சொல் |
பொருள் |
தமிழ்ச்சொல் |
தோன்றும் முறை |
சரி |
இறங்கு, தாழ், சாய் |
அரீ |
ஆர் (=ஒப்பு, சமம்) + ஈ (=அழி) = அரீ >>> அரி >>> சரி = சமம் அழி = சாய், இறங்கு, தாழ் |
சரி |
செல்லு |
அரி |
அரி (=ஒழுகு, செல்) >>> சரி |
சரி |
வெட்டு |
அரி |
அரி (=அறு, வெட்டு) >>> சரி |
சரி |
தங்கு |
அரி |
ஆர் (=தங்கு) + இ = அரி >>> சரி |
சரி |
சீரணி |
அரீ |
ஆர் (=உண்) + ஈ (=அழி) = அரீ >>> சரி = உண்டது அழிகை = செரித்தல். |
சரி |
மலைச்சாரல் |
சரி |
அரி (=மலை, சாய்வு) >>> சரி = மலையின் சாய்வு |
சரி |
வழி |
ஆறு |
ஆறு (=வழி) + இ = அறி >>> சரி |
சரி |
கூட்டம் |
அரி |
ஆர் (=பொருந்து, கூடு) + இ = அரி >>> சரி = கூட்டம் |
சரி, சரிவு |
வளையம் |
அரி |
ஆர் (=கட்டு, சுற்று, வட்டமிடு, அணி) + இ = அரி >>> சரி = வட்டமான அணி = வளையம் |
சரி |
ஒழுங்கு |
அறம் |
அறம் (=ஒழுக்கம்) + இ = அறி >>> சரி = ஒழுங்கு |
சரி |
ஒப்பு, சமம் |
அரி |
ஆர் (=ஒப்பு, சமம்) + இ = அரி >>> சரி |
சரி |
பொருத்தம் |
அரி |
ஆர் (=பொருந்து) + இ = அரி >>> சரி = பொருத்தம் |
சரிகை, சருகை |
அலங்காரப் பொன் இழை |
அரிகை |
அரி (=பொன், நார், இழை) + கை (=அலங்கரி) = அரிகை >>> சரிகை = பொன்னால் ஆன அலங்கார இழைகள் |
சரித்திரம் |
வரலாறு |
அரித்திறம் |
அரி (=நீங்கு, கட, காலம்) + திறம் (=வகை, செய்தி) = அரித்திறம் >>> சரித்திரம் = வகைப் படுத்தப்பட்ட கடந்தகாலச் செய்திகள் = வரலாறு. |
சரித்திரை |
புளியமரம் |
அரித்துரை |
அரி (=சிலம்பு, ஒப்பு, பல், உணவு) + துரு (=இரும்புத்துரு, மரம்) + ஐ (=பழம்) = அரித்துரை >>> சரித்திரை = பற்களை அரிக்கக் கூடிய துருப்பிடித்த சிலம்பு போன்ற உணவு தரும் மரம் = புளிய மரம் |
சரித்து |
நதி |
அரித்து |
அரி (=செல், நீர்) + து = அரித்து >>> சரித்து = செல்லும் நீரைக் கொண்டது = நதி. |
சரிதம், சரிதை |
வரலாறு |
அரிதம் |
அரி (=ஒலி, கூறு, நீங்கு, கட, காலம்) + இதம் (=அறிவு) = அரிதம் >>> சரிதம் = கடந்த காலத்தை அறிவதற்காகக் கூறப்படுவது = வரலாறு |
சரிதன், சரிதி |
நல்லவன் |
அரிதன் |
ஆர் (=பொருந்து) + இதம் (=நன்மை) + அன் = அரிதன் >>> சரிதன் = நன்மை பொருந்தியவன் |
சரிதை |
பிச்சை |
அரிறை |
ஆர் (=ஒலி, கூறு, பெறு) + இறை (=வணங்கு, பணி) = அரிறை >>> சரிதை = வணங்கிப் பணிவாகக் கூறிப் பெறுவது = பிச்சை |
சரியை |
