செவ்வாய், 8 டிசம்பர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 57

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

விதந்து

விதவை

வீறறு

வீறு (=வலிமை, பொலிவு) + அறு (=இல்லாகு) = வீறறு >>> விதது >>> விதந்து = வலிமையும் பொலிவும் அற்றவள்.

விதம்

நெறி, முறை

விதி

விதி (=நெறி, முறை) + அம் = விதம்

விதம்

வகை

வீறம்

வீறு (=வகு) + அம் = வீறம் >>> விதம் = வகை

விதர்க்கணம்

ஆலோசனை

விதருக்கணம்

விதி (=முறை, வழி) + அருக்கு (=சொல்) + அணம் = விதருக்கணம் >>> விதர்க்கணம் = வழி சொல்லுதல்

விதர்க்கணம்

மிகுதியாகப் பேசுதல்

மீதருக்கணம்

மீ (=மிகுதி) + தருக்கு (=பேசு) + அணம் = மீதருக்கணம் >>> விதர்க்கணம் = மிகுதியாகப் பேசுதல்.

விதர்க்கம்

ஆலோசனை, கருத்து

விதருக்கம்

விதி (=வழி) + அருக்கு (=சொல்) + அம் = விதருக்கம் >>> விதர்க்கம் = வழி சொல்லுதல் = ஆலோசனை, கருத்து

விதர்க்கம்

சந்தேகம், ஆராய்ச்சி

வீறாரூகம்

வீறு (=பிள, வகு) + ஆர் (=பொருந்து) + ஊகம் (=சிந்தனை) = வீறாரூகம் >>> விதருக்கம் >>> விதர்க்கம் = பிளவுபட்ட சிந்தனை.

விதர்க்கம்

காரணம் காட்டுதல்

முறருக்கம்

முறை (=தொடர்பு) + அருக்கு (=கூறு) + அம் = முறருக்கம் >>> மிதருக்கம் >>> விதர்க்கம் = தொடர்பு கூறல்.

விதரணம்

பெரும் கொடை

மீதரணம்

மீ (=மிகுதி) + தரு (=கொடு) + அணம் = மீதரணம் >>> விதரணம் = மிகுதியாகக் கொடுத்தல்.

விதரணம், விதரணை

பகுத்தறிவு

வீறறணம்

வீறு (=வெட்டு, பகு) + அறி + அணம் = வீறறணம் = விதரணம் = பகுத்து அறிதல்.

விதரணம், விதரணை

திறமை, சாமர்த்தியம்

வீறாரணம்

வீறு (=வெற்றி, அறிவு) + ஆர் (=பெறு) + அணம் = வீறாரணம் >>> விதரணம் = வெற்றி பெறும் அறிவு.

விதரம்

பிளப்பு

வீறாரம்

வீறு (=வெட்டு, நீக்கு) + ஆர் (=பொருந்து) + அம் = வீறாரம் >>> விதரம் = நீக்கம் பொருந்தியது.

விதலை

பூமி

வித்தளை

வித்து (=விதை) + அளி (=ஈனு, படை) + ஐ = வித்தளை >>> விதலை = விதைகளை ஈனச் செய்வது = நிலம், பூமி.

விதவை

கைம்பெண்

வீறம்மை

வீறு (=வலிமை, பொலிவு, நீங்கு) + அம்மை (=பெண்) = வீறம்மை >>> விதவ்வை >>> விதவை = வலிமையும் பொலிவும் நீங்கிய பெண்.

விதனம்

வருத்தம், வலி, துன்பம்

மிறணம்

மிறை (=துன்புறு, வருந்து) + அணம் = மிறணம் >>> விதனம் = துன்பம், வருத்தம், வலி

விதனி

வருந்து

விதனி

விதனம் (=வருத்தம்) >>> விதனி = வருந்து

விதா

வீண்

வீதா

வீ (=இல்லாகு) + தா (=கொடு) = வீதா = விதா = கொடை இல்லாமை

விதாகம்

வெப்பம், உறைப்பு

வீறகம்

வீறு (=எரி) + அகம் (=அறிவு, உணர்வு) = வீறகம் >>> விதாகம் = எரிவதைப் போன்ற உணர்வு = வெப்பம், உறைப்பு.

