வியாழன், 3 பிப்ரவரி, 2022

5. (ஆ > ஆமை) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 5 - Aa to Aamai

 

தமிழ்ச் சொல்

பொருள்

மேற்கோள்

பிறப்பியல்

மாடு

அக. 249

ஆ (=ஒலிக்குறிப்பு, செழி, உண்டாக்கு) >>> ஆ = ஆ என்று ஒலித்துச் செழிப்பை உண்டாக்குவது = மாடு

ஆக்கம்

கூட்டம்

மது. 196

அகை (=செழி, பெருகு) + அம் = ஆக்கம் = செழிப்பு, பெருக்கம் = மிகுதி, கூட்டம்

ஆக்கம்

வேல்

நற். 178

அகை (=தாக்கு, செலுத்து) + அம் (=போர், நீளம்) = ஆக்கம் = போரிலே தாக்குவதற்காகச் செலுத்தப்படும் நீண்ட பொருள் = வேல்.

ஆக்கம்

வளர்ச்சி

நற். 286

அகை (=செழி, வளர்) + அம் = ஆக்கம் = வளர்ச்சி

ஆக்கம்

செல்வம்

கலி. 34

அகை (=ஈர், மதிப்பு, எரி, உருக்கு) + அம் (=ஒளி) = ஆக்கம் = ஒளியால் ஈர்க்கும் மதிப்புடைய உருக்கு = தங்கம் >>> செல்வம், பொருள்

ஆகம்

கண்

பொரு. 35

அகை (=ஈர், கூறு, உறுப்பு, மலர்) + அம் (=ஒளி) = ஆகம் = ஒளியை ஈர்த்து மலர்கின்ற உறுப்பு = கண்

ஆகம்

உடல்

பதி. 58

அகை (=எழு, தோன்று, அறு, வளர்) + அம் (=மகிழ்ச்சி) = ஆகம் = தோன்றியதும் மகிழ்ச்சியோடு அறுத்து வளர்க்கப்படுவது = உடல்

ஆகம்

மேகம்

பதி. 68

அகை (=எழு, உயர், தோன்று, செலுத்து) + அம் (=நீர்) = ஆகம் = நீரில் தோன்றி உயரே எழுந்து நீரைச் செலுத்துவது = மேகம்.

ஆகம்

மார்பு

அக. 6

அகை (=இடைவிடு, செலுத்து, உறுப்பு, எரி, தீ, ஈர்) + அம் (=நிறம், நீர்) = ஆகம் = தீநிற நீரை ஈர்த்து இடைவிட்டுச் செலுத்தும் உறுப்பு = இருதயம் >>> மார்பு

ஆகன்மாறு

ஆகின்ற விதம்

புற. 4

ஆகல் (=ஆகுதல்) + மாறு (=விதம்) = ஆகன்மாறு = ஆகின்ற விதம்

ஆகாமை

அமையாமை

கலி. 101

ஆகு (=அமை) + ஆ + மை = ஆகாமை = அமையாமை

ஆகாயம்

வான்வெளி

பரி. 4

அகை (=செல், மலர்) + ஆயம் (=மேகம், இடம்) =  ஆகாயம் = மேகங்கள் செல்லும் மலர்ந்த இடம்

ஆகுலம்

பேரொலி

நற். 354

அகை (=செழி, பெருகு) + ஒலி + அம் = ஆகொலம் >>> ஆகுலம் = பேரொலி

ஆகுலம்

ஊர்ப்பேச்சு

கலி. 65

அகம் (=இடம், ஊர்) + உலை (=திரி, பரவு) + அம் (=ஒலி, பேச்சு) = ஆகுலம் = ஊரில் பரவிய பேச்சு

ஆகுளி

குடுகுடுப்பை

மலை. 140

ஆய் (=அசை, ஆட்டு) + கை + ஒலி = ஆய்கொலி >>> ஆகுளி = கையால் ஆட்டி ஒலிக்கப்படுவது

ஆங்கண்

அவ்விடம்

புற. 373

அ (=அந்த) + கண் (=இடம்) = ஆக்கண் >>> ஆங்கண் = அந்த இடம்

ஆங்கனம்

அவ்வாறு

கலி. 28

அ (=அந்த) + கண் (=ஓட்டை, வழி, ஆறு) + அம் = ஆக்கணம் >>> ஆங்கனம் = அவ்வாறு

ஆசாகு

உயிர்களின் அடைக்கலம்

குறு. 176

ஆசு (=பற்றுக்கோடு, அடைக்கலம்) + அகம் (=உயிர்) + உ = ஆசகு >>> ஆசாகு = உயிர்களின் அடைக்கலம்

