புதன், 24 மார்ச், 2021

69 - (அரணி -> அவதரம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

அரணி

தீக்கடைக்கோல்

எரணி

எரி (=தீ) + அணை (=பொருந்து, தண்டு) + இ = எரணி >>> அரணி = தீ பொருந்திய தண்டு.

அரணம்

அலங்காரம்

அரணம்

ஆர் (=அழகு, அணி, பெறு) + அணம் = அரணம் = அணிகளால் அழகு பெறுதல்.

அரணம்

வலிமை, கடினம்

எறணம்

ஏறு (=வலிமை) + அணம் = எறணம் >>> அரணம் = வலிமை, கடினம்.

அரணி

அலங்கரி

அரணி

அரணம் (=அலங்காரம்) >>> அரணி = அலங்கரி

அரணி

தடு

அரணி

அரணம் (=காவல்) >>> அரணி = காவல்செய், தடு

அரணி

கடினமாகு

அரணி

அரணம் (=கடினம்) >>> அரணி = கடினமாகு

அரணியம், ஆரண்யம்

காடு

அரணியம்

ஆர் (=மரம், இடம்) + அண் (=செறி) + இயம் = அரணியம் >>> ஆரண்யம் = மரங்கள் செறிந்த இடம்.

அரத்தம்

குருதி

அறத்தம்

அறு (=கீறு, ஒழுகு) + அத்து (=சிவப்பு) + அம் (=நீர்) = அறத்தம் >>> அரத்தம் = அறுத்தால் / கீறினால் ஒழுகும் சிவப்புநிற நீர்.

அரத்தம்

சிவப்பழகு

அரத்தம்

ஆர் (=அழகு) + அத்து (=சிவப்பு) + அம் = அரத்தம் = சிவப்பு அழகு.

அரத்தம்

செம்மெழுகு

அரத்தம்

ஆர் (=கட்டு) + அத்து (=அப்பு, சிவப்பு, பொருள்) + அம் = அரத்தம் = அப்பிக் கட்டப்படும் சிவப்புநிறப் பொருள்

அரதனம்

இரத்தினம்

அறைதனம்

அறை (=பாறைத்துண்டு, கல்) + தனம் (=செல்வம்) = அறைதனம் >>> அரதனம் = செல்வமாகக் கருதப்படும் கல்

அரதி

விருப்பம் இன்மை

அறத்தி

அறு (=இல்லாகு) + அத்து (=பற்று, விருப்பம்) + இ = அறத்தி >>> அரதி = விருப்பம் இன்மை

அரம்பை

வாழை

அரம்பை

ஆர் (=மரம், உண், மிகு, செறி) + அம் (=அழகு, ஒளி, இனிமை) + பை (=பசுமை) = செறிந்த ஒளிமிக்க இனிய உணவைத் தரும் பசுமை அழகுடைய மரம்.

அரமியம்

நிலாமுற்றம், மொட்டை மாடி

அரமியம்

ஆரை (=கூரை) + அமை (=சமமாக்கு, வீடு) + இயம் = அரமியம் = வீட்டின் சமதளக் கூரை.

அரமியம்

அரண்மனை

ஏறமியம்

ஏறு (=உயரம்) + அமை (=வீடு) + இயம் = ஏறமியம் >>> அரமியம் = உயரமான வீடு.

அரையன், அரயன், அரசன்

மன்னன்

அரையன்

ஆர் (=பூமி, இடம்) + ஐயன் (=தலைவன்) = அரையன் >>> அரயன் >>> அரசன் = இடத்தின் தலைவன்.

அரரி

கதவு

ஆறாரி

ஆறு (=வழி, வாசல்) + ஆர் (=மறை) + இ = ஆறாரி >>> அரரி = வாசலை மறைப்பது.

அரவிந்தம்

தாமரை

அரமிற்றம்

(2) ஆர் (=நிறை, மூடு, மலர்) + அம் (=ஒளி) + இறு (=முடி) + அம் = அரமிற்றம் >>> அரவித்தம் >>> அரவிந்தம் = ஒளி முடிந்ததும் மூடிக்கொள்ளும் மலர்.

அராகம்

பொன்

அராக்கம்

ஆர் (=அழகு, அணி) + ஆக்கம் (=செல்வம்) = அராக்கம் >>> அராகம் = அழகுக்காக அணியப்படும் செல்வம்.