விதாயகம், விதாயம்

முடிவு, விதி

முறயகம்

முறை (=விதி, முடிவு) + அகம் = முறயகம் >>> மிதயகம் >>> விதாயகம் = விதிக்கப்பட்டது, முடிவானது.

விதாயம்

வருவாயில் பங்கு

வீறாயம்

வீறு (=வெட்டு, பகு) + ஆயம் (=வருவாய்) = வீறாயம் >>> விதாயம் = பகுக்கப்பட்ட வருவாய்.

விதாரகம்

கிணறு

வீறறாக்கம்

வீறு (=நிலம், வெட்டு, தோண்டு) + அறை (=பள்ளம்) + ஆக்கம் (=நீர்) = வீறறாக்கம் >>> விதராக்கம் >>> விதாரகம் = பள்ளமாகத் தோண்டிய நிலத்தில் நீரைக் கொண்டது.

விதாரணம்

பிளப்பு, கிழிசல், கொலை, போர்

வீறாரணம்

வீறு (=பிள, கிழி, வெட்டு, கொல்) + ஆர் (=பொருந்து) + அணம் = வீறாரணம் >>> விதாரணம் = (1) பிளப்பு, கிழிசல், கொலை. (2) = பொருந்திக் கொல்வது = போர்.

விதாரம்

இலவம்

பைதரம்

பை (=பஞ்சு) + தரு (=கொடு, மரம்) + அம் = பைதரம் >>> பிதாரம் >>> விதாரம் = பஞ்சு கொடுக்கும் மரம்.

விதாரு

பல்லி

புறாரு

புறம் (=சுவர்) + ஆர் (=பொருந்து, ஒலி) + உ = புறாரு >>> பிதாரு >>> விதாரு = சுவரில் பொருந்தி ஒலிப்பது.

விதானம்

மேலிடம்

மீதானம்

மீ (=மேல்) + தானம் (=இடம்) = மீதானம் >>> விதானம் = மேலிடம்

விதானம்

பெரும் கூட்டம்

வீறணம்

வீறு (=பெருமை) + அணை (=கூடு) + அம் = வீறணம் >>> விதானம் = பெரும் கூட்டம்

விதானம்

யாகம்

பைதானம்

பை (=தீ, எரி) + தானம் (=கொடை, இடுகை) = பைதானம் >>> பிதானம் >>> விதானம் = தீக்குக் கொடையாக இட்டு எரித்தல்.

விதானம்

மந்தம்

மெத்தனம்

மெத்தனம் (=மந்தம்) >>> மிதானம் >>> விதானம்

விதானம்

வீண்

வீறாணம்

வீறு (=நீங்கு, இல்லாகு) + ஆணு (=நன்மை, பயன்) + அம் = வீறாணம் >>> விதானம் = பயன் இல்லாமை

விதானம்

ஓய்வு

வீறணம்

வீறு (=அமர்) + அணை (=ஆசனம், படுக்கை, பொருந்து) + அம் = வீறணம் >>> விதானம் = ஆசனத்தில் / படுக்கையில் பொருந்தி அமர்தல்.

விதானம்

விரிவு

பைதனம்

பை (=விரி) + தன்மை + அம் = பைதனம் >>> பிதானம் >>> விதானம் = விரிந்த தன்மை கொண்டது.

