ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 47

 சொல்


பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் 

தோன்றிய முறையும்

ரத்தம்

குருதி

இறத்தம், இரத்தம்

(1). இறு (=கொல், வடி) + அத்து (=சிவப்பு) + அம் (=நீர்) = இறத்தம் >>> இரத்தம் >>> ரத்தம் = கொல்லும்போது வடியும் சிவந்த நீர். (2). இரி (=ஓடு, ஒழுகு) + அத்து (=சிவப்பு, கொலை) + அம் (=நீர்) = இரத்தம் >>> ரத்தம் = கொல்லும்போது ஒழுகும் சிவந்த நீர்.

வகிரா

எருமை

மக்கிரா

மக்கு (=சோம்பல்) + இருமை (=கருமை) + ஆ (=மாடு) = மக்கிரா >>> வகிரா = சோம்பல் மிக்க கருநிற மாடு.

வகுஞ்சம்

இரவு

பைகூச்சம்

பை (=ஒளி) + கூசு (=பின்வாங்கு) + அம் = பய்கூச்சம் >>> பகுஞ்சம் >>> வகுஞ்சம் = ஒளி பின்வாங்கிய காலம்.

வகுத்திரம்

தெப்பம், படகு

வாங்குதிரம்

வாங்கு (=செலுத்து, ஓட்டு) + திரை (=நீர், கடல்) + அம் = வாங்குதிரம் >>> வகுத்திரம் = நீரில் / கடலில் ஓட்டப்படுவது

வகுலி

மீன்

பைகுளி

பை (=ஒளிர்) + குளம் (=நீர்நிலை) + இ = பைகுளி >>> பகுலி >>> வகுலி = நீர்நிலைகளில் ஒளிர்வது

வகையரா

பிரிவினர்

வகையார்

வகை (=பிரிவு) + ஆர் = வகையார் >>> வகையரா = பிரிவினர்

வங்கடம்

வமிசம்

வக்கடம்

வகை (=பிரிவு, கிளை) + அடி + அம் = வக்கடம் >>> வங்கடம் = அடியில் வரும் கிளை / பிரிவு.

வங்கணம்

நட்பு, காதல்

பாங்கணம்

பாங்கு (=நட்பு, அன்பு) + அணம் = பாங்கணம் >>> வங்கணம் = நட்பு, காதல். 

வங்கம்

படகு, கப்பல்

வாங்கம்

வாங்கு (=செலுத்து, ஓட்டு) + அம் (=நீர்) = வாங்கம் >>> வங்கம் = நீரில் செலுத்தப் படுவது

வங்கம்

வறுமை

வக்கம்

வகை (=வெட்டு, குறை, பொருள்) + அம் = வக்கம் >>> வங்கம் = பொருள் குறைபாடு.

வங்கம்

நீரலை, கடல்

வாங்கம்

வாங்கு (=வளை, ஒலி) + அம் (=நீர்) = வாங்கம் >>> வங்கம் = ஒலிக்கின்ற வளைவுடைய நீர் = நீரலை >>> கடல்.

வங்கம்

வளைவு

வாங்கம்

வாங்கு (=வளை) + அம் = வாங்கம் >>> வங்கம் = வளைவு

வங்கம்

கருத்து

வக்கம்

வகை (=ஆராய், கருது) + அம் = வக்கம் >>> வங்கம் = கருத்து

வங்கம்

வெண்ணிற உலோகப் பொருட்கள்

வாங்கம்

வாங்கு (=வளை, இழு) + அம் (=அழகு, வெண்மை, ஒளி) = வாங்கம் >>> வங்கம் = வளையக்கூடிய இழுக்கக்கூடிய ஒளிவீசும் வெண்ணிறப் பொருள் = ஈயம், தகரம், துத்தநாகம், வெள்ளி போன்றவை.

வங்கன்

ஏழை

வங்கன்

வங்கம் (=வறுமை) + அன் = வங்கன் = ஏழை.

வாக்கு

பேச்சு

வாக்கு

(2). வாங்கு (=அழை, பேசு) >>> வாக்கு = பேச்சு.

வங்கா

ஊதுகொம்பு

வாங்கா

வாங்கு (=வளை, ஒலி) + ஆ = வாங்கா >>> வங்கா = வளைவினைக் கொண்ட ஒலியெழுப்பும் கருவி.

