புதன், 19 பிப்ரவரி, 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 7



சொல்
பொருள்
தமிழ்ச்
சொல்
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
~நக்கம்
அம்மணம்
நக்கம்
நகு (=அவிழ்) >>> நக்கம் = ஆடை அவிழ்ந்த நிலை
~நக்கரம், ~நக்கிரம்
முதலை
நக்கரம், நக்கிரம்
நகு (=சிரி) + ஆர (=போல) = நகார >>> நக்கரம், நக்கிரம் = சிரிப்பதைப் போன்ற பல் அமைப்புடையது.
~நகம்
உகிர்
நகம்
நாங்கு (=முன்நோக்கி நீளு) >>> நாக்கு >>> நாக்கம் >>> நகம் = முன் நோக்கி நீண்டு வளர்வது
~நகாசு
நகையலங்காரம்
நகாசு
நகை + ஆசு (=நுட்பம்) = நகாசு = நகையில் செய்யப்படும் நுட்பமான வேலைப்பாடுகள்
~நகுடம்
மூக்கு
நகுடம்
நாங்கு (= முன் நோக்கி நீளு) >>> நாங்குடம் >>> நகுடம் = முன்னோக்கி நீண்ட உறுப்பு
~நகுலம்
கீரி
நாகுலம், நகுலம்
நாகம் (=பாம்பு) + உலம் (=அழிவு) = நாகுலம் >>> நகுலம் = பாம்பிற்கு அழிவை உண்டாக்கும் விலங்கு
~நகுலி
பட்டுப்பருத்தி
நகுலி
நகல் (=ஒளி, வெண்மை) >>> நகலி >>> நகுலி = வெண்ணிற பஞ்சினைக் கொண்டது
~நங்கூரம்
கூரிய இரும்பு
நங்கூரம்
ஞாங்கர் (=வேல்) >>> ஞாங்கரம் >>> நங்கூரம் = வேல்போல கூரிய இரும்பு.
~நச^ர்
பரிசுப்பணம்
நசர்
நய (=பாராட்டு) >>> நயர் >>> நசர் = பாராட்டிக் கொடுப்பது
~நச்~டை
கேடு
நச்சை
நசி (=கெடு) >>> நச்சை >>> நச்~டை = கேடு, தீங்கு
~நடனம்
நாட்டியம்
நடனம்
நாட்டு (=நிலை) >>> நாட்டனம் >>> நடனம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை
~நத்தகம்
கந்தல்
நத்தகம்
நைந்தகம் >>> நத்தகம் = நைந்து போன ஆடை
~நதனு
மேகம், சிங்கம்
நதனு
நாதம் (=ஒலி) >>> நாதனு >>> நதனு = ஒலி மிக்கது
~நதீனம்
கடல்
நதீனம்
நதி + இணையம் = நதீணயம் >>> நதீனம்
~நந்தன்
மகன்
நந்தன்
நந்து (=தளிர்) >>> நந்தன் = தளிர் போன்றவன்
~நந்தனம்
சோலை
நந்தனம்
நந்து (=செழி, வளர்) >>> நந்தனம் = மரம்,செடி,கொடிகள் செழித்து வளர்ந்திருப்பது = சோலை.
~நந்தனை
மகள்
நந்தனை
நந்து (=தளிர்) >>> நந்தனை = தளிர் போன்றவள்
~நந்தி
காளைமாடு
நந்தி
நத்து (=வளம் பெருக்கு) >>> நத்தி >>> நந்தி = வளம் பெருக்க உதவுவது.
~நந்தி
முரசு
நந்தி
நாதம் (=ஒலி) >>> நாத்தி >>> நந்தி = ஒலி எழுப்புவது
~நந்தினி
பசுமாடு
நந்தினி
நத்து (=வளம் பெருக்கு) >>> நத்தினி >>> நந்தினி = வளம் பெருக்குவது.
