புதன், 19 மே, 2021

76 - (உத்தாரணம் -> உம்மத்து) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

உத்தாரணம்

தூக்கி நிறுத்துகை

உத்தரணம்

உத்தரி (=தூக்கி நிறுத்து) + அணம் = உத்தரணம் >>> உத்தாரணம்

உத்தானம்

அடுப்பு

உற்றணம்

உறை (=உணவு, எரி, இடம்) + அணம் = உற்றணம் >>> உத்தானம் = உணவுக்காக எரிக்கும் இடம்

உத்தானம்

உயிர்த்தெழுகை

உந்தணம்

உந்து (=எழு) + அணை (=அவி, இற) + அம் = உந்தணம் >>> உத்தானம் = இறந்து எழுதல்.

உத்தானம்

குழந்தையை வீட்டிலிருந்து வெளிக்கொணர்தல்

உத்தாணம்

உத்து (=வெளிப்படுத்து, பிற) + ஆணம் (=வீடு, உயிர்) = உத்தாணம் >>> உத்தானம் = பிறந்த உயிரை வீட்டிலிருந்து வெளிப்படுத்தும் சடங்கு

உத்தி

பேச்சு

உந்தி

உந்து (=வெளிப்படுத்து, கூறு) + இ = உந்தி >>> உத்தி = வெளிப்படுத்துவது ./ கூறுவது

உத்தி

சேர்க்கை, கூட்டம்

உந்தி

உந்து (=பொருந்து, சேர், கூடு) + இ = உந்தி >>> உத்தி = சேர்க்கை, கூட்டம்

உத்தி, உக்தி, யுக்தி

அறிவு, எண்ணம்

உந்தி, ஊகம்

(1) உந்து (=எழு, தோன்று) + இ = உந்தி = தோன்றுவது = எண்/ணம், அறிவு. (2) ஊகம் (=எண்ணம்) + இ = உக்கி >>> உக்தி >>> யுக்தி = அறிவு

உத்தியம், உத்தீயம்

வேள்வி, யாகம்

உய்த்தீயம்

உய் (=கொடு, இடு) + தீ + அம் (=உணவு) = உய்த்தீயம் >>> உத்தீயம் >>> உத்தியம் = தீயில் உணவுகளை இடுதல் = வேள்வி

உத்தியாபனம்

பிரிவு, நீக்கம்

உந்தியைவணம்

உந்து (=நீங்கு) + இயைவு (=சேர்க்கை) + அணம் = உந்தியைவணம் >>> உத்தியாபனம் = சேர்க்கையில் இருந்து நீங்குதல்.

உத்தியாபனம்

முடிவுக்குக் கொண்டுவருதல்

உந்தியைமணம்

உந்து (=தள்ளு, செலுத்து) + இயை (=நிறை) + மண (=அடை) + அம் +  = உந்தியைமணம் >>> உத்தியாபனம் = நிறைவடையுமாறு செலுத்துதல்

உத்தியானம்

நந்தவனம்

உத்தியாணம்

ஊது (=வண்டின் ஒலி) + இயை (=நிறை) + ஆணம் (=இடம்) = உத்தியாணம் >>> உத்தியானம் =  வண்டின் ஒலி நிறைந்த இடம்.

உத்தியோகம்

முயற்சி, வேலை

உந்தியோக்கம்

உந்தி (=உயர்வு) + ஓக்கு (=உண்டாக்கு) + அம் = உந்தியோக்கம் >>> உத்தியோகம் = உயர்வினை உண்டாக்குவது = முயற்சி, வேலை

உத்தியோகி

முயலு, தொடங்கு

உத்தியோகி

உத்தியோகம் (=முயற்சி) >>> உத்தியோகி = முயல், தொடங்கு

உத்திரம்

மேலானது

உந்திரம்

உந்து (=உயர்) + இரு + அம் = உந்திரம் >>> உத்திரம் = உயரே இருப்பது

உத்திரம்

விட்டம்

உந்திறம்

உந்து (=உயர், பொருந்து) + இறை (=வீடு, நடு, மரம்) + அம் = உந்திறம் >>> உத்திரம் = வீட்டின் நடுவில் உயரே பொருந்திய மரம்.

உத்திரி

பஞ்சு, பருத்தி

உய்த்திரி

உய் (=கொடு) + திரி = உய்த்திரி >>> உத்திரி = திரியைத் தருவது

உத்தீபகம்

தூண்டக்கூடிய பொருள்

உந்தீவகம்

உந்து (=எழு) + ஈவு (=கொடை) + அகம் (=பொருள்) = உந்தீவகம் >>> உத்தீபகம் = எழுச்சியைக் கொடுக்கும் பொருள்

உத்தீபனம்

எழுச்சியை உண்டாக்குதல்

உந்தீவணம்

உந்து (=எழு) + ஈவு (=கொடை) + அணம் = உந்தீவணம் >>> உத்தீபனம் = எழுச்சியை உண்டாக்குதல்.

