தமிழ்ச் சொல் |
பொருள் |
மேற்கோள் |
பிறப்பியல் |
ஆய் |
நறுமணம் |
குறி. 117 |
ஆய் (=விரை, பரவு, மலர்) >>> ஆய் = மலரில் இருந்து
பரவுவது = நறுமணம் |
ஆய் |
மலர் |
குறி. 139 |
ஆய் (=காம்புகளை, அழகு, மென்மை) >>> ஆய் = காம்பில்
இருந்து களையப்படுகிற அழகான மென்மையான பொருள் = மலர். |
ஆய் |
அழகு |
பொரு. 14 |
ஏழ் (=பொலிவு) >>> ஆய் = பொலிவு, அழகு |
ஆய் |
சிறுமை |
மது. 563 |
ஆழ் (=இறங்கு, குறை, சிறு) >>> ஆய் = சிறுமை |
ஆய் |
விரைவு |
பரி. 10 |
ஐ (=விரைவு) >>> அய் >>> ஆய் |
ஆய் |
நுண்மை |
கலி. 118 |
ஐ (=நுண்மை) >>> அய் >>> ஆய் |
ஆய் |
தாய் |
கலி. 116 |
ஆ (=உயிர்) + ஈ (=படை) = ஆயீ >>> ஆய் = உயிரைப் படைப்பவள்
= தாய் |
ஆய் |
பொன் |
நற். 344 |
ஆய் (=நுட்பம், அழகு) = ஆய் = நுட்பமும் அழகும் உடையது = தங்க
நகை |
ஆய் |
இடையர் |
பெரு. 162 |
ஆ (=மாடு) + ஈ (=கொடு, பகிர்) = ஆயீ >>> ஆய் = மாடு
தருவதைப் பகிர்பவர் = இடையர் |
ஆய் |
மென்மை |
அக. 36 |
ஆழ் (=வருந்து, மெலி) >>> ஆய் = மெலிவு, மென்மை |
ஆய் |
சோர்வு |
புற. 390 |
ஆழ் (=சோம்பு) >>> ஆய் = சோம்பல், சோர்வு |
ஆய் |
ஆழம் |
அக. 371 |
ஆழ் >>> ஆய் = ஆழம் |
ஆய் |
துளை |
அக. 225 |
ஆழ் (=தோண்டு, துளையிடு) >>> ஆய் = துளை |
ஆய் |
ஆராய்ச்சி |
பரி. 18 |
ஆ (=விதம், முறை, அமை) + ஈ (=பகு) = ஆயீ >>> ஆய்
= முறையாகப் பகுத்து அமைத்தல் = ஆராய்ச்சி |
ஆய்ச்சியர் |
பெண் இடையர் |
கலி. 106 |
ஆய் (=இடையர்) + சி + அர் = இடையப் பெண்டிர் |
ஆய்த்தி |
இடையப்பெண் |
கலி. 108 |
ஆய் (=இடையர்) + தி = ஆய்த்தி = இடையப் பெண் |
ஆய்பு |
ஆராய்ச்சி |
பரி. 15 |
ஆய் (=ஆராய்ச்சி) + பு = ஆய்பு |
ஆயம் |
இடையர் |
கலி. 103 |
ஆய் (=இடையர்) + அம் = ஆயம் |
ஆயம் |
கூட்டம் |
பரி. 11 |
அழி (=மிகுதி) + அம் = ஆழம் >>> ஆயம் = கூட்டம் |
ஆயம் |
பசு |
புற. 230 |
ஆய் (=அழகு, தாய்) + அம் (=ஒப்பு, இனிமை, உணவு) = ஆயம் = இனிய
அழகிய உணவால் தாய்க்கு ஒப்பாவது |
ஆயம் |
பசுக்கூட்டம் |
அக. 54 |
ஆயம் (=பசு, கூட்டம்) >>> ஆயம் = பசுக்கூட்டம் |
ஆயர் |
இடையர் |
கலி. 101 |
ஆய் (=இடையர்) + அர் = ஆயர் |
ஆயிடை |
அவ்விடம் |