ஆசான்

ஆசிரியன்

பரி. 2

ஆசு (=ஐயம்) + ஆன் (=நீக்கு) = ஆசான் = ஐயம் நீக்குபவன் = ஆசிரியன்

ஆசிரியர், ஆசிரியன்

ஐயங்களைப் போக்குபவர்

மது. 761

ஆசு (=ஐயம்) + இரி (=ஓட்டு, நீக்கு) + அர் = ஆசிரியர் = ஐயங்களை நீக்குபவர்

ஆசினி

பலா, ஈரப்பலா

நற். 44

ஆசு (=பற்று, ஒட்டு) + இனம் (=திரள்) + ஈ (=அறு, பகிர், படை) = ஆசினீ >>> ஆசினி = அறுத்துப் பகிர்ந்தால் ஒட்டக்கூடிய திரண்ட படைப்பு = பலா, ஈரப்பலா.

ஆசு

சிதைவு

சிறு. 74

அழி (=சிதை) + உ = ஆழு >>> ஆசு = சிதைவு

ஆசு

சந்தேகம்

குறி. 17

அழி (=நிலைகெடு, தடுமாறு, முடி) + உ = ஆழு >>> ஆசு = முடிவில் தடுமாற்றம் = சந்தேகம்

ஆசு

பற்று

புற. 353

அசை (=பொருத்து) + உ = ஆசு = பொருத்துவது = பற்று

ஆசை

விருப்பம்

அக. 199

ஆசு (=பற்று) + ஐ = ஆசை = பற்று, விருப்பம்

ஆட்டு

போர்

பரி. 10

அடு (=கூடு, கொல்) + உ = ஆட்டு = கூட்டமாகக் கொல்லுதல் = போர்

ஆட்டு

விளையாட்டு

நற். 24

ஆடு (=விளையாடு) + உ = ஆட்டு = விளையாட்டு

ஆடல்

கூத்து

நெடு. 67

ஆடு (=கூத்தாடு) + அல் = ஆடல் = கூத்து

ஆடல்

குளியல்

ஐங். 224

ஆடு (=நீராடு) + அல் = ஆடல் = குளியல்

ஆடல்

விளையாட்டு

பரி. 11

ஆடு (=விளையாடு) + அல் = ஆடல் = விளையாட்டு

ஆடவர்

கொலைநர்

மது. 642

ஆடு (=கொலை) + அவர் = ஆடவர் = கொலைநர்

ஆடவர்

போர் வீரர்

மது. 746

அடு (=கொல்) + அமர் (=போர்) = ஆடமர் >>> ஆடவர் = போரில் கொல்வோர் = போர் வீரர்

ஆடவர்

ஆண்கள்

நெடு. 107

ஆற்று (=பொறு, தாங்கு, வலுவடை) + அவர் = ஆற்றவர் >>> ஆட்டவர் >>> ஆடவர் = தாங்கும் வலுவுடையோர்

ஆடவர்

அரசர்

புற. 187

அடி (=தண்டி) + அவம் (=குற்றம்) + அர் = ஆடவர் = குற்றத்திற்காகத் தண்டிப்பவன் = அரசன்

ஆடவர்

பகைவர்

புற. 242

அடை (=வழி, தடு, எதிர்) + அவர் = ஆடவர் = வழியைத் தடுப்போர் = எதிரி, பகைவர்

ஆடி

தோல்

குறு. 8

ஏடு (=உடல், மேலிருப்பது) + இ = ஏடி >>> ஆடி = உடலின் மேலிருப்பது = தோல்

ஆடு

தீ

நற். 178

அடு (=சமை, காய்ச்சு, உருக்கு) >>> ஆடு = சமைப்பது / காய்ச்சுவது / உருக்குவது = தீ.

