சனி, 15 மே, 2021

75 - (இலத்தி -> உத்தாபி) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

இலத்தி, இலத்தை, லத்தி

விலங்கின் மலம்

இளேற்றி

இளி (=உரி, கழி) + ஏறு (=அழிவு, கேடு, விலங்கு, பொருள்) + இ = இளேற்றி >>> இளத்தி >>> இலத்தி = விலங்கு கழிக்கும் கெட்டபொருள்..

இலண்டம்

விலங்கின் மலம்

இளேற்றம்

இளி (=உரி, கழி) + ஏறு (=அழிவு, கேடு, விலங்கு, பொருள்) + அம் = இளேற்றம் >>> இளட்டம் >>> இலண்டம் = விலங்கு கழிக்கும் கெட்டபொருள்..

இலதை

படர்கொடி

இலாதை

இல் (=நீங்கு, செல்) + ஆதி (=சுற்று, அடிப்படை, பற்றுக்கோடு) + ஐ = இலாதை >>> இலதை = பற்றுக்கோட்டைச் சுற்றிச் செல்வது.

இலாபம், லாபம்

ஆதாயம், மிகுதி

இலவம்

இல் (=இன்மை, எதிர்மறை) + அவம் (=வீண், நட்டம்) = இலவம் >>> இலாபம் = நட்டத்தின் எதிர்மறை = ஆதாயம், மிகுதி

இலபி

பயனடை

இலபி

இலாபம் (=ஆதாயம்) >>> இலபி = ஆதாயம் பெறு, பயனடை

இலம்பகம்

பூமாலை

இலாப்பாக்கம்

இலை (=பூ) + ஆப்பு (=கட்டு) + ஆக்கம் (=செய்யப்பட்டது) = இலாப்பாக்கம் >>> இலம்பகம் = பூக்களைக் கட்டிச் செய்யப்பட்டது.

இலம்பம், இலம்பனம்

பூமாலை

இலாப்பம்

இலை (=பூ) + ஆப்பு (=கட்டு) + அம் = இலாப்பம் >>> இலம்பம் = பூக்களால் கட்டப்பட்டது.

இலம்பம், இலம்பனம்

செங்குத்து

இலவ்வம்

இல் (=இன்மை) + அவ்வி (=கோணு, சாய்) + அம் = இலவ்வம் >>> இலம்பம் = கோணல் / சாய்வு இல்லாதது = நேரானது, செங்குத்து.

இலம்பம், இலம்பனம்

தொங்கல்

இலம்மம்

இல் (=இன்மை) + அமை + அம் = இலம்மம் >>> இலம்பம் = அமைவு இல்லாதது = தொங்கல்.

இலம்பு, லம்பு

தொங்கு

இலம்பு

இலம்பம் (=தொங்கல்) >>> இலம்பு = தொங்கு

இலயம், லயம்

பூமியின் அழிவு

இலயம்

இல் (=இல்லாகு, அழி) + அயம் (=இடம், பூமி) = இலயம் = பூமியின் அழிவு.

இலயம், லயம்

சேர்க்கை, இணைப்பு

இலாயம்

இல் (=இன்மை) + ஆய் (=நீக்கு, பிரி) + அம் = இலாயம் >>> இலயம் = பிரிவு இல்லாமை = சேர்க்கை.

இலயி, லயி

ஒன்றுசேர்

இலயி

இலயம் (=சேர்க்கை) >>> இலயி = சேர், இணை

இலயி, லயி

அழி

இலயி

இலயம் (=அழிவு) >>> இலயி = அழி

இலலாடம், இலாடம்

நெற்றி

இலலாடம்

(2) இல் (=இடம், மனைவி, பெண்) + அலை + ஆடு (=பூசு, வரை) + அம் = இலலாடம் = பெண்கள் அலைவடிவங்களைப் பூசி வரையும் இடம்.

இலவங்கம், இலவம்

கிராம்பூ

இலவக்கம்

இலை (=பூ) + அவி (=உலர், உணவு) + அகை (=எரி, முறி) + அம் = இலவக்கம் >>> இலவங்கம் = முறிந்து உலர்ந்த எரிச்சல்தரும் பூவுணவு

இலவணம்

உப்பு

இலவானம்

இலம் (=வறுமை, சிறுமை) + வான்மை (=வெண்மை) + அம் (=உணவு, இனிமை) = இலவானம்  >>> இலவணம் = உணவில் இனிமைக்கான சிறுத்த வெண்ணிறப் பொருள்.   

இலவம்

சிறுமை

இலவம்

இலம் (=வறுமை, சிறுமை) + அம் = இலவம்

இலாக்கா, இலாகா

இடப்பிரிவு, துறை

இலக்கா

இல் (=இடம்) + அகை (=பிரி) + ஆ = இலக்கா >>> இலாக்கா = இடத்தின் பிரிவு.

இலாக்கிரி

செம்மெழுகு

இளக்கிரி

இளை (=மெலி) + அகை (=எரி, தீ) + இரி (=ஓடு, ஒழுகு) = இளக்கிரி >>> இலாக்கிரி = எரித்தால் ஒழுகும் மென்மையும் தீநிறமும் கொண்டது.

