சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
குஞ்சம், KUNJAM |
குட்டை, DWARF |
கூழை |
கூழை (=குட்டை) + அம் = கூழம் >>> குசம் >>> குஞ்சம் |
குஞ்சம், KUNJAM |
கொத்து, BUNCH |
குச்சம் |
குச்சம் >>> குஞ்சம் |
குஞ்சம், KUNJAM |
நாழி, MEASURING CUP |
குழம் |
குழி (=அளவு, பள்ளம்) + அம் = குழம் >>> குசம் >>> குஞ்சம் = அளவிட்ட பள்ளமுடையது = நாழி. |
குஞ்சரம், KUNCARAM |
யானை, ELEPHANT |
குழாரம் |
குழி (=வயிறு) + ஆர் (=நிறை, பெரு) + அம் = குழாரம் >>> குசாரம் >>> குஞ்சரம் = பெரிய வயிற்றைக் கொண்டது. |
குஞ்சரி, KUNCARI |
பெண்யானை, FEMALE ELEPHANT |
குஞ்சரி |
குஞ்சரம் (=யானை) >>> குஞ்சரி = பெண்யானை |
குஞ்சன், KUNCAN |
குள்ளன், DWARF |
குஞ்சன் |
குஞ்சம் (=குட்டை) + அன் = குஞ்சன் = குட்டையானவன் |
குஞ்சி, KUNCI |
வளை, BEND |
குழை |
குழை (=வளை) + இ = கூழி >>> கூசி >>> குஞ்சி |
குஞ்சி, KUNCI |
குடுமி, HAIR TUFT ON HEAD, தலை, HEAD |
கூழி |
குழை (=வளை, தொங்கு, மயிர்) + இ = கூழி >>> கூசி >>> குஞ்சி = வளைந்து தொங்கும் மயிர் = குடுமி >>> குடுமியைக் கொண்ட தலை. |
குஞ்சிதம், KUNCITHAM |
வளைந்தது, WHICH IS BENT |
கூழிதம் |
குழை (=வளை) + இதம் = கூழிதம் >>> குசிதம் >>> குஞ்சிதம் = வளைந்தது. |
குட்சி, KUTCHI |
வயிறு, STOMACH |
குழி |
குழி (=வயிறு) >>> குசி >>> குச்சி >>> குட்சி |
குட்டம், KUTTAM, குண்டம், KUNTAM |
நீர்நிலை, WATER RESOURCE |
கிண்டம் |
குடை (=தோண்டு) + அம் (=நீர், நீளம்) = குட்டம் >>> குண்டம் = நீருக்காக நீளமாகத் தோண்டப்பட்டது = நீர்நிலை. |
குட்டம், KUTTAM, குச்~டம், KUSHTAM, குட்டை, KUTTAI |
உறுப்புக் குறைநோய், LEPROSY |
குற்றம் |
குறை (=சுருங்கு, தசை, உடல், உறுப்பு, நோய்) + அம் (=நீளம்) = குற்றம் >>> குட்டம் >>> குச்~டம் = உடல் உறுப்புக்கள் சுருங்கி நீளம் குறையும் நோய். |
குட்டரி, KUTTAARI |
மலை, MOUNTAIN |
குட்டாரி |
கூடு (=திரள், உயர்) + ஆர் (=பரவு, நிலம்) + இ = குட்டாரி >>> குட்டரி = உயர்ந்து திரண்ட நிலப் பரப்பு = மலை. |
குட்டிமம், KUTTIMAM |
கல்பதித்த பாதை, PAVED FLOOR |
கிட்டியவம் |
கிட்டு (=கெட்டியாக்கு) + இயவு (=வழி) + அம் = கிட்டியவம் >>> குட்டீவம் >>> குட்டிமம் = கெட்டியாக்கிய வழி. |
குட்டினி, KUTTINI |
விபச்சாரி, PROSTITUTE |
குட்டினீ |
கூடு (=புணர்) + இனம் (=பொருள்) + ஈ (=கொடு) = குட்டினீ >>> குட்டினி = பொருள் கொடுத்தால் புணர்பவள். |
குட்டினி, KUTTINI |
கூட்டிக் கொடுப்பவள், BAWD |
குட்டினீ |
கூட்டு + இனம் (=பொருள்) + ஈ (=கொடு) = குட்டினீ >>> குட்டினி = பொருளுக்காக கூட்டிக் கொடுப்பவள். |
குட்டு, KUTTU |
இரகசியம், SECRET |
குற்று |
குறை (=ஒடுக்கு, மறை, சொல்) + உ = குற்று >>> குட்டு = மறைக்கப்பட்ட சொல் = இரகசியம். |
