சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
ஊகம், யூகம் |
கருத்து |
ஊழ்கம், ஊக்கம் |
(1) ஊழ்கு (=எண்ணு) + அம் = ஊழ்கம் >>> ஊகம் = எண்ணம், கருத்து. (2) ஊக்கு (=நினை, கருது) + அம் = ஊக்கம் >>> ஊகம் = கருத்து. |
ஊகம் |
மயக்கம் |
ஊகம் |
உகு (=கலங்கு, மயங்கு) + அம் = ஊகம் = கலக்கம், மயக்கம் |
ஊகி, யூகி |
கருது |
ஊகி |
ஊகம் (=கருத்து) >>> ஊகி = கருது |
ஊகம் |
போர்ப்படை |
ஊகம் |
உகு (=அழி, கொல், சிதறு, பரவு) + அம் = ஊகம் = பரவிச்சென்று கொல்வது = போர்ப்படை |
ஊகாஞ்சிதம் |
தற்குறிப்பு ஏற்றம் |
ஊகசிதம் |
ஊகம் (=கருத்து) + அசை (=கட்டு, கூறு) + இதம் = ஊகசிதம் >>> ஊகாஞ்சிதம் = கருத்தைக் கட்டிக் கூறுதல். |
ஊகி, யூகி |
அறிவாளி |
ஊகி |
ஊகம் (=கருத்து, அறிவு) + இ = ஊகி >>> யூகி = அறிவாளி. |
ஊகை |
கல்வி |
ஊகை |
ஊகம் (=அறிவு) + ஐ = ஊகை = அறிவுடையது, அறிவைத் தருவது = கல்வி |
ஊசி |
வடக்கு |
ஊழி |
ஊழ் (=சூரியன், மறை) + இ = ஊழி >>> ஊசி = சூரியனை மறைப்பது = மலை >>> மலை அமைந்த திசை = வடக்கு. ஒ.நோ: பாடு (=பக்கம், திசை) + அகம் (=மலை) + உ = படக்கு >>> வடக்கு = மலை இருக்கும் திசை. |
ஊசரம், ஊடரம் |
உவர்மண் |
ஊழறம் |
ஊழ் (=ஒளி, நிறம்) + அறை (=நீக்கம், நிலம், மண்) + அம் = ஊழறம் >>> -ஊச~ரம் >>> ஊசரம், ஊடரம் = நிறத்தை நீக்கும் மண் = உவர்மண். ஒ.நோ: ஊழ் (=ஒளி, நிறம்) + ஆய் (=நீக்கு) + மண் = உழாய்மண் >>> உழைமண் = நிறத்தை நீக்கும் மண் = உவர்மண். |
ஊதம் |
யானை |
ஊறம் |
ஊறு (=பெரு, உடல்) + அம் = ஊறம் >>> ஊதம் = பெரிய உடலினது = யானை |
ஊதாரி |
செலவாளி |
ஊறாரி |
உற (=குறை, செலவிடு) + ஆர் (=மிகுதி) + இ = ஊறாரி >>> ஊதாரி = மிகுதியாகச் செலவிடுபவன் |
ஊர்ச்சிதம் |
உறுதியானது |
உறய்யிதம் |
உறை (=நிலைபெறு, உறுதியாகு) + இதம் = உறய்யிதம் >>> உரச்சிதம் >>> ஊர்ச்சிதம் = உறுதியானது |
ஊர்ச்சிதம் |
அழுத்தம் |
உறய்யிதம் |
உறை (=அமுக்கு, அழுத்து) + இதம் = உறய்யிதம் >>> உரச்சிதம் >>> ஊர்ச்சிதம் = அழுத்தம் |
ஊர்ணநாபி |
சிலந்தி |
ஊரணைநாவி |
உரி (=கயிறு, இழை) + அணை (=சூழ், கட்டு) + நாவு (=நாக்கு) + இ = ஊரணைநாவி >>> ஊர்ணநாபி = நாக்கிலுள்ள இழையால் சூழக் கட்டுவது = சிலந்தி |
ஊர்த்துவம் |
உயர்வு, மேல் |
ஊர்த்துவம் |
ஊர் (=ஏறு, உயர்) + துவம் (=தன்மை) = ஊர்த்துவம் = உயர்ந்த தன்மை, மேல் |
