வெள்ளி, 26 ஜூன், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 33


சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

புலுதம்

மெய் எழுத்துக்கள்

புல்லுந்தம்

புல்லு (=பொருந்து) + உந்து (=எழு, ஒலி) + அம் = புல்லுந்தம் >>> புலுதம் = உறுப்புக்கள் பொருந்துதலால் எழுகின்ற ஒலிகள்.

புலுதம்

உயிர் அளபெடை

புல்லுந்தம்

புல்லு (=ஒத்திரு, அடு) + உந்து (=ஓசை) + அம் = புல்லுந்தம் >>> புலுதம் = ஒத்த ஓசைகள் அடுத்திருத்தல். எ.கா: ஏஎ, ஆஅ, ஊஉ

புவ்வம்

பழையது

மூவம்

மூ (=முதிர்) + அம் = மூவம் >>> புவ்வம் = முதிர்ந்தது, பழையது.

புவம்

ஆகாயம்

பூவம்

பூ (=மலர், விரி) + அம் = பூவம் >>> புவ்வம் = மலர்ந்து இருப்பது

புவன்

இறைவன்

பூவன்

பூ (=தோன்று) + அன் = பூவன் >>> புவன் = தோன்றியவன்.

புவனம், புவனி

பூமி

பூவனம், பூவலம்

(1). பூ (=தோன்று, பிற, உயிர்) + வனம் (=வாழ்விடம்) = பூவனம் >>> புவனம் = அனைத்து உயிரிகளின் வாழ்விடம். (2). பூவல் (=செம்மண்) + அம் = பூவலம் >>> புவனம் = பூமி.

புவனம்

கடல் நீர்

பூவானம்

பூ (=பூமி, தோன்று) + வான் (=நீர்) + அம் = பூவானம் >>> புவனம் = பூமியில் தோன்றிய நீர்.

புவி

பூமி

புவ்வி

புவ்வம் (=செம்மை) + இ = புவ்வி >>> புவி = செந்நிலம், பூமி

புளகம், புளகு

மகிழ்ச்சி

பொல்லகம்

பொலி (=மலர்) + அகம் (=மனம்) =பொல்லகம் >>> புளகம் = அக மலர்ச்சி

புளகி

மகிழ்

புளகி

புளகம் (=மகிழ்ச்சி) >>> புளகி = மகிழ்

புளகம், புளகு, புளகிதம்

மயிர்க் கூச்செறிவு

புல்லகம்

புல் (=மயிர்) + அகை (=எழு, நிமிர்) + அம் = புல்லகம் >>> புளகம் = திடீரென்று உடலின் மயிர் நிமிர்தல் = மயிர் சிலிர்த்தல்.

புளகி

மயிர்க் கூச்செறி

புளகி

புளகம் (=மயிர்க் கூச்செறிவு) >>> புளகி = மயிர்க் கூச்செறி.

புளகாங்கிதம்

முழுமையான மயிர்சிலிர்ப்பு

புளகாங்கிதம்

புளகம் (=மயிர்க் கூச்செறிவு) + அங்கம் (=உடல்) + இதம் = புளகாங்கிதம் = உடல் முழுவதும் ஏற்படும் மயிர்க் கூச்செறிவு.

புளகம்

சோறு

பொல்லாக்கம்

பொலி (=மலர்) + ஆக்கம் (=உணவு) = பொல்லாக்கம் >>> புளகம் = மலர்ந்த உணவு = சோறு.

புளகம்

கண்ணாடி

பொலகம்

பொலம் (=ஒளி, அழகு) + அகம் (=உள்) = பொலகம் >>> புளகம் = ஒளியை / அழகினை உள்ளே காட்டுவது.

புளிச்சி

பருத்தி

பொலிச்சி

பொலி (=அழகு, வெண்மை) + சி = பொலிச்சி >>> புளிச்சி = வெண்ணிறம் கொண்டது.