பிச்சை |
அரிழை |
ஆர் (=பெறு) + இழி + ஐ = அரிழை >>> சரியை = இழிந்து பெறுவது = பிச்சை |
சரியை |
ஒழுக்கம் |
அறியை |
அறம் + இயை (=பொருந்து) = அறியை >>> சரியை = அறத்துடன் பொருந்தியது |
சரிவு, சருவு |
சாய்வு |
சரிவு |
சரி (=சாய்) + வு = சரிவு = சாய்வு |
சரிவு |
ஓரம், எல்லை, முடிவு |
அறுவு |
அறு (=முடி) + வு = அறுவு >>> சருவு >>> சரிவு = முடிவு = எல்லை, ஓரம் |
சரிளப்பா |
வெண் கடுகு |
அரிளைப்பாய் |
அரி (=உணவு, நீக்கு) + இளைப்பு + ஆய் (=வெண்மை, சிறுமை) = அரிளைப்பாய் >>> சரிளப்பா = இளைப்பை நீக்கும் வெண்ணிற சிறிய உணவு = வெண்கடுகு |
சரீரம் |
உடல் |
சரிரம் |
சரம் (=மூச்சு, உயிர்) + இரு (=தங்கு) + அம் = சரிரம் >>> சரீரம் = உயிர் தங்குவது = உடல் |
சரீரி |
மூச்சு, உயிர் |
அரீரி |
அரி (=காற்று) + ஈர் (=இழு) + இ = அரீரி >>> சரீரி = இழுக்கப்படும் காற்று = மூச்சு, உயிர் |
சரு |
உணவு |
அரு |
ஆர் (=உண்) + உ = அரு >>> சரு = உணவு |
சருக்கம் |
உயிரி |
அரிக்கம் |
அரி (=படை) + கம் (=உயிர்) = அரிக்கம் >>> சருக்கம் = உயிர் படைத்தது = உயிரி |
சருகு |
உலர்ந்த இலை |
அருகு |
அரி (=மென்மை, பசுமை, நிறம்) + உகு (=உதிர், கெடு) = அருகு >>> சருகு = பசுமை நிறம் கெட்டு உதிரும் மென்பொருள் = உலர்ந்த இலை |
சருகு |
வெற்றிலை |
அருகு |
அரி (=பசுமை, நிறம், மென்மை, உணவு, நீர், தீ) + உகு (=துப்பு) = அருகு >>> சருகு = உண்டபின் தீநிற நீர் துப்பப்படும் பசுமைநிற மென்பொருள் = வெற்றிலை |
சருகு |
கூட்டம் |
சருகு |
அருகு (=நெருங்கு, கூடு) >>> சருகு = கூட்டம் |
சருசபம் |
வெண் கடுகு |
அரிழைப்பம் |
அரி (=விதை, வெண்மை, உணவு, நீக்கு) + இழைப்பு (=காசநோய்) + அம் = அரிழைப்பம் >>> சருசபம் = காசநோயை நீக்கும் வெண்ணிற விதை உணவு |
சருத்தி |
கொடி |
அருந்தி |
ஆர் (=தண்டு, கட்டு, பரவு, பற) + உந்து (=உயர்) + இ = அருந்தி >>> சருத்தி = தண்டின் உயரத்தில் கட்டப்பட்டு பறப்பது = கொடி |
சருமம் |
கேடயம் |
அருவம் |
அரி (=தோல், கருமை) + உவி (=அழி) + அம் (=போர், அம்பு) = அருவம் >>> சருமம் = போரில் அம்புகளை அழிக்கும் கருமைநிறத் தோல் = கேடயம் |
சருபந்து |
தலைக்கவசம் |
அருவ்வேந்து |
ஆர் (=மறை, பொருத்து) + உவ்வி (=தலை) + ஏந்து (=தாங்கு) = அருவ்வேந்து >>> சருபந்து = தலையை மறைப்பதற்காகப் பொருத்தித் தாங்குவது. |
