சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
விப்பிரயோகம் |
ஊடல், காதலர் பிரிவு |
வீப்புரயோகம் |
வீ (=மாறு) + புரை (=ஒப்பு, நட்பு) + ஓகம் (=சேர்க்கை) = வீப்புரயோகம் >>> விப்பிரயோகம் = நட்பின் சேர்க்கைக்கு மாறானது. |
விப்பிரலம்பம் |
காதலர் பிரிவு, சண்டை |
வீப்புரளாவம் |
வீ (=மாறு) + புரை (=ஒப்பு, நட்பு) + அளாவு (=கல, சேர்) + அம் = வீப்புரளாவம் >>> விப்பிரலம்பம் = நட்பின் சேர்க்கைக்கு மாறானது = பிரிவு, ஊடல், சண்டை. |
விப்பிரலம்பம் |
வஞ்சகம் |
வீவிறலம்மம் |
வீ (=மாறு) + விறல் (=வெளிப்படு) + அமை (=செய்) + அம் = வீவிறலம்மம் >>> விப்பிரலம்பம் = வெளிப்படையான செயலுக்கு மாறானது = வஞ்சகம், ஏமாற்றுகை. |
விப்பிரலாபம் |
வாக்குவாதம், சண்டை |
மீவிறலம்மம் |
மீ (=மேலும்) + விறல் (=எதிர்) + அம் (=சொல்) + அம் = மீவிறலம்மம் >>> விப்பிரலாபம் = மேன்மேலும் எதிர்த்துப் பேசுதல். |
விப்பிரலாபம் |
வெட்டிப் பேச்சு, பயனற்ற சொல் |
மீவிறலம்மம் |
வீ (=மாறு) + விறல் (=வெற்றி) + அம் (=சொல்) + அம் = வீவிறலம்மம் >>> விப்பிரலாபம் = வெற்றிப் பேச்சுக்கு மாறானது. |
விப்பிரவாசம் |
வேற்று ஊரில் வாழ்தல் |
வீப்புரவாசம் |
வீ (=மாறு) + புரம் (=ஊர், நாடு) + வாசம் (=வாழ்க்கை) = வீப்புரவாசம் >>> விப்பிரவாசம் = மாறான ஊரில் / நாட்டில் வாழ்தல். |
விப்பிராந்தி |
சுழற்சிமயக்கம், கலக்கம் |
மைவிறாத்தி |
மை (=மயக்கம்) + விற (=சுழல்) + அத்து (=பொருந்து) + இ = மைவிறாத்தி >>> மிபிராந்தி >>> விப்பிராந்தி = சுழற்சி மயக்கம் |
விப்பிரியம் |
விரும்பத் தகாதது |
வீப்பிரியம் |
வீ (=மாறு) + பிரியம் (=விருப்பம்) = வீப்பிரியம் >>> விப்பிரியம் = விருப்பத்திற்கு மாறானது. |
விப்பிலவம் |
போர், கலகம், சண்டை |
வீப்புலவம் |
வீ (=அழி) + புலவி (=வெறுப்பு, பகை) + அம் = வீப்புலவம் >>> விப்பிலவம் = பகையை அழித்தல் = போர், கலகம், சண்டை. |
விப்பிலவம் |
தொந்தரவு, பெருங்கேடு |
மீப்புலம்பம் |
மீ (=மிகுதி) + புலம்பு (=துன்பம்) + அம் = மீப்புலம்பம் >>> மிப்புலவ்வம் >>> விப்பிலவம் = மிகுதியான துன்பம். |
விப்புருதி |
புண் |
மைப்புருதி |
மை (=உடல்) + புரை (=புண்) + உதி (=தோன்று) = மைப்புருதி >>> மிப்புருதி >>> விப்புருதி = உடலில் தோன்றும் புண். |
விபக்கம், விபட்சம் |
எதிர்பக்கம், பகைமை |
வீபக்கம் |
வீ (=மாறு, எதிர்) + பக்கம் = வீபக்கம் >>> விபக்கம் >>> விபக்சம் >>> விபட்சம் = எதிர்ப்பக்கம், பகைமை |
விபக்கன், விபட்சன் |
பகைவன் |
வீபக்கன் |
வீபக்கம் (=எதிர்பக்கம்) + அன் = வீபக்கன் >>> விபக்கன் >>> விபக்சன் >>> விபட்சன் = எதிரி |