உத்துங்கம்

மிக உயர்வானது, மிக்க உயரம்

உந்தூங்கம்

உந்து (=உயர்) + ஊங்கு (=மிகுதி) + அம் = உந்தூங்கம் >>> உத்துங்கம் = மிக்க உயரம், மிக உயர்வானது

உத்துவாசனம்

வீட்டுக்கு அனுப்பி வைத்தல்

உந்துவாசணம்

உந்து (=அனுப்பு) + வாசம் (=வீடு) + அணம் = உந்துவாசணம் >>> உத்துவாசனம் = வீட்டுக்கு அனுப்புதல்.

உத்தூளனம், உத்தூளம்

விபூதி அணிதல்

உய்த்தூளணம்

உய் (=சும, தாங்கு, தரி) + தூள் (=பொடி, விபூதி + அணம் = உய்த்தூளணம் >>> உத்தூளனம் = விபூதியைத் தரித்தல்

உத்தேசம்

தோராயம், குத்துமதிப்பு

உந்தேயம்

உந்து (=எழு, தோன்று) + ஏய் (=பொருந்து) + அம் = உந்தேயம் >>> உத்தேசம் = பொருத்தமாகத் தோன்றுவது = குத்துமதிப்பு, தோராயம்

உத்தேசம்

கருத்து, எண்ணம்

உத்தேழம்

உதி (=அறிவு) + எழு + அம் = உத்தேழம் >>> உத்தேசம் = அறிவில் எழுவது = எண்ணம், கருத்து.

உத்தேசி

கருது, எண்ணு

உத்தேசி

உத்தேசம் (=கருத்து) >>> உத்தேசி = கருது

உத்தேசியம்

எண்ணியது

உத்தேசியம்

உத்தேசி (=எண்ணு) + அம் = உத்தேசியம் = எண்ணியது

உத்பாதம், உற்பாதம்

கேட்டை அறிவிக்கும் குறி

உதிப்பாறம்

உதி (=அறிவு, தோன்று, நிகழ்) + பாறு (=அழிவு, கேடு) + அம் = உதிப்பாறம் >>> உத்பாதம் = கேடு நிகழ்வதை அறிவிப்பது.

உத்பிரேட்சை

தன் குறிப்பு ஏற்ற அணி

உதிப்பிறேற்றை

உதி (=அறிவு, கருத்து) + பிற + ஏற்று + ஐ = உதிப்பிறேற்றை >>> உத்பிரேட்டை >>> உத்பிரேட்சை = பிறிதின்மேல் தன்கருத்தை ஏற்றுதல்

உத்ச`ர்ச^னம்

ஓதுவதை நீக்கியிருத்தல்

உத்தருச்சணம்

உத்து (=நீக்கு) + அருச்சி (=பாடு, ஓது) + அணம் = உத்தருச்சணம் >>> உத்சர்சனம் = ஓதுவதை நீக்கி இருத்தல்

உதக்கு

வடக்கு

உந்தக்கு

உந்து (=உயர், பெரு) + அகம் (=இடம், பூமி) + உ = உந்தக்கு >>> உதக்கு = உயர்ந்து பெருத்த பூமி = மலை >>> மலை இருக்கும் திசை = வடக்கு. ஒ.நோ: உத்தரம் = மலை >>> மலை இருக்கும் திசை = வடக்கு.

உதகம்

தானம், கொடை

உதகம்

உதவு / உத (=கொடு) + அகம் (=அன்பு, பொருள்) = உதகம் = அன்புடன் பொருளைக் கொடுத்தல் = கொடை, தானம்

உதகம்

நீர்

உத்தகம்

(2) உத்து (=நீக்கு) + அகம் (=இடம், பொருள், கறை) = உத்தகம் >>> உதகம் = இடத்தின் / பொருளின் கறைகளை நீக்கும் பொருள்.

உதகம்

பூமி

உந்தகம்

உந்து (=சுற்று) + அகம் (=இடம்) = உந்தகம் >>> உதகம் = சுற்றுகின்ற இடம் = பூமி

உதகம்

மலை

உந்தகம்

உந்து (=உயர், பெரு) + அகம் (=இடம்) = உந்தகம் >>> உதகம் = உயரமான பெரிய இடம் = மலை

உதகரணம், உதாகரணம்

சான்று, மேற்கோள்

உந்தகாரணம்

உந்து (=வெளிப்படுத்து, கூறு) + அகம் (=கருத்து, பொருள்) + ஆர் (=ஒளி, விளக்கம், ஒப்பு) + அணம் = உந்தகாரணம் >>> உதாகரணம் = கருத்தை விளக்குவதற்கு ஒப்பாகக் கூறப்படும் பொருள்.

உதகரி

எடுத்துக்காட்டு

உதகரி

உதகரணம் (=சான்று) >>> உதகரி = சான்றுகூறு

உதயம்

சூரியன் தோன்றுதல்

உந்தாழம்

உந்து (=வெளிப்படு) + ஆழி (=கடல்) + அம் (=ஒளி) = உந்தாழம் >>> உத்தாயம் >>> உதயம் = கடலில் இருந்து ஒளி வெளிப்படுதல்

உதயம்

பிறப்பு, வெளிப்பாடு

உந்தாயம்

உந்து (=எழு, வெளிப்படு) + ஆயம் (=இரகசியம், மறைவு) = உந்தாயம் >>> உதயம் = மறைவில் இருந்து எழுதல், இரகசியம் வெளிப்படுதல்.

