சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
அம்பகம் |
கண் |
அம்பாகம் |
அம் (=ஒளி, பொருந்து) + பாகம் (=உறுப்பு) = அம்பாகம் >>> அம்பகம் = ஒளி பொருந்திய உறுப்பு. |
அம்பகம் |
செம்பு |
ஆம்பகம் |
ஆம்பி (=பாத்திரம்) + அகை (=தீ, ஒளிர்) + அம் = ஆம்பகம் >>> அம்பகம் = தீயைப் போல் ஒளிரும் பாத்திரம். |
அம்பகம் |
எழுச்சி |
எம்பகம் |
எம்பு (=உயர், எழு) + அகம் = எம்பகம் >>> அம்பகம் = எழுச்சி |
அம்பகம் |
உத்தரவு |
ஏவாக்கம் |
ஏவு + ஆக்கம் (=சொல்) = ஏவாக்கம் >>> அபாக்கம் >>> அம்பகம் = ஏவுகின்ற சொல். |
அம்பட்டன் |
நாவிதன் |
அம்வட்டன் |
அம் (=அழகு) + வடி (=மயிர், திருத்து, அலங்கரி) + அன் = அம்வட்டன் >>> அம்பட்டன் = மயிரைத் திருத்தி அழகாக அலங்கரிப்பவர். |
அம்பணம் |
அளவுப் பாத்திரம் |
ஆம்பணம் |
ஆம்பி (=பாத்திரம்) + அணி (=எல்லை, அளவு) + அம் = ஆம்பணம் >>> அம்பணம் = அளவுப் பாத்திரம். |
அம்பர் |
ஒளிவீசும் பிசின் |
அப்பார் |
அப்பு (=பூசு, ஒட்டு) + ஆர் (=ஒளி, மிகுதி) = அப்பார் >>> அம்பர் = ஒளிமிக்க ஒட்டும் பொருள். |
அம்பரம் |
ஆகாயம் |
அவ்வாரம் |
அவம் (=இன்மை, வெளி) + ஆர் (=நிறைவு) + அம் = அவ்வாரம் >>> அம்பரம் = நிறைந்த வெளி. |
அம்பரம் |
ஆடை |
ஆப்பாரம் |
ஆப்பு (=உடல்) + ஆர் (=நிறை, அணி) + அம் = ஆப்பாரம் >>> அம்பரம் = உடலில் நிறைவாக அணிவது. |
அம்பரம் |
திசை |
அம்மாறம் |
அமை (=தீர்மானி) + ஆறு (=வழி) + அம் = அம்மாறம் >>> அம்பரம் = வழியைத் தீர்மானிப்பது. |
அம்பரம் |
கடல் |
அம்மாரம் |
அம் (=நீர்) + ஆர் (=நிறை) + அம் = அம்மாரம் >>> அம்பரம் = நீர் நிறைந்தது = கடல். |
அம்பரம் |
படுக்குமிடம் |
அம்மறம் |
அமை (=அடங்கு, ஓய், தங்கு) + அறை (=இடம்) + அம் = அம்மறம் >>> அம்பரம் = தங்கி ஓய்வெடுக்கும் இடம். |
அம்பலம் |
பொதுச்சபை, மக்கள் கூட்டம் |
அம்மளம், அவ்வாளம் |
(1) அமை (=நெருங்கு, கூடு, திரள்) + அளம் (=இடம்) = அம்மளம் >>> அம்பலம் = திரளும் / கூடும் இடம். (2) அவை (=கூட்டம்) + ஆள் (=மக்கள்) + அம் = அவ்வாளம் >>> அம்பலம் = மக்கள் கூட்டம். |
அம்பலி |
பறை வகை |
ஆம்பலி |
ஆம்பி (=ஒலி) + அலை (=அடி) + இ = ஆம்பலி >>> அம்பலி = அடித்து ஒலிக்கப்படுவது. |
அம்பலி |
கஞ்சி |
அம்பலி |
அம் (=நீர்) + பலி (=மிகு, சோறு) = அம்பலி = நீர் மிகுந்த சோறு. |
அம்பலி |
பசை |
அப்பளி |
அப்பு (=பூசு, ஒட்டு) + அளி (=குழை) = அப்பளி >>> அம்பலி = ஒட்டுகின்ற குழைவான பொருள். |
அம்பலி |
வெள்ளைக் கரு |
அம்பாளி |
அம் (=ஒளி, வெண்மை) + பாளை (=கரு) + இ = அம்பாளி >>> அம்பலி = வெள்ளைக் கரு |
அம்பா |
தாய் |
அம்மா |
அம்மா (=தாய்) >>> அம்பா |
அம்பாயம் |
பிரசவ வேதனை |
ஆய்பயம் |
ஆய் (=வருந்து) + பய (=ஈனு, பெற்றெடு) + அம் = ஆய்பயம் >>> அப்பாயம் >>> அம்பாயம் = ஈனும்போது உண்டாகும் வருத்தம். |
அம்பாரம் |
நெற்குவியல் |
அம்மரம் |
அமை (=நெருங்கு, திரள், குவி) + அரி (=நெல்) + அம் = அம்மரம் >>> அம்பாரம் = நெற்குவியல். |
அம்பாரம் |
உணவுக் களஞ்சியம் |
அம்மாரம் |