விபக்தம் |
பாகப்பிரிவினை |
பைபக்கம் |
பை (=செல்வம், பொருள்) + பகு (=பங்கிடு) + அம் = பைபக்கம் >>> பிபக்கம் >>> விபக்தம் = செல்வம் / பொருளைப் பங்கீடு செய்தல் |
விவகாரம், விபகாரம் |
வழக்கு, புகார் |
வீவாக்காரம் |
வீ (=மாறு, எதிர்) + வாக்கு (=சொல்) + ஆர் (=கட்டு, வழங்கு) + அம் = வீவாக்காரம் >>> விவகாரம், விபகாரம் = எதிராகக் கட்டி வழங்கப்படும் சொல் = வழக்கு, புகார். |
விவகாரி |
புகாரளி |
விவகாரி |
விவகாரம் (=புகார்) >>> விவகாரி = புகாரளி |
விபகலிதம் |
கழித்தல் |
வீபகலிதம் |
வீ (=நீக்கு) + பகல் (=பிரிவு) + இதம் = வீபகலிதம் >>> விபகலிதம் = பிரித்து நீக்குதல் = கழித்தல். |
விபசித்து |
அறிஞன் |
மீப்பச்சித்து |
மீப்பம் (=மிகுதி) + சித்தம் (=அறிவு) + உ = மீப்பச்சித்து >>> விபச்சித்து = அறிவு மிக்கவன் = அறிஞன் |
ஆசாரம் |
நடத்தை, நடவடிக்கை |
அயரம் |
அயர் (=செய், நட) + அம் = அயரம் >>> அசரம் >>> ஆசாரம் = நடவடிக்கை, நடத்தை |
விவச்சாரம், விபச்சாரம் |
வேறுபட்ட புணர்ச்சி, கெட்ட நடத்தை |
வீமய்யாரம், வீவாசாரம் |
(1). வீ (=மாறு, வேறாகு) + மை (=உடல்) + ஆர் (=கூடு, புணர்) + அம் = வீமய்யாரம் >>> விபச்சாரம் = வேறுவேறு உடல்களைப் புணர்தல். (2). வீவு (=கேடு) + ஆசாரம் (=நடத்தை) = வீவாசாரம் >>> விவச்சாரம் >>> விபச்சாரம் = கெட்ட நடத்தை. |
விபணம் |
விலை |
பைபண்ணம் |
பை (=பணம்) + பண்ணு (=விற்பனை செய்) + அம் = பைபண்ணம் >>> பிபணம் >>> விபணம் = விற்பனையாகும் பணமதிப்பு. |
விபணி |
கடை, கடைத்தெரு |
வைபண்ணி |
வை (=இடம்) + பண்ணு (=விற்பனை செய்) + இ = வைபண்ணி >>> விபணி = விற்பனை செய்யும் இடம் = கடை, கடைத்தெரு |
விபத்தன் |
உறவுகளைப் பிரிந்தவன் |
வீபற்றன் |
வீ (=நீங்கு, பிரி) + பற்று (=உறவு) + அன் = வீபற்றன் >>> விபத்தன் = உறவுகளைப் பிரிந்தவன். |
விபத்தி |
வேறுபாடு |
வீவத்தி |
வீவு (=நீக்கம், இன்மை) + அத்து (=பொருந்து) + இ = வீவத்தி >>> விபத்தி = பொருத்தம் இன்மை = வேறுபாடு. |
விபத்தி, விபத்து |
துர்ப்பாக்கியம் |
வீவாற்றி, வீவாற்று |
வீ (=மாறு) + வாறு (=பாக்கியம்) + இ / உ = வீவாற்றி / வீவாற்று >>> விபத்தி / விபத்து = பாக்கியத்திற்கு மாறானது. |
விபத்தி, விபத்து |
வறுமை |
வீவாற்றி, வீவாற்று |
வீ (=இன்மை) + பற்று (=பொருள்) + இ / உ = வீபற்றி / வீபற்று >>> விபத்தி / விபத்து = பொருள் இன்மை. |
விபத்தி, விபத்து |
பெருந்துன்பம், பெருங்கேடு |
மீவத்தி |
மீ (=மிகுதி) + வதை (=கேடு, துன்பம்) + இ = மீவத்தி >>> விபத்தி, விபத்து = பெருங்கேடு. |