பங்காரம், வங்காரம்

தங்கம்

வக்காரம்

(2). வகை (=பொருள், செல்வம்) + ஆர் (=அழகு, ஒளி) + அம் = வக்காரம் >>> வங்காரம் >>> பங்காரம் = ஒளிமிக்க அழகிய செல்வம்.

வங்காரம்

உலோகக் கட்டி

வங்காரம்

வங்கம் (=உலோகம்) + ஆர் (=கட்டு, செறி) + அம் = வங்காரம் = உலோகத்தின் கட்டி.

வங்காரம்

செப்பம்

பாங்காரம்

பாங்கு (=நன்மை) + ஆர் (=பொருந்து) + அம் = பாங்காரம் >>> வங்காரம் = நன்மை பொருந்தியது.

வங்காளம்

இராகம்

வாங்காலம்

வாங்கு (=இழு, நீட்டு) + ஆல் (=ஒலி) + அம் = வாங்காலம் >>> வங்காளம் = நீட்டி ஒலித்தல்.

வங்காளி

வாழை

பக்களி

பக்கம் (=ஒளி) + அளி (=பழம்) = பக்களி >>> வங்களி >>> வங்காளி = ஒளிமிக்க பழம் = வாழைப் பழம்

வங்கி

வளையம்

வாங்கி

வாங்கு (=வளை) + இ = வாங்கி >>> வங்கி = வளையம்

வங்கிசம்

வமிசம்

வக்கிழம்

வகை (=பிரிவு, கிளை) + இழி (=தாழ்) + அம் = வக்கிழம் >>> வங்கிசம் = தாழ்நிலையில் உள்ள கிளை

வங்கியம்

புல்லாங்குழல், மூங்கில்

வாங்கியம்

வாங்கு (=நீட்டு, ஒலி, துளையிடு) + இயம் (=இசைக்கருவி) = வாங்கியம் >>> வங்கியம் = நீட்டி ஒலிக்கப்படும் துளையிசைக்கருவி

வங்கு

துளை, குழி

வங்கு

வாங்கு (=தோண்டு, துளையிடு) >>> வங்கு = குழி, துளை

வங்கு

இடைவெளி

வங்கு

வாங்கு (=பிரி) >>> வங்கு = பிரிவு, இடைவெளி

வங்கு

விலாச்சட்டம்

வங்கு

வாங்கு (=நீளு, வெட்டு) >>> வங்கு = நீளமாக வெட்டப்பட்டது.

வங்கு

பொடி, புள்ளி, மகரந்தம்

மக்கு

மக்கு (=மண், பொடி) >>> வங்கு = பொடி, புள்ளி, மகரந்தம்

வங்குளம், வங்கூழ்

காற்று

வாங்கூளம்

வாங்கு (=அடி, அலை, வாழவை) + ஊளை (=ஒலி) + அம் = வாங்கூளம் >>> வங்குளம், வங்கூழ் = அடிப்பதும் அலைவதும் வாழவைப்பதும் ஒலி எழுப்புவதும் ஆனது.

வச்சம், பச்சா

கன்று, குட்டி, குழந்தை

பச்சம்

பசுமை (=இளமை, புதுமை) + அம் = பச்சம் >>> பச்சா, வச்சம் = இளமையும் புதுமையும் கொண்டது = குட்டி, கன்று, குழந்தை

வச்சயம், வச்சையம், வசையம்

புள்ளிமான்

பாயாயம்

பாய் (=விரைந்தோடு) + ஆய் (=அழகு, புள்ளி) + அம் = பாயாயம் >>> வாசாயம் >>> வச்சயம் = அழகிய புள்ளிகளைக் கொண்ட விரைந்தோடும் விலங்கு.

வச்சரி

வேப்பமரம்

பச்சரி

பசுமை + அரி (=கொய், இலை) = பச்சரி >>> வச்சரி = கொய்வதைப் போன்ற பசுமையான இலைகளைக் கொண்டது.

வச்சனி

மஞ்சள் கிழங்கு

பச்சாணி

பசுமை (=பொன்னிறம்) + ஆணு (=அழகு, வலிமை) + ஈ = பச்சாணி >>> வச்சனி = பொன்னிற அழகைத் தரும் வலிமையான பொருள்.