அமை (=நெருங்கு, திரள், குவி) + ஆர் (=உண்ணு, இடம்) + அம் = அம்மாரம் >>> அம்பாரம் = உணவைக் குவித்து வைக்கும் இடம். |
அம்பாரி |
யானை மேலிருந்து போர்புரியும் இடம் |
அப்பாரி |
அப்பு (=யானை) + ஆர் (=பொருந்து, அமர், போர்புரி, இடம்) + இ = அப்பாரி >>> அம்பாரி = யானைமேல் அமர்ந்து போர்புரியும் இடம். |
அம்பி |
மரக்கலம் |
அம்மீ |
அம் (=நீர்) + ஈ (=வகு, கிழி) = அம்மீ >>> அம்பி = நீரைக் கிழிப்பது. |
அம்பி |
கள், போதைப் பொருள் |
ஏமீ |
ஏமம் (=களிப்பு, மயக்கம்) + ஈ (=கொடு) = ஏமீ >>> அம்மி >>> அம்பி = களிப்பும் மயக்கமும் தருவது. |
அம்பிலி |
வெள்ளைக் கரு |
அம்பீளி |
அம் (=ஒளி, வெண்மை) + பீள் (=கரு) + இ = அம்பீளி >>> அம்பிலி = வெள்ளைக் கரு |
அம்பு |
நீர், கடல் |
அம் |
அம் (=நீர்) + உ = அம்மு >>> அம்பு = நீருடையது. |
அம்பு |
மேகம் |
அம்பூ |
அம் (=நீர்) + பூ (=படை) = அம்பூ >>> அம்பு = நீரைப் படைப்பது |
அம்பு |
பூமி, உலகம் |
அம்மு |
அமை (=படை, பொறு, தாங்கு) + உ = அம்மு >>> அம்பு = படைப்புகளைத் தாங்குவது. |
அம்புயம், அம்புசம், அம்புச^ம் |
தாமரை |
அவ்வூழம் |
அவி (=அழி, இல்லாகு) + ஊழ் (=சூரியன், வெயில், மலர், மூடு) + அம் (=நீர்) = அவ்வூழம் >>> அம்புயம் >>> அம்புசம் >>> அம்புச^ம் = சூரியன் / வெயில் இல்லாவிட்டால் மூடிக்கொள்ளும் நீர்ப்பூ. |
அம்புசாதம், அம்புசா^தம் |
தாமரை |
அம்மூழற்றம் |
அம் (=நீர்) + ஊழ் (=சூரியன், வெயில், மலர், மூடு) + அற்றம் (=இன்மை) = அம்மூழற்றம் >>> அம்பூசத்தம் >>> அம்புசாதம் >>> அம்புசா^தம் = சூரியன் / வெயில் இல்லாவிட்டால் மூடிக்கொள்ளும் நீர்ப்பூ. |
அம்புதம் |
மேகம் |
அம்மூற்றம் |
அம் (=நீர்) + ஊற்று (=சொரி, பொழி) + அம் = அம்மூற்றம் >>> அம்பூத்தம் >>> அம்புதம் = நீரைப் பொழிவது. |
அம்புதி, அம்போதி |
கடல் |
அம்முந்தி |
அம் (=நீர்) + உந்து (=பெருகு, மிகு) + இ = அம்முந்தி >>> அம்புத்தி >>> அம்புதி = மிகுதியான நீரைக் கொண்டது. |
அம்புலி |
சந்திரன் |
அம்மொளி |
அம் (=அழகு, வெண்மை, சுகம்) + ஒளி = அம்மொளி >>> அம்பொளி >>> அம்புலி = சுகந்தரும் அழகிய வெள்ளொளி கொண்டவன்.. |
அம்போருகம் |
தாமரை |
அம்முறுக்கம் |
அம் (=நீர்) + முறி (=பூ) + உக்கம் (=தீ) = அம்முறுக்கம் >>> அம்புருகம் >>> அம்போருகம் = தீ வண்ண நீர்ப்பூ. |
அம்மணம், அமணம்,அமண் |
நிர்வாணம் |
அவ்வணம் |
அவி (=அழி, இல்லாகு) + அணி (=ஆடை, உடு) + அம் = அவ்வணம் >>> அம்மணம் = ஆடை உடுத்தி இல்லாமை. |
அம்மணம் |
இழிசொல், அவமானம் |
அவ்வாணம் |
அவி (=அழி) + ஆணி (=மேன்மை, பெருமை) + அம் (=சொல்) = அவ்வாணம் >>> அம்மணம் = பெருமையை அழிக்கும் சொல். |
அம்மியம் |
கள் |
அம்மையம் |
அம் (=நீர்) + மையா (=மயங்கு) + அம் (=உணவு) = அம்மையம் >>> அம்மியம் = மயங்கச் செய்யும் நீருணவு. |
அமங்கலம் |
தீமை |
அமாக்கலம், அமைக்கலம் |
(1) அமை (=பொருந்து) + ஆக்கம் (=நன்மை) + அல் (=எதிர்மறை) + அம் = அமாக்கலம் >>> அமங்கலம் = நன்மை பொருந்தாதது. (2) அமை (=பொருந்து) + கலி (=துன்பம், வறுமை) + அம் = அமைக்கலம் >>> அமங்கலம் = துன்பமும் வறுமையும் பொருந்தியது. |
அமங்கலி, அமங்கலை |