இலாகவம்

திறமை

எளாக்கவம்

எளிமை + ஆக்கம் (=செயல்) + அம் = எளாக்கவம் >>> இலாகவம் = எளிதாகச் செய்தல் = திறமை.

இலாவகம்

திறமை

இலவாக்கம்

இலம் (=எளிமை) + ஆக்கம் (=செயல்) = இலவாக்கம் >>> இலாவகம் = எளிதாகச் செய்தல் = திறமை

இலாகிரி

போதை, கள்வெறி

இலாக்கிறி

இலம் (=வறுமை, சிறுமை) + ஆக்கம் (=அறிவு) + இறு (=கெடு) + இ = இலாக்கிறி >>> இலாகிரி = அறிவைக் கெடுத்துச் சிறுமைப்படுத்துவது.

இலாகு

தாங்கல்

எலாகு

ஏல் (=மேற்கொள்) + ஆகம் (=உடல், மார்பு, தோள்) + உ = எலாகு >>> இலாகு =  தோளின் மேல் கொள்ளுதல்

இலாகை

முறை, விதம்

இலாக்கை

இல் (=துளை, வழி) + ஆக்கம் (=செயல்) + ஐ = இலாக்கை >>> இலாகை = செயலுக்கான வழி

இலாங்கலி

தென்னை

இலங்கலி

இலை (=புல்) + அம் (=நீர், இனிமை) + கலம் (=பாத்திரம்) + இ = இலங்கலி >>> இலாங்கலி = இனியநீர்க் கலமுடைய புல்வகை.

இலாங்கலி

கலப்பை

இலக்கலி

இல் (=துளை, குத்து) + அகம் (=இடம், பூமி) + அலை (=திரி) + இ = இலக்கலி >>> இலாங்கலி = பூமியைக் குத்தியவாறே திரிவது.

இலாங்கூலம்

விலங்கின் வால்

இலங்குலம்

இலம் (=வறுமை, சிறுமை) + அங்கம் (=உடல், உறுப்பு) + உல (=குறை, முடி) + அம் = இலங்குலம் >>> இலாங்கூலம் = உடலில் சிறிதாகக் குறைந்து முடியும் உறுப்பு = விலங்கின் வால்.

இலாசம்

பொறி

எளசம்

எளிமை (=அற்பம், இலேசு) + அசை (=உண்ணு) + அம் = எளசம் >>> இலாசம் = இலேசான உணவு = பொறி.

இலாஞ்சனம், இலாஞ்சனை

முத்திரை

இலச்சணம்

இல் (=துளை, குத்து) + அச்சு (=உடல், வடிவம்) + அணை (=உண்டாக்கு) + அம் = இலச்சணம் >>> இலாஞ்சனம் >>> இலாஞ்சனை = குத்தி உண்டாக்கப்படும் வடிவம்.

இலாஞ்சனம், இலாஞ்சனை

கூச்சம்

இலச்சை

இலச்சை (=கூச்சம்) + அணம் = இலச்சணம் >>> இலாஞ்சனம் >>> இலாஞ்சனை

இலாஞ்சி, இலாய்ச்சி

ஏலக்காய்

அயிலச்சி

அயில் (=நறுமணம்) + அசை (=தட்டு, நசுக்கு, உண்ணு, முடி, சேர்) + இ = அயிலச்சி >>> ஐலாஞ்சி >>> இலாஞ்சி = நறுமணத்திற்காக முடிவில் நசுக்கிச் சேர்க்கும் உணவு.

இலாட்சை

செம்மெழுகு

எலச்சை

எல் (=எரி, தீ) + அசை (=மெலி, செல், ஒழுகு) + ஐ = எலச்சை >>> இலாட்சை = எரித்தால் ஒழுகும் மென்மையும் தீநிறமும் உடையது.

இலாடம்

பாதத்தில் அடிக்குமிரும்பு

அயிலடம்

(2) அயில் (=இரும்பு) + அடி (=அடித்தல், பாதம்) + அம் = அயிலடம் >>> ஐலடம் >>> இலாடம் = பாதத்தில் அடிக்கும் இரும்பு.

இலாமிச்சை, இலாமிச்சு, இலாமச்சை

நறுமண வேருடைய நீண்ட புல்வகை

அயிலவீழை

அயில் (=நறுமணம், புல்) + அம் (=நீளம்) + வீழ் (=வேர்) + ஐ = அயிலவீழை >>> ஐலமீசை >>> இலாமிச்சை = நறுமண வேருடைய நீண்ட புல்வகை.

இலாவணியம்

பசுமை அழகு

இளவணியம்

(2) இளமை (=பசுமை) + அணி (=அழகு) + அம் = இளவணியம் >>> இலாவணியம் = பசுமை அழகு.

இலாவணம்

போருக்கு ஆள் சேர்த்தல்

ஏலாவனம்

ஏல் (=எதிர், போரிடு, தகு) + ஆ (=கட்டு, சேர்) + வனை (=எழுது) + அம் = ஏலாவனம் >>> இலாவணம் = போருக்குத் தகுதியானவரை எழுதிச் சேர்த்தல் = போருக்கு ஆள் சேர்த்தல்.

இலாச்சு^

வைத்தியம்

இலாசு

இல் (=இல்லாக்கு, நீக்கு) + அசா (=துன்பம், நோய்) + உ = இலாசு >>> இலாச்சு^ = நோயை நீக்குதல் = மருத்துவம்.