விதானம்

விதித்தல், ஏற்பாடு, விதி, ஒழுங்கு

விதணம்

விதி (=முறைசெய், ஏற்படுத்து) + அணம் = விதணம் >>> விதானம் = முறைசெய்தல், ஏற்பாடு, ஒழுங்கு, விதி

விதானம்

மாதிரி, வடிவம்

வீறாணம்

வீறு (=தோன்று) + ஆணம் (=பொருள்) = வீறாணம் >>> விதானம் = பொருளின் தோற்றம் = வடிவம், மாதிரி

விதானம்

புண்ணியம்

வீறணம்

வீறு (=நல்வினை) + அணம் = வீறணம் >>> விதனம் >>> விதானம்

விதானம்

செல்வம்

வீறணம்

வீறு (=வளம், செல்வம்) + அணம் = வீறணம் >>> விதனம் >>> விதானம்

விதானம்

வழி

வீதி

வீதி (=வழி) + அணம் = வீதணம் >>> விதானம்

விதானம்

வணக்கம்

வீறணம்

வீறு (=வளை, பணி, பெருமை) + அணம் = வீறணம் >>> விதானம் = பணிந்து பெருமை செய்தல்.

விதானம்

பகை, சினம்

வீறு

வீறு (=வெறுப்பு, பகை) + அணம் = வீறணம் >>> விதானம்.

விதானம்

யானையின் உணவு

மிதானம்

மிதி (=உணவு) + ஆனை + அம் = மிதானம் >>> விதானம் = யானையின் உணவு.

விதி

சட்டம், ஒழுங்கு, நீதி

முறை

முறை + இ = முறி >>> மிதி >>> விதி = முறைப்படுத்தப் பட்டது = சட்டம், ஒழுங்கு, நீதி

விதி

ஊழ்

முற்றி

முற்று (=முடி) + இ = முற்றி >>> மித்தி >>> விதி = முடிவு.

விதி

புண்ணியம்

வீறு

வீறு (=நல்வினை) + இ = வீறி >>> விதி

விதி

செல்வம்

வீறு

வீறு (=வளம், செல்வம்) + இ = வீறி >>> விதி

விதி

இயல்பு, உண்மை

முறை

முறை (=இயல்பு, உண்மை) + இ = முறி >>> மிதி >>> விதி

விதி

அறிவு

புத்தி

புத்தி (=அறிவு) >>> பித்தி >>> விதி

விதி

உணவு

மிதி

மிதி (=உணவு) >>> விதி

விதிதம்

வெளிப்படை ஆனது

புறிதம்

புறம் (=வெளி) + இதம் (=அறிவு) = புறிதம் >>> பிதிதம் >>> விதிதம் = வெளிப்படையாக அறியத் தக்கது

விதியர்

மந்திரி,தந்திரி, கணக்கன்

விதியர்

விதி (=அறிவு) + அர் = விதியர் = அறிவு மிக்கோர் = மந்திரி, தந்திரி, கணக்கன்,

விதியுளி

யாகம்

பைதீயுளீ

பை (=எரி) + தீ + உள் (=இடைவிடாது செய்) + ஈ (=கொடு, இடு) = பைதீயுளீ >>> பிதியுளி >>> விதியுளி = தீயில் இடைவிடாது இட்டு எரித்தல் = யாகம்.

விதியுளி

திருமணம்

விதியுளி

விதி (=கட்டு, பிணி) + உள் (=விரும்பு) + இ = விதியுளி = விரும்புபவர்களைக் கட்டிவைப்பது.

விதியுளி

தூதன்

விதியுளி

விதி (=கட்டு, சேர்) + உள் (=விரும்பு) + இ = விதியுளி = விரும்புபவர்களைச் சேர்த்து வைப்பவன்.

விதிரேகம்

வேறுபாடு, எதிர்மறை

வீதிரையகம்

வீ (=மாறு) + திரை (=திரி) + அகம் = வீதிரையகம் >>> விதிரேகம் = மாற்றமும் திரிபும் உடையது.

விது

சந்திரன்

பிறை

பிறை (=சந்திரன்) + உ = பிறு >>> விது

விது

வாயு

விது

வீறு (=பரவு, அடி, தாக்கு) >>> விது = பரவும் இயல்பும் தாக்கும் இயல்பும் கொண்டது = காற்று.

விது

கற்பூரம்

விது

வீறு (=ஒளி, துண்டு, வெண்மை) >>> விது = ஒளிதரும் வெண்ணிறத் துண்டு = கற்பூரம்.