குட்டு, KUTTU |
பெருமை, HONOUR |
குட்டு |
கூடு (=உயர், பெரு) + உ = குட்டு = உயர்வு, பெருமை. |
குடங்கர், KUTANKAR |
வீடு, ABODE |
குறக்கார் |
குறை (=ஒடுங்கு, அடங்கு) + அகம் (=உள்) + ஆர் (=பொருந்து, கட்டு, இடம்) = குறக்கார் >>> குடங்கர் = உள்ளே பொருந்தி அடங்குவதற்காக கட்டப்பட்ட இடம் = வீடு. |
குடம், KUTAM |
குவிந்த நீர்க்கலம், WATER POT |
குடம் |
கூடு (=வளை, குவி, கலம்) + அம் (=நீர்) = குடம் = வளைந்து குவிந்திருக்கும் நீர்க் கலம் |
குடம், KUTAM |
வண்டிக்குடம், WHEEL HUB |
குடம் |
குடை (=கடை, துளையிடு) + அம் (=வளைவு) = குடம் = கடைந்து துளையிட்ட வளைவான பொருள். |
குடம், KUTAM |
கோளம், SPHERE |
குடம் |
கூடு (=சேர், திரள்) + அம் (=வளைவு) = குடம் = வளைந்து திரண்டது = பந்து, கோளம். |
குடம், KUTAM |
பசு, COW |
குறம் |
குறு (=பறி, கற) + அம் (=பால், அழகு, தெய்வம்) = குறம் >>> குடம் = பால் கறக்கின்ற அழகிய தெய்வம் = பசு. |
குடம், KUTAM |
நகரம், TOWN |
குடம் |
கூடு (=பெரு, வசிப்பிடம்) + அம் = குடம் = பெரிய வசிப்பிடம் |
குடம், KUTAM |
வெல்லக்கட்டி, JAGGERY |
குடம் |
கூடு (=திரள், கட்டியாகு) + அம் (=இனிமை) = குடம் = இனிப்புக் கட்டி = வெல்லக் கட்டி |
குடாரம், KUTAARAM, குடாரி, KUTAARI |
கோடாலி, AXE |
குறாரம் |
குறை (=வெட்டு) + ஆர் (=மரம்) + அம் = குறாரம் >>> குடாரம் = மரத்தை வெட்டுவது = கோடாலி |
குடாரம், KUTAARAM |
புல்லாங்குழல், FLUTE |
குடாரம் |
குடை (=துளையிடு) + ஆர் (=ஒலி, தண்டு) + அம் (=இனிமை) = குடாரம் = இனிமையாக ஒலிக்கும் துளையிட்ட தண்டு. |
குடாரம், KUTAARAM |
தயிர்கடை தறி, CHURNING POST |
குடாரம் |
குடை (=கடை) + ஆர் (=பொருத்து, தண்டு) + அம் (=நீளம்) = குடாரம் = கடைவதற்காகப் பொருத்திய நீண்ட தண்டு. |
குடாரம், KUTAARAM |
மத்து, CHURNING STICK |
குடாரம் |
குடை (=கடை) + ஆர் (=தண்டு) + அம் (=பால்) = குடாரம் = பாலைக் கடையும் தண்டு = மத்து. |
குடாரம், KUTAARAM |
தயிர்கடை பானை, CHURNING POT |
குடாரம் |
குடம் (=பானை) + ஆர் (=சுற்று, கடை) + அம் (=பால்) = குடாரம் = பாலைக் கடையும் பானை. |
குடாரி, KUTAARI |
அங்குசம், ELEPHANT GOAD |
குடரி |
குடை (=குத்து) + அரி (=கூர்மை, ஆயுதம், யானை) = குடரி >>> குடாரி = யானையைக் குத்தும் கூரிய ஆயுதம். |
குடி, KUTI |
பருகு, DRINK |
குறி |
குறை (=முக) + இ = குறி >>> குடி = முக, பருகு |
குடி, KUTI |
புருவம், EYE BROW |
கோடு |
கோடு (=புருவம்) + இ = கொடி >>> குடி |
குடி, KUTI |
வசிப்போர், TENANT |
குடி |
கூடு (=வசிப்பிடம்) + இ = குடி = வசிப்பவர் |
குடி, KUTI |
குலம், RACE |
கூட்டம் |
கூட்டம் (=பிரிவு) + இ = குட்டி >>> குடி = பிரிவு, குலம் |
குடி, KUTI |
வீடு, HOUSE, ஊர், VILLAGE |
கூடு |