விதவை |
அவைக்கலி |
அவை (=சிதை) + கலி (=செழிப்பு, மகிழ்ச்சி) = அவைக்கலி >>> அவக்கலி >>> அமங்கலி = செழிப்பும் மகிழ்ச்சியும் சிதைவுற்றவள். |
அமஞ்சி |
வீண் |
அவ்வாயி |
அவி (=அழி, இல்லாகு) + ஆயம் (=வருமானம், பயன்) + இ = அவ்வாயி >>> அம்மாசி >>> அமஞ்சி = பயன் இல்லாதது. |
அமஞ்சி, அமிஞ்சி |
சம்பளம் இல்லாமை |
அவ்வாயி |
அவி (=அழி, இல்லாகு) + ஆயம் (=வருமானம், சம்பளம்) + இ = அவ்வாயி >>> அம்மாசி >>> அமஞ்சி = சம்பளம் இல்லாமை. |
அமர், சமர் |
போர் |
அவார் |
அவி (=அழி) + ஆர் (=பொருந்து, கூடு, ஆரவாரம்) = அவார் >>> அமர் >>> சமர் = ஆரவாரத்துடன் கூடி அழித்தல். |
அமர் |
போர்க்களம் |
அவார் |
அவி (=அழி) + ஆர் (=பொருந்து, கூடு, ஆரவாரம், இடம்) = அவார் >>> அமர் >>> சமர் = ஆரவாரத்துடன் கூடி அழிக்கும் இடம். |
அமர் |
மிகுதி |
அமர் |
அமர் (=பெருகு, மிகு) >>> அமர் = மிகுதி. |
அமர் |
மாறுபாடு, பகை |
அவார் |
அவி (=அழி, இல்லாகு) + ஆர் (=பொருந்து, உடன்படு) = அவார் >>> அமர் = உடன்பாடு இல்லாமை = பகை, மாறுபாடு. |
அமர்த்தன் |
திறமை அற்றவன் |
ஏமறுதன் |
ஏமம் (=வலிமை, திறமை) + அறுதி (=இன்மை) + அன் = ஏமறுதன் >>> அமர்த்தன் = திறமை இல்லாதவன் |
அமரகம் |
போர்க்களம் |
அமரகம் |
அமர் (=போர்) + அகம் (=இடம்) = அமரகம் = போர் செய்யும் இடம். |
அமரம் |
துடுப்பு |
அம்பாரம் |
அம்பி (=படகு) + ஆர் (=பரவச்செய், தண்டு) + அம் = அம்பாரம் >>> அம்மரம் >>> அமரம் = படகைப் பரவச்செய்யும் தண்டு |
அமரர் |
வானவர் |
அம்பரர் |
அம்பரம் (=வானம்) + அர் = அம்பரர் >>> அம்மரர் >>> அமரர் = வானவர் |
அமரி |
கற்றாழை |
அமறி |
அம் (=ஒளி, நீர்) + அறு (=வெட்டு, செல், ஒழுகு) + இ = அமறி >>> அமரி = வெட்டினால் ஒளிரும் நீர் ஒழுகுவது. |
அமரி |
அமிர்தம், சாவா மருந்து |
அவறீ |
அவி (=அழி, இற, உணவு) + அறு (=இல்லாகு) + ஈ (=தா) = அவறீ >>> அமரி = இறப்பைத் தராத உணவு. |
அமரி |
சிறுநீர் |
அமரி |
அம் (=நீர்) + அரி (=இடைவிடு, நீக்கு, கழி) = அமரி = இடைவிட்டுக் கழிக்கப்படும் நீர். |
அமல் |
அதிகாரம் |
ஏமாள் |
ஏமம் (= வலிமை) + ஆள் = ஏமாள் >>> அமல் = ஆளும் வலிமை. |
அமலகம் |
நெல்லிக்கனி |
அம்பலகம் |
அம் (=இனிமை, நீர், ஒளி) + பலம் (=கனி, வட்டம்) + அகம் = அம்பலகம் >>> அம்மலகம் >>> அமலகம் = இனியநீரை அகத்தே கொண்ட ஒளியுடைய வட்டமான கனி. |
அமலம் |
தூய்மை |
அமளம் |
அம் (=அழகு) + அளி (=கொடு) + அம் = அமளம் >>> அமலம் = அழகைத் தருவது. |
அமாத்தியன் |
மந்திரி |
அமாத்தியன் |
அமை (=பொருந்து, நெருங்கு) + ஆதி (=தலைவன், அரசன்) + இயம் (=சொல், வழி) + அன் = அமாத்தியன் = அரசனை நெருங்கிப் பொருத்தமான வழியைச் சொல்பவன். |
அமார்க்கம் |
பொருந்தாத வழி |
அம்மாறுக்கம் |
அமை (=பொருந்து) + ஆறு (=வழி) + உகு (=கெடு, இல்லாகு) + அம் = அம்மாறுக்கம் >>> அமார்க்கம் = பொருத்தம் இல்லாத வழி. |
அமாவாசை, அமாவாசி |
ஒளி இல்லாத இரவு |
யாமவாயை |
(2) யாமம் (=இரவு) + அவி (=அழி, இல்லாகு) + ஆய் (=ஒளி) + ஐ = யாமவாயை >>> அமாவாசை = ஒளி அவிந்த / இல்லாத இரவு. |
அமானத்து |