புளிதம்

மாமிசம்

பொளிறம்

பொளி (=பிள, வெட்டு) + இறு (=கொல்) + அம் = பொளிறம் >>> புளிதம் = கொன்று வெட்டப் பட்டது. 

புளிந்தன், புளிஞன், புளினன்

வேடன்

புளிற்றன்

புள் (=போல் ஒலி) + இறு (=வீழ்த்து, கொல்) + அன் = புளிற்றன் >>> புளித்தன் >>> புளிந்தன், புளிஞன், புளினன் = போலியாக ஒலித்து வீழ்த்திக் கொல்பவன்.

புளினம்

குன்று, திட்டு

பொலினம்

பொலி (=குவியல்) + இனம் (=இடம்) = பொலினம் >>> புளினம் = குவியல், குன்று

புற்கசன், புக்கசன்

இழிசெயல் செய்பவன்

புற்கையன்

புல் (=இழிவு) + கை (=செயல்) + அன் = புற்கையன் >>> புற்கசன் >>> புக்கசன் = இழிவான செயலைச் செய்பவன்

புட்கலம், புற்கலம்

உடல்

புட்கலம்

புள் (=பறவை, உயிர்) + கலம் (=கூடு) = புட்கலம் >>> புற்கலம் = உயிர்ப் பறவை தங்கும் கூடு.

புட்கலன், புற்கலன்

உயிர்

புட்கலன்

புட்கலம் (=உடல்) >>> புட்கலன் >>> புற்கலன் = உடலில் தங்குவது.

புற்புதம்

நீர்க்குமிழி

பூர்முத்தம்

பூர் (=நிறை, பெரு) + முத்து (=நீர்த்துளி) + அம் = பூர்முத்தம் >>> புற்புதம் = காற்று நிறைந்து பெரிதான நீர்த்துளி.

புறவாலி

கழிப்பிடம்

புறமலி

புறம் (=பின்பக்கம், இடம்) + மலம் (=கழிவு) + இ = புறமலி >>> புறவாலி = கழிக்கின்ற பின்பக்க இடம்.

ஆரோக்கியம்

உடல்நலம், மனநலம்

ஆரோக்கியம்

ஆர் (=நிறைவு, அழகு, கொடு) + ஓகை (=மகிழ்ச்சி) + இயம் = ஆரோக்கியம் = உடலுக்கு நிறைவான அழகினையும் மனதிற்கு நிறைவான மகிழ்ச்சியையும் பெறச்செய்வது.

புனர்

மறுமை

பூணார்

பூண் (=வட்டம்) + ஆர் (=நிறைவு, முடிவு) = பூணார் >>> புனர் = வட்டத்தின் முடிவு = வட்டத்தின் ஆரம்பம் = மறுமை.

புனருத்தி

கூறியது கூறல்

புனருத்தி

புனர் (=மறுமை) + உத்தி (=பேச்சு) = புனருத்தி = ஒரு செய்தியையே மறுபடியும் பேசுதல்.

உத்தாரணம்

நிலை நிறுத்துகை

உற்றாரணம்

உறு (=உறுதியாகு) + ஆர் (=பொருத்து) + அணம் = உற்றாரணம் >>> உத்தாரணம் = உறுதியாகப் பொருத்துகை.

புனருத்தாரணம்

மீண்டும் நிலை நிறுத்துகை

புனருத்தாரணம்

புனர் (=மறுமை) + உத்தாரணம் (=நிலைநிறுத்துகை) = புனருத்தாரணம் = மறுபடியும் நிலைநிறுத்துதல்.

புனச்`காரம்

அணிவிக்கும் செயல்

புனய்காரம்

புனை (=அணிவி) + காரம் (=செயல்) = புனைகாரம் >>> புனய்காரம் >>> புனச்`காரம் = அணிவிக்கும் செயல்.