கூடு (=வசிப்பிடம்) + இ = குடி = வீடு, ஊர். |
குடிகை, KUTIKAI |
புல்வேய் வீடு, HUT |
குடூகை |
குடை (=கவிப்பு) + ஊகம் (=புல்) + ஐ = குடூகை >>> குடிகை = புற்களால் ஆன கவிப்பைக் கொண்டது. |
குடிகை, KUTIKAI |
கோயில், TEMPLE |
குடூங்கை, குடிகை |
(1) குடி (=வசிப்பிடம்) + ஊங்கு (=மேலானது) + ஐ = குடூங்கை >>> குடிகை = மேலானதின் வசிப்பிடம் = கோயில். (2) கூடு (=சேர், இருப்பிடம்) + இகு (=தாழ், வீழ், ஒலி, பாடு) + ஐ = குடிகை = பலர் சேர்ந்து தாழ்ந்தும் வீழ்ந்தும் பாடிப் புகழும் இருப்பிடம் = கோயில். |
குடிகை, KUTIKAI |
ஏலம், CARDAMOM |
குடிகை |
கூடு (=உறை, தோல்) + இகம் (=நறுமணம்) + ஐ = குடிகை = நறுமணத் தோலைக் கொண்டது = ஏலக்காய் |
குடிகை, KUTIKAI, குண்டிகை, KUNTIKAI |
கமண்டலம், ASCETIC’S PITCHER |
குடிகை |
குடம் (=நீர்ப்பானை) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = குடிகை = தாழ்ந்து தொங்குகின்ற நீர்ப்பானை. |
குடிங்கு, KUTINKU |
பறவை, BIRD |
குடிங்கு |
கூடு + இங்கு (=தங்கு) = குடிங்கு = கூட்டில் தங்குவது |
குடிசை, KUTICAI, குடிசல், KUTICAL, குடிஞை, KUTIGNAI |
நார்வேய் வீடு, HUT |
குடிழை |
குடை (=கவிப்பு) + இழை (=நார்) = குடிழை >>> குடிஞை >>> குடிசை = நாரினால் ஆன கவிப்பைக் கொண்டது. |
குடிஞை, KUTIGNAI |
பறவை, BIRD |
குடிழை |
கூடு + இழை (=கட்டு) = குடிழை >>> குடிஞை = கூடு கட்டுவது = பறவை. |
குடில், KUTIL |
சிறுவீடு, HUT |
குறில் |
குறுமை (=சிறுமை) + இல் (=வீடு) = குறில் >>> குடில் = சிறிய வீடு. |
குடில், KUTIL, குடிலம், KUTILAM |
ஆகாயம், SKY |
குடில் |
கூடு (=மிகு, பெரு) + இல் (=வெளி) = குடில் = பெருவெளி |
குடிலம், KUTILAM |
வளைவு, BEND, வஞ்சகம், FRAUD |
குடிலம் |
குடிமை (=ஒழுக்கம், நேர்மை) + இல் (=இன்மை) + அம் = குடிலம் = நேர்மை இல்லாமை = வளைவு., வஞ்சகம். |
குடிலம், KUTILAM |
சடை, MATTED HAIR |
குடுளம் |
கூடு (=சேர், திரள்) + உளை (=மயிர்) + அம் = குடுளம் >>> குடிலம் = சேர்ந்து திரண்ட மயிர் = சடைமுடி. |
குடிலம், KUTILAM |
சுரத்தை மாற்றிப் பாடுதல், VOICE MODULATION |
குறிலம் |
குறில் (=குறுகிய ஓசை) + அம் (=நீளம், ஒலி) = குறிலம் >>> குடிலம் = குறுகிய ஓசையை நீட்டி ஒலித்தல், நீண்ட ஓசையைக் குறுக்கி ஒலித்தல். |
குடிலை, KUTILAI |
மாயை, ILLUSION |
குடிலை |
குடிலம் (=வஞ்சகம்) + ஐ = குடிலை = வஞ்சகம், மாயை |
குடிலை, KUTILAI |
பிரணவம், OM |
குடிலம் |
கூடு (=மிகு, நிறை) + இல் (=வெளி) + அம் (=தெய்வம், ஒலி) = குடிலம் = வெளியில் நிறைந்துள்ள தெய்வ ஒலி. |
குடீசகம், KUTEECAKAM |
சன்னியாச வகை, KIND OF ASCETICISM |
குடிசஃகம் |
குடிசை + அஃகு (=ஒடுங்கு) + அம் (=தெய்வம், வழிபாடு) = குடிசஃகம் >>> குடீசகம் = குடிசைக்குள் ஒடுங்கி தெய்வத்தை வழிபடுதல் = சன்னியாச வகை. |
