வியாழன், 27 மே, 2021

77 - (உய்யானம் -> உனகன்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

உய்யானம்

சோலை

ஊழணம்

ஊழ் (=மலர், மண) + அணை (=செறி, இடம்) + அம் = ஊழணம் >>> உயானம் >>> உய்யானம் = மலர்கள் செறிந்து மணக்கும் இடம்.

உயில்

மரண சாசனம்

உயில்

உய் (=இற, வெளிப்படுத்து, சொல்) + இல் = உயில் = இறக்கும்போது சொல்லப்படுவது = மரண சாசனம்

உயுத்தம்

போர்

உயுந்தம்

உய் (=அழி, கொல்லு) + உந்து (=பொருந்து, கூடு) + அம் = உயுந்தம் >>> உயுத்தம் = கூடிக் கொல்லுதல்.

உரகதம்

பாம்பு

உரகத்தம்

ஊர் + அகம் (=வயிறு) + அத்தம் (=இடம், நிலம்) = உரகத்தம் >>> உரகதம் = வயிற்றால் நிலத்தில் ஊர்வது.

உரகம், உரகன், உரங்கம்

பாம்பு

உரகம்

ஊர் + அகம் (=வயிறு, பூமி) = உரகம் = வயிற்றால் நிலத்தில் ஊர்வது.

உரப்பிரம்

வெள்ளாடு

உரப்பரம்

உரு (=வெண்மை) + அப்பர் (=ஆடு) + அம் = உரப்பரம் >>> உரப்பிரம் = வெண்ணிறமுடைய ஆடு

உரம்

மார்பகம்

உரம், இறை

(1) உரு (=முளை, பெரு, சுர, உடல், தன்மை) + அம் = உரம் = உடலில் முளைத்துப் பெருத்துச் சுரக்கும் இயல்பினது = மார்பகம். (2) இறை (=நெஞ்சு, மார்பு) + அம் = இறம் >>> உரம்.

உரம்

அறிவு

உரம்

உரு (=தோன்று) + அம் = உரம் = தோன்றுவது = எண்ணம், அறிவு

உரம்

முன்னிற்பது

உரம்

உரு (=தோன்று, முன்வா) + அம் = உரம் = முன்வருவது

உரிசை, உருசி, உருசை

சுவை

ஒரிசை

ஓரை (=உணவு) + இசை (=கிடை, இனிமை) = ஒரிசை >>> உரிசை >>> உருசி = உணவில் கிடைக்கும் இனிமை = சுவை

உரித்திரம்

மஞ்சள்

உரைத்திரம்

உரை (=தேய், பூசு, பொன்) + திரு (=அழகு, பொருள்) + அம் = உரைத்திரம் >>> உரித்திரம் = பொன்னின் அழகுக்காகத் தேய்த்துப் பூசப்படும் பொருள்.

உரு

மான்

உரு

உரு (=அழகு, உடல், ஓவியம், ஒப்பு, அச்சம்) >>> உரு = அழகிய ஓவியம் போன்ற உடலும் அச்சமும் கொண்டது.

உருக்குமம்

தங்கம்

உருக்குமம்

உருக்கு (=உலோகம்) + மா (=அழகு, செல்வம்) + அம் = உருக்குமம் = அழகிய உலோகச் செல்வம்

உருசு, ருசு

ஆதாரம், சாட்சி

உருயு

உரம் (=அறிவு, கருத்து, வலிமை) + உய் (=கொடு) + உ = உருயு >>> உருசு = கருத்துக்கு வலிமை தருவது.

உருத்திரம்

கடுங்கோபம்

உருத்திறம்

உரு (=சின) + திறம் (=மிகுதி) = உருத்திறம் >>> உருத்திரம் = மிகுசினம்

உருத்திராக்கம், உருத்திராட்சம்

தெய்வாம்சம் பொருந்திய செங்கொட்டை

உருத்திரக்கம்

உரு (=எரி, சிவ, திரள்) + திரு (=தெய்வத்தன்மை) + அக்கம் (=தானியம், விதை, கொட்டை) = உருத்திரக்கம் >>> உருத்திராக்கம் = தெய்வத்தன்மை உடைய திரட்சியான செந்நிறக் கொட்டை.