புனாதி

கட்டிடத்தின் அத்திவாரம்

பூணாதி

பூணு (=தாங்கு, சும) + ஆதி (=அடிப்படை) = பூணாதி >>> புனாதி = சுமக்கின்ற / தாங்குகின்ற அடிப்படை.

புனியாத்து

கட்டிடத்தின் அத்திவாரம்

பூணியாதி

பூணி (=தாங்கு, சும) + ஆதி (=அடிப்படை) = பூணியாதி >>> புனியாதி >>> புனியாத்து = சுமக்கின்ற / தாங்குகின்ற அடிப்படை.

அத்திவாரம், அச்`திவாரம்

கட்டிடத்தின் அடிப்படை

ஆதிபாரம்

(3). ஆதி (=அடிப்படை) + பாரம் (=சுமை) = ஆதிபாரம் >>> அத்திவாரம் >>> அச்`திவாரம் = சுமக்கின்ற அடிப்படை.

புனிதம், புனீதம்

தூய்மை

புனிற்றம்

புன்மை (=இழிவு, அசுத்தம்) + இறு (=அழி, நீங்கு) + அம் = புனிற்றம் >>> புனித்தம் >>> புனிதம் = இழிவு /அசுத்தம் நீங்கியது.

புச்~கரணி, புச்~கரிணி, புட்கரணி

குளம்

புட்கரினி

புட்கரினி (=குளம்) >>> புட்கரணி, புட்கரிணி, புச்~கரிணி, புச்~கரணி, புச்~கரினி.

பூகதம்

கமுகு

முகத்தம்

முக (=உண்ணு) + அத்தம் (=சிவப்பு, துண்டு, பொருள்) = முகத்தம் >>> பூகதம் = உண்ணப்படுகின்ற சிவந்த துண்டான பொருள்.

பூக்கம்

ஊர்

பூகம்

புகு (=அடை) + அம் = பூகம் >>> பூக்கம் = அடையுமிடம்.

பூகதம்

பூமியில் தோன்றியது

பூகதம்

பூ (=பூமி) + கதி (=தோன்று) + அம் = பூகதம் = பூமியில் தோன்றியது.

பூகதர்

புகழ்வோர்

பொங்கற்றர்

பொங்கு (=உயர்) + அறை (=ஒலி, பாடு) + அர் = பொங்கற்றர் >>> பொக்கத்தர் >>> பூகதர் = உயர்த்திப் பாடுபவர்.

பூக்கம், பூகம்

கூட்டம், திரட்சி

பொங்கம்

பொங்கு (=பெருகு, சேர், திரள்) + அம் = பொங்கம் >>> பொக்கம் >>> பூக்கம் = பெருக்கம், கூட்டம், திரட்சி. .

பூக்கம், பூகம்

கமுகு

போகம்

போகு (=பிரி, பிள) + அம் (=உணவு) = போகம் >>> பூகம் >>> பூக்கம் = துண்டு துண்டான உணவு.

பூகம்

இருள்

மூழ்கம்

மூழ்கு (=மறை) + அம் (=அழகு, ஒளி) = மூழ்கம் >>> மூய்கம் >>> பூகம் = ஒளியின் மறைவு = இருள்.

பூகம்

நேரம்

போகம்

போகு (=கழி, நீங்கு) + அம் = போகம் >>> பூகம் = கழியும் / நீங்கும் இயல்பினது = நேரம்.

பூகம்

பிளவு

போகம்

போகு (=பிரி) + அம் = போகம் >>> பூகம் = பிரிவு, பிளவு

பூகம்

பலா

பொங்கம்

பொங்கு (=பெரு, திரள்) + அம் (=உணவு) = பொங்கம் >>> பொக்கம் >>> பூகம் = பெருத்துத் திரண்ட உணவுப் பொருள்.