சருவம் |
சட்டி |
அருவ்வம் |
ஆர் (=உண், ஒப்பு, பெறு, கொள்) + உவ்வி (=தலை) + அம் = அருவ்வம் >>> சருவம் = உணவைக் கொள்வதற்கான தலைபோன்றது = சட்டி |
சருவரி |
இரவு, இருள் |
அறுவரி |
அறு (=நீங்கு) + அரி (=சூரியன், காலம்) = அறுவரி >>> சருவரி = சூரியன் நீங்கிய காலம் = இரவு |
சரூர் |
விரைவு |
அரூர் |
அரி (=குதிரை, ஒப்பு) + ஊர் (=செல்) = அரூர் >>> சரூர் = குதிரையைப் போலச் செல்லுதல் = விரைவு |
சரை |
நரைமயிர் |
அரை |
அரி (=கருமை, நீங்கு, இழை, மயிர்) + ஐ = அரை >>> சரை = கருமை நீங்கிய மயிர் = நரைமயிர் |
சரை |
கிழப்பருவம் |
அரை |
அரி (=கருமை, நீங்கு, இழை, மயிர், காலம்) + ஐ = அரை >>> சரை = மயிரின் கருமை நீங்கும் காலம் |
சரை |
மயிர் மழித்தல் |
அரை |
அரி (=இழை, மயிர், கூர்மை, தகடு, நீக்கு) + ஐ = அரை >>> சரை = கூரிய தகட்டினால் மயிர் நீக்குதல் |
சரை |
மூடி |
அரை |
ஆர் (=மறை, மூடு) + ஐ = அரை >>> சரை = மூடி |
சரோசனம் |
கோபமுற்ற நிலை |
செரூயணம் |
செரு (=கோபம்) + உய் (=அடை) + அணம் = செரூயணம் >>> சரோசனம் = கோபம் அடைந்த நிலை |
சரோருகம் |
தாமரை |
அரொருங்கம் |
அரி (=சூரியன், வண்டு, இதழ்) + ஒருங்கு (=ஒடுங்கு, அடக்கம்) + அம் = அரொருங்கம் >>> சரோருகம் = சூரியன் ஒடுங்கியதும் வண்டுகளை இதழ்களுக்குள் அடக்குவது = தாமரை |
சரோவரம் |
மலையின் மேலுள்ள பொய்கை |
அரோம்பாரம் |
அரி (=மலை, நீர்) + ஓம்பு (=பேணு) + ஆர் (=மிகு, இடம்) + அம் = அரோம்பாரம் >>> சரோவரம் = மலையில் நீர் மிகுதியாகப் பேணப்படும் இடம் = மலைப் பொய்கை |
சல்தி |
விரைவு |
செல்தீ |
செல் (=பரவு, நிகழ், பொருந்து, ஒப்பு) + தீ = செல்தீ >>> சல்தி = தீ பரவுவதைப் போல நிகழ்தல் >>> விரைவு |
சல்லகண்டம் |
புறா |
அல்லாகண்ணம் |
அலி (=தீ) + ஆ (=ஒப்பு) + கண் + அம் (=அழகு, பறவை) = அல்லாகண்ணம் >>> சல்லகண்டம் = தீயைப் போன்ற கண்களைக் கொண்ட அழகிய பறவை = புறா |
சல்லம் |
நீண்ட முள் |
அள்ளம் |
அள் (=கூர்மை) + அம் (=நீளம்) = அள்ளம் >>> சள்ளம் >>> சல்லம் = கூரிதாக நீண்டது = நீண்ட முள் |
சல்லகம், சல்லகி |
முள்ளம்பன்றி |
சல்லாகம் |
சல்லம் (=நீண்ட முள்) + ஆகம் (=உடல்) = சல்லாகம் >>> சல்லகம் = உடலில் நீண்ட முட்களைக் கொண்டது |
சல்லகம், சல்லம், சல்லகி |
நரம்பு, நார் |
அல்லகம், அல்லம் |
அல்லி (=நரம்பு, நார்) + அகம் / அம் = அல்லகம் / அல்லம் >>> சல்லகம் / சல்லம் |