குடீரகம், KUTEERAKAM, குடீரம், KUTEERAM |
நார்வேய்வீடு, HUT |
குடீரகம் |
குடை (=கவிப்பு) + ஈரி (=நார்) + அகம் (=வீடு) = குடீரகம் = நார்களால் ஆன கவிப்புடைய வீடு. |
குடு, KUTU |
கள், TODDY |
குடூழ் |
குடி (=பானம்) + ஊழ் (=ஒளி, வெண்மை, பழமை) = குடூழ் >>> குடு = பழமையான / நாட்பட்ட வெண்ணிற பானம் = கள். |
குடுக்கை, KUTUKKAI |
கமண்டலம், ASCETIC’S PITCHER |
குடிக்கை |
குடம் (=நீர்ப்பானை) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = குடிக்கை >>> குடுக்கை = தாழ்ந்து தொங்குகின்ற நீர்ப்பானை. |
குடுக்கை, KUTUKKAI |
ஓட்டுப் பாத்திரம், SHELL VESSEL |
குடுக்கை |
கூடு (=ஓடு, கலம்) + கை (=சிறுமை) = குடுக்கை = ஓட்டினால் ஆன சிறு பாத்திரம். |
குடுக்கை, KUTUKKAI |
கைப்பறை, HAND DRUM |
கொட்டுகை |
கொட்டு (=பறை) + கை = கொட்டுகை >>> குட்டுக்கை >>> குடுக்கை = கைப்பறை. |
குடுகு, KUTUKU |
ஓட்டுப் பாத்திரம், SHELL VESSEL |
குடுகு |
கூடு (=ஓடு, கலம்) + கை (=சிறுமை) + உ = குடுகு = ஓட்டினால் ஆன சிறிய பாத்திரம். |
குடுத்தா, KUTUTHTHAA, குர்த்தா, KURTHTHAA |
உயரமான மேலாடை, |
குறுந்தா |
கூறை (=ஆடை) + உந்தி (=உயரம், மேல்) + ஆ = குறுந்தா >>> குடுத்தா, குருத்தா >>> குர்த்தா = உயரமான மேலாடை |
குடும்பம், KUTUMPAM |
வீட்டில் வசிப்போர், HOUSE RESIDENTS |
குடுப்பம் |
குடி (=வீடு, கூட்டம், வசிப்போர்) + உப்பு (=அன்பு, பெருகு) + அம் = குடுப்பம் >>> குடும்பம் = அன்பு பெருக ஒரே வீட்டில் வசிப்போர் கூட்டம். |
குடும்பம், KUTUMPAM |
உறவினர், RELATIONS |
குடுப்பம் |
குடி (=குலம்) + உப்பு (=பெருகு) + அம் = குடுப்பம் >>> குடும்பம் = குலத்தின் பெருக்கம் = உறவினர் |
குடும்பினி, KUTUMPINI |
மனைவி, HOUSE WIFE |
குடும்பீனி |
குடும்பம் + ஈன் (=படை) + இ = குடும்பீனி >>> குடும்பினி = குடும்பத்தைப் படைப்பவள் = மனைவி. |
குடும்பு, KUTUMPU |
கொத்து, CLUSTER |
குடுப்பு |
கூடு (=சேர்) + உப்பு (=பெருகு) = குடுப்பு >>> குடும்பு = சேர்ந்து பெருகியது = கொத்து, குலை. |
குடுமி, KUTUMI |
உச்சி, உச்சிமயிர், PEAK, HAIR TUFT, கிரீடம், CROWN |
குடுப்பி |
கூடு (=குவி) + உப்பு (=பொங்கு, உயர்) + இ = குடுப்பி >>> குடுமி = உயரத்தில் குவிந்திருப்பது = உச்சி, உச்சியில் இருப்பது = உச்சிமயிர், கிரீடம். |
குடோரி, KUTOARI |
மண்டையோட்டைக் கீறி மருந்திடுதல், MEDICAL TREATMENT |
கிறூறி |
கீறு + உறை (=ஓடு, மருந்து, அமுக்கு) + இ = கிறூறி >>> குடூரி >>> குடோரி = ஓட்டைக் கீறி மருந்தை அமுக்குதல். |
குண்டக்கம், KUNTAKKAM |
இழிசொல், SLANDER |
குண்டாக்கம் |
குண்டு (=பள்ளம், தாழ்வு, இழிவு) + ஆக்கம் (=சொல்) = குண்டாக்கம் >>> குண்டக்கம் = இழிசொல் |
குண்டக்கம், KUNTAKKAM |