பூகம்

கழுகு

பொங்கம்

பொங்கு (=விரை, உயர், பெரு) + அம் = பொங்கம் >>> பொக்கம் >>> பூகம் = விரைவாகவும் உயரமாகவும் பறக்கும் பெரும்பறவை

கம்பி

ஒலி, அதிர்

கம்பி

கம்பலை (=ஒலி, அதிர்வு) >>> கம்பி -= ஒலி, அதிர், நடுங்கு

கம்பம், கம்பனம்

அதிர்வு, நடுக்கம்

 

கம்பி (=அதிர், நடுங்கு) >>> கம்பம், கம்பனம் = அதிர்வு, நடுக்கம்

பூகம்பம், பூகம்பனம்

நில அதிர்வு

பூகம்பம், பூகம்பனம்

பூ (=பூமி) + கம்பம் / கம்பனம் (=அதிர்வு) = பூகம்பம் / பூகம்பனம் = பூமி அதிர்வு.

பூகரம்

கொல்லும் நஞ்சு

போக்காலம்

போக்கு (=அழி) + ஆல் (=நஞ்சு) + அம் = போக்காலம் >>> போகரம் >>> பூகரம் = அழிக்கும் நஞ்சு.

பூகாகம்

அன்றில்

போககம்

போகம் (=புணர்ச்சி, சேர்க்கை) + அகம் (=அன்பு) = போககம் >>> பூகாகம் = அன்புடன் சேர்ந்தே இருப்பது.

பூகாகம்

கரும்புறா

பொய்காகம்

பொய் (=போலி) + காகம் = பொய்காகம் >>> போகாகம் >>> பூகாகம் = காகம் போலவே தோன்றும் போலியான பறவை.

பூகாமி

குதிரை

பொங்கம்பி

பொங்கு (=விரை) + அம்பு + இ = பொங்கம்பி >>> பொக்கம்மி >>> பூகாமி = அம்பு போல விரையக் கூடியது.

பூகேசம்

நீர்ப்பாசி

பூகேழம்

பூ (=இலை, தோன்று) + கேழ் (=நிறம், நிறை) + அம் = பூகேழம் >>> பூகேசம் = இலையின் நிறத்தில் தோன்றி நிறைந்திருப்பது.

பூகேசம்

ஆலமரம்

பூகேழம்

பூ (=விரி, நிலம்) + கெழு (=பொருந்து, நிறை) + அம் = பூகேழம் >>> பூகேசம் = விரிவுடையதும் நிலத்துடன் நிறைவாகப் பொருந்தி இருப்பதும் ஆன மரம்.

பூங்கற்று

பூதம், பேய்

போக்காற்று

போ (=நீங்கு) + காற்று (=உயிர்) = போக்காற்று >>> பூங்கற்று = உயிர் நீங்கியது = பூதம், பேய்.

பூங்கற்று

அழகு

பூங்கன்று

பூ (=தோன்று) + கன்று (=இளமை) = பூங்கன்று >>> பூங்கற்று = இளமையான தோற்றம் = அழகு.

பூச்சாண்டி

வேசம் அணிந்தவன்

பொய்யாண்டி

பொய் (=போலி, வேசம்) + ஆண்டி = பொய்யாண்டி >>> பூச்சாண்டி = வேசம் அணிந்தவன்.

பூச்சி

ஒருவகைச் சிற்றுயிரி

மூயி

மூய் (=நெருங்கிச் சூழ், மொய்) + இ = மூயி >>> பூசி >>> பூச்சி =  நெருங்கிச் சூழும் / மொய்க்கும் இயல்புடையன.

பூச்சியம், பூச்சிதம்

மதிப்பானது, அருமை

பூச்சியம், பூச்சிதம்

பூசி (=போற்று, வணங்கு) + இயம் / இதம் = பூச்சியம் / பூச்சிதம் = போற்றத்தக்கது, வணங்கத்தக்கது, அருமையானது

பூச்சியம்

ஒன்றும் இன்மை

பூழியம்

புழை (=ஓட்டை) + இயம் = பூழியம் >>> பூசியம் >>> பூச்சியம் = ஓட்டையைப் போல ஒன்றும் அற்றது.

