ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 48

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றிய முறையும்

வட்டணம், வட்டணை

கேடயம்

மற்றாணம்

மறை (=தடு) + ஆணம் (=பற்றுக்கோடு) = மற்றாணம் >>> வட்டாணம் >>> வட்டணம் = தடுக்க உதவும் பற்றுக்கோடு.

வட்டணம், வட்டணை

அடிக்கை, மொத்துகை

மாற்றணம்

மாறு (=அடி) + அணம் = மாற்றணம் >>> வாட்டணம் >>> வட்டணம் >>> வட்டணை = அடிக்கை, மொத்துகை.

வட்டாணி

முடிக்கும் திறமை

மட்டாணி

மடி (=முடி) + ஆணு (=வலிமை) + இ = மட்டாணி >>> வட்டாணி = முடிக்கும் வலிமை

வட்டம், வட்டி

அதிகமாகக் கொடுக்கப்படுவது

மண்டீ

மண்டு (=மிகுதி, அதிகம்) + ஈ (=கொடு) = மண்டீ >>> வட்டி = அதிகமாகக் கொடுக்கப்படுவது.

வட்டிகை

எழுதுகோல்

வட்டிகை

வட்டி (=எழுது) + கை (=உதவி) = வட்டிகை = எழுத உதவுவது.

வட்டிகை

ஓவியம்

வட்டிகை

வட்டி (=எழுது, வரை) + இகம் (=வடிவம்) + ஐ = வட்டிகை = வரையப்பட்ட வடிவம்.

வட்டிகை

சுற்றளவு

வட்டிங்கை

வட்டம் (=சுற்று) + இங்கு (=அறி, அள) + ஐ = வட்டிங்கை >>> வட்டிகை = சுற்றளவு

வட்டிகை

வட்டப் படகு

வட்டிகை

வட்டம் (=நீர்நிலை, வட்டமானது) + இக (=கட) + ஐ = வட்டிகை = நீர்நிலையைக் கடக்க உதவும் வட்டப் பொருள்.

வட்டினி

பந்தயப் பொருள்

வட்டீனி

வட்டி (=கட்டு, பிணி) + ஈனு (=கொடு) + இ = வட்டீனி >>> வட்டினி = பிணையாகக் கொடுக்கப்படுவது.

வட்டு

திரட்சி,உருண்டை

வட்டு

மண்டு (=திரள்) >>> வட்டு = திரட்சி, உருண்டை

வட்டு

ஆடை

மடி

மடி (=ஆடை) + உ = மட்டு >>> வட்டு

வட்டை

வழி

மடை

மடை (=வழி) >>> மட்டை >>> வட்டை

வடகம், வடாம்

உலர்த்தப்பட்ட உணவு

வாடாக்கம்

வாடு (=உலர்) + ஆக்கம் (=உணவு) = வாடாக்கம் >>> வடகம் = உலர்த்தப்பட்ட உணவு.

வடகம்

மேலாடை

மடாகம்

மடி (=ஆடை) + ஆகம் (=மார்பு) = மடாகம் >>> வடகம் = மார்பில் அணியும் ஆடை.

வடகம், வடகு

தோல்

படாகம்

படி (=பொருந்து) + ஆகம் (=உடல்) = படாகம் >>> வடகம் = உடலின்மேல் பொருந்தி இருப்பது.

வடம், வடி

முறுக்குக் கயிறு

மறம்

மறை (=முறுக்கு) + அம் = மறம் >>> வடம் = முறுக்குடையது.

வடம்

ஒழுங்கு

பாடு

பாடு (=ஒழுங்கு) + அம் = பாடம் >>> வடம்

வடம், வடல்

ஆலமரம்

மறம்

மறை (=புகலிடம், வேதம், கல்வி) + அம் = மறம் >>> வடம் = வேதம் முதலான கல்விக்கான புகலிடமாக விளங்கியது.

வடம்

பலகை

வடம்

வடி (=தகடாக்கு, நீட்டு) + அம் = வடம் = நீளமாகத் தகட்டு வடிவமாகச் செய்யப்பட்டது.

வடரம்

தலைச்சீலை

மண்டாரம்

மண்டை (=தலை) + ஆர் (=பெருமை, அணிவி) + அம் = மண்டாரம் >>> வட்டாரம் >>> வடரம் = பெருமை / சிறப்புக்காகத் தலையில் அணிவிக்கப் படுவது.