அராகம்

இசையுடன் பொருந்தி நீண்டொலிப்பது

ஆரங்கம்

ஆர் (=ஒலி, பொருந்து, பரவு, நீள்) + அங்கம் (=இசை) = ஆரங்கம் >>> அராகம் = இசையுடன் பொருந்தி நீண்டு ஒலிப்பது. .

அராகம்

விருப்பம்

ஆரகம்

ஆர் (=பொருந்து, நிறை) + அகம் (=மனம்) = ஆரகம் >>> அராகம் = மனதில் பொருந்தி நிறைந்தது

அராகம்

சிவப்பு

அரக்கு

அரக்கு (=சிவப்பு) + அம் = அரக்கம் >>> அராகம்

அராகம்

விருப்பமின்மை

ஆரகம்

ஆர் (=விரும்பு) + அகை (=நீங்கு, இல்லாகு) + அம் = ஆரகம் >>> அராகம் = விருப்பம் இல்லாமை

அராசகம்

முறையற்ற செயல்

அறாயாக்கம்

அறு (=இல்லாகு) + ஆய் (=வகு, முறைசெய்) + ஆக்கு (=செய்) + அம் = அறாயாக்கம் >>> அராசகம் = முறையற்ற செயல்.

அராமி

கொடியவன்

அரவி

அரவு (=துன்புறுத்து) + இ = அரவி >>> அராமி = துன்பம் தருபவன் = கொடியவன்.

அரி

பகைவன்

அரி

ஆர் (=போரிடு) + இ = அரி = போரிடுபவன்.

அரி

சக்கரம்

அறி

அறு (=பிள, செல்) + இ = அறி >>> அரி = பிளந்து செல்வது

அரி

ஆயுதம்

அறி

அறு (=கொல், வெட்டு) + இ = அறி >>> அரி = கொல்ல / வெட்ட உதவுவது.

அரி

பசுமை, பச்சை, மரகதம்

அரி

ஆர் (=நிலம், அணி, பரவு, அழகு, நிறம்) + இ = அரி = நிலத்திற்கு அணியாகப் பரவியிருக்கும் அழகிய நிறம்

அரி

அழகு, நிறம், மஞ்சள் நிறம்

அரி

ஆர் (=அழகு) + இ = அரி = அழகு >>> நிறம், மஞ்சள் நிறம்

அரி

தங்கம்

அரி

ஆர் (=அணி, அழகு) + இ = அரி = அழகு தரும் அணி

அரி

எமன்

அறி

அறு (=கொல்) + இ = அறி >>> அரி = கொல்பவன்

அரி

நெருப்பு, சூரியன்

எரி

எரி (=தீ, நெருப்பு) >>> அரி = நெருப்பு, சூரியன்

அரி

காற்று, புகை

அரி

ஆர் (=பூமி, பரவு, நிறை, நுகர்) + இ = அரி = பூமியில் பரவி நிறைந்திருக்கும் நுகர் பொருள் = காற்று >>> புகை.

அரி

ஒளி

அரி

ஆர் (=ஒளிர்) + இ >>> அரி = ஒளிர்வது

அரி

சந்திரன்

அரி

ஆர் (=விரும்பு, நுகர், ஒளிர்) + இ = அரி = விரும்பி நுகரத்தக்க ஒளி உடையவன்.

அரி

மலை

அரி

ஆர் (=நிலம், மறை, பரவு, நிறை) + இ = அரி = பரவி நிறைந்து மறைக்கும் நிலம்.

அரி

சிங்கம்

அரி

ஆர் (=பேரொலி செய், உண்) + இ = அரி = பேரொலி செய்தவாறு உண்பது. 

அரி

குதிரை

அரி

ஆர் (=பொருந்து, அமர், தட்டு, பரவு, விரை) + இ = அரி = அமர்ந்து தட்டியதும் விரையக் கூடியது.

அரி

குரங்கு

அரி

ஆர் (=மரம், தங்கு, உண்) + இ = அரி = மரத்தில் தங்கி உண்பது.

அரி

பாம்பு

அரா

அரா (=பாம்பு) + இ = அரி

அரி

தவளை

அரி

ஆர் (=ஒலி, மறை, தங்கு, நிலம்) + இ = அரி = நிலத்துக்குள் மறைந்து தங்குவதும் ஒலிப்பதும் ஆகியது

அரி

கிளி

அரி

ஆர் (=பரவு, பற, ஒலி, ஒப்பு, அழகு) + இ = அரி = போல ஒலிக்கும் அழகிய பறவை.