~நபம்
கார்மேகம்
நபம்
நம் (=நீர்) >>> நமம் >>> நபம் = நீரை உடையது
~நபனம்
நீராட்டு
நபனம்
நம் (=நீர்) >>> நமனம் >>> நபனம் = நீராட்டு
~நபாகம்
இருள், கார்மேகம்
நம் (=நீர்) + அகம் = நம்மகம் >>> நப்பகம் >>> நபாகம் = நீரை உடையது = கார்மேகம் >>> இருள்
~நயம்
நீதி
நயம்
நை (=அடி, தண்டி) >>> நைய்யம் >>> நயம் = தண்டிக்கும் முறை = நீதி
~நயனம்
கண்
நயனம்
நயன் (=அன்பு, காதல்) >>> நயனம் = காதலை உண்டாக்குவதும் வளர்ப்பதுமான உறுப்பு
~நரகம், ~நரகு
தண்டிக்கும் இடம்
நரகம், நரகு
நரங்கு (=அடி, நொறுக்கு, தண்டி, அழி) >>> நரகு, நரகம் = குற்றவாளிகளைத் தண்டித்துக் கொல்லும் இடம்.
~நர்த்தகன்
நடனமாடுவோன்
நர்த்தகன்
நர்த்தனம் (=நடனம்) >>> நர்த்தகன் = நடனமாடும் ஆண்
~நர்த்தகி
நடனமாடுவோள்
நர்த்தகி
நர்த்தனம் (=நடனம்) >>> நர்த்தகி = நடனமாடும் பெண்
~நர்த்தனம்
நடனம்
நர்த்தனம்
நிருத்தம் (=நடனம்) >> நிர்த்தனம் >>> நர்த்தனம்
~நரந்தம், ~நராந்தம்
காக்கை
நரந்தம், நராந்தம்
நரற்று (=ஒலி, அழை, கூட்டு) >>> நரற்றம் >>> நரத்தம் >>> நரந்தம், நராந்தம் = தன் இனத்தை அழைத்துக் கூட்டுவது.
~நரம்
மனிதப் பிறவி
நரம்
நலம் (=உயர்வு) >>> நரம் = ஏனை உயிர்களிலும் உயர்ந்தது
~நரன்
மனிதன்
நரன்
நரம் (=மனிதப் பிறவி) >>> நரன்
~நவம்
நட்பு
நவம்
நவு (=சிரி) >>> நவம் = சிரித்து உறவாடுகை
~நவம்
கார்காலம்
நவம்
நம் (=நீர்) >>> நமம் >>> நவம் = மழைக்காலம்
~நவியம், ~நவம், ~நவதை, ~நவீனம்
இளமை, புதுமை
நவியம், நவம், நவதை, நவீனம்
நவ்வி (=இளங் குட்டி) >>> நவ்வியம் >>> நவியம், நவீனம், நவம், நவதை = இளமை, புதிதாய் இருக்கும் தன்மை = புதுமை
~நளினம்
மேகம், நீர்
நளினம்
நள் (=செறி, திரள்) + இனம் = நளினம் = திரளக் கூடியவை = மேகம், நீர்.
~நளினம்
தாமரை
நளினம்
நளி (=குளிர்ச்சி) >>> நளினம் = குளிர்ச்சி மிக்க மலர்
~நாகணவாய், ~நாகணம்
மைனா
நாகணவாய், நாகணம்
நகை (=ஒளி) + கண் + வாய் = நாகணவாய் = ஒளி பொருந்திய கண்களையும் வாயினையும் கொண்ட்து
~நாகம்
பாம்பு
நாகம்
நாங்கு (=முன்னோக்கி நீள்) >>>> நாக்கு >>> நாக்கம் >>> நாகம் = நாக்கினை அடிக்கடி முன்னோக்கி நீட்டுவது.
~நாகம்
மேகம்
நாகம்
நாகம் (=பாம்பு) >>> நாகம் = மேகம். பாம்பு மற்றும் மேகத்திடையிலான ஒற்றுமைகள்: ஊர்தல், சீறுதல், வெளிப்படுத்துதல் (நாக்கு, மின்னல்). ஒ.நோ: பாம்பு, அரவு போன்ற பெயர்களும் மேகம் & நாகத்தைக் குறிப்பதே.