சல்லகம் |
கைத்தாளம் |
அள்ளங்கம் |
அள் (=செறி, பொருத்து) + அங்கை + அம் (=ஒலி) = அள்ளங்கம் >>> சல்லகம் = அங்கையில் பொருத்தி ஒலிக்கப் படுவது = கைத்தாளம் |
சல்லடம் |
கால் சட்டை |
அள்ளாடம் |
அள் (=தண்டு, கால், செறி) + ஆடை + அம் = அள்ளாடம் >>> சல்லடம் = காலில் செறியும் ஆடை = கால் சட்டை |
சல்லடை |
சிறுகற்களை நீக்கும் துளை மிக்கது |
சல்லறை |
சல்லி (=சிறுகல், ஓட்டை) + அறு (=நீக்கு) + ஐ = சல்லறை >>> சல்லடை = சிறுகற்களை நீக்குகின்ற ஓட்டைகளைக் கொண்டது. |
சல்லபம் |
முள்ளம்பன்றி |
சல்லாப்பம் |
சல்லம் (=நீண்ட முள்) + ஆப்பு (=உடல்) + அம் = சல்லாப்பம் >>> சல்லபம் = உடலில் நீண்ட முட்களைக் கொண்டது = முள்ளம்பன்றி |
சல்லரி, சல்லாரி |
பறை |
எல்லரி |
எல்லரி (=பறை) >>> செல்லரி >>> சல்லரி |
சல்லா |
அடர்த்தி அற்றது |
அள்ளா |
அள் (=செறிவு, அடர்த்தி) + ஆ (=எதிர்மறை) = அள்ளா >>> சள்ளா >>> சல்லா = அடர்த்தி இல்லாத |
சல்லாபம் |
சரசப் பேச்சு |
அள்ளாப்பம் |
அளி (=கல, பொருந்து, பேசு, கனி) + ஆப்பு (=உடல்) + அம் = அள்ளாப்பம் >>> சல்லாபம் = உடலோடு பொருந்திக் கனிவாகப் பேசுதல் = சரசப் பேச்சு |
சல்லாபம் |
கேட்டு அறிதல் |
அளவம் |
அளவு (=அறிவு, கேள்) + அம் = அளவம் >>> சலபம் >>> சல்லாபம் = கேட்டு அறிதல் |
சல்லாபி |
கேட்டு அறி |
சல்லாபி |
சல்லாபம் (=கேட்டறிதல்) >>> சல்லாபி = கேட்டறி |
சல்லாபி |
சரசமாடு |
சல்லாபி |
சல்லாபம் (=சரசப்பேச்சு) >>> சல்லாபி = சரசமாடு |
சல்லாரி |
மெல்லிய உடை |
அள்ளாரி |
அள் (=செறிவு, அடர்த்தி) + ஆ (=எதிர்மறை) + ஆர் (=உடுத்து) + இ = அள்ளாரி >>> சல்லாரி = அடர்த்தி இல்லாத உடை = மெல்லிய துணி |
சல்லாரி |
பயனற்றவன் |
அல்லாறி |
அல் (=இன்மை) + ஆறு (=பயன்) + இ = அல்லாறி >>> சல்லாரி = பயன் இல்லாதவன் |
சல்லாரி |
வேசக்காரன் |
அல்லாரி |
அல் (=மயக்கம், குழப்பம்) + ஆர் (=நிறம், பூசு, மறை, உடுத்து) + இ = அல்லாரி >>> சல்லாரி = நிறங்களைப் பூசியும் மறைத்து உடுத்தியும் குழப்புபவன் |
சல்லாலி |
உடையின் தொங்கல்கள் |
செல்லாலி |
சேலை (=உடை) + ஆல் (=ஆடு, தங்கு, பொருந்து) + இ = செல்லாலி >>> சல்லாலி = உடையில் பொருந்தி ஆடுவது = உடையின் தொங்கல்கள் |
சல்லி |
வலுவான துண்டு |
அள்ளீ |
அள் (=வலிமை) + ஈ (=அறு, துண்டாக்கு) = அள்ளீ >>> சள்ளி >>> சல்லி = வலுவான துண்டு |