அரி

வளையம்

அரி

ஆரம் (=வட்டம்) + இ = அரி = வட்டமானது

அரி

அறிவு, கல்வி

அறி

அறி >>> அரி = அறியப்படுவது.

அரி

பொடி

அரி, எரு

(1) அரை + இ = அரி = அரைக்கப்பட்டது. (2) எரு (=பொடி) >>> அரி.

அரிக்காரன்

தூதன்

அருக்காரன்

அருக்கு (=சமீபமாக்கு, சேர்த்துவை) + ஆர் (=ஒலி, சொல்) + அன் = அருக்காரன் >>> அரிக்காரன் = சொல்லால் சேர்த்து வைப்பவன்.

அரிசம்

மகிழ்ச்சி, மனநிறைவு

ஆரீயம்

ஆர் (=நிறைவு) + ஈ (=தா) + அம் = ஆரீயம் >>> அரிசம் = நிறைவைத் தருவது.

அரிசம், அரிசு

மிளகு

எரியம்

எரி + அம் (=உணவு) = எரியம் >>> அரிசம் = எரிச்சல் தரும் உணவு.

அரிசயம்

எலுமிச்சை

அரியயம்

அரி (=மஞ்சள் நிறம், வட்டம், பிரித்தெடு, பிழி, உண்ணு) + அயம் (=நீர்) =  அரியயம் >>> அரிசயம் = நீர் பிழியப்படும் வட்டமான மஞ்சள்நிற உணவுப் பொருள்.

அரிசனம்

மஞ்சள்

அரியாணம்

அரி (=மஞ்சள், அழகு) + ஈ (=கொடு) + ஆணம் (=பொருள்) = அரீயாணம் >>> அரிசனம் = மஞ்சள் அழகைத் தரும் பொருள்.

அரிட்டம், அரிடை, அரிட்டை

நோய், துன்பம், கொலை

அரூற்றம்

அரி (=வருத்து) + இறு (=அழி, கொல்) + அம் = அரிற்றம் >>> அரிட்டம் = வருத்தி அழிப்பது / கொல்வது.

அரிட்டம்

கள்

அரிற்றம்

ஆரம் (=வட்டம், சுற்று) + இறு (=வடிகட்டு, கொடு) + அம் (=நீர், உணவு) = அரிற்றம் >>> அரிட்டம் = சுற்றலை உண்டாக்கும் வடிகட்டிய நீர் உணவு.

அரிட்டம், அரிடம்

வேம்பு

அரிற்றம்

அரி (=அறு) + இறை (=இலை) + அம் = அரிற்றம் >>> அரிட்டம் = அறுப்பது போன்ற இலைகளைக் கொண்டது.

அரிட்டம்

கருப்பை, முட்டை

ஏறிடம்

ஏறு (=உயிர், தங்கு, வளர்) + இடம் = ஏறிடம் >>> அரிட்டம் = உயிர் தங்கி வளரும் இடம்.

அரிட்டி

கொல்

அரிட்டி

அரிட்டம் (=கொலை) >>> அரிட்டி = கொல்

அரிணம், அருணம்

மான்

அரிணம்

ஆர் (=பொருந்து, பரவு, விரை, அழகு) + இணை + அம் = அரிணம் = பொருந்தி இணையாக வாழும் விரைந்து செல்லும் அழகான விலங்கு.

அரித்திரம், அருத்திரம்

மஞ்சள்

அரீத்திறம்

அரி (=மஞ்சள், அழகு) + ஈ (=கொடு) + திறம் (=பொருள்) = அரீத்திறம் >>> அரித்திரம் = மஞ்சள் அழகைத் தரும் பொருள்.

அரித்திராபம்

மஞ்சள்

அரித்திறமம்

அரி (=மஞ்சள், அழகு) + திறம் (=பொருள்) + அமை (=உண்டாக்கு) + அம் = அரித்திறமம் >>> அரித்திராபம் = மஞ்சள் அழகை உண்டாக்கும் பொருள்.