விபத்தி, விபத்து |
மரணம் |
வீபாற்றி |
வீ (=உயிர்) + பாறு (=அழி, நீங்கு) + இ = வீபாற்றி >>> விபத்தி, விபத்து = உயிர் அழிதல் = மரணம். |
விபரம், விவரம் |
விரிவான கூற்று |
மீபறம் |
மீ (=மிகுதி) + பறை (=சொல்லு) + அம் = மீபறம் >>> விபரம், விவரம் = மிகுதியாகச் சொல்லப்படுவது. |
விவரி |
விரித்துக் கூறு |
மீபறி |
மீபறம் (=விரிவான கூற்று) >>> மீபறி >>> விபரி >>> விவரி |
விபரியயம் |
தவறான புரிதல் |
வீபரியாயம் |
வீ (=மாறு) + பரி (=அறி, உணர்) + ஆய் (=கருது) + அம் = வீபரியாயம் >>> விபரியயம் = மாறுபட்ட கருத்தை உணர்தல். |
விபரியாசம் |
கருத்து வேறுபாடு |
வீபரியாயம் |
வீ (=மாறு) + பரி (=அறி, உணர்) + ஆய் (=கருது) + அம் = வீபரியாயம் >>> விபரியாசம் = மாறுதலாக அறியப்படும் கருத்து. |
விபரீதம் |
கணிக்கப்பட்ட கேடு |
வீவறீதம் |
வீவு (=அழிவு, கேடு) + அறி (=கணி) + இதம் = வீவறீதம் >>> விபரீதம் = கணிக்கப்படும் கேடு. |
விபரீதம் |
மாறுபாடு |
வீவாரிதம் |
வீவு (=மாறுபாடு) + ஆர் (=பொருந்து) + இதம் = வீவாரிதம் >>> விபரீதம் = மாறுபாடு பொருந்தியது |
விபரீதம் |
அதிசயம், அற்புதம் |
மைமறிதம் |
மை (=உடல்) + மற + இதம் = மைமறிதம் >>> மிபரிதம் >>> விபரீதம் = மெய் மறக்கச் செய்வது = விந்தை, அதிசயம் |
விபரீதம் |
மிகப் பெரியது |
மீபரிதம் |
மீ (=மேலும்) + பருமை (=மிகுதி) + இதம் = மீபரிதம் >>> விபரீதம் = மிகப் பருமை ஆனது |
விபலம் |
தோல்வி, வீண் |
வீவலம் |
வீ (=இன்மை) + வலம் (=வெற்றி) = வீவலம் >>> விபலம் = வெற்றி இன்மை = தோல்வி, வீண். |
விபலீகரணம் |
வெட்டிவேலை |
விபலீகரணம் |
விபலம் (=வீண்) + ஈ (=கொடு) + கரணம் (=செயல்) = விபலீகரணம் = வீணான செயல், வெட்டிவேலை. |
விபவம் |
பெரும்பெருமை |
மீமாவம் |
மீ (=மிகுதி) + மா (=பெருமை) + அம் = மீமாவம் >>> விபவம் = பெருமை மிகுதி. |
விபவம் |
பெருஞ்செல்வம் |
மீமாவம் |
மீ (=மிகுதி) + மா (=செல்வம்) + அம் = மீமாவம் >>> விபவம் = செல்வ மிகுதி |
விபவம் |
மகிழ்வான வாழ்க்கை |
வைபம்பம் |
வை (=வாழ்) + பம்பு (=மகிழ்) + அம் = வைபம்பம் >>> விபவ்வம் >>> விபவம் = மகிழ்வான வாழ்க்கை. |
விபவம் |
மோட்டம் |
மீபம்பம் |
மீ (=மேல்) + பம்பு (=செறி, நிறை) + அம் = மீபம்பம் >>> விபவ்வம் >>> விபவம் = நிறைவான மேலிடம். |
விபன்னன் |
பெருந்துன்பம் உற்றவன் |
மீபன்னன் |
மீ (=மிகுதி) + பனி (=வருந்து) + அன் = மீபன்னன் >>> விபன்னன் = மிகவும் வருந்தியவன் |
விபசி |
வெட்டி நீக்கு |
வீவசி |
வீ (=நீக்கு) + வசி (=வெட்டு) = வீவசி >>> விபசி = வெட்டி நீக்கு |
விபாகம் |
பங்கீடு |
வீபகம் |