ஊர்தி |
சூரியன் |
ஊர்தீ |
ஊர் (=எழு, தோன்று, உயர், பரவு) + தீ = ஊர்தீ >>> ஊர்தி = தோன்றி உயர்ந்து பரவும் தீ. |
ஊரு |
தொடை |
ஊரூ |
ஊர் (=பரவு, நீளு) + ஊ (=தசை) = ஊரூ >>> ஊரு = நீண்ட தசை = தொடை |
ஊருசன் |
வணிகன், வியாபாரி |
ஊருயன் |
உரு (=பணம், பொருள்) + உய் (=கொடு) + அன் = ஊருயன் >>> ஊருசன் = பணத்திற்குப் பொருளைக் கொடுப்பவன் = வணிகன், வியாபாரி |
ஊரோசம் |
பெரும்புகழ் |
ஊரோச்சம் |
ஊர் (=மிகுதி) + ஓச்சம் (=புகழ்) = ஊரோச்சம் >>> ஊரோசம் = மிக்க புகழ் |
ஊனம் |
குறைபாடு, பழி, அழிவு |
ஊணம் |
உண் (=தின், அரி, குறை, அழி) + அம் = ஊணம் >>> ஊனம் = குறைபாடு, அழிவு, குற்றம், பழி. |
ஊனம் |
பிணம், உடல் |
ஊன் |
ஊன் (=உடல்) + அம் = ஊனம் = உடல், பிணம் |
எக்கர் |
மணல் |
எக்கார் |
எஃகு (=நுண்மை, பொடி) + ஆர் (=பூமி, மண்) = எக்கார் >>> எக்கர் = பொடிமண் = மணல். |
எக்காளம் |
ஊதுகருவி |
எக்காலம் |
எக்கு (=உயர்) + ஆலு (=ஒலி) + அம் = எக்காலம் >>> எக்காளம் = உயர்த்தி ஒலிக்கப்படுவது |
எக்கியம் |
யாகம் |
அக்கீயம் |
அகை (=எரி, தீ) + ஈ (=கொடு, இடு) + அம் (=உணவு) = அக்கீயம் >>> எக்கியம் = உணவுப் பொருட்களைத் தீயில் இட்டு எரித்தல். |
எகத்தாளம் |
இகழ்ச்சொல் |
இகழ்த்தாலம் |
இகழ் + தாலம் (=சொல்) = இகழ்த்தாலம் >>> எகத்தாளம் = இகழ்ச்சொல். |
எச்சம், எஞ்ஞம், யஞ்ஞம் |
யாகம் |
அழம் |
அழி (=தீ, எரி) + அம் (=உணவு) = அழம் >>> அயம் >>> அய்யம் >>> யஞ்ஞம் >>> எஞ்ஞம் >>> எச்சம் = தீயில் உணவுகளை எரித்தல் |
எச்சரி |
கவனிக்குமாறு கூறு |
அய்யரி |
ஆய் (=கவனி) + அரி (=ஒலி, கூறு) = அய்யரி >>> எச்சரி = கவனி என்று கூறு |
எசமான், எசமானன் |
கடவுள் |
இயவானன் |
இய (=செல், கட) + வான் (=ஆகாயம்) + அன் = இயவானன் >>> இயமானன் >>> எசமானன் >>> எசமான் = ஆகாயத்தைக் கடந்தவன் = கடவுள். |
எசமான், எசமானன் |
அரசன், தலைவன் |
இசைமாணன் |
இசை (=புகழ், செல்வம்) + மாண் (=மிகு) + அன் = இசைமாணன் >>> எசமானன் >>> எசமான் = புகழும் செல்வமும் மிக்கவன் = அரசன், தலைவன் |
எசர் |
உலைநீர் |
அழால் |
அழி (=எரி, வெப்பமுறு) + ஆல் (=நீர்) = அழால் >>> அசார் >>> எசர் = வெப்பமுறும் நீர் |
எஞ்சலார் |
புதியவர் |
அயலார் |
அயலார் (=புதியவர்) >>> அசலார் >>> எஞ்சலார் |
எடார் |
மைதானம் |
இடார் |