உதயன்

சூரியன்

உந்தாழன்

உந்து (=வெளிப்படு, உயர்) + ஆழி (=கடல்) + அன் = உந்தாழன் >>> உத்தாயன் >>> உதயன் = கடலில் இருந்து வெளிப்பட்டு உயர்பவன்

உதரகம்

உணவு

உதரகம்

உதரம் (=வயிறு) + அகம் (=பொருள்) = உதரகம் = வயிற்றுக்கான பொருள் = உணவு.

உதரம்

வயிறு

உந்தாரம்

உந்து (=செல், பொருந்து, சேர்) + ஆர் (=உண்ணு, இடம்) + அம் = உந்தாரம் >>> உதரம் = உண்டது சென்று சேரும் இடம்.

உதவகன்

தீ, நெருப்பு

உதவகன்

உதம் (=நீர்) + அகை (=அழி) + அன் = உதவகன் = நீரை அழிப்பவன், நீரால் அழிபவன் = நெருப்பு

உதவாக்கரை

பயன் தராதவன்

உதவாக்கறை

உதவு (=கொடு) + ஆக்கம் (=பயன்) + அறு (=இல்லாகு) + ஐ = உதவாக்கறை >>> உதவாக்கரை = பயன் தராதவன்.

உதாசனம், உதாசனன்

சூரியன், தீ, வெப்பம், கொடுமை

உதாசணம்

உதம் (=நீர்) + ஆசு (=நுட்பம், மெலிவு) + அணை (=உண்டாக்கு) + அம் = உதாசணம் >>> உதாசனம் = நீருக்கு மெலிவை உண்டாக்குவது = தீ, வெப்பம் >>> கொடுமை

உதாசனன்

கொடியவன்

உதாசனன்

உதாசனம் (=கொடுமை) + அன் = உதாசனன் = கொடியவன்

உதாசினம், உதாசீனம்

விருப்பு வெறுப்பு இல்லாமை

உந்தாசினம்

உந்து (=தள்ளு, விலக்கு, வெறு) + ஆசை (=விருப்பம்) + இன்மை + அம் = உந்தாசினம் >>> உதாசினம் = விருப்பு வெறுப்பு இல்லாமை

உதாசினம்

அலட்சிய வார்த்தை

உந்தாசினம்

உந்து (=வெளிப்படுத்து) + ஆசு (=பற்று, சொல்) + இன்மை + அம் = உந்தாசினம் >>> உதாசினம் = பற்றின்மையை வெளிப்படுத்தும் சொல்.

உதாத்தம்

உயர்த்திக் கூறுதல், எடுத்தலோசை

உந்தற்றம்

உந்து (=உயர்) + அறை (=கூறு, ஒலி) + அம் = உந்தற்றம் >>> உதாத்தம் = உயர்த்திக் கூறுதல், எடுத்தலோசை

உதாரணம்

எடுத்துக்காட்டு

உந்தாரணம்

(1) உந்து (=வெளிப்படுத்து, கூறு) + ஆர் (=ஒளி, விளக்கம், ஒப்பு, பொருத்து) + அணம் = உந்தாரணம் >>> உதாரணம் = விளக்கத்திற்காக ஒப்பாகப் பொருத்திக் கூறப்படுவது. (2) உந்து (=பொருந்து) + ஆர் (=ஒளி, விளக்கம், ஒப்பு, ஒலி, கூறு) + அணம் = உந்தாரணம் >>> உதாரணம் = விளக்கத்திற்காக ஒப்பாகப் பொருத்திக் கூறப்படுவது

உதாரம்

கொடை, பசியாற்றுதல்

உத்தறம், உய்த்தாரம், உந்தாரம்

(1) உதவு / உத (=கொடு) + அறம் (=நற்செயல்) = உத்தறம் >>> உதாரம் = கொடுக்கும் நற்செயல் = கொடை. (2) உய் (=அனுபவி, கொடு) + தாரம் (=உணவு, பொருள்) = உய்த்தாரம் >>> உதாரம் = உணவை / பொருளை அனுபவிக்கக் கொடுத்தல். (3) உந்தி (=வயிறு) + ஆர் (=நிறை) + அம் = உந்தாரம் >>> உதாரம் = வயிற்றை நிறைவித்தல்

உதாரம்

மேன்மை

உந்தாரம்

உந்து (=உயர்) + ஆர் (=பொருந்து) + அம் = உந்தாரம் >>> உதாரம் = உயர்வு பொருந்தியது = மேன்மை

உதாரன்

கொடையாளி, சிறந்தவன்

உதாரன்

உதாரம் (=கொடை, மேன்மை) + அன் = உதாரன் = கொடையாளி, மேன்மை உடையவன்

உதி

தோன்று

உந்து

உந்து (=வெளிப்படு, தோன்று) >>> உந்தி >>> உதி

உதி

அறிவு, எண்ணம்

உந்தி

உந்து (=எழு, தோன்று) + இ = உந்தி >>> உதி = தோன்றுவது = எண்ணம்

உதிதன்

தோன்றியவன்

உதிறன்

உதி (=தோன்று) + இறு (=முடி) + அன் = உதிறன் >>> உதிதன் = தோன்றி முடித்தவன்

உதிப்பு

தோற்றம், அறிவு

உதிப்பு

உதி (=தோன்று) + பு = உதிப்பு = தோன்றுவது = தோற்றம், அறிவு

உதிரம்

இரத்தம்

உந்தீரம்

உந்து (=வெளிப்படு, பெருகு) + ஈர் (=அறு, ஒழுகு, பசுமை, நெய்ப்பு) + அம் = உந்தீரம் >>> உதிரம் = அறுத்தால் வெளிப்பட்டுப் பெருகி ஒழுகும் நெய்ப்புடைய பசும்பொருள்.