வீ (=பிரி) + பகு + அம் = வீபகம் >>> விபாகம் = பகுத்துப் பிரித்தல் |
விபாகரன் |
சூரியன் |
மைபாகரன் |
மை (=இருள்) + பா (=பகு) + கரன் = மைபாகரன் >>> மிபாகரன் >>> விபாகரன் = இருளைப் பகுக்கும் கரங்களைக் கொண்டவன் |
விபாசம் |
பந்த விடுதலை |
வீபாசம் |
வீ (=நீங்கு, விடுபடு) + பாசம் = வீபாசம் >>> விபாசம் = பாசத்தில் இருந்து விடுபடுதல். |
விபாடம், விபாடனம் |
வெட்டி நீக்குதல் |
வீபாறம் |
வீ (=நீக்கு) + பாறு (=பிள, வெட்டு) + அம் = வீபாறம் >>> விபாடம் = வெட்டி நீக்குதல். |
விபாடை |
மாற்றுமுறை |
வீவாறை |
வீ (=மாறு) + வாறு (=விதம், முறை) + ஐ = வீவாறை >>> விபாடை = மாற்று முறை |
விபாடை |
மாறுகோள் உரை |
வீபாடை |
வீ (=மாறு) + பாடம் (=உரை) + ஐ = வீபாடை >>> விபாடை = மாற்று உரை |
விபாதம் |
அதிகாலை |
மைபாறம் |
மை (=இருள்) + பாறு (=ஓடு, நீங்கு) + அம் = மைபாறம் >>> மிபாதம் >>> விபாதம் = இருள் நீங்கும் நேரம். |
விபாவசன், விபாவசு |
சூரியன் |
மைபாபசன் |
மை (=இருள்) + பா (=பகு) + பசுமை (=ஒளி) + அன் = மைபாபசன் >>> மிபாவசன் >>> விபாவசன் = இருளை ஒளியால் பகுப்பவன் |
விபாவரி |
இரவு |
மைபாவரை |
மை (=இருள்) + பா (=பரவு) + வரை (=பொழுது) = மைபாவரை >>> மிபாவரி >>> விபாவரி = இருள் பரவியிருக்கும் பொழுது |
விபாவனம் |
ஆராய்ச்சி |
மீபாவாணம் |
மீ (=மிகுதி) + பா (=பகு) + ஆணம் (=அறிவு) = மீபாவாணம் >>> விபாவனம் = மிகுதியாகப் பகுத்து அறிதல் = ஆராய்ச்சி |
விபாவனம் |
புனிதமின்மை |
வீபாவணம் |
வீ (=இன்மை) + பா (=தூய்மை) + அணம் = வீபாவணம் >>> விபாவனம் = தூய்மை இன்மை. |
விபினம் |
இருண்ட காடு |
மைபுனம் |
மை (=இருள்) + புனம் (=காடு) = மைபுனம் >>> மிபினம் >>> விபினம் = இருண்ட காடு |
விபு |
எங்கும் பரந்து இருப்பது |
வீபூ |
வீ (=நீங்கு, பரவு) + பூ (=தோன்று) = வீபூ >>> விபு = பரந்து தோன்றுவது |
விபு |
கடவுள், எசமானன் |
மீபூ |
மீ (=மேலிடம்) + பூ (=தோன்று) = மீபூ >>> விபு = மேலிடத்தில் தோன்றுபவன் = கடவுள், எசமானன் |
விபுணன் |
நிபுணன், சிறந்தவன் |
மீவினன் |
மீ (=மிகுதி) + வினை (=தந்திரம், செயல்) + அன் = மீவினன் >>> விபினன் >>> விபுணன் = செயல் தந்திரம் மிக்கவன் |
விபுணன் |
வெற்றியாளன் |
வீவினன் |
வீ (=அழி, வெல்) + வினை (=செயல்) + அன் = வீவினன் >>> விபிணன் >>> விபுணன் = வெல்லும் வினையை உடையவன் |
விபுத்தி |
மேலான அறிவு, பேரறிவு |
மீபுத்தி |
மீ (=மேன்மை, மிகுதி) + புத்தி (=அறிவு) = மீபுத்தி >>> விபுத்தி = மேலான அறிவு, மிகுந்த அறிவு |
விபுத்துவம் |
எங்கும் பரந்து இருப்பதான தன்மை |