வச்சிரம்

ஒருவகை ஆயுதம்

வசீரம்

வசி (= பிள, வளை, கூர்மை) + ஈர் (=நீளு) + அம் = வசீரம் >>> வச்சிரம் = பிளக்கக் கூடிய வளைவைக் கொண்ட நீண்ட கூராயுதம்.

வச்சிரம்

வலிமையானது, மரத்தின் நடு

வயிரம்

வயிரம் (=வலிமை) >>> வசிரம் >>> வச்சிரம் = வலிமையானது, மரத்தின் நடுப் பகுதி.

வச்சிரம்

வயிரம்

பயீரம்

பை (=வலிமை, ஒளி) + ஈர் (=நுண்மை, அறு) + அம் = பயீரம் >>> வயிரம் >>> வசிரம் >>> வச்சிரம் = நுண்ணிதாக அறுக்கப்பட்ட வலிமையான ஒளிரும் பொருள். 

வச்சிரம்

ஒட்டும் பொருள், பசை

பச்சீரம்

பசை (=ஒட்டு) + ஈரம் = பச்சீரம் >>> வச்சிரம் = ஒட்டக் கூடிய ஈரமுடைய பொருள்.

வச்சை

பாசம், அன்பு

பாசம்

பாசம் + ஐ = பாச்சை >>> வாஞ்சை >>> வச்சை

வச்சை

பழி

வசை

வசை (=பழி) >>> வச்சை

வச்சை

கஞ்சத்தனம்

பயசை

பய (=கொடு) + அசை (=குறை) = பயசை >>> வசசை >>> வச்சை = குறைவாகக் கொடுத்தல்.

வசதி

வீடு, அவசியப் பொருட்கள்

வசத்தி

வசி (=வாழ்) + அத்தம் (=பொருள்) + இ = வசத்தி >>> வசதி = வாழ்வதற்குத் தேவையான பொருட்கள்.

வசதி

இரவு

பயறி

பை (=ஒளி) + அறு (=இல்லாகு) + இ = பயறி >>> வசதி = ஒளி இல்லாகிய நிலை.

வசந்தம்

இளவேனில்

பசாத்தம்

பசுமை (=பச்சை, அழகு, புதுமை) + ஆதி (=தொடக்கம்) + அம் = பசாத்தம் >>> வசந்தம் = பசுமை அழகின் புதிய தொடக்கம்.

வசந்தம்

நறுமணப் பொருள், பூ

வாசத்தம்

வாசம் (=நறுமணம்) + அத்து (=பொருந்து) + அம் = வாசத்தம் >>> வசந்தம் = நறுமணம் பொருந்தியவை, பூ

வசந்தம்

அன்பு மொழி

பாசற்றம்

பாசம் (=அன்பு) + அறை (=சொல்) + அம் = பாசற்றம் >>> வாசத்தம் >>> வசந்தம் =அன்பு கலந்த சொல்.

வசந்தம்

சிறு முத்து

பயற்றம்

பை (=வலிமை, ஒளி, வெண்மை) + அற்றம் (=சிறுமை) = பயற்றம் >>> வசத்தம் >>> வசந்தம் = ஒளிவீசுகின்ற வெண்ணிறம் உடைய  சிறிய வலிமையான பொருள்.

வசந்தம்

தென்றல் காற்று

வாசாற்றம்

வாசம் (=நறுமணம், காற்று) + ஆற்று (=சும) + அம் = வாசாற்றம் >>> வாசாத்தம் >>> வசந்தம் = நறுமணத்தைச் சுமந்துவரும் காற்று.

வசந்திகை

தேமல் புள்ளி

பயற்றிகை

பை (=நிறம்) + அற்றம் (=புள்ளி) + இகம் (=உடல்) + ஐ = பயற்றிகை >>> வசத்திகை >>> வசந்திகை = உடலில் தோன்றும் நிறப்புள்ளி

வசம்

ஆட்சி, ஒழுங்கு, கட்டுப்பாடு

வசம்

வசி (=வளை, கீழ்ப்படி, ஆள், கட்டுப்படுத்து) + அம் = வசம் = கீழ்ப்படிவு, ஆட்சி, கட்டுப்பாடு, ஒழுங்கு

வசம்

மூலம், வழி

வழம்

வழி + அம் = வழம் >>> வசம் = வழி, மூலம்

வசம்

வலிமை

வயம்

வயம் (=வலிமை) >>> வசம் = வலிமை, திறமை, ஆற்றல்

வசம்

பக்கம், இடம்

வாயம்

வாய் (=இடம், பக்கம்) + அம் = வாயம் >>> வசம்

வசம்

பிறப்பு

பயம்

பய (=விளை, பிற) + அம் = பயம் >>> வசம் = பிறப்பு

வசரம்

கோழி

வசரம்

வசி (=பிள, கீறு) + அரை (=கால்) + அம் = வசரம் = கால்களால் பூமியைக் கீறுவது.