ஒப்படைத்த பொருள் |
ஏமாணாற்று |
ஏமம் (=பத்திரம்) + ஆணம் (=பொருள்) + ஆற்று (=கொடு) = ஏமாணாற்று >>> அமானத்து = பத்திரமாகக் கொடுத்த பொருள். |
அமானம் |
அளவின்மை |
அவணம் |
அவி (=அழி, இல்லாகு) + அணை (=கரை, எல்லை) + அம் = அவணம் >>> அமானம் = எல்லை இன்மை.. |
அமானி |
சேமநிதிப் பொருள் / நிலம் |
ஏமணி |
ஏமம் (=சேமநிதி) + ஆணம் (=பொருள், நிலம்) + இ = ஏமாணி >>> அமானி = சேமநிதிப் பொருள் / நிலம். |
அமானி |
அளவற்றது |
அவணி |
அவி (=அழி, இல்லாகு) + அணை (=கரை, எல்லை) + இ = அவணி >>> அமானி = எல்லை அற்றது. |
அமிசம், அம்சம் |
பாகம், பங்கு |
அவியம் |
(2) அவி (=நீக்கு, குறை, வெட்டு) + அம் = அவியம் >>> அமிசம் >>> அம்சம் = வெட்டப்பட்டது = பாகம். |
அமிசை |
விதி |
அமையை |
அமை (=விதி) + ஐ = அமையை >>> அமிசை |
அமித்திரன் |
பகைவன் |
அவிற்றீரன் |
அவி (=அழி, இல்லாகு) + இறு (=தங்கு, பொருந்து) + ஈரம் (=அன்பு) + அன் = அவிற்றீரன் >>> அமித்திரன் = பொருந்தும் அன்பில்லாதவன். |
அமிதம் |
எல்லையற்றது |
அவீறம் |
அவி (=அழி, இல்லாகு) + ஈறு (=எல்லை) + அம் = அவீறம் >>> அமிதம் = எல்லை அற்றது. |
அமிர்தம் |
மரணம் இல்லாமை |
அவிறிதம் |
அவி (=அழி, இல்லாகு) + இற (=சாவு) + இதம் = அவிறிதம் >>> அமிரிதம் >>> அமிர்தம் = இறப்பு இல்லாமை. |
அமிர்தம், அமிருதம் |
சாவா மருந்து |
அவிறிறம் |
அவி (=இல்லாகு, உணவு) + இற (=சாவு) + இறு (=கொடு) + அம் = அவிறிறம் >>> அமிரிதம் >>> அமிர்தம் = சாவைத் தராத உணவு. |
அமிர்தம், அமிர்து |
தாய்ப்பால், பால், உணவு |
அமீரிறம் |
அம்மை (=தாய்) + ஈரம் (=அன்பு) + இறு (=கொடு) + அம் (=உணவு) = அமீரிறம் >>> அமிர்தம் = தாய் அன்புடன் கொடுக்கும் உணவு. |
அமிரம் |
மிளகு |
ஆய்வீறம் |
ஆய் (=சிறுமை) + வீறு (=விதை, காரம், மிகுதி) + அம் (=உணவு) = ஆய்வீறம் >>> அவ்விரம் >>> அமிரம் = காரமிக்க சிறு விதையுணவு. |
அமிழ்தம், அமிழ்து |
சாவா மருந்து |
அவிழிதம் |
அவி (=இல்லாகு, உணவு) + இழ (=சாகக்கொடு) + இதம் (=நன்மை) = அவிழிதம் >>> அமிழ்தம் = சாவைக் கொடுக்காத நல்லுணவு. |
அமிழ்தம், அமிழ்து |
இனிய உணவு, பால், தேன் |
அவிழிதம் |
அவிழ் (=உணவு) + இதம் (=இனிமை) = அவிழிதம் >>> அமிழ்தம் = இனிமையான உணவு = பால், தேன். |
அமீர் |
ஆணையிடும் தலைவன் |
அம்மிறை |
அம் (=சொல்) + இறை (=கட்டளை, தலைவன்) = அம்மிறை >>> அமீர் = கட்டளை கூறும் தலைவன். |
அமின், அமீன், அமீனா |
வரிப்பணம் வாங்க வருபவன் |
ஆயமுன் |
ஆயம் (=வரிப்பணம்) + முன் (=அணுகு, முன்னில்) = ஆயமுன் >>> அம்முன் >>> அமின் = வரிப்பணத்திற்காக அணுகி முன்னிற்பவன். |
அமுதம், அமுது |
சாவா மருந்து |
அவ்விறம் |
அவி (=இல்லாகு, உணவு) + இறு (=அழி, சாவு, கொடு) + அம் = அவ்விறம் >>> அம்மிதம் >>> அமுதம் = சாவைத் தாராத உணவு. |
அமுதம், அமுது |
பால், தேன், தயிர் |
அமிதம் |
அம் (=உணவு) + இதம் (=இனிமை, நன்மை) = அமிதம் >>> அமுதம் = இனிமையான நல் உணவு. |
அமுதம், அமுது |
உப்பு |
அமிறம் |
அம் (=உணவு, இனிமை, வெண்மை) + இறு (=கொடு) + அம் = அமிறம் >>> அமுதம் = உணவுக்கு இனிமை தரும் வெண்ணிற உண்பொருள். |
