திங்கள், 4 ஜனவரி, 2021

60 - (விருச்சிகன் -> விவரீதம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

விரிச்சிகன், விருச்சிகன்

சூரியன்

வீறுய்யிகன்

வீறு (=மிகுதி, ஒளி) + உய் (=செலுத்து) + இக (=கட) + அன் = வீறுய்யிகன் >>> விருச்சிகன் >>> விரிச்சிகன் = மிக்க ஒளி செலுத்தியவாறு கடப்பவன்.

விரீடம்

வெட்கம்

வீறிறம்

வீறு (=வளை, கவிழ்) + இறை (=தலை) + அம் = வீறிறம் >>> விரீடம் = தலை கவிழ்தல் = வெட்கப்படுதல்.

விருக்கம், விருக்சம்

மரம்

வீறுக்கம்

(2) வீறு (=நிலம், பிள, கிளை, பெரிதாகு, வளர்) + உகை (=பதி, பொருந்து) + அம் = வீறுக்கம் >>> விருக்கம் >>> விருக்சம் = நிலத்தில் பொருந்திக் கிளைத்துப் பெரிதாக வளர்வது.

விருகத்திரணம்

மூங்கில்

விருக்கத் திரணம்

விருக்கம் (=மரம்) + திரணம் (=புல்) = விருக்கத்திரணம் >>> விருகத்திரணம் = புல் வகையைச் சேர்ந்த மரம்.

விருக்கு

குங்குமம்

வீறுக்கு

வீறு (=பொடி, நிறம்) + உக்கம் (=நெருப்பு) + உ = வீறுக்கு >>> விருக்கு = தீநிறப் பொடி

விருகம்

செந்நாய்

வீறுக்கம்

வீறு (=நிறம், உயிரி, தாக்கு) + உக்கம் (=நெருப்பு, சினம்) = வீறுக்கம் >>> விருகம் = தீயின் நிறங்கொண்ட சினந்து தாக்கும் உயிரி.

மிருகம், விருகம்

விலங்கு

வீறுக்கம்

(2). வீறு (=வலிமை, உயிரி) + உக்கம் (=சினம்) = வீறுக்கம் >>> விருகம் >>> மிருகம் = சினமும் வலிமையும் கொண்ட உயிரி.

விருச்சிகம்

தேள்

வீறுயிங்கம்

வீறு (=வளை, உயிரி) + உய் (=தப்பி ஓடு) + இங்கு (=குத்து, கொட்டு) + அம் = வீறுயிங்கம் >>> விருச்சிகம் = வளைத்துக் கொட்டிவிட்டுத் தப்பியோடும் உயிரி.

விருச்சிகம்

நண்டு

வீறுயிங்கம்

வீறு (=வளை, வெட்டு, உயிரி) + உய் (=பெறு, பிடி) + இங்கம் (=பொருள்) = வீறுயிங்கம் >>> விருச்சிகம் = பொருளை வளைத்துப் பிடித்து வெட்டும் உயிரி.

விருசம்

இஞ்சி

வீறூழம்

வீறு (=காரம், மிகுதி) + ஊழ் (=மூடு, மறை, புதை) + அம் (=உணவு) = வீறூழம் >>> விருசம் = புதைந்திருக்கும் காரம் மிக்க உணவு.

விருசம்

எலி

வீறூழம்

வீறு (=நிலம், தோண்டு, உயிரி) + ஊழ் (=கெடு, மறை) + அம் = வீறூழம் >>> விருசம் = கெட்ட நிலத்தைத் தோண்டி மறைந்து வாழும் உயிரி.

விருட்சம்

மரம்

வீறுற்றம்

(2) வீறு (=நிலம், பிள, கிளை, பெரிதாகு, வளர்) + உறு (=அடை, பொருந்து) + அம் = வீறுற்றம் >>> விருட்டம் >>> விருட்சம் = நிலத்தில் பொருந்திக் கிளைத்து பெரிதாக வளர்வது.

விருட்டி, விருச்டி

மழை

வீறூற்றி

வீறு (=ஒளி, வெட்டு) + ஊற்று (=பொழி) + இ = வீறூற்றி >>> விருட்டி >>> விருச்டி = ஒளி வெட்டிப் பொழியப்படுவது = மழை.

விருடகம்

எலி

வீறூறகம்

வீறு (=நிலம், தோண்டு, உயிரி) + ஊறு (=நாசம், கேடு) + அகம் (=உள்) = வீறூறகம் >>> விருடகம் = கெட்ட / நாசமான நிலத்தைத் தோண்டி உள்ளே வாழும் உயிரி.

விருடபம், விருச~பம்

பொலிகாளை

வீறிடபம்

வீறு (=பொலிவு, வலிமை) + இடபம் (=காளை) = வீறிடபம் >>> விருடபம் >>> விருச~பம் =  பொலிவும்  வலிமையும் உடைய காளை.

விருடம்

பொலிகாளை

மூரூறம்

மூரி (=காளை) + ஊறு (=கொலை, நாசம்) + அம் = மூரூறம் >>> மிருடம் >>> விருடம் = கொலை / நாசம் செய்யும் காளை = பொலிகாளை

விருடம்

எலி

வீறூறம்

வீறு (=நிலம், தோண்டு, உயிரி) + ஊறு (=நாசம், கேடு) + அம் = வீறூறம் >>> விருடம் = கெட்ட / நாசமான நிலத்தைத் தோண்டி வாழும் உயிரி.