வடரம்

பாய்

வடாரம்

வடி (=தகடாக்கு, நீட்டு, தூங்கு) + ஆர் (=பரப்பு) + அம் = வடாரம் >>> வடரம் = தூங்குவதற்காகப் பரப்பப்படும் நீண்ட தகட்டுவடிவப் பொருள் = பாய்.

வடவை

பெண், விலங்கின் பெண்

மடவை

மடம் (=பெண்மை) + ஐ = மடவை >>> வடவை = பெண்மை பொருந்தியது = பெண், விலங்குகளின் பெண்.

வடவை

எருமை

மடாமை

மடி (=சோம்பல்) + ஆ (=மாடு) + மை (=கருப்பு) = மடாமை >>> வடவை = சோம்பல் மிக்க கருப்பு மாடு.

வடாகரம்

முறுக்குக் கயிறு

மறைகரம்

மறை (=முறுக்கு) + கரம் (=செயல்) = மறய்கரம் >>> வடாகரம் = முறுக்கிச் செய்யப்பட்டது.

வடாரகம்

முறுக்குக் கயிறு

மறாராக்கம்

மறை (=முறுக்கு) + ஆர் (=சேர்) + ஆக்கை (=நார்) + அம் = மறாராக்கம் >>> வடாரகம் = நார்களைச் சேர்த்து முறுக்கப்பட்டது

வடிசம்

தூண்டில்

வடிழம்

வடி (=நீளு, சிக்கவை, தண்டு, கூர்மை) + இழு + அம் (=நீர்) = வடிழம் >>> வடிசம் = நீரில் இழுத்து சிக்கவைக்கும் கூர்மை கொண்ட நீளமான தண்டு.

வடு

புத்திசாலி

வடு

வடி (=கூர்மை) + உ = வடு = கூர் அறிவு உடையவன்.

வடுகன்

இளைஞன்

மடூக்கன்

மடம் (=இளமை) + ஊக்கம் (=மிகுதி) + அன் = மடூக்கன் >>> வடுகன் = மிக்க இளமை உடையவன்

வடுகன்

முட்டாள்

மடூக்கன்

மடம் (=அறியாமை) + ஊக்கம் (=மிகுதி) + அன் = மடூக்கன் >>> வடுகன் = மிக்க அறியாமை உடையவன்

வண்டவாளம், வண்டோலம்

பழம்பெருமை

பண்டைவளம்

பண்டை (=பழமை) + வளம் (=பெருமை) = பண்டைவளம் >>> வண்டவாளம் = பழம்பெருமை

வண்டயம்

பூர்வீகம்

பண்டயம்

பண்டை (=பழமை) + அம் = பண்டயம் >>> வண்டயம் = பூர்வீகம்

வண்டரம்

நாயின் வால், நாய்

வட்டாரம்

வடி (=நாய், வளைவு, முடிவு) + ஆர் (=கூர்மை) + அம் = வட்டாரம் >>> வண்டரம் = கூர்மையும் வளைவும் கொண்ட நாயின் முடிவான உறுப்பு >>> நாய்.

வண்டரம்

மேகம்

பாட்டாரம்

பாட்டம் (=மழை) + ஆர் (=கொடு) + அம் = பாட்டாரம் >>> வண்டரம் = மழையைக் கொடுப்பது.

வண்டரம்

முலை

மட்டாரம்

மட்டம் (=குட்டி, குழந்தை) + ஆர் (=ஊட்டு) + அம் (=உணவு, பால்) = மட்டாரம் >>> வண்டரம் = குழந்தைக்குப் பாலை ஊட்டுவது.

வண்டரன்

நமங்கை

மட்டாரன்

மடம் (=பெண்மை) + ஆர் (=நிறை) + அன் = மட்டாரன் >>> வண்டரன் = பெண்மை நிறைந்த ஆண்.