பூச்சியம்

மறைப்பு

பூச்சியம்

பூச்சு (=மறைப்பு) + இயம் = பூச்சியம் = மறைக்கும் செயல்.

பூசணம்

அலங்கார அணி

பூசணம்

பூசி (=அலங்கரி) + அணி + அம் = பூசணம் = அலங்கார அணி

பூசல்

ஒப்பனை

பூசல்

பூசி (=அலங்கரி) + அல் = பூசல் = அலங்காரம், ஒப்பனை

பூசனம், பூசனை

வழிபாடு, போற்றி

பூசணம்

பூசி (=போற்று, வணங்கு) + அணம் = பூசணம் >>> பூசனம் = போற்றி, வணக்கம், வழிபாடு.

பூசிதம், பூசிதை, பூசிப்பு

வணக்கம்

பூசிதம்

பூசி (=வணங்கு) + இதம் = பூசிதம் = வணக்கம்.

பூசிதம்

அலங்கரிக்கப் பட்டது

பூசிதம்

பூசு (=அலங்கரி) >>> பூசிதம் = அலங்கரிக்கப் பட்டது, புனையப் பட்டது.

சுதன்

மகன்

உந்தன்

உந்து (=எழு, தோன்று) + அன் = உந்தன் >>> சுந்தன் >>> சுதன் = தோன்றியவன் = மகன்.

சுதை

மகள்

உந்தை

உந்து (=எழு, தோன்று) + ஐ = உந்தை >>> சுந்தை >>> சுதை = தோன்றியவள் = மகள்.

பூசுதன்

செவ்வாய்

பூசுதன்

பூ (=பூமி) + சுதன் (=மகன்) = பூசுதன் = பூமியின் மகன்.

பூசுதை

சீதை

பூசுதை

பூ (=பூமி) + சுதை (=மகள்) = பூசுதை = பூமியின் மகள்.

பூடணம்

அணிகலன்

பூட்டணம்

பூட்டு (=அணி) + அணம் = பூட்டணம் >>> பூடணம் = அணிகலன்

பூடம்

பீடம்

பீடம்

பீடம் (=மேட்டு இடம்) >>> பூடம்

பூத்திரம், பூதரம்

மலை

முற்றிரம்

முற்று (=முதிர், பெரு) + இரு + அம் = முற்றிரம் >>> பூத்திரம் = காலத்தால் முதிர்ந்த அளவில் பெரிய இருப்பு.

பூதம்

பெருத்தது, உடல், உயிரி

முற்றம்

முற்று (=பெரு, வளர்) + அம் = முற்றம் >>> பூத்தம் >>> பூதம் = பெருத்தது, வளர்வது, உடல், உயிரி.

பூதம்

பேய், இறந்த காலம்

முற்றம்

முற்று (=இற) + அம் = முற்றம் >>> பூத்தம் >>> பூதம் = இறந்தது, பேய், இறந்தகாலம்.

பூதம்

கமுகு, பாக்கு

முற்றம்

முற்று (=வலிமையாகு) + அம் (=உணவு) = முற்றம் >>> முத்தம் >>> பூதம் = வலிமையான உணவுப் பொருள்.

பூதம்

சுத்தம்

முறம்

முற (=சுத்தமாகு) >>> முறம் >>> பூதம் = சுத்தம். ஒ.நோ: முற >>> முறம் = தானியங்களைச் சுத்தம் செய்ய உதவுவது.

பூதம்

சத்தியம்

முற்றம்

முற்று (=பூரணம், நிலை) + அம் = முற்றம் >>> புத்தம் >>> பூதம் = பூரணமானது; நிலையானது = சத்தியம்.

பூதம்

புல்

முறம்

முறி (=இலை, புல்) + அம் = முறம் >>> பூதம் = புல்.

பூதம்

சங்கு, சிப்பி

முற்றம்

முற்று (=இற, தங்கு, வலிமை) + அம் = முற்றம் >>> புத்தம் >>> பூதம் = இறந்த பின்னர் தங்கிவிடும் வலுவான பொருள்.