விருடம்

நன்மை, அறம்

வீறூறம்

(1). வீறு (=நீக்கம், இன்மை) + ஊறு (=நாசம், கேடு) + அம் = வீறூறம் >>> விருடம் = கேடு இல்லாதது = நன்மை, அறம். (2). வீறு (=மிகுதி, நன்மை) + உறு (=அடை) + அம் = வீறூறம் >>> விருடம் = மிக்க நன்மை தருவது.

விருடம்

மேன்மை

வீறூறம்

வீறு (=பெருமை, சிறப்பு) + உறு (=மிகுதி) + அம் = வீறூறம் >>> விருடம் = பெருமை / சிறப்பு மிக்கது = மேன்மையானது.

விருடலம்

குதிரை

விருறாளம்

விரை (=பாய்ந்தோடு) + உறு (=தாங்கு) + ஆள் + அம் = விருறாளம் >>> விருடலம் = ஆளைத் தாங்கியவாறு பாய்ந்தோடுவது.

விருடலம்

வெள்ளைப் பூண்டு

வீறுறாலம்

வீறு (=காரம், துண்டு) + உறு (=மிகுதி, பொருந்து) + ஆல் (=வெண்மை) + அம் (=உணவு) = வீறுறாலம் >>> விருடலம் = பல துண்டுகள் பொருந்திய காரம் மிக்க வெண்ணிற உணவுப் பொருள் = வெள்ளைப் பூண்டு.

விருடியம்

உடல் பருத்திருத்தல்

வீறூறியம்

வீறு (=பெருமை) + ஊறு (=உடல்) + இயம் = வீறூறியம் >>> விருடியம் = உடல் பெரிதாக / பருமனாய் இருத்தல்.

விருத்தம், விருத்தி

வட்டம்

வீறுந்தம்

வீறு (=வளை) + உந்து (=செல், தொடர்) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = தொடர்ச்சியான வளைவைக் கொண்டது = வட்டம்.

விருத்தம், விருத்தி

தாயக் கட்டை

வீறுந்தம்

வீறு (=சிறு துண்டு) + உந்து (=உருட்டு) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = உருட்டப்படும் சிறிய துண்டு = தாயக்கட்டை.

விருத்தம், விருத்தி

ஒழுக்கம், தன்மை

முறுந்தம்

முறை (=ஒழுங்கு, தன்மை) + உந்து (=செல், நட) + அம் = முறுந்தம் >>> மிருத்தம் >>> விருத்தம் = (1) ஒழுக்கமாக நடத்தல். (2) நடந்துகொள்ளும் தன்மை

விருத்தம்

செய்தி

விருந்தம்

விரி (=விவரி, சொல்) + உந்து (=செல், நட) + அம் = விருந்தம் >>> விருத்தம் = நடந்ததை விரிவாகச் சொல்வது.

விருத்தம், விருத்தி

தொழில், பிழைப்பு

மிறுந்தம்

மிறை (=பாடுபடு, உழை) + உந்து (=செல், தொடர்) + அம் = மிறுந்தம் >>> விருத்தம் = தொடர்ச்சியான உழைப்பு = தொழில், பிழைப்பு

விருத்தம்

ஆமை

வீறுந்தம்

வீறு (=வலிமை, பெருமை, அடங்கு) + உந்து (=தோல், ஓடு) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = வலிமையான பெரிய ஓட்டுக்குள் அடங்குவது.

விருத்தம்

முதிர்ச்சி, பழமை

புருந்தம்

புரை (=பழமை) + உந்து (=மிகு) + அம் = புருந்தம் >>> பிருத்தம் >>> விருத்தம் = பழமை மிக்கது = முதிர்ச்சி, முதுமை

விருத்தம்

அறிவு

வீறுத்தம்

வீறு (=பகு, ஆய்) + உதி (=தோன்று) + அம் = வீறுத்தம் >>> விருத்தம் = ஆய்வில் தோன்றுவது = அறிவு.

விருத்தம்

முரண்பாடு, பகை

வீறுந்தம்

வீறு (=நீக்கம், இன்மை) + உந்து (=பொருந்து) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = பொருத்தம் இன்மை = முரண்பாடு., பகை.

விருத்தம்

குற்றம், கெட்ட நடத்தை

முருந்தம்

முரி (=கெடு) + உந்து (=செல், நட) + அம் = முருந்தம் >>> மிருத்தம் >>> விருத்தம் = கெட்ட நடத்தை = குற்றம்.

விருத்தம்

இடையூறு

மிறுந்தம்

மிறை (=துன்பம்) + உந்து (=செல், இயங்கு, உண்டாகு) + அம் = மிறுந்தம் >>> விருத்தம் = இயங்கும்போது உண்டாகும் துன்பம்.

விருத்தம்

ஏரணப் பிழை

மிறுந்தம்

மிறை (=குற்றம், பிழை) + உந்து (=செல், தொடர், உண்டாகு) + அம் (=சொல்) = மிறுந்தம் >>> விருத்தம் = தொடர்பைச் சொல்வதில் உண்டாகும் பிழை.