இடம் + ஆர் (=பரவு) = இடார் >>> எடார் = பரவலான இடம் = மைதானம் |
எத்தனம் |
முயற்சி |
அற்றணம் |
ஆற்று (=செய், முயல்) + அணம் = அற்றணம் >>> யத்தனம் >>> எத்தனம் = முயற்சி |
எத்தனம் |
கருவி |
அற்றாணம் |
ஆற்று (=செய், உதவு) + ஆணம் (=பொருள்) = அற்றாணம் >>> யத்தனம் >>> எத்தனம் = செய்ய உதவும் பொருள் = கருவி |
எதி |
அடியார் |
இறி |
இறை (=கடவுள், வணங்கு) + இ = இறி >>> எதி = கடவுளை வணங்குபவர் = அடியார், துறவி |
எதேச்சை |
விரும்பியவாறு நிகழ்தல் |
அத்தேயை |
(2) ஆத்தம் (=விருப்பம்) + ஏய் (=எதிர்ப்படு, நிகழ்) + ஐ = அத்தேயை >>> யதேசை >>> எதேச்சை = விரும்பியவாறு நிகழ்தல். |
எந்திரம் |
சக்கரம், சுழல்பொறி |
அற்றிரம் |
(2) ஆல் (=ஒலி) + திரி (=சுற்று) + அம் = அற்றிரம் >>> யத்திரம் >>> யந்திரம் >>> எந்திரம் = ஒலித்தவாறு சுற்றுவது.. |
எம்பாரி |
நஞ்சு |
அம்மாறி |
ஆ (=உயிர்) + மாறு (=கொல்) + இ = அம்மாறி >>> எம்பாரி = உயிரைக் கொல்வது = நஞ்சு |
எமகாதகன் |
வலிமை மிக்கவன் |
எமகதாக்கன் |
எமன் + கதம் (=அழிவு, கொலை) + ஆக்கம் (=வலிமை, ஆற்றல்) + அன் = எமனைக் கொல்லும் ஆற்றல் உடையவன் = வலிமை மிக்கவன் |
எமன் |
கொல்பவன் |
இவன் |
(2) ஈவு (=அழிவு, சாவு, கொடை) + அன் = இவன் >>> எமன் = சாவைத் தருபவன் |
எவ்வனம் |
அழகு, இளமை |
அவ்வணம் |
அவ்வை (=அழகு) + அணம் = அவ்வணம் >>> யவ்வனம் >>> எவ்வனம் = அழகு, இளமை |
ஏகம் |
ஒன்று, ஒற்றுமை |
ஏக்கம் |
(2) எக்கு (=குவி, திரள், ஒன்றாகு) + அம் = ஏக்கம் >>> ஏகம் = திரண்டது, ஒன்றானது = ஒன்று, ஒற்றுமை |
ஏகம் |
மொத்தம் |
ஏக்கம் |
எக்கு (=குவி, கூடு) + அம் = ஏக்கம் >>> ஏகம் = கூட்டு, மொத்தம் |
ஏகம் |
மிகுதி |
ஏக்கம் |
எக்கு (=குவி, மிகு) + அம் = ஏக்கம் >>> ஏகம் = மிகுதி |
ஏகம் |
தனிமை |
ஏகம் |
எஃகு (=நீங்கு, தனியாகு) + அம் = ஏகம் = தனிமை |
ஏகதேசம் |
ஒருபக்கம் |
ஏகதேயம் |
ஏகம் (=ஒன்று) + தேயம் (=இடம், பக்கம்) = ஏகதேயம் >>> ஏகதேசம் = ஒருபக்கம் |
ஏகம் |
பெருமை |
ஏக்கம் |
எக்கு (=குவி, பெரு) + அம் = ஏக்கம் >>> ஏகம் = பெருமை |
ஏகதேசம் |
வித்தியாசம் |
ஏகதேயம் |
ஏகம் (=ஒற்றுமை, பொருத்தம்) + தேய் (=அழி, இல்லாகு) + அம் = ஏகதேயம் >>> ஏகதேசம் = பொருத்தம் இல்லாமை = வித்தியாசம் |
ஏகதேசம் |
குறைவு, அருமை, சிறுபான்மை |
ஏகதேயம் |