அமுதம், அமுது |
மழை, நீர் |
அம்புதம் |
அம்பு (=மேகம்) + உதி (=பிற) + அம் = அம்புதம் >>> அம்முதம் >>> அமுதம் = மேகத்தில் பிறப்பது = மழை, நீர். |
அமுதம் |
தன்மை |
அமிறம் |
அமை (=தகுதியாகு) + இறு (=தங்கு, முடி) + அம் = அமிறம் >>> அமுதம் = முடிவாகத் தங்கிய தகுதி. |
அமுதம் |
முத்தி, மரணம் |
ஆவிறம் |
ஆவி (=உயிர்) + இறு (=முடிவுறு) + அம் = ஆவிறம் >>> அமிதம் >>> அமுதம் = உயிரின் முடிவு. |
அமுந்திரி |
அரிசி |
அமுதிறி |
அமுது (=சோறு) + இறு (=கொடு) + இ = அமுதிறி >>> அமுந்திரி = சோற்றைக் கொடுப்பது = அரிசி. |
அமுரி |
சிறுநீர் |
அமூறி |
அம் (=நீர்) + ஊறு (=உடல், பெருகு, கேடு) + இ = அமூறி >>> அமுரி = உடலில் பெருகும் கெட்ட நீர். |
அமூர்த்தம் |
உருவமற்றது |
அவுரிதம் |
அவி (=அழி, இல்லாகு) + உரு (=உருவம்) + இதம் = அவுரிதம் >>> அமுரித்தம் >>> அமூர்த்தம் = உருவம் இல்லாதது. |
அமூலம் |
அடிப்படை இல்லாதது |
அவ்வுளம் |
அவி (=அழி, இல்லாகு) + உள் (=அடிப்படை) + அம் = அவ்வுளம் >>> அம்முலம் >>> அமூலம் = அடிப்படை இல்லாதது. |
அமேத்தியம் |
மலம் |
அம்வேற்றியம் |
அம் (=உணவு) + வேறு (=பிரிந்தது, தீங்கு, கேடு) + இழி (=விழு, வெளிப்படு) + அம் = அம்வேற்றியம் >>> அவ்வேத்தியம் >>> அமேத்தியம் = உணவில் இருந்து பிரிந்து வெளிப்பட்டு விழுகின்ற கெட்ட பொருள். . |
அமேயம் |
அளவற்றது |
அவ்வேயம் |
அவி (=அழி, இல்லாகு) + ஏ (=அடுக்கு, எல்லை) + அம் = அவ்வேயம் >>> அமேயம் = எல்லை இல்லாதது. |
அமோகம் |
குறி தவறாமை |
அவோக்கம் |
அவி (=கெடு, தவறு) + ஓக்கு (=செலுத்து, எய்) + அம் = அவோக்கம் >>> அமோகம் = எய்வு தவறாமை. |
அமோகம் |
மிகுதி, நிறைவு |
அமோங்கம் |
அமை (=நிறை) + ஓங்கு (=பெருகு) + அம் = அமோங்கம் >>> அமோகம் = நிறைவான பெருக்கம். |
அய்யன், ஐயன் |
தந்தை |
ஐ |
ஐ (=தந்தை) + அன் = ஐயன் >>> அய்யன் |
அயகரம் |
மலைப்பாம்பு |
அழாகாரம் |
அழி (=கொல்) + ஆகம் (=உடல்) + ஆர் (=கட்டு, உண்) + அம் = அழாகாரம் >>> அயகரம் = உடலைக் கட்டிக் கொன்று உண்பது. |
அயசு |
இரும்பு |
ஆயழு |
ஆய் (=வலிமை) + அழி (=உருகு) + உ = ஆயழு >>> அயசு = வலிமையான உருக்கு = இரும்பு. |
அயம் |
இரும்பு |
ஆயம் |
ஆய் (=வலிமை) + அம் = ஆயம் >>> அயம் = வலிமையானது. |
அயணம் |
செலவு, போக்கு |
ஆயணம் |
(2) ஆய் (=அசை, செல்) + அணம் = ஆயணம் >>> அயணம் = செலவு |
அயம் |
நீர் |
அழம் |
அழி (=நெகிழ், நீங்கு, செல்) + அம் = அழம் >>> அயம் = செல்லக்கூடிய நெகிழ்வான பொருள். |
அயம் |
குளம் |
அழம் |
அழி (=மிகுதி) + அம் (=நீர்) = அழம் >>> அயம் = நீர் மிக்கது. |
அயம் |
பள்ளம், நிலம் |
ஆழம் |
ஆழி (=தோண்டு) + அம் = ஆழம் >>> அயம் = தோண்டப்பட்டது. |
அயம் |
சேறு |
ஆழம் |
ஆழ் (=ஆழ்த்து, உள்ளிழு) + அம் = ஆழம் >>> அயம் = உள்ளிழுத்து ஆழ்த்தக் கூடியது. |
அயம், அசம் |
ஆடு |
ஆயம் |
ஆய் (=வெட்டு, கொண்டாடு) + அம் (=கும்பிடு, உண்) = ஆயம் >>> அயம் >>> அசம் = கொண்டாட்டத்தில் கும்பிட்டு வெட்டி உண்ணப்படுவது. |
அயம் |
விழா |
ஆயம் |