வண்டரன்

கஞ்சன்

மட்டாரன்

மட்டம் (=சிறுமை, துணுக்கு) + ஆர் (=உண்ணு, கொடு) + அன் = மட்டாரன் >>> வண்டரன் = சிறுதுணுக்கை உண்ணக் கொடுப்பவன்

வண்டன்

குள்ளன்

மட்டன்

மட்டம் (=சிறுமை, குள்ளம்) + அன் = மட்டன் >>> வண்டன் = குள்ளமாக இருப்பவன்.

வண்டாலம்

குந்தாலி

வட்டலம்

வடி (=வடிவம், கூர்மை) + அலம் (=கலப்பை) = வட்டலம் >>> வண்டாலம் = கலப்பை வடிவமுடைய கூரிய ஆயுதம்.

வண்டி, பண்டி

வயிறு, உணவுப் பாத்திரம்

பற்றி

பற்று (=உணவு, கொள், பாத்திரம்) + இ = பற்றி >>> பட்டி >>> பண்டி >>> வண்டி = உணவைக் கொள்ளும் பாத்திரம், வயிறு

வண்ணகம்

புகழ்ந்து கூறுதல்

வண்ணாக்கம்

வண்மை (=புகழ்) + ஆக்கம் (=சொல்) = வண்ணாக்கம் >>> வண்ணகம் = புகழ்ந்து கூறும் சொல்.

வண்ணகம்

சந்தனம்

மண்ணாகம்

மண் (=பூசு, சாந்து) + ஆகம் (=மார்பு) = மண்ணாகம் >>> வண்ணகம் = மார்பில் பூசும் சாந்து

வண்ணகம்

வாசனைப் பொருள்

மண்ணாக்கம்

மணம் (=வாசனை) + ஆக்கம் (=பொருள்) = மண்ணாக்கம் >>> வண்ணகம் = வாசனைப் பொருள்.

வண்ணிகன்

எழுத்தாளன்

வண்ணிங்கன்

வண்ணம் (=எழுத்து) + இங்கம் (=அறிவு) + அன் = வண்ணிங்கன் >>> வண்ணிகன் = அறிந்ததை எழுதுபவன்.

வண்ணிகை

மருந்து

வண்ணிங்கை

வண்ணம் (=நன்மை) + இங்கம் (=பொருள்) + ஐ = வண்ணிங்கை >>> வண்ணிகை = நன்மை தரும் பொருள்.

வணிகம்

வியாபாரம்

வண்ணிங்கம்

வண்ணம் (=வகை, செயல், பொருள்) + ஈகை (=கொடை) + அம் = வண்ணீகம் >>> வணிகம் = பொருளைக் கொடுத்துப் பொருள் செய்யும் வகை = வியாபாரம்.

வணிகன், வணிகு

வியாபாரி

வணிகன்

வணிகம் (=வியாபாரம்) + அன் = வணிகன் = வியாபாரி

வணிச்சியம்

வியாபாரம்

வண்ணீயியம்

வண்ணம் (=வகை, செயல், பொருள்) + ஈ (=கொடு) + இயம் = வண்ணீயியம் >>> வணிச்சியம் = பொருளைக் கொடுத்துப் பொருள் செய்யும் வகை = வியாபாரம்.

வணிசம்

எருது

பணிழம்

பணை (=வயல்) + இழு + அம் = பணிழம் >>> வணிசம் = வயலில் இழுக்க உதவுவது.

வணிசம், வணிசை

நேரத்தின் உட்பிரிவு

மணீயம்

மணி (=நேரம்) + ஈ (=வகு) + அம் = மணீயம் >>> வணிசம், வணிசை = நேரப் பிரிவு.

வணிதம்

நாடு

பணிறம்

பணை (=பெருமை, இடம்) + இறை (=அரசன், காவல்) + அம் = பணிறம் >>> வணிதம் = அரசனின் காவலுக்குட்பட்ட பெரிய இடப்பரப்பு = நாடு.

வணிதம்

வசமாக்கும் அழகு, பேரழகு

வணிறம், வாணிறம்

(1). வண்மை (=அழகு) + இறு (=வீழ்த்து, வசமாக்கு) + அம் = வணிறம் >>> வணிதம் = வசமாக்கும் அழகு. (2). வாள் (=ஒளி) + நிறம் = வாணிறம் >>> வணிதம் = ஒளி மிக்க நிறம் = பேரழகு.