உருதம்

உச்சரிப்பு

உருந்தம்

உரு (=எழுத்து) + உந்து (=நீக்கு, தனியாக்கு, ஒலி) + அம் = உருந்தம் >>> உருதம் = எழுத்துக்களைத் தனியாக்கி ஒலித்தல்

உருது

போர்ப்படை, படைவீடு

உறுந்து

ஊறு (=கொலை) + உந்து (=பொருந்து, பெருகு, கூடு, தாக்கு) = உறுந்து >>> உருது = பொருந்தித் தாக்கிக் கொல்லும் கூட்டம் = போர்ப்படை >>> படைவீடு = பாசறை

உருநாட்டு

சிலை

உருநாட்டு

உரு (=வடிவம்) + நாட்டு (=ஊன்று) = உருநாட்டு = ஊன்றப்படும் வடிவம்

உருப்படி

விளைச்சல், பயன்

உருப்படி

உரு (=தோன்று) + படி (=பொருள்) = உருப்படி = தோன்றிய பொருள் = விளைச்சல், பயன்

உரும்பரம்

செம்பு

உருப்பறம்

உரு (=எரி, சிவ, நிறம்) + பறை (=பாத்திரம்) + அம் = உருப்பறம் >>> உரும்பரம் = சிவப்புநிறப் பாத்திரம்

உரும்பரம்

பெருங்காயம்

உரைம்மரம்

உரை (=தேய்) + மரு (=வாசனை, கல) + அம் (=உணவு) = உரைம்மரம் >>> உரிம்பரம் >>> உரும்பரம் = வாசனைக்காக உணவில் தேய்த்துக் கலக்கப்படுவது.

உரும்பரம்

பாம்பு

உருப்பாறம்

உரு (=சின) + பாறு (=அழி, கொல், பருந்து) + அம் = உருப்பாறம் >>> உரும்பரம் = பருந்தினால் சினங்கொண்டு கொல்லப்படுவது.

உருமால், உருமாலை

தலைப்பாகை

உறைமேல்

உறை (=பெருமை, செறி, கவசம்) + மேல் (=தலை) = உறைமேல் >>> உறிமால் >>> உருமால் = பெருமைக்காகத் தலையில் செறிக்கப்படும் கவசம் = தலைப்பாகை.

உருமால், உருமாலை

மேலாடை

உறைமேல்

உறை (=ஆடை) + மேல் = உறைமேல் >>> உறிமால் >>> உருமால் = மேலாடை

உருரசம்

பாதரசம்

உருரயம்

ஊர் (=பரவு, ஒழுகு) + உரு (=வெண்மை) + அயம் (=உலோகம்) = உருரயம் >>> உருரசம் = ஒழுகக்கூடிய வெண்ணிற உலோகம்

உருவம், உரூபம், ரூபம்

வடிவம், அழகு, உடல், நிறம்

உரு

உரு (=வடிவம், அழகு, உடல், நிறம்) + அம் = உருவம் >>> உரூபம் >>> ரூபம்

உருவாரம்

வெள்ளரி

உருவரம்

உரு (=வெண்மை) + அரி (=பச்சை, வரி) + அம் (=உணவு) = உருவரம் >>> உருவாரம் = வெண்ணிற வரிகளைக் கொண்ட பசுமை உணவு. ஒ.நோ: வெள் + அரி = வெள்ளரி = வெண்ணிற வரிகளைக் கொண்டது.

உருவாரம்

சிலை

உருவாரம்

உரு (=வடிவம்) + ஆர் (=பொருத்து) + அம் = உருவாரம் = பொருத்தப்படும் வடிவம் = சிலை.

உருவி

மலை, பூமி

உருப்பி

ஊர் (=இடம்) + உப்பு (=உயர், பெரு) + இ = உருப்பி >>> உருவி = உயர்ந்த பெரிய இடம் = மலை, பூமி

உரூடி

இடுகுறிச் சொல்

உரிடி

உரை (=சொல்) + இடை (=நீங்கு, இல்லாகு, காரணம், இடப்படுவது) + இ = உரிடி >>> உரூடி = காரணம் இன்றி இடப்படும் சொல்

உரூடி

நிகழ்வுக்கான காரணம்

உரிடி

உரு (=தோன்று, நிகழ்) + இடை (=தொடர்பு, காரணம்) + இ = உரிடி >>> உரூடி = நிகழ்வுக்குத் தொடர்பாகத் தோன்றும் காரணம்

உரூப்பியம்

வெள்ளி நாணயம்

உருப்பையம்

உரு (=வெண்மை) + பை (=பணம்) + அம் = உருப்பையம் >>> உரூப்பியம் = வெண்ணிறப் பணம்.

