சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
குரவன், KURAVAN |
பெரியோன், DIGNIFIABLE ELDER PERSON |
குரமன் |
கூர் (=மிகு, வளை, வணங்கு) + அமை (=பொருந்து, பெருமை) + அன் = குரமன் >>> குரவன் = பொருந்தி வணங்கும் பெருமை மிக்கவன். |
குரவன், KURAVAN |
அமைச்சன், MINISTER |
குறாய்மன் |
கூறு (=சொல்) + ஆய் (=கருது, ஆலோசி) + மன் (=அரசன்) = குறாய்மன் >>> குரவன் = மன்னனுக்குக் கருத்து / ஆலோசனை கூறுபவன் = அமைச்சன். |
குரவன், KURAVAN |
ஆசிரியன், TEACHER |
குறைமன் |
குறை (=சந்தேகம், நீக்கு) + மன் = குறைமன் >>> குரவன் = சந்தேகங்களை நீக்குபவன் = ஆசிரியன் |
குரவை, KURAVAI |
கூடியாடும் கூத்து, GROUP DANCE |
குரவை |
கூர் (=வளை, கூத்தாடு) + அவை (=கூட்டம்) = குரவை = கூடி ஆடும் கூத்து. |
குரவை, KURAVAI |
கடல், OCEAN |
குரமை |
கூர் (=மிகுதி) + அம் (=ஒலி, நீர்) + ஐ = குரமை >>> குரவை = ஒலிக்கின்ற நீர் மிக்கது = கடல். |
குருசி, KURUCI, குரிச்சி, KURICCI, குர்சி, KURSI |
நாற்காலி, CHAIR |
குறிழி |
குறுகு / குறு (=குள்ளமாகு, அமர்) + இழை (=செதுக்கு, சேர், செய்) + இ = குறிழி >>> குருசி = அமர்வதற்காகச் செதுக்கிச் சேர்த்து செய்தது. |
குரு, KURU |
ஒளி, LIGHT |
குரு |
கூர்மை (=கூரிய தன்மை, நுண்மை) + உ = குரு = கூரிய தன்மை கொண்ட நுட்பப் பொருள் = ஒளி. |
குரு, KURU |
குற்றம், FAULT |
குறை |
குறை (=குற்றம்) + உ = குறு >>> குரு |
குரு, KURU |
பெருமை, EMINENCE, பெரியோன், NOBLE |
குரு |
குரை (=பெருமை) + உ = குரு = பெருமை, பெருமை உடையவன். |
குரு, KURU |
ஆசிரியன், TEACHER |
குறு |
குறை (=சந்தேகம், நீக்கு) + உ = குறு >>> குரு = சந்தேகங்களை நீக்குபவன் = ஆசிரியன் |
குரு, KURU |
பருமன், LARGENESS, கனம், HEAVINESS |
குரு |
கூர் (=மிகு) + உ = குரு = மிகுதி, பருமன், கனம் |
குரு, KURU |
நெடில், LONG VOWEL |
குரு |
குரை (=ஒலி, பரப்பு, நீளம்) + உ = குரு = நீண்டு ஒலிப்பது = நெடில். |
குருது, KURUTHU |
நெய், GHEE, வெண்ணெய், BUTTER |
குறுறு |
குறை (=மெலிவி, உருக்கு) + உறை (=கெட்டியாகு, உணவு) + உ = குறுறு >>> குருது = உருக்கப்படும் கெட்டியான உணவு = நெய், வெண்ணெய் |
குருந்தம், KURUNTHAM, குருந்து, KURUNTHU |
செவ்வொளிக் கல், CORUNDUM |
குருத்தம் |
குருதி (=செந்நிறம்) + அம் (=ஒளி, கல்) = குருத்தம் >>> குருந்தம் = செந்நிறத்தில் ஒளிரும் கல். |
குருமை, KURUMAI |
நிறம், COLOUR |
குருமை |
குரு (=ஒளி) + மை = குருமை = நிறம். |
குருவிந்தம், KURUVINTHAM |
செவ்வொளிக் கல், CORUNDUM |
குருவீற்றம் |