உதீசி

வடக்கு

உந்துழி

உந்து (=உயர், பெரு) + உழி (=இடம், பூமி) = உந்துழி >>> உத்திசி >>> உதீசி = உயர்ந்து பெருத்த பூமி = மலை >>> மலை இருக்கும் திசை. ஒ.நோ: உத்தரம், உதக்கு

உதும்பரம்

செம்பு, செவ்வகத்தி, அத்தி,செவ்வெருக்கு

உதிம்மறம்

உதி (=தோன்று) + மறம் (=சினம், சிவப்பு) = உதிம்மறம் >>> உதும்பரம் = சிவப்புநிறம் தோன்றுவது = செம்பு, அத்தி, செவ்வகத்தி, செவ்வெருக்கு

உதும்பரம்

வாசல்

உய்தூம்பறம்

உய் (=தப்பு, செல்) + தூம்பு (=துளை, வழி) + அறை (=வீடு) + அம் = உய்தூம்பறம் >>> உதும்பரம் = வீட்டிற்குள் செல்லும் வழி.

உந்துரு

பெருச்சாளி

உத்திரூ

ஊது (=துளை, தோண்டு) + இருமை (=கருமை, பெருமை) + ஊ (=ஊன், உடல்) = உத்திரூ >>> உந்துரு = தோண்டக்கூடிய பெரிய கரிய உடலுடையது.  

உப்பரிகை, உபரிகை

மேல்மாடி

உம்பரிங்கை

உம்பர் (=மேலிடம்) + இங்கு (=தங்கு) + ஐ = உம்பரிங்கை >>> உப்பரிகை >>> உபரிகை = தங்குகின்ற மேலிடம்

உபகரணம்

செயல் கருவி, துணைப்பொருள்

ஒப்பகரணம்

ஒப்பம் (=உடனிலை, துணை) + கரணம் (=செயல், கருவி) = ஒப்பகரணம் >>> உபகரணம் = செயலுக்குத் துணையாகும் கருவி

உபகரி

உதவு

உபகரி

உபகாரம் (=உதவி) >>> உபகரி = உதவு

உபகாரம்

உதவி, கொடை

ஒப்பகாரம்

ஒப்பம் (=உடனிலை, துணை) + காரம் (=செயல்) = ஒப்பகாரம் >>> உபகாரம் = துணையாகச் செயல்படுதல் = உதவி

உபகாரி

கொடையாளி

உபகாரி

உபகாரம் (=உதவி, கொடை) + இ = உபகாரி = கொடையாளி

உபகிருதம், உபகிருதி

உதவி

ஒப்பகிருதம்

ஒப்பம் (=உடனிலை, துணை) + கிருதம் (=செயல்) = ஒப்பகிருதம் >>> உபகிருதம் = துணையாகச் செயல்படுதல் = உதவி

உபகுல்லம்

சுக்கு

உவக்கெல்லம்

உவி (=வற்று) + அஃகு (=சுருங்கு) + எல்லம் (=இஞ்சி) = உவக்கெல்லம் >>> உபகுல்லம் = வற்றிச் சுருங்கிய இஞ்சி

உபசங்காரம்

கேடு, அழிவு, முடிவு

உப்பசய்காரம்

உப்பு (=இனிமை, நன்மை) + அசை (=நீங்கு, இல்லாகு) + காரம் (=செயல்) = உப்பசய்காரம் >>> உபசங்காரம் = நன்மை இல்லாத செயல்

உபசந்தானம்

துணையாகப் பொருத்துகை, தொடுத்தல்

ஒப்பசாற்றணம்

ஒப்பம் (=உடனிலை, துணை) + சாற்று (=பொருத்து) + அணம் = ஒப்பசாற்றணம் >>> ஒப்பசாத்தனம் >>> உபசந்தானம் = துணையாகப் பொருத்துகை., தொடுத்தல்.

உபசமனம்

அமைதி

உவசைபானம்

உவி (=அழி, இல்லாகு) + அசை (=சொல், ஒலி) + பான்மை (=தன்மை) + அம் = உவசைபானம் >>> உபசமனம் = ஒலி இல்லாத தன்மை

உபசயம்

மிகுதி, பெருக்கம், வளர்ச்சி

உவசயம்

உவி (=அழி, இல்லாகு) + அசை (=குறை) + அம் = உவசயம் >>> உபசயம் = குறைவின்மை = பெருக்கம், வளர்ச்சி, மிகுதி

உபசாரம், உபசரணை

இன்மொழி கூறி ஏற்றல், வரவேற்பு

உப்பசாரம்

உப்பு (=இனிமை) + அசை (=சொல்) + ஆர் (=பெறு, ஏற்றுக்கொள், ஒலி, கூறு) + அம் = உப்பசாரம் >>> உபசாரம் = இனியசொல் கூறி ஏற்றல்.