ஏகம் (=மிகுதி) + தேய் (=அழி, இல்லாகு) + அம் = ஏகதேயம் >>> ஏகதேசம் = மிகுதி இல்லாமை = சிறுமை, குறைவு, சிறுபான்மை, அருமை |
ஏகதேசம் |
இழிவு |
ஏகதேயம் |
ஏகம் (=பெருமை) + தேய் (=கெடு) + அம் = ஏகதேயம் >>> ஏகதேசம் = பெருமையைக் கெடுப்பது |
ஏகவாசம் |
ஆலமரம் |
ஏகவசம் |
ஏகம் (=பெருமை) + வசு (=மரம்) + அம் = ஏகவசம் >>> ஏகவாசம் = பெரியமரம் |
ஏகாந்தம் |
தனிமையிடம் |
ஏகத்தம் |
ஏகம் (=தனிமை) + அத்து (=இடம்) + அம் = ஏகத்தம் >>> ஏகாந்தம் = தனிமையான இடம் |
ஏகாந்தம் |
நிச்சயம் |
ஏகந்தம் |
ஏகம் (=ஒன்று) + அந்தம் (=முடிவு) = ஏகந்தம் >>> ஏகாந்தம் = ஒரே முடிவு = நிச்சயம் |
ஏகாந்தம் |
விரும்பியது |
ஏங்கத்தம் |
ஏங்கு (=விரும்பு) + அத்தம் (=பொருள்) = ஏங்கத்தம் >>> ஏகாந்தம் = விரும்பிய பொருள் |
ஏகாயம், ஏகாசம் |
உடலின் மேலாடை |
ஆக்கேயம் |
ஆக்கம் (=உடை, உடல்) + ஏ (=மேல்) + அம் = ஆக்கேயம் >>> ஏகாயம் >>> ஏகாசம் = உடலின் மேல் ஆடை |
ஏகாலி |
சவர்க்காரம் |
ஏகாலி |
எஃகு (=நெகிழ், நீக்கு) + ஆலம் (=கருமை, கறை, நீர்) + இ = ஏகாலி = நீரில் நெகிழ்ந்து கறையை நீக்குவது = சவர்க்காரம் |
ஏகி |
பருத்திப் பெண்டு, கைம்பெண் |
ஏகி |
எஃகு (=பஞ்சு களை) + இ = ஏகி = பஞ்சு களைபவள் = கைம்பெண். ஒ.நோ: பழந்தமிழகத்தில் கைம்பெண்களே பஞ்சு களையும் பருத்திப் பெண்டாக இருந்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் 125 மற்றும் 326 ந் வாயிலாக அறியலாம். |
ஏகோபி |
இணங்கிக்கூடு |
ஏக்கொப்பி |
எக்கு (=குவி, கூடு) + ஒப்பு + இ = ஏக்கொப்பி >>> ஏகோபி = இணங்கிக் கூடு |
ஏட்டை |
சோர்வு, வறுமை |
ஆற்றை |
அற்றம் (=சோர்வு, வறுமை) + ஐ = ஆற்றை >>> ஏட்டை |
ஏட்டை, ஏடை |
விருப்பம் |
ஏட்டை |
எடு (=தேர்ந்தெடு, விரும்பு) + ஐ = ஏட்டை = விருப்பம் |
ஏடணம், ஏடணை |
விருப்பம் |
ஏடணம் |
எடு (=தேர்ந்தெடு, விரும்பு) + அணம் = ஏடணம் >>> ஏடணை = விருப்பம் |
ஏணம், ஏணி |
மான் |
ஆன் |
ஆன் (=மான்) + அம் / இ = ஆனம் / ஆனி >>> ஏணம் / ஏணி |
ஏத்தனம் |
பாத்திரம் |
ஏற்றனம் |
ஏல் (=முக, கொள்) + தனம் (=பொருள்) = ஏற்றனம் >>> ஏத்தனம் = முகக்கும் / கொள்ளும் பொருள் |
ஏத்தனம் |
கருவி |
ஆற்றாணம் |
ஆற்று (=செய், உதவு) + ஆணம் (=பொருள்) = ஆற்றாணம் >>> ஏத்தனம் = உதவி செய்யும் பொருள் |
ஏதி |
வாள், ஆயுதம் |
ஏற்றி |
எற்று (=வெட்டு, தாக்கு) + இ = ஏற்றி >>> ஏத்தி >>> ஏதி = வெட்டுவது / தாக்குவது = வாள். |