பூதவம், பூதம்

ஆலமரம்

மீதாவம்

மீ (=உயரம், மிகவும்) + தா (=பரவு) + அம் = மீதாவம் >>> பூதவம் = உயரமாக வளர்ந்து நன்கு பரவியிருப்பது.

பூதன்

மகன், உயிர்

பூதன்

முந்து (=எழு, தோன்று) + அன் = முந்தன் >>> பூதன் = தோன்றியது = மகன், உயிர்.

பூதனன்

அரசன்

முந்தணன்

முந்து (=முதன்மையாகு) + அணன் = முந்தணன் = பூதனன் = முதன்மையானவன் = அரசன்.

பூதாகரம்

பெரு வடிவம்

பூதகாலம்

பூதம் (=பெருத்தது) + காலு (=தோன்று) + அம் = பூதகாலம் >>> பூதாகரம் = பெரிதாகத் தோன்றுவது.

பூதாரம்

பன்றி

பூதறம்

பூ (=பூமி) + தறி (=வெட்டு, பிள, தோண்டு) + அம் = பூதறம் >>> பூதாரம் = நிலத்தைப் பிளப்பதைப் போல தோண்டுவது.

பூதாரன்

அரசன்

பூதாரன்

பூ (=தோன்று, விளங்கு) + தார் (=படை) + அன் = பூதாரன் = படையுடன் விளங்குபவன் = அரசன்.

பூதாரி

பெருங்காயம்

முற்றாரி

முற்று (=மிகு, கெட்டியாகு) + ஆர் (=பரவு, உண்) + இ = முற்றாரி >>> புத்தாரி >>> பூதாரி = மிகவும் பரவி மணக்கின்ற கெட்டிப்பட்ட உணவுப்பொருள்.

பூதி

கெட்டவாடை வீசுவது

பொன்றி

பொன்று (=கெடு, அழி) + இ = பொன்றி >>> பொத்தி >>> பூதி = கெட்டுப்போனது, அழிந்தது, கெட்டவாடை வீசுவது.

பூதி

சேறு

பூதி

பொதி (=செறி) >>> பூதி = செறிவுடையது

பூதி

நரகம்

முற்றி

முற்று (=இற, தாக்கு, தண்டி, அடை) + இ = முற்றி >>> புத்தி >>> பூதி = இறந்தவர்கள் தவறுக்காகத் தண்டிக்கப்படும் இடம்.

பூதி

வளம், பூமி

பொறி

பொறி (=செல்வம்) >>> பொதி >>> பூதி = வளம், வளம் மிக்கது

பூதி

பொடி, புழுதி, சாம்பல்

புழுதி

புழுதி (=பொடி) >>> புய்தி >>> பூதி = பொடி, சாம்பல், திருநீறு.

பூதி

மாமிசம்

வீறி

வீறு (=வெட்டு) + இ = வீறி >>> பீதி >>> பூதி = வெட்டப்பட்டது

பூதி

கொடுமை செய்தல்

மீறி

மீறு (=செருக்கு) + இ = மீறி >>> பீதி >>> பூதி = செருக்குடன் நடந்து கொள்ளுதல்

பூதி

உடல்

முற்றி

முற்று (=பெரு, வளர்) + இ = முற்றி >>> புத்தி >>> பூதி = வளர்ந்து பெருகக் கூடியது = உடல்.

பூதி

பொதுமை

பொதி

பொது + இ = பொதி >>> பூதி = பொதுமை

பூதிகம், பூதியம்

பூமி

பூதிகம்

பூதி (=செல்வம், வளம்) + இக (=பொறு, தாங்கு) + அம் = பூதிகம் = பல வளங்களைத் தாங்கி நிற்பது.