உபசரி

வரவேற்பு செய்

உபசரி

உபசாரம் (=வரவேற்பு) >>> உபசரி = வரவேற்பு செய்

உபத்தம், உபச்`தம்

இனப்பெருக்க உறுப்பு, பெண்குறி

ஒம்பற்றம்

ஓம்பு (=உண்டாக்கு, பிறப்பி) + அறை (=உறுப்பு) + அம் = ஒம்பற்றம் >>> உபத்தம் = உண்டாக்கும் / பிறப்பிக்கும் உறுப்பு = பெண்குறி

உபத்தானம், உபச்`தானம்

சந்திகால முடிவில் கூறப்படுவது

உவந்தாணம்

உவி (=அழி, முடி) + அந்தி + ஆணை (=உறுதிமொழி) + அம் = உவந்தாணம் >>> உபத்தானம் = அந்தி முடிவில் கூறும் உறுதிமொழி

உபத்திரவம்

துன்பம்

உப்பற்றிறவம்

உப்பு (=இன்பம்) + அல் + திறம் (=செயல்) + அம் = உப்பற்றிறவம் >>> உபத்திரவம் = இன்பம் அல்லாத செயல் = துன்பம்.

உபதமிசம்

துணையாக உண்ணப்படுவது

ஒப்பத்தமிசம்

ஒப்பு (=இணை, துணை) + அத்தம் (=பொருள்) + மிசை (=உண்ணு) + அம் = ஒப்பத்தமிசம் >>> உபதமிசம் = துணையாக உண்ணப்படும் பொருள்

உபதாகம்

பனை மரம்

உப்பற்றகம்

உப்பு (=பொங்கு, உயர்) + அற்றம் (=கருமை) + அகம் (=மரம்) = உப்பற்றகம் >>> உப்பத்தகம் >>> உபதாகம் = உயரமான கரிய மரம்.

உபதானம்

தலையணை

உவ்வாறணம்

உவ்வி (=தலை) + ஆறு (=சும, தாங்கு) + அணை (=பொருந்து, படுக்கை) + அம் = உவ்வாறணம் >>> உப்பாதனம் >>> உபதானம் = படுக்கையில் தலையுடன் பொருந்தித் தாங்குவது = தலையணை

உபதானம்

அத்திவாரம்

ஒம்பாதாணம்

ஓம்பு (=பொறு, தாங்கு) + ஆதி (=முதல், அடிப்படை) + ஆணம் (=பற்றுக்கோடு, ஆதாரம்) = ஒம்பாதாணம் >>> உபதானம் = தாங்குகின்ற முதல் / அடிப்படை ஆதாரம்

உபதிருச்~டா

புரோகிதர்

ஒம்பத்திறுட்டா

ஓம்பு (=பேணு) + அத்து (=வழி, முறை) + இறை (=கடவுள், தொழில்) + உடை + ஆ = ஒம்பத்திறுட்டா >>> ஒப்பத்திருட்டா >>> உபதிருச்~டா = கடவுளை முறையாகப் பேணுவதைத் தொழிலாக உடையவர்

உபதேசம்

நல்லுரை

உப்பறேயம்

உப்பு (=இனிமை, நன்மை) + அறை (=சொல்) + ஏய் (=பொருந்து) + அம் = உப்பறேயம் >>> உபதேசம் = நன்மை பொருந்துமாறு கூறப்படுவது.

உபதேசி

நல்லுரை கூறு

உபதேசி

உபதேசம் (=நல்லுரை) >>> உபதேசி = நல்லுரை கூறு

உபதை

சோதனை

ஒப்பறை

ஒப்பு + அறி + ஐ = ஒப்பறை >>> உபதை = ஒப்பிட்டு அறிதல்.

உபநயனம்

சிறுவர்கள் பூணூல் தரிக்கும் சடங்கு

ஒம்பணாயணம்

ஓம்பு (=பொறு, தரி) + அண் (=கயிறு) + ஆயம் (=சிறார், கடமை) + அணம் = ஒம்பணாயணம் >>> >>> உபநயனம் = சிறார் கயிறு தரிக்கும் கடமை.

உபநியாசம்

இனிமையாக வருணித்துப் பேசுதல்

உப்பணியசம்

உப்பு (=இனிமை) + அணி (=அழகு, வர்ணனை) + அசை (=சொல், பேச்சு) + அம் = உப்பணியசம் >>> உபநியாசம் = இனிமையாகவும் அழகாகவும் வருணித்துப் பேசுதல்.

உபபத்தி

நியாயம்

ஒப்பமதி

ஒப்பம் (=ஏற்பு) + மதி (=கருத்து) = ஒப்பமதி >>> உபபத்தி = ஏற்புடைய கருத்து = நியாயம்

உபபத்தி

சொத்து

உப்பமத்தி

உப்பு (=பெருகு) + அமை + அத்தம் (=பொருள்) + இ = உப்பமத்தி >>> உபபத்தி = பெருகி அமைந்த பொருள்.