அரித்திராபம்

பொன்னிறம்

அரித்திறமம்

அரி (=பொன்) + திறம் (=வடிவம், நிறம்) + அம் = அரித்திறமம் >>> அரித்திராபம் = பொன் நிறம்.

அரிதம்

திசை

அறிறம்

ஆறு (=வழி) + இறு (=முடி, தீர்மானி) + அம் = அறிறம் >>> அரிதம் = வழியைத் தீர்மானிப்பது.

அரிதம்

பச்சை

அரி

அரி (=பச்சை) + இதம் = அரிதம்

அரிதம்

புல்வெளி

அரிறம்

அரி (=பசுமை) + இறை (=இடம்) + அம் = அரிறம் >>> அரிதம் = பசுமையான இடம்

அரிதம்

பொன்னிறம்

அரி

அரி (=பொன், நிறம்) + இதம் = அரிதம் = பொன்னிறம்

அரிதாரம்

வண்ணப் பொடி

அரிதாரம்

அரி (=நிறம், பொடி) + தாரம் (=தருவது) = அரிதாரம் = நிறம் தரும் பொடி.

அரிந்தமன்

பகையை அழிப்பவன்

அரித்தபன்

அரி (=பகைவன்) + தபு (=அழி) + அன் = அரித்தபன் >>> அரிந்தமன் = பகைவரை அழிப்பவன்.

அரு

உருவற்றது, மாயை

அறு

அறு (=இல்லாகு) >>> அரு = இல்லாதது, மாயை

அருகம்

பொருத்தமானது

அருகம்

ஆர் (=பொருந்து, தகு) + உக (=ஏற்றுக்கொள்) + அம் = அருகம் = ஏற்றுக்கொள்ளத் தக்கது

அருகன்

பொருத்தமானவன்

அருகன்

ஆர் (=பொருந்து, தகு) + உக (=ஏற்றுக்கொள்) + அன் = அருகன் = ஏற்றுக்கொள்ளத் தக்கவன்.

அருச்சிகன்

சந்திரன்

அருய்யிகன்

அரி (=பசுமை, அழகு, ஒளி) + உய் (=செலுத்து) + இக (=கட) + அன் = அருய்யிகன் >>> அருச்சிகன் = பசுமையான அழகிய ஒளியைச் செலுத்திக் கடப்பவன்.

அருச்சுனம்

வெண்மை

அரிச்சுண்ணம்

அரி (=நிறம்) + சுண்ணம் = அரிச்சுண்ணம் >>> அருச்சுனம் = சுண்ணத்தின் நிறம்.

அருச்சை

பூசை, போற்றி

ஆரிசை

ஆர் (=ஒலி, கூறு) + இசை (=புகழ்) >>> ஆரிசை >>> அரிச்சை >>> அருச்சை = புகழ்ந்து கூறுதல்.

அருசி

விருப்பம் இல்லாமை

அறிச்சி

அறு (=இல்லாகு) + இசை (=ஒப்பு, விரும்பு) + இ = அறிச்சி >>> அருசி = விருப்பம் இல்லாமை.

அருணம்

சிவப்பு

அரினம்

அரி (=நிறம்) + இனை (=எரி) + அம் = அரினம் >>> அருணம் = எரியின் நிறம் = சிவப்பு.

அருணம்

செந்தூரம், செம்மறி ஆடு

எரினம்

எரி (=தீ, சிவப்பு) + இனம் (=வகை) = எரினம் >>> அருணம் = சிவப்பு வகை.

அருணம்

எலுமிச்சை

அருணம்

அரி (=பிரித்தெடு, பிழி, மஞ்சள், நிறம்) + உண் + அம் (=நீர்) = அருணம் = நீர் பிழியப்படும் மஞ்சள்நிற உணவு.

அருணவம்

கடல்

அருணவம்

ஆர் (=பூமி, மிகுதி, சூழ்) + உண்மை (=உறுதி, நிலை) + அம் (=நீர்) = அருணம் = பூமியை நிலையாகச் சூழ்ந்து இருக்கும் மிகுதியான நீர்.

அருணன்

சூரியன்

அருன்னன்

அரி (=கடல்) + உன்னு (=மேல் எழும்பு) + அன் = அருன்னன் >>> அருணன் = கடலின் மேல் எழுபவன்.