குரு (=செந்நிறம்) + வீறு (=கல்) + அம் (=ஒளி) = குருவீற்றம் >>> குருவித்தம் >>> குருவிந்தம் = செந்நிறத்தில் ஒளிரும் கல். |
குருள், KURULH |
பெண் தலைமயிர், WOMEN’S HAIR LOCK |
குறுள் |
குறை (=மயிர்) + உள் (=எழுச்சி, உயரம்) = குறுள் >>> குருள் = எழுச்சியும் உயரமும் உடைய மயிர். |
குருள், KURULH |
சுருள், CURL |
குருள் |
கூர் (=வளை, சுருங்கு) + உள் (=உட்புறம்) = குருள் = உட்புறமாக வளைந்து சுருங்கியது = சுருள். |
குரை, KURAI |
பெருமை, GREATNESS, EXPANSE |
குரை |
கூர் (=மிகு, பெரு) + ஐ = குரை = மிகுதி, பெருமை, பரப்பு |
குரை, KURAI |
குதிரை, HORSE |
கிறை |
கிறு (=சுற்று, வட்டமடி, விரை) + ஐ = கிறை >>> குரை = விரைவாக வட்டமடிப்பது = குதிரை. |
குரோசம், KUROACAM |
வெகுதூரம், LONG DISTANCE |
குரொயம் |
கூர் (=மிகு) + ஒய் (=செல், பயணி) + அம் (=நீளம்) = குரொயம் >>> குரோசம் = மிக்க பயண நீளம் |
குரோட்டம், KUROATTAM, குரோட்டா, KUROATTAA |
நரி, JACKAL |
குரொற்றம் |
கூர் (=கூரறிவு, தந்திரம்) + ஒற்று (=தாக்கு, வீழ்த்து) + அம் (=உணவு, இரை) = குரொற்றம் >>> குரோட்டம் = தந்திரத்தால் இரையைத் தாக்கி வீழ்த்துவது = நரி |
குரோடம், KUROATAM |
பன்றி, HOG |
குறுறம் |
குறை (=தோண்டு) + உறை (=நிலம், உணவு) + அம் (=செருக்கு) = குறுறம் >>> குரோடம் = நிலத்தைத் தோண்டி உண்ணும் செருக்குடையது = பன்றி |
குல், KUL |
மொத்தம், SUM |
கோல் |
கோல் (=திரட்சி, மொத்தம்) >>> குல் = மொத்தம் |
குல்மம், KULMAM, குலுமம், KULUMAM |
போர்ப்படை, ARMY |
கொலீவம் |
கோல் (=திரட்சி, கூட்டம்) + ஈவு (=அழிவு) + அம் = கொலீவம் >>> குலுமம் >>> குல்மம் = அழிக்கும் கூட்டம் = போர்ப்படை. |
குல்லகம், KULLAKAM |
வறுமை, POVERTY |
குல்லகம் |
குலை (=அழி, இல்லாகு) + அகம் (=பொருள்) = குல்லகம் = பொருள் இல்லாமை = வறுமை. |
குல்லம், KULLAM |
முறம், FANNER |
குல்லம் |
குலை (=அசை, கலை, பிரி) + அம் (=உணவு) = குல்லம் = அசைத்துக் கலைத்து உணவைப் பிரிப்பது |
குல்லரி, KULLARI |
இலந்தை, JUJUBE |
கொல்லாரி |
கோல் (=திரட்சி, உருண்டை) + ஆர் (=உண்ணு, சிவப்பு) + இ = கொல்லாரி >>> குல்லரி = உருண்டையான சிவப்புநிற உணவு = இலந்தை. |
குல்லா, KULLAA |
வெளிப்படையான, OPEN |
குல்லா |
குலை (=அவிழ், வெளிப்படு) + ஆ = குல்லா = வெளிப்படையான |
குல்லா, KULLAA |
கயிறு, ROPE |
கொல்லா |
கோல் (=வளை, கட்டு) + ஆ = கொல்லா >>> குல்லா = வளைத்துக் கட்ட உதவுவது = கயிறு. |
குல்வலி, KULVALI |
இலந்தை, JUJUBE |
கொல்பலி |
கோல் (=திரட்சி, உருண்டை) + பலி (=எரி, உணவு) = கொல்பலி >>> குல்வலி = உருண்டையான எரிநிற உணவு = இலந்தை |
குலடை, KULATAI |
வேசி, UNCHASTE WOMAN |
குலடை |