உபம்

இரண்டு

ஒப்பம்

ஒப்பு (=இணை) + அம் = ஒப்பம் >>> உபம் = இணை, சோடி, இரண்டு

உபமானம்

உவமையாகும் பொருள்

உவமாணம்

உவமை (=ஒப்பு) + அணை (=பொருந்து) + அம் = உவமாணம் >>> உபமானம் = ஒப்பாகப் பொருந்துவது.

உபமிதி

உவமையால் பெறும் அறிவு

ஒப்பமிதி

ஒப்புமை + அமை (=உண்டாகு) + இதம் (=அறிவு) + இ = ஒப்பமிதி >>> உபமிதி = ஒப்புமையால் உண்டாகிய அறிவு.

உபமேயம், உவமேயம்

ஒப்பு தோன்றுவது

உவமேயம்

உவமை (=ஒப்பு) + ஏய் (=எதிர்ப்படு, தோன்று) + அம் = உவமேயம் >>> உபமேயம் = ஒப்பு தோன்றுவது.

உபமை, உவமை

ஒப்புமை

ஒப்பமை

ஒப்பம் (=ஒப்பு) + ஐ = ஒப்பமை >>> உபமை >>> உவமை = ஒப்பு அமைந்தது.

உபயம், உபாயம்

இரண்டு

ஒப்பாயம்

ஒப்பு (=இணை) + ஆயம் (=எண்ணிக்கை) = ஒப்பாயம் >>> உபயம் = இணையில் உள்ள எண்ணிக்கை = இரண்டு

உபயம்

கொடை, உதவி

உய்பயம்

உய் (=கொடு) + பயம் (=பொருள்) = உய்பயம் >>> உபயம் = பொருளைக் கொடுத்தல் = கொடை., உதவி

உபயாத்தம், உபயார்த்தம்

இருபொருள் உடையது

உபயத்தம், உபயருத்தம்

உபயம் (=இரண்டு) + அத்தம் / அருத்தம் (=பொருள்) = உபயத்தம் / உபயருத்தம் >>> உபயாத்தம் / உபயார்த்தம் = இருபொருள் உடையது.

உபயோகம்

உதவி, பயன்பாடு

உப்பாயோக்கம்

உப்பு (=இனிமை, நன்மை) + ஆயம் (=கூட்டம்) + ஓக்கு (=ஆக்கு) + அம் = உப்பாயோக்கம் >>> உபயோகம் = கூடியிருந்து நன்மை உண்டாக்குதல்

உபயோகி

பயன்படுத்து

உபயோகி

உபயோகம் (=பயன்பாடு) >>> உபயோகி = பயன்படுத்து

உபரசம்

பாறையுப்பு

உப்பறயம்

உப்பு + அறை (=பாறை) + அம் = உப்பறயம் >>> உபரசம் = பாறையுப்பு

உபரதம்

பாறையுப்பு

உப்பாரறம்

உப்பு + ஆர் (=பெறு) + அறை (=பாறை, வெட்டு) + அம் = உப்பாரறம் >>> உபரதம் = பாறையை வெட்டிப் பெறும் உப்பு

உபரதி

பொருள் பற்றின்மை

உவரத்தி

உவர் (=வெறு) + அத்தம் (=பொருள்) + இ = உவரத்தி >>> உபரதி = பொருளை வெறுத்தல்

உபரதி

செயலை வெறுத்தல்

உவராற்றி

உவர் (=வெறு) + ஆற்று (=செய்) + இ = உவராற்றி >>> உபராத்தி >>> உபரதி = செயலை வெறுத்தல்

உபராகம்

சூரிய & சந்திர கிரகணங்கள்

ஒம்பரகம்

ஓம்பு (=காவல்செய், மறை) + அரி (=சூரியன், சந்திரன்) + அகம் (=ஆகாயம், உள்ளடக்கம்) = ஒம்பரகம் >>> உபராகம் = ஆகாயத்தில் சூரிய சந்திரரை உள்ளடக்கி மறைத்தல்.

உபரி

மேலிடம்

உம்பரி

உம்பர் (=மேலிடம்) + இ = உம்பரி >>> உபரி

உபரி

மிகுதி

உவாரி

உவ (=விரும்பு) + ஆர் (=பரவு, கட) + இ = உவாரி >>> உபரி = விருப்பம் / தேவையைக் கடந்தது = மிகுதி.

உபலம்

பளிங்கு, ஒளிவீசும் கல்

ஊழ்ப்பாலம்

ஊழ் (=முதிர்வு, வலிமை, சூரியன், ஒளி) + பால் (=துண்டு) + அம் = ஊழ்ப்பாலம் >>> உபலம் = ஒளிவீசும் வலிமையான துண்டு = பளிங்கு

உபலம்பம்

ஒப்பிட்டு அறிதல், அடையாளங்காணல்

ஒப்பளப்பம்

ஒப்புமை + அளப்பு (=ஆலோசனை, அறிவு) + அம் = ஒப்பளப்பம் >>> உபலம்பம் = ஒப்பிட்டு அறிதல், அடையாளம் காணுதல்.