ஆடு

கொலை

நற். 329

அடு (=கொல்) >>> ஆடு = கொலை

ஆடு

கூத்து

மது. 428

அடு (=கூத்தாடு) >>> ஆடு = கூத்து

ஆடு

காய்ச்சுகை

மது. 625

அடு (=காய்ச்சு) >>> ஆடு = காய்ச்சுகை

ஆடு

கொம்புடைய விலங்கு வகை

நெடு. 160

அடு (=கூத்தாடு, துள்ளிக்குதி, போரிடு) >>> ஆடு = துள்ளிக் குதித்துப் போர்செய்வது

ஆடு

தண்டனை

பதி. 63

அடி (=தண்டி) + உ = ஆடு = தண்டனை

ஆடு

வெற்றி

அக. 116

அடு (=வெல்) >>> ஆடு = வெற்றி

ஆடு

அடிக்கை

அக. 334

அடி + உ = ஆடு = அடிக்கை

ஆடு

சமையல்

புற. 164

அடு (=சமை) >>> ஆடு = சமையல்

ஆடு

உடல்

புற. 165

ஏடு (=உடல்) >>> ஆடு

ஆடுகை

வாள், கத்தி

அக. 206

அறு (=வெட்டு) + கை (=கைப்பிடி) = ஆறுகை >>> ஆடுகை = கைப்பிடி கொண்ட வெட்டும் பொருள்

ஆடூஉ

ஆண்

பதி. 86

ஆற்று (=பொறு, தாங்கு, வலுவடை) >>> ஆட்டு >>> ஆடூஉ = தாங்கும் வலுவுடையோன் = ஆண்

ஆடை

உடுப்பு

கலி. 18

ஏடு (=உடல்) + ஆய் (=அணி, நீக்கு, மென்மை) = ஏடாய் >>> ஆடை = உடலில் அணிந்து நீக்கப்படும் மென்மையான பொருள் = உடுப்பு.

ஆண்

வீரன்

அக. 35

ஆண் (=வலிமை, வீரம்) >>> ஆண் = வீரன்

ஆண்

வலிமை

அக. 367

அண் (=செறி, வலுவடை) >>> ஆண் = வலிமை

ஆண்டகை

துணிச்சல்

புற. 292

ஆண் (=வீரன்) + தகை (=இயல்பு) = ஆண்டகை = வீரனின் இயல்பு = துணிச்சல்

ஆண்டலை

ஆந்தை வகை

பதி. 25

அண் (=கண்ணி, வட்டம்) + தலை (=மனிதன், ஒப்பு, முகம், ஆகாயம், பரவு) = ஆண்டலை = மனிதனைப் போன்ற வட்ட முகத்துடன் ஆகாயத்தில் பரவுவது.

ஆண்டலை

நாய்

கலி. 94

அண் (=கண்ணி, உருவு கயிறு) + தலை (=உறுப்பு, பொருந்து, முன்செல்) = ஆண்டலை = தலையில் உருவு கயிறு பொருந்தி முன்செல்வது = நாய்

ஆண்டு

காலத்தின் முடிவு

திரு. 250

அற்றம் (=காலம், முடிவு) + உ = ஆற்று >>> ஆட்டு >>> ஆண்டு = காலத்தின் முடிவு

ஆண்மை

வீரம்

மலை. 423

ஆண் (=வீரன்) + மை = ஆண்மை = வீரம்

ஆண்மை

ஆளுமை

குறு. 43

ஆள் + மை = ஆண்மை = ஆளுமை

ஆணம்

அன்பு

கலி. 1

அண் (=பற்று, பிணி) + அம் (=உயிர்) = ஆணம் = உயிர்களைப் பிணிப்பது = அன்பு

ஆணி

கூரிய சிறிய இரும்பு வகை

பொரு. 10

அள் (=கூர்மை, இரும்பு, செறிவு) + நை (=நசுக்கு, அடி) + இ = ஆணி = அடித்துச் செறியப்படும் கூரிய இரும்பு

ஆணி

ஆதாரம்

நற். 139

அணை (=முட்டு, ஆதாரம்) + இ = ஆணி

ஆணு

மலர்

பரி. 10

அணி (=அழகு, விரி, முகம், இனிமை, பொருந்து) + உ = ஆணு = அழகுற விரிந்த முகத்தில் இனிமை பொருந்தியது = மலர்

ஆணை

அறிவு

பட். 170

எண் (=அறி) + ஐ = ஏணை >>> ஆணை = அறிவு

ஆணை

கட்டளை

கலி. 139

அணி (=கட்டு, அடக்கு, சொல்) + ஐ = ஆணை = கட்டி அடக்கும் சொல் = கட்டளை

ஆணை

சபதம்

பரி. 8

அணி (=எல்லை, முடிவு, சொல், கூறு) + ஐ = ஆணை = முடிப்பதாகக் கூறப்படும் சொல் = சபதம்

ஆத்தி

பீடி இலை மரம்

குறி. 87

அல் (=மயக்கம், போதை) + தீ (=சுடு, புகை) = ஆற்றீ >>> ஆத்தி = போதைக்காக சுட்டுப் புகைப்பது = பீடி இலை