இலிகிதம்

கடிதம், எழுதப்பட்டது

இலக்கிறம்

இலக்கு (=எழுது) + இறு (=முடி) + அம் = இலக்கிறம் >>> இலக்கிதம் >>> இலிகிதம் = எழுதி முடித்தது = கடிதம்

இலிகுசம்

எலுமிச்சை

எலீகூசம்

எல் (=ஒளி) + ஈ (=கொடு) + கூசு + அம் (=நீர், பழம்) = எலீகூசம் >>> இலிகுசம் = கூசும் நீரைத் தரும் ஒளிமிக்க பழம்.

இலிங்கம்

ஆண் குறி

இல்லிங்கம்

இல்லி (=துளை) + இங்கு (=அழுந்து) + அம் = இல்லிங்கம் >>> இலிங்கம் = துளைக்குள் அழுந்துவது

இலிங்கம்

சிவபெருமானின் ஒளிவடிவம்

இலிகம்

(2) இல் (=வெளி, ஆகாயம்) + இகு (=தாண்டு) + அம் (=ஒளி) = இலிகம் >>> இலிங்கம் = ஆகாயத்தைத் தாண்டிய ஒளி.

இலிங்கம்

சிறுகுறிப்பு, அடையாளம்

இலிங்கம்

இலம் (=வறுமை, சிறுமை) + இங்கம் (=குறிப்பு) = இலிங்கம் = சிறு குறிப்பு = அடையாளம்.

இலிங்கி

துறவி

இலிங்கி

இல் (=வீடு, வீடுபேறு) + இங்கு (=அழுந்து) + இ = இலிங்கி = வீடுபேற்றில் அழுந்தியவர்.

இலிபி

கீறல் தோற்றம், எழுத்து

எலீவி

(2) ஏல் (=பொருந்து, தோன்று) + ஈவு (=பகுப்பு, கீறல்) + இ = எலீவி >>> இலிபி = கீறலால் பொருந்திய தோற்றம்.

இலீலை

விளையாட்டு

இளுலை

இளி (=சிரி) + உலை (=அலை, ஆடு) = இளுலை >>> இலுலை >>> இலீலை = சிரித்து ஆடுதல் = விளையாட்டு.

இலேகர்

தேவர்

இலேகர்

இல் (=ஆகாயம், வானம்) + ஏகு (=கட) + அர் = இலேகர் = வானத்தைக் கடந்தவர்கள் = தேவர்.

இலேகியம்

மென்மையான நெகிழ்பொருள்

இளேகியம்

இளமை (=மென்மை) + ஏகு (=நெகிழ்) + இயம் = இளேகியம் >>> இலேகியம் = மென்மையும் நெகிழ்ச்சியும் உடையது.

இலேசு, இலேசம்

மெலிவானது, அற்ப்மானது

இளேயம்

இளமை (=மென்மை) + ஏய் (=பொருந்து) + அம் = இளேயம் >>> இலேசம் = மென்மை பொருந்தியது = மெலிவானது, அற்பமானது

இலேசுணம்

நுண்பொடி

இலேசினம்

இலேசு (=அற்பம், மென்மை) + இனம் (=பொருள், வகை) = இலேசினம் >>> இலேசுணம் = அற்பமான மென்மையான பொருள் வகை

இலேபனம், இலேபம், இலேபை

பூசுதல், பூச்சு

எலேமணம்

ஏல் (=நீர், பொருத்து) + ஏமம் (=கலக்கம், பொடி) + அணம் = எலேமணம் >>> இலேபனம் = நீரில் பொடியைக் கலக்கிப் பொருந்தச் செய்தல்

இவனட்டம்

மிளகு

எமனற்றம்

ஏமம் (=இரவு, கருமை) + அனற்று (=எரி) + அம் (=உணவு) = எமனற்றம் >>> இவனட்டம் = எரிச்சல் தரும் கருநிற உணவு.

இளை

பூமி

இல்

இல் (=இடம்) + ஐ = இலை >>> இளை

இனன்

சூரியன்

இனன்

இனை (=எரி) + அன் = இனன் = எரிப்பவன்

இனாம்

கொடை

இனம்

ஈனு (=கொடு) + அம் = இனம் >>> இனாம் = கொடை

இச்`திரி

சூட்டினால் துணிதேய்த்தல்

இசத்தெரி

இசி (=இழு) + அத்து (=பொருத்து) + எரி (=வெப்பம்) = இசத்தெரி >>> இச்`திரி = வெப்பத்தைப் பொருத்தி இழுத்தல்.

ஈங்கிசை

துன்பம்

ஈக்கிசை

இகு (=கொல், அழி) + இசை (=இன்பம்) = ஈக்கிசை >>> ஈங்கிசை = இன்பம் இல்லாதது = துன்பம்.

ஈங்கிசை

ஏமாற்றுக் கொலை

ஈக்கிழை

இகு (=கொல்) + இழை (=நெருங்கிப் பழகு) = ஈக்கிழை >>> ஈங்கிசை = நெருங்கிப் பழகிக் கொல்லுதல்.

ஈசன்

இறைவன், அரசன், குரு

ஈசன்

இசை (=பாடு, புகழ்) + அன் = ஈசன் = பாடப்படும் புகழினைக் கொண்டவன் = இறைவன், அரசன், தலைவன், குரு.