பூதிகம், பூதியம்

உடல்

பொதிகம், பொதியம்

பொதி (=உடல்) >>> பொதிகம், பொதியம் >>> பூதிகம், பூதியம்

பூதிகம்

வாசனைப் புல்வகை

முறிகம்

முறி (=இலை, புல்) + இக (=கட, பரவு, மண) + அம் = முறிகம் >>> பூதிகம் = மணக்கின்ற புல்.

பூதிகாமன்

மந்திரி

புத்திகமன்

புத்தி (=அறிவு) + கமம் (=நிறைவு) + அன் = புத்திகமன் >>> பூதிகாமன் = அறிவு நிறைந்தவன்.

பூபதி

அரசன்

பூபதி

பூ (=பூமி, நிலம்) + பதி (=தலைவன்) = பூபதி = நிலத் தலைவன்.

பூபதி

மல்லிகை

பூமதி

பூ + மது (=இனிமை, மணம்) + இ = பூமதி >>> பூபதி = இனிய வாசனை மிக்க மலர்.

பூமன், பூமான், பூபன்

அரசன்

பூமன்

பூ (=பூமி, நிலம்) + மன் (=தலைவன்) = பூமன் >>> பூமான், பூபன் = நிலத்தின் தலைவன்.

பூபாலன்

அரசன், வேளாளன்

பூவாளன்

பூ (=பூமி, நிலம்) + ஆள் + அன் = பூவாளன் >> பூபாலன் = நிலத்தை ஆள்பவன் = அரசன், வேளாளன்.

பூபாளம்

விடியலின் இசை

பூவாலம்

பூ (=தோன்று, விடி) + ஆல் (=ஒலி) + அம் = பூவாலம் >>> பூபாளம் = விடியலின்போது கேட்கப்படும் ஒலிகள். 

பூமி, புவி

செந்நிலம்

புவி, பூமி

புவ்வம் (=செம்மை) + இ = புவ்வி >>> புவி >>> பூமி = செந்நிலம்.

பூமி

நாக்கு

பம்மி

பம்மு (=மறை, ஒலி) + இ = பம்மி >>> பவ்வி >>> பௌவி >>> பூமி = வாய்க்குள் மறைந்திருந்து ஒலி செய்வது.

பூமிசம்

பூமிமேல் இருப்பவை

பூமிசம்

பூ (=பூமி) + மிசை (=மேல்) + அம் = பூமிசம் = பூமியின் மேல் இருப்பவை.

பூமிசம்

நரகம்

வீவீழம்

வீ (=இற) + வீழ் (=தாக்கு, தாழ்) + அம் = வீவீழம் >>> பீமீசம் >>> பூமிசம் = இறந்தவர்கள் தாக்கப்படும் தாழ்வான இடம்.

பூமித்திரம்

மலை

பூமீற்றிரம்

பூ (=நிலம்) + மீறு (=பெரிதாய் வளர்) + இரு (=தங்கு) + அம் = பூமீற்றிரம் = பூமித்திரம் = பெரிதாய் வளர்ந்து தங்கிய நிலம்.

பூயம்

சீழ், அருவரு க்கத்தக்கது

பீயம்

பீ (=மலம், கழிவு) + அம் = பீயம் >>> பூயம் = மலம் போன்ற கழிவுப் பொருள், அருவருக்கத் தக்கது.

பூயாரி

வேம்பு

புயலி

புயல் (=மேகம், மழை) + இ = புயலி >>> பூயாரி = மழையை வருவிப்பதாகக் கருதப்படும் மரம்.

பூயாலசம்

கண் பீளை

விழளாயம்

விழி + அள் (=திரள்) + ஆய் (=மலம், கழிவு) + அம் = விழளாயம் >>> பியலாசம் >>> பூயாலசம் = விழியில் திரளும் கழிவு.

பூர்த்தம்

குளம் வெட்டுதல்

பூர்த்தம்

பூர் (=நிறை) >>> பூர்த்து (=நிறையச்செய்) + அம் = பூர்த்தம் = குளம் முதலானவை வெட்டி நீர் நிறையச் செய்தல்.