ஏதி |
துண்டு |
ஏற்றி |
எற்று (=வெட்டு) + இ = ஏற்றி >>> ஏத்தி >>> ஏதி = வெட்டப்பட்டது = துண்டு |
ஏது |
காரணம் |
அத்து |
அத்து (=பொருந்து, பற்று) >>> ஆது >>> ஏது = பற்று, தொடர்பு, காரணம் |
ஏது |
செல்வம் |
அத்தம் |
அத்தம் (=பொருள், செல்வம்) + உ = ஆத்து >>> ஏது |
ஏது |
நிமித்தம் |
ஏறு |
எறி (=குறிப்பாகச் சொல்லுகை) + உ = ஏறு >>> ஏது = குறிப்பால் உணர்த்துவது |
ஏது |
உதவி, கருவி |
ஆத்து |
ஆற்று (=உதவு) >>> ஆத்து >>> ஏது = உதவி, உதவி செய்வது |
ஏது |
சமயம் |
அற்றம் |
அற்றம் (=காலம்) + உ = ஆற்று >>> ஆத்து >>> ஏது. |
ஏந்திரம் |
கண்கட்டு |
எயிற்றிறம் |
எயிறு (=கண்) + இறு (=கட்டு) + அம் = எயிற்றிறம் >>> ஏத்திரம் >>> ஏந்திரம் = கண்ணைக் கட்டுவது |
ஏப்பியன் |
முட்டாள் |
ஏமியன் |
ஏம் (=அறிவு, மயக்கம்) + இயன் = ஏமியன் >>> ஏப்பியன் = மயக்க அறிவினன் |
ஏப்பை |
முட்டாள் |
ஏமை |
ஏம் (=அறிவு, மயக்கம்) + ஐ = ஏமை >>> ஏப்பை = மயக்க அறிவினன் |
ஏமந்தம் |
பனிக்கட்டி |
ஏமாற்றம் |
ஏமம் (=வலிமை) + ஆற்று (=தணி, குளிர்) + அம் (=நீர்) = ஏமாற்றம் >>> ஏமாத்தம் >>> ஏமந்தம் = குளிர்ந்து வலுப்பட்ட நீர். |
ஏமாளி |
முட்டாள் |
ஏமாளி |
ஏம் (=அறிவு, மயக்கம்) + ஆள் + இ = ஏமாளி = மயக்க அறிவினன் |
ஏயம் |
விலக்கத்தக்கது |
ஏயம் |
எய் (=எறி, விலக்கு) + அம் = ஏயம் = விலக்கத் தக்கது. |
ஏரண்டம் |
ஓவியம் |
ஏரண்ணம் |
ஏர் (=ஒப்பு, தோற்றம்) + அணி (= அலங்கரி) + அம் = ஏரண்ணம் >>> ஏரண்டம் = அலங்கரிக்கப்பட்ட ஒப்பான தோற்றம் = ஓவியம் |
ஏராளம் |
மிகுதி |
ஏர் |
ஏர் (=மிகுதி) + ஆளம் = ஏராளம். |
ஏலம், ஏலை |
நறுமணக் காயுணவு |
அயிலம் |
அயில் (=உண்ணு, நறுமணம்) + அம் (=இனிமை, காய்) = அயிலம் >>> ஐலம் >>> ஏலம் = இனிய நறுமணம் உடைய காயுணவு. |
ஏலம் |
ஏலமுறை |
ஏலம் |
ஏல் (=பெற்றுக்கொள், அறிவி, மிகு, உயர்) + அம் = ஏலம் = உயர்த்திக் கூறிப் பெற்றுக் கொள்ளுதல் |
ஏலி, எலி |
கள் |
ஆலீ |
அல் (=மயக்கம்) + ஈ (=கொடு) = ஆலீ >>> ஏலி = மயக்கம் தருவது = கள் |
ஏழகம் |
ஆடு |
ஆழாக்கம் |
அழி (=கொல், வைக்கோல், புல்) + ஆக்கம் (=உடல், மாமிசம், உணவு) = ஆழாக்கம் >>> ஏழகம் = மாமிசத்திற்காகக் கொல்லப்படும் புல் உண்ணும் விலங்கு. |
ஏளனம் |
இகழ்ச்சி |
எள்ளணம் |
எள்ளு (=இகழ்) + அணம் = எள்ளணம் >>> ஏளனம் = இகழ்ச்சி |