விது

உயிர்ப்பலி

விது

வீறு (=உயிர், வெட்டு, கொல்) >>> விது = உயிரைக் கொல்லுதல்.

விதுகம்

வேண்டாமென மறுத்தல்

முறுகம்

முறி (=மாற்று) + உக (=விரும்பு) + அம் = முறுகம் >>> மிதுகம் >>> விதுகம் = விருப்பத்தை மாற்றுதல்.

விதுடன், விதுடி

அறிவாளி

வித்துறன்

வித்தம் (=அறிவு) + உறு (=மிகுதி) + அன் = வித்துறன் >>> விதுடன் = மிக்க அறிவு உடையவன்

விதுதம்

வேண்டாமென மறுத்தல்

மைந்துந்தம்

மைந்து (=விருப்பம்) + உந்து (=தள்ளு) + அம் = மைந்துந்தம் >>> மித்துத்தம் >>> விதுதம் = விருப்பத்தைத் தள்ளுதல்.

விதுரம்

கலக்கம்

வீதிரம்

வீ (=கெடு, அழி) + திரம் (=உறுதி) = வீதிரம் >>> விதுரம் = உறுதிக்கேடு

விதுரம்

காதலர் பிரிவு

வீறீரம்

வீறு (=நீங்கு, பிரி) + ஈர் (=அன்பு, காதல்) + அம் = வீறீரம் >>> வீதிரம் >>> விதுரம் = காதலர் பிரிவு.

விதுரன்

அறிவாளி

வித்துறன்

வித்தம் (=அறிவு) + உறு (=மிகுதி) + அன் = வித்துறன் >>> விதுரன் = மிக்க அறிவுடையவன்.

விதுரன்

பலசாலி

வீறுறன்

வீறு (=வலிமை) + உறு (=மிகுதி) + அன் = வீறுறன் >>> விதுரன் = மிக்க வலிமை உடையவன்.

விதுரன்

மனைவியை இழந்தவன்

வீறுரன்

வீறு (=இல்லாகு, இழ) + உரிமை (=மனைவி) + அன் = வீறுரன் >>> விதுரன் = மனைவியை இழந்தவன்

விதுலம்

ஒப்பின்மை

வீதுலம், விறிலம்

(1) வீ (=இன்மை) + துலை (=சமம்) + அம் = வீதுலம் >>> விதுலம் = சமம் இன்மை, ஒப்பின்மை. (2) விற (=ஒப்பு) + இலம் (=இன்மை) = விறிலம் >>> விதிலம் >>> விதுலம் = ஒப்பின்மை

விதுசி

அறிவாளி

வித்துச்சி

வித்தம் (=அறிவு) + உச்சம் (=மிகுதி) + இ = வித்துச்சி >>> விதுசி = மிக்க அறிவு உடையவன்

விதூடகம்

சிரிப்பூட்டும் செயல்

முறூட்டாக்கம்

முறு (=சிரி) + ஊட்டு + ஆக்கம் (=செயல்) = முறூட்டாக்கம் >>> மிதூட்டாக்கம் >>> விதூடகம் = சிரிப்பை ஊட்டும் செயல்.

விதூடணம்

பெரும் பழி

மீதூற்றணம்

மீ (=மிகுதி) + தூற்று (=பழிகூறு) + அணம் = மீதூற்றணம் >>> வீதூட்டணம் >>> விதூடணம் = மிகுதியான பழி.

விதூரசம்

வைடூரியம்

வயிறுறாயம்

வயம் (=கோடு) + இறை (=கண்) + உறை (=பொருந்து, ஒப்பு) + ஆய் (=ஒளி) + அம் = வயிறுறாயம் >>> வைதுராசம் >>> விதூரசம் = கண்ணில் பொருந்திய ஒளிக்கோடு போன்றது.

விதேகம்

மரணம்

வீறேகம்

வீறு (=உயிர்) + ஏகு (=செல், நீங்கு) + அம் = வீறேகம் >>> விதேகம் = உயிர் நீங்குதல்.