விருத்தம், விருத்தி

கூட்டம், திரள், வளர்ச்சி

வீறுந்தம்

வீறு (=மிகுதி) + உந்து (=பெருகு) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = மிகுதியாகப் பெருகியது = கூட்டம், திரள், பெருக்கம், வளர்ச்சி.

விருத்தம், விருத்தி

இலாபம், வட்டி

வீறுந்தம்

வீறு (=நன்மை, மிகுதி) + உந்து (=பெருகு) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = மிகுதியாகப் பெருகிய நன்மை = இலாபம், வட்டி.

விருத்தம், விருத்தி

செல்வம்

வீறுந்தம்

வீறு (=பொருள்) + உந்து (=பெருகு) + அம் = வீறுந்தம் >>> விருத்தம் = பொருள் பெருக்கம் = செல்வம்.

விருத்தபலம்

இலந்தைப் பழம்

வீறுந்தம்பழம்

வீறு (=வலிமை, கொட்டை) + உந்து (=தோல், பெரிதாகு) + அம் + பழம் = வீறுந்தம்பழம் >>> விருத்தபலம் = தோலுக்குள் பெரிய வலிமையான கொட்டையை உடைய பழம் = இலந்தைப் பழம்.

விருத்தபலம்

மாதுளம் பழம்

வீறுந்தம்பழம்

வீறு (=இனிமை, மிகுதி, கொட்டை) + உந்து (=தோல்) + அம் + பழம் = வீறுந்தம்பழம் >>> விருத்தபலம் = தோலுக்குள் மிகுதியான இனிப்பான கொட்டைகளைக் கொண்டது..

விருத்தபலம்

மிளகுப் பழம்

வீறுந்தம்பழம்

வீறு (=காரம், கொட்டை, வலிமை) + உந்து (=தோல்) + அம் + பழம் = வீறுந்தம்பழம் >>> விருத்தபலம் = தோலுக்குள் காரமான வலுவான கொட்டையைக் கொண்ட பழம்

விருத்தன்

முதியவன்

விருத்தன்

விருத்தம் (=முதிர்ச்சி) + அன் = விருத்தன் = முதிர்ந்தவன்.

விருத்தன்

அறிஞன்

விருத்தன்

விருத்தம் (=அறிவு) + அன் = விருத்தன் = அறிவாளி

விருத்தாந்தம்

செய்தி

விருத்தம்

விருத்தம் (=செய்தி) + அந்தம் = விருத்தாந்தம் = செய்தி, விசயம்

விருத்தாந்தம்

வரலாறு, கதை

விருத்தம்

விருத்தம் (=பழமை, செய்தி) + அந்தம் = விருத்தாந்தம் = பழைய செய்தி = வரலாறு

விருத்தாந்தம்

நிகழ்ச்சி

விருத்தாந்தம்

விருத்தம் (=தொழில், செயல்) + அந்தம் (=முடிவு) = விருத்தாந்தம் = முடிந்த செயல்

விருத்தாந்தம்

தன்மை

விருத்தம்

விருத்தம் (=தன்மை) + அந்தம் = விருத்தாந்தம்.

விருத்தாந்தம்

வகை, விதம்

விருத்தம்

விருத்தம் (=ஒழுக்கம், முறை) + அந்தம் = விருத்தாந்தம் = விதம், வகை

விருத்தாந்தம்

முழுமை

விருத்தம்

விருத்தம் (=முதிர்ச்சி, முழுமை) + அந்தம் = விருத்தாந்தம்

விருத்தாந்தம்

ஓய்வு

விருத்தாந்தம்

விருத்தம் (=தொழில், செயல்) + அந்தம் (=இன்மை) = விருத்தாந்தம் = செயலின்மை

விருத்தாப்பியம்

முதுமைப் பருவம்

விருத்தாமையம்

விருத்தம் (=முதிர்ச்சி) + அமையம் (=பருவம்) = விருத்தாமையம் >>> விருத்தாப்பியம் = முதிர்ந்த பருவம்.

விருத்தான்னம்

பழைய சோறு

விருத்தான்னம்

விருத்தம் (=பழமை) + அன்னம் (=சோறு) = விருத்தான்னம் = பழைய சோறு

விருத்தி

அடிமை, பணிவு

வீறுந்தி

வீறு (=வளை, பணி) + உந்து (=செல், நட) + இ = வீறுந்தி >>> விருத்தி = பணிந்து நடத்தல் = அடிமைத் தனம், பணிவு

விருத்தி

விளக்கவுரை, விவரம்

விருத்தி

விரி + உத்தி (=பேச்சு) = விருத்தி = விரிவான பேச்சு = விளக்க உரை, விவரம்.

விருத்தி

உரிய சொல்

புருத்தி

புரை (=பொருந்து) + உத்தி (=சொல்) = புருத்தி >>> பிருத்தி >>> விருத்தி = பொருந்துகின்ற / உரிய சொல்.

விருத்தி

உரிய பொருள்

வீறுந்தி

வீறு (=பொருள்) + உந்து (=பொருந்து) + இ = வீறுந்தி >>> விருத்தி = பொருந்துகின்ற / உரிய பொருள்.