குறு. 111 |
அ (=அந்த) + இடம் + ஐ = ஆயிடை = அந்த இடம் |
ஆயிரம் |
பத்துநூறு |
மது. 11 |
ஆயம் (=கூட்டம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய
கூட்டம் = பத்துநூறு. ஒ. நோ: நிரை (=கூட்டம்) + உ = நீரு >>> நூறு = கூட்டம் |
ஆயுள் |
வாழ்நாள் |
புற. 43 |
ஐயம் (=காலம்) + உள் (=இரு) = ஆயுள் = இருக்கும் காலம் = வாழ்நாள் |
ஆர்கலி |
பெருமழை |
நெடு. 3 |
ஆர் (=நிறை, மிகு) + கால் (=மழை) + இ = ஆர்காலி
>>> ஆர்கலி = மிக்க மழை |
ஆர்கலி |
கடல் |
புற. 400 |
ஆர் (=பரவு, இடம்) + கலம் (=கப்பல்) + இ = ஆர்கலி = கப்பல்
பரவும் இடம் = கடல் |
ஆர்கலி |
தேனீ |
அக. 273 |
ஆர் (=உண்) + கள் (=தேன்) + ஈ = ஆர்களீ >>> ஆர்கலி
= தேனை உண்கின்ற ஈ வகை = தேனீ |
ஆர்கை |
உணவு |
நற். 127 |
ஆர் (=உண்) + கை = ஆர்கை = உணவு |
ஆர்ப்பு, ஆர்பு |
ஒலிப்பு, ஒலி |
நற். 167, குறு. 328, கலி. 105 |
ஆர் (=ஒலி) + பு = ஆர்ப்பு = ஒலிப்பு, ஒலி |
ஆர்ப்பு |
போர் |
பதி. 21 |
ஆர் (=போரிடு) + பு = ஆர்ப்பு = போர் |
ஆர்வு, ஆர்வம் |
விருப்பம், அன்பு |
புற. 158, நற். 171 |
ஆர் (=பொருந்து, பற்று) + வு = ஆர்வு = பற்று, விருப்பம்,
அன்பு |
ஆர்வலர் |
அன்புடையோர் |
புற. 12 |
ஆர்வு (=அன்பு) + ஆள் + அர் = ஆர்வாளர் >>> ஆர்வலர்
= அன்பு உடையவர் |
ஆர்வலர் |
இரவல் மாக்கள் |
புற. 390 |
ஆர் (=ஒலி, பாடு, பெறு) + வளம் (=செல்வம்) + அர் = ஆர்வளர்
>>> ஆர்வலர் = பாடிச் செல்வம் பெறுபவர் |
ஆரம் |
சந்தனம் |
குறு. 376 |
ஆறு (=சூட்டைத் தணி, இயல்பு) + அம் (=நீர், பொருத்து, கல,
பூசு) = ஆறம் >>> ஆரம் = நீருடன் கலந்து பூசினால் சூட்டைத் தணிக்கும் இயல்புடையது
= சந்தனம் |
ஆரம் |
சக்கரத்தின் கால் |
பெரு. 46 |
ஆர் (=பூண், தாங்கு, மரம்) + அம் (=வளைவு) = ஆரம் = வளைவைத்
தாங்கும் மரம் = சக்கரத்தின் கால் |
ஆரம் |
மாலை |
திரு. 104 |
ஆர் (=பொருத்து, கட்டு, பெறு) + அம் (=நீளம்) = ஆரம் = நீளமாகப்
பொருத்திக் கட்டிப் பெறுவது |
ஆரம் |
வட்டம் |
சிறு. 2 |
ஆர் (=நிறை, முழுமையுறு) + அம் (=வளைவு) = ஆரம் = முழுமையான
வளைவு >>> வட்டம் |
ஆரம் |
கூட்டம் |
பரி. 16 |
ஆர் (=நிறை, கூடு) + அம் = ஆரம் = கூட்டம் |