விதேசம்

அன்னிய நாடு

வீதேயம்

வீ (=மாறுபடு) + தேயம் (=நாடு) >>> வீதேயம் >>> விதேசம் = மாறுபட்ட நாடு = அன்னிய நாடு

விதேயம்

சாத்தியம்

முற்றேயம்

முற்று (=முடி) + ஏய் (=பொருந்து, தகு) + அம் = முற்றேயம் >>> மித்தேயம் >>> விதேயம் = முடிப்பதற்குத் தகுதியானது.

விதேயம்

விதிக்கப் பட்டது

விதேயம்

விதி + ஏய் (=பொருந்து, அமை) + அம் = விதேயம் = விதியால் அமைக்கப்பட்டது.

விதேயம்

விதிக்குக் கட்டுப்படுதல்

விதேயம்

விதி + ஏய் (=பொருந்து, அமை) + அம் = விதேயம் = விதியுடன் பொருந்தி அமைதல்.

விதேயம்

உருவமற்றது

வீதேயம்

வீ (=இன்மை) + தேயம் (=உடல், உருவம்) = வீதேயம் >>> விதேயம்

விதை

பெருமை

வீறு

வீறு (=பெருமை) + ஐ = வீறை >>> விதை

விந்தம்

மலை

வீறம்

வீறு (=உயர்வு, பெருமை, நிலம்) + அம் = வீறம் >>> விற்றம் >>> வித்தம் >>> விந்தம் = உயரமும் பெருமையும் உடைய நிலம்.

விந்தம்

தாமரை

வீறம்

வீறு (=எரி, ஒப்பு) + அம் (=நீர்) = வீறம் >>> விற்றம் >>> வித்தம் >>> விந்தம் = நீரில் எரிவதைப் போன்றது.

விந்தம்

காடு

முதை

முதை (=காடு) + அம் = முத்தம் >>> மிந்தம் >>> விந்தம்

விந்தம்

விசம்

வீறம்

வீறு (=அழி, கொல்) + அம் (=உணவு) = வீறம் >>> விற்றம் >>> வித்தம் >>> விந்தம் = கொல்லும் உணவு.

விந்தம்

பச்சைக் கற்பூரம்

வீறம்

வீறு (=எரி, ஒளி, வெண்மை, மணம், பொருள்) + அம் =  வீறம் >>> விற்றம் >>> வித்தம் >>> விந்தம் = எரிந்து ஒளிதரும் மணமுடைய வெண்ணிறப் பொருள்.

விந்தம்

மேலோர்

வீறம்

வீறு (=பெருமை, உயர்வு) + அம் =  வீறம் >>> விற்றம் >>> வித்தம் >>> விந்தம் = பெருமை / உயர்வு உடையோர்.

விந்தரம்

விசம்

வீறறம்

வீறு (=உயிர்) + அறு (=கொல், அழி) + அம் (=உணவு) = வீறறம் >>> விற்றரம் >>> வித்தரம் >>> விந்தரம் = உயிரைக் கொல்லும் உணவு.

விந்தன்

இடையன்

வித்தான்

விதை (=பரப்பு) + ஆன் (=மாடு) = வித்தான் >>> விந்தன் = மாடுகளைப் பரப்புபவன்.

விந்து

உயிர்த் துகள்

வீறு

வீறு (=உயிர், துகள், பொடி) >>> விற்று >>> வித்து >>> விந்து = உயிர்த் துகள்.

விந்து

துகள், துளி, பொட்டு, புள்ளி

வீறு

வீறு (=துகள், பொடி) >>> விற்று >>> வித்து >>> விந்து = புள்ளி, துளி, பொட்டு, பொடி, துகள்

விந்து

பாதரசம்

வீறு

வீறு (=ஒளி, வெண்மை, உயிர், கொல், பொருள்) >>> விற்று >>> வித்து >>> விந்து = உயிரைக் கொல்கின்ற வெண்ணிற ஒளிவீசும் பொருள்.