~நாகம்
மலை
நாகம்
நாகம் (=மேகம்) >>> நாகம் =மேகங்கள் படியுமிடம்
~நாகம்
ஆகாயம்
நாகம்
நாகம் (=மேகம்) >>> நாகம் = மேகங்கள் ஊருமிடம்
~நாகம்
ஓசை
நாகம்
நாகம் (=மேகம்) >>> நாகம் = மேகங்கள் எழுப்பும் ஓசை
~நாகம்
குரங்கு
நாகம்
நகு (=சிரி) >>> நாகம் = மனிதரைப் போலச் சிரிப்பது
~நாகல், ~நாகை
நாவல் பழம்
நாகல், நாகை
நாகு (=இளமை, திரட்சி) >>> நாகல், நாகை = திரண்டு பளபளக்கும் செழிப்பான பழம். பி.கு: நாகைப் பழங்கள் நிறைந்த ஊரே நாகப்பட்டினம் ஆயிற்று.
~நாகினி
வெற்றிலை
நாகினி
நாகு (=இளமை, திரட்சி) >>> நாகினி = திரண்டு பளபளக்கும் செழிப்பான இலை.
~நாச்`தி
அழிவு, இன்மை
நாத்தி
நந்து (=அழி, கெடு) >>> நத்து >>> நாத்தி = அழிவு, இன்மை
~நாசி
மூக்கு
நாசி
நாழி (=துளை) >>> நாயி >>> நாசி = துளையுடையது
~நாசினி
கொல்வது
நாசினி
நசி (=கொல், அழி) >>> நாசினி = கொல்வது
~நாடகம்
நடனம்
நாடகம்
நாட்டு (=நிலை) >>> நாட்டகம் >>> நாடகம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை.
~நாட்டியம்
நடனம்
நாட்டியம்
நாட்டு (=நிலை) >> நாட்டியம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை.
~நாடா
கயிறு
நாடா
நாட்டு (=பிணி, கட்டு) >>> நாடா = கட்ட உதவுவது
~நாடி
குருதிக் குழாய்
நாடி
நடி (=ஆடு, துடி) >>> நாடி = துடிப்பது
~நாணயம்
துளைக்காசு
நாணயம்
நாண் (=கயிறு) + ஏய் (=பொருத்து) + அம் >>> நாணேயம் >>> நாணயம் = கயிற்றில் பொருத்தப்பட்ட துளைக்காசு.
~நாதசுரம்
துளைக்கருவி
நாதசுரம்
நாதம் (=ஒலி) + சுரம் (=நெடுந்துளை) = நாதசுரம் = ஒலியை எழுப்பும் நீண்ட துளையைக் கொண்ட இசைக்கருவி
~நாத்திகம்
கடவுள் மறுப்பு
நாத்திகம்
நாத்தி (=இன்மை) >>> நாத்திகம் = கடவுள் இன்மை வாதம்
~நாதம்
சங்கொலி, ஒலி
நாதம்
நத்து (=சங்கு) >>> நத்தம் >>> நாதம் = சங்கின் ஒலி, ஒலி
~நாதம்
விந்து
நாதம்
நத்து (=தழைக்கச்செய்) >>> நத்தம் >>> நாதம் = இனத்தைத் தழைக்கச் செய்வது
~நாதன்
கணவன்
நாதன்
நத்து (=தழைக்கச்செய்) >>> நத்தன் >>> நாதன் = இனத்தைத் தழைக்கச் செய்பவன்.
~நாதி
பெருங்காயம்
நாதி
நாறு (=மண) >>> நாறி >>> நாதி = மணம் வீசுவது
~நாந்தல்
மப்புமந்தாரம்
நாந்தல்
நது (=மறை) >>> நந்து >>> நந்தல் >>> நாந்தல் = மேகங்கள் கூடி மறைத்தல்.