அருத்தம்

மிக்க் தங்கம், பெருஞ்செல்வம்

அருற்றம்

அரி (=தங்கம்) + உறு (=மிகுதி) + அம் = அருற்றம் >>> அருத்தம் = மிக்க தங்கம், பெரும் செல்வம்

அருத்தம்

பயன்

அருந்தம்

ஆர் (=செய்) + உந்து (=தோன்று) + அம் = அருந்தம் >>> அருத்தம் = செயலால் தோன்றுவது.

அருத்தம், அர்த்தம்

சுற்றுப்பாதை

அருந்தம்

ஆர் (=சூழ், சுற்று, இடம்) + உந்து (=செல்) + அம் = அருந்தம் >>> அருத்தம் = சுற்றிச் செல்வதற்கான இடம்.

அருத்தி

பிச்சையெடு

அருத்தி

(2) ஆர் (=உண், விரும்பு, கூறு) + உத்து (=வெளிப்படுத்து) + இ = அருத்தி = உண்ண விரும்புவதை வெளிப்படுத்திக் கூறு

அருந்துதன்

துன்பம் இழைப்பவன்

அருத்தூறன்

அருத்து (=ஊட்டு) + ஊறு (=துன்பம்) + அன் = அருத்தூறன் >>> அருந்துதன் = துன்பத்தை ஊட்டுபவன்.

அற்பம்

சிறுமை

அருப்பம்

அருப்பம் (=பொடி) >>> அற்பம் = சிறுமை

அருமிதம்

அளவற்றது

அறிமீறம்

அறி (=அள) + மீறு (=கட) + அம் = அறிமீறம் >>> அருமிதம் = அளவு கடந்தது

அருவம், அருவி, அரூபம், அரூபி

உருவமற்றது, மாயை

அறுவம்

அறு (=இல்லாகு) + அம் = அறுவம் >>> அருவம் = இல்லாதது, மாயை.

அருவம்

அருமை

அருப்பம்

அருப்பம் (=அருமை) >>> அருவம்

அருவர்

தமிழர்

அருப்பர்

அருப்பம் (=கோட்டை) + அர் = அருப்பர் >>> அருவர் = கோட்டையில் வாழ்வோர் = தமிழர்.

அருவாணம்

பிரசாதம்

அருவாணம்

அருமை (=சிறப்பு) + ஆணம் (=உணவு) = அருவாணம் = சிறப்பு உணவு.

அருவாணம்

செப்புத் தட்டு

எரிமணம்

எரி (=சிவப்பு) + மணை (=பலகை, தட்டு) + அம் = எரிமணம் >>> அருவாணம் = சிவப்புநிறத் தட்டு.

அரேசிகம்

வாழை

அரேழிகம்

ஆர் (=அழகு, தாங்கு, தண்டு, மரம்) + எழு (=மிகு, செழி) + இகு (=திரள், தாழ், தொங்கு) + அம் (=உணவு) = அரேழிகம் >>> அரேசிகம் = தாழ்ந்து தொங்கும் திரண்ட உணவைத் தாங்கிய அழகிய தண்டுடைய செழிப்பான மரம்.

அரேணுகம், அரேணுகை

மிளகு

அரேணூகம்

அரி (=உண், தங்கம்) + ஏண் (=பெருமை) + ஊகம் (=கருப்பு) = அரேணூகம் >>> அரேணுகம் >>> கருப்புத் தங்கம் என்ற பெருமை கொண்ட உணவுப் பொருள்.

அரையன், அரைசன்

அரசன்

அரையன்

ஆர் (=பூமி, நிலம்) + ஐயன் (=தலைவன்) = அரையன் >>> அரைசன் = நிலத்தின் தலைவன்.

அரோகம்

நோயின்மை

அரோகம்

அருமை (=நோய், துன்பம், இன்மை) + ஓகை (=மகிழ்ச்சி) + அம் = அரோகம் = நோய் / துன்பம் இல்லாத மகிழ்ச்சி.

அரோசகம், அரோசிகம்

உண்ண விரும்பாமை

அரோழகம்

ஆர் (=உண், விரும்பு) + ஒழி (=விலக்கு) + அகம் (=எண்ணம்) = அரோழகம் >>> அரோசகம் = உண்ணும் விருப்பத்தை விலக்கும் எண்ணம்.

அரோசனம்

அருவருப்பு

அரோழணம்

ஆர் (=விரும்பு) + ஒழி (=இல்லாகு) + அணம் = அரோழணம் >>> அரோசனம் = விருப்பம் இல்லாமை.