உரூப்பியம்

அழகானது

உருவியம்

உருவம் (=அழகு) + இயம் = உருவியம் >>> உரூப்பியம் = அழகானது

உரூபி

நிரூபி

உரீவு

உரம் (=அறிவு, கருத்து, வலிமை) + ஈவு (=கொடு, சேர்) = உரீவு >>> உரூபி = கருத்துக்கு வலிமை சேர் = நிறுவு

உரொக்கம், ரொக்கம்

பணம்

உருவக்கம்

(2) உரு + அக்கம் (=நாணயம்) = உருவக்கம் >>> உரோக்கம் >>> ரொக்கம் = உருவம் உடைய நாணயம் = பணம்

உரோகம், ரோகம்

நோய்

உறோக்கம்

(2) ஊறு (=துன்பம்) + ஓக்கு (=உண்டாக்கு) + அம் = உறோக்கம் >>> உரோகம் >>> ரோகம் = துன்பத்தை உண்டாக்குவது = நோய்

உரோங்கல்

உலக்கை

உரோங்கள்

உரு (=குத்து) + ஓங்கு (=உயர்த்து) + அள் (=தண்டு) = உரோங்கள் >>> உரோங்கல் = உயர்த்திக் குத்தும் தண்டு = உலக்கை.

உரோசம், ரோசம்

தாக்குகின்ற சினம்

உரோச்சம்

(2) உரு (=சின) + ஓச்சு (=எறி, தாக்கு) + அம் = உரோச்சம் >>> உரோசம் >>> ரோசம் = தாக்குகின்ற சினம்

உரோசனி

தாமரை

உறோசணி

உறை (=மூடி, மலர்) + ஓசம் (=வெளிச்சம்) + அணை + இ = உறோசணி >>> உரோசனி = வெளிச்சம் அணைந்ததும் மூடிக்கொள்ளும் மலர்.

உரோசனை

வெண்கடுகு

உரோச்சாணை

உரு (=வெண்மை, மிகு) + ஓச்சு (=எறி, தூவு) + ஆணம் (=சிறுமை, உணவு) + ஐ = உரோச்சாணை >>> உரோசனை = உணவில் தூவப்படும் மிகச்சிறிய வெண்ணிற உணவுப் பொருள் = வெண்கடுகு

உரோசி

சின

உரோசி

உரோசம் (=சினம்) >>> உரோசி = சினங்கொள்

உரோடம்

தாக்கும் சினம்

உரோறம்

(2) உரு (=சின) + ஒறு (=தண்டி, தாக்கு) + அம் = உரோறம் >>> உரோடம் = தாக்குகின்ற சினம்

உரோதனம்,ரோதனை, உரோதனை

அழுகை

உரோதணம்

(2) ஊர் (=ஒழுகு) + ஓதி (=இமை, கண்) + அணம் = உரோதணம் >>> உரோதனம் >>> உரோதனை >>> ரோதனை = கண்களில் ஒழுகுதல்.

உரோதனம், ரோதனம்

தடை

உரோறணம்

(2) ஊர் (=இயங்கு, செல்) + ஒறு (=ஒடுக்கு) + அணம் = உரோறணம் >>> உரோதனம் = இயக்கத்தை ஒடுக்குதல் = தடை

உரோதனம்,ரோதனை,உரோதனை

தொந்தரவு

உரோறணம்

(2) ஊர் (=அடர், நெருங்கு) + ஒறு (=வருத்து) + அணம் = உரோறணம் >>> உரோதனம் >>> உரோதனை >>> ரோதனை = நெருங்கி வருத்துதல்

உரோதி

அழு

உரோதி

உரோதனம் (=அழுகை) >>> உரோதி = அழு

உரோமம், ரோமம்

மயிர்

உரோம்பம்

(2) உரி (=தோல்) + ஓம்பு (=பாதுகா, தோன்று, வளர்) + அம் = உரோம்பம் >>> உரோமம் = தோலைப் பாதுகாக்கத் தோன்றி வளர்வது = மயிர்

உல்கு

அரசனுக்கான வரி

உள்கூழ்

உள் (=ஆராய், கணக்கிடு, மதி, செலுத்து) + கூழ் (=பயிர்) = உள்கூழ் >>> உல்கு = மதிப்புடையோர்க்குச் செலுத்தப்படும் பயிர்க் கணக்கு.