விந்து

குறி

வீறு

வீறு (=வகு, கீறு) >>>  விற்று >>> வித்து >>> விந்து = கீறல், குறி

விந்து

வட்டம்

வீறு

வீறு (=வட்டம்) >>>  விற்று >>> வித்து >>> விந்து

விந்தூகம்

குங்குமம்

வீறூக்கம்

வீறு (=நிறம், பொடி) + உக்கம் (=தீ) = வீறூக்கம் >>> விற்றூக்கம் >>> வித்தூகம் >>> விந்தூகம் = தீ நிறப் பொடி.

விந்தை

கல்வி

வித்தை

வித்தை (=கல்வி) >>> விந்தை

விந்தை

அழகு

வீறு

வீறு (=அழகு) + ஐ = வீறை >>> விற்றை >>> வித்தை >>> விந்தை

விந்தை

புதுமை

புதுமை

புதுமை + ஐ = புத்தை >>> பிந்தை >>> விந்தை = புதுமையானது.

விந்நியாசம்

பூ கட்டுதல்

வீநுழாசம்

வீ (=மலர்) + நுழை + அசை (=கட்டு) + அம் = வீநுழாசம் >>> விந்நுயாசம் >>> விந்நியாசம் = மலர்களை நுழைத்துக் கட்டுதல்.

விந்நியாசம்

கருத்தினை நிறுவுதல்

வின்னியசம்

வினை (=கருத்து) + இயை (=பொருத்து) + அசை (=சொல்) + அம் = வின்னியசம் >>> விந்நியாசம் = கருத்தினைப் பொருத்தமாகக் கூறுதல்

விந்நியாசம்

தந்திரமான பேச்சு

வின்னியசம்

வினை (=தந்திரம்) + இயை (=பொருந்து) + அசை (=சொல்) + அம் = வின்னியசம் >>> விந்நியாசம் = தந்திரம் பொருந்திய சொல்

விந்நியாசம்

வேடிக்கைப் பேச்சு

பிணியாயம்

பிணி + ஆய் (=மகிழ்) + அம் (=சொல்) = பிணியாயம் >>> விணியாசம் >>> விநியாசம் >>> விந்நியாசம் = மகிழ்ச்சி தந்து பிணிக்கும் சொல்.

விந்நியாசம்

சொல் / இசை நீட்டம்

மீநீயசம்

மீ (=மிகுதி) + நீ (=நீட்டு) + அசை (=சொல், இசை) + அம் = மீநீயசம் >>> விந்நியாசம் = சொல் / இசையை மிகவும் நீட்டுதல்

விநதி, வினதி

வணக்கம்

வினறி

வினை (=வளை, பணி) + அறை (=சொல்) + இ = வினறி >>> வினதி >>> விநதி = பணிவுடைய சொல்.

வினயம், விநயம்

பணிவு, மரியாதை

வினயம்

வினை (=வளை, பணி, வணங்கு) + அம் = வினயம் >>> விநயம் = பணிவு, அடக்கம், வணக்கம், மரியாதை, நன்னடத்தை.

வினயம், விநயம்

கட்டளை

வினயம்

வினை (=வளை, பணியச்செய்) + அம் (=சொல்) = வினயம் >>> விநயம் = பணியச் செய்யும் சொல் = கட்டளை.

விநயம்

தந்திரம்

வினை

வினை (=தந்திரம்) + அம் = வினயம் >>> விநயம்

விநயம்

பெருந்தருமம்

மீநயம்

மீ (=மேல்) + நயம் (=நீதி, தருமம்) = மீநயம் >>> விநயம்.

விநாசம், விநாசகம்

கேடு, அழிவு

வினயம்

வினை (=கேடு, அழிவு) + அம் = வினயம் >>> விநாசம் + ஆக்கம் = விநாசாக்கம் >>> விநாசகம்.

விநாசம், விநாசனம்

கொலை

வீநாசம்

வீ (=உயிர்) + நாசம் (=அழிவு) = வீநாசம் >>> விநாசம் = உயிரை அழித்தல் = கொலை.