வஞ்சனை, DECEIT |
கிறாக்கம் |
கிறி (=தந்திரம்) + ஆக்கம் (=செயல்) = கிறாக்கம் >>> குடாக்கம் >>> குண்டக்கம் = தந்திரச் செயல். |
குண்டகம், KUNTAKAM |
கடப்பாரை, CROW BAR |
குட்டெஃகம் |
குடை (=தோண்டு) + எஃகு (=கூர்மை, இரும்பு) + அம் (=நீளம்) = குட்டெஃகம் >>> குண்டகம் = தோண்டுவதற்கான கூரிய நீண்ட இரும்பு = கடப்பாரை. |
குண்டணி, KUNTANHI |
இழிசொல், SLANDER |
குண்டணி |
குண்டு (=பள்ளம், தாழ்வு, இழிவு) + அணி (=சொல்) = குண்டணி = இழிசொல் |
குண்டம், KUNTAM |
குழி, PIT |
குட்டம் |
குடை (=தோண்டு) + அம் = குட்டம் >>> குண்டம் = தோண்டப்பட்டது = பள்ளம், குழி. |
குண்டம், KUNTAM |
பானை, POT, கரகம், PITCHER |
குட்டம் |
கூடு (=குவி, கலம்) + அம் (=நீர்) = குட்டம் >>> குண்டம் = நீருக்கான குவிந்த கலம் = பானை, கரகம். |
குண்டலம், KUNTALAM |
காதணி, EAR ORNAMENT |
குட்டளம் |
குடை (=துளையிடு) + அள் (=காது, பூட்டு) + அம் = குட்டளம் >>> குண்டலம் = காதில் துளையிட்டுப் பூட்டப்படுவது. |
குண்டலம், KUNTALAM |
ஆகாயம், SKY |
குட்டலம் |
கூடு (=நிறை) + அல் (=இன்மை) + அம் = குட்டலம் >>> குண்டலம் = இன்மையால் நிறைந்தது = ஆகாயம். |
குண்டலம், KUNTALAM |
வட்டம், CIRCLE, வளையம், RING |
குட்டலம் |
கூடு (=ஒன்றாகு) + அலை (=வளைவு) + அம் = குட்டலம் >>> குண்டலம் = வளைந்து ஒன்றாகியது = வளையம், வட்டம். . |
குண்டலம், KUNTALAM |
பூச்சியம், ZERO |
குட்டலம் |
கூட்டு (=மதிப்புசேர்) + அல் (=இன்மை) + அம் = குட்டலம் >>> குண்டலம் = மதிப்பு சேர்க்காதது. |
குண்டலி, KUNTALI |
தொப்புள் கொடி, UMBILICAL CHORD |
கொட்டளி |
கொடி + அளி (=ஈனு, பிறப்பி) = கொட்டளி >>> குண்டலி = பிறப்புக்கான கொடி = தொப்புள் கொடி |
குண்டலி, KUNTALI, குண்டலம், KUNTALAM |
தொப்புள், NAVEL |
கொட்டளி |
கொடி (=தொப்புள்கொடி) + அளை (=பொருந்து, துளை) + இ = கொட்டளி >>> குண்டலி = தொப்புள்கொடி பொருந்திய துளை |
குண்டலினி, KUNTALINI |
தொப்புள் வட்டத்தீ, MYSTICAL NAVAL FIRE |
குண்டலினி |
குண்டலம் (=தொப்புள், வட்டம்) + இனை (=எரி) + இ = குண்டலினி = தொப்புளுக்குள்ளே வட்டமாக எரிவது. |
குண்டன், KUNTAN |
உடல் பெருத்தவன், STOUT MAN |
குட்டன் |
கூடு (=பெரு, உடல்) + அன் = குட்டன் >>> குண்டன் = பெருத்த உடலைக் கொண்டவன் |
குண்டன், KUNTAN |
இழிந்தவன், MAN OF LOW CHARECTER |
குன்றன் |
குன்று (=தாழ், இழி) + அன் = குன்றன் >>> குண்டன் = தாழ்ந்தவன் / இழிந்தவன் |
குண்டா, KUNTAA, குண்டான், KUNTAAN |
அகல்வாய்ச் சட்டி, WIDE MOUTHED VESSEL |
குட்டா |
கூடு (=பெரிதாகு, கலம்) + ஆ (=வாய்திற) = குட்டா >>> குண்டா = பெரிதாக வாய்திறந்த கலம். |
குண்டி, KUNTI |
பின்புறம், BUTTOCKS |
குட்டிழி |
கூடு (=உடல், திரள், பெரு) + இழி = குட்டிழி >>> குண்டியி >>> குண்டி = உடலில் திரண்டு பெருத்த இழிந்த பகுதி |