உலுப்பை, உல்பா, உல்பே

பெரியோர்க்கு அனுப்புமுணவு

உளுப்பை

உள் (=மதி, செலுத்து) + உப்பு (=உணவு) + ஐ = உளுப்பை >>> உலுப்பை >>> உல்பே, உல்பா = மதிப்புடையோர்க்குச் செலுத்தும் உணவு.

உல்லங்கனம்

மதிக்காமை

உள்ளக்கணம்

உள் (=மதி) + அகை (=நீங்கு, இல்லாகு) + அணம் = உள்ளக்கணம் >>> உல்லங்கனம் = மதியாமை.

உல்லரி

தளிர்

உள்ளரி

உள் (=நினை, தோன்று) + அரி (=இலை) = உள்ளரி >>> உல்லரி = தோன்றும் இலை = தளிர்.

உல்லாசம்

உள்ளக் களிப்பு, மகிழ்ச்சி

உள்ளாயம்

உள் (=மனம்) + ஆய் (=கொண்டாடு) + அம் = உள்ளாயம் >>> உல்லாசம் = மனதுக்குள் கொண்டாடுதல்.

உல்லாசம்

மெல்லிய சிறு மேலாடை

உள்ளாயம்

உள் (=மனம், மார்பு) + ஆய் (=அசை, மென்மை, அறு) + அம் = உள்ளாயம் >>> உல்லாசம் = மார்பின்மேல் அசையும் அறுக்கப்பட்ட மென்மையான பொருள் = சிறு மேலாடை

உல்லாபம்

பிதற்றல்

உல்லமம்

உலை (=தடுமாறு) + அம் (=சொல்) + அம் = உல்லமம் >>> உல்லாபம் = தடுமாறும் சொல் .= பிதற்றல்.

உல்லாபன்

நோய் தீர்ந்தவன்

உள்ளேமன்

உளை (=வலி, நோய், கெடு) + ஏம் (=இன்பம், சுகம் + அன் = உள்ளேமன் >>> உல்லாபன் = நோய் / வலி கெட்டு சுகப்பட்டவன்.

உல்லியம்

கிணறு

உள்ளீயம்

உள் (=இடம்) + ஈ (=அறு, வெட்டு) + அம் (=நீர்) = உள்ளீயம் >>> உல்லியம் = நீருக்காக வெட்டப்படும் இடம் = கிணறு.

உல்லேகம்

புனைந்துரை

உள்ளெக்கம்

உள் (=கருது) + எக்கு (=மிகு) + அம் (=சொல்) = உள்ளெக்கம் >>> உல்லேகம் = கருத்தை மிகுதியாகச் சொல்லுதல்

உல்லோலம்

நீரலை

உல்லோலம்

உலை (=அலை) + ஓல் (=ஒலி) + அம் (=நீர்) = உல்லோலம் = அலைந்து ஒலிக்கும் நீர் = நீரலை

உலகம், உலகு

ஆகாயம்

உளகம்

உள் (=இடம்) + அகை (=உயர், மலர், விரி) + அம் = உளகம் >>> உலகம் = உயரத்தில் விரிந்த இடம் = ஆகாயம்.

உலகம், உலகு

பூமி

உளகம்

உள் (=இடம்) + அகை (=ஈர், மலர், விரி) + அம் = உளகம் >>> உலகம் = ஈர்ப்புடைய விரிந்த இடம் = பூமி.

உலகிகம்

உலக நடை

உலகிகம்

உலகம் + இகு (=ஓடு, நட) + அம் = உலகிகம் = உலக நடை

உலவம்

கூச்சம், கஞ்சத்தனம்

உலமம்

உல (=குறை, தளர்) + அமை (=செய், கொடு) + அம் = உலமம் >>> உலவம் = செய்வதற்குத் தளர்தல், குறைவாகக் கொடுத்தல். 