விபுத்துப்பம் |
விபு (=எங்கும் பரந்து இருத்தல்) + துப்பு (=தன்மை) + அம் = விபுத்துப்பம் >>> விபுத்துவ்வம் >>> விபுத்துவம் = எங்கும் பரந்து இருக்கும் தன்மை. |
-துவம் |
தன்மையைக் குறிக்கும் அடைச்சொல் |
துப்பு |
துப்பு (=தன்மை) + அம் = துப்பம் >>> துவ்வம் >>> துவம் |
விபுதன் |
அறிவாளி |
மீபுத்தன் |
மீ (=மிகுதி) + புத்தி (=அறிவு) + அன் = மீபுத்தன் >>> விபுதன் = மிக்க அறிவுடையவன். |
விபுதன் |
கடவுள் |
மீபுத்தன் |
மீ (=மேன்மை) + புத்தி (=அறிவு) + அன் = மீபுத்தன் >>> விபுதன் = மேலான அறிவுடையவன். |
விபுதன் |
சந்திரன் |
மைவீறன் |
மை (=இருள்) + வீறு (=தோன்று, ஒளி) + அன் = மைவீறன் >>> மிபீதன் >>> விபுதன் = இருளில் தோன்றி ஒளிர்பவன். |
விபுலம் |
மலை |
மீபுலம் |
மீ (=உயரம்) + புலம் (=இடம்) = மீபுலம் >>> விபுலம் = உயரமான இடம் = மலை. |
விபுலம், விபுலை |
பூமி, பெருமை, அகலம், விரிவு |
வீபுலம் |
வீ (=நீங்கு, பரவு) + புலம் (=இடம்) = வீபுலம் >>> விபுலம் = (1) பரந்த இடம் = பூமி (2) இடத்தின் பரப்பு = பெருமை, அகலம், விரிவு |
விபுலமதி |
பிறர் மனதை அறியும் கலை |
வீபுலமதி |
வீ (=மாறு) + புலம் (=மனம்) + மதி (=அறிவு) = வீபுலமதி >>> விபுலமதி = மாற்றார் மனதை அறிதல். |
விபுலரசம் |
கரும்பு |
மீபுளரயம் |
மீ (=மிகுதி) + புளி (=தித்திப்பு) + அரி (=புல்) + அயம் (=நீர்) = மீபுளரயம் >>> விபுலரசம் = மிக்க தித்திப்பான நீரைத் தரும் புல். |
விபூடை |
அலங்காரம், அழகு, ஒளி |
மீவீறை |
மீ (=மேல், மிகுதி) + வீறு (=அழகு, ஒளி) + ஐ = மீவீறை >>> விபீடை >>> விபூடை = மிகுதி ஆக்கிய மேற்புற அழகு. |
விபூதி |
சாம்பல் |
பைவீறி |
(2) பை (=எரி) + வீறு (=தங்கு, பொடி) + இ = பைவீறி >>> பிபீதி >>> விபூதி = எரிந்து தங்கிய பொடி. |
விபூதி |
செல்வம் |
பைவீறி |
பை (=மிகுதி, பணம்) + வீறு (=வளம்) + இ = பைவீறி >>> பிபீதி >>> விபூதி = மிகுதியான பண வளம். |
விபூதி |
எண் பெரும் ஆற்றல்கள் |
மீவீறி |
மீ (=மேன்மை) + வீறு (=வலிமை, ஆற்றல்) + இ = மீவீறி >>> பிபீதி >>> விபூதி = மேலான ஆற்றல் = அட்டமா சித்திகள்.. |
விபூதி |
கெட்டுப்போன மாமிசம் |
வீவூறி |
வீவு (=கெடுதி) + ஊறு (=தசை) + இ = வீவூறி >>> விபூதி = கெட்டுப்போன தசை. |
விபூதி |
நரகம் |
வீவீறி |
வீ (=அழிவு, மரணம், கேடு, குற்றம்) + வீறு (=அடி, தண்டி, இடம்) + இ = வீவீறி >>> விபீதி >>> விபூதி = மரணித்தவர்கள் செய்த குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படும் இடம். |
விபூதி |
கொடுமை |
மீப்பூறி |
மீப்பு (=மிகுதி) + ஊறு (=துன்பம்) + இ = மீப்பூறி >>> விபூதி = மிகுதியான துன்பம். |