அல்கா

தாழ்ந்தது, இழிவானது

அல்கை

அல்கு (=குறை, குன்று) + ஐ = அல்கை >>> அல்கா = குன்றியது, தாழ்ந்தது.

அல்லம்

இஞ்சி

எல்லம்

எல்லம் (=இஞ்சி) >>> அல்லம்

அல்லாரி

அடர்த்தி இல்லாமை

அள்ளறி

அள் (=செறி) + அறு (=இல்லாகு) + இ = அள்ளறி >>> அல்லாரி = செறிவின்மை

அல்லியன்

ஒற்றை யானை

அல்லுயானை

அல்லு (=செல், பிரி) + யானை = அல்லுயானை >>> அல்லியன் = பிரிந்த யானை

அல்வா

இனிப்பு உணவு

அளுப்பம்

அளி (=செறி, குழை, உண்டாக்கு) + உப்பு (=இனிமை) + அம் (=உணவு) = அளுப்பம் >>> அலுவம் >>> அல்வா = குழைத்துச் செறிவாக உண்டாக்கப்பட்ட இனிப்பு உணவு.

அலக்கு

தனிமை

அலக்கு

அலங்கு (=அசை, நீங்கு, தனிப்படு) >>> அலக்கு = தனிமை

அலங்கம்

கோட்டைச் சுவர்

அலக்கம்

ஆலு (=சுற்று) + அகை (=தடு, நீளு, உயர்) + அம் = அலக்கம் >>> அலங்கம் = நீண்ட உயரமான சுற்றுத்தடுப்பு

அலங்காரம், அலங்கரணம்

ஒப்பனை

அலங்காரம்

அலங்கு (=ஒளிசெய்) + ஆர் (=அழகு, பெறு) + அம் = அலங்காரம் = அழகு பெறுமாறு ஒளிசெய்தல்.

அலங்கரி

ஒப்பனைசெய்

அலங்கரி

அலங்காரம் (=ஒப்பனை) >>> அலங்கரி

அலசம்

மந்தம், தாமதம்

அலாயம், அலசம்

(1) அல் (=எதிர்மறை) + ஆய் (=விரை) + அம் = அலாயம் >>> அலசம் = விரைவு இன்மை. (2) அலசு (=சோர்) + அம் = அலசம் = சோர்வு, மந்தம்.

அலட்சியம்

கவனம் இல்லாமை

அலாயியம்

அல் (=எதிர்மறை) + ஆய் (=அறி, கவனி) + இயம் = அலாயியம் >>> அலச்சியம் >>> அலட்சியம் = கவனம் இல்லாமை.

அலத்தகம்

செம்பஞ்சுக் குழம்பு

அலத்தகம்

ஆல் (=நீர்) + அத்து (=கல, சிவப்பு) + அகம் (=பொருள்) = அலத்தகம் = சிவப்புப் பொருள் கலந்த நீர்.

அலம்

தேள்

அலம்

அலை (=வளை, தாக்கு) + அம் = அலம் = வளைத்துத் தாக்குவது.

அலம்

நிறைவு

அலை

அலை (=நிறைவு) + அம் = அலம் = நிறைவு, போதும்

அலம்

கலப்பை

அலம்

அலை (=சுற்று, தாக்கு, மோது) + அம் = அலம் = தாக்கி மோதியவாறு சுற்றி வருவது.

அலமாரி

நெடும்பேழை

அளவாரி

அள + வாரி (=தடு, பலகை, பகுதி, கதவு) = அளவாரி >>> அலமாரி = பலகைகளால் அளவான பல பகுதிகளாகத் தடுக்கப்பட்டு கதவுடையது.

அலவாட்டு

பழக்கம்

அளவாற்று

அள (=கல, பழகு) + ஆற்று (=செய்) = அளவாற்று >>> அலவாட்டு = பழகிய செயல்.

அலாதம்

கடைக்கொள்ளி

அளந்தம்

அள் (=கட்டை) + அந்தி (=பொருத்து, தீ) + அம் = அளந்தம் >>> அலாதம் = தீ பொருத்திய கட்டை.

அலாதி, அலாது

தனிமை

அலத்தி

அல் (=எதிர்மறை) + அத்து (=பொருந்து, சேர்) + இ = அலத்தி >>> அலாதி = சேராதது.