உலுத்தம்

கஞ்சத்தனம்

உலுந்தம்

உல (=குறை) + உந்து (=கொடு) + அம் = உலுந்தம் >>> உலுத்தம் = குறைவாகக் கொடுத்தல். 

உலுவம், உலுவா

வெந்தயம்

உலுப்பம்

உல (=குறை, சிறு, அழி, இல்லாகு) + உப்பு (=இனிமை, உணவு) + அம் = உலுப்பம் >>> உலுவம் = இனிமையற்ற / கசப்பான சிறிய உணவு.

உலூகம்

ஆந்தை

உலூகம்

(2) உல (=ஒலி, திரி) + ஊகம் (=கருமை, இருள்) = உலூகம் = இருளில் ஒலித்தவாறு திரிவது = ஆந்தை.

உலூகலம்

உலக்கை

உலோக்களம்

உலை (=சிதை) + ஓக்கு (=உயர்த்து, எறி) + அள் (=தண்டு) + அம் = உலோக்களம் >>> உலூகலம் = உயர்த்தி எறிந்து சிதைக்கும் தண்டு

உலூதை, உலூதம்

சிலந்தி

உளுய்த்தை

உளை (=மயிர், இழை) + உய் (=உண், வாழ்) + தை (=சூழ், அகப்படுத்து, பின்னு) = உளுய்த்தை >>> உளூதை >>> உலூதை = சுற்றிலும் இழையைப் பின்னி அகப்படுத்தி உண்டு வாழ்வது.

உலோகம், லோகம்

மலை, பூமி

உளோங்கம்

உள் (=இடம்) + ஓங்கு (=உயர், பெரு) + அம் = உளோங்கம் >>> உலோகம் >>> லோகம் = உயரமான பெரிய இடம் = மலை, பூமி

உலோகம்

மாழை

உலுகம்

உலை + உகு (=கரை, உருக்கு, ஊற்று) + அம் = உலுகம் >>> உலோகம் = உலையில் உருக்கி ஊற்றப்படுவது.

உலோகிதம்

சிவப்பு

ஒளுக்கிதம்

ஒளி (=நிறம்) + உக்கம் (=நெருப்பு) + இதம் = ஒளுக்கிதம் >>> உலோகிதம் = நெருப்பின் நிறம் = சிவப்பு

உலோகிதம்

சந்தனம்

ஒளோக்கிறம்

ஒளி (=அழகு, பொலிவு) + ஓக்கு (=உண்டாக்கு) + இறை (=பொருந்து, தலை, மார்பு) + அம் = ஒளோக்கிறம் >>> உலோகிதம் = தலையிலும் மார்பிலும் பொருந்திப் பொலிவை உண்டாக்குவது

உலோச்சு

மயிரைப் பறி

உளுச்சு

உளை (=மயிர்) + உச்சு (=பறி) = உளுச்சு >>> உலோச்சு = மயிரைப் பறி

உலோசனம்

கண்

ஒளோச்சணம்

ஒளி + ஓச்சு (=தூண்டு) + அணி (=உறுப்பு) + அம் = ஒளோச்சணம் >>> உலோசனம் = ஒளியால் தூண்டப்படும் உறுப்பு.

உலோட்டம்

மண் கட்டி

உளோற்றம்

உள் (=இடம், மண்) + ஒற்று (=கட்டு) + அம் = உளோற்றம் >>> உலோட்டம் = மண் கட்டி

உலோபம்

கஞ்சத்தனம்

உளோம்பம்

உள் (=உள்ளம், எண்ணம்) + ஓம்பு (=இவறு) + அம் = உளோம்பம் >>> உலோபம் = இவறும் எண்ணம்

உலோபம்

குறைவு

உலோவம்

உலம் (=உருண்டை, முழுமை) + ஓவு (=ஒழிவு, இன்மை) + அம் = உலோவம் >>> உலோபம் = முழுமை இன்மை = குறைவு