ஏளிதம் |
இகழ்ச்சி |
எள்ளிதம் |
எள்ளு (=இகழ்) + இதம் = எள்ளிதம் >>> ஏளிதம் = இகழ்ச்சி |
ஏனம் |
பாத்திரம் |
ஆணம் |
ஆணம் (=கொள்கலம்) >>> ஏனம் |
ஏனம் |
கருவி |
ஆணம் |
ஆணம் (=பற்றுக்கோடு, உதவி) >>> ஏனம் = உதவுவது |
ஏனம் |
அணிகலன் |
ஆணம் |
அணி + அம் = ஆணம் >>> ஏனம் = அணிவது |
ஏனம் |
குற்றம், பிழை |
ஏணம் |
ஏண் (=வளைவு, கோணல், திரிபு) + அம் = ஏணம் >>> ஏனம் = திரிபு, பிழை, குற்றம் |
ஐவேசு |
செல்வம் |
அழிபையு |
அழி (=மிகுதி) + பை (=பொருள்) + உ = அழிபையு >>> அயிபேசு >>> ஐவேசு = மிக்க பொருள் |
ஏசியம் |
காரணம் |
ஏயிழம் |
ஏய் (=நிகழ்) + இழை (=செய், அமை) + அம் = ஏயிழம் >>> ஏசியம் = செயல் நிகழ்வதற்கான அமைப்பு |
ஏசியம் |
சான்று |
ஆயிழம் |
ஆய் (=அறி, கருது, வலிமை) + இழை (=கூட்டு, பொருத்து, கூறு) + அம் = ஆயிழம் >>> ஏசியம் = கருத்துக்கு வலிமை கூட்டப் பொருத்தமாகக் கூறப்படுவது = எடுத்துக்காட்டு. |
ஏசணை |
ஆசை |
ஆசை |
ஆசை + அணம் = ஆசணம் >>> ஏசணை >>> ஏச~ணை |
ஐக்கியம் |
ஒற்றுமை |
ஏக்கியம் |
எக்கு (=குவி, கூடு, ஒன்றுபடு) + இயம் = ஏக்கியம் >>> ஐக்கியம் = ஒற்றுமை |
ஐகிகம் |
இவ் உலகுடன் பொருந்தியது |
ஏக்கிகம் |
எக்கு (=குவி, கூடு, பொருந்து) + இகம் (=இவ்வுலகம்) = ஏக்கிகம் >>> ஐகிகம் = இவ் உலகுடன் பொருந்தியது |
ஐசுவரியம் |
உலோக அணிகலன்கள் |
ஆசுவரியம் |
(2) ஆசு (=அச்சு) + வரி (=மூடு, நிறை, அழகு, பொருள்) + அம் (=ஒளி) = ஆசுவரியம் >>> ஐசுவரியம் = அச்சில் நிறைத்துச் செய்த அழகிய ஒளிரும் பொருட்கள் |
ஐதிகம் |
உலக நடை |
ஆறிகம் |
ஆறு (=வழி, போக்கு, நடை) + இகம் (=இவ் உலகம்) = ஆறிகம் >>> ஐதிகம் = இவ் உலக நடை. |
ஒச்சம் |
குறைபாடு |
ஒச்சம் |
ஒசி (=முறி, குறை) + அம் = ஒச்சம் = முறிவு, குறைபாடு, ஊனம் |
ஒட்டகம் |
வெப்பநிலத்தில் வாழ்வது |
உண்ணகம் |
உண்ணம் (=வெப்பம்) + அகம் (=நிலம், வாழுமிடம்) = உண்ணகம் >>> உட்டகம் >>> ஒட்டகம் = வெப்பமான நிலத்தை வாழுமிடமாகக் கொண்டது. |
ஒட்டியாணம் |
இடையிலணியும் அணி |
உட்டியணம் |
ஊடு (=இடை) + இயை (=பொருந்து) + அணி + அம் = உட்டியணம் >>> ஒட்டியாணம் = இடையில் பொருந்தும் அணிகலன். |
ஓக்கியம் |
ஒழுக்கம் |
ஒழுக்கியம் |
ஒழுக்கம் + இயம் = ஒழுக்கியம் >>> ஒயுக்கியம் >>> ஓக்கியம் |
ஓகம் |
வெள்ளம் |
ஓங்கம் |
ஓங்கு (=பெருகு) + அம் (=நீர்) = ஓங்கம் >>> ஓக்கம் >>> ஓகம் = நீர்ப்பெருக்கு |