சல்லி |
மாலை |
அள்ளி |
அளை (=அணி, பொருத்து, கட்டு) + இ = அள்ளி >>> சள்ளி >>> சல்லி = பொருத்திக் கட்டி அணிவது |
சல்லி |
மென்மை |
அள்ளீ |
அள் (=செறிவு, அடர்த்தி) + ஈ (=அறு) = அள்ளீ >>> சள்ளி >>> சல்லி = அடர்த்தி அற்றது = மென்மை |
சல்லி |
ஓட்டை, பொய் |
அள்ளி |
அளை (=பொந்து, ஓட்டை) + இ = அள்ளி >>> சள்ளி >>> சல்லி = ஓட்டை >>> பொய் |
சல்லி |
ஓட்டைக் காசு |
அள்ளீ |
அளை (=துளை, சேர், கோர்) + ஈ (=கொடு, அறு, துண்டாக்கு) = அள்ளீ >>> சள்ளி >>> சல்லி = துளையில் கோர்த்துக் கொடுக்கப்படும் துண்டுகள் |
சல்லி |
சிறுமை |
எள்ளி |
எள் (=சிறியது) + இ = எள்ளி >>> அல்லி >>> சல்லி |
சல்லி |
காளை |
அல்லீ |
அலம் (=கலப்பை) + ஈ (=கீறு, கற்பி) = அல்லீ >>> சல்லி = கலப்பையால் கீறக் கற்பிக்கப் பட்டது = காளை |
சல்லிகை |
பறை வகை |
சல்லிகை |
சல் + இகு (=அடி, ஒலி) + ஐ = சல்லிகை = அடித்தால் சல் சல் என்று ஒலிப்பது = பறை வகை |
சல்லிசு |
எளிதாக |
எளியு |
எளி (=எளிதாகு) + உ = எளியு >>> அலிசு >>> சல்லிசு = எளிதாக |
சல்லியம் |
அம்பு, ஈட்டி |
அள்ளியம் |
அள் (=தண்டு, கூர்மை, இரும்பு) + இயை (=பொருத்து) + அம் (=நீளம்) = அள்ளியம் >>> சல்லியம் = கூரிய இரும்பைப் பொருத்திய நீண்ட தண்டு = அம்பு, ஈட்டி |
சல்லியம் |
முள்ளம்பன்றி |
சல்லெயம் |
சல்லம் (=நீண்ட முள்) + எய் + அம் = சல்லெயம் >>> சல்லியம் = நீண்ட முள்ளை எய்வது = முள்ளம்பன்றி |
சல்லியம் |
எலும்பு |
அள்ளூழம் |
அள் (=செறிவு, வலிமை, தண்டு) + ஊழ் (=தசை) + அம் (=வெண்மை) = அள்ளூழம் >>> சல்லியம் = தசையுடன் செறிந்த வலுவான வெண்ணிறத் தண்டு = எலும்பு |
சல்லியம் |
ஆணி |
அள்ளியம் |
அள் (=தண்டு, கூர்மை, இரும்பு, செறிவு) + இயை (=பொருத்து) + அம் = அள்ளியம் >>> சல்லியம் = தண்டுகளைப் பொருத்தச் செறிக்கப்படும் கூரிய இரும்பு. |
சல்லியம் |
இரும்புக் கோல் |
அள்ளியம் |
அள் (=இரும்பு, தண்டு) + இயம் = அள்ளியம் >>> சல்லியம் = இரும்பால் ஆன தண்டு |
சல்லியம் |
ஆயுதத்தின் கூர்மை |
அள்ளெழம் |
அள் (=கூர்மை) + எழு (=ஆயுதம்) + அம் = அள்ளெழம் >>> சல்லியம் = ஆயுதத்தின் கூர்மை |
சல்லியம் |
துன்பம் |
அல்லியம் |
அலம் (=துன்பம்) + இயம் = அல்லியம் >>> சல்லியம் |
சல்லியம் |
மாயாசாலம் |
சல்லியம் |