விபூதி |
பெருங்குற்றம் |
மீமிறி |
மீ (=மிகுதி) + மிறை (=குற்றம்) + இ = மீமிறி >>> விபிதி >>> விபூதி = பெரும் குற்றம். |
விபூசணம் |
ஆபரணம் |
பைபூசாணம் |
பை (=அழகு) + பூசு (=அணி) + ஆணம் (=பொருள்) = பைபூசாணம் >>> பிபூசணம் >>> விபூசணம் = அழகுக்காக அணியப்படும் பொருள். |
விபூடணம் |
ஆபரணம் |
பைபூட்டாணம் |
பை (=அழகு) + பூட்டு (=அணி) + ஆணம் (=பொருள்) = பைபூட்டாணம் >>> பிபூட்டணம் >>> விபூடணம் = அழகுக்காக அணியப்படும் பொருள். |
விவேகம், விபேகம் |
கூரிய பகுத்தறிவு |
மீப்பெஃகம் |
மீப்பு (=மிகுதி) + எஃகு (=ஆராய், பகுத்தறி, கூர்மை) + அம் = மீப்பெஃகம் >>> விபேகம் >>> விவேகம் = கூர்மை மிக்க பகுத்தறிவு. |
விபேதனம் |
பிரிக்கை |
வீவேறணம் |
வீ (=நீக்கு, பிரி) + வேறு + அணம் = வீவேறணம் >>> விபேதனம் = வேறுவேறாகப் பிரித்தல். |
விபோதம் |
பேரறிவு |
மீப்போத்தம் |
மீப்பு (=மிகுதி) + ஓத்து (=கல்வி, அறிவு) + அம் = மீப்போத்தம் >>> விபோதம் = மிகுந்த அறிவு. |
விம்படம் |
கடுகு |
மைப்பறம் |
மை (=கருமை) + பறை (=சிறுமை) + அம் (=உணவு) = மைப்பறம் >>> மிப்படம் >>> விம்படம் = கருமைநிறச் சிறிய உணவுப் பொருள். |
விம்பம், பிம்பம் |
உடல், வடிவம், உருவம், நிழல் |
பிழம்பு |
(2). பிழம்பு (=உடல், வடிவம்) + அம் = பிழம்பம் >>> வியம்பம் >>> வீம்பம் >>> விம்பம் >>> பிம்பம் = உடல், வடிவம், உருவம், நிழல் |
விம்பம், பிம்பம் |
ஒளி |
பிழம்பு |
பிழம்பு (=ஒளி) + அம் = பிழம்பம் >>> வியம்பம் >>> வீம்பம் >>> விம்பம் >>> பிம்பம். |
விம்பம் |
நஞ்சு |
வீவம் |
வீவு (=அழிவு, மரணம்) + அம் (=உணவு) = வீவம் >>> விபம் >>> விம்பம் = கொல்லும் உணவு. |
விம்பம் |
உருண்டை, வட்டம் |
பிழம்பம் |
பிழம்பு (=திரட்சி) + அம் = பிழம்பம் >>> வியம்பம் >>> வீம்பம் >>> விம்பம் = திரண்டது = உருண்டை, வட்டம். |
விம்பி |
பிரதிபலி |
விம்பி |
விம்பம் (=நிழல்) >>> விம்பி = நிழல்செய், பிரதிபலி |
விம்பு |
கமுகு |
விம்பு |
விம்மு (=பெருகு, திரள்) >>> விம்பு = பலவாகத் திரண்டிருப்பது. |
விம்மிதம் |
உடல் |
விம்மிதம் |
விம்மு (=ஈனு, தோன்று) + இதம் = விம்மிதம் = ஈனப்பட்டுத் தோன்றுவது = உடல். |
விம்மிதம் |
அதிசயம் |
வியவிதம் |
விய + இதம் = வியவிதம் >>> வீமிதம் >>> விம்மிதம் = வியத்தற் குரியது = அதிசயம். |
விம்மிதம் |
பெருமகிழ்ச்சி |
விம்மிதம் |
விம்மு (=பூரி) + இதம் = விம்மிதம் = பூரிப்பு, பேருவகை |
விம்மிதம் |
அச்சம் |
பைவிதம் |
பை (=அஞ்சு) + விதம் (=தன்மை) = பைவிதம் >>> பிமிதம் >>> விம்மிதம் = அஞ்சும் தன்மை. |