வசவன்

காளைக் கன்று, காளை

மழவான்

மழவு (=இளமை, குட்டி) + ஆன் (=காளை) = மழவான் >>> வசவன் = காளைக் கன்று, காளை

வசன்

நேர்மை, நேர்

வசம்

வசம் (=கட்டுப்பாடு, ஒழுங்கு) >>> வசன் = நேர்மை, நேர்

வசன்

எல்லை

வசன்

வசி (=வளை, கட்டுப்படுத்து) + அன் = வசன் = கட்டுப்படுத்துவது.

வசனம்

வாய்ப்பேச்சு

வாயணம்

வாய் (=உறுப்பு, அமை, சொல்) + அணம் = வாயணம் >>> வசனம் = வாயால் அமைந்த சொல்.

வசனம்

ஆடை

மயணம்

மை (=உடல்) + அணி + அம் = மயணம் >>> வசனம் = உடல்மேல் அணியப் படுவது.

வசனம்

இடைவார்

மையணம்

மையம் (=நடு, இடை) + அணி + அம் = மையணம் >>> மசனம் <<< வசனம் = இடையில் அணியப் படுவது = இடைவார்.

வசனம்

வீடு

வசாணம்

வசி (=வாழ்) + ஆணம் (=பற்றுக்கோடு) = வசாணம் >>> வசனம் = வாழ்வதற்கான பற்றுக்கோடு

வசனி

பேசு

வசனி

வசனம் (=பேச்சு) >>> வசனி = பேசு

வசா^, வசா

கழிவு, வெட்டு

வசா

வசி (=பிள, வெட்டு) + ஆ = வசா = வெட்டு, கழிவு, குறைவு.

வசார்

நெருப்பு

பயார்

பை (=எரி) + ஆர் (=சிவப்பு) = பயார் >>> வசார் = சிவப்பாக எரிவது

வசானியம்

மிளகு

பயன்னியம்

பை (=எரி) + அன்னம் (=உணவு) + இயம் (=தன்மை) = பயன்னியம் >>> வசானியம் = எரியும் தன்மை கொண்ட உணவு.

வசி

தங்கு, வாழ்

வாழ்

வாழ் + இ = வாழி >>> வசி = வாழ், தங்கு

வசியம், வசி

கட்டுப்பாடு, பணிவு, தேற்று

வசியம்

வசி (=பணி, கட்டுப்படுத்து, அடக்கு) + அம் = வசியம் = கட்டுப்பாடு, பணிவு, அடக்குகை, தேற்றுகை.

வசி, வாசி

பேசு, பேச்சு

வாயி

வாய் (=சொல்) + இ = வாயி >>> வாசி >>> வசி = பேசு, பேச்சு.

வசி

மழை, நீர்

மழை

மழை >>> வசை >>> வசி = மழை, நீர்

வசி, வசு

வெள்ளைப்பூடு

பை

பை (=எரி, வெண்மை) + இ = பயி >>> வசி = எரியக் கூடிய வெண்ணிறப் பொருள்.

வசிகம்

மிளகு

மயீகம்

மை (=கருப்பு) + ஈகை (=தங்கம்) + அம் (=உணவு) = மயீகம் >>> வசிகம் = கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படும் உணவுப் பொருள்.

வசிகரணம், வசிகரம், வசீகரம்

இணக்கம், ஒப்படைப்பு

வசிகரணம்

வசி (=இணங்கு, ஒப்படை) + கரணம் / கரம் (=செயல்) = வசிகரணம் / வசிகரம் = இணக்கம், ஒப்படைப்பு, வசப்படுதல்.

வசிகரணம்

வாள், கத்தி போன்றவை

வசிகரணம்

வசி (=வெட்டு) + கரம் (=கருவி + அணை (=உதவி) + அம் = வசிகரணம் = வெட்ட உதவும் கருவிகள்.