ஈச்`வரன், ஈசுவரன், ஈச்சுரன்

இறைவன்

ஈச்சறன்

இசை (=புகழ்) + அறம் (=ஞானம்) + அன் = ஈச்சறன் >>> ஈச்`வரன் = புகழப்பெறும் ஞானம் கொண்டவன் = இறைவன்.

ஈஞ்சை

துன்பம்

இஞ்சை

இஞ்சை (=துன்பம்) >>> ஈஞ்சை

ஈஞ்சை, இஞ்சை

கொலை

ஈயை

ஈ (=அழி, கொல்) + ஐ = ஈயை >>> ஈசை >>> ஈஞ்சை = கொலை

ஈடகம்

விருப்பம்

ஈறகம்

இறை (=மனம், தங்கு) + அகை (=தளிர், தோன்று) + அம் = ஈறகம் >>> ஈடகம் = மனதில் தோன்றித் தங்கியது.

ஈடணை

விருப்பம்

ஈறணை

இறை (=மனம், தங்கு) + அணை (=உண்டாகு, தோன்று) = ஈறணை >>> ஈடணை = மனதில் தோன்றித் தங்கியது.

ஈதி, ஈதை

நாசம், கேடு

ஈறி

இறு (=அழி, கெடு) + இ = ஈறி >>> ஈதி = அழிவு, கேடு

ஈர்சை~

பொறாமை

எரியை

எரி + ஐ = எரியை >>> இரிசை >>> ஈர்சை = எரிச்சல், பொறாமை

ஈழம்

தங்கம்

ஈழம்

இழை (=ஒளிர், அணி) + அம் = ஈழம் = ஒளிரும் அணி

ஈழம்

கள்

ஈழம்

இழி (=இறக்கு) + அம் (=நீர், உணவு, வெண்மை) = ஈழம் = இறக்கப்பட்ட வெண்ணிற நீர் உணவு.

ஈழம்

இலங்கை

ஈழம்

இழை (=சூழ்) + அம் (=நீர்) = ஈழம் = நீரால் சூழப்பட்டது = தீவு

ஈனம்

தாழ்வு, குறைவு

ஈனம்

இனை (=அழி, கெடு, குறை) + அம் = ஈனம் = குறைவு, தாழ்வு, கேடு

ஈனாயம்

இழிவு, தாழ்வு, குறைவு, கேடு

இனையம்

இனை (=அழி, கெடு, குறை) + அம் = இனையம் >>> ஈனாயம் = குறைவு, தாழ்வு, கேடு

உக்கம்

நெருப்பு, தீ

உக்கம்

உகு (=அழி) + அம் (=நீர், நீர்ப்பசை) = உக்கம் = நீரை / நீர்ப்பசையை அழிப்பது, நீரால் அழிவது = தீ

உக்கம்

காளைமாடு

உக்கான்

ஊக்கம் (=வலிமை) + ஆன் (=மாடு) = உக்கான் >>> உக்கம் = வலிமையுள்ள மாடு = காளை.

உக்கம்

தலை

உங்கம்

ஊங்கு (=மேலானது) + அம் = உங்கம் >>> உக்கம் = மேலிருப்பது

உக்காரம்

வாந்தி

உக்காரம்

உகு (=வெளியிடு, கலங்கு) + ஆர் (=உண்ணு) + அம் = உக்காரம் = உண்ட உணவு கலங்கி வெளிப்படுதல் = வாந்தியெடுத்தல்.

உக்காரம், உங்காரம்

முக்கி ஒலித்தல்

உக்காரம்

ஊக்கம் (=முயற்சி, மிகுதி) + ஆர் (=ஒலி) + அம் = உக்காரம் = மிகவும் முயன்று ஒலித்தல்.

உக்கரி

வாந்தியெடு

உக்கரி

உக்காரம் (=வாந்தி) >>> உக்கரி = வாந்தியெடு

உக்கரி

முயன்று ஒலி

உக்கரி

உக்காரம் (=முயன்று ஒலித்தல்) >>> உக்கரி = முயன்று ஒலி

உக்கிரம்

தீ

உக்கீரம்

உகு (=அழி) + ஈரம் = உக்கீரம் >>> உக்கிரம் = ஈரத்தை அழிப்பது = தீ

உக்கிரம்

சினம்

உக்கீரம்

உகு (=அழி) + ஈரம் (=அன்பு, நட்பு) = உக்கீரம் >>> உக்கிரம் = அன்பை / நட்பை அழிப்பது = சினம்.

உக்கிரம்

ஊக்க மிகுதி

உக்கிரம்

ஊக்கம் + இருமை (=பெருமை, மிகுதி) + அம் = உக்கிரம் = ஊக்கமிகுதி

உக்கிரம்

தலைக்காவல்

உக்கிறம்

உக்கம் (=தலை) + இறை (=காவல்) + அம் = உக்கிறம் >>> உக்கிரம் = தலைக்காவல்

உக்கிராணம்

பொருள் வைப்பறை

உக்கிராணம்

ஊக்கம் (=மிகுதி) + இரு + ஆணம் (=பொருள், இடம்) = உக்கிராணம் = மிக்க பொருள் இருக்கும் இடம்.