ஆரல் |
மீன் |
குறு. 25 |
ஆர் (=பரவு, செல், மின்னு) + ஆல் (=நீர்) = ஆரால்
>>> ஆரல் = நீரில் மினுக்கிச் செல்வது = மீன் |
ஆராதனை |
இறைவழிபாடு |
பரி. 6 |
ஆர் (=ஒலி, பாடு) + ஆதி (=இறை) + அணி (=பெருமை) + ஐ = ஆராதணை
>>> ஆராதனை = இறையின் பெருமையைப் பாடுதல் = இறைவழிபாடு |
ஆரி |
கடினம் |
மலை. 161 |
அருமை (=கடினம்) + இ = ஆரி |
ஆரிடை |
காடு |
நற். 174 |
ஆர் (=மரம், நிறை) + இடம் + ஐ = ஆரிடை = மரங்கள் நிறைந்த இடம்
= காடு |
ஆரிடை |
பாலைநிலம் |
அக. 17 |
அரி (=பசுமை, நீர், நீங்கு) + இடம் + ஐ = ஆரிடை = பசுமையும்
நீரும் நீங்கிய இடம் = பாலைநிலம் |
ஆரியர் |
பகைவர் |
அக. 396 |
அரி (=பகை) + அர் = ஆரியர் = பகைவர் |
ஆரியர் |
கழைக் கூத்தாடிகள் |
குறு. 7 |
அரி (=மூங்கில், கட்டு, கயிறு) + இய (=நட) + அர் = ஆரியர்
= மூங்கிலில் கயிறு கட்டி நடப்பவர் |
ஆரியர் |
யானையைப் பழக்குபவர் |
அக. 276 |
அரி (=யானை) + இயை (=இணங்கச் செய், பழக்கு) + அர் = ஆரியர்
= யானையைப் பழக்குபவர் |
ஆரை |
வண்டியின் மேல்கட்டும் வீடு |
பெரு. 50 |
ஆர் (=பரவு, பயணி, தங்கு, மறை, கட்டு) + ஐ = ஆரை = பயணத்தில்
தங்குவதற்காக மறைத்துக் கட்டப்படுவது = வண்டியின்மேல் கட்டப்படும் வீடு. |
ஆல் |
ஆகாயம் |
பரி. 5 |
ஆ (=அமை, பெரு) + இல் (=இன்மை, இடம்) = ஆயில்
>>> ஐல் >>> ஆல் = இன்மையால் அமைந்த பெரிய இடம் = ஆகாயம் |
ஆல் |
நஞ்சு |
கலி. 81 |
ஆ (=உண்டாக்கு, உயிர்) + இல் (=இன்மை, இறப்பு) = ஆயில்
>>> ஐல் >>> ஆல் = உயிர்க்கு இறப்பை உண்டாக்குவது = நஞ்சு |
ஆல் |
விண்மீன் |
மலை. 100 |
எல் (=இரவு, மங்கு, ஒளி) >>> ஏல் >>> ஆல்
= இரவில் மங்கலாக ஒளிர்வது = விண்மீன் |
ஆல் |
ஆலமரம் |
திரு. 256 |
அழி (=இற, மரம், மிகுதி, பெருமை) + இல் (=இன்மை) = ஆழில்
>>> ஆயில் >>> ஐல் >>> ஆல் = இறப்பு இல்லாத பெரிய மரம்
= ஆலமரம் |
ஆலம் |
ஆலமரம் |
அக. 385 |
ஆல் (=ஆலமரம்) + அம் = ஆலம் |
ஆலி |
ஆலங்கட்டி |
அக. 101 |
ஆல் (=ஆகாயம், நீர், ஒலி) + ஈ (=கொடு, சிதறு, அறு, துண்டி)
= ஆலீ >>> ஆலி = ஆகாயத்தில் இருந்து சிதறி ஒலிக்கின்ற நீரின் துண்டு = ஆலங்கட்டி
|
ஆலி |
மழை |
அக. 314 |