~நாந்தி
முன்னுரை
நாந்தி
நந்து (=தோன்று) >>> நாந்தி = தோற்ற உரை
~நாந்தி
முதுகு
நாந்தி
நது (=மறை) >>> நந்து >>> நாந்தி = மறைப்புப் பகுதி
~நாபி
தொப்புள்
நாபி
நாப்பம் (=நடு) >>> நாப்பி >>> நாபி = நடுவில் இருப்பது
~நாபிரம்
விந்து
நாபிரம்
நம் (=நீர்) >>> நமிரம் >>> நாபிரம் = நீர் போன்றது
~நாமம்
நெற்றிக்கோடு
நாமம்
நாப்பம் (=நடு) >>> நாமம் = நெற்றி நடுவிலிடும் கோடு
~நாமம்
பெயர்
நாமம்
நாவு (=அழை) >>> நாவம் >>> நாமம் = அழைக்கப்படுவது
~நாமம்
போற்றி, பாட்டு
நாமம்
நாவு (=பாடு) >>> நாவம் >>> நாமம் = பாட்டு, போற்றி
~நாமம்
தராசு முள்
நாமம்
நாப்பம் (=நடு) >>> நாமம் = தராசின் நடுமுள்
~நாயகம்
மேம்பாடு, தலைமை
நாயகம்
நயம் (=மேம்பாடு) + அகம் = நயகம் >>> நாயகம் = மேம்பாட்டினை உடைமை = தலைமை
~நாயகன், ~நாயன்
தலைவன்
நாயகன், நாயன்
நாயகம் (=தலைமை) >>> நாயகன். நயம் (=மேம்பாடு) >>> நயன் >>> நாயன் = மேம்பாட்டினை உடையவன்
~நாயகி, ~நாயிகை
தலைவி
நாயகி, நாயிகை
நாயகம் (=தலைமை) >>> நாயகி, நாயிகை
~நாரதம்
மேகம்
நாரதம்
நரலு (=ஒலி) >>> நரறு >>> நரறம் >>> நரதம் >>> நாரதம் = ஒலிப்பு மிக்கது
~நாரநிதி
கடல்
நாரநிதி
நாரம் (=நீர்) + நிதி = நாரநிதி = நீரெனும் செல்வம் மிக்கது
~நாரம்
நீர்
நாரம்
நார் (=ஈரம்) >>> நாரம் = ஈரப்படுத்துவது = நீர்
~நாராயணன்
திருமால்
நாராயணன்
நாரம் (=உயிர்கள்) + ஆயன் = நாராயன் >>> நாராயணன் = உயிர்களை மேய்ப்பவன்.
~நாராயம், ~நாராசம்
அம்பு, எழுத்தாணி
நாராயம், நாராசம்
நார் (=நரம்பு) + ஆழ் (=மூழ்கு) + அம் = நாராழம் >>> நாராயம் >>> நாராசம் = மூழ்கும் நரம்பு >>> அம்பு
~நாரி
இடுப்பு
நாரி
நார் (=கயிறு, கொடி) >>> நாரி = கொடிபோல மெல்லியது
~நாரி, ~நாரிகை
பெண், தாய்
நாரி, நாரிகை
நார் (=அன்பு, பாசம்) >>> நாரி, நாரிகை = அன்புடையவள்.
~நாரிகேளம்
தேங்காய்
நாரிகோளம்
நார் + இ + கோளம் = நாரிகோளம் >>> நாரிகேளம் = நாரினை உடைய கோளவடிவப் பொருள்
~நாலி
முத்து
நாலி
நல் (=வெண்மை) >>> நாலி = வெண்ணிறத்தது
~நாலி
கந்தைத்துணி
நாலி
நாலு (=தொங்கு) >>> நாலி = கிழிந்து தொங்கும் துணி
~நாலிகை
மூங்கில்
நாழிகை
நாழி (=துளை) >>> நாழிகை >>> நாலிகை = உள்ளே துளையுடையது.
~நாலிகை, ~நாளிகம்
தாமரை
நாளிகை, நாளிகம்
நளி (=குளிர்ச்சி) >>> நளிகை >>> நாளிகை >>> நாளிகம், நாலிகை = குளிர்ந்த மலர்.
~நாழிகை
24 நிமிடம்
நாளிகை
நாள் + இகு (=உடை) + ஐ = நாளிகை >>> நாழிகை = ஒரு நாளின் உடைந்த கூறு.