உக்கிராந்தி, உத்கிராந்தி

இறக்கும் முன் பசுக்கொடை

உங்கிறாத்தி

ஊங்கு (=முன்பு) + இற + ஆ (=பசு) + தா (=கொடு) + இ = உங்கிறாத்தி >>> உக்கிராந்தி = இறக்கும் முன்பு பசுமாட்டினைக் கொடுத்தல்.

உக்கிருட்டம், உத்கிருச்~டம்

மேன்மை

உக்கிரீட்டம்

ஊக்கம் (=மிகுதி) + இருமை (=பெருமை) + ஈடு (=நிலை) + அம் = உக்கிரீட்டம் >>> உக்கிருட்டம் = பெருமை மிக்க நிலை.

உக்குமம்

ஏவல், கட்டளை

உக்குமம்

ஊக்கு (=தூண்டு) + மம் = உக்குமம் = தூண்டுவது = ஏவல், கட்டளை

உகம், யுகம்

இறந்த காலம்

உகம்

(2) உகு (=கழி, இற) + அம் (=காலம்) = உகம் >>> யுகம் = கழிந்த / இறந்த காலம்.

உகம், யுகம்

சோடி

உகம்

(2) உக (=பொருந்து, இணை) + அம் = உகம் = இணைந்தது, சோடி

உகம், யுகம்

பூமி

உங்கம்

(2) ஊங்கு (=மிகுதி, பெருமை) + அம் (=இடம்) = உங்கம் >>> உகம் >>> யுகம் = மிகப் பெரிய இடம் = பூமி

உகம், யுகம்

நுகம்

உகம்

(2) உகை (=பதி, செலுத்து) + அம் (=இடம், பூமி) = உகம் >>> யுகம் = பூமியில் பதித்துச் செலுத்தப் படுவது = நுகம்.

உகளம்

சோடி

உகளம்

உக (=பொருந்து) + அளை (=கூடு) + அம் = உகளம் = கூடிப் பொருந்தியது = சோடி.

உகாந்தம்

உலக முடிவு

உகந்தம்

உகம் (=பூமி, உலகம்) + அந்தம் (=முடிவு) = உகந்தம் >>> உகாந்தம் = உலக முடிவு.

உங்காரம்

உங் எனும் வண்டொலி

உங்கரம்

உங் + அரி (=வண்டு, ஒலி) + அம் = உங்கரம் >>> உங்காரம் = உங் என்னும் வண்டின் ஒலி.

உச்சம், உச்சி

முடிவு, எல்லை, நுனி

ஊழம்

ஊழ் (=முதிர், முடி) + அம் = ஊழம் >> ஊசம் >>> உச்சம் = முடிவு, எல்லை, நுனி.

உச்சவம், உற்சவம்

விழா

உய்யவம்

உய் (=நடத்து, அனுபவி, மகிழ், கொண்டாடு) + அவை (=மாந்தக் கூட்டம்) + அம் = உய்யவம் >>> உச்சவம் >>> உற்சவம் = மனிதர்கள் கூடி நடத்திக் கொண்டாடி மகிழ்வது.

உச்சவம், உற்சவம்

வளம், சொத்து, பொருள்

உய்யமம்

உய் (=வாழ், அனுபவி) + அமை (=உண்டாக்கு) + அம் = உய்யமம் >>> உச்சவம் = வாழ்வை அனுபவிக்க உண்டாக்கப்பட்டவை.

உச்சாகம், உற்சாகம்

எழுச்சியுடைய எண்ணம்

உய்யகம்

உய் (=அறி, எண்ணு) + அகை (=உயர், எழு) + அம் = உய்யகம் >>> உச்சாகம் = எண்ணத்தின் எழுச்சி.

உச்சாடனம்

பேயை விரட்டுதல்

உய்யழனம்

உய் (=நீக்கு, விரட்டு) + அழன் (=பேய்) + அம் = உய்யழனம் >>> உச்சசனம் >>> உச்சாடனம் = பேயை விரட்டுதல்

உச்சாடனம்

பேயை ஏவி விடுதல்

உய்யழனம்

உய் (=அனுப்பு, ஏவு) + அழன் (=பேய்) + அம் = உய்யழனம் >>> உச்சசனம் >>> உச்சாடனம் = பேயை ஏவிவிடுதல்

உச்சாணி

மேல் நுனி

உச்சாணி

உச்சம் (=நுனி) + ஆணி (=மேன்மை) = உச்சாணி = மேல் நுனி

உச்சாயம்

உயர்வு, வளர்ச்சி

உச்சாயம்

உச்சம் (=முடிவு) + ஆயம் (=வருமானம், நற்பயன்) = உச்சாயம் = நற்பயனைக் கொண்ட முடிவு = உயர்வு, வளர்ச்சி

உச்சாரணம், உச்சாரணை, உச்சாரம்

எழுத்துக்களைத் தனித்தனியே ஒலித்தல்

உய்யரணம்

(2) உய் (=நீக்கு, தனியாக்கு) + அரி (=எழுத்து, ஒலி) + அணம் = உய்யரணம் >>> உச்சாரணம் = எழுத்துக்களைத் தனியாக்கி ஒலித்தல்.