வசிகரம், வசீகரம்

கட்டுப்படுத்தும் அழகு

வசிகரம்

வசி (=கட்டுப்படுத்து) + கரம் (=ஒளி, அழகு) = வசிகரம் >>> வசீகரம் = கட்டுப்படுத்துகின்ற ஒளி நிறைந்த அழகு.

வசிகரம்

வேண்டுகோள், விண்ணப்பம்

பசைகரம்

பசை (=விருப்பம்) + கரை (=சொல்) + அம் = பசைகரம் >>> வசிகரம் = விருப்பத்தைக் கூறுதல் = வேண்டுகோள், விண்ணப்பம்

வசீகரி

கட்டுப்படுத்து

வசிகரி

வசிகரம் (=கட்டுப்பாடு) >>> வசிகரி = கட்டுப்படுத்து

வசிகரி

வேண்டு

வசிகரி

வசிகரம் (=வேண்டுகோள்) >>> வசிகரி = வேண்டு

வசிகன்

தனக்குத் தானே முதலாளி

வசிகன்

வசி (=கட்டுப்படு) + இக (=கட) + அன் = வசிகன் = கட்டுப்பாட்டைக் கடந்தவன் = தனக்குத் தானே முதலாளி

வசிதை

எல்லையில்லா ஆற்றல்

வயிறை

வயம் (=வலிமை, ஆற்றல், எல்லை) + இற (=கட) + ஐ = வயிறை >>> வசிதை = எல்லை கடந்த ஆற்றல்.

வசியத்து, வசியத்

மரண வாக்குமூலம்

வாசியற்று

வாசி (=கூறு) + அற்றம் (=மரணம்) + உ = வாசியற்று >>> வசியத்து = மரணத்தின் போது கூறப்படுவது.

வசியம்

காதல்

பசியம்

பசை (=அன்பு) + இயை (=பொருந்து) + அம் = பசியம் >>> வசியம் = பொருந்திய அன்பு = காதல்.

வசியம்

கிராம்பு

வாசீயம்

வாசம் + ஈ (=கொடு) + அம் (=உணவு) = வாசீயம் >>> வசியம் = வாசம் தரும் உணவுப் பொருள்.

வசியை

மனைவி

பாசியை

பாசம் (=அன்பு) + இயை (=பொருந்து) = பாசியை >>> வசியை = அன்பு பொருந்தியவள்.

வசிரம், வசீரம்

திப்பிலி

வாசீரம்

வாசம் + ஈர் (=நீளு) + அம் (=உணவு) = வாசீரம் >>> வசிரம் = வாசம் தரும் நீண்ட உணவுப் பொருள்.

வசிரம்

உப்பு

பாழீரம்

பாழி (=கடல்) + ஈர் (=நுண்மை) + அம் (=உணவு, ஒளி) = பாழீரம் >>> வசிரம் = கடலில் இருந்து பெறும் நுண்ணிய ஒளிமிக்க உணவு.

வசீரன்

போர் வீரன்

வசீறன்

வசி (=பிள, வெட்டு) + இறு (=கொல், அழி) + அன் = வசீறன் >>> வசீரன் = பிளந்து / வெட்டிக் கொல்பவன்.

வசீரன்

குதிரை ஓட்டி

மாயிரன்

மா (=குதிரை) + இரி (=ஓட்டு) + அன் = மாயிரன் >>> வாசிரன் >>> வசீரன் = குதிரையை ஓட்டுபவன்

வசீரன்

மந்திரி

வாயிறன்

வாய் (=வழி, உபாயம்) + இறை (=அரசன், சொல்) + அன் = வாயிறன் >>> வாசிரன் >>> வசீரன் = அரசனுக்கு உபாயம் சொல்பவன்

வசு

தீ

பயு

பை (=எரி) + உ = பயு >>> வசு = எரிவது = தீ.

வசு

தங்கம், அரத்தினம்

பயு

பை (=ஒளிர், செல்வம்) + உ = பயு >>> வசு = ஒளிரும் செல்வம் = தங்கம், அரத்தினம்.

வசு

ஒளி

பயு

பை (=ஒளிர்) + உ = பயு >>> வசு = ஒளிர்வது

வசு

நீர்

பயம்

பயம் (=நீர்) + உ = பயு >>> வசு

வசு

மரம்

பாசு

பசுமை (=பச்சை, குளிர்ச்சி, நிழல்) + உ = பாசு >>> வசு = பச்சை நிறம் கொண்டு குளிர்ச்சி / நிழல் தருவது.