உலோபன், உலோபி

கஞ்சன்

உலோபன்

உலோபம் (=கஞ்சத்தனம்) + அன் = உலோபன் = கஞ்சன்

உலோமம்

மயிர்

ஒலோம்பம்

ஒலி (=தோல்) + ஓம்பு (=பாதுகா, தோன்று, வளர்) + அம் = ஒலோம்பம் >>> உலோமம் = தோலைப் பாதுகாக்கத் தோன்றி வளர்வது = மயிர்

உலோலிதம்

தலையைத் தோளில் தாங்கி யோசித்தல்

உளோல்லிறம்

உள் (=கருது, யோசி) + ஒல்லு (=பொறு, தாங்கு) + இறை (=சாய், தலை, தோள்) + அம் = உளோல்லிறம் >>> உலோலிதம் = யோசித்தவாறு தலையைத் தோளில் சாய்த்துத் தாங்குதல்

உவணம், உவணன்

பருந்து, கழுகு

ஊழ்பணம்

ஊழ் (=பகை) + பணி (=பற, பாம்பு) + அம் = ஊழ்பணம் >>> உவணம் = பாம்புக்குப் பகையான பறவை.

உவணி

வாள்

உவணி

உவி (=அழி) + அணி (=கருவி, உடை, தரி, பெருமை) = உவணி = உடையில் தரிக்கும் பெரிய அழிவுக் கருவி.

உவதை

உயரமான அருவி

உபதை

ஊ (=உயரம்) + பதம் (=இடம், வழி, நீர்) + ஐ = உபதை >>> உவதை = உயரமான இடத்தில் இருந்து வழியும் நீர்

உவராகம்

கிரகணம்

உபராகம்

உபராகம் >>> உவராகம்

உவரோதம்

இடையூறு

உய்மறுந்தம்

உய் (=நடத்து, இயக்கு) + மறி (=தடு) + உந்தி (=நடு, இடை) + அம் = உய்மறுந்தம் >>> உவரோதம் = இயக்கத்தை இடையில் தடுப்பது

உவவனம்

சோலை

உபவனம்

உபவனம் (=சோலை) >>> உவவனம்

உவனாயம்

மறைத்துக் கட்டும் மருந்து

ஒம்பணயம்

ஓம்பு (=பாதுகா, மறை) + அணை (=கட்டு) + அம் (=மருந்து) = ஒம்பணயம் >>> உவனாயம் = மறைத்துக் கட்டும் மருந்து.

உவனி

சுத்தமாக்கு

ஒம்பணி, உய்வானி

(1) ஓம்பு (=பேணு) + அணி (=அழகு) = ஒம்பணி >>> உவனி = அழகைப் பேணு = சுத்தஞ்செய். (2) உய் (=நடத்து, செய்) + வான் (=தூய்மை) + இ = உய்வானி >>> உவனி = தூய்மை செய்

உவனி

எய்யத் தொடங்கு

உய்பண்ணி, உய்பணி

(1) உய் (=செலுத்து, ஏவு) + பண்ணு (=செய்) + இ = உய்பண்ணி >>> உவனி = ஏவுதலைச் செய். (2) உய் (=நடத்து, செய்) + பணி (=ஏவு) = உய்பணி >>> உவனி = ஏவுதலைச் செய்.

உவனி

ஈரமாகு

உவனி

உவனிப்பு (=ஈரம்) >>> உவனி = ஈரமாகு

உவனிப்பு

ஈரம்

உய்பனிப்பு

உய் (=நீங்கு, அனுபவி) + பனி (=நீர்) + பு = உய்பனிப்பு >>> உவனிப்பு = நீர் நீங்கியும் அனுபவமாவது = ஈரம்.

உவனியம்

பூணூலணியும் சடங்கு

ஒம்பணியம்

ஓம்பு (=பொறு, தாங்கு, தரி) + அண் (=கயிறு) + இயம் (=ஒலி, ஓது) = ஒம்பணியம் >>> உவனியம் = கயிற்றை ஓதித் தரித்தல்.

உவா, யுவா, உவன், யுவன்

இளைஞன், இளமை

உப்பா

உப்பு (=எழு, உயர், தோன்று) + ஆ (=உயிர்) = உப்பா >>> உவா >>> யுவா = தோன்றிய உயிர் = குழந்தை, இளையோன் >>> இளமை. ஒ.நோ: உப்பு (=எழு, தோன்று) + அல் = உப்பல் >>> உம்பல் = வாரிசு, எழுச்சி..