குலவு / குல (=உறவாடு) + அடி (=பொருள்) + ஐ = குலடை = பொருளுக்காக உறவாடுபவள். |
குலத்தம், KULATHTHAM |
கொள்ளு, HORSE GRAM |
கிளத்தம் |
கிள்ளை (=குதிரை) + அத்து (=விரும்பு, சிவப்பு) + அம் (=உணவு) = கிளத்தம் >>> குலத்தம் = குதிரை விரும்பும் சிவப்புநிற உணவு = கொள்ளு. |
குலப்பன், KULAPPAN |
குயவன், POTTER |
கொலாம்பன் |
கோல் (=திரட்டு, வளை, உண்டாக்கு) + ஆம்பி (=பானை) + அன் = கொலாம்பன் >>> குலப்பன் = திரட்டியும் வளைத்தும் பானையை உருவாக்குபவன். |
குலம், KULAM |
இனம், DIVISION, கூட்டம், HERD |
கோலம் |
கோல் (=வகு) + அம் = கோலம் >>> குலம் = வகுத்தது = வகுப்பு, இனம், கூட்டம், பிரிவு |
குலம், KULAM |
மகன், SON |
கோலம் |
கோல் (=உண்டாக்கு, படை) + அம் = கோலம் >>> குலம் = படைக்கப்பட்டவன் = குழந்தை, மகன் |
குலம், KULAM |
வீடு, HOUSE |
கோலம் |
கோல் (=வளை, உண்டாக்கு) + அம் (=பொருந்து, தங்கு) = கோலம் >>> குலம் = தங்குவதற்காக வளைத்து உருவாக்கப்பட்டது = வீடு |
குலம், KULAM |
அரண்மனை, ROYAL PALACE |
கோலம் |
கோல் (=அரசாட்சி, வளை, உண்டாக்கு) + அம் = கோலம் >>> குலம் = அரசாட்சிக்காக வளைத்து உருவாக்கப்பட்டது = அரண்மனை. |
குலம், KULAM |
நன்மை, GOODNESS |
கோலம் |
கோல் (=உண்டாக்கு) + அம் (=இன்பம்) = கோலம் >>> குலம் = இன்பம் உண்டாக்குவது = நன்மை. |
குலம், KULAM |
அழகு, |
கோலம் |
கோல் (=உண்டாக்கு) + அம் (=ஒளி) = கோலம் >>> குலம் = ஒளி உண்டாக்குவது = அழகு. |
குலம், KULAM |
மலை, MOUNTAIN |
கோலம் |
கோல் (=வளை, திரள்) + அம் (=கல், நீளம், உயரம்) = கோலம் >>> குலம் = திரண்டு உயர்ந்த கல் = மலை. |
குலம், KULAM |
மூங்கில், BAMBOO |
கோலம் |
கோல் (=தண்டு) + அம் (=நீளம், உயரம்) = கோலம் >>> குலம் = நீண்டு உயர்ந்த தண்டினைக் கொண்டது. |
குலாசா, KULAACA |
விரிவான, WIDE |
குலயா |
குலை (=அவிழ், விரி) + ஆ = குலயா >>> குலாசா = விரிவான. |
குலாம், KULAAM |
அடிமை, SLAVE |
குலம் |
குலவு / குல (=வளை, பணி) + அம் (=கட்டளை) = குலம் >>> குலாம் = கட்டளைக்குப் பணிபவன் |
குலாயம், KULAAYAM, குலாயனம், KULAAYANAM |
கூண்டு, CAGE |
கொலேயம் |
கோல் (=கட்டு) + ஏய் (=பொருந்து, தங்கு) + அம் (=பறவை) = கொலேயம் >>> குலாயம் = பறவைகள் தங்குவதற்காகக் கட்டுவது = கூண்டு |
குலாரி, KULAARI |
வில்வண்டி, INDIAN COACH |
கொலரி |
கோல் (=வளைவு, வில்) + அரி (=வண்டி) = கொலரி >>> குலாரி = வில் வண்டி |
குலால், KULAAL |
நேர்த்தியான, FINE, NICE |
குலால் |
குலவு / குல (=வளை) + அல் (=இன்மை) = குலால் = வளைவற்ற = நேரான, நேர்த்தியான. |
குலால், KULAAL |
சிவப்பு, RED COLOUR |
கோலம் |