ஆய் (=கொண்டாடு) + அம் = ஆயம் >>> அயம் = கொண்டாடப்படுவது |
அயம் |
இரும்புத் தூள் |
ஆயம் |
ஆய் (=வலிமை, நுண்மை) + அம் = ஆயம் >>> அயம் = வலிமையும் நுண்மையும் கொண்டவை. |
அயம் |
குதிரை |
ஆயம் |
ஆய் (=விரைந்துபாய்) + அம் = ஆயம் >>> அயம் = விரைந்து பாய்வது |
அயமி |
வெண்கடுகு |
ஐயவி |
ஐயவி (=வெண்கடுகு) >>> அயமி |
அயவணம் |
ஒட்டகம் |
அயவெனம் |
அயம் (=நீர்) + வென் (=முதுகு) + அம் = அயவெனம் >>> அயவணம் = முதுகில் நீரைச் சேமிப்பதாகக் கருதப்படும் விலங்கு. |
அயன் |
நிலம் |
அயம் |
அயம் (=நிலம்) >>> அயன் |
அயனம் |
வழி |
ஆயாணம் |
ஆய் (=அசை, செல்) + ஆணம் (=இடம்) = ஆயாணம் >>> அயனம் = செல்லும் இடம். |
அயனம் |
ஆண்டின் பாதி |
ஆயணவம் |
ஆயு (=காலம், ஆண்டு) + அணவு (=நடு, பாதி) + அம் = ஆயணவம் >>> அயனமம் >>> அயனம் = ஆண்டின் பாதி. |
அயிக்கம் |
ஒற்றுமை |
அழிக்கம் |
அழி (=இல்லாகு) + இக (=நீங்கு, பிரி) + அம் = அழிக்கம் >>> அயிக்கம் = பிரிவு இன்மை. |
அயிங்கிசை |
கொல்லாமை, துன்புறுத்தாமை |
அழிக்கிழை |
அழி (=இல்லாகு) + இகு (=அடி, கொல்) + இழை (=செய்) = அழிக்கிழை >>> அயிங்கிசை = அடித்தல், கொல்லுதல் செய்யாமை. |
அயிசுவரியம், ஐசுவரியம் |
செல்வம், தங்க நகைகள் |
ஆயிழிவரியம் |
ஆயம் (=பொன்) + இழை (=அணி) + இவர் (=செறி, மிகு) + இயம் = ஆயிழிவரியம் >>> அயிசுவரியம் >>> ஐசுவரியம் = மிக்க தங்கநகைகள். |
அயிஞ்சை, அயிம்சை |
வருத்துதல் செய்யாமை |
ஆயிழை |
ஆய் (=வருத்து, நீங்கு, இல்லாகு) + இழை (=செய்) = ஆயிழை >>> அயிசை >>> அயிஞ்சை = வருத்துதல் செய்யாமை. |
அயிதம் |
தீங்கு, கேடு |
ஆயிறம் |
ஆய் (=வருத்து) + இறு (=அழி) + அம் = ஆயிறம் >>> அயிதம் = வருத்தி அழிப்பது. |
ஆயிந்தா, அயிந்தா |
எதிர்காலம், வரும் சமயம் |
ஆயிற்றா |
ஆய் (=கணி, எதிர்பார்) + இறை (=காலம்) + ஆ = ஆயிற்றா >>> ஆயித்தா >>> ஆயிந்தா >>> அயிந்தா = எதிர்பார்க்கும் காலம். |
அயிந்திரம், ஐந்திரம் |
கிழக்கு |
ஆயீத்திறம் |
ஆய் (=ஒளி) + ஈ (=படை, தோன்று) + திறம் (=திசை) = ஆயீத்திறம் >>> அயிந்திரம் >>> ஐந்திரம் = ஒளி தோன்றும் திசை. |
அயிமாசு |
சோதனை, சரிபார்ப்பு |
ஆய்மாசு |
ஆய் (=அறி) + மாசு (=குற்றம், பிழை) = ஆய்மாசு >>> அயிமாசு, அச்^மாச்~ = குற்றம் / பிழைகளை அறிதல். |
அயிராவணம், ஐராவணம் |
வெண்ணிற ஆண் யானை |
ஆயுரவானம் |
ஆய் (=அழகு, வெண்மை) + உரம் (=வலிமை) + ஆனை + அம் = ஆயுரவானம் >>> அயிராவணம் = வலிமைமிக்க வெள்ளை யானை. |
அயிராவதம், ஐராவதம் |
வெண்ணிற ஆண் யானை |
ஆயுரவத்தம் |
ஆய் (=அழகு, வெண்மை) + உரம் (=வலிமை) + அத்தி (=யானை) + அம் = ஆயுரவத்தம் >>> அயிராவதம் = வலிமைமிக்க வெள்ளை யானை. |
அயுத்தம் |
தகுதியின்மை |
அழுற்றம் |
அழி (=இல்லாகு) + உறை (=பொருந்து, தகு) + அம் = அழுற்றம் >>> அயுத்தம் = பொருத்தம் / தகுதி இன்மை. |
அயோக்கியம் |
ஓழுக்கம் இல்லாமை |
அழோழுக்கியம் |
அழி (=இல்லாகு) + ஒழுக்கு (=ஒழுக்கம்) + இயம் = அழோழுக்கியம் >>> அயோய்க்கியம் >>> அயோக்கியம் = ஒழுக்கம் இல்லாமை. |
அர்க்கன், அருக்கன் |
சூரியன் |
அருக்கன் |