ஓகம் |
கூட்டம் |
ஓங்கம் |
ஓங்கு (=பெருகு, கூடு) + அம் = ஓங்கம் >>> ஓக்கம் >>> ஓகம் = கூட்டம் |
ஓங்காரம் |
மகர ஒலி |
ஓங்காரம் |
ஓங்கு (=பெருமையுறு) + ஆர் (=பூமி, பரவு, நிறை, அருமை, ஒலி) + அம் = ஓங்காரம் = பூமி எங்கும் பரவி நிறைந்திருக்கும் அருமையும் பெருமையும் கொண்ட ஒலி. |
ஓச்சம், ஓசம், ஓசை |
புகழ் |
ஓச்சம் |
ஓச்சம் (=உயர்வு, பெருமை) >>> ஓச்சம் >>> ஓசம், ஓசை = புகழ் |
ஓச்சம், ஓசம் |
ஒளி, வெளிச்சம் |
ஊழம் |
ஊழ் (=ஒளி) + அம் = ஊழம் >>> ஓசம் >>> ஓச்சம் = வெளிச்சம் |
ஓசன் |
ஆசிரியன் |
ஊயன் |
உய் (=அறிவி, அறியச்செய்) + அன் = ஊயன் >>> ஓசன் = அறியச் செய்பவன் = ஆசிரியன் |
ஓசனை, யோசனை |
கருத்து கூறுதல் |
ஊயணம் |
(2) உய் (=அறிவி, கருத்தைக் கூறு) + அணம் = ஊயணம் >>> ஓசனம் >>> ஓசனை >>> யோசனை = கருத்தைத் தெரிவித்தல். |
ஓசு |
வலிமை |
ஊழ் |
ஊழ் (=வலிமை) + உ = ஊழு >>> ஓசு |
ஓசை |
வாழை |
ஊழை |
ஊழ் (=முதிர், கனி, ஒளி) + ஐ = ஊழை >>> ஓசை = ஒளியுடைய கனி |
ஓட்டம், ஓச்~டம் |
உதடு, வாய் |
ஓட்டம் |
ஓட்டு(=வழி, புகுத்து) + அம் (=உணவு) = ஓட்டம் >>> ஓச்~டம் = உணவைப் புகுத்தும் வழி = வாய், உதடு |
ஓடதி, ஓச~தி |
மருந்து |
ஊட்டற்றி |
ஊட்டம் (=உணவு) + அற்றம் (=நோய், அழிவு) + இ = ஊட்டற்றி >>> ஊட்டத்தி >>> ஓடதி >>> ஓச~தி = நோயை அழிக்கும் உணவு = மருந்து |
ஓட்டியம் |
இச்சையூட்டும் சொல் |
ஓட்டீயம் |
ஒட்டு (=பற்று, விருப்பம்) + ஈ (=கொடு, உண்டாக்கு) + அம் (=சொல்) = ஓட்டீயம் >>> ஓட்டியம் = விருப்பத்தை உண்டாக்கும் சொல். |
ஓணம் |
ஆறு |
ஓணம் |
ஒண்மை (=ஒழுங்கு, மிகுதி) + அம் (=நீர்) = ஓணம் = ஒழுங்குடைய மிகுதியான நீர். |
ஓத்திரம் |
யாகப் பொருட்கள் |
ஆவுத்திறம் |
ஆவுதி (=யாகம்) + இறை (=சிந்து, பொருள்) + அம் = ஆவுத்திறம் >>> ஔத்திரம் >>> ஓத்திரம் = யாகத்தில் சிந்தப்படும் பொருட்கள். |
ஓதனம் |
உணவு |
ஊதாணம் |
ஊது (=உண்ணு) + ஆணம் (=பொருள்) = ஊதாணம் >>> ஓதனம் = உண்ணும் பொருள் |
ஓது |
பூனை |
ஓற்று |
ஒற்று (=மறை, உளவறி) + உ >>> ஓற்று >>> ஓத்து >>> ஓது = மறைந்து உளவறிவது |
ஓபாதி |
அறியாமை |
ஓவறி |
ஓவு (=ஒழிவு, இன்மை) + அறம் (=அறிவு) + இ = ஓவறி >>> ஓபாதி = அறிவின்மை |
ஓமம் |
யாகத்தீ |
ஓம்பம் |