~நாளம்
குழாய்
நாழம்
நாழி (=துளை) >>> நாழம் >>> நாளம் = துளையுடையது
~நிச^ம்
உறுதி, உண்மை
நெசம்
நெஞ்சு (=துணிவு, உறுதி) >>> நெச்சு >>> நெச்சம் >>> நெசம் >>> நிச^ம்
~நிச்சயம்
உறுதி, துணிவு
நெச்சியம், நிச்சயம்
நெஞ்சு (=துணிவு, உறுதி) >>> நெஞ்சியம் >>> நெச்சியம் >>> நிச்சயம்
~நிசா~
இருள், இரவு
நிசல், நிசா
நிழல் (=இருள்) >>> நியல் >>> நிசல் >>> நிசா~
~நிதானம்
பொறுமை
நியத்தனம், நிதானம்
நிழல் (=குளிர்ச்சி) + தனம் = நிழற்றனம் >>> நிழத்தனம் >>> நியத்தனம் >>> நிதானம் = குளிர்ந்த தன்மை, பொறுமை
~நிருத்தம்
நிலை, நடனம்
நிருத்தம்
நில் >>> நிறுத்து >>> நிறுத்தம் (=நிலை) >>> நிருத்தம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை. ஒ.நோ: நாட்டு (=நிலை) >>> நாட்டியம்
~நீச்சம், ~நீசம்
பள்ளம், இழிவு, தாழ்வு
நீச்சம், நீசம்
நீச்சு (=கழுவு, குளிப்பாட்டு) >>> நீச்சம், நீசம் = கழுவும் / குளிப்பாட்டும் பள்ளம் >>> இழிவு, தாழ்வு.
~நீமம்
ஒளி
நீமம்
நீள் >>> நீள்மம் >>> நீமம் = மிகமிக நீளமானது = ஒளி
~பிராணம்
மூச்சு
பீரணம், பிராணம்
பீர் (=வெளியேறு) + அணை (=வந்தடை) = பீரணை >>> பீரணம் >>> பிராணம் = வெளியேறி வந்தடைவது
~பீரங்கி
குண்டைப் பாய்ச்சும் கருவி
பீரங்கி
பீர் (=விரைந்து வெளிப்படு) + அங்கி (=தீ) = பீரங்கி = குண்டினை விரைந்து பாய்ச்சும்போது தீயை உண்டாக்கும் கருவி
~புச்~பம்
மலர்
புய்ப்பம்
புய் (=பறி) >>> புய்ப்பம் >>> புச்~பம் = பறிக்கப்படுபவை
~பூர்ணிமா
முழுநிலா
பூர்நிமா
பூரி (=நிறை) + நீமம் (=ஒளி) = பூரிநீமம் >>> பூர்நிமா >>> பூர்ணிமா = நிறைவான ஒளி தருவது
~பொக்கிசம்
செல்வம்
பொக்கிசம்
பொங்கு (=செல்வச் செழிப்பு) >>> பொங்கியம் >>> பொங்கிசம் >>> பொக்கிசம் = செல்வம்
~பொம்மை
பொய் வடிவம்
பொம்மை
பொய்ம்மை >>> பொம்மை = பொய்யான வடிவம்
~பௌர்ணமி
முழுநிலா
பூர்நிமா
பூர்ணிமா >>> பௌர்ணமை, பௌர்ணமி
~மலம்
கெட்ட கழிவு
மளம்
மாள் (=கழி) >>> மாளம் >>> மளம் >>> மலம் = கழிக்கப்பட வேண்டிய கெட்ட பொருள்
~யாதனை
துன்பம்
யாதனை
ஏதம் (=துன்பம்) >>> யேதம் >>> யாதம் >>> யாதனை
~யோசனை
சிந்தனை
ஓசனை, யோசனை
ஓர் (=சிந்தி) >>> ஓர்ச்சி >>> ஓர்ச்சனை >>> ஓசனை >>> யோசனை = சிந்தனை, கருத்து
~யோசனை
தூரம்
யோசனை
ஓச்சு (=செலுத்து) >>> ஓச்சனை >>> ஓசனை >>> யோசனை = செலுத்தப்படும் தூரம்
~விச்`வாசம்
விருப்பமும் இணக்கமும்
வீழ்வசம், விசுவாசம்
வீழ் (=விரும்பு) + வசம் (=இணக்கம்) = வீழ்வசம் >>> விச்`வாசம் = விருப்பத்துடன் கூடிய இணக்கம்
~வியாதி
நோய்
யாதி
அவதி (=நோய்) >>> யவதி >>> யாதி >>> வியாதி
~வீதி
வழி, தெரு
வீதி
வீறு (=பிரி, வகு) >>> வீறி >>> வீதி = வகுக்கப்பட்டது

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.