வசு

பசுக் கன்று

பயு

பை (=இளமை, அழகு, வெண்மை) + உ = பயு >>> வசு = வெண்ணிற அழகுடைய இளையது.

வசுகூபம், வசுகூபு

சிறுநீர்

மாசுகுப்பம்

மாசு (=கழிவு) + உகு (=சொரி, வெளியிடு) + உப்பு + அம் (=நீர்) = மாசுகுப்பம் >>> வசுகூபம், வசுகூபு = வெளியிடப்படுகின்ற உப்புடைய கழிவு நீர்.

வசுதை

பூமி

பசுந்தை

பசுமை + உந்து (=உருவாக்கு, பெருக்கு) + ஐ = பசுந்தை >>> வசுதை = பசுமையை உருவாக்கிப் பெருக்குபவள்.  

வசுந்தரை

பூமி

பசுந்தாரை

பசுமை + உந்து (=உருவாக்கு) + ஆர் (=பெருக்கு) + ஐ = பசுந்தாரை >>> வசுந்தரை = பசுமையை உருவாக்கிப் பெருக்குபவள்.  

வசுமதி

பூமி

பசுவதி

பசுமை (=செல்வம், வளம்) + அதி (=மிகுதி) = பசுவதி >>> வசுமதி = செல்வம் / வளம் மிக்கது.

வசுதாதரம்

மலை

வசுதாந்தரம்

வசுதை (=பூமி) + அந்தரம் (=மேலிடம்) = வசுதாந்தரம் >>> வசுதாதரம் = பூமியில் மேலிடமாக விளங்குவது.

வசுதாதிபன்

அரசன்

வசுதாதிபன்

வசுதை (=பூமி) + அதிபன் (=தலைவன்) = வசுதாதிபன் = பூமிக்குத் தலைவன் = அரசன்.

வசுநரை

புளி

வசிநாரை

வசி (=வளை) + நார் (=நரம்பு, அன்பு, கனிவு) + ஐ = வசிநாரை >>> வசுநரை = நாருடையதும் வளைந்திருப்பதும் ஆன கனி

வசூரி

சின்னம்மை

வைசூரி

வைசூரி >>> வசூரி

வசூரை

விபச்சாரி

வசுரை, வசூறை

(1). வசி (=கட்டுப்படுத்து, மயக்கு) + உரை (=பேசு) = வசுரை >>> வசூரை = மயக்கும் விதமாகப் பேசுபவள். (2). வசு (=செல்வம்) + உறை (=புணர்) = வசூறை >>> வசூரை = செல்வத்திற்காகப் புணர்பவள்.

வசூலத்து

திரட்டிப் பெருக்கியது

பயுலத்து

பை (=பெருக்கு) + உலம் (=திரட்சி) + அத்தம் (=பொருள்) + உ = பயுலத்து >>> வசூலத்து = திரட்டிப் பெருக்கிய பொருள்.

வசூல்

திரட்டிப் பெருக்கியது

பயுல்

பை (=பெருக்கு, பணம், பொருள்) + உல் (=திரட்டு) = பயுல் >>> வசூல் = திரட்டிப் பெருக்கிய பொருள்.

வசூலி

திரட்டு

வசூலி

வசூல் (=திரட்டுப் பெருக்கம்) >>> வசூலி

வசை

பசு

பசு

பசு + ஐ = பசை >>> வசை.

வசை

மலட்டுப் பசு

மயாய்

மை (=மலடு) + ஆ (=பசு) + ஐ = மயாய் >>> மயை >>> வசை = மலட்டுப் பசு.

வசை

பெண் யானை

மயை

மை (=கார்மேகம், அச்சம், உயிரி) + ஐ = மயை >>> வசை = அச்சமுடையதும் கார்மேகம் போன்றதுமான உயிரி = பெண்யானை.

வசை

பெண்

மயை

மை (=அச்சம்) + ஐ (=அழகு) = மயை >>> வசை = அச்சமும் அழகும் கொண்டவள்.

வசை

மகள்

பயை

பய (=ஈனு, படை) + ஐ = பயை >>> வசை = படைக்கப்பட்டவள்.

வசை

மனைவி

பாசை

பாசம் (=அன்பு) + ஐ = பாசை >>> வசை = அன்புடையவள்.