(2) ஓம்பு (=பேணு, வளர்) + அம் (=ஒளி, தீ, உணவு) = ஓம்பம் >>> ஓமம் = உணவுப் பொருட்களால் பேணி வளர்க்கப்படும் தீ. |
ஓமியம் |
யாகத்தீ |
ஓம்பீயம் |
ஓம்பு (=பேணு, வளர்) + ஈ (=கொடு, இடு) + அம் (=ஒளி, தீ, உணவு) = ஓம்பீயம் >>> ஓம்பியம் = உணவுப் பொருட்களை இட்டுப் பேணி வளர்க்கப்படும் தீ. |
ஓரை |
காலம் |
உறை |
உறை (=காலம்) >>> ஓரை |
ஔசித்தியம் |
தகுதி |
உசிதம் |
உசிதம் (=பொருத்தம், தகுதி) + இயம் = உசித்தியம் >>> ஒசித்தியம் >>> ஔசித்தியம் |
ஔட்டு |
வானவெடி |
ஓட்டு |
ஒடி (=முறி, சிதறு, ஒளிர்) + உ = ஓட்டு >>> ஔட்டு = சிதறி ஒளிர்வது |
ஔடதம் |
மருந்து |
ஓட்டற்றம் |
ஓட்டு + அற்றம் (=துன்பம், நோய்) = ஓட்டற்றம் >>> ஓட்டத்தம் >>> ஔடதம் = நோயை ஓட்டுவது |
ஔசதம் |
மருந்து |
ஓச்சற்றம் |
ஓச்சு (=ஓட்டு) + அற்றம் (=துன்பம், நோய்) = ஓச்சற்றம் >>> ஓச்சத்தம் >>> ஔசதம் = நோயை ஓட்டுவது = மருந்து. |
ஔதாரியம் |
உதவுகை |
உதாரம் |
உதாரம் (=உதவி) + இயம் = உதாரியம் >>> ஒதாரியம் >>> ஔதாரியம் |
ஔதா |
அம்பாரி |
அப்புதா |
அப்பு (=யானை, அம்பு) + தா (=கொடு, செலுத்து) = அப்புதா >>> அவ்வுதா >>> ஔதா = யானைமேல் இருந்து அம்பு செலுத்தும் இடம். |
உசிதம் |
பொருத்தம் |
ஊழிறம் |
ஊழ் (=முறை) + இறு (=தங்கு, பொருந்து) + அம் = ஊழிறம் >>> உசிதம் = பொருந்தும் முறை |
மிராண்டி |
கற்கால மனிதன் |
புரண்டி |
புரை (=துளை, குகை) + அண்டு (=தங்கு, வாழ்) + இ = புரண்டி >>> பிரண்டி >>> மிராண்டி = குகைகளில் தங்கி வாழ்ந்தவன் = கற்கால மனிதன். |
மிருகம் |
விலங்கு |
விறுகம் |
வீறு (=அடி, தாக்கு, வேறு, வலிமை) + உகு (=பற) + அம் = விறுகம் >>> மிருகம் = பறவை அல்லாததும் வலுவுடன் தாக்குவதும் ஆனது = விலங்கு. |
சாப்பிடு |
உண்ணு, ஊட்டு |
ஆப்பிடு |
ஆப்பு (=உடல், உணவு) + இடு (=கொடு) = ஆப்பிடு >>> சாப்பிடு = உடலுக்கு உணவைக் கொடு = உண்ணு, ஊட்டு. |
சாப்பாடு |
சமைத்த உணவு |
ஆப்பாடு |
ஆப்பு (=உணவு) + ஆடு (=சமையல்) = ஆப்பாடு >>> சாப்பாடு = சமைக்கப்பட்ட உணவு. |
உச்சம், உச்சி |
உயரம் |
ஓச்சம் |
(2) ஓச்சம் (=உயர்வு) >>> உச்சம் >>> உச்சி = உயரம், உயரத்தில் இருப்பது |
வரணம் |
ஒட்டகம் |
வறாணம் |
(2) வறம் (=வறட்சி, வெப்பம்) + ஆணம் (=நிலம், தங்குமிடம்) = வறாணம் >>> வரணம் = வறண்ட வெப்ப நிலத்தைத் தங்குமிடமாகக் கொண்டது = ஒட்டகம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.