உபலாளனம், உபலாலனை

கொண்டாட்டம்

உப்பளாலணம்

உப்பு (=இனிமை, மகிழ்ச்சி) + அளை (=கல, கூடு) + ஆலு (=ஒலி) + அணம் = உப்பளாலணம் >>> உபலாலனை = கூடி ஒலித்து மகிழ்தல்

உபலாளனம்

தூய்மை செய்தல்

உய்மலளணம்

உய் (=நீக்கு) + மலம் (=கழிவு) + அளை (=கூட்டு) + அணம் = உய்மலளணம் >>> உபலாளனம் = கழிவுகளைக் கூட்டி நீக்குதல்

உபவனம்

மலர்ச்சோலை

உப்பாவாணம்

உப்பு (=இனிமை, பெருகு, மிகு) + ஆவி (=புகை, மணம்) + ஆணம் (=இடம்) = உப்பாவாணம் >>> உபவனம் = இனிய மணம் மிக்க இடம் = மலர்ச்சோலை

உபவாசம்

உண்ணாவிரதம்

ஒம்பவசம்

ஓம்பு (=தடு, விலக்கு) + அவி (=உணவு) + அசை (=தங்கு, இரு) + அம் = ஒம்பவசம் >>> உபவாசம் = உணவினை விலக்கி இருத்தல்.

உபவாசி

உண்ணாதிருப்பவன், உண்ணாதிரு

உபவாசி

உபவாசம் (=உண்ணாவிரதம்) >>> உபவாசி = உண்ணாதிருப்பவன், உண்ணாதிரு

உபவீதம், உபவீதி

பூணூல்

ஒம்பவுறம்

ஓம்பு (=விலக்கு, பொறு, தாங்கு, தரி) + அவம் (=குற்றம், பாவம்) + உறி (=கயிறு) + அம் = ஒம்பவுறம் >>> உபவீதம் = பாவத்தை விலக்கத் தரிக்கப்படும் கயிறு.

உபாக்கியானம்

கிளைக்கதை

ஒம்பகையாணம்

ஓம்பு (=உண்டாக்கு) + அகை (=கிளை) + ஆணம் (=அறிவு, செய்தி) = ஒம்பகையாணம் >>> உபக்கியானம் = கிளைத்து உண்டாக்கிய செய்தி

உபாங்கம்

சார்புறுப்பு

ஒப்பங்கம்

ஒப்பு (=உடனிலை, சார்பு) + அங்கம் (=உறுப்பு) = ஒப்பங்கம் >>> உபாங்கம் = சார்ந்த உறுப்பு

உபாங்கம்

பறை வகை

உய்வாங்கம்

உய் (=அறிவி) + வாங்கு (=அடி, வளைவு, ஒலி) + அம் = உய்வாங்கம் >>> உபாங்கம் = அறிவிப்பதற்காக அடித்து ஒலிக்கப்படும் வளைவுடைய பொருள் = பறை.

உபாசனம், உபாசனை

வழிபாடு

ஒம்பாசணம்

(2) ஓம்பு (=பேணு, போற்று) + ஆசு (=பற்றுக்கோடு) + அணம் = ஒம்பாசணம் >>> உபாசனம் = பற்றுக்கோடாகிய இறையைப் பேணுதல்

உபாசி

வழிபடு

உபாசி

உபாசனம் (=வழிபாடு) >>> உபாசி = வழிபடு

உபாத்தியாயன்

ஆசிரியன், குரு

உய்மத்தீயாயன், ஒம்பறியாயன்

(1) உய் (=நீக்கு, ஈடேற்று) + மத்தம் (=மயக்கம், அறியாமை) + ஈ (=கொடு) + ஆய் (=அறி) + அன் = உய்மத்தீயாயன் >>> உபாத்தியாயன் = அறியாமை நீக்கி அறிவைத் தந்து ஈடேற்றுபவன். (2) ஓம்பு (=நீக்கு) + அறி + ஆய் (=மலம்) + அன் = ஒம்பறியாயன் >>> உப்பதியாயன் >>> உபாத்தியாயன் = அறிவின் மலங்களை நீக்குபவன்.

உபாத்தி

ஆசிரியன், குரு

உய்மத்தி, ஒம்பறி

(1) உய் (=நீக்கு) + மத்தம் (=மயக்கம், அறியாமை) + இ = உய்மத்தி >>> உபாத்தி = அறியாமையை நீக்குபவன். (2) ஓம்பு (=உண்டாக்கு) + அறி = ஒம்பறி >>> உப்பதி >>> உபாத்தி = அறிவை உண்டாக்குபவன்.