உவா

ஆண் யானை, யானை

உப்பா

உப்பு (=எழு, உயர், பெரு) + ஆ (=உயிரி) = உப்பா >>> உவா = உயரமான பெரிய உயிரி = ஆண் யானை, யானை.

உவாத்தியாயன், உவாத்தி

ஆசிரியர்

உபாத்தியாயன், உபாத்தி

உபாத்தியாயன் / உபாத்தி >>> உவாத்தியாயன் / உவாத்தி

உவாதி

எல்லை

ஒம்பத்தி

ஓம்பு (=விலக்கு, பிரி) + அத்தம் (=நிலம்) + இ = ஒம்பத்தி >>> உபாதி >>> உவாதி = நிலத்தைப் பிரிப்பது = எல்லை.

உவாதி

துன்பம்

உபாதி

உபாதி (=துன்பம்) >>> உவாதி

உவாந்தம்

அமாவாசை, பௌர்ணமி

உவந்தம்

உவா (=சந்திரன்) + அந்தம் (=முடிவு, முழுமை) = உவந்தம் >>> உவாந்தம் = முடிந்த சந்திரன், முழுமையான சந்திரன்

உவையம்

இரண்டு

உபயம்

உபயம் (=இரண்டு) >>> உவயம் >>> உவையம்

உழை, உசை

வைகறை

உழாய்

ஊழ் (=சூரியன்) + ஆய் (=நீங்கு, வெளிப்படு) + உழாய் >>> உழை >>> உசை = சூரியன் வெளிப்படுதல்.

உல்கு, உற்கு

எரி

உல், உல்கு

உல் / உல்கு (=எரி) >>> உற்கு. ஒ.நோ: உல் (=எரி) + ஐ = உலை

உற்கம், உற்கை

தீ, கொள்ளி

உல்கம், உக்கம்

(1) உல்கு (=எரி) + அம் = உல்கம் >>> உற்கம் = எரிவது. (2) உக்கம் (=தீ) >>> உற்கம்

உற்காரம், உத்காரம்

நெல் தூற்றுதல்

உறக்கரம்

உறக்கு (=தங்கச்செய், படியச்செய்) + அரி (=நெல், காற்று, பிரித்தெடு) + அம் = உறக்கரம் >>> உற்காரம் >>> உத்காரம் = காற்றில் நெல்லைப் பிரித்தெடுத்துப் படியச்செய்தல்.

உற்காரம்

வாந்தி

உக்காரம்

உக்காரம் (=வாந்தி) >>> உற்காரம்

உற்கீதை

பிரணவ ஒலி

உரேங்கூதை

ஊர் (=பரவு) + ஏங்கு (=ஒலி, மெலி) + ஊதை (=காற்று) = உரேங்கூதை >>> உறங்கீதை >>>  உற்கீதை = காற்றில் பரவியுள்ள மெல்லிய ஒலி.

உற்பத்தி

உருவாக்கம், பிறப்பு

உறுபத்தி

ஊறு (=பெருகு) + பதம் (=பொருள், செயல்) + இ = உறுபத்தி >>> உற்பத்தி = பொருளைப் பெருக்கும் செயல் = உருவாக்கம், பிறப்பு

உற்பவம்

உருவாக்கம், பிறப்பு

உறுமாவம்

ஊறு (=பெருகு) + மா (=செல்வம், பொருள்) + அம் = உறுமாவம் >>> உற்பவம் = பொருளைப் பெருக்குதல் = உருவாக்கம், பிறப்பு

உற்பவி

பிற, பிறப்பி

உற்பவி

உற்பவம் (=பிறப்பு) >>> உற்பவி = பிற, பிறப்பி

உற்பன்னம், உற்பனம்

விரைந்து அறிதல்

உறுவணம்

உறு (=விரை, அறி) + அணம் = உறுவணம் >>> உற்பனம் = விரைந்து அறிதல்.

உற்பனம்

மேலானது

உறுவானம்

உறு (=மிகு) + வான் (=பெருமை) + அம் = உறுவானம் >>> உற்பனம் = பெருமை மிக்கது = மேலானது

உற்பனம்

தோன்றியது

உறுவணம்

உறு (=நினை, தோன்று) + அணை (=முடி) + அம் = உறுவணம் >>> உற்பனம் = தோன்றி முடிந்தது.