வத்தகம்

வியாபாரம்

மாற்றாக்கம்

மாறு (=விற்றல்) + ஆக்கம் (=பொருள்) = மாற்றாக்கம் >>> வாத்தாக்கம் >>> வத்தகம் = பொருட்களை விற்றல்.

வத்தம்

உணவு

பற்றம்

பற்று (=உணவு) + அம் = பற்றம் >>> வத்தம்

வத்தல்

படகு

பாறல்

பாறு (=படகு) + அல் = பாறல் >>> பற்றல் >>> வத்தல்.

வத்தனம், வத்தனை

ஆக்கம், வமிசம், பெருக்கம்

மத்தணம்

மதி (=கொழு, பெருகு) + அணம் = மத்தணம் >>> வத்தனம் >>> வத்தனை = பெருக்கம், ஆக்கம், இனப்பெருக்கம், வமிசம்.

வத்தனை

உயிர் வாழ்வு

வத்தணை

வதி (=வாழ்) + அணு (=உயிர்) + ஐ = வத்தணை >>> வத்தனை = உயிர் வாழ்தல்.

வத்தனை

கூலி

மாற்றாணை

மாறு (=பணிசெய், கைம்மாறு, கொடு) + ஆணம் (=பொருள்) + ஐ = மாற்றாணை >>> வத்தனை = பணிசெய்ததற்குக் கைம்மாறாகக் கொடுக்கப்படும் பொருள்.

வத்தா

சொல்பவன், ஆசிரியன்

பத்தா

பதம் (=சொல்) + ஆ = பத்தா >>> வத்தா = சொல்பவன், ஆசிரியன்

வத்தாலை

தண்ணீர்ப்பழம்

பைத்தலை

பை (=பசுமை, வெண்மை, பெரு) + தலை = பைத்தலை >>> பாத்தலை >>> வத்தாலை = பசுமையும் வெண்மையும் உடைய பெரிய தலை போன்றது = தண்ணீர்ப் பழம்.

வத்தாக்கு, வத்தேக்கு

தண்ணீர்ப்பழம்

மத்தாக்கு

மதம் (=பெருமை, இனிமை, சாறு, உருண்டை, பழம்) + ஆக்கம் (=உணவு) + உ = மத்தாக்கு >>> வத்தாக்கு = இனிய சாறுடைய பெரிய உருண்டையான பழ உணவு.

வத்தாளம்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

மாதல்லம்

மா (=பெருமை, நிலம், சிவப்பு, மாவு) + தல்லு (=தோண்டு) + அம் (=உணவு) = மாதல்லம் >>> மத்தலம் >>> வத்தாளம் = நிலத்தைத் தோண்டிப் பெறும் பெரிய சிவப்புநிற மாவு உணவுப் பொருள்.

வத்தி

பெருகு

மதி

மதி (=கொழு, பெருகு) >>> மத்தி >>> வத்தி

வத்தி

திரி, தீக்குச்சி, விளக்கு, மெழுகு

பற்றி

பற்று (=தீ மூளு) + இ = பற்றி >>> வத்தி = தீ மூளக்கூடியது = திரி, மெழுகுவத்தி, விளக்கு, தீக்குச்சி, ஊதுவத்தி.

வத்தி

வரி, வரிசை

பந்தி

பந்தி (=ஒழுங்கு, வரிசை) >>> வத்தி = வரிசை, வரி

வத்தி

வாழ்

வதி

வதி (=வாழ்) >>> வத்தி

வத்தியம்

மரணம்

மாற்றியம்

மாறு (=சாவு) + இயம் = மாற்றியம் >>> வத்தியம் = மரணம்

வத்திர சோதினி

எலுமிச்சம் பழம்

மத்தீர சோதினி

மதம் (சாறு, உருண்டை, பழம்) + ஈரம் (=குளிர்ச்சி) + சோதி (=ஒளி) + இனி = மத்தீரசோதினி >>> வத்திரசோதினி = குளிர்ச்சி தரும் சாறுடைய உருண்டையான ஒளிமிக்க பழம்.

வத்திரம்

முகம், வாய்

பத்திரம்

பதம் (=சொல்) + இரி (=வெளிப்படு) + அம் = பத்திரம் >>> வத்திரம் = சொல் வெளிப்படும் இடம் = வாய் >>> வாய் இருக்குமிடம்

வத்திரம்

ஆடை

மாற்றிறம்

மாற்று (=ஆடை) + இறு (=கட்டு) + அம் = மாற்றிறம் >>> வத்திரம் = கட்டும் ஆடை.