ஆல் (=ஆகாயம், ஒலி, நீர்) + ஈ (=இடு, பெய்) = ஆலீ
>>> ஆலி = ஆகாயத்தில் இருந்து ஒலியுடன் பெய்யும் நீர் |
ஆலை |
சர்க்கரை தயாரிக்கும் இடம் |
பெரு. 261 |
ஆல் (=நீர்) + அழி (=தண்டு, சிதை, நீக்கு, எரி) = ஆலழி
>>> ஆலயி >>> ஆலை = தண்டினைச் சிதைத்து நீக்கிய நீரை எரிக்கும்
இடம் = சர்க்கரை தயாரிக்கும் இடம் |
ஆவணம் |
கயிற்றால் கட்டி மேலே முத்திரையிட்டு மூடப்பட்டது |
அக. 77 |
ஏமம் (=காப்பு) + அண் (=கயிறு) + அம் (=நீளம், வளைவு, பொருத்து,
கட்டு) = ஏமணம் >>> ஆவணம் = நீண்ட கயிற்றால் வளைத்துக் கட்டிக் காப்பு பொருத்தப்பட்டது
= கயிற்றால் கட்டி மேலே முத்திரையிட்டு மூடப்பட்டது. |
ஆவணம் |
ஊர் |
பட். 158 |
அவை (=கூட்டம்) + அணை (=படு, தங்கு, உண்டாகு) + அம் = ஆவணம்
= கூடித் தங்குவதால் உண்டாவது. |
ஆவணம் |
கடைத்தெரு |
பதி. 68 |
ஆ (=அமை) + பண் (=விற்பனை செய்) + அம் = ஆபணம்
>>> ஆவணம் = விற்பனை செய்வதற்காக அமைத்தது |
ஆவம் |
அம்புக்கூடு |
புற. 14 |
அவி (=அடக்கு) + அம் (=அம்பு) = ஆவம் = அம்புகளை அடக்கி இருப்பது
= அம்புக் கூடு. |
ஆவி |
புகை |
பரி. 10 |
ஆ (=தோன்று) + வீ (=அழி, எரி, நீங்கு, பரவு) = ஆவீ
>>> ஆவி = எரிப்பதால் தோன்றிப் பரவுவது = புகை |
ஆவி |
உயிர் |
அக. 71 |
ஆ (=உயிர்) + இ = ஆவி |
ஆவிரம், ஆவிரை |
மஞ்சள் நிற மலர் வகை |
கலி. 140, குறு. 173 |
ஆ (=உண்டாக்கு) + விரை (=வலுவாகு, மலர்) + அம் (=அழகு, ஒளி)
= ஆவிரம் = வலுவை உண்டாக்கும் அழகிய ஒளியுடைய மலர். |
ஆவுதி |
யாகம் |
பட். 55 |
அம் (=கடவுள், அழைப்பு, உணவு) + உய் (=சொல், கொடு, ஈடேற்று,
நடத்து) + தீ = ஆமுய்தீ >>> ஆவுதி = கடவுளை அழைத்து ஈடேற்றச் சொல்லித் தீக்கு
உணவுகளைக் கொடுத்து நடத்தப் படுவது = யாகம் |
ஆழ்ச்சி |
புதைவு |
புற. 60 |
ஆழ் (=புதை) + சி = ஆழ்ச்சி = புதைவு |
ஆழல் |
கறையான் |
புற. 152 |
அழி (=சிதை, உண், மரம்) + அல் = ஆழல் = மரத்தைச் சிதைத்து
உண்பது = கறையான் |
ஆழி |
கடல் |
நற். 11 |
ஆழ் (=மூழ்கு, ஆழமாகு) + இ = ஆழி = ஆழமான மூழ்கும் இடம் =
கடல் |
ஆழி |
சக்கரம் |
நற். 338 |
அழி (=நீங்கு, செல், மரம்) >>> ஆழி = செல்லும் மரம் |
ஆழி |
அம்பு, வேல் |