உச்சரி

தனியாக்கி ஒலி

உச்சரி

(2) உச்சாரணம் (=தனித்தனியே ஒலித்தல்) >>> உச்சரி = தனியாக்கி ஒலி

உச்சிட்டம்

எச்சில், மீதி

உய்யிற்றம்

உய் (=அனுபவி, உண்) + இறை (=தங்கல், மிகுதி) + அம் = உய்யிற்றம் >>> உச்சிட்டம் = உண்டு மிகுதியாகத் தங்கியது.

உச்சிதம், உசிதம்

நல்லமுடிவு

உச்சிதம்

உச்சம் (=முடிவு) + இதம் (=நன்மை) = உச்சிதம் >>> உசிதம் = நன்மையான முடிவு.

உச்சிராயம்

உயர்நிலை

உச்சிறயம்

உச்சம் (=உயரம்) + இறை (=தங்கல், நிலை) + அம் = உச்சிறயம் >>> உச்சிராயம் = உயர்நிலை.

உச்சீவனம்

பிறர்கொடையால் வாழ்தல்

உய்யீவனம்

உய் (=வாழ்) + ஈவு (=கொடை) + அணம் = உய்யீவணம் >>> உச்சீவனம் = கொடையால் வாழ்தல்.

உச்சீவனம்

அழிவிலிருந்து தப்புதல்

உய்யீவனம்

உய் (=தப்பு) + ஈவு (=ஒழிவு, அழிவு) + அணம் = உய்யீவணம் >>> உச்சீவனம் = அழிவில் இருந்து தப்புதல்.

உச்சீவி

பிறரிடம் பெற்று வாழ், ஆபத்தில் இருந்து தப்பு

உச்சீவி

உச்சீவனம் (=பிறர் கொடையால் வாழ்தல், அழிவில் இருந்து தப்புதல்) >>> உச்சீவி = பிறரிடம் பெற்று வாழ், அழிவில் இருந்து தப்பு

உசார், உசா~ர்

கவனமாக இருத்தல்

உயார்

உய் (=தப்பு, அறி) + ஆர் (=மறை, ஏமாற்று) = உயார் >>> உசார் = மறைப்பதை / ஏமாற்றுவதை அறிந்து தப்புதல்.

உசிரம், இசிரம்

மிளகு

இழிரம்

ஈழம் (=தங்கம்) + இருமை (=கருமை) + அம் (=உணவு) = இழிரம் >>> இசிரம் >>> உசிரம் = கருப்புத் தங்கம் என்னும் உணவு

உசூர்

அரசன், தலைவன்

உச்சூர்

உச்சம் (=உயரம்) + ஊர் (=இடம், அமர்) = உச்சூர் >>> உசூர் = உயரமான இடத்தில் அமர்ந்திருப்பவர்.

உஞ்சம்

எஞ்சிய உணவு

உய்யம்

உய் (=தப்பு, எஞ்சு) + அம் (=உணவு) = உய்யம் >>> உச்சம் >>> உஞ்சம் = தப்பிய / எஞ்சிய உணவு.

உஞ்சவிருத்தி

எஞ்சியஉணவைத் திரட்டுதல்

உஞ்சவிருத்தி

உஞ்சம் (=எஞ்சிய உணவு) + விருத்தி (=பெருக்கம்) = உஞ்சவிருத்தி = வயலில் அறுவடைக்குப் பின் எஞ்சும் உணவைப் பெருக்குதல்.

உண்ணம், உச்~ணம்

வெப்பம், எரிச்சல்

உண்ணம்

உண்ணு (=எரி) + அம் = உண்ணம் >>> உச்~ணம் = எரிச்சல், வெப்பம்

உட்டணம்

வெப்பம்

உற்றணம்

உறை (=எரி) + அணம் = உற்றணம் >>> உட்டணம் = எரிச்சல், வெப்பம்

உட்டணி

வெப்பமாகு

உட்டணி

உட்டணம் (=வெப்பம்) >>> உட்டணி = வெப்பமாகு

உட்டாணி

பெரிய மணி

உற்றாணி

உறு (=பெரிய) + ஆணம் (=கல், மணி) + இ = உற்றாணி >>> உட்டாணி = பெரிய மணி

உடசம்

குடிசை

இறசம்

இறை (=இலை, புல், இடம்) + அசை (=தங்கு, கட்டு) + அம் = இறசம் >>> உடசம் = புல்லால் கட்டிய தங்குமிடம்.

உடான்

பொய்ப்புரட்டு

இடான்

இடு (=ஏற்றிச்சொல்) + ஆன் (=நீங்கு, இல்லாகு) = இடான் >>> உடான் = இல்லாததை ஏற்றிச் சொல்லுதல்.

உடு

விண்மீன் கூட்டம்

உற்று

உறை (=உயரம், இடம், எரி, ஒளிர், செறி) + உ = உற்று >>> உட்டு >>> உடு = உயரமான இடத்தில் செறிந்து ஒளிர்வது

உடு

ஆடு

உற்று

ஊறு (=பெருகு, மிகு, கொலை, மாமிசம்) + உ = உற்று >>> உட்டு >>> உடு = மிகுதியான மாமிசத்திற்காகக் கொல்லப்படுவது.

உடு

அம்பு

உற்று

உறை (=நீளம், பொருள், குத்து, செறி) + உ = உற்று >>> உட்டு >>> உடு = குத்திச் செறியும் நீண்ட பொருள்.