வத்திரம்

எறிபடை

மாற்றீரம்

மாற்று (=கொல், செலுத்து) + ஈர் (=கூர்மை) + அம் = மாற்றீரம் >>> வத்திரம் = கொல்வதற்காகச் செலுத்தப்படும் கூராயுதம்.

வத்திரி

தோல்வார்

பற்றீரி

பற்று (=தோல்) + ஈர் (=நீளு, கிழி, வகு) + இ = பற்றீரி >>> வத்திரி = நீளமாகக் கிழிக்கப்பட்ட தோல்.

வத்தினை

சம உரிமை

பற்றினை

பற்று (=உரிமை) + இனம் (=ஒப்பு, சமம்) + ஐ = பற்றினை >>> வத்தினை = சம உரிமை

வத்து, வச்`து

பொருள்

பற்று

பற்று (=பொருள்) >>> வத்து >>> வச்`து

வது

கள், மது

மது

மது >>> மத்து >>> வத்து

வத்து

உவமை

மாற்று

மாற்று (=உவமை) >>> மாத்து >>> வத்து

வத்துளம்

வட்டமானது

பற்றுளம்

பறை (=வட்டம்) + உள் + அம் = பற்றுளம் >>> வத்துளம் = வட்டமாக உள்ளது.

வத்துளம்

சக்கரம்

பற்றுலாம்

பறை (=வட்டம்) + உலா (=இயக்கம், திரிகை) + அம் = பற்றுலாம் >>> வத்துளம் = திரிகின்ற வட்டப் பொருள்.

வத்தை

மென்மையானது

பத்தை

பதம் (=மென்மை) + ஐ = பத்தை >>> வத்தை = மென்மையானது

வத்ச`ன்

மகன்

மைந்தன்

மைந்தன் (=மகன்) >>> மத்தன் >>> வத்தன் >>> வத்ச`ன்

வத்ச`லம்

மிகுதியான அன்பு

மத்தளம்

மதம் (=மிகுதி) + அளி (=அன்பு) + அம் = மத்தளம் >>> வத்தலம் >>> வத்ச`லம் = பேரன்பு.

வதகம்

மரணம், கொலை

மாறகம்

மாறு (=நீங்கு) + அகம் (=உயிர்) = மாறகம் >>> வதகம் = உயிர் நீங்குகை = மரணம் >>> கொலை.

மரணம்

உயிர் பிரிகை

மாறாணம்

(2). மாறு (=நீங்கு) + ஆணம் (=உயிர்) = மாறாணம் >>> மரணம் = உயிர் நீங்குகை.

வதகன்

கொலைகாரன்

வதகன்

வதகம் (=கொலை) + அன் = வதகன் = கொலைகாரன்

வதந்தி

பொய்யான பேச்சு, உண்மை அற்றது.

பதற்றி

(1). பதம் (=சொல், பேச்சு) + அற்றம் (=பொய்) + இ = பதற்றி >>> வதத்தி >>> வதந்தி = பொய்யான பேச்சு. (2). பதம் (=ஒளி, உண்மை) + அறு (=இல்லாகு) + இ = பதற்றி >>> வதத்தி >>> வதந்தி = உண்மை அற்றது.

வதம், வதை

கொலை

மறம்

மறம் (=கொலை) >>> வதம்

வதன்

கொலைகாரன்

மறன்

மறம் (=கொலை) + அன் = மறன் >>> வதன் = கொலைகாரன்

வதம்

உண்ணா விரதம்

மாறம்

மாறு (=கைவிடு) + அம் (=உணவு, நீர்) = மாறம் >>> வதம் = உணவு, நீர் போன்றவற்றைக் கைவிடுதல்.

வதரம், வதரி

இலந்தைப் பழம்

மதாரம்

மதம் (=இனிமை, உருண்டை, பழம்) + ஆர் (=சிவப்பு) + அம் = மதாரம் >>> வதரம் = இனிய சிவப்பான உருண்டையான பழம்.