விமதம் |
கொள்கைக்குப் புறம்பானது |
வீமதம் |
வீ (=மாறு) + மதி (=கருத்து, கொள்கை) + அம் = வீமதம் >>> விமதம் = கொள்கைக்கு மாறானது |
விமதன் |
மாறுபட்ட கருத்தினன் |
வீமதன் |
வீ (=மாறு) + மதி (=கருத்து, கொள்கை) + அன் = வீமதன் >>> விமதன் = மாறுபட்ட கருத்துடையவன் = பகைவன். |
விமரிசம், விமர்ச்சம், விமரிசனம், விமர்ச்சனம், விமரிசை |
மீள்பார்வை, மனப்பாடம் |
மீபாரியம் |
மீ (=மேலும், மீண்டும்) + பார் (=கருது, சிந்தி) + இயம் = மீபாரியம் >>> விமரிசம் = மீண்டும் மீண்டும் சிந்தித்தல் = மீள்பார்வை, மனப்பாடம். |
விமரிசம், விமர்ச்சம், விமரிசனம், விமர்ச்சனம் |
கூரிய பகுத்தறிவு |
வைபரியம் |
வை (=கூர்மை) + பரி (=பகு) + இயம் (=அறிவு) = வைபரியம் >>> விமரிசம் = கூரிய பகுத்தறிவு |
விமர்த்தனம் |
அரைத்துப் பொடியாக்கல், இடித்தல், அழித்தல் |
மைவருத்தணம் |
வை (=கூர்மை, நுட்பம்) + வருத்து (=மெலிதாக்கு) + அணம் = மைவருத்தணம் >>> மிமர்த்தனம் >>> விமர்த்தனம் = நுட்பமாக மெலியச் செய்தல் = அரைத்துப் பொடியாக்கல், இடித்தல், அழித்தல் |
விமர்த்தனம் |
கிரகணம் |
பைமறைத்தன்னம் |
பை (=ஒளி) + மறை + தன்னு (=சிறிதுசிறிதாக எடு) + அம் = பைமறைத்தன்னம் >>> பிமறத்தனம் >>> விமர்த்தனம் = ஒளியை சிறிதுசிறிதாக மறைத்துக் கொள்ளுதல். |
விமரிசை |
ஆடம்பரம் |
மீபாரிசை |
மீ (=மிகுதி) + பாரி (=காட்டு) + இசை (=புகழ், பெருமை) = மீபாரிசை >>> விமரிசை = புகழை / பெருமையை மிகுதியாகக் காட்டுதல். |
விமலம் |
சுத்தம், தெளிவு |
வீமலம் |
வீ (=இன்மை) + மலம் (=அழுக்கு) = வீமலம் >>> விமலம் = அழுக்கின்மை = சுத்தம், தெளிவு |
விமார்க்கம் |
தீயொழுக்கம் |
வீமார்க்கம் |
வீ (=கெடு) + மார்க்கம் (=வழி) = வீமார்க்கம் >>> விமார்க்கம் = கெட்டவழி = தீய ஒழுக்கம் |
விமார்க்கம் |
விளக்குமாறு |
வீவாருகம் |
வீ (=நீக்கு) + வார் (=நெடுமை, கட்டு, ஒழுங்குபடுத்து) + உகு (=சிதறு) + அம் = வீவாருகம் >>> விமார்க்கம் = சிதறியிருப்பதை நீக்கி ஒழுங்குபடுத்த உதவும் நீண்ட கட்டப்பட்ட பொருள். |
விமானம் |
பறவையைப் போல் பறப்பது |
வீமானம் |
வீ (=பறவை) + மான் (=ஒப்பு) + அம் = வீமானம் >>> விமானம் = பறவையை ஒப்பது. |
விமானம் |
மேற்கூரை, மேற்பகுதி |
மீமனம் |
மீ (=மேலிடம்) + மனை (=வீடு, இருப்பிடம்) + அம் = மீமனம் >>> விமானம் = வீட்டின் மேலிடம் = மேற்கூரை, மேற்பகுதி. |
விமானம் |
மாளிகை |
மீமனம் |
மீ (=உயரம்) + மனை (=வீடு) + அம் = மீமனம் >>> விமானம் = உயரமான வீடு = மாளிகை, அரண்மனை. |
விமானம் |
கோயில் |
மீமனம் |