குண்டி, KUNTI |
சிறுநீரக விதை, KIDNEY BALLS |
கொட்டிழி |
கொட்டை + இழி (=இறங்கு, தாழ்) = கொட்டிழி >> குண்டியி >>> குண்டி = இறங்கித் தாழ்ந்த கொட்டை |
குண்டி, KUNTI |
நெஞ்சு, HEART |
குட்டுய் |
கூடு (=உறை) + உய் (=உயிர்வாழ்) = குட்டுய் >>> குட்டி >>> குண்டி = உயிர் வாழும் உறை = நெஞ்சுக்கூடு. |
குண்டி, KUNTI |
முட்டை, EGG |
குட்டீ |
கூடு (=உடல், ஓடு) + ஈ (=பிறப்பி, ஈனு) = குட்டீ >>> குண்டி = உடலை ஈனும் ஓட்டைக் கொண்டது = முட்டை. |
குண்டிகை, KUNTIKAI |
கரகம், ASCETIC’S PITCHER |
குட்டிகை |
குடம் (=நீர்ப்பானை) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = குட்டிகை >>> குண்டிகை = தாழ்ந்து தொங்குகின்ற நீர்ப்பானை. |
குண்டியம், KUNTIYAM |
இழிசொல், SLANDER |
குன்றியம் |
குன்று (=தாழ், இழி) + இயம் (=சொல்) = குன்றியம் >>> குண்டியம் = இழிசொல். |
குண்டியம், KUNTIYAM |
இரகசிய வெளிப்பாடு, EXPOSURE OF SECRETS |
குட்டுயம் |
குட்டு (=இரகசியம்) + உய் (=அறிவி) + அம் = குட்டுயம் >>> குண்டியம் = இரகசியத்தை வெளிப்படுத்துகை. |
குண்டியம், KUNTIYAM |
பொய், FALSEHOOD |
கிறி, குற்றேயம் |
(1) கிறி (=வஞ்சனை) + இயம் = கிற்றியம் >>> குட்டியம் >>> குண்டியம் = வஞ்சனை, பொய். (2) கூற்று (=சொல்) + ஏய் (=வஞ்சி) + அம் = குற்றேயம் >>> குட்டேயம் >>> குண்டியம் = வஞ்சிக்கும் சொல் = பொய். |
குண்டு, KUNTU |
உருண்டை, BALL |
குட்டு, குடை |
(1) கூடு (=திரள், பெரு) + உ = குட்டு >>> குண்டு = திரண்டு பெருத்திருப்பது = உருண்டை. (2) குடை (=குமிழ், உருண்டை) + உ = குட்டு >>> குண்டு. |
குண்டு, KUNTU |
துலாக்கோல், SCALES |
குட்டு |
கூட்டு (=ஒப்புமை, சமன், தண்டு) + உ = குட்டு >>> குண்டு = சமனாக்கப்படும் தண்டு = துலாக்கோல். |
குண்டு, KUNTU |
துளைத்து மறைவது, BULLET |
குட்டு |
குடை (=கடை, சுற்று, துளை, மூழ்கு, மறை) + உ = குட்டு >>> குண்டு = சுற்றியவாறே துளைத்து மறைவது.. |
குண்டு, KUNTU |
சிறு வட்டக் கலம், SMALL ROUND VESSEL |
குட்டு |
குடை (=கடை, வட்டமடி, குழிந்த பொருள்) + உ = குட்டு >>> குண்டு = வட்டமாகக் குழிந்த பொருள். |
குண்டு, KUNTU |
கொட்டை, SEED |
கொட்டை |
கொட்டை + உ = கொட்டு >>> குண்டு |
குண்டு, KUNTU |
குதிரை, |
குட்டோ |
குடு (=விரை) + ஓ (=செல்) = குட்டோ >>> குண்டு = விரைந்து செல்வது = குதிரை. |
குண்டு, KUNTU |
ஆழம், DEPTH, குழி, PIT, குளம், POND |
குட்டு |
குடை (=தோண்டு) + உ = குட்டு >>> குண்டு = தோண்டப் பட்டது = ஆழம், குழி, குளம் |
குண்டு, KUNTU |
தாழ்வு, LOWNESS |
குன்று |
குன்று (=இழி, தாழ்) + உ = குன்று >>> குண்டு = தாழ்வு. |
குண்டு, KUNTU |
மேடு, RIDGE |
குன்று |
குன்று (=மேடு) >>> குண்டு |
குண்ணியம், KUNHNHIYAM |