அருக்கு (=காய்ச்சு, எரி) + அன் = அருக்கன் >>> அர்க்கன் = காய்ச்சுபவன் / எரிப்பவன். |
அர்க்கம், அருக்கம் |
செல்வம் |
ஆரிங்கம் |
ஆர் (=நிறை) + இங்கம் (=பொருள்) = ஆரிங்கம் >>> அருக்கம் >>> அர்க்கம் = நிறைவான பொருள். |
அர்க்கார், அர்க்காரி |
தூதுவன் |
அருக்கார் |
அருக்கு (=சமீபமாக்கு, சேர்த்துவை) + ஆர் (=ஒலி, சொல்) = அருக்கார் >>> அர்க்கார் = சொல்லால் சேர்த்து வைப்பவன். |
அர்க்கியம், அருக்கியம் |
வாழ்த்திச் சொரியும் நீர் |
அருக்கீயம் |
அருக்கு (=பாராட்டு, போற்று) + ஈ (=கொடு) + அம் (=நீர்) = அருக்கீயம் >>> அர்க்கியம் = போற்றிக் கொடுக்கப்படும் நீர். |
அருச்சி, அர்ச்சி |
புகழ்ந்து கூறு |
ஆரிச்சி |
ஆர் (=ஒலி, கூறு) + இசை (=புகழ்) + இ = ஆரிச்சி >>> அருச்சி = புகழ்ந்து கூறு. |
அருச்சனை, அர்ச்சனை |
போற்றி, புகழ்ந்து கூறுதல் |
ஆரிச்சணை |
(2) ஆரிச்சி (=புகழ்ந்து கூறு) + அணை = ஆரிச்சணை >>> அருச்சனை >>> அர்ச்சனை = புகழ்ந்து கூறுதல், துதி பாடுதல். |
அருச்சகர், அர்ச்சகர் |
புகழ்ந்து கூறுபவர் |
ஆரிச்சகர் |
ஆரிச்சி (=புகழ்ந்து கூறு) + அகர் = ஆரிச்சகர் >>> அருச்சகர் >>> அர்ச்சகர் = புகழ்ந்து கூறுபவர். |
அருச்சிதன், அர்ச்சிதன் |
புகழப்படுபவன் |
ஆரிச்சுறன் |
ஆரிச்சி (=புகழ்ந்து கூறு) + உறு (=பெறு) + அன் = ஆரிச்சுறன் >>> அருச்சுதன் >>> அர்ச்சிதன் = புகழ்ந்து கூறப் பெறுபவன். |
அருச்சை, அர்ச்சை |
தெய்வத் திருமேனி |
ஆரிச்சை |
ஆரிச்சி (=புகழ்ந்து கூறு) + ஐ = ஆரிச்சை >>> அருச்சை >>> அர்ச்சை = புகழ்ந்து கூறப்படுவது = தெய்வத் திருமேனி |
அருத்தம், அர்த்தம் |
பாதி |
அரிதம் |
அரை (=பாதி) + இதம் = அரிதம் >>> அருத்தம் >>> அர்த்தம் |
அருத்தம், அர்த்தம் |
கருத்து, சொற்பொருள் |
அருத்தம் |
அருத்து (=ஊட்டு, உணர்த்து) + அம் (=சொல்) = அருத்தம் >>> அர்த்தம் = சொல் ஊட்டுவது / உணர்த்துவது. |
அருத்தம், அர்த்தம் |
நுகர்பொருள் |
ஆருத்தம் |
ஆர் (=உண்ணு, நுகர்) + உத்து (=பெருக்கு) + அம் = ஆருத்தம் >>> அருத்தம் >>> அர்த்தம் = நுகர்வதற்காகப் பெருக்கப்படுபவை. |
அர்த்தி, அருத்தி |
பிச்சையெடு |
ஆருந்தீ |
ஆர் (=உண்ணு) + உந்து (=வெளிப்படுத்து, கூறு) + ஈ (=கொடு) = ஆருந்தீ >>> அருத்தி >>> அர்த்தி = உண்ணக் கொடு என்று கூறு. |
அர்ப்பணம், அருப்பணம் |
உரித்தாக்கிக் கொடுத்தல் |
ஆரீவணம் |
(2) ஆர் (=பொருத்து, உரித்தாக்கு) + ஈவு (=கொடு) + அணம் = ஆரீவணம் >>> அருப்பணம் >>> அர்ப்பணம் = உரித்தாக்கிக் கொடுத்தல். |
அர்ப்பணி, அருப்பணி |
உரித்தாக்கிக் கொடு |
அருப்பணி |
அருப்பணம் (=உரித்தாக்கிக் கொடுத்தல்) >>> அருப்பணி >>> அர்ப்பணி = உரித்தாக்கிக் கொடு. |
அர்ப்பிதம் |
உரிமையாகக் கொடுக்கப்பட்டது |
ஆர்ப்பிறம் |
ஆர்ப்பு (=பொருத்தம், உரிமை) + இறு (=கொடு, முடி) + அம் = ஆர்ப்பிறம் >>> அர்ப்பிதம் = உரிமையாகக் கொடுக்கப்பட்டது. |
அர்சி^ |
விண்ணப்பம் |
ஆரிசை |
ஆர் (=பொருந்து) + இசை (=உடன்படு, விரும்பு, கூறு) = ஆரிசை >>> அர்சி^ = விருப்பத்தை பொருந்தக் கூறுதல். |
அரக்கம் |
இரத்தம் |
அரக்கம் |
அரக்கு (=சிவப்பு) + அம் (=நீர்) = அரக்கம் = செந்நீர். |