வதலி

முறை, தடவை

பந்தளி

பந்தி (=ஒழுங்கு, வரிசை) + அள (=எண்ணு) + இ = பந்தளி >>> வதலி = எண்ணப்படும் வரிசை

வதனாசுவம், வதனாசவம்

உமிழ் நீர்

வதனாசும்பம்

வதனம் (=வாய்) + அசும்பு (=ஊற்று) + அம் (=நீர்) = வதனாசும்பம் >>> வதனாசுவம் = வாயில் ஊறும் நீர்.

வதாங்கம்

நஞ்சு

மாறாக்கம்

மாறு (=அழி, கொல்) + ஆக்கம் (=உணவு) = மாறாக்கம் >>> வதாங்கம் = அழிக்கும் / கொல்லும் உணவு.

வதாலகம், வதாலம்

மீன்

மாறாலகம்

மாறு (=துள்ளு, திரி) + ஆலம் (=நீர், கடல்) + அகம் (=உயிர்) = மாறாலகம் >>> வதாலகம் = நீரில் / கடலில் துள்ளித் திரியும் உயிரி.

வதானியன்

பெருங்கொடை ஆளன்

மாதானீயன்

மா (=பெருமை) + தானம் (=கொடை) + ஈ + அன் = மாதானீயன் >>> வதானியன் = பெருங்கொடை தருபவன்.

வதி

வழி

மாறு

மாறு (=விதம், வழிமுறை) + இ = மாறி >>> வதி = வழி.

வதி

கால்வாய்

பாறி

பாறு (=கிளை, ஓடு) + இ = பாறி >>> வதி = கிளைத்து ஓடுவது

வதிர்

செவிடு

பற்றில்

பற்று (=கேள்) + இல் (=இன்மை) = பற்றில் >>> வத்தில் >>> வதிர் = கேள்வி / கேட்பு இன்மை.

வதிரன்

செவிடன்

வதிரன்

வதிர் (=செவிடு) + அன் = வதிரன் = செவிடன்.

வதிள், வதில்

விடை, பதில்

மாறுள்

மாறு (=விடை) + உள் = மாறுள் >>> வாதுள் >>> வதிள், வதில்

வது

மணமகள், மனைவி

வத்து

பற்று (=கைப்பிடி, பொருந்து, உரிமை, அன்பு, இல்வாழ்க்கை) >>> வத்து >>> வது = உரிமையுடன் கைப்பிடித்து இல்வாழ்வில் பொருந்தி அன்பு காட்டுபவள் = மனைவி, மணமகள். 

வதுக்கு

வாழ்க்கை

வதுக்கு

வதி (=வாழ்) + உகு (=கழி) + உ = வதுக்கு = வாழ்ந்து கழித்தல்.

வதுகி

வைக்கோல்

வைதுகீ

வை (=நெற்கதிர்) + துகை (=மிதித்து உழக்கு) + ஈ (=வகு, பிரி) = வைதுகீ >>> வதுகி = நெற்கதிரை மிதித்து உழக்கிப் பிரித்து எடுக்கப்பட்டது = வைக்கோல்.

வதுகை

மனைவி

பற்றுகை

பற்று (=இல்வாழ்க்கை, பொருந்து, அன்பு) + உகை (=செலுத்து) = பற்றுகை >>> வத்துகை >>> வதுகை = இல்வாழ்வில் பொருந்தி அன்பு செலுத்துபவள் = மனைவி.

வாதுவன், வதுவன்

குதிரைப் பாகன்

பற்றுமான்

பற்று (=ஓட்டு, செலுத்து) + மா (=குதிரை) + அன் = பற்றுமான் >>> வத்துவன் >>> வதுவன், வாதுவன் = குதிரை ஓட்டி. 

வதுவை

திருமணம், மணமகள், புணர்ச்சி

பற்றுமை

பற்று (=அன்பு, கைப்பிடி, பொருந்து, இல்வாழ்க்கை) + மை = பற்றுமை >>> வத்துவை >>> வதுவை = அன்புடையார் கைப்பிடித்து இல்வாழ்வில் பொருந்துதல் = திருமணம். . 

வதுவை

பூமாலை

பற்றுவீ

பற்று (=இணை, கட்டு) + வீ (=மலர்) = பற்றுவீ >>> வத்துவி >> வதுவை = மலர்களால் கட்டப்பட்டது.