விருத்தி

தோன்றும் நிலை

முறுத்தி

முறி (=நில்) + உதி (=தோன்று) = முறுத்தி >>> மிருத்தி >>> விருத்தி = தோன்றும் நிலை.

விருத்தி

சுத்தம்

புருத்தி

புரை (=களங்கம், கறை) + உத்து (=நீக்கு) + இ = புருத்தி >>> பிருத்தி >>> விருத்தி = கறையை நீக்குதல்.

விருத்தி

அபராதம்

மிறுந்தி

மிறை (=குற்றம், வரி) + உந்து (=செலுத்து) + இ = மிறுந்தி >>> விருத்தி = குற்றத்திற்காகச் செலுத்தப்படும் வரி = தண்டத் தொகை.

விருத்தியன்

பணியாள்

விருத்தியன்

விருத்தி (=பணிவு) + அன் = விருத்தியன் = பணியாள்

விருத்தை

பாட்டி

விருத்தை

விருத்தம் (=முதுமை) + ஐ = விருத்தை = முதுமை உடையவள்.

விருதர்

வீரர்

வீருந்தர்

வீரம் + உந்து (=பெருகு, மிகு) + அர் = வீருந்தர் >>> விருதர் = வீரம் மிக்கவர்.

விருதா

வீண்

வீறுதா

வீறு (=வெற்றி, பலன்) + தா (=கேடு) = வீறுதா >>> விருதா = பலன் கெட்டது

விருது

பட்டப் பெயர்

வீறுத்து

வீறு (=பெருமை) + உத்தி (=சொல்) + உ = வீறுத்து >>> விருது = பெருமை சாற்றும் சொல் = பட்டப் பெயர்.

விருது

வெற்றிச் சின்னம்

வீறுத்து

வீறு (=வெற்றி) + உத்தி (=பொறி, சின்னம்) + உ = வீறுத்து >>> விருது = வெற்றிச் சின்னம்.

விருது

கொடி

வீறுந்து

வீறு (=பற) + உந்தி (=தண்டு, உயர்ச்சி) + உ = வீறுந்து >>> விருது = தண்டின் உயரத்தில் பறப்பது = கொடி.

விருது

பரம்பரை

வீறுத்து

வீறு (=விதை, பெருகு, கூட்டம்) + உதி (=தோன்று) + உ = வீறுத்து >>> விருது = விதையில் இருந்து தோன்றிப் பெருகிய கூட்டம் = பரம்பரை.

விருது

தவம், நோன்பு

மிறூன்று

மிறை (=துன்பம், நோவு) + ஊன்று (=தாங்கு) = மிறூன்று >>> விருது = துன்பத்தைத் / நோவைத் தாங்குதல் = தவம், நோன்பு.

விருது

சபதம், உறுதிமொழி

வீறுத்து

வீறு (=வலிமை, உறுதி) + உத்தி (=சொல், மொழி) + உ = வீறுத்து >>> விருது = உறுதிமொழி = சபதம்.

விருந்தம்

காம்பு

விருந்தம்

விர (=பொருந்து) + உந்தி (=தண்டு) + அம் = விருந்தம் = பொருந்தியிருக்கும் தண்டு.

விருந்தம்

வேப்பமரம்

முறுற்றம்

முறி (=அறு, இலை) + உறை (=ஒப்பு) + அம் = முறுற்றம் >>> மிருத்தம் >>> விருந்தம் = அறுப்பதைப் போன்ற இலைகளைக் கொண்டது.

விருந்தம்

உறவுக் கூட்டம்

முறுந்தம்

முறை (=உறவு, கூட்டம்) + உந்து (=பொருந்து, சேர்) + அம் = முறுந்தம் >>> மிருந்தம் >>> விருந்தம் = உறவுகள் சேர்ந்த கூட்டம்

விருந்தம்

விலங்கின் கூட்டம்

வீறுந்தம்

வீறு (=விலங்கு, மிகுதி, கூட்டம்) + உந்து (=பொருந்து, சேர்) + அம் = வீறுந்தம் >>> விருந்தம் = விலங்குகள் சேர்ந்த கூட்டம்

விருந்தம்

பொருட் குவியல்

வீறுந்தம்

வீறு (=பொருள்) + உந்து (=பொருந்து, சேர், உயர்) + அம் = வீறுந்தம் >>> விருந்தம் = பொருட்கள் சேர்ந்து உயர்தல்.

விருந்தம், விருந்தனை

மனைவி

புருந்தணை

புரை (=வீடு) + உந்து (=பொருந்து, சேர்) + அணை (=உதவி, துணை) = புருந்தணை >>> பிருந்தனை >>> விருந்தனை = வீட்டுடன் பொருந்திய துணை.

விருந்தாரம்

ஒளி வீசும் அழகு

 

வீறு (=ஒளி) + உந்து (=வீசு) + ஆர் (=அழகு) + அம் = வீறுந்தாரம் >>> விருந்தாரம் = ஒளி வீசும் அழகு

விருந்தாரம்

மேன்மை, சிறப்பு

வீறுந்தாரம்

வீறு (=பெருமை) + உந்து (=தோன்று) + ஆர் (=மிகுதி) + அம் = வீறுந்தாரம் >>> விருந்தாரம் = மிகுதியாகத் தோன்றும் பெருமை.