அரக்கன் |
பெரிய உடலைக் கொண்டவன் |
ஆராக்கன் |
ஆர் (=நிறை, பெரிதாகு) + ஆகம் (=உடல்) + அன் = ஆராக்கன் >>> அரக்கன் = பெரிய உடலைக் கொண்டவன். |
அரக்கு |
சிவப்பு |
அரக்கு |
அரி (=நிறம்) + அகை (=எரி) + உ = அரக்கு = எரியின் நிறம். |
அரக்கு |
கள்ளின் வகை |
அரக்கு |
அரி (=கள்) + அகை (=பிரிவு, வகை) + உ = அரக்கு = கள்ளின் வகை |
அரங்கணி |
வற்றிய கிணறு |
அறைக்கேணி |
அறை (=இன்மை, வறுமை) + கேணி = அறைக்கேணி >>> அரங்கேணி >>> அரங்கணி = வற்றிய கிணறு. |
அரங்கம், அரங்கு |
போர்க்களம் |
ஆரகம் |
ஆர் (=போர்புரி) + அகம் (=இடம்) = ஆரகம் >>> அரங்கம் = போர் செய்யும் இடம். |
அரங்கம், அரங்கு |
வேடமிட்டுப் பேசும் இடம் |
ஆரகம் |
ஆர் (=ஒப்பு, அணி, பேசு) + அகம் (=இடம்) = ஆரகம் >>> அரங்கம் = ஒப்ப அணிந்து பேசும் இடம். |
அரங்கம், அரங்கு |
மேடை, திடல், ஆற்றிடைக்குறை |
ஏறகம் |
ஏறு (=உயர்) + அகம் (=இடம்) = ஏறகம் >>> அரகம் >>> அரங்கம் = உயர்ந்த இடம் = மேடை, திண்ணை, ஆற்றிடைக்குறை. |
அரங்கம், அரங்கு |
சபை |
ஆரகம் |
ஆர் (=பொருந்து, கூடு) + அகம் (=இடம்) = ஆரகம் >>> அரங்கம் = கூடும் இடம் = அவை. |
அரங்கம், அரங்கு |
வஞ்சனை |
ஆரகம் |
ஆர் (=மறை) + அகம் (=எண்ணம்) = ஆரகம் >>> அரங்கம் = எண்ணத்தை மறைத்தல். |
அரங்கம், அரங்கு |
கரு, கருப்பம் |
ஆரகம் |
ஆர் (=தங்கு, நிறை, வளர்) + அகம் (=உள், வயிறு, உயிர்) = ஆரகம் >>> அரங்கம் = வயிற்றுக்குள் தங்கி வளரும் உயிர். |
அரசம் |
மகிழ்ச்சி / இனிமையின்மை |
அறாயம் |
அறு (=இல்லாகு) + ஆய் (=மகிழ், இனி) + அம் = அறாயம் >>> அரசம் = மகிழ்ச்சி / இனிமை இன்மை. |
அரசு |
ஆட்சி |
அரசு |
ஆர் (=பூமி, நிலம்) + அசை (=கட்டு, ஆள்) + உ = அரசு = நிலத்தை ஆளுதல். |
அரசோனம் |
வெள்ளைப்பூடு |
எராயொனம் |
எரி (=காரம்) + ஆய் (=வெண்மை, பிரிவு) + ஒன் (=பொருந்து) + அம் (=உணவு) = எராயொனம் >>> அரசோனம் = பல பிரிவுகள் பொருந்திய காரமான வெண்ணிற உணவுப் பொருள். |
அரணம், அரண் |
கோட்டைமதில், வேலி, காவல் |
அரணம் |
ஆர் (=கட்டு) + அணை (=சூழ், தடை) + அம் = அரணம் = சூழ்ந்து கட்டப்பட்ட தடை. |
அரணம் |
கவசம் |
ஆராணம் |
ஆர் (=கட்டு, மறை) + ஆணம் (=உடல், மார்பு) = ஆராணம் >>> அரணம் = மறைப்பதற்காக மார்பில் கட்டப்படுவது. |
அரணம் |
கட்டில் |
அரணம் |
ஆர் (=இடம்) + அணை (=படு) + அம் = அரணம் = படுக்குமிடம் |
அரணம் |
வேல் |
எறாணம் |
எறி (=கொல், வீசு) + ஆணம் (=வலிமை, பொருள்) = எறாணம் >>> அரணம் = கொல்வதற்காக வீசப்படும் வலிமையான பொருள். |
அரணம் |
பரிகாரம் |
அறனம் |
அறு (=நீக்கு) + அன்மை (=தீங்கு, துன்பம்) + அம் = அறனம் >>> அரணம் = துன்பத்தை நீக்குவது. |
அரணம் |
செருப்பு |
அரணம் |
ஆர் (=தண்டு, கால்) + அணி + அம் = அரணம் = காலில் அணிவது. |
மயிலாஞ்சி |
மருதாணி |
பயிலாச்சி |
பை (=பசுமை, அழகு, நிறம்) + இலை + ஆசு (=எழுது) + இ = பயிலாச்சி >>> மயிலாஞ்சி = பச்சையாக எழுதினால் அழகிய நிறந்தரும் இலை. |
தொடர்ந்து வாசிக்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :)
பதிலளிநீக்கு