கோலம் (=சிவப்பு) + அல் = கொலல் >>> குலால் |
குலாலன், KULAALAN |
குயவன், POTTER |
கொலாலன் |
கோல் (=திரட்டு, வளை, உண்டாக்கு) + ஆல் (=சட்டி) + அன் = கொலாலன் >>> குலாலன் = திரட்டியும் வளைத்தும் சட்டிகளை உருவாக்குபவன் |
குலிகம், KULIKAM |
குங்குமம், VERMILLION |
கொலுகம் |
கோலம் (=சிவப்பு) + உகு (=உதிர், பொடியாக்கு) + அம் = கொலுகம் >>> குலிகம் = சிவப்புநிறப் பொடி |
குலிகம், KULIKAM |
இலுப்பை, MADHUCA LONGIFOLIA |
குலிகம் |
குலவு / குல (=மகிழ், இனி, வசப்படுத்து, குவி) + இகம் (=பூ) = குலிகம் = வசப்படுத்துகின்ற இனிப்புடைய குவிந்த மலர். |
குலிங்கம், KULINKAM |
ஊர்க்குருவி, SPARROW |
குளூங்கம் |
குள்ளம் (=சிறுமை) + ஊங்கு (=மேல், உயரம்) + அம் (=பறவை) = குளூங்கம் >>> குலிங்கம் = உயரத்தில் பறக்கின்ற சிறிய பறவை = ஊர்க்குருவி. |
குலிசம், KULICAM |
வச்சிராயுதம், THUNDERBOLT WEAPON |
கொலிஞ்சம் |
கோல் (=திரட்சி, தண்டு) + இஞ்சை (=கொலை) + அம் = கொலிஞ்சம் >>> குலிசம் = திரட்சியுடைய கொல்வதற்கான தண்டு = வச்சிராயுதம். |
குலிசம், KULICAM |
வயிரம், DIAMOND |
கொலிழம் |
கோலம் (=அழகு) + இழை (=செதுக்கு, அணிகலன், பதி) + அம் (=கல்) = கொலிழம் >>> குலிசம் = அணிகலன்களில் அழகுக்காக பதிக்கப்படும் செதுக்கப்பட்ட கல். |
குலிசம், KULICAM |
இலுப்பை, MADHUCA LONGIFOLIA |
குலுழம் |
குலவு / குல (=மகிழ், இனி, வசப்படுத்து, குவி) + உழை (=மலர்) + அம் = குலுழம் >>> குலிசம் = வசப்படுத்துகின்ற இனிப்புடைய குவிந்த மலர். |
குலீனன், KULEENAN |
உயர்குலத்தோன், NOBLE MAN |
குலேணன் |
குலம் + ஏண் (=உயர்வு) + அன் = குலேணன் >>> குலீனன் = உயர்குலத்தோன் |
குலிஞ்சன், KULINCAN, குலிஞன், KULIGNAN |
உயர்குலத்தோன், NOBLE MAN |
குலிச்சன் |
குலம் + இசை (=புகழ், பெருமை) + அன் = குலிச்சன் >>> குலிஞ்சன் = பெருமை மிக்க குலத்தினன் |
குலுத்தம், KULUTHTHAM |
கொள்ளு, HORSE GRAM |
கிளுற்றம் |
கிள்ளை (=குதிரை) + உறை (=எரி, உணவு) + அம் (=நிறம்) = கிளுற்றம் >>> குலுத்தம் = குதிரைக்கான எரிநிற உணவு = கொள்ளு. |
குவம், KUVAM |
அல்லி, WATER LILLY |
குவம் |
குவி (=இதழ்மூடு) + அம் (=ஒளி, பகல், நீர்) = குவம் = பகலில் இதழ்மூடும் நீர்மலர். |
குவலயம், KUVALAYAM |
பூமி, EARTH |
குவலயம் |
குவி (=சூழ்) + அலை (=கடல்) + அம் = குவலயம் = கடலால் சூழப்பட்டது = பூமி |
குவலயம், KUVALAYAM |
குவளை, NELUMBO |
குவளை |
குவளை + அம் = குவளயம் >>> குவலயம் |
குவளச்சி, KUVALACCI |
புற்றாஞ்சோறு, WHITE ANTS COMB |
குவளயி, குவெலாயி |
