோரிதம்
விரைவு
தோரிதம்
துரிதம் (=விரைவு) >>> தோரிதம்
~தோரியம்
ஆட்டம், கூத்து
தோரியம்
துயல் (=ஆடு) >>> துயலியம் >>> தோலியம் >>> தோரியம்
~தோரை
மாலை, விசிறி
தோரை
துயல் (=தொங்கு, ஆடு, அசை) >>> துயலை >>> தோலை >>> தோரை = தொங்கி ஆடுவது, அசைக்கப்படுவது
~தோரை
கையின் வரிகள்
தோரை
துவர் (=வகிர்) >>> துவரை >>> தோரை = உள்ளங்கையினை வகுக்கும் வரிகள்.
~தோரை
சிவப்பு
தோரை
துவர் (=சிவப்பு) >>> துவரை >>> தோரை
~தோரை
இரத்தம்
தோரை
துவர் (=சிவப்பு) >>> துவரை >>> தோரை = சிவப்பானது
~தோரை
பனை, தென்னை
தோரை
துயல் (=தொங்கு, ஆடு) >>> துயலை >>> தோலை >>> தோரை = தொங்கியாடும் நீண்ட மடல்களைக் கொண்டவை
~தோலனம்
எடைகாணல்
தோலனம்
துயல் (=தொங்கு) >>> துயலனம் >>> தோலனம் = தொங்கவிட்டு எடைகாணுதல்.
~தோலா
எடை
தோலா
துலை (=சமன்) >>> தோலா = எடை
~தோலாயா
இலவம்பஞ்சு
தோலாயா
துல்லம் (=வெண்மை) >>> தோலாயா = வெண்பஞ்சு
~தோலிகை
ஊஞ்சல்
தோலிகை
துயல் (=தொங்கு, அசை) >>> துயலிகை >>> தோலிகை
~தோலிகை
காது
தோளிகை
தோள் (=துளை) >>> தோளிகை = துளையுடையது
~தௌசாரம்
குளிர், பனி
தௌசாரம்
தவ்வு (=குறை) + சுரம் (=வெப்பம்) = தவ்வுசுரம் >>> தௌசுரம் >>> தௌசாரம் = குறைவான வெப்பம்
~தௌத்தியம்
தூது
தௌத்தியம்
தூது + இயம் = தூதியம் >>> தௌத்தியம்
~தௌதம்
வெள்ளி
தௌதம்
தூய் >>> தூயதம் >>> தௌதம் = வெண்மையானது
~தௌதிகம்
முத்து
தௌதிகம்
தூய் + அதிகம் = தூயதிகம் >>> தௌதிகம் = அதிக வெண்மை கொண்டது.
~தௌரிதம்
வேகம்
தௌரிதம்
துரிதம் (=விரைவு) >>> தௌரிதம்
~தௌலேயம்
ஆமை
தௌலேயம்
தவழ் + தேயம் >>>தௌலேயம்= தவழும் உடல் கொண்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.