விருந்தை, பிருந்தை

துளசி

விருந்தை

(2) விரை (=நறுமணம்) + உந்து (=மிகு, பரப்பு) + ஐ = விருந்தை >>> பிருந்தை = மிக்க நறுமணம் பரப்புவது = துளசி.

விருபன்

வெள்ளெலி

வீறுமண்

வீறு (=ஒளி, வெண்மை, தோண்டு, உயிரி) + மண் (=நிலம்) = வீறுமண் >>> விருபன் = நிலத்தைத் தோண்டும் வெண்ணிற உயிரி.

விருடணம், விருச~ணம்

விதைப்பை

விருறணம்

விரை (=விதை) + உறை (=தங்கு, பை) + அணம் = விருறணம் >>> விருடணம் >>> விருச~ணம் = விதைகள் தங்கும் பை.

விரூபம்

வேற்றுமை

வீறுவம்

வீறு (=வேறு) + அம் = வீறுவம் >>> விரூபம் = வேற்றுமை

விரூபம்

கோணல் தோற்றம்

வீறுவம்

வீறு (=வளை, கோணு, தோன்று) + அம் = வீறுவம் >>> விரூபம் = கோணலான தோற்றம்

விரேகம்

பேதி

விரேகம்

விரை (=கலங்கு, பாய்) + அகம் (=வயிறு) = விரேகம் = வயிறு கலங்கிப் பாய்தல்.

விரேசகம்

பேதிமருந்து

விரேச்சாக்கம்

விரை (=கலக்கு, பாய்) + எச்சம் (=மலம்) + ஆக்கம் (=உணவு) = விரேச்சாக்கம் >>> விரேசகம் = மலத்தைக் கலக்கிப் பாயச்செய்யும் உணவுப் பொருள்.

விரேசனம்

பேதிமருந்து

விரேச்சன்னம்

விரை (=கலக்கு, பாய்) + எச்சம் (=மலம்) + அன்னம் (=உணவு) = விரேச்சன்னம் >>> விரேசனம் = மலத்தைக் கலக்கிப் பாயச்செய்யும் உணவுப் பொருள்.

விரேசனம்

பேதி

விரேச்சணம்

விரை (=கலங்கு, பாய்) + எச்சம் (=மலம்) + அணம் = விரேச்சணம் >>> விரேசனம் = மலம் கலங்கிப் பாய்தல்.

விரேசி

பேதியாகு

விரேசி

விரேசனம் (=பேதி) >>> விரேசி = பேதியாகு

சூரியன்

கதிரவன்

சுரீயன்

சுரம் (=வெப்பம்) + ஈ (=தா) + அன் = சுரீயன் >>> சூரியன் = வெப்பம் தருபவன்.

விரோசனம்

பேதி

விரோய்சாணம்

விரை (=கலங்கு, பாய்) + ஓய் (=மாறு, கெடு) + சாணம் (=மலம்) = விரோய்சாணம் >>> விரோசனம் = மலம் கெட்டுக் கலங்கிப் பாய்தல்.

விரோசனன்

சூரியன், தீ, சந்திரன்

வீறோச்சாணன்

வீறு (=ஒளி) + ஓச்சு (=பாய்ச்சு) + ஆணம் (=உடல்) + அன் = வீறோச்சாணன் >>> விரோசனன் = ஒளி பாய்ச்சும் உடலுடையவன் = சூரியன், சந்திரன், தீ

விரோசனி

கடுக்காய்

விரோசனி

விரோசனம் (=பேதி) + ஈ (=கொடு) = விரோசனீ >>> விரோசனி = பேதிக்குக் கொடுப்பது

விரோதம்

பகை, மாறுபாடு

வீறொத்தம்

(2) வீறு (=நீக்கம், இன்மை) + ஒத்து (=பொருத்து) + அம் = வீறொத்தம் >>> விரோதம் = பொருத்தம் இன்மை = பகை, மாறுபாடு.

விரோதம்

இரவு, இருள்

வீறொத்தம்

வீறு (=ஒளி) + ஒத்து (=விலகு, நீங்கு, நேரம்) + அம் = வீறொத்தம் >>> விரோதம் = ஒளி நீங்கிய நேரம் = இரவு, இருள்.

விரோதம்

தலைமயிர்

வீறோதம்

வீறு (=தலை) + ஓதி (=மயிர்) + அம் = வீறோதம் >>> விரோதம் = தலைமயிர்

விரோதி

பகைவன்

விரோதி

விரோதம் (=பகை) + இ = விரோதி = பகைவன்

விரோதி

பகை, எதிர்

விரோதி

விரோதம் (=பகை) >>> விரோதி = பகை, எதிர்த்துநில்.

வில்லங்கம்

குறுக்கீடு, தடை, இடையூறு

விலங்கம்

விலங்கு (=குறுக்கிடு, தடு) + அம் = விலங்கம் >>> வில்லங்கம் = குறுக்கீடு, தடை, இடையூறு

வில்லம், பிலம்

குகை

பிள்ளம்

பிள (=திற, ஊடுருவு) + அம் = பிள்ளம் >>> பில்லம் >>> வில்லம் = ஊடுருவக்கூடிய திறப்புடையது

வில்லை, வில்லம்

வட்டம், உருண்டை

வில்லை

வில் (=வளைவு) + ஐ = வில்லை = வளைவுடையது = வட்டம், வட்டமானது, உருண்டை, வில்வம்.