சல்லி (=பொய், ஏமாற்று) + அம் (=மகிழ்ச்சி) = சல்லியம் = ஏமாற்றி மகிழ்வித்தல் = மாயாசாலம் |
சல்லியம் |
சந்தனம் |
அள்ளியம் |
அளி (=குளிர்ச்சி, குழை) + இயை (=பூசு) + அம் (=நீர்) = அள்ளியம் >>> சல்லியம் = குளிர்ச்சிக்காக நீரில் குழைத்துப் பூசப்படுவது = சந்தனம் |
சலக்கரணை |
இயங்கத் தடையற்றது |
அலக்கரணை |
அலக்கு (=அசை, இயங்கு) + அரி (=நீங்கு) + அணை (=தடு) = அலக்கரணை >>> சலக்கரணை = இயங்குவதற்குத் தடை இல்லாதது. |
சலக்கரணை |
துன்பத்தைக் குறைத்தல் |
அலக்கரணை |
அலம் (=துன்பம்) + கரை (=தேய், குறை) + அணை = அலக்கரணை >>> சலக்கரணை = துன்பத்தைக் குறைத்தல் |
சலக்கரணை |
அக்கறையுடன் செய்தல் |
அளக்கறணை |
ஆள் (=செய்) + அக்கறை + அணை = அளக்கறணை >>> சலக்கரணை = அக்கறையுடன் செய்தல் |
சலக்கம், சலகம் |
குளியல் |
அலக்கம் |
ஆல் (=நீர்) + அக்கு (=வெண்மை, தூய்மை) + அம் = அலக்கம் >>> சலக்கம், சலகம் = நீரால் தூய்மை பெறல் |
சலக்கம், சலகம் |
மூத்திரம் |
அலகம் |
ஆல் (=நீர்) + அகம் (=உடல், கறை, கழிவு) = அலகம் >>> சலகம் >>> சலக்கம் = உடல் கழிவு நீர் = மூத்திரம் |
சலகரங்கம் |
தாமரை |
அலக்கரகம் |
ஆலம் (=நீர், மலர்) + கருமை (=இருள்) + அகம் (=உள்ளடங்கல்) = அலக்கரகம் >>> சலகரங்கம் = இருளில் உள்ளடங்கும் நீர் மலர் = தாமரை |
சலகு |
பலகறை |
அலகு |
அலகு (=பலகறை) >>> சலகு |
சலகு |
காயடித்தல் |
அலக்கு |
அலை (=அழி) + அக்கம் (=விதை, கொட்டை) + உ = அலக்கு >>> சலகு = கொட்டையை அழித்தல் |
சலகு |
உடல் பயிற்சி |
அலகு |
அலை (=வருத்து) + அகம் (=உடல்) + உ = அலகு >>> சலகு = உடலை வருத்துதல் = உடற்பயிற்சி |
சலகை |
வயல் |
அலகை |
அலம் (=கலப்பை) + அகை (=வகு, கீறு, செழி) = அலகை >>> சலகை = கலப்பையால் கீறப்பட்டுச் செழிப்பது |
சலகை |
காணிக்கை |
அளகை |
அளி (=கொடு) + அகை (=உயர், மதிப்புறு) = அளகை >>> சலகை = மதிப்புடையோருக்குக் கொடுப்பது |
சலகை |
படகு, தெப்பம், கப்பல் |
அலகை |
ஆல் (=நீர்) + அகை (=செலுத்து) = அலகை >>> சலகை = நீரில் செலுத்தப் படுவது = தெப்பம், படகு, கப்பல் |
சலகை |
வெளிப்பாடு |
அலகை |
அல் (=இன்மை) + அகம் (=உள்ளடங்கல்) + ஐ = அலகை >>> சலகை = உள்ளடங்கல் இன்மை = வெளிப்பாடு |
சலங்கு |
தெப்பம், படகு |
அலக்கு |
ஆல் (=நீர்) + அகை (=செலுத்து) + உ = அலக்கு >>> சலங்கு = நீரில் செலுத்தப் படுவது = தெப்பம், படகு |
சலங்கு |