கலி. 134 |
ஆழ் (=புதை) + ஈ (=பிள, அழிவு) = ஆழீ >>> ஆழி = பிளந்து
புதைந்து அழிப்பது = வேல், அம்பு |
ஆழி |
தீ |
அக. 229 |
அழி (=எரி) >>> ஆழி = எரிப்பது = தீ |
ஆழி |
கூடற்சுழி |
அக. 351 |
அழி (=நீங்கு, பிரி) + இழை (=கூடு, உறுதிசெய், சுற்று, வட்டமடி,
வரை, பொடியாக்கு) = ஆழிழை >>> ஆழி = பிரிந்தவர் கூடுவதை உறுதிசெய்ய பொடிமீது
வட்டமாக வரையப்படுவது = கூடற்சுழி |
ஆழி |
மோதிரம் |
பரி. 7 |
ஆழ் (=நுழை) + இழை (=கூடு, உறுதிசெய், அணிகலன், சுற்று, வட்டமடி)
= ஆழிழை >>> ஆழி = கூடி உறுதிசெய்து நுழைக்கப்படும் வட்டமான அணிகலன் |
ஆழி |
வளையம் |
பரி. 9 |
அழி (=முடி, முழுமையடை) >>> ஆழி = முழுமை, வட்டம்
>>> வட்டமானது = வளையம், வளையல் |
ஆழி |
கட்டளை |
புற. 99 |
ஆழ் (=அழுந்து, அடங்கு) + இழை (=செய், சொல்) = ஆழிழை
>>> ஆழி = அடங்கிச் செய்வதற்காக சொல்லப்படுவது = கட்டளை. |
ஆழி |
கடற்கரை |
புற. 330 |
ஆழி (=கடல், முடிவு) >>> ஆழி = கடலின் முடிவு |
ஆழி |
அழிவு, முடிவு |
பரி. 3 |
அழி (=முடி) >>> ஆழி = முடிவு, அழிவு |
ஆள் |
மனிதன் |
ஐங். 329 |
ஆய் (=ஆராய்) + அள் (=செறி, பொருந்து) = ஆயள்
>>> ஆள் = ஆராய்ச்சி பொருந்தியவன் = மனிதன் |
ஆள் |
உணவு |
நற். 126 |
அழி (=சோர், நீக்கு) + அள் (=கொள்) = ஆழள் >>> ஆள்
= சோர்வை நீக்கக் கொள்ளப்படுவது = உணவு |
ஆள் |
கணவன் |
நற். 353 |
அழி (=அன்பு, மிகுதி) + அள் (=செறி, கூடு) = ஆழள்
>>> ஆள் = மிக்க அன்பினால் கூடுபவன் = கணவன் |
ஆள் |
போர் வீரன் |
பதி. 67 |
அழி (=கொல்) + அள் (=தண்டு, இரும்பு, கூர்மை, செறி) = ஆழள்
>>> ஆள் = தண்டில் செறித்த கூரிய இரும்பால் கொல்பவன் = போர் வீரன் |
ஆளி |
சிங்கம் |
நற். 205 |
ஆழி (=தீ) + உளை (=மனம் கலங்கு, எடுத்தலோசை, பிடரிமயிர்) + ஈ (=நேர், ஒப்பு)
= ஆழுளீ >>> ஆளி = மனதைக் கலக்கும் எடுத்தலோசையும் தீயைப் போன்ற பிடரிமயிரையும்
கொண்டது = சிங்கம் |
ஆற்றல் |
வலிமை |
பதி. 34 |
ஆற்று (=வலுவடை) + அல் = ஆற்றல் = வலிமை |
ஆற்றல் |
தங்கல் |
குறு. 38 |
ஆறு (=அமை, தங்கு) + அல் = ஆற்றல் = தங்கல் |
ஆற்றல் |
தருமம் |
புற. 22 |
அறம் (=தருமம்) + அல் = ஆற்றல் |
ஆற்றல் |