விநாடி, விநாடிகை

மீச்சிறு பொழுது

வைஞான்றி

வை (=கூர்மை, நுட்பம்) + ஞான்று (=பொழுது) + இ = வைஞான்றி >>> விநாற்றி >>> விநாட்டி >>> விநாடி = நுட்பமான பொழுது.

விநாயகன், வினாயகன்

துன்பங்களை அறுப்பவன்

வினயகன்

வினை (=கேடு, துன்பம்) + அகை (=அறு) + அன் = வினயகன் >>> வினாயகன் >>> விநாயகன் = துன்பங்களை அறுப்பவன்.

விநாயகன், வினாயகன்

கருடன்

வினயகன்

வினை (=வளை, சுற்று) + அகை (=எழு, உயர்) + அன் = வினயகன் >>> வினாயகன் >>> விநாயகன் = உயரத்தில் சுற்றுபவன்.

விநிகதம்

கெட்ட சகுனம்

வினிங்கிறம்

வினை (=தீமை) + இங்கம் (=குறிப்பு) + இறு (=சொல்லு) + அம் = வினிங்கிறம் >>> வினிக்கிதம் >>> விநிகிதம் = தீமையைக் குறிப்பாகச் சொல்வது = கெட்ட சகுனம்.

விநிமயம்

பண்ட மாற்று

வினைபயம்

வினை (=பரிகாரம், மாற்று) + பயம் (=பொருள், பண்டம்) = வினைபயம் >>> வினிமயம் >>> விநிமயம் = பண்ட மாற்று.

விநிமயம்

அடகு

பிணைபயம்

பிணை + பயம் (=பொருள்) = பிணைபயம் >>> விணிமயம் >>> விநிமயம் = பொருளைப் பிணைத்து வைத்தல்

விநியோகம், வினியோகம்

பகிர்ந்து கொடுத்தல்

பின்னீயோக்கம்

பின்னம் (=பிரிவு) + ஈ (=கொடு) + ஓக்கு (=உண்டாக்கு) + அம் = பின்னீயோக்கம் >>> வின்னியோகம் >>> விநியோகம் = பிரிவை உண்டாக்கிக் கொடுத்தல்.

விநியோகம், வினியோகம்

பயன்பாடு

புணையோக்கம்

புணை (=உதவி, பயன்) + ஓக்கு (=எழுப்பு) + அம் = புணையோக்கம் >>> பிணியோகம் >>> வினியோகம் >>> விநியோகம் = பயனை எழுப்புதல்

விநீதன்

குற்றத்திற்காகத் தண்டிக்கப் பட்டவன்

வினிறன்

வினை (=தீச்செயல், பரிகாரம்) + இறு (=தண்டி) + அன் = வினிறன் >>> விநீதன் = தீச்செயலுக்குப் பரிகாரமாகத் தண்டிக்கப்பட்டவன்

விநோதம்

வேடிக்கை, அதிசயம்

பூநொதம்

பூ (=தோன்று) + நொதுமை (=அயன்மை, புதுமை) + அம் = பூநொதம் >>> பிநோதம் >>> விநோதம் = புதுமை தோன்றுவது.

விநோதம்

அழகு

மின்னொற்றம்

மின் (=ஒளி) + ஒற்று (=பொருந்து) + அம் = மின்னொற்றம் >>> வின்னோத்தம் >>> வினோதம், விநோதம் = ஒளி பொருந்தியது.

விநோதம்

மகிழ்ச்சி, விருப்பம்

பிண்ணொற்றம்

பிணை (=விருப்பம்) + ஒற்று (=பொருந்து) + அம் = பிண்ணொற்றம் >>> வின்னோத்தம் >>> வினோதம், விநோதம் = விருப்பம் பொருந்தியது.

பிரகாரம்

ஒப்புமை

பிறங்காரம்

பிறங்கு (=தோன்று) + ஆர் (=பொருந்து) + அம் = பிறங்காரம் >>> பிரக்காரம் >>> பிரகாரம் = பொருத்தமாகத் தோன்றுவது

பிரகாரம்

உயர்குணம், நற்குணம்

பிறங்காறம்

பிறங்கு (=உயர்) + ஆறு (=தன்மை) + அம் = பிறங்காறம் >>> பிரக்காரம் >>> பிரகாரம் = உயர்ந்த தன்மை.