மீ (=மேன்மை) + மனை (=வீடு) + அம் = மீமனம் >>> விமானம் = மேன்மை உடைய வீடு = கோயில். |
விமோசனம் |
பரிகாரம் |
வீமோசணம் |
வீ (=நீங்கு, மாறு) + மோசம் (=கேடு, துன்பம்) + அணம் = வீமோசணம் >>> விமோசனம் = கேடு / துன்பம் நீங்குவதற்கான மாற்று. |
வியங்கம் |
உடல் ஊனம் |
வீயங்கம், வியகம் |
(1). வீ (=நீங்கு, குறை) + அங்கம் (=உறுப்பு) = வீயங்கம் >>> விய்ங்கம் = உறுப்புக் குறை. (2) வியம் (=உடல்) + அகை (=முறி, குறை) + அம் = வியகம் >>> வியங்கம் = உடல் குறை. |
வியங்கம் |
இயற்கையில் உள்ள குற்றம் |
மையாக்கம் |
மை (=குற்றம்) + ஆக்கம் (=படைப்பு, இயற்கை) = மையாக்கம் >>> மியங்கம் >>> வியங்கம் = இயற்கைப் படைப்பில் உள்ள குற்றம் |
வியங்கம் |
தவளை |
பையங்கம் |
பை + அங்கம் (=உடல், ஒலி) = பையங்கம் >>> பியங்கம் >>> வியங்கம் = உடலில் உள்ள பையால் ஒலி எழுப்புவது. |
வியங்கியம் |
குறிப்புப் பொருள் |
வீயாக்கியம் |
வீ (=இன்மை) + ஆக்கம் (=பெருக்கம், விளக்கம்) + இயம் (=சொல்) = வீயாக்கியம் >>> வியங்கியம் = விளக்கமாகச் சொல்லப்படாதது |
வியசனம் |
மிக்க வலி, பெருந்துன்பம் |
மீயசணம் |
மீ (=மிகுதி) + அசை (=நோவு) + அணம் = மீயசணம் >>> வியசனம் = மிக்க வலி, பெருந்துன்பம் |
வியஞ்சகம் |
விளக்கமளிப்பு, விளக்கும் கருவி |
மையாயகம் |
மை (=மயக்கம், சந்தேகம்) + ஆய் (=களை, நீக்கு) + அகம் (=அறிவு) = மையாயகம் >>> மியசகம் >>> வியஞ்சகம் = சந்தேகத்தை அறிவினால் நீக்குதல், விளக்கும் கருவி |
வியஞ்சகம் |
குறிப்புப் பொருள், அபிநயம் |
மையசங்கம் |
மை (=உடல்) + அசை (=இருத்து, சொல்லு) + அங்கம் (=உறுப்பு, குறி) = மையசங்கம் >>> மியச்சகம் >>> வியஞ்சகம் = உடல் உறுப்புக்களை நிலையாக இருத்துவதன் மூலம் சொல்லப்படும் குறிப்பு. |
வியஞ்சனம் |
உடல் குறிப்பு, மெய்ப்பாடு |
வியஞ்சன்னம் |
வியம் (=உடல்) + சன்னை (=குறிப்பு) + அம் = வியஞ்சன்னம் >>> வியஞ்சனம் = உடல் குறிப்பு. |
வியஞ்சனம் |
மெய் எழுத்து |
மையாசணம் |
மை (=உடல், மெய்) + ஆசு (=எழுது) + அணம் = மையாசணம் >>> மியசனம் >>> வியஞ்சனம் = மெய் எழுத்து |
வியஞ்சனம் |
சிறிதாக வெட்டிய உணவு |
வீயஞ்சன்னம் |
வீ (=நீக்கு, பிரி, வெட்டு) + அம் (=உணவு) + சன்னம் (=சிறுமை) = வீயஞ்சன்னம் >>> வியஞ்சனம் = சிறிதாக வெட்டப்பட்ட உணவுப் பொருள். |
நல்ல தொடர் முயற்சி. இவற்றை ஒரு சொற்களஞ்சியமாக இணையதளத்தில் வெளியிடவேண்டும். நன்றி.
பதிலளிநீக்குகண்டிப்பாக வெளியிடப்படும். தங்கள் வாழ்த்திற்கு நன்றி. :)
நீக்குதொடர்ந்து வாசித்துவருகிறேன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :)
நீக்கு