மிகுதி, கூட்டம் |
புற. 225 |
ஆற்று (=கூட்டு) + அல் = ஆற்றல் = கூட்டம், மிகுதி |
ஆற்றல் |
செயல் |
பதி. 28 |
ஆற்று (=செய்) + அல் = ஆற்றல் = செய்ல் |
ஆற்றாமை |
தாங்க இயலாதது |
புற. 28 |
ஆற்று (=பொறு, தாங்கு) + ஆ (=எதிர்மறை) + மை = ஆற்றாமை = தாங்க
இயலாமை |
ஆற்றார் |
பகைவர் |
புற. 93 |
ஆறு (= தணி, அடங்கு) + ஆ (=எதிர்மறை) + ஆர் = ஆற்றார் = அடங்காதவர்
= பகைவர் |
ஆறலை |
பயணிகளைக் கொல்லுதல் |
பொரு. 21 |
ஆறு (=வழி) + அலை (=செல், கொலை) = ஆறலை = வழியில் செல்வோரைக்
கொல்லுதல் |
ஆறு |
வழி |
பொரு. 93 |
அறு (=நீங்கு, செல்) >>> ஆறு = செல்லக்கூடியது. |
ஆறு |
அறம் |
திரு. 255 |
அறம் + உ = ஆறு |
ஆறு |
செல்லும் நீர் |
பரி. 24 |
(1) அரி (=நீர், ஒழுகு, செல்) + உ = ஆரு >>> ஆறு
= செல்லும் நீர். (2) அறல் (=செல்லும் நீர்) + உ = ஆறு |
ஆறு |
ஐந்தினை அடுத்த எண் |
பரி. 3 |
அரி (=தேனீ, மரம், கால், சமம்) + உ = ஆரு >>> ஆறு
= தேனீயின் கால்களுக்குச் சமமானது. |
ஆறு |
ஆதாரம் |
கலி. 89 |
ஆறு (=பொறு, தாங்கு) >>> ஆறு = தாங்குவது |
ஆறு |
அறிவு |
கலி. 95 |
அறி + உ = ஆறு = அறிவு |
ஆன் |
மாடு |
பெரு. 165 |
ஆ (=மாடு) + ன் = ஆன். ஒ.நோ: (1) மா + ன் = மான், (2) கா
+ ன் = கான். (3) கோ + ன் = கோன் |
ஆன் |
வெள்ளி |
புற. 152 |
அம் (=வெள்ளொளி, செருக்கு, திடம்) >>> ஆம்
>>> ஆன் = வெள்ளொளி கொண்ட திடப்பொருள் |
ஆன் |
மேகம் |
புற. 5 |
அண் (=மேல், நெருங்கு, திரள்) >>> ஆன் = மேலே நெருங்கித்
திரள்வது = மேகம் |
ஆன்றல் |
ஒழிதல் |
அக. 168 |
அல் (=இல்லாகு) + தல் = ஆற்றல் >>> ஆன்றல் = இல்லாகுதல்
= ஒழிதல் |
ஆன்றவர் |
தவசிகள் |
கலி. 32 |
அறி (=கருது, தியானி) + அமர் (=தங்கு) = ஆற்றமர்
>>> ஆன்றவர் = தியானத்தில் தங்கியோர் |
ஆன்றோர் |
தவசிகள் |
அக. 123 |
ஆறு (=பொறு, தங்கு) + ஓர் (=கருது, தியானி) = ஆற்றோர்
>>> ஆன்றோர் = தியானத்தில் தங்கியோர் |
ஆனிலை |
ஆகாயம் |
புற. 6 |
ஆன் (=மேகம்) + இல் (=வீடு) + ஐ = ஆனிலை = மேகங்களின் வீடு
= ஆகாயம் |
தொடர்ந்து வாசிக்கிறேன். உங்கள் முயற்சி போற்றுதற்குரியது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.
நீக்கு