உற்பனம்

அறிகுறி, சகுனம்

உறுவணம்

உறு (=நிகழ், இரு, அறி) + அணை (=உதவி) + அம் = உறுவணம் >>> உற்பனம் = நிகழ இருப்பதை அறிய உதவுவது

உற்பாதம்

கெட்ட சகுனம்

உறுபாறம்

உறு (=நிகழ், இரு, அறி) + பாறு (=கேடு) + அம் = உறுபாறம் >>> உற்பாதம் = நிகழ இருக்கும் கேட்டை அறிவிப்பது.

உற்பாதி

உருவாக்கு

உற்பாதி

உற்பத்தி (=உருவாக்கம்) >>> உற்பாதி = உருவாக்கு

உற்பிச்சம், உற்பீசம்

விதையிலிருந்து தோன்றுவன

உறுவீசம்

உறு (=நினை, தோன்று) + வீசம் (=விதை) = உறுவீசம் >>> உற்பீசம் >>> உற்பிச்சம் = விதையில் இருந்து தோன்றுவன

உன்மத்தம், உன்மாதம்

மயக்கம், பைத்தியம்

உண்மற்றம்

உள் (=மனம், அறிவு) + மறை + அம் = உண்மற்றம் >>> உன்மத்தம் = அறிவை மறைப்பது = மயக்கம்.

உன்மனி, உன்மனை

உள் ஒளி

உண்மணி

உள் + மணி (=ஒளி) = உண்மணி >>> உன்மனி = உள்ளிருக்கும் ஒளி

உன்மானம்

எடை நிறுத்தல்

உன்னுவாணம்

உன்னு (=உயர், தூக்கு, அறி) + ஆணம் (=பொருள்) = உன்னுவாணம் >>> உன்மானம் = பொருளைத் தூக்கி அறியப்படுவது.

உன்முகம்

முகத்தை உயர்த்துதல்

உன்னுமுகம்

உன்னு (=உயர்த்து) + முகம் = உன்னுமுகம் >>> உன்முகம் = முகத்தை உயர்த்துதல்.

உன்னியம்

சேர்க்கை, சொந்தம்

ஒன்னியம்

ஒன்னு (=பொருந்து, சேர் + இயம் = ஒன்னியம் >>> உன்னியம் = பொருந்துகை, சேர்க்கை = உறவு, சொந்தம்

உன்னியர்

சுற்றத்தார்

ஒன்னியர்

உன்னியம் (=சொந்தம்) + அர் = உன்னியர் = சொந்தக்காரர்கள்

உனகன்

இழிந்தவன்

உன்னகன்

உன்னு (=உயர், பெரு) + அகை (=நீங்கு, இல்லாகு) + அன் = உன்னகன் >>> உனகன் = உயர்வு / பெருமை இல்லாதவன் = இழிந்தவன்

உச்~ணம்

வெப்பம்

உச்~ணம்

(2) ஊழ் (=பகை) + நம் (=ஈரம்) = உச்~ணம் = ஈரத்தின் பகை = வெப்பம்

உசா~

வைகறை

உழா

ஊழ் (=சூரியன், மலர், காலம்) + ஆ = உழா >>> உசா~ = சூரியன் மலரும் காலம் = வைகறை.

உத்பவம்

பிறப்பு

உந்துவாவம்

உந்து (=எழு, தோன்று) + ஆவி (=உயிர்) + அம் = உந்துவாவம் >>> உத்துபாவம் >>> உத்பவம் = உயிர் தோன்றுதல்

உத்பத்தி

பிறப்பு

உந்துவாத்தி

உந்து (=எழு, தோன்று) + ஆத்தம் (=உயிர்) + இ = உந்துவாத்தி >>> உத்துபாத்தி >>> உத்பத்தி = உயிர் தோன்றுதல்

பாதரசம்

திரவ நச்சு உலோகம்

பாறரயம்

(2) பாறு (=அழி, ஓடு) + அரி (=அழகு, நிறம்) + அயம் (=உலோகம்) = பாறரயம் >>> பாதரசம் = ஓடக்கூடிய அழகிய நிறமுடைய அழிவைத் தரும் உலோகம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.