வதுவை

பூவாசனை

மன்றுவீ

மன்று (=வாசனை) + வீ (=மலர்) = மன்றுவீ >>> மற்றுவி >>> வத்துவி >>> வதுவை = மலர்களின் வாசனை

வதுவை

பலவந்தம், வன்புணர்ச்சி

மாதுவை

மா (=வலிமை) + துவை (=சேர், புணர்) = மாதுவை >>> வதுவை = வலிமையுடன் சேர்தல் = பலவந்தம், வன்புணர்ச்சி

வதை

கொல்லு

வதை

வதம் (=கொலை) >>> வதை = கொல்லு, வருத்து

வதை

தேன் கூடு

மதை

மது (=தேன்) + ஐ = மதை >>> வதை = தேனை உடையது.

வந்தனம், வந்தனை

பாதங்களில் பொருந்துதல்

பாதணம்

(2). பாதம் + அணை (=பொருந்து) + அம் = பாதணம் >>> வந்தனம் = பாதத்தில் பொருந்துதல்.

வந்தனம்

முகம்

வதனம்

வதனம் (=முகம்) >>> வந்தனம்

வந்தனம்

வளைவு, பணிவு

மாற்றணம்

மாறு (=பணி, வளை) + அணம் = மாற்றணம் >> வத்தனம் >> வந்தனம் = வளைவு, பணிவு.

வந்தனி

பணி

வந்தனி

வந்தனம் (பணிவு) >>> வந்தனி = பணி

வந்தி

வணங்கு, வணக்கம்

மாறி

மாறு (=பணி, வணங்கு) + இ = மாறி >>> வாதி >>> வந்தி = பணி, வணங்கு, வணக்கம்.

வந்தி, வந்திகன்

புகழ்பவன், பாடகன்

மத்தி

மதி (=புகழ், போற்று) + இ >>> மத்தி >>> வந்தி = புகழ்ந்து பாடுபவன்.

வந்தி

கட்டு, பிணி

பற்றி

பற்று (=பிணிப்பு) >>> பற்றி >>> வத்தி >>> வந்தி = பிணி, கட்டு

வந்தி, வந்திகை

வளையம்

பாறி

பறை (=வட்டம்) + இ = பாறி >>> வாதி >>> வந்தி = வட்டமானது = வளையம்.

வந்தி

வருத்தம்

பாத்தி

பதை (=வருந்து) + இ = பாத்தி >>> வந்தி = வருத்தம்

வந்தி

பலவந்தம்

மாற்றி

மாற்று (=அடக்கு, ஒடுக்கு) + இ = மாற்றி >>> வாத்தி >>> வந்தி = அடக்கி ஒடுக்குதல், பலவந்தம்.

வந்தி

சண்டை, பிடிவாதம்

வாத்தி

வாதி (=எதிர்த்துப் பேசு) + இ >>> வாத்தி >>> வந்தி = சண்டை, முரண்டு, பிடிவாதம்

வந்தி

ஏணி

பந்தி

பந்தி (=ஒழுங்கு, வரிசை, அடுக்கு) + இ = வந்தி = பல அடுக்குகளைக் கொண்டது.

வந்திகை

தேமல் புள்ளி

பறிங்கை

பறி (=உடல், தோன்று, ஒளி) + இங்கம் (=நுட்பம், புள்ளி) + ஐ = பறிங்கை >>> வதிகை >>> வந்திகை = உடலில் தோன்றும் ஒளிப் புள்ளி = தேமல்.

வந்தியை, வந்திகை

மலடி

பழுதியை

பழுது (=வீண், மலடு) + இயை (=பொருந்து) = பழுதியை >>> வய்த்தியை >>> வந்தியை = மலட்டுத் தன்மை பொருந்தியவள்.

வந்து

காற்று

வாதம்

வாதம் (=காற்று) + உ = வாது >>> வந்து

வந்தை

பெருமை

மதம்

மதம் (=பெருமை) + ஐ = மத்தை >>> வந்தை

வந்தை

மலடி

பழுதை

பழுது (=வீண், மலடு) + ஐ = பழுதை >>> வய்த்தை >>> வந்தை = மலட்டுத் தன்மை உடையவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.