முத்துக் குளித்தல் |
அலக்குய் |
ஆலம் (=கடல்) + அக்கம் (=கொட்டை, முத்து) + உய் (=பெறு, செல்) = அலக்குய் >>> சலங்கு = முத்துக்களைப் பெற கடலில் செல்லுதல் = முத்துக் குளித்தல் |
சலங்கை |
காலிலணிந்து சல் சல் என்று ஒலிப்பது |
சலக்காய் |
சல் (=ஒலிக் குறிப்பு) + அகம் (=மரம், கால்) + ஆய் (=அசை, அணி) = சலக்காய் >>> சலங்கை = காலில் அணிந்து அசைந்தால் சல் சல் என்று ஒலிப்பது |
சலசந்தி |
கடல்களின் சந்திப்பு |
அலசந்தி |
ஆலம் (=கடல்) + சந்தி = அலசந்தி >>> சலசந்தி = கடல்கள் சந்திக்கும் இடம் |
சலசம் |
தாமரை |
அலசம் |
ஆலம் (=நீர், மலர்) + அசை (=நீங்கு, வாடு, கூம்பு) + அம் (=ஒளி) = அலசம் >>> சலசம் = ஒளி நீங்கினால் கூம்பும் நீர் மலர் = தாமரை |
சலசம் |
முத்து |
அலாழம் |
ஆலம் (=கடல்) + ஆழ் + அம் (=ஒளி) = அலாழம் >>> சலசம் = கடலில் ஆழ்ந்திருக்கும் ஒளிப் பொருள் |
சலசம் |
பாசி |
அலசம் |
ஆல் (=நீர்) + அசை + அம் (=பசுமை) = அலசம் >>> சலசம் = நீரில் பசுமையாக அசைவது = பாசி |
சலசவதி |
நரகம் |
அலெச்சபதி |
அலை (=கொலை, சாவு, வருத்து) + எச்சம் (=பழி, குற்றம்) + பதி (=இடம்) = அலெச்சபதி >>> சலசவதி = செத்தவரைக் குற்றத்திற்காக வருத்தும் இடம் |
சலணி |
மிளகு |
அழலாணி |
அழல் (=காரம்) + ஆணம் (=உணவு, சிறுமை) + இ = அழலாணி >>> சலணி = காரமான சிறு உணவு |
சலதம் |
மேகம் |
அலறம் |
ஆலம் (=ஆகாயம், நீர்) + அறம் (=கொடை) = அலறம் >>> சலதம் = ஆகாயத்தில் இருந்து நீரைக் கொடுப்பது |
சலதரங்கம் |
இசைக்கும் நீர்ப் பாத்திரம் |
சலதாரகம் |
சலம் (=நீர்) + தாரம் (=இசை) + அகம் (=உள், கூடு, பாத்திரம்) = சலதாரகம் >>> சலதரங்கம் = இசைக்கின்ற நீருடைய பாத்திரம் |
சலதரங்கம் |
கடல் அலை |
அலைதாரகம் |
அலை + தாரம் (=நீர்) + அகை (=இடைவிடு) + அம் = அலைதாரகம் >>> சலதரங்கம் = இடைவிட்டு அலைகின்ற நீர் = கடல் அலை |
சலதரம் |
மேகம் |
அலதரம் |
ஆலம் (=ஆகாயம், நீர்) + தரு (=கொடு) + அம் = அலதரம் >>> சலதரம் = ஆகாயத்தில் இருந்து நீரைக் கொடுப்பது |
சலதரம் |
கடல் |
அலைதாரம் |
அலை + தாரம் (=ஒலி, நீர்) = அலைதாரம் >>> சலதரம் = ஒலித்து அலையும் நீரைக் கொண்டது = கடல் |
சலதரம் |
நீர்நிலை |
அளதாரம் |
அளம் (=நிலம்) + தாரம் (=நீர்) = அளதாரம் >>> சலதரம் = நீருடைய நிலம் = நீர்நிலை. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.