உடு

துடுப்பு

உற்று

உறை (=நீர், நீளம், பொருள், செலுத்து, அமுக்கு) + உ = உற்று >>> உட்டு >>> உடு = நீரில் அமுக்கிச் செலுத்தப்படும் நீண்ட பொருள்.

உடுபதம்

ஆகாயம்

உடுபதம்

உடு (=விண்மீன் கூட்டம்) + பதம் (=இடம்) = உடுபதம் = விண்மீன் கூட்டம் இருக்கும் இடம் = ஆகாயம்

உடு, உடுவை

நீர்நிலை

உற்று

உறை (=நீர், தங்கு, நீளம், பெருமை, இடம்) + உ = உற்று >>> உட்டு >>> உடு = நீர் தங்கியிருக்கும் நீண்ட பெரிய இடம் = நீர்நிலை, குளம், அகழி போன்றன.

உண்டியல்

பணம் இடும் உயரமான கூடு

உற்றீயள்

உறை (=பொருள், பணம், உயரம், கூடு) + ஈ (=இடு) + அள் (=பூட்டு) = உற்றீயள் >>> உட்டியல் >>> உண்டியல் = பொருள் / பணம் இடப்படும் பூட்டப்பட்ட உயரமான கூடு.

உண்டை

கவளம், உருண்டை

உற்றை

உறை (=பெருமை, உணவு, அமுக்கு, செறி) + ஐ = உற்றை >>> உட்டை >>> உண்டை = பெரிதாக அமுக்கிச் செறிவூட்டிய உணவு.

உத்கடம்

மிக உறுதி

உறுகடம்

உறு (=மிகுதி) + கடுமை (=வலிமை, உறுதி) + அம் = உறுகடம் >>> உற்கடம் >>> உத்கடம் = மிக்க உறுதி.

உத்கிரமணம்

மரணத்தின் கடைசி மூச்சு

உக்கிறமனம்

உகு (=வெளிப்படு) + இற (=முடி) + மன் (=உயிர், மூச்சு) + அம் = உக்கிறமனம் >>> உத்கிரமணம் = இறுதியாக மூச்சு வெளியேறுதல்

உத்தண்டம்

இறுமாப்பு, கடுங்கோபம்

உய்த்தண்டம்

உய் (=செலுத்து) + தண்டு (=சின) + அம் = உய்த்தண்டம் >>> உத்தண்டம் = சினத்தைச் செலுத்துதல்

உத்தமம்

மேலானது, சிறப்பானது

உந்தமம்

உந்து (=உயர்) + அமை (=பொருந்து) + அம் = உந்தமம் >>> உத்தமம் = உயர்வு பொருந்தியது = மேலானது

உத்தரணி

சிறிய கரண்டி

உய்த்தாராணி

உய் (=நுகர், முக) + தாரை (=நீர்) + ஆணம் (=சிறுமை, கலம்) + இ = உய்த்தாராணி >>> உத்தரணி = நீரை முகக்கும் சிறிய கலம்.

உத்தரம், உத்தாரம்

பதில், எதிர்வாதம்

உந்தாரம்

உந்து (=வெளிப்படு) + ஆர் (=எதிர், ஒலி, சொல்) + அம் = உந்தாரம் >>> உத்தரம் = எதிராக வெளிப்படும் சொல்.

உத்தரம், உத்தாரம்

கட்டளை

உந்தாரம்

உந்து (=செலுத்து, ஏவு) + ஆர் (=ஒலி, சொல்) + அம் = உந்தாரம் >>> உத்தாரம் >>> உத்தரம் = ஏவுகின்ற சொல்

உத்தரம்

பின் நிகழ்வது, எதிர்காலம்

உந்தாரம்

உந்து (=வெளிப்படு, நிகழ்) + ஆர் (=எதிர்) + அம் = உந்தாரம் >>> உத்தரம் = எதிராக நிகழ்வது = பின் நிகழ்வது, எதிர்காலம்

உத்தரம்

மேலானது

உந்தாரம்

உந்து (=உயர்) + ஆர் (=பொருந்து) + அம் = உந்தாரம் >>> உத்தரம் = உயர்வு பொருந்தியது = மேலானது

உத்தரம்

விட்டம், பொறுப்பது

உந்தாரம்

உந்து (=உயர்) + ஆர் (=பொருந்து, கட்டு, தண்டு, பரவு, நீளு) + அம் = உந்தாரம் >>> உத்தரம் = உயரத்தில் பொருந்துமாறு கட்டிய நீண்டதண்டு.

உத்தரம்

வடக்கு

உந்தாரம்

உந்து (=உயர், பெருகு) + ஆர் (=பூமி, இடம்) + அம் = உந்தாரம் >>> உத்தரம் = உயர்ந்து பெருத்த இடம் = மலை >>> மலை அமைந்த திசை = வடக்கு. ஒ.நோ: தாழ் (=பள்ளமாகு) + ஈன் (=இடம்) + அம் = தாழீனம் >>> தசீனம் >>> தச்சினம் >>> தக்சி~ணம் = பள்ளமான இடம் = கடல் >>> கடல் இருக்கும் திசை = தெற்கு.