(1) குவி (=மிகு) + அளை (=புற்று, கூடியிரு) + இ = குவளயி >>> குவளச்சி = புற்றில் மிகுதியாகக் கூடியிருப்பது = ஈசல், புற்றாஞ்சோறு. (2) குவை (=மேடு, புற்று, திரட்சி) + எலு (=கரடி) + ஆய் (=பிரித்தெடு, குத்து, மென்மை, உண்) + இ = குவெலாயி >>> குவளச்சி = கரடியானது புற்றைக் குத்திப் பிரித்தெடுக்கும் மென்மையான திரண்ட உணவு = புற்றாஞ்சோறு. |
குவளை, KUVALHAI |
குவளை மலர், NELUMBO |
குவலை |
குவி (=இதழ்மூடு) + அல் (=இரவு) + ஐ = குவலை >>> குவளை = இரவில் இதழ்களை மூடிக்கொள்வது |
குவளை, KUVALHAI |
பேரெண், LARGE NUMBER |
குவளை |
குவி (=கூடு, மிகு) + அள (=எண்ணு) + ஐ = குவளை = மிகுதியான எண்ணிக்கை |
குவளை, KUVALHAI |
சிறுகுழி, SMALL PIT |
குவளை |
குவி (=சுருங்கு, நிறை) + அளை (=ஓட்டை) = குவளை = நிறைந்து சுருங்கிய ஓட்டை = சிறுகுழி |
குவளை, KUVALHAI |
சிறியநீர்ப் பாத்திரம், CUP |
குவாலை |
குவி (=சுருங்கு, சிறிதாகு) + ஆல் (=பாத்திரம், நீர்) + ஐ = குவாலை >>> குவளை = சிறிய நீர்ப் பாத்திரம் |
குவாகம், KUVAAKAM |
கமுகு, ARECANUT |
குவகம் |
குவை (=செறிவு, திரட்சி, உருண்டை) + அகை (=எரி) + அம் (=காய், நிறம்) = குவகம் >>> குவாகம் = உருண்டையான எரிநிறக் காய்கள் செறிந்தது. |
குவாதம், KUVAATHAM |
கசாயம், DECOCTION |
குமாற்றம் |
குமை (=கொதிக்கச்செய்) + ஆற்று (=தணி, நீக்கு, வடிகட்டு) + அம் (=நீர்) = குமாற்றம் >>> குவாதம் = கொதிக்கச்செய்து ஆற்றி வடிகட்டிய நீர். |
குவாதம், KUVAATHAM, குவாது, KUVAATHU |
விதண்டாவாதம், PERVERSE TALK |
கூழ்மாற்றம் |
கூழ் (=கெடு, அழி) + மாற்று (=பேச்சு) + அம் (=சொல்) = கூழ்மாற்றம் >>> குவாத்தம் >>> குவாதம் = சொல்லியதை அழித்துப் பேசுதல். |
குவை, KUVAI |
புடமிடும் கலம், CRUCIBLE |
குமை |
குமை (=உருக்கு, கலம்) >>> குவை = உருக்கும் கலம் |
குழியம், KUZIYAM |
கோளம், BALL |
குழியம் |
குழை (=வளை, திரள்) + இயம் = குழியம் = வளைந்து திரண்டது = உருண்டை |
குழியம், KUZIYAM |
வளைதடி, CURVED BLUDGEON |
குழெழம் |
குழை (=வளை, திரள்) + எழு (=தண்டு, தடி) + அம் = குழெழம் >>> குழியம் = வளைந்து திரண்ட தடி |
குழு, KUZU |
வஞ்சனை, FRAUD |
குழை |
குழை (=ஓட்டை, பொய்) + உ = குழு = பொய்யானது |
குழை, KUZAI |
மரம், TREE |
குழை |
குழை (=இலை, செறி) >>> குழை = இலைகள் செறிந்தது = மரம். |
குழை, KUZAI |
காடு, JUNGLE |
குழை |
குழை (=மரம், செறி) >>> குழை = மரங்கள் செறிந்தது = காடு. |
குள்ளம், KULHLHAM, குள்ளல், KULHLHAL |
சிறுமை, SMALLNESS |
கிள்ளம் |
கிள்ளு (=குறை, சிறிதாக்கு) + அம் = கிள்ளம் >>> குள்ளம் = குறைவு, சிறுமை. |
குள்ளம், KULHLHAM |
தந்திரம், TRICK |
கிள்ளம் |
கிளை (=கவடு) + அம் (=சொல்) = கிள்ளம் >>> குள்ளம் = கவடுபட்ட சொல் = தந்திரம் |