விலக்கணம், விலட்சணம்

சிறப்பு இயல்பு

மிலக்கணம்

மீ (=மேன்மை, சிறப்பு) + இலக்கணம் (=இயல்பு) = மிலக்கணம் >>> விலக்கணம் >>> விலட்சணம் = சிறப்பு இயல்பு

விலக்கணம், விலட்சணம்

அசிங்கம், அழகின்மை

விலக்கணம்

வீ (=இன்மை) + இலக்கணம் (=அழகு) = விலக்கணம் >>> விலட்சணம் = அழகின்மை

விலசனம், விலாசனை

விளையாட்டு

விளாசணம்

விளை (=விரும்பு) + அசை (=ஆடு) + அணம் = விளாசணம் >>> விலசனம் = விருப்பமான ஆட்டம்

விலம்

பள்ளம்

பிளம்

பிள + அம் = பிளம் >>> விலம் = பிளவு, பள்ளம்

விலயம்

உலக அழிவு

விளயம்

விளி (=அழி, முடி) + அயம் (=இடம், உலகம்) = விளயம் >>> விலயம் = உலகத்தின் அழிவு / முடிவு.

விலாசம்

விளையாட்டு

விளாசம்

விளை (=விரும்பு) + அசை (=ஆடு) + அம் = விளாசம் >>> விலாசம் = விருப்பமான ஆட்டம்.

விலாசம்

கூச்சம்

விலாசம்

வில (=வளை, நெளி) + ஆசை (=மகிழ்ச்சி) + அம் = விலாசம் = மகிழ்ந்து நெளிதல்

விலாசம்

ஒளிரும் அழகு

விலாயம்

வில் (=ஒளி) + ஆய் (=அழகு) + அம் = விலாயம் >>> விலாசம் = ஒளிரும் அழகு

விலாசம்

வீடு

விளயம்

விளி (=ஓய், இளைப்பாறு) + அயம் (=இடம்) = விளயம் >>> விலாசம் = இளைப்பாறும் இடம் = வீடு.

விலாசம்

நூல்

விளாசம்

விளை (=உருவாக்கு, செய்) + அசை (=சொல்) + அம் = விளாசம் >>> விலாசம் = சொற்களால் உருவாக்கப் பட்டது = நூல்.

விலாசம்

வாழை

விலாயம்

வில் (=ஒளி) + ஆய் (=அழகு) + அம் (=உணவு) = விலாயம் >>> விலாசம் = ஒளிமிக்க அழகிய உணவுப் பொருள் = வாழைப் பழம்.

விலாசம்

குறியீடு

விளாசம்

விளி (=குறை, சுருக்கு) + ஆசு (=எழுது) + அம் = விளாசம் >>> விலாசம் = சுருக்கி எழுதப்படுவது = குறியீடு

விலாசம்

அலங்காரம்

விளாயம்

விளை (=உண்டாக்கு) + ஆய் (=அழகு) + அம் = விளாயம் >>> விலாசம் = அழகினை உண்டாக்குதல் = அலங்காரம்.

விலாசி

சந்திரன்

விலாயீ

வில் (=ஒளி) + ஆய் (=அழகு) + ஈ (=தா) = விலாயீ >>> விலாசி = அழகிய ஒளியைத் தருபவன் = சந்திரன்

விலாசி

தீ

முளழி

முளி (=எரி) + அழி = முளழி >>> மிலசி >>> விலாசி = எரித்து அழிப்பது

விலாசி

விசப் பாம்பு

விளாயி

விளி (=இற) + ஆய் (=விசம், கொத்து) + இ = விளாயி >>> விலாசி = விசத்தால் கொத்தி இறக்கச் செய்வது = விசப்பாம்பு

விலாசினி

பெண்

விலாயினி

வில் (=ஒளி, அழகு) + ஆய் (=மென்மை) + இன் (=இனிமை) + இ = விலாயினி >>> விலாசினி = அழகும் மென்மையும் இனிமையும் உடையவள்.

விலாசினி

விலைமகள்

விலாயீனி

விலை + ஆய் (=அழகு) + ஈனு (=தா) + இ = விலாயீனி >>> விலாசினி = தனது அழகினை விலைக்குக் கொடுப்பவள்

விலாசு

அலங்கரி

விளாயு

விளை (=உண்டாக்கு) + ஆய் (=அழகு) + உ = விளாயு >>> விலாசு = அழகினை உண்டாக்கு = அலங்கரி

விலாடம்

புணர்ச்சி விளையாட்டு

புலாடம்

புல் (=புணர்) + ஆடு + அம் = புலாடம் >>> பிலாடம் >>> விலாடம் = புணர்ச்சி விளையாட்டு.

விலாடி

எண்ணைப் பகு

புள்ளறி

புள்ளி (=எண்) + அறு (=வெட்டு, வகு) + இ = புள்ளறி >>> பில்லடி >>> விலாடி = எண்ணைப் பகு.