பெருக்கப்படுவது, MULTIPLICAND |
குட்டியம் |
கூட்டு (=பெருக்கு) + இயை (=பொருந்து, படு) + அம் = குட்டியம் >>> குண்ணியம் = பெருக்கப்படுவது. |
குணகாரம், KUNHAKAARAM |
பெருக்கும் செயல், MULTIPLICATION |
குட்டகாரம் |
கூட்டம் (=பெருக்கம்) + காரம் (=செயல்) = குட்டகாரம் >>> குண்ணகாரம் >>> குணகாரம் = பெருக்கும் செயல் |
குணங்கு, KUNHANKU, குணகு, KUNHAKU, குணங்கர், KUNHANKAR |
பேய், DEVIL, DEMON |
குன்றக்கு |
குன்று (=அழி) + அகம் (=உயிர், உடல்) + உ = குன்றக்கு >>> குன்னங்கு >>> குணங்கு = உயிர் அழிந்த உடலையுடையது |
குணபம், KUNHAPAM |
பிணம், CORPSE, பேய், DEVIL |
குன்றாப்பம் |
குன்று (=அழி) + ஆப்பு (=உடல்) + அம் = குன்றாப்பம் >>> குன்னபம் >>> குணபம் = அழிந்த உடல் = பிணம், பேய் |
குணபாசி, KUNHAPAACI |
பிணந்தின்னிப் பேய், CORPSE EATING DEVIL |
குணபசி |
குணபம் (=பிணம், பேய்) + அசை (=உண்ணு) + இ = குணபசி >>> குணபாசி = பிணங்களை உண்ணும் பேய். |
குணம், KUNHAM |
கொள்கை, OPINION, இயல்பு, NATURE, அறிவு, KNOWLEDGE |
குடம், கொண்ணம் |
(1) கூடு (=இயலு) + அம் = குடம் >>> குணம் = இயல்பு. (2) குனி (=கவனி, அறி, கருது) + அம் = குன்னம் >>> குணம் = அறியப்படுவது = இயல்பு, கருத்து, கொள்கை, அறிவு. |
குணம், KUNHAM |
பணிவு, ஒழுக்கம், OBEDIANCE |
குன்னம் |
குனி (=வளை, பணி) + அம் = குன்னம் >>> குணம் = பணிவு, அடக்கம், ஒழுக்கம். |
குணம், KUNHAM |
பெருமை, DIGNITY |
கொன் |
கொன் (=பெருமை) + அம் = கொன்னம் >>> குணம் |
குணம், KUNHAM |
நோய் தீர்தல், CONVALESCENCE |
குன்றேம் |
குன்று (=ஒழி, தீர்) + ஏம் (=வருத்தம், நோய்) = குன்றேம் >>> குன்னம் >>> குணம் = நோய் தீர்தல். |
குணம், KUNHAM |
வெற்றி, SUCCESS |
கொன்னம், குடம் |
(1) கொன் (=வலிமை, உறுதி) + அம் = கொன்னம் >>> குணம் = உறுதி, வெற்றி. (2) கூடு (=கைகூடு) + அம் = குடம் >>> குணம் = கைகூடுதல், வெற்றி. |
குணம், KUNHAM |
வில் நாண், BOW STRING, கயிறு, ROPE |
குன்னம் |
குனி (=வில்) + அம் (=அம்பு, பொருந்து, நீளம்) = குன்னம் >>> குணம் = வில்லில் அம்பு பொருந்தும் நீண்ட பொருள் = வில்லின் நாண் >>> கயிறு. |
குணம், KUNHAM |
நிறம், COLOUR |
குன்னம் |
குனி (=கவனி, அறி) + அம் (=ஒளி) = குன்னம் >>> குணம் = ஒளியினால் அறியப்படுவது = நிறம். |
குணம், KUNHAM |
தெளிந்த அறிவு, CLEAR INTELLIGENCE |
குன்னம் |
குனி (=கவனி, அறி) + அம் (=ஒளி, தெளிவு) = குன்னம் >>> குணம் = தெளிந்த அறிவு. |
குணம், KUNHAM |
குடம், WATER POT |
கூனை |
கூனை (=நீர்க்கலம்) + அம் = குன்னம் >>> குணம் |
குணலை, KUNHALAI, குணாலம், KUNHAALAM |
ஆரவார நடனம், DANCE WITH SHOUTING |
குன்னாலை |
குனி (=கூத்தாடு) + ஆல் (=ஒலி) + ஐ = குன்னாலை >>> குணலை = ஒலித்தவாறு கூத்தாடுதல். |