ஆத்திரை

தங்கிச்செல்லும் பயணம்

குறு. 293

ஆறு (=வழி, அடங்கு, தங்கு) + இரி (=செல்) + ஐ = ஆற்றிரை >>> ஆத்திரை = வழியில் தங்கிச் செல்லுதல்

ஆதி

பயணம்

மது. 390

அறு (=நீங்கு, செல்) + இ = ஆறி >>> ஆதி = செலவு, பயணம்

ஆதி

சூரியன்

கலி. 96

ஆ (=உண்டாக்கு) + தீ (=எரி, ஒளி, வெப்பம்) = ஆதீ >>> ஆதி = எரி / ஒளி / வெப்பம் உண்டாக்குபவன்

ஆதி

பழமை

பரி. 5

அறு (=கழி) + இ = ஆறி >>> ஆதி = கழிந்தது

ஆதிரை

சிவ வழிபாடு செய்ய உகந்த காலம்

பரி. 11

அத்து (=சிவப்பு, பொருத்து) + இறை (=வணங்கு, கடவுள், காலம்) = ஆத்திறை >>> ஆதிரை = சிவந்த கடவுளை வணங்குவதற்குப் பொருத்தமான காலம்.

ஆநியம்

சந்திரன்

பதி. 24

அல் (=இரவு) + நீ (=வெளிப்படுத்து) + அம் (=இனிமை, ஒளி) = ஆனீயம் >>> ஆநியம் = இரவில் இனிய ஒளியை வெளிப்படுத்துவது = சந்திரன்

ஆப்பி

மாட்டுச் சாணம்

புற. 249

ஆ (=மாடு) + பீ (=சாணம்) = ஆப்பீ >>> ஆப்பி = மாட்டின் சாணம்

ஆம்

மூங்கில்

கலி. 143

அம் (=நீளம், வளைவு) >>> ஆம் = வளையக் கூடிய நீண்ட பொருள் = மூங்கில்

ஆம்

நீர், உணவு, சொல்

அக. 1, புற. 362, புற. 257

ஆ (=வாய்திற) + ம் (=உதடுகளை இணை) = ஆம் = வாயைத் திறந்து உதடுகளை இணைப்பது = உண்பது, பருகுவது, சொல்வது.

ஆம்பல்

இரவில் நீரில் மலரும் நறுமண மலர்

குறி. 223

ஆவி (=வாய்திற, மலர், நீர்நிலை, நறுமணம்) + அல் (=இரவு) = அவ்வல் >>> ஆம்பல் = நீர்நிலைகளில் இரவில் மலரும் நறுமண மலர்.

ஆம்பல்

மூங்கில்

குறி. 222

அமை (=மூங்கில்) + அல் = அம்மல் >>> ஆம்பல்

ஆம்பல்

யானை

பரி. 3

ஆப்பு (=முளை, உணவு, உடல்) + அல் (=இருள், கருமை) = அப்பல் >>> ஆம்பல் = முளைகளை உண்ணும் கரிய உடலைக் கொண்டது = யானை

ஆம்பல்

இறைகூடை

அக. 127

ஆம்பி (=இறைகூடை) + அல் = ஆம்பல்

ஆம்பி

காளான்

பெரு. 157

அம் (=நீர், மழை, பொழுது, வளைவு, ஒப்பு) + பூ (=அழகு, நிலம், முளை) + இ = ஆம்பி = மழையின் போது வளைவுடைய அழகிய பூவைப் போல நிலத்தில் தோன்றுவது = காளான்

ஆம்பி

இறைகூடை

மது. 91

ஆம் (=நீர்) + பெய் (=செறி, கட்டு, இடு, வார், உபயோகி) = ஆம்பெய் >>> ஆம்பி = நீரினை இட்டு வார்ப்பதற்காக செறிவாகக் கட்டி உபயோகிப்பது = இறைகூடை

ஆமான், ஆமா

மாடு போன்ற மான் வகை

நற். 57, புற. 117

ஆ (=மாடு) + மான் (=ஒப்பு, விலங்கு) = ஆமான் = மாடு போன்ற மான் வகை.

ஆமை

ஊர்வன வகை

புற. 387

அவி (=ஒடுங்கு, கெடு, நீங்கு, செல்) + ஐ (=மென்மை) = ஆவை >>> ஆமை = மெதுவாகச் செல்வதும் கேடு நீங்க ஒடுங்குவதும் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.