குள்ளம், KULHLHAM |
கொடுமை, CRUELTY |
கொல்லம் |
கொல் (=துன்புறுத்து) + அம் (=செருக்கு) = கொல்லம் >>> குள்ளம் = செருக்கித் துன்புறுத்தல் = கொடுமை. |
குளகம், KULHAKAM |
குறில் பாட்டு, SONG WITH SHORT SOUNDS |
குள்ளாக்கம் |
குள்ளம் (=குறுமை) + ஆக்கம் (=ஒலி, பாட்டு) = குள்ளாக்கம் >>> குளகம் = குற்றொலிகளால் ஆன பாட்டு வகை. |
குளகம், KULHAKAM |
சக்கரை, JAGGERY |
குலாக்கம் |
குல (=மகிழ், இனி) + ஆக்கம் (=உணவு) = குலாக்கம் >>> குளகம் = இனிப்பான உணவு = சர்க்கரை. |
குளம், KULHAM |
நீர்நிலை, WATER RESERVOIR |
கோலம் |
கோல் (=திரட்டிவை) + அம் (=நீர்) =கோலம் >>> கொளம் >>> குளம் = நீரைத் திரட்டி வைத்திருப்பது |
குளம், KULHAM |
நெற்றி, FOREHEAD |
கோலம் |
கோல் (=வளை, குனி) + அம் (=கடவுள், கும்பிடு, பொருத்து) = கோலம் >>> கொளம் >>> குளம் = கடவுளைக் கும்பிடும்போது வளைந்து குனிந்து பொருந்தச் செய்வது = நெற்றி. |
குளம், KULHAM |
சக்கரை, JAGGERY |
குலம் |
குல (=மகிழ், இனி) + அம் (=உணவு) = குலம் >>> குளம் = இனிப்பான உணவு = சர்க்கரை. |
குளம்பு, KULHAMPU |
காலடி, FOOT, HOOF |
குலம்பூ |
குலவு / குல (=உலவு, பொருந்து) + அம் (=பொழுது) + பூ (=பூமி) = குலம்பூ >>> குளம்பு = உலவும்பொழுது பூமியில் பொருந்துவது = காலடி. |
குளிகன், KULHIKAN |
பாம்பு, SERPENT |
குளிகன் |
குளி (=கொத்து) + இகு (=கொல்) + அன் = குளிகன் = கொத்திக் கொல்பவன் = பாம்பு |
குளிகை, KULHIKAI |
மருந்துண்டை, MEDICAL PILL |
கொலிகம் |
குலை (=நோய், திரள்) + இகு (=கொடு, அழி) + ஐ = குலிகை >>> குளிகை = நோயை அழிப்பதற்காகத் திரட்டிக் கொடுக்கப்படுவது = மருந்துண்டை. |
குளிசம், KULHICAM |
காப்பு, AMULET |
குளிழம் |
குளி (=மறை, கா) + இழை (=கட்டு, அணி) + அம் = குளிழம் >>> குளிசம் = காப்பதற்காகக் கட்டும் அணி |
குளியம், KULHIYAM |
மருந்துண்டை, MEDICAL PILL |
குலீயம் |
குலை (=நோய், திரள்) + ஈ (=கொடு, அழி) + அம் = குலீயம் >>> குளியம் = நோயை அழிப்பதற்காகத் திரட்டிக் கொடுக்கப்படுவது = மருந்துண்டை. |
குளிர், KULHIR |
மழு, சூலம், கத்தி, அரிவாள், WEAPON |
குளீர் |
குளி (=குத்து) + ஈர் (=இழு, அறு, கொல்) = குளீர் >>> குளிர் = குத்தி இழுத்து அறுத்துக் கொல்வது. |
குளிர், KULHIR, குளிரம், KULHIRAM |
நண்டு, CRAB |
கொளீர் |
கொள் (=கைகளால் பற்று) + ஈர் (=அறு, வெட்டு) = கொளீர் >>> குளிர் = கைகளால் பற்றி வெட்டுவது |
குளுந்தை, KULHUNTHAI |
கத்தூரி, MUSK |
குளுந்தாய் |
குளி (=மறை) + உந்தி (=வயிறு) + ஆய் (=வாசனை) = குளுந்தாய் >>> குளுந்தை = வயிற்றில் மறைந்திருக்கும் வாசனைப் பொருள் = கத்தூரி |