விலாடி

விலையைக் கூட்டிக்கொடு

விலாற்றி

விலை + ஆற்று (=கூட்டு, கொடு) + இ = விலாற்றி >>> விலாடி = விலையைக் கூட்டிக் கொடு

விலாவம், விலாபம்

தூக்கத்தில் அழுகை

விளாவம்

விளி (=ஓய், உறங்கு) + ஆவி (=நெட்டுயிர், அழு) + அம் = விளாவம் >>> விலாவம் >>> விலாபம் = உறக்கத்தில் நெட்டுயிர்த்து அழுதல்.

விலாலம்

எந்திரம்

விலாலம்

வில் (=வட்டம்) + ஆலு (=சுற்று, ஒலி) + அம் = விலாலம் = ஒலித்தவாறு வட்டமாகச் சுற்றுவது = எந்திரம்.

விலாலம், விலாளம்

ஆண் பூனை

பிள்ளாளம்

பிள்ளை (=பூனை) + ஆள் (=ஆண்) + அம் = பிள்ளாளம் >>> விலாளம் >>> விலாலம் = ஆண் பூனை

விலாவணை

அழுகைப் புலம்பல்

விளாவணை

விளி (=வருந்து, சொல்லு) + ஆவி (=நெட்டுயிர், அழு) + அணை = விளாவணை >>> விலாவணை = வருந்தி அழுதவாறு சொல்லுதல்

விலாவி

வருந்தியழு

விளாவி

விளி (=வருந்து) + ஆவி (=நெட்டுயிர், அழு) = விளாவி >>> விலாவி = வருந்தியழு

விலாவம்

அழுகை

விலாவம்

விலாவி (=அழு) + அம் = விலாவம் = அழுகை

விலேபனம்

பூசுகை, பூச்சு, சாந்து

புலேமணம்

புல் (=ஒட்டு) + ஏமம் (=கலக்கம்) + அணம் = புலேமணம் >>> பிலேபனம் >>> விலேபனம் = கலக்கி ஒட்டச்செய்தல் = பூசுகை, பூச்சு, சாந்து

விலேபி

கஞ்சி

புலேமி

புல் (=அற்பம், உணவு) + ஏமம் (=கலக்கம்) + இ = புலேமி >>> பிலேபி >>> விலேபி = கலக்கப்பட்ட அற்ப உணவு = கஞ்சி.

விலேவாரி

விரிவான கணக்கு

விலேய்பாரி

விலை (=மதிப்பு, கணக்கு) + ஏய் (=பொருந்து) + பாரி (=பரவு, விரி) = விலேய்பாரி >>> விலேவாரி = விரிவு பொருந்திய கணக்கு.

விலோசனம்

கண்

விலோச்சன்னம்

வில் (=ஒளி, அம்பு எய்வது) + ஓச்சு (=செலுத்து) + அன்ன (=போல) + அம் = விலோச்சன்னம் >>> விலோசனம் = ஒளியை அம்பாகச் செலுத்தும் வில்போன்றது.

விலோசனம்

பார்வை

விலோச்சன்னம்

வில் (=ஒளி, அம்பு எய்வது) + ஓச்சு (=செலுத்து) + அன்ன (=போல) + அம் = விலோச்சன்னம் >>> விலோசனம் = வில்லின் அம்புபோலச் செலுத்தப்படும் ஒளி.

விலோசனம்

மூலக்கருத்து

மூலோசனம்

மூலம் + ஓசனை (=கருத்து) + அம் = மூலோசனம் >>> மிலோசனம் >>> விலோசனம்

விலோதம்

பெண்களின் தலைமயிர்

விலோதம்

வில் (=வளைவு) + ஓதி (=தலைமயிர்) + அம் = விலோதம் = வளைவுடைய தலைமயிர் = பெண்களின் தலைமயிர்.

விலோதம், விலோதனம்

கொடி

புளொற்றம்

புள் (=பறவை, பற, தண்டு) + ஒற்று (=கட்டு) + அம் = புளொற்றம் = பிலோத்தம் >>> விலோதம் = தண்டில் கட்டப்பட்டு பறப்பது.

விலோதனம்

கண்

விலோதணம்

வில் (=ஒளி) + ஓதி (=இமை) + அணை (=பொருந்து) + அம் = விலோதணம் >>> விலோதனம் = ஒளியுடனும் இமையுடனும் பொருந்தியது.

விலோமம்

எதிர்முறை

விளொப்பம்

விளி (=அழி, இல்லாகு) + ஒப்பு (=நேர்முறை) + அம் = விளொப்பம் >>> விலோமம் = நேர்முறை இன்மை.

விலோமம்

நரகம்

விளோம்பம்

விளி (=இற, குறை, குற்றம், வருந்து) + ஓம்பு (=செய்) + அம் = விளோம்பம் >>> விலோமம் = இறந்தவர்கள் செய்த குற்றங்களுக்காக வருத்தப்படும் இடம்.

விலோலம்

மனசஞ்சலம்

மூளோலம்

மூளை (=மனம்) + ஓலம் (=புலம்பல்) = மூளோலம் >>> மிலோலம் >>> விலோலம் = மனதின் புலம்பல்.