குணலை, KUNHALAI |
குனிந்து குழைதல், BEND WITH SHYNESS |
குன்னளை |
குனி + அளி (=குழை) + ஐ = குன்னளை >>> குணாலை = குனிந்து குழைதல். |
குணவதி, KUNHAVATHI |
நற்பண்பினள், NOBLE WOMAN |
குணபதி |
குணம் (=பண்பு) + பதம் (=இனிமை) + இ = குணபதி >>> குணவதி = இனிய பண்புகளைக் கொண்டவள். |
குணவந்தன், KUNHAVANTHAN |
நற்பண்பினன், NOBLE MAN |
குணபத்தன் |
குணம் (=பண்பு) + பதம் (=இனிமை) + அன் = குணபத்தன் >>> குணவந்தன் = இனிய பண்புகளைக் கொண்டவன். |
குணனம், KUNHANAM |
பெருக்குதல், MULTIPLICATION |
கொனெணம் |
கொன் (=பெருமை, பெருக்கம்) + எண் + அம் = கொனெணம் >>> குணனம் = எண்களைப் பெருக்குதல். |
குணனீயம், KUNHANEEYAM |
பெருக்கப்படுவது, MULTIPLICAND |
குணனியம் |
குணனம் (=பெருக்கல்) + இயை (=பொருந்து, படு) + அம் = குணனியம் >>> குணனீயம் = பெருக்கப்படுவது |
குணாளன், KUNHAALHAN |
ஒழுக்கசீலன், NOBLE MAN |
குணாளன் |
குணம் (=ஒழுக்கம்) + ஆள் (=கைக்கொள்) + அன் = குணாளன் = ஒழுக்கத்தைக் கைக்கொள்பவன். |
குணி, KUNHI |
பொருள், OBJECT |
குணி |
குணம் (=தன்மை) + இ = குணி = தன்மையைக் கொண்டது |
குணி, KUNHI |
வளைந்தது, LAME |
குனி |
கூன் (=வளைவு) + இ = குனி >>> குணி = வளைந்தது |
குணி, KUNHI |
கருது, CONSIDER, கணி, RECKON |
குனி |
குனி (=கவனி, அறி, கருது) >>> குணி = கருது, கணி |
குணி, KUNHI |
வரையறு, DETERMINE |
கொன்னி |
கொன் (=வலிமை, உறுதி) + இ = கொன்னி >>> குணி = உறுதிசெய், வரையறு. |
குணி, KUNHI |
பெருக்கு, MULTIPLY |
கொன்னி |
கொன் (=பெருமை, பெருக்கம்) + இ = கொன்னி >>> குணி = பெருக்கம் செய் |
குணிதம், KUNHITHAM |
பெருக்குத்தொகை, PRODUCT OF MULTIPLICATION |
கொன்னிறம் |
கொன் (=பெருமை, பெருக்கம்) + இறை (=விடை) + அம் = கொன்னிறம் >>> குணிதம் = பெருக்கிய விடை |
குணிதம், KUNHITHAM |
மடங்கு, FOLD |
கொன்னிதம் |
கொன் (=பெருமை, பெருக்கம்) + இதம் = கொன்னிதம் >>> குணிதம் = பெருக்கம், மடங்கு. |
குணு, KUNHU |
புழு, WORM |
குடோ |
குடை (=துளை) + ஓ (=செல், தங்கு) = குடோ >>> குணோ >>> குணு = துளைத்துச் சென்று தங்குவது = புழு. |
கொண்டல், KONTAL |
மேகம், CLOUD |
கொட்டால் |
கொட்டு (=ஊற்று, பொழி) + ஆல் (=நீர்) = கொட்டால் >>> கொண்டல் = நீரைப் பொழிவது = மேகம். |
குண்டூசி, KUNTOOCI |
சிறிய ஊசி, PIN |
குண்டூசி |
குண்டை (=சிறுமை) + ஊசி = குண்டூசி = சிறிய ஊசி. |
குண்டால், KUNTAAL |
நூறுகிலோ, QUINTAL |
குண்டள் |
குண்டு (=எடை) + அள் (=செறிவு, மிகுதி) = குண்டள் >>> குண்டால் = மிகுதியான எடை. |
நதி, NATHI |
ஆறு, RIVER |
நந்தை |
நம் (=ஈரம், நீர்) + தை (=கட்டு, மாலை) = நந்தை >>> நத்தி >>> நதி = நீரினால் கட்டப்பட்ட மாலை = ஆறு. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.