குற்குலு, KURHKULU |
குங்கிலியம், SHOREA |
குங்குலு |
குங்குலு >>> குக்குலு >>> குற்குலு |
குற்சிதம், KURHCITHAM, குற்சை, KURHCAI |
இழிவு, MEANNESS |
குச்சிதம் |
குச்சிதம் >>> குற்சிதம், குற்சை |
குற்பகம், KURHPAKAM |
நாணல் புல், LARGE GRASS |
குறைவாங்கம் |
குறை (=புல்) + வாங்கு (=வளை) + அம் (=நீளம்) = குறைவாங்கம் >>> குறைபகம் >>> குற்பகம் = நீண்டு வளைந்திருக்கும் புல் வகை = நாணல் |
குறட்டை, KURHATTAI |
உறக்க ஒலி, SNORING |
கொராட்டை |
கொர் + ஆடு (=சொல், ஒலி) + ஐ = கொராட்டை >>> குறட்டை = கொர் கொர் என்று ஒலித்தல் |
குறடா, KURHATAA |
சவுக்கு, WHIP |
குறட்டா |
குறு (=விரை, அடி) + அட்டை (=தண்டு) + ஆ = குறட்டா >>> குறடா = விரைவதற்காக அடிக்கப்படும் தண்டு = சவுக்கு |
குன்மம், KUNMAM |
நாளவீக்கம், BULGING OF GLANDS |
கொல்மம் |
கோல் (=தண்டு, நாளம், திரள், வீங்கு) + மம் = கொல்மம் >>> குல்மம் >>> குன்மம் = நாள வீக்கம் |
குன்மம், KUNMAM |
போர்ப்படை, ARMY |
கொல்மம் |
கோல் (=ஆயுதம், திரள், கூட்டம்) + மம் = கொல்மம் >>> குல்மம் >>> குன்மம் = ஆயுதக் கூட்டம். |
குன்மம், KUNMAM |
மூங்கில் புதர், BUSH |
கொல்மம் |
கோல் (=பிரம்பு, மூங்கில், திரள்) + மம் = கொல்மம் >>> குல்மம் >>> குன்மம் = மூங்கில் / பிரம்புத் திரள் |
குன்னம், KUNNAM |
இழிவு, MEANNESS |
குன்றம் |
குன்று (=தாழ், இழி) + அம் = குன்றம் >>> குன்னம் = தாழ்வு, இழிவு |
குன்னம், KUNNAM |
இழிசொல், SLANDER |
குன்றம் |
குன்று (=தாழ், இழி) + அம் (=சொல்) = குன்றம் >>> குன்னம் = இழிசொல். |
குனட்டை, KUNATTAI, குனச்~டை, KUNASHTAI |
குறும்பு, MISCHIEF |
குனட்டை |
குனி (=ஆடு, விளையாடு) + அடு (=வருத்து) + ஐ = குனட்டை = விளையாட்டாக வருத்துதல். |
குனா, KUNAA |
குற்றம், CRIME |
குன்றா |
குன்று (=குறை, குற்றம்) + ஆ = குன்றா >>> குன்னா >>> குனா = குற்றம். |
குசிலி, KUCILI, குசி^லி, KUJILI |
அந்திநேரம், EVENING |
குழெலி |
குழை (=வாடு, குறை, வானம்) + எல் (=ஒளி) + இ = குழெலி >>> குசெலி >>> குசிலி >>> குசி^லி = ஒளி குறைந்த வானம் = அந்திநேரம். |
அல்லி, ALLI |
அல்லி மலர், WATER LILLY |
அல்லீ |
அல் (=இரவு) + ஈ (=தேனீ, திற, வெளிப்படுத்து) = அல்லீ >>> அல்லி = தேனீக்களை இரவில் வெளிப்படுத்துவது. |
கொள்ளு, KOLHLHU |
குதிரைத் தானியம், HORSE GRAM |
கிள்ளுய் |
கிள்ளை (=குதிரை) + உய் (=உண், கொடு) = கிள்ளுய் >>> குள்ளு >>> கொள்ளு = குதிரைக்குக் கொடுக்கும் உணவு. |
அப்பப்பா. அபார முயற்சி. தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :)
நீக்கு