அலாபம்

நன்மை இல்லாதது

அலேமம்

அல் (=எதிர்மறை) + ஏமம் (=மகிழ்ச்சி, நன்மை) = அலேமம் >>> அலாபம் = மகிழ்ச்சி / நன்மை அற்றது.

அலாயிதா

தனி

அலாயிறம்

அல் (=எதிர்மறை) + ஆயம் (=கூட்டம்) + இறு (=தங்கு, சேர்) + அம் = அலாயிறம் >>> அலாயிதா = கூட்டத்தில் சேர்ந்து இல்லாதது.

அலி

நெருப்பு

எல்லி

எல்லு (=ஒளிர், எரி) + இ = எல்லி >>> அலி = எரிவது

அலி

எமன்

அலி

அலை (=கொலை) + இ = அலி = கொல்பவன்

அலீகன்

மனிதத் தலை

அளுக்கம்

ஆள் (=மனிதன்) + உக்கம் (=தலை) >>> அளுக்கம் >>> அலிக்கம் >>> அலீகன் = மனிதத் தலை

அலீசா

துடுப்பு

அளுயா

அள் (=தண்டு) + உய் (=ஓட்டு, செலுத்து) + ஆ = அளுயா >>> அலிசா = செலுத்தும் தண்டு.

அலுக்குத்து

காதணி

அள்குத்து

அள் (=காது) + குத்து = அள்குத்து >>> அளுக்குத்து >>> அலுக்குத்து = காதில் குத்தப்படுவது.

அலுத்தன்

ஆசை அற்றவன்

அளுந்தன்

அளி (=விருப்பம், ஆசை) + உந்து (=நீங்கு, இல்லாகு) + அன் = அளுந்தன் >>> அலுத்தன் = ஆசை இல்லாதவன்

அலுவல்

வேலை

அலுவல்

அலுவு (=வருந்து, உழை) + அல் = அலுவல் = உழைப்பு

அலோகம்

உருகுதல் அற்றவை

அலுகம்

அல் (=எதிர்மறை) + உகு (=உருகு) + அம் = அலுகம் >>> அலோகம் = உருகுதல் அற்றது.

அவ்வியத்தம்

விளங்க இயலாதது

அவிழற்றம்

அவிழ் (=திற, விளங்கு) + அற்றம் (=இன்மை) = அவிழற்றம் >>> அவ்வியத்தம் = விளக்கம் இல்லாதது.

அவ்வியத்தன்

கடவுள்

அவிழற்றன்

அவ்வியத்தம் (=விளங்க இயலாதது) + அன் = அவ்வியத்தன் = விளங்க இயலாதவன்.

அவ்வியம்

சோறு

அவியம்

அவி (=சோறு) + அம் = அவியம் >>> அவ்வியம்

அவ்வியயம்

அழியாதது

அவ்விழயம்

அவி (=அழி) + இழை (=நீக்கு, இல்லாக்கு) + அம் = அவ்விழயம் >>> அவ்வியயம் = அழிவு இல்லாதது

அவக்கியாதி

அவமானம்

அபக்கியாதி

அபக்கியாதி (=அவமானம்) >>> அவக்கியாதி

அவகடம்

வஞ்சனை

அபகடம்

அபகடம் (=வஞ்சனை) >>> அவகடம்

அவகாசம்

சிறுகாலம்

அமைகாழம்

அமை (=காலம்) + காழ் (=துண்டு) + அம் = அமைகாழம் >>> அமகாசம் >>> அவகாசம் = காலத்துண்டு.

அவகாகம்

மனதில் பதித்தல்

அமகாக்கம்

அமை (=பதி) + அகம் (=மனம்) + ஆக்கம் (=செயல்) = அமகாக்கம் >>> அவகாகம் = மனதில் பதிக்கும் செயல்.

அவகாகி

மனதில் பதி

அமகாக்கி

அவகாகம் (=மனதில் பதித்தல்) >>> அவகாகி

அவகேசி

காய்க்காத மரம்

அவகேழி

அவம் (=இன்மை) + கெழுமை (=வளமை) + இ = அவகேழி >>> அவகேசி = வளமை இல்லாதது.

அவசம்

கட்டுப்பாடு இல்லாமை

அவசம்

அவி (=அழி, இல்லாகு) + அசை (=கட்டு) + அம் = அவசம் = கட்டுப்பாடு இல்லாமை.