விவகாரம்

தருக்கம், விவாதம்

வீவாக்காரம்

வீ (=மாறு, எதிர்) + வாக்கு (=பேச்சு) + ஆர் (=மிகுதி) + அம் = வீவாக்காரம் >>> விவகாரம் = மிகவும் மாறுபட்டு / எதிர்த்துப் பேசுதல்

விவகாரம்

வழக்கு

வீவாக்காரம்

வீ (=எதிர்) + வாக்கு (=பேச்சு, சொல்) + ஆர் (=கட்டு, வழங்கு) + அம் = வீவாக்காரம் >>> விவகாரம் = எதிராகக் கட்டி வழங்கப்படும் சொல்.

விவகலனம், விவகலிதம்

கழித்தல்

வீபகலணம்

வீ (=நீக்கு) + பகல் (=பிரிவு) + அணம் = வீபகலணம் >>> விவகலனம் = பிரித்து நீக்குதல். = கழித்தல்.

விவசம்

பரவசம்

வீவசம்

வீ (=இன்மை) + வசம் = வீவசம் >>> விவசம் = தன்வசம் இன்மை.

விவசாயம்

வேளாண்மை

மீபசாயம்

மீ (=மிகுதி) + பசுமை + ஆயம் (=வருமானம்) = மீபசாயம் >>> விவசாயம் = மிகுதியான பசுமை வருமானம் தருவது = வேளாண்மை.

விவட்சை

பேசுவதற்கான விருப்பம்

விம்மசை

விம்மம் (=விருப்பம்) + அசை (=சொல், பேசு) = விம்மசை >>> விவச்சை >>> விவட்சை = பேசுவதற்கான விருப்பம்

விவட்சை

உணர்த்தும் கருத்து

பூவாயை

பூ (=பெறு) + ஆய் (=கருது) + ஐ = பூவாயை >>> பிவச்சை >>> விவட்சை = பெறப்படும் கருத்து

விவத்தை

ஆபத்து

வீவதை

வீ (=அழிவு) + வதை (=கேடு, துன்பம்) = வீவதை >>> விவத்தை = அழிவைத் தரும் துன்பம் = ஆபத்து.

விவத்தை, விவச்தை

நல்லொழுக்கம்

மீபந்தை

மீ (=மேன்மை) + பந்தி (=ஒழுக்கம்) + ஐ = மீபந்தை >>> விவத்தை >>> விவச்தை = மேன்மையான ஒழுக்கம் = நல்லொழுக்கம்.

விவத்தை, விவச்தை

முடிவு செய்தல்

வீவாற்றை

வீவு (=முடிவு) + ஆற்று (=செய்) + ஐ = வீவாற்றை >>> விவத்தை >>> விவச்தை = முடிவு செய்தல்.

விவதானம்

தடை, தடுப்பு

வீமறணம்

வீ (=எதிர்) + மறி (=தடு) + அணம் = வீமறணம் >>> விவதானம் = எதிர்த்துத் தடுத்தல்

விவதானம்

மேல் மறைப்பு

மீமறணம்

மீ (=மேல்) + மறை + அணம் = மீமறணம் >>> விவதானம் = மேலே மறைத்தல்

விவர்த்தகம், விவர்த்தம்

உண்மைப் பொருள் மாறு

வீவருத்தாக்கம்

வீவு (=மாறு) + அருத்தம் (=பொருள்) + ஆக்கம் (=உண்மை) = வீவருத்தாக்கம் >>> விவர்த்தகம் = உண்மையான பொருள் மாறுதல்.

விவர்த்தம், விவர்த்தனம்

மிகுசுழற்சி

மீபரிதம்

மீ (=மிகுதி) + பரிதி (=வட்டம், சுற்று) + அம் = மீபரிதம் >>> விவர்த்தம் = மிகுசுழற்சி

விவரணம், விவரம்

விளக்கம்

மீவாரணம்

மீ (=மிகுதி) + வாரி (=சொல், கூறு) + அணம் = மீவாரணம் >>> விவரணம் = மிகுதியான கூற்று = விளக்கம்

விவரம்

ஓட்டை, இடைவெளி

வீவாரம்

வீவு (=நீக்கம், இன்மை) + ஆர் (=நிறைவு) + அம் = வீவாரம் >>> விவரம் = நிறைவு இல்லாதது = ஓட்டை, பொந்து, இடைவெளி

விவரம்

மலைக்குகை

வீவரம்

வீ (=பிரி, பிள) + வரை (=மலை) + அம் = வீவரம் >>> விவரம் = மலைப் பிளவு

விவரம்

கூர்மையான பகுத்தறிவு

வைபரம்

வை (=கூர்மை) + பரி (=பகுத்தறி) + அம் = வைபரம் >>> விபரம் = கூர்மையான பகுத்தறிவு.

விவரி

விளக்கு

விவரி

விவரம் (=விளக்கம்) >>> விவரி = விளக்கு

விவரிதம், விபரீதம்

மாறுபாடு

வீவாரிதம்

வீவு (=இன்மை) + ஆர் (=பொருந்து) + இதம் = வீவாரிதம் >>> விவரிதம் >>> விபரீதம் = பொருத்தம் இன்மை = மாறுபாடு.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.