பூர்த்தி

முழுமை ஆனது

பூர்த்தி

பூர் (=நிறை) >>> பூர்த்து (=நிறையச்செய்) + இ = பூர்த்தி = நிறைவாக்கப் பட்டது, முழுமையானது.

பூர்ப்பியம்

பழமை பாராட்டுதல்

பூர்வியம்

பூர் (=நிறை, முடி) + விய (=பாராட்டு) + அம் = பூர்வியம் >>> பூர்ப்பியம் = முடிந்துபோனதைப் / பழையதைப் பாராட்டுதல்.

பூர்வம், பூருவம்

பழையது, முன்னது

பூர்மம்

பூர் (=நிறை, முடி) + மம் = பூர்மம் >>> பூர்வம் = முடிந்துபோனது, பழையது, முன்னது.

பூர்வம், பூருவம்

கிழக்கு

பொலுவம்

பொலி (=ஒளி) + உவா (=கடல்) + அம் = பொலுவம் >>> பூருவம் >>> பூர்வம் = கடல்மேல் ஒளி தோன்றும் திசை.

பூர்வாகம், பூர்வாங்கம்

பழவினை, முன்வினை

பூர்வாக்கம்

பூர்வம் (=பழமை) + ஆக்கம் (=செயல்) = பூர்வாக்கம் >>> பூர்வாங்கம், பூர்வாகம் = பழவினை, முன்வினை.

பூர்வாணம், பூர்வான்னம்

முற்பகல்

பூர்வானம்

பூர் (=நிறை, முடி) + வான் (=ஒளி, பகல்) + அம் = பூர்வானம் >>> பூர்வாணம், பூர்வான்னம் = முடிந்த பகல், முற்பகல்.

பூர்விகம், பூர்வீகம்

முன்னர் தங்கியது

பூர்விங்கம்

பூர்வம் (=பழமை, முன்மை) + இங்கு (=தங்கு) + அம் = பூர்விங்கம் >>> பூர்விகம், பூர்வீகம் = முன்னர் தங்கியது.

பூர்விகன், பூர்வீகன்

முதிய வயதானவர்

பூர்விகன்

பூர்வம் (=பழமை, முதுமை) + இகம் (=உடல்) + அன் = பூர்விகன் = முதுமையான உடலைக் கொண்டவன். 

பூரகம்

மூச்சை நிறைத்தல்

பூரகம்

பூர் (=நிறை) + அகம் (=உள்) = பூரகம் = மூச்சை உள்ளே நிரப்புதல்.

இரேசகம், ரேசகம்

மூச்சை வெளிவிடல்

இறைச்சகம்

இறைச்சு (=வெளியேற்று) + அகம் (=உள்) = இறைச்சகம் >>> இரேசகம் >>> ரேசகம் = உள்ளிருந்து மூச்சை வெளியேற்றல்.

கும்பகம்

மூச்சை அடக்குதல்

கூம்பகம்

கூம்பு (=ஒடுங்கு, அடங்கு) + அகம் (=உள்) = கூம்பகம் >>> கும்பகம் = மூச்சை உள்ளே அடக்குதல்.

பூரணம், பூரணை

நிறைவு, முழுமை

பூரணம்

பூர் (=நிறை) + அணம் = பூரணம் >>> பூரணை = நிறைவு, முழுமை.

பூரணம்

மழை

புரன்னம்

புர (=வழங்கு) + அன்னம் (=நீர்) = புரன்னம் >>> பூரணம் = நீரை வழங்குவது.

பூரணி

பூமி

பொறாணி

பொறு (=சும, தாங்கு) + ஆணம் (=ஆதாரம்) + இ = பொறாணி >>> பூரணி = சுமக்கின்ற / தாங்குகின்ற ஆதாரம்.

பூரணி

காடு

புறணி

புறணி (=காடு) >>> பூரணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.