பிரகாரம்

நற்செயல்

பிறங்கறம்

பிறங்கு (=தோன்று) + அறம் = பிறங்கறம் >>> பிரக்காரம் >>> பிரகாரம் = அறம் தோன்றுவது = நற்செயல்.

பிரகாரம்

செயல்முறை

முறைகாரம்

முறை + காரம் (=செயல்) = முறைகாரம் >>> மிறகாரம் >>> பிரகாரம் = செயல்முறை.

விப்பிரகாரம்

எதிரிடை

வீப்பிரகாரம்

வீ (=மாறு) + பிரகாரம் (=ஒப்பு) = வீப்பிரகாரம் >>> விப்பிரகாரம் = ஒப்புமைக்கு மாறானது = எதிரிடை

விப்பிரகாரம்

தீக்குணம், இழிகுணம்

வீப்பிரகாரம்

வீ (=மாறு) + பிரகாரம் (=உயர்குணம்) = வீப்பிரகாரம் >>> விப்பிரகாரம் = உயர்குணத்திற்கு மாறானது = தீக்குணம், இழிகுணம்.

விப்பிரகாரம்

தீச்செயல்

வீப்பிரகாரம்

வீ (=மாறு) + பிரகாரம் (=நற்செயல்) = வீப்பிரகாரம் >>> விப்பிரகாரம் = நற்செயலுக்கு மாறானது = தீச்செயல்.

விப்பிரகாரம்

அவமரியாதை, நிந்தை

வீப்புரைகாரம்

வீ (=மாறு) + புரை (=பெருமை) + காரம் (=செயல்) = வீப்புரைகாரம் >>> விப்பிரகாரம் = பெருமை செய்வதற்கு மாறானது

விப்பிரகிருதி

அவமரியாதை, நிந்தை

வீப்புரைகிருதி

வீ (=மாறு) + புரை (=பெருமை) + கிருதி (=செயல்) = வீப்புரைகிருதி >>> விப்பிரகிருதி = பெருமை செய்வதற்கு மாறானது

விப்பிரகிருதி

எதிர்வினை

வீப்புரைகிருதி

வீ (=மாறு) + புரை (=ஒப்பு) + கிருதி (=செயல்) = வீப்புரைகிருதி >>> விப்பிரகிருதி = ஒத்து செய்வதற்கு மாறானது

விப்பிரமம்

மயக்கச் சுழற்சி, குழப்பம்

மைவிறவம்

மை (=மயக்கம்) + விற (=சுழல், சுற்று) + அம் = மைவிறவம் >>> மிபிரமம் >>> விப்பிரமம் = சுழற்சி மயக்கம், சுழற்சி, மயக்கம், குழப்பம்

விப்பிரமம்

குற்றம்

மைவிரவம்

மை (=பழி, பாவம்) + விரவு (=பொருந்து) + அம் = மைவிரவம் >>> மிபிரமம் >>> விப்பிரமம் = பழி / பாவம் பொருந்தியது.

விப்பிரமம்

ஒளிரும் அழகு

பைப்பிறழ்மம்

பை (=அழகு) + பிறழ் (=ஒளிர்) + மம் = பைப்பிறழ்மம் >>> பிப்பிரய்மம் >>> விப்பிரமம் = ஒளிரும் அழகு.

விப்பிரமம்

ஊடல், பிணக்கு

வீவிரவம்

வீ (=மாறு) + விரவு (=கல, புணர்) + அம் = வீவிரவம் >>> விப்பிரமம் = புணர்ச்சிக்கு மாறானது = ஊடல், பிணக்கு

விப்பிரமம், விப்பிரமை

உடல் புணர்ச்சி

வைவிரவம்

மை (=உடல்) + விரவு (=கல, புணர்) + அம் = மைவிரவம் >>> மிபிரமம் >>> விப்பிரமம் = உடற் புணர்ச்சி.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.