உபாதானம்

முழுமுதல் காரணம்

ஒம்பாதாணம்

ஓம்பு (=உண்டாக்கு) + ஆதி (=முதல்) + ஆணம் (=பற்றுக்கோடு) = ஒம்பாதாணம் >>> உபாதானம் = ஆக்கத்திற்கான முதல் பற்றுக்கோடு

உபாதானம்

உணவுக் கொடை

உய்பதணம்

உய் (=கொடு) + பதம் (=உணவு) + அணம் = உய்பதணம் >>> உபாதானம் = உணவு கொடுத்தல்

உபாதி

கடமை

ஒம்பாற்றி

ஓம்பு (=பேணு, போற்று) + ஆற்று (=செய்) + இ = ஒம்பாற்றி >>> உப்பாத்தி >>> உபாதி = போற்றிச் செய்யப்படுவது = கடமை

உபாதி

மாயத் தோற்றம்

ஒம்பற்றி

ஓம்பு (=உண்டாக்கு, தோற்றுவி) + அற்றம் (=அறியாமை, மயக்கம்) + இ = ஒம்பற்றி >>> உப்பத்தி >>> உபாதி = மயக்கம் தரும் தோற்றம்.

உபாதி, உபாதை

வேதனை, துன்பம், நோய்

உப்பறி

உப்பு (=இன்பம்) + அறு (=இல்லாகு) + இ = உப்பறி >>> உபாதி = இன்பம் இல்லாதது = துன்பம், நோய்.

உபாதி

துன்புறுத்து

உபாதி

உபாதி (=துன்பம்) >>> உபாதி = துன்புறுத்து

உபாதேயம்

ஏற்றுக்கொள்ளத் தக்கது

ஒப்பதேயம்

ஒப்பது (=ஏற்பது) + ஏய் (=தகு) + அம் = ஒப்பதேயம் >>> உபாதேயம் = ஏற்கத் தக்கது

உபாம்சு, உபாஞ்சு

மென்மையாக ஒலிக்கப்படுவது

ஒம்பச்சு

ஓம்பு (=காப்பாற்று) + அசை (=மெலி, ஒலி) + உ = ஒம்பச்சு >>> உபாஞ்சு >>> உபாம்சு = மென்மை காத்து ஒலிக்கப்படுவது

உபாயம்

தப்பிக்கும் வழி, நடத்தும் முறை

உய்வாயம்

உய் (=தப்பு, நடத்து) + வாய் (=வழி, முறை) + அம் = உய்வாயம் >>> உபாயம் = தப்பிக்கும் வழி, நடத்தும் முறை

உபாயம்

மிகச் சிறியது

உப்பாயம்

உப்பு (=பெருகு, மிகு) + ஆய் (=சிறுமை) + அம் = உப்பாயம் >>> உபாயம் = மிகச் சிறியது

உபாயனம்

காணிக்கை

ஒம்பயணம்

ஓம்பு (=பேணு, போற்று, கொடு) + ஐ (=இறைவன், அரசன், பெரியோர்) + அணம் = ஒம்பயணம் >>> உபாயனம் = இறைவனுக்கு / பெரியோர்க்குப் போற்றிக் கொடுக்கப்படுவது

உபாலம்பனம்

திட்டுதல், இழிவுசெய்தல்

உய்மாலம்மணம்

உய் (=நீக்கு) + மால் (=பெருமை) + அம் (=சொல்) + அணம் = உய்மாலம்மணம் >>> உபாலம்பனம் = பெருமையை நீக்கும் சொல் = அவமரியாதை, இழிவு.

உபானம்

மிதியடி, செருப்பு

ஒம்பணம்

ஓம்பு (=பாதுகா) + அணை (=பொருந்து, தண்டு, கால்) + அம் = ஒம்பணம் >>> உபானம் = காலில் பொருந்திப் பாதுகாப்பது = மிதியடி

உபேட்சை, உபேச்சை

புறக்கணிப்பு

ஒப்பெஞ்சை

ஒப்பு (=கவனம்) + எஞ்சு (=அழி, கட) + ஐ = ஒப்பெஞ்சை >>> உபேட்சை = கவனிக்காமல் கடத்தல் = புறக்கணிப்பு

உபேட்சி

புறக்கணி

உபேச்சி

உபேச்சை (=புறக்கணிப்பு) >>> உபேச்சி = புறக்கணி

உபோற்காதம்

பாயிரம்

உய்வொருக்கறம்

உய்வு (=அனுபவம், பயன்) + ஒருக்கு (=அடக்கு, சுருக்கு) + அறை (=சொல்) + அம் = உய்வொருக்கறம் >>> உபோற்காதம் = அனுபவத்தை / பயனைச் சுருக்கமாக அடக்கிச் சொல்வது = பாயிரம்

உம்பளம்

மானிய நிலம்

உய்வளம்

உய்வு (=கொடை, அனுபவம்) + அளம் (=நிலம்) = உய்வளம் >>> உவ்வளம் >>> உம்பளம் = அனுபவிக்கக் கொடுக்கப்பட்ட நிலம்

உம்மத்து

பின்பற்றுவோர்

உய்ப்பற்று

உய் (=செல், நட) + பற்று (=ஏற்றுக்கொள், தொடர்) = உய்ப்பற்று >>> உம்மத்து = ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செல்பவர்

கிருதம்

முடிந்த செயல், செய்யப்பட்டது

குறிறம்

குறை (=செயல்) + இறு (=முடி) + அம் = குறிறம் >>> குரிதம் >>> கிருதம் = முடிந்த செயல் = செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.