அவசரம்

விரைவு

அவசாரம்

அவி (=அழி, இல்லாகு) + அசை (=சோர், தாமதி) + ஆர் (=நிறை) + அம் = அவசாரம் >>> அவசரம் = தாமதம் இல்லாமை நிறைந்தது.

அவசரம்

சந்தர்ப்பம்

அமயாரம்

அமை (=காலம்) + ஆர் (=பொருந்து) + அம் = அமயாரம் >>> அவசரம் = பொருத்தமான காலம்

அவசரம்

பெருவிருப்பம், முதல் தேவை

அவாயாரம்

அவாய் (=வேட்கை) + ஆர் (=மிகு) + அம் = அவாயாரம் >>> அவசரம் = மிகுதியான விருப்பம்

அவசரம்

உண்டாக்கிய வடிவம்

அமயாரம்

அமை (=செய், உண்டாக்கு) + ஆர் (=தோற்றம்) + அம் = அமயாரம் >>> அவசரம் = உண்டாக்கிய தோற்றம்

அவசானம்

மரணம், முடிவு

அமயாணம்

அமை (=அடங்கு) + ஆணம் (=உயிர், உடல்) = அமயாணம் >>> அவசானம் = உடலில் உயிர் அடங்குதல்.

அவசியம்

வேட்கை, தேவை

அவாயியம்

(2) அவாய் (=வேட்கை) + இயம் = அவாயியம் >>> அவசியம் = வேட்கை, தேவை.

அவடி

திரைச்சீலை, இடுதிரை

அவாடி

அவி (=அணை, மறை) + ஆடை (=துணி) + இ = அவாடி >>> அவடி = மறைப்புத் துணி.

அவத்தம்

பயனற்றது, துன்பம்

அவற்றம்

அவி (=அழி, இல்லாகு) + அறம் (=நன்மை, பயன்) = அவற்றம் >>> அவத்தம் = நன்மை / பயன் இல்லாதது.

அவத்தானம்

வசிப்பிடம்

அமைத்தானம்

அமை (=தங்கு, வசி) + தானம் (=இடம்) = அமைத்தானம் >>> அவத்தானம் = வசிப்பிடம்.

அவத்தியம்

குற்றம்

அவற்றியம்

அவி (=அழி) + அறம் + இயம் = அவற்றியம் >>> அவத்தியம் = அறம் அழிந்தது.

அவத்தை

துன்பம், அழிவு, கேடு

அவற்றை, அவாற்றை

(1) அவி (=அழி, இல்லாகு) + அறம் (=நன்மை) + ஐ = அவற்றை >>> அவத்தை = நன்மை இல்லாதது. (2) அவி (=அழி, கெடு) + ஆற்று (=கொடு) + ஐ = அவாற்றை >>> அவத்தை = அழிவை / கேட்டைத் தருவது.

அவத்தை

நிலை, தன்மை

அமற்றை, அமைத்தை

(1) அமை (=பொருந்து) + அறம் (=தன்மை) + ஐ = அமற்றை >>> அவத்தை = பொருந்திய தன்மை, நிலை. (2) அமைதி (=தகுதி, தன்மை) + ஐ = அமைத்தை >>> அமத்தை >>> அவத்தை.

அவதரம்

சந்தர்ப்பம்

அமைதாரம்

அமைதி (=காலம்) + ஆர் (=பொருந்து) + அம் = அமைதாரம் >>> அவதரம் = பொருத்தமான காலம்.

கீர்த்தி

புகழ்

குருந்தி

குரை (=பெருமை) + உந்து (=பரவு, மிகு) + இ = குருந்தி >>> கிருத்தி >>> கீர்த்தி = மிகவும் பரவிய பெருமை.

பட்டாசு

வெடிபொருள்

பற்றசு

பாறு (=சிதறு) + அசை (=ஒலி) + உ = பற்றசு >>> பட்டாசு = ஒலியுடன் சிதறுவது.

திராட்சை

கொடிமுந்திரி

துறக்கை

(2) துறு (=செறி, உண்ணு) + அகை (=பரவு, படர்) + ஐ = துறக்கை >>> திரக்சை >>> திராட்சை = செறிந்து வளர்கின்ற படரக்கூடிய உணவு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.