உத்தரம்

ஊழித்தீ

உழ்த்தெறம்

ஊழ் (=முடிவு, அழி) + தெறு (=சுடு, எரி) + அம் = உழ்த்தெறம் >>> உத்தரம் = முடிவில் எரித்து அழிப்பது.

உத்தரவாதம்

பின் நிகழ்வுக்குப் பொறுப்பேற்றல்

உத்தரவாதம்

உத்தரம் (=பின் நிகழ்வது, பொறுப்பது) + வாதம் (=சொல்) = உத்தரவாதம் = பின் நிகழ்வதற்குப் பொறுப்பேற்றுக் கூறுவது

உத்தரவு

கட்டளை, ஏவல்

உய்த்தரவு

உய் (=செலுத்து, ஏவு) + தரவு (=தருகை, செய்கை) = உய்த்தரவு >>> உத்தரவு = தரும்படி / செய்யும்படி ஏவுதல்

உத்தரி

பதில்கூறு

உத்தரி

உத்தரம் (=பதில்) >>> உத்தரி = பதிலளி

உத்தரி

பொறு, சகி

உத்தரி

உத்தரம் (=பொறுப்பது) >>> உத்தரி = பொறு

உத்தரி

எதிர்த்து நில்

உத்தாரி

உதி (=தோன்று) + ஆர் (=எதிர்) + இ = உத்தாரி >>> உத்தரி = எதிரே தோன்று = எதிர்த்து நில்.

உத்தரி

உயர்த்தி நிறுவு, தூக்கு

உந்தறி

உந்து (=உயர்) + அறி (=நிச்சயி, நிறுவு) = உந்தறி >>> உத்தரி = உயரத்தில் நிறுவு = தூக்கு, தூக்கி நிறுத்து

உத்தரி

குதிரை

உந்தாரி

உந்து (=உயர், செலுத்து) + ஆர் (=பரவு, விரை, பொருந்து, அமர்) + இ = உந்தாரி >>> உத்தரி = உயரே அமர்ந்து விரைவாகச் செலுத்தப்படுவது = குதிரை.

உத்தரி

துன்புறு, வருந்து

உற்றாரி

ஊறு (=துன்பம்) + ஆர் (=அனுபவி) + இ = உற்றாரி >>> உத்தரி = துன்பம் அனுபவி

உத்தரிப்பு

துன்புறுகை

உத்தரிப்பு

உத்தரி (=துன்புறு) + பு = உத்தரிப்பு = துன்புறுதல்

உத்தரிப்பு

உயர்த்துகை

உத்தரிப்பு

உத்தரி (=உயர்த்து) + பு = உத்தரிப்பு = உயர்த்துகை, தூக்குகை

உத்தரீயம், உத்தரியம்

மேலாடை

உத்தரீழம்

ஊ (=உயரம், மேல்) + தரி (=அணி) + இழை (=ஆடை) + அம் = உத்தரீழம் >>> உத்தரீயம் >>> உத்தரியம் = மேலே அணியும் ஆடை

உத்தளம்

பத்தியால் பொடி பூசுதல்

இற்றளம்

இறை (=கடவுள், பொடி) + அளி (=அன்பு, பத்தி, பூசு) + அம் = இற்றளம் >>> உத்தளம் = கடவுள் பத்திக்காகப் பொடியைப் பூசுதல்

உத்தளம்

பறை

உத்தலம்

ஊது (=ஒலி) + அலை (=அடி) + அம் = உத்தலம் >>> உத்தளம் = அடித்து ஒலிக்கப்படுவது = பறை.

உத்தாபனம்

வீட்டில் பிறந்த குழந்தையை வெளிக்கொண்டு வரும் சடங்கு

உத்தாவாணம்

உத்து (=வெளிப்படுத்து) + ஆ (=உயிர், தோன்று, பிற) + ஆணம் (=வீடு) = உத்தாவாணம் >>> உத்தாபனம் = பிறந்த உயிரை வீட்டில் இருந்து வெளிப்படுத்துதல் = வீட்டில் பிறந்த குழந்தையை வீட்டை விட்டு வெளிக் கொணர்வதற்கான சடங்கு.

உத்தாபி

கடிந்துகூறு

உதப்பு

உதப்பு (=கடிந்துகூறு) + இ >>> உதப்பி >>> உத்தாபி

தக்கிணம், தக்சி~ணம்

தெற்கு

தழீனம்

தாழ் (=பள்ளமாகு) + ஈன் (=இடம்) + அம் = தழீனம் >>> தசீனம் >>> தச்சினம் >>> தக்சி~ணம் = பள்ளமான இடம் = கடல் >>> கடல் இருக்கும் திசை = தெற்கு

இட்டம், இச்~டம்

சம்மதம், விருப்பம், ஆசை

இட்டம்

ஈடு (=ஒப்பு, கருத்து) + அம் = இட்டம் >>> இச்~டம் = ஒப்புதல் கருத்து = சம்மதம், விருப்பம். (2) ஈடு (=அன்பு, ஆசை) + அம் = இட்டம் >>> இச்~டம் = ஆசை, விருப்பம்.

அன்னியன், அந்நியன்

பழக்கம் அற்றவன்

அன்னியன்

(2) அன்மை (=இன்மை) + இயை (=பொருந்து, பழகு) + அன் = அன்னியன் >>> அந்நியன் = பழக்கம் இல்லாதவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.