வசை

கொழுப்பு

பசை

பசை (=கொழுப்பு) >>> வசை

வஞ்சகம், வஞ்சம், வஞ்சு

ஏமாற்றுவேலை, மறைப்பு

மயக்கம், மாழகம்

(1). மயக்கு (=ஏமாற்று) + அம் = மயக்கம் >>> வசக்கம் >>> வஞ்சகம் = ஏமாற்று வேலை, மறைப்பு. (2). மாழ்கு / மாழ் (=மயக்கு) + அகம் (=அறிவு)  = மாழகம் >>> வாசகம் >>> வஞ்சகம் = அறிவுமயக்கம்

வஞ்சம்

வாள்

வசி

வசி (=வாள்) + அம் = வச்சம் >>> வஞ்சம்.

வஞ்சம்

அழிவு

மாயம்

மாய் (=அழி) + அம் = மாயம் >>> வாசம் >>> வஞ்சம் = அழிவு

வஞ்சம்

சிறுமை

மாசம்

மாசு (=பொடி) + அம் = மாசம் >>> வாசம் >>> வஞ்சம் = அற்பம்

வஞ்சம், வம்சம், வமிசம்

பரம்பரை

வச்சம்

வசி (=தாழ்ச்சி, கிளை) + அம் = வச்சம் >>> வஞ்சம், வம்சம் >>> வமிசம் = தாழ்ச்சியாக / கீழ்நிலையில் உள்ள கிளை.

வஞ்சம்

ஐம்பூதத் தொகுதி

பய்யம்

பை (=பரவு, பெருகு, ஐந்து, வலிமை, ஆற்றல்) + அம் = பய்யம் >>> வச்சம் >>> வஞ்சம் = பெருகிப் பரவியுள்ள ஐவகை ஆற்றல்.

பஞ்சம்

ஐந்து

பய்யம்

(2). பை (=ஐந்து) + அம் = பய்யம் >>> பஞ்சம்

வஞ்சலம்

பாம்பு

பய்யாலம்

பை (=படப்பொறி) + ஆலம் (=நஞ்சு) = பய்யாலம் >>> வச்சாலம் >>> வஞ்சலம் = படப்பொறியும் நஞ்சும் கொண்டது.

வஞ்சவம்

பாம்பு

பய்யம்பம்

பை (=படப்பொறி) + அம்பு (=நஞ்சு) + அம் = பய்யம்பம் >>> வச்சவ்வம் >>> வஞ்சவம் = படப்பொறியும் நஞ்சும் கொண்டது.

வஞ்சனி, வஞ்சனை

பெண்

பய்யணி

பை (=அச்சம்) + அணி (=அழகு) = பய்யணி >>> வச்சணி >>> வஞ்சனி = அச்சமும் அழகும் உடையவள். 

வஞ்சனம், வஞ்சனை

ஏமாற்று வேலை

மாழணம்

மாழ் (=மயக்கு, ஏமாற்று) + அணம் = மாழணம் >>> வாசனம் >>> வஞ்சனம் >>> வஞ்சனை = மதிமயக்க வேலை / ஏமாற்றுவேலை

வஞ்சனை

உறுதிமொழி, சபதம்

வச்சாணை

வசி (=சொல்) + ஆணம் (=உறுதி) + ஐ = வச்சாணை >>> வஞ்சனை = உறுதிமொழி, சபதம்.

வஞ்சி

கொடி

வஞ்சி

வசி (=வளை, சுற்று) >>> வஞ்சி = வளைந்து சுற்றுவது..

வஞ்சி

பெண்

பய்யி

பை (=அச்சம், அழகு) + இ = பய்யி >>> வச்சி >>> வஞ்சி = அச்சமும் அழகும் கொண்டவள்

வஞ்சி

குடை

வஞ்சி

வசி (=வளை, கவி) >>> வஞ்சி = வளைந்து கவிந்திருப்பது.

வஞ்சி

காணிக்கை இடும் பெட்டி

பய்யீ

பை (=பணம், காணிக்கை) + ஈ (=கொடு) = பய்யீ >>> வச்சீ >>> வஞ்சி = காணிக்கை கொடுக்கும் பெட்டி.

வஞ்சி

படகு, மரக்கலம்

வஞ்சி

வசி (=நீர், பிள, வளை) >>> வஞ்சி = நீரைப் பிளந்து செல்லும் வளைவான பொருள் = மரக்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.